சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Sunday, February 12, 2012

நானும் எனது ஊரும் (தொடர் பதிவு)

(கோயிலின் எழில்மிகு தோற்றம்)

நானாகவே எழுதலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் சங்கவி அழைத்ததனால் உடனே எழுத துவங்குகிறேன். சங்கவிக்கு நன்றி. எனது ஊர் திருவாரூர். இன்று அது மாவட்ட தலைநகர், நகரில் மத்திய பல்கலைக்கழகம், அரசு மருத்துவக்கல்லூரி என ஏகமாய் வளர்ந்து நிற்கிறது. ஆனால் நான் வளர்ந்த காலத்தில் அது மிகச்சிறிய நகரம் அவ்வளவே.

திருவாரூர் என்பது அதனை சுற்றியுள்ள பெரும்பாலான கிராமங்களின் சந்தை என்றளவில் வளர்ந்த பெரு கிராமம். இங்கு வர்த்தகமோ, தொழிற்சாலைகளோ சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ஒன்றுமே கிடையாது. இது விவசாயப்பகுதி. விவசாய செய்பொருட்களின் சந்தையாக திகழ்கிறது. என் அப்பாவும் அது போன்ற அரசின் தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையம் என்ற விவசா உதிரி பொருட்கள் மொத்த விற்பனையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி ஒய்வு பெற்றவர். நீங்கள் எல்லாம் தமிழகத்தின் நெற்களஞ்சியம் தஞ்சாவூர் மாவட்டம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் நெல் விளையும் பெரும்பாலான நிலங்கள் தற்போதைய திருவாரூர் மாவட்டத்திலேயே உள்ளன.
(அப்பா, அம்மாவுடன் நானும் தம்பியும் திருவாரூரில் உள்ள மூர்த்தி ஸ்டுடியோவில் எடுத்தது)

திருவாரூர் சோழ அரசின் புராதன தலைநகர். பசுவின் கன்றை அறியாமல் கொன்றதற்காக தன் மகனை தேர்க்காலில் இட்டு கொன்ற மனுநீதிசோழன் தலைநகராக ஆண்ட ஊர் இது. இன்றும் அந்த சம்பவம் நடந்த இடத்தில் நினைவுச்சின்னம் இருக்கிறது. நான் படித்த காலத்தில் பள்ளியில் ஒரு கட்டிடமாக இருந்தது அரண்மனை. தற்போது இடிக்கப்பட்டு விட்டது. பழைய நகராட்சி அலுவலகமும் அரண்மனையின் ஒரு கட்டிடத்தில் தான் இயங்கி வந்தது.
(எங்கள் ஊரின் பெருமக்குரிய ஆழி்த்தேர்)

அது போல் திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் திருக்கோயில். இந்து மதத்தில் பெரிய கோவில் என்ற சொல்லுக்குரிய கோவில். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு முன்பே கட்டப்பட்ட கோயில் இது. அப்பொழுதெல்லாம் கூட்டம் மிகக்குறைவாக இருக்கும். நாங்கள் ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தை கோயிலின் உள்ளே கிரிக்கெட் விளையாடியோ பட்டம் விட்டோ தான் கழிப்போம். அது போல் நவக்கிரகங்களும் ஒரே திசையை நோக்கி உள்ள கோயிலும் இது தான். எவ்வளவோ எழுத்தாளர்கள் தனிமையில் சிந்தித்து எழுத கோயிலையே பயன்படுத்தி வந்தனர். தற்போது சர்வதோஷ பரிகாரஸ்தலம் என்ற பெயரில் வியாபார நோக்கில் பிரச்சாரம் செய்யப்படுவதால் கூட்டம் அதிகமாகி விட்டது. எங்கிருந்தெல்லாமோ ஆட்கள் வந்து தங்கள் தோஷத்திற்கு பரிகாரம் செய்து விட்டு செல்வதால் நவக்கிரக பகுதி மட்டும் நல்ல கூட்டமாகவே இருக்கிறது.
(நான் ஊரில் ஒரு தருணத்தில்)

