சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, November 25, 2011

மயக்கம் என்ன - திரை விமர்சனம்

காலையிலேயே என் மனைவி இன்று விரைவாக அலுவலகம் செல்ல வேண்டும் என்று 07.00 மணிக்கெல்லாம் கிளம்பி விட்டாள். சரி என்னடா செய்யலாம் என்று யோசித்து இணையத்தை திறந்து ராக்கி தியேட்டர் வெப்சைட்டை திறந்தால் 07.30 மணிக்கு மயக்கம் என்ன சிறப்பு காட்சி என்று குறிப்பிட்டிருந்தது. உடனே கிளம்பி விட்டேன். 10.30 மணிக்கெல்லாம் படம் முடிந்து விட்டது. மழையும் பெய்வதால் தியேட்டரில் கூட்டமும் இல்லை.

மயக்கம் என்ன படத்தின் கதைக்குள் செல்வோமா?

கார்த்திக் சுவாமிநாதன் (தனுஷ்) ஒரு போட்டோகிராபர். மிகப் பெரிய Wild Life Photographer ஆக வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கிறான். பெற்றோர் இல்லை. நான்கு நண்பர்களுடன்(இரண்டு ஆண் நண்பர்கள், இரண்டு பெண் நண்பர்கள்) சேர்ந்து அவனும் அவனது தங்கையும் வளர்கிறார்கள். நான்கு நண்பர்களின் ஒருவன் சுந்தர், அவன் அவனது அலுவலகத்தில் பணிபுரியும் பெண்ணுடன்(கதாநாயகி ரிச்சா) டேட்டிங்கில் உள்ளான். ஆனால் அவளோ தனுஷை காதலிக்கிறாள். ஆனால் தனுஷ் உள்ளுக்குள் அவளை காதலிக்கிறார், வெளியில் நண்பர்களுக்காக அவளை வேண்டாம் என்கிறார். பிறகு பிரச்சனை அனைவருக்கும் தெரிய வந்து தனுஷூக்கும் ரிச்சாவுக்கும் திருமணம் நடக்கிறது. அதன் பிறகு நடக்கும் ஒரு விபத்தில் தனுஷூக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. தனுஷ் அந்த பிரச்சனையில் இருந்து மனைவியின் உதவியுடன் வெளிவந்து மிகப் பெரிய Wild Life Photographer ஆக வாழ்வில் ஜெயிப்பதே கதை.

தனுஷ் பிரமாதமாக நடித்துள்ளார். மிக இயல்பாக அவருக்கு பொருந்துகிறது. படத்தில் அவரது பட்டப்பெயர் ஜீனியஸ். ரிச்சாவைப் பார்த்த உடன் அவர் கூறும் வார்த்தை "போடி முண்டகலப்பை". தியேட்டரே கைதட்டலில் அதிர்கிறது. மனநலம் சரியில்லாத காலக்கட்டத்தில் தன்னுடைய நெருங்கிய தோழியின் திருமணத்திற்கு வந்து மாப்பிள்ளையை பாட்டிலால் அடித்து மண்டையை உடைத்து விட்டு தன்னை எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என்று புலம்பும் போது அசத்துகிறார்.

ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன். ஆனால் அந்தப்படத்தை டிவியில் பார்த்ததால் அந்த அளவு ஈர்க்கவில்லை. ஆனால் இந்தப்படத்தில் நடிப்பில் அசத்துகிறார். மிகப் பொறுமையாக மனஉறுதியுடன் உள்ள போதும், தனுஷை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் போதும் நன்றாக நடித்துள்ளார். மிக அழகாக உள்ளார் (கொஞ்சம் ஜொள்ளு கூட விட்டேன் ஹிஹிஹி). தனுஷ் திருமணத்தில் கலாட்டா செய்ததால் மற்றொரு நண்பன் முன் கண்ணீர் விட்டு அழுததும் அவன் வந்து ரிச்சாவை கட்டியணைத்து ஆறுதல் கூறும் போது தனுஷை விட்டு விட்டு தன்னிடம் வந்துவிடும் படி கூறும் போது, மறுத்து விட்டு தனுஷ் மீதான காதலை சொல்லும் போதும், அந்த பிரச்சனையை லாவகமாக தீர்க்கும் போதும் அசத்துகிறார்.

