மறுபடியும் வண்டி பஞ்சரான போது ஸ்டெப்னி டயரும் இல்லாததால் பேருந்தில் இருந்த மக்கள் புலம்ப ஆரம்பித்து விட்டனர். அரைமணிநேரம் கழித்து பஞ்சரான பேருந்தின் சகடெப்போ வண்டி ஒன்று வந்தது. ஒட்டுனர் அந்த வண்டியை நிறுத்தி அதன் ஸடெப்னியை கடனாக வாங்கிக் கொண்டனர். மறுபடியும் டயரை மாற்றி வண்டியை எடுக்கும் போது மணி விடியற்காலை 05.30.
திருச்சி வர 08.30 ஆனது. அதற்குள் எனது அப்பா போன் செய்து "என்ன லேட் ஆகிறது. நீ வந்தவுடன் நாம் அனைவரும் சேர்ந்து காலையிலேயே மன்னார்குடி செல்ல வேண்டும், நானும் அம்மாவும் காலையிலேயே கிளம்பி உனக்காக காத்திருக்கிறோம். உனக்கு பொறுப்பேயில்லையா? விருந்தினர்கள் நாம் வரவில்லையேன்றால் கோபித்துக் கொள்வார்கள், இந்த பயணம் முன்பே திட்டமிட்டது தானே, ஒரு பேருந்து பிடித்து வர கூட உனக்கு திறமையில்லையா" என்று சத்தம் போட்டார். என்னடா வம்பாகி விட்டது என்று நினைத்துக் கொண்டேன். தஞ்சாவூர் வர 10.00 மணியாகி விட்டது. மீண்டும் அப்பா போன் செய்து சத்தம் போட்டார். எல்லாம் என் நேரம் நேரம் என்று வாங்கிக் கொண்டு அங்கிருந்து திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறி திருவாரூர் வர 12.30 ஆகி விட்டது. அதற்குள் என் அப்பாவிடமிருந்து மூன்று முறை திட்டும் வாங்கியாகி விட்டது.
வீட்டிற்குள் சென்றால் அப்பா எதும் பேசாமல் கிளம்பி காரில் ஏறி அமர்ந்து அமர்ந்து கொண்டார். அம்மாவிடம் நிலையை எடுத்து சொல்லி அவர்களை முன்னே செல்லும் படியும் நானும் என் வீட்டம்மாவும் மாலை புறப்பட்டு வருகிறோம் என்றும் கூறினேன். அம்மாவும் கிளம்பியதும் தூங்கி எழுந்து பைக்கிலேயே நானும் என் மனைவியும் மன்னார்குடி சென்றோம். அங்கோ அத்தனை சொந்தக்காரர்களிடமும் திட்டு வாங்கி மனைவியை பெண் உறவினர்கள் வசம் விட்டு விட்டு நான் வெளியில் வந்து ஏற்கனவே இந்த திருமணத்திற்காக சென்னை வந்து என்னை குடித்து விட்டு கலாட்டா செய்த மாமன் மகனான சதீஷை தேடினேன். ஆள் இல்லை.
சாப்பாட்டு கூடத்திற்கு சென்றேன். என் அப்பா சமையல் நிர்வாகத்தை கவனித்துக் கொண்டிருந்தார் உடன் எனது சித்தப்பா அசோக், அவர் திருச்சியிலிருந்து வந்திருந்தார். அவர்கள் இருவரும் மதியத்திலிருந்தே சோமபானத்தில் இருந்தனர். அப்பா அங்கு சென்ற என்னை பாரபட்சமில்லாமல் கன்னாபின்னாவென்று திட்டினார். எல்லாம் என் நேரம் என்று வாங்கிக் கொண்டு அப்பாவை சமாதானம் செய்து விட்டு மீண்டும் மண்டபத்தில் நுழைந்தேன்.
அதற்குள் மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூட்டம் கூட ஆரம்பித்தது. இரவு மாப்பிள்ளை அழைப்பு துவஙகியதால் பெண் உறவினர்கள் அனைவரும் கோயிலுக்கு ஊர்வலத்தில் சீர்வரிசை தட்டுடன் நடந்து செல்ல ஆரம்பித்தனர். அப்பொழுது வரை சதீஷ் என்னிடம் மாட்டவில்லை. போன் செய்தாலும் எடுக்கவில்லை. மாப்பிள்ளை அழைப்பு முடிந்து மேடையில் மணப்பெண்ணும் மாப்பிள்ளையும் இருக்க அனைவரும் பந்திக்கு செல்ல ஆரம்பித்தனர். 09.00 மணிக்கு சதீஷ் மண்டபத்தின் உள் நுழைந்தான். அவனைக்கூட்டிக் கொண்டு சரக்கடிக்கலாம் என்று முடிவு செய்து மண்டபத்தின் வெளியில் வந்தேன்.