அடுத்தது திருவாரூர் ஆழித்தேர். இந்தியாவிலேயே மிகப்பெரிய தேர். தேர்த்திருவிழா நடக்கும் கால கட்டம் தான் எங்கள் ஊருக்கு திருவிழா. எவ்வளவு மக்கள் இழுத்தாலும் தேரை ஒரு இன்ச் கூட நகர்த்த முடியாது. பின்பக்கமிருந்து புல்டோசர் தள்ளினால் தான் தேர் நகர ஆரம்பிக்கும். பழங்காலங்களில் தேர்த்திருவிழா 10 நாட்கள் வரை நடக்குமாம். 1950களில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டு பெரிய தேர் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது. தற்போதுள்ள பெரிய தேர், கமலாம்பாளுக்குரியது. இந்தத்தேரை 1990களில் நிலையடியிலிருந்து இழுத்து சென்று நான்கு வீதியும் சுற்றிய பின் நிலையடிக்கு வந்து சேர இரண்டு நாள் ஆகும். இரண்டு நாட்களும் மனது நிலை கொள்ளாத மகிழ்ச்சியில் இருக்கும். நண்பர்கள் குழு ஒன்று சேர்ந்து தேர் இழுப்போம். சிறிது தூரம் இழுத்த பின்பு கிடைக்கும் கால இடைவெளியில் ஒருவனை பத்து பேர் சேர்ந்து தூக்கிப் போட்டு பிடிப்போம். ஒரு முறை சண்முகம் என்ற நண்பனை தூக்கிப் போட்டு பிடிப்பதற்கு முன் பச்சைக் கொடி என்று அறிவிப்பு வந்ததால் அவனை அப்படியே விட்டு விட்டு வடம் பிடித்து விட்டோம். தொப் என்று கீழே விழுந்தான். பிறகு அவனை சமாதானப்படுத்தியதெல்லாம் பெரிய கதை. இரண்டு நாட்களும் சுற்று கிராமப்பகுதியிலிருந்து பெண்கள் தேர் வருவதை பார்த்துக் கொண்டிருக்கும் போது வடம் பிடிக்கும் பகுதியிலிருந்து பேப்பர் ராக்கெட்டுகள் விடுவோம். அங்கிருந்து பெண்கள் பறக்கும் முத்தம் தனக்கு பிடித்த ஆண்களைப் பார்த்து தருவர். ஆனால் தற்போதெல்லாம் போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாகி இந்த சீண்டல்கள் குறைந்து விட்டன. இன்றும் சரி என்றும் சரி, எப்பொழுது தேர்த்திருவிழா நடந்தாலும் நான் எந்த ஊரில் இருந்தாலும் ஊருக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன். எங்கள் ஊரின் கெளரவம் அது.

எனது காலத்தில் திரையரங்குகள் தைலம்மை, சோழா, நடேஷ், செங்கம், பேபி மற்றும் புலிவலத்தில் இருந்த கருணாநிதி என மொத்தம் ஆறு இருந்தன. அவற்றில் செங்கம், பேபி, கருணாநிதி மூடப்பட்டு பாக்கியுள்ளவை மட்டுமே உள்ளன. அவையும் ஏனோ தானோ வென்று தான் நடந்து கொண்டிருக்கின்றன. நான் பள்ளியில் படித்த காலத்தில் தியேட்டர்களுக்கு செல்வது மட்டுமே பொழுதுபோக்கு. மதிய வேளை பெரும்பாலும் ஏதாவது ஒரு தியேட்டரில் தான் இருப்போம்.

கலைஞர் அவர்கள் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் நானும் படித்தேன். பள்ளியைப் பற்றி நான் தனித் தொடராக வெளியிட்டுக் கொண்டிருப்பதால் பள்ளி விவரங்கள் மட்டும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். கலைஞரை அவரின் தற்போதைய அரசியல் காரணமாக எனக்கு பிடிக்காமல் போனாலும் அவரால் தான் எனது ஊர் இந்தளவுக்கு வளர்ந்தது என்பதால் அவரை தலை குனிந்து வணங்குகிறேன். என்ன வருத்தம் என்றால் ஊர் பழைய அமைதியை இழந்து பரபரப்புக்குள் தலையை விட்டுக் கொண்டுள்ளது.