மற்ற நண்பர்களாக வருபவர்கள் அனைவரும் ஓகே. அதிலும் சுந்தராக வருபவர் மிக அருமையாக நடித்துள்ளார். தனுஷூடன் ரிச்சாவுக்கு திருமணமாகும் போது திட்டிக்கொண்டே வாழ்த்தும் போது தியேட்டர் சிரிப்பில் அதிர்கிறது. பாடல்கள் பார்க்க அருமையாக உள்ளது. .ஜி.வி.பிரகாஷ் அருமையா டியூன் போட்டிருக்கார். பின்னணி இசையும் நன்றாக உள்ளது. குறிப்பா ‘வெண்ணிலவே’ பாட்டுக்கு தனுஷ் - ரிச்சா ஆடி முடிக்கவும் வந்த பின்னணி இசை அற்புதம்.

தனுஷூக்கு திருமணமாகி விட்டதாலும் ரஜினி மாமனார் என்பதாலும் தான் ஒரளவுக்கு சில காட்சிகள் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் அந்த பேருந்து நிறுத்தத்தில் உணர்ச்சிவசப்பட்டு இருவரும் நெருங்கும் போது உதட்டு முத்தம் அழுத்தமாக இருந்திருக்கும். திருமணத்திற்கு பின்பு வரும் அந்தரங்க காட்சிகளும் அரையிருட்டில் அவ்வளவு டீடெயிலாக காட்டப்படாமல் முடிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் செல்வராகவன் அவரது உணர்வுகளுக்கு அந்தக்காட்சிகள் இன்னும் ஆபாசமாக இருந்திருக்கும்.

இது ஒரு மனநலம் பாதிப்பு பற்றி பட்டும் படாமல் சொல்லும் படம். படம் பார்க்கும் நமக்கு கொஞ்சம் பொறுமை இருந்தால் படத்தை பார்க்கலாம், படம் மிகவும் மெதுவாக செல்கிறது. சில காட்சிகள் பொறுமையை சோதிக்கின்றன. வித்தியாசம் என்றால் இது தானா. எனக்கு பிடிக்கவில்லை.

புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் ஒப்பிட்டால் இது வெற்றிப்படமே.

ஆரூர் முனா செந்திலு

33 comments:

  1. vimarsanam nalla irunthathu sir, nan manushan aitanla

    ReplyDelete
  2. எனக்கு செல்வா படம் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு வேகமா விமர்சனம் எழுதிட்டிங்க.

    ReplyDelete
  3. /// பாலா said...

    எனக்கு செல்வா படம் ரொம்ப பிடிக்கும். இவ்வளவு வேகமா விமர்சனம் எழுதிட்டிங்க. ///

    அது ஒண்ணுமில்லீங்க, படம் முடிந்து வந்ததிலிருந்து நல்ல மழை வெளில போக முடியல. தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா? அதான் வீட்ல சும்மா இருக்கோமேன்னு விமர்சனம் பதிவெழுதிட்டேன்.

    ReplyDelete
  4. /// ராஜ் said...

    another psyco movie from selva ///

    Yes absolutely Mr. Raj.

    ReplyDelete
  5. அவசரத்தில் எழுத பட்ட விமர்சனம்!! பட்டையை கிளப்பும் பாடல்கள் பத்தி ஒரு வரி கூட இல்லியே!!

    ReplyDelete
  6. முந்திக்கிட்டீங்க வாழ்த்துகள்.. விமர்சனம் ஓக்கே

    ReplyDelete
  7. 4 மணீ நேரத்தில் 970 ஹிட்ஸா? அப்படி போடு

    ReplyDelete
  8. /// சி.பி.செந்தில்குமார் said...

    4 மணீ நேரத்தில் 970 ஹிட்ஸா? அப்படி போடு ///

    நன்றிண்ணே, 970 இல்லை 1970ண்ணே.

    ReplyDelete
  9. ///rampo said...

    vimarsanam nalla irunthathu sir, nan manushan aitanla ///

    கேட்டதுனால மனிதருள் மாணிக்கமாகிட்டீங்க.

