சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, November 8, 2011

எம்.ஜி.ஆரின் கடைசி நாட்கள்...

தேர்தல் வரும் பொழுது தான் அரசியல் கட்சிகளுக்கு M G R நினைவுக்கு வருவார். ‘தலைவா... உங்களை மறந்தால்தானே நினைப்பதற்கு...’ என்று சுவரொட்டி ஒட்டி தங்களின் பாசவெளிப்பாட்டைக் காட்டுகின்றனர். மறைந்த அந்த மக்கள் தலைவனின் கடைசி நாட்கள் பற்றிய ஒரு சின்ன அலசல்... 1987 டிசம்பர் 2...
ராமவரம் தோட்டம். ஆறு மாச ஆண் குழந்தையோடு நடிகர் ராஜேஷ் வந்தார். மலங்க மலங்க விழித்த மழலையைக் கொஞ்சுகிறார், எம்.ஜி.ஆர். மூன்று முத்தம் வரை உம்மென்று முறைத்த குழந்தை நான்காவது முத்தத்தில் பொக்கை வாய்திறந்து புன்னகைக்கிறது. அடுத்து கமகமக்கும் அமர்க்களமான விருந்தோம்பல்.

டிசம்பர் 5...
அம்பிகா, ராதா நடித்த திரைப்பட பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது. எம்.ஜி.ஆர். கலந்து கொள்கிறார் என்கிற செய்தியால் கோலிவுட்டில் குஷி. தலைவரை தரிசிக்க தமிழ்சினிமா உலகமே ஆஜர். கேரளாவில் இருந்து மோகன்லால் வந்திருந்தார். நட்சத்திரங்கள் எல்லாம் முண்டியடித்துக் கொண்டு (ராமச்) சந்திரனிடம் முகம்காட்டி நலம் விசாரித்தனர். எல்லோரையும் ஒன்றாகப் பார்த்த எம்.ஜி.ஆர் முகத்தில் நெகிழ்ச்சி ப்ளஸ் மகிழ்ச்சி.

டிசம்பர் 6... சிவாஜி, சத்யராஜ் நடித்த ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தின் நூறாவது நாள் விழா. சீஃப் கெஸ்ட் சி.எம். ‘‘உலகம் முழுக்கத் தேடிப்பார்க்கிறேன்... என் தம்பி சிவாஜிக்கு இணையாக ஒரு நடிகனும் இல்லை...’’ என்று சிவாஜி நடிப்புக்குப் புகழாரம் சூட்டுகிறார், எம்.ஜி.ஆர். கலங்கிய கண்களோடு ஷீல்டு வாங்கவந்த சிவாஜியை அரவணைத்து கன்னத்தில் பாசப்பெருக்குடன் ‘பஞ்ச்’ முத்தம் கொடுக்கிறார். ‘‘எனக்கும் முத்தம் வேண்டும்...’’ என்று அடம்பிடித்து எம்.ஜி.ஆர் முன்னால் கன்னத்தை நீட்டுகிறார், நம்பியார். ‘நோ’ சொல்லி மறுத்து விடுகிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 15..
எம்.ஜி.ஆர் மனசில் உயர்ந்த ஸ்தானத்தில் இருந்த, கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி மறைந்தார். இருமல் தொல்லையால் அவதிப்பட்ட எம்.ஜி.ஆர்., இறப்புச் செய்தி கேட்டு துயரநெருப்பில் மெழுகாய் உருகினார். துக்கம் விசாரிக்கச் செல்ல வேண்டும் என்று துடித்த எம்.ஜி.ஆரை டாகடர்கள் தடுத்தனர்.

டிசம்பர் 20... ராமாவரம் தோட்டம். ‘வேதம் புதிது’ படத்துக்கு ஏற்பட்ட சென்சார் சிக்கலை நீக்கிய எம்.ஜிஆருக்கு நன்றி சொல்ல பாரதிராஜா வந்தார். பிறந்த நாளில் ஆசீர்வாதம் பெற்றுவிட்டு எம்.ஜி.ஆருக்கு சாக்லேட் பாக்ஸ் கொடுத்தார், ராஜேஷ். டயாபெட்டீஸ் பேஷன்ட் என்பதை மறந்து குஷியோடு சாக்லேட்டை ருசித்தார். அப்படியே ஸ்வீட் பாக்ஸை காவல் காத்த காக்கிகளுக்கு கொடுக்கும்படி உதவி மாணிக்கத்திடம் ஒப்படைக்கிறார், எம்.ஜி.ஆர். திடீரென்று ஜேப்பியார் விசிட். மூவரையும் சேர்ந்து பார்த்ததும் எம்.ஜி.ஆருக்கு ஆனந்தம் தாங்கவில்லை வாய்கொள்ளாச் சிரிப்பு. கல்லூரி அனுமதி தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் விவாதிக்கிறார், ஜேப்பியார். அருகில் அமர்ந்திருந்த பாரதிராஜவிடம், ‘‘பாரதி நீயொரு காலேஜ் கட்டிக்கிறியா... நான் கையெழுத்துப் போட்டு அனுமதி தரேன்...’’ கேட்கிறார், எம்.ஜி.ஆர். ‘‘தலைவரே எனக்கு அதெல்லாம் சரிப்பட்டு வராது. ஆக்சுவலி ஐ யம் கிரியேட்டர்...’’ என்று கரகரகுரலில் பதில் சொல்லும் பாரதிராஜாவைப் பார்த்து, ரசித்துச் சிரிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 22... சென்னை கிண்டியில் நேரு சிலை திறப்புவிழா. பிரதமர் ராஜீவ்காந்தி கலந்து கொள்கிறார். ராமாவரத்தில் இருந்து புறப்படும் போதே சுகவீனம். உடல் உபாதையால் சுவரைப் பிடித்தபடி நடக்கிறார். எப்போதும் மேடையில் அரபிக்குதிரையாகத் தாவிக் குதிக்கும் எம்.ஜி.ஆரின் கைகளை வலிந்து உயர்த்திப் பிடிக்கிறார், ராஜீவ் காந்தி. வலியால் துடிக்கிறார், எம்.ஜி.ஆர்.

