சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, October 21, 2011

கேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்


நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணியின் காரணமாக அங்கிருந்தேன். அன்று படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது. மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.


அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்தது விட்டோம். படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும் ரிலீஸ். மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. தலைவரின் படம் 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று. இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன். மொழி கடந்து மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.


ஆரூர் முனா செந்திலு




6 comments:

  1. "அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன். மொழி கடந்து மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்."

    உங்கள் தகவலுக்கு நன்றி.......

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. "ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு..", please correctit. Should be CRAZE

    ReplyDelete
  3. தல... இன்னைக்கு நைட் ஷோ தேவி தியேட்டர் வர்றீங்களா...

    ReplyDelete
  4. ///
    Philosophy Prabhakaran said...

    தல... இன்னைக்கு நைட் ஷோ தேவி தியேட்டர் வர்றீங்களா...
    ///

    இல்லப்பா இன்னைக்கு நைட் தீபாவளிக்கு ஊருக்கு போறேன்.

    ReplyDelete
  5. உங்க தலைவர்[அவர் மட்டும் இல்ல, எல்லா நடிகர்களும் தான்] அந்த கும்பகோண தீ விபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்துக்கு கொடுப்பதாக கூறிய பணம் எத்தனை ஆண்டுகள் கழித்து கொடுத்தார் என்று தெரிந்து கொண்டால் சரி..

    ReplyDelete
  6. suryajeeva,
    andha panam koduppathil vaangi koduppathil enna arasyial endru ungalukku theriyumaa? neenga enna seyncheenga? engayum yarayum ethirhtu karuththu therivikkra kandaasaaisamyiaa karuthu sonna unga pangu enna ithu akkraiya summa aduthvanai seendi paakura velaiyaa? melum enga thalaivar enna seyarrannu nerayaper uthavi vaangi varungal kadantha pinnala sollusollum podhu thaan theriyum

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...