    ReplyDelete
  10. /// "என் ராஜபாட்டை"- ராஜா said...

    அதுக்கள விமர்சனமா ?
    வணக்கத்துடன் :
    ராஜா ///

    தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா? அதான் வீட்ல சும்மா இருக்கோமேன்னு விமர்சனம் பதிவெழுதிட்டேன்.

    ReplyDelete
  11. /// சி.பி.செந்தில்குமார் said...

    முந்திக்கிட்டீங்க வாழ்த்துகள்.. விமர்சனம் ஓக்கே ///

    வேணும்னு செய்யலண்ணே, இன்று காலை வீட்டில் யாருமில்லையா நெட்டில் பார்த்தால் அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் காலை 07.30க்கே படம்னு போட்டிருந்தான். அந்த ஸ்பெஷல் காட்சி பார்த்து விட்டு வந்து எழுதினேன். அதான் சீக்கரம் வந்து விட்டது. இது வழக்கமாக முடியாதண்ணே.

    ReplyDelete
  12. /// Rafeek said...

    அவசரத்தில் எழுத பட்ட விமர்சனம்!! பட்டையை கிளப்பும் பாடல்கள் பத்தி ஒரு வரி கூட இல்லியே!!///

    குறிப்பிட்டதுக்கு நன்றி, இப்பொழுது திருத்தி எழுதி விட்டேன்.

    ReplyDelete
  13. உங்களுடைய விமர்சனத்தைப் படிக்கும் போது படம் அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.நானும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  14. /// ilavarasan said...

    உங்களுடைய விமர்சனத்தைப் படிக்கும் போது படம் அருமையாக இருப்பது போல் தோன்றுகிறது.நானும் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கருத்து கூறுகிறேன்.

    நன்றி. ///

    நான் நல்லாயிருக்குன்னு சொல்லவேயில்லை. ஆயிரத்தில் ஒருவனுடன் ஒப்பிட்டால் மட்டுமே பார்க்கும்படி இருக்கும் என்று சொன்னேன்.

    ReplyDelete
  15. Simple great comments about movie.
    Thanks

    ReplyDelete
  16. விமர்சனம் பார்த்தேன். படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.இப்ப நான் மனுசனாயிட்டனா?

    ReplyDelete
  17. ரா.செழியன். said...

    விமர்சனம் பார்த்தேன். படத்தை பார்க்கலாம் என்றிருக்கிறேன்.இப்ப நான் மனுசனாயிட்டனா?

    படத்தை கண்டிப்பாக பாருங்கள், நீங்கள் மனிதனல்ல மனித மச்சான்..

    ReplyDelete
  18. //ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன்.//

    அடுத்த வாட்டி பாத்தா நான் கேட்டதா சொல்லுங்க தல.

    ReplyDelete
  19. எனக்கும் படம் பெரிதாக பிடிக்கவில்லை.

    ReplyDelete
  20. "தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா?" railway velai enna aachu......

    simple and good vimarsanam.....

    ReplyDelete
  21. /// Anonymous said...

    "தற்காலிகமா நாம தண்டசோறு வேறயா?" railway velai enna aachu......

    simple and good vimarsanam..... ///

    அண்ணே ரயில்வே வேலை கன்பார்ம் தான், இன்னும் மெடிக்கல் டெஸ்ட் பாக்கியுள்ளது. அது இந்த மாதத்தில் முடிந்து விடும். அதிலிருந்து பதினைந்து நாட்களுக்குள் வேலையில் சேருகிற மாதிரி இருக்கும். தெற்கு ரயில்வேயில் போஸ்டிங் என்றாலும் நான் வேலை பார்க்கப்போவது பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் தான். வேலைக்கான உறுதிக்கடிதம் வந்தவுடனே நான் எனது ஏற்றுமதி நிறுவனத்தை ரத்து செய்து விட்டேன். லேத் கம்பெனி பங்குதாரர் பொறுப்பிலிருந்தும் விலகி விட்டேன். அரசு வேலையில் இருக்கும் போது வேறு எந்த நிறுவனத்திலும் பொறுப்பில் இருக்க கூடாதாம், அதான் தற்காலிக தண்டசோறு. என் மனைவி சாந்தோமில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறாள்.

