சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, October 13, 2011

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்


வரும் தீபாவளிக்கு தமிழ்த்திரையில் ஆறு படங்கள் வருவதாக இருந்தன. ஆனால் 7ம் அறிவு மற்றும் வேலாயுதம் என்ற இரண்டு புயல்களுக்கு முன்னால் வரவிருந்து ஒஸ்தி, மயக்கம் என்ன மற்றும் பல படங்கள் திரையரங்கு கிடைக்காத காரணத்தால் பின்வாங்கி விட்டன. இந்தியில் வெளியாவதால் ரா 1 தமிழ் டப்பிங் படமாக வெளிவருகிறது. சரி தீபாவளியன்று வரும் படங்களைப்பற்றிப் பார்ப்போம்.

1. 7ம் அறிவு
கஜினியின் வெற்றிக்கு பிறகு சூர்யா, .ஆர். முருகதாஸ் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ரவி கே சந்திரன் வேறு இணைந்திருப்பதாலும், மேலும் இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குங்ஃபூ வை சீனா முழுவதும் பரப்பிய போதிதர்மரின் வரலாற்று தகவல்களும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வருவதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு ராக்கெட் வேகத்தில் எகிறி இருக்கிறது. மேலும் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் வேறு இதில் அறிமுகமாகிறார்.

எனது முதல் சாய்ஸ் தீபாவளியன்று 7ம் அறிவு தான். என்ன நான் அன்று திருவாரூரில் இருக்க வேண்டியிருப்பதால் நல்ல திரையரங்குகளில் பார்க்க முடியாது. திருவாரூரில் தான் பார்க்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் படம் வெளியாகும் சென்னை திரையரங்குளின் லிஸ்ட்டைப் பார்த்தால் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு இந்தப் படம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கப் போகிறது. லிஸ்ட்டைப் பார்த்தால் சென்னையில் மட்டும் நூறு தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியாகும் என்று தெரிகிறது.

படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

2. வேலாயுதம்
7ம் அறிவைப் போல் கதையைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தாலும் விஜய் என்ற ஒரு பெயரே போதும் படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு. விஜய் மற்றும் ஜெயம் ராஜா இணைந்திருப்பதும் செலவு செய்ய அஞ்சாத தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பதாலும் இந்தப்படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்தப்படமும் சென்னையில் 7ம் அறிவு படத்திற்கு குறைவில்லாமல் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. எனது ஊரான திருவாரூரில் இந்தப்படத்திற்குத்தான் 7ம் அறிவு படத்தை விட கூட்டம் அதிகம் இருக்கும் இந்தப்படத்திற்கு செல்வதற்குத் தான் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். விஜயின் தனித்துவமே படம் போரடிக்காமல் சுமாராக இருந்தாலே ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்று விடும்.

அதிலும் டிரெய்லரில் பார்த்த சந்தானத்தின் ஒரு சிறு காமெடியே படத்தின் காமெடிக்கு எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது.

படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

3. ரா 1
இந்தப் படமும் சும்மா இல்லை. இந்தி சினிமாவிலேயே மிகுந்த பொருட்செலவில் தயாராகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்துள்ளது. 3டியில் வேறு படம் வெளியாகிறது. மற்றும் எனது ஆதர்ச நாயகனாக ரஜினி சிறு வேடத்தில் நடித்திருப்பதும் படத்தை முதல் வரிசையில் வைத்துள்ளது. மேற்கூறிய இரு படங்களுக்கு நடுவில் இந்தப்படமும் சென்னையில் தரமுள்ள பல தியேட்டர்களில் வெளியாகிறது. நமக்குத்தான் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் நான் ஒரு தொழில் விஷயமாக வழக்கமாக செல்லும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து அந்த ஊரில் ஐம்பது தியேட்டர் உள்ளது. 90 சதவீத தியேட்டர்களில் ரா 1 படம் தான் ரலீஸ் ஆகிறது என்று அங்குள்ள என் நண்பர்கள் கூறினர். போபாலிலும் அதே நிலைமை தான்.

படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

ஒரு வருத்தம்
நேற்று மறுபடியும் வாகைசூடவா படம் பார்க்கலாம் என்று திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் பாருங்கள் நான் சென்ற அனைத்து தியேட்டர்களிலும் படத்தை எடுத்து விட்டனர். சில தியேட்டர்களில் மட்டும் ஒரு காட்சி ஓடுகிறது. பார்க்கவே முடியாத வெடி மட்டும் நான்கு காட்சிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம்.


ஆரூர் முனா செந்திலு






5 comments:

  1. 7 ம் அறிவு ஓடும் னு நினைக்கிறன்

    ReplyDelete
  2. மூண்டு படமும் பார்த்திடனும்

    ReplyDelete
  3. //நேற்று மறுபடியும் வாகைசூடவா படம் பார்க்கலாம் என்று திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் பாருங்கள் நான் சென்ற அனைத்து தியேட்டர்களிலும் படத்தை எடுத்து விட்டனர். சில தியேட்டர்களில் மட்டும் ஒரு காட்சி ஓடுகிறது. பார்க்கவே முடியாத வெடி மட்டும் நான்கு காட்சிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம்// கொடுமையப்பா...

    ReplyDelete
  4. வேலாயுதம் படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....வேலாயுதம் படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....வேலாயுதம் படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...