அதற்குள் அம்மா வெளியில் வந்து நானும் என் மனைவியும் மீண்டும் இரவு திருவாரூர் செல்ல வேண்டும் என்றும் காலை திருமணத்திற்கு வரும் போது வீட்டில் உள்ள நெக்லஸ் ஆரம் எடுத்து வர வேண்டும் என்றும் கூறினார்கள். மனைவியுடன் பைக்கில் தூரம் செல்ல வேண்டியிருந்ததால் பார்ட்டியை தவிர்த்து சாப்பிட வந்தேன். மற்ற மச்சான், சகோதரர்கள் சரக்கடிக்க சென்று விட்டனர். சாப்பிட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பினேன். மறுநாள் மீண்டும் மன்னார்குடி வந்தேன். திருமணம் முடிந்தது. நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு நிறைய உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்தேன். அவர்களுடன் அளவளாவியது மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.
அதில் மூத்தாக்குறிச்சான் என்று எங்களால் அழைக்கப்படும் (பெயர்க்காரணம் : அவனது பூர்வீக ஊர் மூத்தாக்குறிச்சி) செந்திலை 10 வருடங்களுக்கு பின் சந்தித்தேன். நானும் அவனும் பால்ய வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள் தூரத்து உறவினரும் கூட. இடையில் அவன் வெளிநாடு சென்று விட்டதால் பார்க்க முடியாமல் போய் விட்டது. 11 வருடத்திற்கு முன் என் மச்சான் சதீஷ் திருமணத்தில் நடக்கும் நண்பர்கள் பார்ட்டிக்காக நாங்கள் இருவரும் வாஞ்சூர் சென்று 25 புல் பாட்டில்கள் (அது காரைக்கால் பக்கமிருக்கும் பாண்டிச்சேரி மாநில எல்லைக்குட்பட்ட கிராமம். எங்கள் பகுதியில் திருமணம், பார்ட்டி என்றால் சரக்கு அங்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால் மொத்தமாக வாங்கி வருவது எங்கள் பகுதியில் சாதாரணமான விஷயம்) வாங்கி வரும் போது போலீஸிடம் மாட்டி இரண்டு மொத்து வாங்கிய பிறகு எனது மாமா அந்த ஸடேஷனில் ஏட்டாக இருக்கிறார் என்று கூறிய பிறகும் எங்களிடம் காசு வாங்கிக் கொண்டு வெளியில் விட்டதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மறைத்த கதையை பேசி சிரித்துக் கொண்டிருந்தோம்.
அவன் சபரிமலைக்கு மாலை போட்டிருந்தான். அதனால் அன்று சோமபான விருந்தில் அவன் கலந்து கொள்ளாமல் விரைவாக வெளியேறி விட்டான். மீண்டும் பொங்கல் சமயத்தில் சந்தித்து பார்ட்டி வைப்பதாக திட்டம், பார்ப்போம். திருமணத்தன்று மறுவீட்டு அழைப்புக்காக மாப்பிள்ளை ஊரான தம்பிக்கோட்டை செல்ல வேண்டியிருந்ததால் கண்டிப்பாக யாரும் சரக்கடிக்க கூடாது என மணப்பெண்ணின் சித்தப்பாவான பிரபாகரன் அத்தான் கூறி விட்டார். எனவே நாங்கள் நல்லப்பிள்ளைகளாக சாப்பிட்டு விட்டு மீண்டும் மண்டபம் வந்து உறவினர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
ஆனால் தம்பிக்கோட்டையில் நடந்ததோ...

(தொடரும்...)
ஆரூர் முனா செந்திலு
நீங்க எப்படிண்ணா இந்தளவுக்கு உண்மையெல்லாம் அப்படியே எழுதறீங்க. மற்றவர்கள் யாரும் தன்னுடைய பலவீனம் பற்றி எழுதமாட்டாங்க. நீங்க சூப்பர்ண்ணா.