1997ல் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு ஊரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று வலுக்கட்டாயமாக சென்னைக்கு பஸ் ஏற்றப்பட்டேன். அதிலிருந்து ஊருக்கு செல்வது வாரம் ஒரு முறை என்று இருந்தது. பிறகு மாதம் ஒரு முறை என்று மாறி இப்பொழுது இரு மாதங்களுக்கு ஒரு முறை என்றாகி விட்டது. இப்பொழுது ஊருக்கு சென்றாலும் கிளம்பி சென்னைக்கு வரும் அன்று மனதுக்கு கஷ்டமாக இருக்கும்.

நானும் இந்த தொடர் பதிவை தொடர

கேஆர்பி செந்தில்
நாய் நக்ஸ் நக்கீரன்
பிலாசபி பிரபாகரன்
அஞ்சாசிங்கம் செல்வின்
மனோ நாஞ்சில் மனோ
கோவை நேரம் ஜீவானந்தம்
புன்னகை மன்னன் தஞ்சை குமணன்
காங்கேயன் தஞ்சை சங்கர்
முல்லைவனம் மயில்வாகனா
சினிமா சினிமா ராஜ்

ஆகியோரை அழைக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

24 comments:

  1. Senthil....

    Naan...school padithathu......
    Pattukkottai....
    U.g,,,,,p.g...-chidambaram....

    Ippadi naadodiyaga...irunthathaal...
    Naan intha thoder pathivukku....
    Sari vara maatten....
    Ennai azhithathukku.....
    Nanri....nanri...nanri..

    ReplyDelete
  2. பாஸ்,
    ரொம்ப சுவாரிசியமா உங்க ஊரை பத்தி எழுதி இருக்கேங்க......
    திருச்சியில படிக்கும் போது நிறைய தடவை தஞ்சாவூர் வந்து இருக்கிறேன்...... திருவாரூர் வந்தது இல்லை......உங்க ஊரை பத்தி படிக்கும் போது எங்க ஊரு தேனி மாவட்டம் (கூடலூர்) தான் ஞாபகம் வருது.....கூடலூர் கூட கிட்ட தட்ட திருவாரூர் மாதிரி தான்...

    கலைஞர் கூட உங்க ஊர் தானா ??? உண்மையில திருவாரூரை வளர்த்தாரா...??? இத தான் நம்பறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு... :)
    அவருக்கு அழிக்க தானே தெரியும்....

    இப்ப தான் பார்த்தேன் ..என்னையும் மதிச்சு ஒரு தொடர் பதிவுக்கும் கூப்பிட்டு இருக்கேங்க.....ரொம்ப தேங்க்ஸ் பாஸ்..... கண்டிப்பா எழுதுறேன்....எங்க ஊரை பத்தி.

    ReplyDelete
  3. /// NAAI-NAKKS said...

    Senthil....

    Naan...school padithathu......
    Pattukkottai....
    U.g,,,,,p.g...-chidambaram....

    Ippadi naadodiyaga...irunthathaal...
    Naan intha thoder pathivukku....
    Sari vara maatten....
    Ennai azhithathukku.....
    Nanri....nanri...nanri.. ///

    யோவ் பெரிய மனுசா, உங்க படிப்பைப் பத்தியா கேட்டேன். ஊர் கதைய மட்டும் சொல்லுய்யா.

    ReplyDelete
  4. /// ராஜ் said...

    பாஸ்,
    ரொம்ப சுவாரிசியமா உங்க ஊரை பத்தி எழுதி இருக்கேங்க......
    திருச்சியில படிக்கும் போது நிறைய தடவை தஞ்சாவூர் வந்து இருக்கிறேன்...... திருவாரூர் வந்தது இல்லை......உங்க ஊரை பத்தி படிக்கும் போது எங்க ஊரு தேனி மாவட்டம் (கூடலூர்) தான் ஞாபகம் வருது.....கூடலூர் கூட கிட்ட தட்ட திருவாரூர் மாதிரி தான்...

    கலைஞர் கூட உங்க ஊர் தானா ??? உண்மையில திருவாரூரை வளர்த்தாரா...??? இத தான் நம்பறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு... :)
    அவருக்கு அழிக்க தானே தெரியும்....

