சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, December 19, 2011

நட்பு பாராட்டிய சங்கவியும், ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்தினரும்

ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அதை 90 சதவீதம் சக்ஸஸ்புல்லாக நடத்திக் காட்டுவது என்பது டீம் ஒர்க்காக இருந்தாலும் சாதாரண காரியமில்லை. நான் இதற்கு முன் மிகப்பெரிய கட்டுமான நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தில் நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்தவன். எனக்கு தான் தெரியும், அதன் சிரமம். ஒரு பெரிய ஹோட்டலில் கேம்பஸ் இன்டர்வியூ, மேனேஜ்மெண்ட் டிரேயினிங். ஆண்டுக்கு ஒரு முறை ஊழியர்களுக்கான சந்திப்பு ஏற்பாடுகள். இதையெல்லாம் என்னுடன் 20 உதவியாளர்கள் இருந்தும் செய்து முடிப்பதற்குள் நாம் ஒரு முறை கூட அமர முடியாது, எங்காவது தப்பு ஏற்பட்டு விடுமோ யாராவது ஒரு விஷயத்தை குறையாக சொல்லி விடுவார்களோ என்று நாம் முழு டென்ஷனுடன் அலையவேண்டியிருக்கும்.

இவ்வளவையும் தாண்டி ஒரு சக்ஸஸ்புல்லான பதிவர் சந்திப்பை நடத்தி முடித்த இந்த குழுவுக்கு எந்தவித கருத்து மாறுபாடும் இன்றி தலைவணங்குகிறேன். ஒரு நிகழ்ச்சியை ஆர்கனைஸ் செய்து அதில் மூன்று வேளை உணவு அதில் அசைவமும் கூட, தங்குமிடம், அரங்க ஏற்பாடு, மைக், புரோஜக்டர் ஏற்பாடு, இடையில் கூல்டிரிங்க்ஸ், உற்சாகபான பிரியர்களுக்கு அதுவும், உ.பா வினால் எந்தவித தொல்லைகளும் ஏற்படாமல் காத்த விதம், வண்டிகள் பார்க்கிங் வசதி, இன்னும் பல பல பல.

இத்தனைக்கும் என்னைப்போல் முதல் முறையாக பதிவர்களை சந்திக்க வந்தவர்களையும் பிரபல பதிவர்களுக்கு நிகராக வரவேற்ற விதம், உபசரிப்பு, பதிவர்களில் அதிக ஹிட்ஸ் வாங்கியவர்கள் என்ற எண்ணமில்லாமல் கருத்து செறிவுள்ள பதிவர்களுக்கும் சமூக சேவையாளர்களுக்கும் அங்கீகாரம் வழங்கிய நேர்மை, அருமை. சிலருக்கு சிற்சில குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக வெறும் 15 உறுப்பினர்களை மட்டும் வைத்துக் கொண்டு செயல்படுத்திய விதம், ஆர்கனைசிங் குழுவை எத்தனை முறை பாராட்டினாலும் அதற்கு ஈடு இணையில்லை.

ஈரோட்டுக்கு போய் வந்த கதையை ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட பதிவர்கள் பத்தி பத்தியாக பிரித்து மேய்ந்து விட்டார்கள். அதனை தொடராகவும் வெளியிடும் எண்ணத்தில் இருப்பதால் சந்திப்பு எப்படியிருந்தது, யாரை சந்தித்தோம் என்ற விவரங்களுக்குள் நான் போகவில்லை. அதற்கு வேறு பதிவுகள் இருக்கின்றன.

ஆனால் முன்னின்று வெற்றிகரமாக நடத்திக் காட்டிய தாமோதர் சந்துரு, கதிர், ஆருரன், ஜாபர், பாலசி, லவ்டேல் மேடி, செல்வம், பாஸ் கார்த்தி, வால்பையன் அருண்ராஜ், வேலு, அகள்விளக்கு ராஜா, பவளசங்கரி, டாக்டர் ரோகிணி மற்றும் சங்கவி அடங்கிய குழுவுக்கு சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள்.