ReplyDeleteதம்பி குடிகாரனா நீ. இப்படியெல்லாம் குடிக்காத. குடல் பூடும்.
ReplyDeleteநீங்க ஏன் திருவாரூருக்கு ஊரை சுற்றி திருச்சி வழியா போனீங்க. கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை வழியாக போயிருக்கலாமே.
ReplyDeleteஅண்ணாத்த ஒரே சரக்கு கதையா இருக்கே எல்லாம் சொந்த கதையா இல்ல கத வுடுறீயா?
ReplyDelete/// starsa said...
ReplyDeleteநீங்க எப்படிண்ணா இந்தளவுக்கு உண்மையெல்லாம் அப்படியே எழுதறீங்க. மற்றவர்கள் யாரும் தன்னுடைய பலவீனம் பற்றி எழுதமாட்டாங்க. நீங்க சூப்பர்ண்ணா. ///
நன்றிங்கண்ணே
/// Anonymous said...
ReplyDeleteதம்பி குடிகாரனா நீ. இப்படியெல்லாம் குடிக்காத. குடல் பூடும். ///
அண்ணா இது குடிச்ச கதையில்லீங்க. குடிக்க முடியாத கதை.
/// WIMZEN said...
ReplyDeleteநீங்க ஏன் திருவாரூருக்கு ஊரை சுற்றி திருச்சி வழியா போனீங்க. கும்பகோணம் அல்லது மயிலாடுதுறை வழியாக போயிருக்கலாமே. ///
நீங்க முதல் பகுதியை படிக்கலன்னு நினைக்கிறேன். அதை படிங்க, உங்களுக்கு விவரம் புரியும்.
/// Tiruvarur Guys said...
ReplyDeleteஅண்ணாத்த ஒரே சரக்கு கதையா இருக்கே எல்லாம் சொந்த கதையா இல்ல கத வுடுறீயா? ///
இது சரக்கு கதை இல்லீங்கண்ணா, சோக கதை. முதல் பகுதியிலிருந்து படிங்க உங்களுக்கு என் சிரமம் புரியும்.
Mobile view activate pannuga thala
ReplyDelete/// கேரளாக்காரன்(ஆனாலும் அதிரி புதிரி தமிழன் ) said...
ReplyDeleteMobile view activate pannuga thala ///
பண்ணியாச்சு
Ippo summa ghilli maadhiri load aaguthu thanks thala...
ReplyDelete////அவர்கள் இருவரும் மதியத்திலிருந்தே சோமபானத்தில் இருந்தனர். ////
ReplyDeleteஎந்த இடத்திலும் அது இல்லமல் இருக்காதே... ஹ..ஹ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு week cinema (28.11.2011-5.12.2011)
/// ♔ம.தி.சுதா♔ said...
ReplyDelete////அவர்கள் இருவரும் மதியத்திலிருந்தே சோமபானத்தில் இருந்தனர். ////
எந்த இடத்திலும் அது இல்லமல் இருக்காதே... ஹ..ஹ... ///
கல்யாண வீடு என்றாலே இது போன்ற சம்பவங்கள் சகஜம் தானே
//அண்ணா இது குடிச்ச கதையில்லீங்க. குடிக்க முடியாத கதை..//
ReplyDeleteஎன்ன பாஸ் இப்படி க்ளைமாக்ஸ போட்டு உடச்சிடிங்க...
பட், உங்களோட நேர்மை புடிச்சிருக்கு..
கடைசியில சரக்கடிக்க மு்டிஞ்சுசா இல்லையா?????
ReplyDelete/// குடிமகன் said...
ReplyDelete//அண்ணா இது குடிச்ச கதையில்லீங்க. குடிக்க முடியாத கதை..//
என்ன பாஸ் இப்படி க்ளைமாக்ஸ போட்டு உடச்சிடிங்க...
பட், உங்களோட நேர்மை புடிச்சிருக்கு.. ///
இது நேர்மையில்லை, இயலாமை
/// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteகடைசியில சரக்கடிக்க மு்டிஞ்சுசா இல்லையா????? ///
இது சஸ்பென்ஸ், அடுத்த பகுதி வரை காத்திருங்கண்ணே.
பகிர்வுக்கு நன்றி நண்பா!
ReplyDelete