சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, October 29, 2011

7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள்



சமீப காலமாக தமிழகத்தில் ஒரு டிரெண்ட் நடந்து வந்தது. அதாவது ஒரு படம் வெளியானால் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு வேண்டாத ஆட்கள் மூலம் தியேட்டரில் வாய்மொழிப் பிரச்சாரம் மூலம் படம் படுதோல்வி எனவும், பார்க்கவே முடியவில்லை என்றும் திரையரங்குகளில் பரப்புவது. இது மட்டுமில்லாமல் எஸ்.எம்.எஸ் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகரைப் பற்றியும் கிண்டலாக செய்திகள் அனுப்புவது. இதன் மூலம் சுமாரான படங்கள் கூட மக்கள் மத்தியில் படம் போர் என பேச்சு அடிபடுவதால் பிளாப் ஆகின்றன. இத்தனை நாட்களாக நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு நடந்து கொண்டிருந்தது, எனக்கு தெரிந்து இந்த டிரெண்ட் விஜய் நடித்த ஆதி படம் மூலம் துவங்கியது என நினைக்கிறேன். அந்தப் படம் வெளியான சமயம் ஆதி படம் காலி, தியேட்டரில் இலவசமாக டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்புகின்றனர் எனவும் பல தரப்பட்ட எஸ்.எம்.எஸ் கள் மற்றும் பார்வேர்ட் ஈமெயில்கள் மூலமும் அனுப்பப்பட்டது.எப்பொழுதும் ஒரு படம் வெளியாகும் அன்றே பார்க்கும் நான், ஆதி படம் வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இது போன்ற ஒரு ஈ மெயில் பார்த்ததனால் அந்தப் படத்தை தியேட்டரில் நான் பார்க்கவில்லை. பிறகு ஏதோ ஒரு சானலில் தான் பார்த்தேன்.


பிறகு பல படங்களுக்கு இது போல் நடந்தது. உதாரணத்திற்கு விஷாலின் சத்யம், விஜயின் பல படங்கள், அஜித்தின் அசல் மற்றும் பல படங்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கீழ்த்தரமான மார்க்கெட்டிங்கினால் மொக்கைப் படங்களை விடுங்கள், சுமாரான படங்கள் கூட ஓடவில்லை. இது போன்ற விமர்சனங்களால் நாம் படம் பார்க்கும் கூட்டத்தில் பாதிப் பேரை வெளியேற்றி விடுகிறோம். அப்பொழுது எல்லாம் இவ்வளவு தூரம் நான் பதிவுலகில் இருந்தது கிடையாது. அதனால் அதன் விவரம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று கண்கூடாக ஒரு படத்திற்கு இது போன்று நடப்பதை பார்க்கிறேன். இத்தனைக்கும் நானும் மொக்கப்படம் என்றால் கமெண்ட் அடிப்பதும் உண்டு, ஆனால் படம் பார்த்து விட்டே அந்த காரியத்தை நான் செய்வேன்.


எனக்கு நன்றாக தெரிகிறது, பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சில பதிவர்கள் படம் பார்க்கவேயில்லை. ஏற்கனவே படம் பார்த்து விட்டு விமர்சனம் வந்துள்ள சில வலைப்பூக்களில் இருந்து விமர்சனங்களை படித்து விட்டு அப்படியே ஒரு பார்வேர்ட் பதிவு இட்டிருக்கிறார்கள். ஏனென்றால் 7ம் அறிவைப் பற்றி விமர்சனம் போட்டால் ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே. பல வலைப்பூக்களை எடுத்துப் பாருங்கள் ஒருவர் சுமார் என்பார், அடுத்தவர் ரொம்ப சுமார் என்பார். அதற்கடுத்தவர் போர் என்பார். அதற்கடுத்தவர் படு போர் என்பார். இது தான் 7ம் அறிவு படத்தின் விமர்சனத்தில் நடந்துள்ளது.


7ம் அறிவு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படம் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஏ.ஆர்.முருகதாஸோ அல்லது சூர்யாவோ படம் வெளிவருவதற்கு முன் கூறியபடி இது ஒன்றும் பார்த்தே தீர வேண்டிய படமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயம் பார்க்கக்கூடாத படமும் அல்ல. எதிர்ப்பார்ப்பின்றி போனால் சுமாராக இருக்கு என்று சொல்லுமளவுக்கு பார்க்கக்கூடிய படம் அவ்வளவே.


ஆனால் இந்தப்படத்திற்கும் உள்குத்து வேலைகள் படம் வெளியாவதற்கு முன்பே துவங்கி விட்டன. போதி தர்மர் தமிழரே இல்லை எனவும், அவர் ஒரு மந்திரவாதி எனவும். படம் படு மொக்கை எனவும் ஏகப்பட்ட ஈமெயில்கள் எனக்கு தீபாவளிக்கு முதல் நாளே வரத்துவங்கி விட்டது. இதை விட மோசம் படம் வெளியான அன்று 200 ரூபாய்க்கு விற்ற தியேட்டர்காரர்கள் மறுநாளே 50 ரூபாய்க்கு விற்றால் தான் திரையரங்கம் நிறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தான். எங்கள் ஊரிலும் இது நடந்தது, அதனால் எனக்கு தெரிய வந்தது.


நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.

ஆரூர் முனா செந்திலு

8 comments:

  1. உங்க கருத்து அருமை.. ஆனா ஒண்ணூ சொல்றேன், அதீத எதிர்பார்ப்போட போற ரசிகன் தன்னோட ஏமற்றத்தை வெளீபடுத்தறதா ஏன் நினைக்கக்கூடாது?

    ReplyDelete
  2. >>நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது.

    ஹா ஹா ஹா கூல் மச்சி

    ReplyDelete
  3. ///சி.பி.செந்தில்குமார் said...

    உங்க கருத்து அருமை.. ஆனா ஒண்ணூ சொல்றேன், அதீத எதிர்பார்ப்போட போற ரசிகன் தன்னோட ஏமற்றத்தை வெளீபடுத்தறதா ஏன் நினைக்கக்கூடாது?
    ///

    அண்ணே நீங்க சொல்றது உண்மை தான், ஆனா இந்த அளவுக்கு அவதூறு பிரச்சாரம் தான் கொஞ்சம் ஓவர் என்கிறேன்.

    ReplyDelete
  4. //
    நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.//

    சரியா சொன்னிங்க

    ReplyDelete
  5. சொல்றவன் ஆயிரம் சொல்வான்... அதானே பொழப்பு...

    ReplyDelete
  6. u r right. the movie is not bad at all..

    ReplyDelete
  7. I don't live in Tamilnadu, India so I am not sure what is happening there. Is it true that a movie's collection affects by email, sms and blogs. That many people in India read those before making a decision to go to a movie, Interesting fact, unbeliveable...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...