டிசம்பர் 23...
மதியம் எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை கொலாப்ஸ். தடதடவென கார்கள் தோட்டத்தை நோக்கி தோட்டாவாய் சீறுகின்றன. மறுநாள் எம்.ஜி.ஆர் பெயரில் போரூரில் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழா. ‘‘என் பெயரை வைக்காதே நான் கலந்து கொள்ள மாட்டேன்...’’ என்று உடையாரிடம் பல முறை சொன்னார், எம்.ஜி.ஆர். உடையாரோ எம்.ஜி.ஆர்மீது கொண்ட அபரிமிதமான அன்பால் விழாவை நடத்தத் திட்டமிட்டு இருந்தார். ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் திறப்பதாக ஏற்பாடு. அதனால் மாவிலை தோரணம்... கொடி என்று ராமாவரமே திருவிழாக் கோலம் பூண்டது.

டிசம்பர் 24...
அதிகாலை நேரம், ராமாவரம் தோட்டத்துக்கு வெளியே ஸ்பீக்கரில் ‘நீங்க நல்லாயிருக்கணும்...’ சீர்காழி வெண்கலக்குரலில் பாடிக்கொண்டு இருந்தார். வீட்டுக்குள் எம்.ஜி.ஆரை மரணதேவன் பறித்துக்கொண்டு சென்றான். சொன்னபடியே ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை திறப்புவிழாவில் எம்.ஜி.ஆர் கலந்து கொள்ளவில்லை.

ஆரூர் முனா செந்திலு


15 comments:

  1. சகாப்தம் ..எப்போதும் MGR தான்

    ReplyDelete
  2. MGR always MGR thaan.... rishvan

    please read my blog www.rishvan.com and leave your comments.

    ReplyDelete
  3. வாத்தியார் பற்றிய அறிய தகவல்கள் நன்றி

    ReplyDelete
  4. ”மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மழைக்கள் விழ வேண்டும்!!” என்ன ஒரு தலைவன்!! பகிர்வுக்கு நன்றி!!

    ReplyDelete
  5. நானும் யார் யாரிடமோ கேட்கிறேன் இந்த நாட்டு மக்களுக்காக thiru.MGR என்ன செய்தார் என்று? யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே ஏன்? நீங்களாவது சொல்வீர்களா? சத்துணவு திட்டம் தவிர வேறு என்ன செய்தார் அவர்

    ReplyDelete
  6. /// suryajeeva said...

    நானும் யார் யாரிடமோ கேட்கிறேன் இந்த நாட்டு மக்களுக்காக thiru.MGR என்ன செய்தார் என்று? யாருமே சொல்ல மாட்டேன் என்கிறார்களே ஏன்? நீங்களாவது சொல்வீர்களா? சத்துணவு திட்டம் தவிர வேறு என்ன செய்தார் அவர் ///


    இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் உங்களுடன் மாறுபடுகிறேன். அய்யா MGR அவர்கள் பிள்ளைப் பெற்றுக் கொள்ளவில்லை. அதிமுகவுக்கு தன் வளர்ப்பு வாரிசுகளை தலைமையேற்க முனையவில்லை. சொல்லிக் கொள்வது மிகப்பெரிய சொத்துகள் சேர்க்கவில்லை. ராமாபுரம், தி.நகர் வீடுகள் மற்றும் நகைகள் தவிர அவருக்கு சொல்லிக் கொள்வது போல் பெரிய சொத்துகள் இல்லை. இருந்த சொத்துக்களையும் காதுகேளாதோர் பள்ளிக்கும் மக்களுக்கும் தான் செய்தார். எந்தவித ஊழலிலும் ஈடுபடவில்லை. காமராஜரைப் ஆட்சியைப்போல் சொல்லிக் கொள்ளும்படி வளர்ச்சித்திட்டங்கள் எதுவும் செய்யவில்லை என்றாலும் கலைஞர் ஆட்சிப்போல ஜெயலலிதா போல மக்கள் பணத்தை சுரண்டவில்லை. கோடி கோடியாக கொள்ளை அடிக்கவில்லை. ஈழத்தை வைத்து அரசியல் புரியவில்லை. நல்லது எதுவும் செய்யாவிட்டாலும், கெட்டது எதுவும் தமிழ்நாட்டிற்கு செய்யவில்லை என்பதே பெரிய விஷயமாகும்.

