சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, October 19, 2011

அனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா


நான் ஏற்கனவே ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அங்கும் மற்ற துறையினரை விட இந்த HRDக்கள் மட்டும் லையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வர். பிரமோஷன், இன்க்கிரிமெண்ட், டிரான்ஸ்பர் பற்றி நாம் எந்த கோரிக்கை கொடுத்தாலோ அல்லது சந்தேகம் கேட்டாலோ ஏதோ அவர்கள் வேலையில் நாம் தலையிட்டு இடைஞ்சல் செய்தது போல நடந்து கொள்வர். இங்கு மட்டுமல்ல, எந்த ஐடி கம்பெனியிலும் அவர்கள் அப்படித்தான். சரி இவர்கள் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் இருப்பதனால் தான் இப்படி நடந்து கொள்கிறன்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நேற்று முன்தினம் வரை.

எனக்கு நேற்று முன்தினம் ரயில்வே வேலைக்கான சர்டிபிகேட் வெரிபிகேசன் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.பி அலுவலகத்தில் நடந்தது. 12.45 மணிக்கு உள் செல்ல வேண்டும். என்னுடன் அதே நேரம் உள் செல்ல வேண்டியவர்கள் மொத்தம் 70 பேர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள். அவர்கள் அனுபவ அறிவும் குறைவு தான். புது இடம் என்பதால் அவர்கள் விசாரித்து வரவே சில நிமிடங்கள் நேரமாகிவிட்டது. அப்படி வந்தவர்களை ரயில்வே HRDக்கள் உள்ளேயே அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் கெஞ்சிய பிறகு ஒருவாறாக திட்டிக் கொண்டே உள்ளே அனுமதித்தனர்.

கவுன்சிலிங் துவங்கியது. நான் ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டேன். அதாவது அவர்கள் மொத்தம் 3 போட்டோக்கள் கேட்டிருந்தனர். ஆனால் நான் 2 போட்டோ மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். அவர்களில் ஒருவரிடம் விஷயம சொல்லி பத்து நிமிடம் டைம் கொடுங்கள். நான் சென்று ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே அவர் போட்டோ இல்லையா, வெளியே போ உனக்கு வேலையில்லை என்றார். என்னடா இது வம்பாகிவிடடது. அவ்வளவு சிரமப்பட்டு எழுதி வாங்கிய வேலை ஒரு போட்டோ குறைந்ததால் இல்லையென்கிறார்களே என்று கடுப்பாகி விட்டது. வேறு வழி இன்றி பேசாமல் அமர்ந்தேன்.

கவுன்சிலிங்கில் இவர்கள் வடஇந்தியர்களை படுத்தியபாடு இருக்கிறதே, இவர்களுக்கோ இந்தி சரிவர பேச வரவில்லை. வடஇந்தியர்களுக்கோ இந்தியை தவிர வேறு மொழி தெரியவில்லை. அவர்களை பாடாய்ப்படுத்தி விட்டனர். போட்டோ சரியில்லை, கையெழுத்து சரியில்லை, கைரேகை சரியில்லை என்று அவர்களை பயமுறுத்தி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து என் முறை வந்ததும் என் பெயர் சொல்லி அழைத்தனர். நான் அவர்கள் டேபிள் முன் உட்கார்ந்தேன். போட்டோ இல்லை என்று நான் கூறிய நபர் மற்றவர்களிடம் இவன் போட்டோ எடுத்து வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களில் மலையாளி ஒருவர் என்னுடைய புரொபைலை எடுத்து அதில் ஏற்கனவே நான் அப்ளை செய்யும் போது அனுப்பி இருந்த எக்ஸ்ட்ரா போட்டோவை கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

ஒரு வழியாக கவுன்சிலிங் முடித்து வெளிவந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் மெடிக்கல் டெஸ்ட்டுக்கான லெட்டர் வீட்டுக்கு வரும் என்று கூறி அனுப்பினர்.

நான் உள்சென்று அமர்ந்ததிலிருந்து என்னை அழைக்கும் வரை எனக்கு 2மணிநேரம் இருந்தது. என்னை வெளியில் அனுப்பியிருந்தால் நான் பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் போட்டோவை பிரிண்ட் எடுத்து அதிகபட்சம் 15 நிமிடத்தில் உள்ளே வந்திருப்பேன். அதை விட்டு என்னை 2மணிநேரமும் டென்ஷனில் நகம் கடிக்க வைத்தவர்களை என்னவென்று சொல்வது

ஏன்
இந்த HRDக்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றனர். இந்த துறைக்கு வந்தால் சட்டென்று கொம்பு முளைத்து விடுமா என்ன


ஆரூர் முனா செந்திலு





7 comments:

  1. இதுபற்றி ஏற்கனவே நான் எச்.ஆர் என்றழைக்கப்படும் அப்பாட்டாக்கர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது படிக்கவும்...