    ReplyDelete
  22. ரஜினி மாமனார்னு நினச்சுகிட்டெ படம் பாக்கனுமா? வெலன்கிடும்

    ReplyDelete
  23. /// r.palanikumar said...

    ரஜினி மாமனார்னு நினச்சுகிட்டெ படம் பாக்கனுமா? வெலன்கிடும் ///

    தவிர்க்க நினைச்சாலும் அதானே உண்மை.

    ReplyDelete
  24. <<< ! சிவகுமார் ! said...

    //ரிச்சா கங்கோபாத்யாய படத்தின் ஹீரோயின். இவரை நான் "தி லீடர்" தெலுங்கு படத்தில் பார்த்துள்ளேன்.//

    அடுத்த வாட்டி பாத்தா நான் கேட்டதா சொல்லுங்க தல. >>>

    சென்ற முறை சந்திக்கும் போதே கேட்டேன் தளபதி அவர் கொடுக்கவில்லை

    ReplyDelete
  25. எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து, நான் பார்த்த மோசமான படம் என்றால் அது சரத்குமார் நடித்த தசரதன் தான். இது சுமார் 15 வருசத்திற்கு மேல் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இது. இசை, காமரா இரண்டும் அருமை, தனுஷும். ஏனோ என்னால இந்த படத்தை பொறுமையாக பார்கமுடியவே இல்லை. நண்பியின் கல்யாண ரிசப்சனில், மாப்பிள்ளையின் தலையில் பாட்டிலை உடைத்தது என்னவோ, என் தலையில் உடைத்தது போன்ற உண்ர்வு. தலையைப் பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வந்துவிட்டேன்.

    ReplyDelete
  26. /// MOHAMED YASIR ARAFATH said...

    எனக்கு நினைவு தெரிஞ்சதுல இருந்து, நான் பார்த்த மோசமான படம் என்றால் அது சரத்குமார் நடித்த தசரதன் தான். இது சுமார் 15 வருசத்திற்கு மேல் இருக்கும். ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிட்டது இது. இசை, காமரா இரண்டும் அருமை, தனுஷும். ஏனோ என்னால இந்த படத்தை பொறுமையாக பார்கமுடியவே இல்லை. நண்பியின் கல்யாண ரிசப்சனில், மாப்பிள்ளையின் தலையில் பாட்டிலை உடைத்தது என்னவோ, என் தலையில் உடைத்தது போன்ற உண்ர்வு. தலையைப் பிடித்துக் கொண்டே தியேட்டரை விட்டு வந்துவிட்டேன். ///
    நீங்க சொல்றது சரிதான், இந்த குறை செல்வராகவனின் எல்லாப்படங்களிலும் காணப்படுகிறது.

    ReplyDelete
  27. புதிய பதிவரான நான் தங்களின் திரை விமர்சனங்களை விரும்பி படிப்பேன். தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!

    ReplyDelete
  28. படம் பற்றி இரு வித கருத்து வருதே !!

    ReplyDelete
  29. /// மோகன் குமார் said...

    படம் பற்றி இரு வித கருத்து வருதே !! ///

    அண்ணே என் கருத்து அப்படி, மற்றவர்கள் எண்ணம் வேறு மாதிரியிருக்கலாம்லே.

    ReplyDelete
  30. Ungalin vimarsanam nandraaga erunthathu. Vaalthukkal nanbare.

    ReplyDelete
  31. தனுஷ் படங்கள் பெண்களை மிகவும் கொச்சைப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. கடந்த பதிவுகளை பார்த்தால் புரியும். ஆனாலும் தனுஷ்கு பெண் ரசிகர்கள் அதிகம். படைப்பில் கவனம் செலுத்தும் இயக்குநர்கள் தனுஷ்க்கு என்று தனி ஸ்டைலை உருவாக்காமல் ஒரு நல்ல கலைஞனை உருவாக்க முயல வேண்டும். கதாபாத்திரத்திலும், கதையிலும் தனுஷ் சற்று கவனம் செலுத்த வேண்டும்..

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...