சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, November 5, 2011

திரும்பவும் கலக்க வந்த சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா


தீபாவளியன்று 'ஏழாம் அறிவு', 'வேலாயுதம்', 'ரா.ஒன்' ஆகிய படங்கள் வெளியாகின. தமிழக மக்களிடம் எந்த படம் வரவேற்பை பெற்று இருக்கிறது, பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் எவ்வளவு என்று பட விமர்சகர்கள் கணக்கிட்டு வருகிறார்கள்.

தீபாவளி வெளியீடு முடிந்தும் நல்ல தியேட்டர்கள் கிடைக்காத காரணத்தால் எந்த புதுப்படம் வெளியாகும் என்று முறையாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் சத்தமில்லாமல் ஒரு படம் நேற்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது. ரஜினி நடிப்பில் மாபெரும் வரவேற்பை பெற்ற 'பாட்ஷா' படம் தான் அது.

ரஜினி நடிப்பில் சுமார் ஒரு வருடம் ஒடி பல சாதனைகளை முறியடித்த படம் 'பாட்ஷா'. நான் 10 வகுப்பு படிக்கும் போது ரிலீசான படம் தான் பாட்ஷா. படத்தின் முதல் நாளன்று திருவாரூரில் பெரிய கோயிலிலிருந்து நூறு ஆட்டோக்கள் புடை சூழ ஊர்வலமாக படப்பெட்டியை கொண்டு வந்தது. இன்றும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. படத்தை அந்த நாளிலேயே தியேட்டரிலேயே 25 முறைகளுக்கு மேல் பார்த்தவன் நான். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி" என்கிற வசனம் இன்றும் சிறு குழந்தைகளிடம் பிரபலமாக இருக்கிறது.

சென்னையில் அண்ணா, ஸ்ரீநிவாசா, நியூபிராட்வே, மகாலெட்சுமி ஆகிய நான்கு தியேட்டர்களில் இப்படத்தை ரீ-ரிலீஸ் செய்திருக்கிறார்கள். எத்தனை நாள் கழித்து ரீ ரிலீசானாலும் தலைவரின் படம் கல்லா கட்டும். அது தான் ரஜினி.


ஆரூர் முனா செந்திலு.


4 comments:

  1. தலைவர் என்றுமே வசூல் மன்னன் தான்

    ReplyDelete
  2. என்னுடைய சிறந்த படங்களில் பாட்ஷா வும் ஒன்று......

    ReplyDelete
  3. ரஜினி ஒரு தனிக்காட்டு ராஜாதான்.....!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...