    இப்ப தான் பார்த்தேன் ..என்னையும் மதிச்சு ஒரு தொடர் பதிவுக்கும் கூப்பிட்டு இருக்கேங்க.....ரொம்ப தேங்க்ஸ் பாஸ்..... கண்டிப்பா எழுதுறேன்....எங்க ஊரை பத்தி. ///

    எழுதுங்க பாஸூ. உங்க கட்டுரை அருமையாக வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அண்ணா அவர்களே என்னையும் மதிச்சு, ஒரு தொடர் பதிவும் எழுத கூப்பிட்டு இருக்கீங்க நன்றி நானும் உங்க‌ளுடன் தொடர்கின்றேன்

    ReplyDelete
  6. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  7. மிக அருமையாக காட்சிக்கு புலனானது தங்கள் ஊர் .
    சங்கவி அவர்கள் எனையும் தொடர் பதிவிற்கு அழைத்ததின் பெயரில் ஆவலும் நானும் எழுதிள்ளேன் நேரம் இருப்பின் வருகை தரவும் .

    ReplyDelete
  8. சூப்பர் தல கலக்கீட்டீங்க...

    திருவாரூரைப்பற்றியான அற்புதமான பதிவு...

    இன்று கால ஓட்டத்தில் பரபரபரப்பான நகரில் திருவாரூம் ஒன்று...

    திருவாரூர் ஆழித்தேரை பார்க்க வேண்டும் என்பது என் ரொம்ப நாளைய ஆவல்..

    என் வேண்கோளுக்கு இணங்க இந்த அழகான பதிவேழுதியதற்கு மிக்க நன்றி தோழர்...

    ReplyDelete
  9. ../// NAAI-NAKKS said...

    Senthil....

    Naan...school padithathu......
    Pattukkottai....
    U.g,,,,,p.g...-chidambaram....

    Ippadi naadodiyaga...irunthathaal...
    Naan intha thoder pathivukku....
    Sari vara maatten....
    Ennai azhithathukku.....
    Nanri....nanri...nanri.. ///..

    அண்ணே நக்கீரன் அண்ணே நீங்க படிச்சதை யாருண்ணா கேட்டதா.. நீங்க நிறைய ஊரில் படிச்சிருந்தாலும் உங்களுக்கு பிடிச்ச ஊரு என்று ஒன்று நிச்சயம் இருக்கும்.. அதானால் நீங்க உங்க பிடிச்ச ஊரை எழுதுறீங்க...

    நாங்க படிக்கிறோம்...

    தோழர் செந்தில் இவரை நாம் விடக்கூடாது... எழுத வைத்தே ஆகவேண்டும்...

    இவர் எழுதவில்லை என்றால் நாம் கண்டனப்பதிவு போடுலாம்...

    ReplyDelete
  10. நக்கி உங்க சொந்த ஊர் என்ன மன்னார்குடியா? இப்படி பயப்படறீங்க. ஜெ மேடம் ஒண்ணும் செய்ய மாட்டாங்க. சும்மா(!) எழுதுங்க.

    ReplyDelete
  11. சூப்பர் பதிவு செந்தில். பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திருவாரூர் பற்றிய நல்ல தொகுப்பு. ஒரு நாள் கூட்டிட்டு போங்க.

    ReplyDelete
  12. /// தஞ்சை குமணன் said...
    அண்ணா அவர்களே என்னையும் மதிச்சு, ஒரு தொடர் பதிவும் எழுத கூப்பிட்டு இருக்கீங்க நன்றி நானும் உங்க‌ளுடன் தொடர்கின்றேன் ///

    நன்றி குமணன் கலக்குங்க

    ReplyDelete
  13. /// Rathnavel Natarajan said...
    நல்ல பதிவு.
    நன்றி. ///

    நன்றி ரத்னவேல் அய்யா.

    ReplyDelete
  14. /// sasikala said...
    மிக அருமையாக காட்சிக்கு புலனானது தங்கள் ஊர் .
    சங்கவி அவர்கள் எனையும் தொடர் பதிவிற்கு அழைத்ததின் பெயரில் ஆவலும் நானும் எழுதிள்ளேன் நேரம் இருப்பின் வருகை தரவும் . ///

    தங்கள் வருகைக்கு நன்றி சசிகலா. கண்டிப்பாக தங்களது வலைப்பூவை பார்த்து படித்து விட்டு பின்னூட்டமிடுகிறேன்.

    ReplyDelete
  15. /// சங்கவி said...
    சூப்பர் தல கலக்கீட்டீங்க...

