சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, November 17, 2011

தமிழகத்தில் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு, பால் விலை உயர்வு: ஜெயலலிதா அறிவிப்பு

தமிழகத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால், பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும், ஆவின் பால் விலையும் உயர்த்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தமிழக அமைச்சரைவை கூட்டத்துக்குப் பிறகு, அவர் இன்று மாநில மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அதன் முக்கிய அம்சங்களாவன:

* மத்திய அரசு, தமிழகத்தை புறக்கணித்து வருகிறது. பலமுறை கேட்டும் மத்திய அரசு பணம் ஒதுக்கவில்லை. மேற்கு வங்க அரசுக்கு மட்டும் உரிய நிதியை ஒதுக்கி வருகிறது.

* தமிழகத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் மரணப் படுக்கையில் உள்ளன.

* மின்சார வாரியம் கடன் சுமையில் உள்ளது. கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் உள்ளது. மரணப் படுக்கையில் உள்ள மின்சார வாரியத்தை நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

* மின் துறையைப் போலவே போக்குவரத்து துறையும் மரணப் படுக்கையில் உள்ளது.

* மின் வாரியத்துக்கு ரூ.42 ஆயிரம் கோடி கடன் உள்ளது.

* அரசு போக்குவரத்துத் துறையும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. போக்குவரத்து கழகத்துக்கும் திவால் நிலையே நீடிக்கிறது.

* அரசு போக்குவரத்துத் துறை ரூ.6,150 கோடி கடனில் உள்ளது.

* ஆவின் நிறுவனத்துக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

* மின்சாரம், போக்குவரத்து, ஆவின் முதலிய துறைகளை காப்பற்ற வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டுள்ளது.

* இந்தத் துறைகளை காப்பற்ற வேண்டும் என்பதால், பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதை தவிர்க்க முடியாது. இதேபோல், ஆவின் பால் விலை உயர்வையும் தவிர்க்க முடியாது. ஆவின் பால் விலை லிட்டருக்கு 24ரூபாயாக உயர்த்தப்படுகிறது

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறினார்.


பத்திரிக்கை செய்தி


4 comments:

  1. இலவசமா எதை கொடுத்தாலும் வாங்கும் தமிழன் இதையும் தாங்குவான்!

    ReplyDelete
  2. அப்படியே உங்க கருத்தையும் சொல்லி இருந்தா அம்சமா இருந்திருக்கும்...

    ReplyDelete
  3. வருசத்துக்கு ஒரு தேர்தல்-னு சட்டம் போட்டாத்தான் இவங்கள நம்ம ரூட்டுக்கு கொண்டுவரமுடியும் போல

    ReplyDelete
  4. எல்லாேம ஓசியில ெகாடுத்துட்டு இப்படித்தான் அைத சரிபண்ணுவாங்க திருந்தே மாட்டானுங்க,,, ெபாறுக்கிங்க

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...