சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, October 10, 2011

ஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி

என் அப்பா ரிடையர்மெண்ட் அமெளண்ட் செட்டில்மெண்ட் கேஸூக்காக ஊரிலிருந்து வந்திருந்தார். அவருடன் இதே பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்த என் அப்பாவுடன் வேலை பார்த்த இருவரும் வந்திருந்தார்கள். வழக்கறிஞர் என் அப்பாவை அவருடைய சேம்பருக்கு அழைத்திருந்ததால்,அவருடன் நான் இன்று சென்னை கோர்ட் வளாகம் சென்றிருந்தேன்.எஸ்பிளனேடு நுழைவாயில் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காலை 10 மணியிலிருந்து நுழைவாயிலில் காத்திருந்து அரை மணிநேரம் கழித்தே எங்களால் நுழைவாயிலை தாண்ட முடிந்தது. உள்ளே செல்லும் அனைவரையும் ஏதோ ஒரு ஐடிகார்டு காட்டினால் தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்றதும் தீயணைப்பு அலுவலகம் மட்டும் வரை மட்டுமே பொதுமக்களின் டூவீலரை அனுமதிக்கிறார்கள். அங்கு வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல முயன்றால் அனுமதி சீட்டு தனியாக வாங்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு 4 சைஸ் பேப்பரில் அப்ளிகேசன் கொடுத்து அதனை நிரப்ப சொல்கிறார்கள். எங்களுக்கு வக்கீலின் போன் நம்பர் மட்டும் தெரியும் அவரின் ஐடி நம்பரெல்லாம் கேட்டு இருந்தது. நாங்கள் கோர்ட்டுக்கும் செல்லவில்லை. சேம்பருக்குள் சென்று எங்கள் வக்கீலை பார்த்து அவரிடம் உள்ள பாரத்தில் என் அப்பா ஒரு கையெழுத்து போட்டு விட்டு வர வேண்டும் அவ்வளவே.

வக்கீலுக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. என்னடா இது வம்பா போய் விட்டது. என் அப்பா இன்றிரவே திருவாரூருக்கு திரும்ப வேண்டும், நாளை அவருக்கு முக்கிய வேலை ஒன்று ஊரில் உள்ளது. ஒன்றும் புரியாமல் எங்கள் வழக்கறிஞருக்கு போன் செய்தே இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. எங்களுக்கே இந்த நிலைமை, ஏதேதோ ஊர்களிலிருந்து அவ்வளவு விவரம் புரியாமல் எவ்வளவோ பேர் வந்திருந்து விழித்ததை பார்த்த போது வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு 12.30 மணியளவில் எங்கள் வக்கீல் போன் செய்து அவர் ஒரு கேஸ் விஷயமாக கோர்ட்டின் உள் இருந்ததால் போன் எடுக்க முடியவில்லை என்றும் தானே நுழைவாயிலுக்கு வந்து அழைத்து செல்வதாகவும் கூறினார். நான் மட்டும் வெளியில் நின்று கொண்டேன். அப்பா மற்றும் அவருடன் வந்திருந்த மற்ற இருவர் ஆகியோர் வக்கீலுடன் சேம்பர் உள் சென்றனர். வெளியில் நின்று கொண்டபடி மக்களை நோட்டம் விட்டு டைம்பாஸ் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் வெளியில் நூற்றுக்கணக்கானோர் பாரம் நிரப்பிக் கொண்டிருந்தனர். பாதிப்பேருக்கு விபரம் தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு குறைந்தது ஒரு இருபது பேருக்காவது பாரம் நிரப்பி கொடுத்தேன். அதற்குள் என் அப்பா வந்து விட்டார்.

இன்று தான் இந்த கெடுபிடிக்கு முதல் நாளாம், இது போன்ற கெடுபிடியையெல்லாம் கொஞ்சம் தளர்த்தி கொண்டு இருந்திருக்கலாம், அல்லது பாரம் நிரப்பும் இடத்தில் உதவிக்கென ஒரு ஐந்து பேரையாவது இருக்க வைத்திருந்தால் மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும். கோர்ட் என்பதே மக்களுக்காகத்தானே. அவர்களை தவிக்க விட்டு இந்த அளவுக்கு கெடுபிடி செய்தால் யாருக்கு என்ன பலன்.

பாதுகாப்பு முக்கியம் தான் இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக படிப்பறிவு குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் இந்தளவுக்கு சிக்கலான வழிமுறைகள் தேவைதானா?


ஆரூர் முனா செந்திலு






3 comments:

  1. வணக்கம்!ஆரம்பத்தில் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்கும்.போகப் போக பாருங்கள்.நீங்களே அப்புறம் ஒரு வலைபதிவு போடுவீர்கள்.

    ReplyDelete
  2. /// தி.தமிழ் இளங்கோ said...

    வணக்கம்!ஆரம்பத்தில் எல்லாம் அமர்க்களமாகத்தான் இருக்கும்.போகப் போக பாருங்கள்.நீங்களே அப்புறம் ஒரு வலைபதிவு போடுவீர்கள். ///


    பார்ப்போம் நண்பரே

    ReplyDelete
  3. ஒன்றே ஒன்று தான் புரியவில்லை.. ஒரு முறை கோர்ட்டுக்கு குண்டு வைத்தவன் திரும்பவும் கோர்ட்டுக்கே தான் குண்டு வைப்பானா, ஏன் வேறு எங்கேயும் வைக்க மாட்டானா?

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...