    திருவாரூரைப்பற்றியான அற்புதமான பதிவு...

    இன்று கால ஓட்டத்தில் பரபரபரப்பான நகரில் திருவாரூம் ஒன்று...

    திருவாரூர் ஆழித்தேரை பார்க்க வேண்டும் என்பது என் ரொம்ப நாளைய ஆவல்..

    என் வேண்கோளுக்கு இணங்க இந்த அழகான பதிவேழுதியதற்கு மிக்க நன்றி தோழர்... ///


    நன்றி சதீஷ். தற்போது தேர் மராமத்து பணியில் இருப்பதால் இந்த வருடம் தேர் கிடையாது. அடுத்த வருடம் கண்டிப்பாக அழைத்து செல்கிறேன்.

    ReplyDelete
  16. /// சங்கவி said...
    ../// NAAI-NAKKS said...

    Senthil....

    Naan...school padithathu......
    Pattukkottai....
    U.g,,,,,p.g...-chidambaram....

    Ippadi naadodiyaga...irunthathaal...
    Naan intha thoder pathivukku....
    Sari vara maatten....
    Ennai azhithathukku.....
    Nanri....nanri...nanri.. ///..

    அண்ணே நக்கீரன் அண்ணே நீங்க படிச்சதை யாருண்ணா கேட்டதா.. நீங்க நிறைய ஊரில் படிச்சிருந்தாலும் உங்களுக்கு பிடிச்ச ஊரு என்று ஒன்று நிச்சயம் இருக்கும்.. அதானால் நீங்க உங்க பிடிச்ச ஊரை எழுதுறீங்க...

    நாங்க படிக்கிறோம்...

    தோழர் செந்தில் இவரை நாம் விடக்கூடாது... எழுத வைத்தே ஆகவேண்டும்...

    இவர் எழுதவில்லை என்றால் நாம் கண்டனப்பதிவு போடுலாம்... ///

    சதீஷ் இந்த வண்டியை கிளப்புவது சிரமம். கவலைப்படாதீர்கள். நான் தார்க்குச்சியை வைத்து குத்தியாவது கிளப்பி விடுகிறேன்.

    ReplyDelete
  17. /// ! சிவகுமார் ! said...
    சூப்பர் பதிவு செந்தில். பல பெருமைகளை தன்னகத்தே கொண்டிருக்கும் திருவாரூர் பற்றிய நல்ல தொகுப்பு. ஒரு நாள் கூட்டிட்டு போங்க. ///

    வரும் ஆண்டு தேர்த்திருவிழாவுக்கு நாமெல்லாம் அங்கிருப்போம்.

    ReplyDelete
  18. பல புகைப்படங்களுடன் விரிவான பதிவு செந்தில் . அருமை. நடுவே உங்களோட கவர்ச்சி படம் ஒன்னும் போட்டுருக்கீங்க :))

    ReplyDelete
  19. /// மோகன் குமார் said...

    பல புகைப்படங்களுடன் விரிவான பதிவு செந்தில் . அருமை. நடுவே உங்களோட கவர்ச்சி படம் ஒன்னும் போட்டுருக்கீங்க :)) ///

    ஆமாண்ணே XX மூவி. ஹி ஹி.

    ReplyDelete
  20. திருவாரூர் பற்றி அறிந்து கொண்டோம்.

    ReplyDelete
  21. /// மாதேவி said...

    திருவாரூர் பற்றி அறிந்து கொண்டோம். ///

    நன்றி மாதேவி

    ReplyDelete
  22. /// FOOD NELLAI said...

    திருவாரூர் பற்றித்தெரியாத தகவல்கள் பல தெரிந்துகொள்ள உதவியது உங்கள் பதிவு. ///

    நன்றி அய்யா

    ReplyDelete
  23. /// FOOD NELLAI said...

    ../// NAAI-NAKKS


    நாங்க கேள்விப்பட்டதெல்லாம், இவர் (ஃபோனல)ஆரம்பிச்சா விடவே மாட்டாராமே! ///

    அய்யா இந்த தகவல் நெல்லை வரைக்கும் பரவிடுச்சா, இதப் பத்தி சொல்லனும்னா ஒரு பதிவே போடலாம் அவ்வளவு இருக்கு.

    ReplyDelete
  24. தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...