    ReplyDelete
  7. பதில் அளித்ததற்கு நன்றி...

    ReplyDelete
  8. /// suryajeeva said...

    பதில் அளித்ததற்கு நன்றி... ///

    அண்ணே அப்படியில்லண்ணே. MGRயைப் பற்றி ஒரு வார்த்தை கூறுவதானாலும் கூட நாம் யோசித்து சொல்ல வேண்டும். இவ்வளவு சிரமப்பட்டு நான் ஒரு வார்த்தை கூட பிசிறில்லாமல் கூறியுள்ளேன். பொசுக்கென்று நன்றி என்று கூறினால் எப்படி அண்ணே. விளக்கத்துக்கு பதில் சொல்லுங்கண்ணே.

    ReplyDelete
  9. Do not write for votes. If your Public Relations are good (read as "writing jalra comments in other people's blogs" ) you will get votes and comments back. You dont need them if you give intereting and unique articles.

    Keep up your work. I am your silent reader. I dont comment often. But your blog is prominent these days.

    ReplyDelete
  10. சுவாரஸ்யமான கலவையான தொகுப்பு. நன்றி .
    அது என்ன "கல்யாணத்துக்கு முன்னாடி" என்று ஒரு "ஐயோ பாவம் " படம்?

    பின்னர் படமே எடுக்கவில்லையா? இல்லை அதனை போட்டால் நாங்கள் பொறமை கொள்வோம் என்று தயக்கமா?

    ReplyDelete
  11. இந்த மேட்டரெல்லாம் எங்களுக்கு புதுசு தல... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  12. /// கக்கு - மாணிக்கம் said...

    சுவாரஸ்யமான கலவையான தொகுப்பு. நன்றி .
    அது என்ன "கல்யாணத்துக்கு முன்னாடி" என்று ஒரு "ஐயோ பாவம் " படம்?

    பின்னர் படமே எடுக்கவில்லையா? இல்லை அதனை போட்டால் நாங்கள் பொறமை கொள்வோம் என்று தயக்கமா? ///

    அது அப்படியில்லண்ணே. அந்த காலம் வரை தான். இப்படிதான் தோன்றித்தனமாக திரிஞ்சோம். எப்படி வேணும்னாலும் நடந்து கொள்ளலாம் என்ற புகைப்படம் அது. அதன் பிறகு எதுவாக இருந்தாலும் மனைவியின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியதாயிருக்கு. அதான் இது சுதந்திரத்துக்கு முன்.

    ReplyDelete
  13. தோழர், அதான் நன்றி அப்படின்னு சொல்லிட்டேனே...
    வேண்டுமானால் ஆங்கில வாக்கியம் ஒன்றை தமிழ்படுத்தி சொல்கிறேன்...
    "இந்த உலகில் நடக்கும் அநீதிகளுக்கெல்லாம் காரணம் கேட்டவன் இல்லை... அதை கண்டும் காணாமல் செல்லும் நல்லவனே..."
    என் வழியில் சொல்வதென்றால்,
    நல்லது செய்யாமல் இருந்ததும் கேட்டது தான் என்பேன்...
    விடுங்க தோழர்...

    ReplyDelete
  14. 1.In cenema he knew everything music,lyrics,fight dance and he created a style it was MGR formula style.Now everyone follows tamil industry.
    2,During his period he started Paramathivelur paper plant it is biggest govt profitable project.
    3.He helped many people for his study(he maintained a ledger for this to send money- every month/year).and he took more interest to solve anyones personal and financial problem if he know.
    4.DURAI MURUGAN,KOVAI SARALA,N.S KALAIVANAR relation are some of them(They received money from MGR during their study).
    5.He deputed eligible and qualified persons in his ministry.He gave good respect to all his minister.(Mr.Nedunchezhiyan,K.K.S.S.R,Thirunavukkarasu,Muthusamy,Kalimuthu were some of the minister in his cabinet)
    6.He was given food to all in his home round the clock till his death.
    7.He was struggled his personal life at the begining,and political life at the middle.and he created record in the political and cine field.
    8.HIS HEART WAS ALWAYS THINKING about tamil people not his family.
    9.I can write more and more next time.
    10.MGR is SAGAPTHAM.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...