இதுவரையிலான வில்லன் நடிப்பில் நாசருடைய சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படம் எதுவென்று கேட்டால் "தேவர் மகன்'தான் என கண்ணை மூடி கூறிவிடலாம். அந்த அளவுக்கு அவரது நடிப்பு இன்னமும் நம் கண்முன்னால் நிற்கிறது.
ஒரு பக்கம் கமலுக்கு வில்லனாக நாசர் என்பதும், ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விதியாகவே இருந்தது. கமல், நாசர் இருவரும் "மெதட் ஆக்டிங்' எனப்படும் திட்ட நடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி, ரகுவரன் இருவரும் "ஹைப்பர் ஆக்டிங்' எனப்படும் ஆற்றல் நடிப்பு வகையைச் சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்து போனது.
இதன் பிறகு அஜித், விஜய் ஆகியோர் காதல் கதைகளுடன் வந்தபோது வில்லனின் ரோல் கொஞ்சம் மாறத் துவங்கியது. அதுவரை உயரமாக இருந்த வில்லனுக்கு இப்போது மீசை காணாமல் போனது. கொஞ்சம் பணக்காரத் தன்மை அல்லது அமெரிக்க ரிட்டர்ன் ஆகியோர் வில்லன்களாக வந்தனர். இக்காலங்களில் கதாநாயகன் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாகவே இருந்து வந்ததால் அவர்களது வில்லன்கள் தவிர்க்க முடியாத பணக்கார இளைஞனாகவும், அமெரிக்க ரிட்டர்னாகவும் இருந்தார்கள். இக்காலத்தில் கரண்தான் பிஸியாக இருந்தார். அஜித்துடன் நண்பனாக, விஜய்யிடம் வில்லனாக அல்லது அஜித்திடம் வில்லனாக, விஜய்யிடம் நண்பனாக என மாறிமாறி பிஸி கால்ஷீட்டில் பறந்தார்.
இக்காலத்தில் க்ளைமாக்சில் வில்லன்கள் அடி வாங்குவது குறைந்து மிக நல்லவர்களாக மாறி நாயகியையும், நாயகனையும் சேர்த்து வைப்பது ஒன்றை மட்டுமே செய்து வந்தனர். க்ளைமாக்சில் நாயகன் கருத்து சொல்வது அல்லது அதிர்ச்சி அடைய வைப்பது போன்றவை இக்காலத்தில் துவங்கியது.
வில்லன்கள் என்பது ஆட்கள் என்பதிலிருந்து விலகி சமய, சந்தர்ப்பங்கள் வில்லன் ரோலில் முக்கிய பங்கு வகித்தன. வில்லன்கள் இல்லாத அல்லது அவர்களது ஆதிக்கம் குறைய குறைய தமிழில் மெல்ல நல்ல சினிமாக்கள் உதயமாகத் துவங்கின. அதன் முதல் துவக்க புள்ளியாக வந்த திரைப்படம் "சேது'.
ஆரூர் முனா செந்திலு

(தொடரும் ...)
ஆரூர் முனா செந்திலு
யாரும் தொடாத சப்ஜெக்ட் வெல் ட்ரை
ReplyDeleteநல்ல ஆரம்பம்... தொடருங்கள்... நன்றி நண்பரே!
ReplyDelete>>ஒரு பக்கம் கமலுக்கு வில்லனாக நாசர் என்பதும், ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விதியாகவே இருந்தது. கமல், நாசர் இருவரும் "மெதட் ஆக்டிங்' எனப்படும் திட்ட நடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி, ரகுவரன் இருவரும் "ஹைப்பர் ஆக்டிங்' எனப்படும் ஆற்றல் நடிப்பு வகையைச் சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்து போனது.
ReplyDeleteநல்ல அவதானிப்பு