சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, November 16, 2011

கில்மா கதைகளை எழுதிய நான்


இன்று இந்த சம்பவங்களையெல்லாம் நினைத்துப் பார்த்தால் மிகவும் சிரிப்பாகவும், பைத்தியக்காரத்தனமாகவும் தோன்றுகிறது. நான் 6ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை படித்தது. திருவாரூர் .சோ. ஆண்கள். மேல்நிலைப் பள்ளியில் இந்த பள்ளி நூற்றாண்டு கால வரலாறு உடையது. இந்த பள்ளியில் தான் கலைஞர், பேராசிரியர் .அன்பழகன். முரசொலி மாறன் படித்தனர்.

இந்த பள்ளியில் நான் 1993ம் ஆண்டு 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது பெண்களின் மீதான ஈர்ப்பு தோன்றிய காலம் அது. முதன் முதலாக கில்மா புத்தகம் படித்ததும் அந்த காலக்கட்டத்தில் தான். அப்பொழுது எனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் சுதாகர் ராஜ் மற்றும் ராஜா. எங்கு சென்றாலும் ஒன்றாகவே செல்வோம். சினிமாவுக்கு, ஆற்றில் குளிக்க, தேர் திருவிழா ஆகியவற்றில் சேர்ந்தே இருப்போம்.


அந்த கில்மா புத்தகங்கள் படிப்பதற்கு என்றே ஓர் இடத்தை ஓதுக்கி வைத்திருந்தோம். அது விளமல் பகுதியில் ஆற்றங்கரையை ஒட்டியிருந்த சுடுகாட்டின் பின்புறம். பத்து ரூபாய் சேர்த்து ஒரு புத்தகம் வாங்கி அங்கு எடுத்துச் சென்று மூவரும் அமர்ந்து படிப்போம். பிறகு எங்களுக்குள் சந்தேகங்களையெல்லாம்(!) நாங்களே தீர்த்துக் கொள்வோம். இன்று யோசித்துப் பார்த்தால் அது பெரும்பாலும் தவறாகவே இருக்கும்(பெண்களைப் பற்றி எங்களுக்கென்ன தெரியும் நாங்கள் படித்ததெல்லாம் ஆண்கள் பள்ளியில் மட்டுமே). படித்த பிறகு புத்தகங்களை திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள ஒரு ண்டபத்தில் ஒளித்து வைத்திருப்போம். சில நாட்களுக்கு பிறகு வேறொரு நண்பர்கள் குரூப்புக்கு அந்த புத்தகங்களை கொடுத்து விட்டு அவர்களிடம் உள்ள புத்தகங்களை பெற்றுக் கொள்வோம்.

தினம் ஒரு புத்தகங்களை வாங்குவோம். ஆனால் எங்களுடைய பாக்கெட் மணிக்கு அவ்வளவு செலவு செய்வது சாத்தியமில்லாத காரணத்தால் என்னடா செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது என்னுடைய அத்தை பையன் மன்னார்குடியில் உள்ள சதீஷ் இதற்கு ஒரு தீர்வை சொன்னான். இந்த புத்தகங்களில் வரும் கதையெல்லாம் உண்மை கிடையாது, ஒரு டுபாங் (போலி) எழுத்தாளர் தான் எழுதுகிறார் என்றும், நீயே முயற்சித்துப்பார் எழுத முடியும் என்றும் கூறினான். (ஆக என்னை முதன் முதலில் அவன் தான் எழுதத்தூண்டினான், அதுவும் கில்மா கதைகளை, கருமம்) சரி என்று நாங்களே எழுத முடிவு செய்தோம்.

இரு குழுக்கள் தாங்கள் கதைகளை எழுதுவது என்றும் எழுதியவர்களே படித்தால் மேட்டர் சப்பென்று இருக்கும் என்ற காரணத்தினால் நாங்கள் எழுதிய கதைகளை அவர்களிடம் ஒப்படைத்து விடுவது என்றும் அவர்களின் கதைகளை நாங்கள் எடுத்துக் கொள்வது என்றும் முடிவானது. எழுத நோட்டு வேண்டும் என்ன செய்யலாம் என்று யோசித்த போது, அப்பொழுதெல்லாம் ரப் நோட்டுக்காக ஒரு பக்கம் Dot Matrix Printerல் பிரிண்ட் எடுத்த பேப்பரினை வைத்து தைத்த நோட்டு கிடைக்கும் நல்ல நோட்டை விட குறைந்த விலைக்கு கிடைக்கும். ஒரு பெரிய நோட்டு 3ரூபாய். அந்த நோட்டை வாங்கி விட்டு அந்த சுடுகாட்டு பின்புறம் நானும் என் நண்பர்களும் கதை விவாதத்தை தொடங்குவோம். நான் தான் எழுதுவேன். ராஜாவும் சுதாகரும் கதையை சொல்வார்கள்.

அவர்கள் இருவரும் ஏதோ பெரிய எழுத்தாளர் போல் யோசிக்க நான் நடுநடுவே ஐடியாக்களை கொடுப்பேன். ஒரு வழியாக ஒரு நோட்டு முழுவதும் எழுதிய பிறகு நோட்டுகளை மாற்றிக் கொள்வோம். அதையெல்லாம் நினைத்தால் இன்றும் எனக்கு சிரிப்பு தாங்க முடியாமல் வரும்.

இன்றுள்ள பதின் இளைஞர்கள் (Teen Agers) செல்போனிலும் கம்ப்யூட்டரிலும் மிகச்சாதாரணமாக பிட்டுகளை பார்க்கிறார்கள். நமக்கே ஆலோசனை சொல்லும் அளவுக்கு அவர்களுக்கு கில்மா மேட்டரில் அறிவு இருக்கிறது. ஆனால் என் வயதில் புத்தகம் வாங்க வழியில்லாமல் நாங்களே எழுதிய கதை, ஏழைக்கேற்ற எள்ளுருண்டை தான்.


இன்று என் நண்பர்களில் சுதாகர் இல்லை. ஏழு வருடங்களுக்கு முன் திருத்துறைப்பூண்டி - வேதாரண்யம் இடையே நடந்த சாலை விபத்தில் பலியாகி விட்டான். அவன் BE (சிவில்) முடித்தவன். அவனது கனவுகள் நிறைவேறும் முன் காலன் அவன் உயிரை பறித்து விட்டான். ராஜா திருவாரூரில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான். நானோ சென்னையில் ரயில்வேயில் செக்ஷன் இஞ்சினியராக இருக்கிறேன். என்றோ நம் வாழ்வில் நடந்த சாதாரண சம்பவங்கள் பின்னாளில் நமக்கு வரலாறாகின்றன.

மலரும் நினைவுகளை நினைத்துப் பார்த்த மகிழ்ச்சியுடன்


ஆரூர் முனா செந்திலு

3 comments:

  1. எனக்கும் படித்த அனுபவங்கள் உண்டு. எழுதியது இல்லை பாஸ்...

    ReplyDelete
  2. அற்புதம் அண்ணா, இதே போல முன்பு தாங்கள் எழுதிய நீலப் படம் பார்த்த நிகழ்வுகளை எழுதியிருந்ததைப் படித்திருக்கின்றேன். அதில் வரும் நண்பர்களின் பெயர்களை மாற்றம் செய்யாமல் அப்படியே எழுதியிருந்தது மிகவும் வியப்பாக இருந்தது, இதிலும் கூட. யாரும் ஒன்னும் சொல்லவில்லையா அண்ணா?.
    கொஞ்சம் தைரியம் அதிகம் தான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...