    ReplyDelete
  2. // Philosophy Prabhakaran said...

    இதுபற்றி ஏற்கனவே நான் எச்.ஆர் என்றழைக்கப்படும் அப்பாட்டாக்கர்கள் என்ற தலைப்பில் எழுதியிருக்கிறேன்... நேரம் கிடைக்கும்போது படிக்கவும்... ///

    நீங்கள் சொன்னதை படித்தாகி விட்டது. நீங்கள் கூறியது நூற்றுக்கு நூறு நிஜம்.

    ReplyDelete
  3. இவர்களுக்கு இவர்கள் துறையில் யாரும் மதிப்பதில்லை, அதனால் அவர்கள் கிடைப்பவர்களை வாட்டுகிறார்கள்.. MBA வில் எது வேண்டுமானாலும் படி MBA HR மட்டும் படிக்காதே, அதை எவனும் மதிக்க மாட்டேங்கிறான் என்றார் வேலை கிடைக்காத MBA HR படித்தவர்

    ReplyDelete
  4. /// suryajeeva said...

    இவர்களுக்கு இவர்கள் துறையில் யாரும் மதிப்பதில்லை, அதனால் அவர்கள் கிடைப்பவர்களை வாட்டுகிறார்கள்.. MBA வில் எது வேண்டுமானாலும் படி MBA HR மட்டும் படிக்காதே, அதை எவனும் மதிக்க மாட்டேங்கிறான் என்றார் வேலை கிடைக்காத MBA HR படித்தவர் ///

    நீங்கள் சொல்வது சரிதான் சூர்யாஜீவா

    ReplyDelete
  5. நான் துபையில் ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் வேலை செய்கிறேன், எங்களது மனித வள துறையை நிர்வாகி இஸபல் என்ற 30 வயதுள்ள ஜெர்மானியப்பெண், ஒரு ''மனித வள துறையை நிர்வாகி'' எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு எடுக்காட்டாக உள்ளார். ஒரு தாயின் பரிவுடன் அனைவரிடம் நடப்பார்கள்.

    இவர் மட்டுமல்ல இத்துறையை நிர்வாகியக இருக்கும் எல்லா ஐரோப்பா, அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கைகளும் இதுபோலத்தான் மிக நன்றாக இருக்கும்.

    முன்பு நான் இந்திய நிறுவனத்தில் வேலை செய்தேன். அவர்கள் நீங்கள் சொல்வதற்கு எடுத்துகாட்டாக இருப்பார்கள். இந்திய நிர்வாகிகள் நம்மை மனிதானாகவே மதிக்க மாட்டார்கள், அப்புறம் எங்கே நமது மேம்பாட்டிற்க்காக பணி செய்ய போகிறார்கள், அவர்களுக்கு நிறுவனத்தின் பெரிய மனிதர்களுக்கு சொம்பு தூக்குவதுதான் முழு நேரப்பணியாக இருக்கும்

    பூபதி, துபை

    ReplyDelete
  6. ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் தூங்குபவன்October 24, 2011 at 3:51 PM

    இப்படிதான் பிரதர்....என்னோட வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் .....ஒரு HR பையா என்ன பண்ணுனாண்ட என்னோட official மைலிலிருந்து நான் resign பண்ணுவது போல அவனுக்கே மெயில் அனுப்பிச்சு என்னை blackmail பண்ணினான்...அந்த பயல நான் எப்படி திட்டுறது ....

    ReplyDelete
  7. ஒரு தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் தூங்குபவன்October 24, 2011 at 4:50 PM

    இப்படிதான் பிரதர்....என்னோட வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் .....ஒரு HR பையா என்ன பண்ணுனாண்ட என்னோட official மைலிலிருந்து நான் resign பண்ணுவது போல அவனுக்கே மெயில் அனுப்பிச்சு என்னை blackmail பண்ணினான்...அந்த பயல நான் எப்படி திட்டுறது ????????!!!!!!!!

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...