கிருஷ்ண வம்சி எனக்கு பிடித்த தெலுங்கு இயக்குனர்களில் ஒருவர். இவரது முராரி, குலாபி, நின்னே பெல்லாடுதா, அந்தப்புரம், ஆஞ்சனேயம், ராக்கி படங்கள் மசாலாப்படமாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்தவை. அதனால் படம் வெளியான அன்றே செல்ல முயற்சித்தாலும் வேலைபளு காரணமாக நேற்று தான் செல்ல முடிந்தது,
புஜ்ஜி (கோபிசந்த்) ஒரு பணக்கார, விவசாயிகளின் செல்வாக்கு பெற்ற ஆஞ்சநேயர் பிரசாத் (ராஜேந்திர பிரசாத்) தின் ஒரே மகன் . புஜ்ஜி எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ராஜா ராஜேஸ்வரி (தப்ஸி) யை பார்த்து அவள் மீது காதல் கொள்கிறான். ராஜா ராஜேஸ்வரி ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியான ரோஜா மற்றும் நரேஷ்ஷின் மகள். இவர்களது காதலை இருகுடும்பங்கள் ஒப்புக் கொண்டு திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றன, எல்லாம் சந்தோசமாக தொடங்கி நடக்கும் போது எதிர்பாராத சூழ்நிலைகள் அவர்களுக்குள் பிளவை ஏற்படுத்துகின்றன.
இந்த பிளவை மாற்ற புஜ்ஜி அவரை ஒருதலையாக காதலிக்கும் சாரதா தாஸ் உடன் இணைந்து பல முயற்சிகள் மேற்கொண்டு குடும்பங்களிடையே பகையை தீர்த்து தப்ஸியை கைப்பிடித்தாரா என்பதே கதை.
ராஜேந்திர பிரசாத் படத்தில் மிகவும் கெளரவமான குடும்பத்தலைவராக சக்தி வாய்ந்த தலைவராக அருமையாக நடித்துள்ளார். ஹீரோ கோபிசந்த் தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர். இப்போது தெலுங்கில் பெரிய ஹீரோவாகி விட்டார். பார்ப்பதற்கு மிக வலிமையான ஆஜாகுபானுவான ஆள் போல் இருக்கிறார். தப்ஸி மற்றும் சாரதா தாஸ் ஆகியோரும் சொல்லும்படி உள்ளனர். கிருஷ்ண வம்சி ஒரு மிக அழகான வழியில் ஒரு கதாநாயகி அழகை காண்பிக்கும் ஒரு மாஸ்டர், இந்த உண்மையை மொகுடு கொண்டு மறுபடியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
நரேஷ் மற்றும் ரோஜா தங்களது பாத்திரங்களை நன்றாக செய்திருக்கின்றனர். முதல் பாதியில் நல்ல குடும்பம் சார்ந்த நகைச்சுவை காட்சிகள் நன்றாக உள்ளன, மற்றும் கோபிசந்த் மற்றும் தப்ஸி இடையே ஒரு கண்ணியமான காதலை காட்டியுள்ளனர். முன் இடைவெளி திருப்பம் நல்ல உள்ளது.
தப்ஸியின் டப்பிங் மிகவும் கொடுமையாக உள்ளது. அவரது நடிப்பு திறன் மேலும் வேகமாக மேம்படுத்த வேண்டும். இல்லையென்றால் சீக்கிரம் டோலிவுட்டிலிருந்து டாட்டா காண்பித்து அனுப்பி வைக்கப்படுவார்.
நிச்சயதார்த்த பாடல் 'எட்டான்டி மொகுடு' மிகவும் மெலோடிராமாடிக்காக உள்ளது, பல காட்சிகள் கிருஷ்ண வம்சியின் முந்தையப்படங்களின் சாயலிலேயே உள்ளன.ஒளிப்பதிவு நன்றாக உள்ளது, அவரது முந்தைய படங்களின் சாயலில் உள்ளது திரைக்கதை இரண்டாவது பாதியில் முரண்பாடான தருணங்களால் பாதிக்கப்படுகிறது.
மொகுடு ஒரு குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று தான் சென்றேன், ஆனால் துரதிஷ்டவசமாக படுசுமார் தான். அடுத்தப் படத்தில் பார்க்கலாம்.
ஆரூர் முனா செந்திலு.
enga partheengaa...casino vaa melody yaa??
ReplyDelete/// ஜெட்லி... said...
ReplyDeleteenga partheengaa...casino vaa melody yaa??///
சென்னையில் இல்லீங்கண்ணா, விஜயவாடா அலங்கார்ல பார்த்தேன்ணா.
விமர்சனம் சூப்பர்....!!!
ReplyDeleteநல்ல விமர்சனம். சீக்கிரம் கோபிசந்த் இங்க வந்து ‘வெடி’ வைப்பாரா??
ReplyDelete/// பொதினியிலிருந்து... கிருபாகரன் said...
ReplyDeleteநல்ல விமர்சனம். சீக்கிரம் கோபிசந்த் இங்க வந்து ‘வெடி’ வைப்பாரா?? ///
சன் பிக்சர்ஸ் உதவியிருந்தால் விஷால் தான் இங்கு மொகுடு.
ஹா ஹா படம் ஊத்திக்குச்சா, நல்ல வேளை எவனும் ரீ மேக் பண்ண மாட்டான்
ReplyDeleteபார்க்கலாமா என்று எண்ணினேன். ட்ரைலர் பார்த்ததும் அம்முடிவை மாற்றி விட்டேன்.
ReplyDeleteகிருஷ்ண வம்சி தமிழில் கூட ஒரு மொக்கைப்படம் எடுத்திருக்கிறார் தானே...
ReplyDelete