கடைசியாக தலைப்பின் விஷயத்திற்கு வருவோம்.

சங்கவியை இதற்கு முன் நேரில் பார்த்ததில்லை, ஓட்டு போட்டதில்லை, பின்னூட்டமிட்டதில்லை, தொலைபேசியில் பேசியதில்லை. அவருடைய பதிவுகளை நான் படித்துள்ளேன். அதுபோல் தான் அவரும் என் பதிவுகளை மட்டுமே படித்துள்ளார். ஆனால் வந்தவர்களை வரவேற்று இன்முகத்துடன் மனம்விட்டு பேசி நட்பு பாராட்டிய சங்கவி மற்ற ஏற்பாட்டாளர்களை விட மனதுக்கு சற்று நெருக்கமாக வருகிறார். ஒவ்வொரு முறையும் நம்மை சாப்பிட அழைத்து சென்ற விதம், மற்றவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட செயல், வந்தவர்களை தங்க ஏற்பாடு செய்து மட்டுமில்லாமல் தங்கும் அறைக்கே வந்து கவனித்தது, காலையில் அனைவரையும் ஆட்டோ பிடித்து அரங்கிற்கு அனுப்பிய செயல், விழா முடிந்து அனைவரையும் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தது என என்னுடன் மிகுந்த நட்பு ஏற்படுத்திக் கொண்ட சங்கவிக்கு நன்றிகள் பல.

அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறேன் என்ற அர்த்தமல்ல.மற்றவர்கள் பின்இருந்து இயக்கினார்கள் என்றும் முன்நின்று செய்தினாலேயே சங்கவி எனக்கு நெருக்கமானார் என்று எனக்கும் தெரியும், விழா ஏற்பாட்டாளர்களான உங்களுக்கும் தெரியும்.

நன்றி ஈரோட்டு வலைப்பதிவர்களே, கூடுதல் நன்றி சங்கவி சதீஷ்க்கு.

ஆரூர் முனா செந்திலு


20 comments:

  1. தாங்கள் ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...

    என் மேல் கொண்ட அன்பிற்கு மிக்க நன்றி... சென்னை வரும்போது நிச்சயம் சந்திக்கிறேன்...

    ReplyDelete
  2. செந்திலு..... அடுத்தம் பதிவு இருக்கா? இல்லையா?

    சங்கவி முன்னின்று அனைவரையும் வரவேற்பதில் இருந்து, உபசரிப்பது வரை முன்னின்று செய்தார்....


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்...

    ReplyDelete
  3. நன்றி செந்தில் முதல் சந்திப்பு என்பதால்...நிறைய நண்பர்களை சந்திக்க நினைத்து முடியவில்லை இனி வரும் சந்திப்பில்...சரியாக இருக்கும்

    ReplyDelete
  4. சூப்பர் சதீஷ் நல்ல நண்பர் மட்டுமல்ல சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவரும் கூட

    ReplyDelete
  5. /// சங்கவி said...

    தாங்கள் ஈரோடு சங்கமத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...

    என் மேல் கொண்ட அன்பிற்கு மிக்க நன்றி... சென்னை வரும்போது நிச்சயம் சந்திக்கிறேன்... ///

    Thank you Sangkavi. We will meet in Chennai Bloggers meet on January.

    ReplyDelete
  6. /// தமிழ்வாசி பிரகாஷ் said...

    செந்திலு..... அடுத்தம் பதிவு இருக்கா? இல்லையா?

    சங்கவி முன்னின்று அனைவரையும் வரவேற்பதில் இருந்து, உபசரிப்பது வரை முன்னின்று செய்தார்....


    வாசிக்க:
    ஈரோடு பதிவர் சங்கமம்: மெடிக்கல்ஷாப்க்கு ஒதுங்கிய பதிவரும், பல்பு வாங்கிய பதிவரும்... ///

    வணக்கம் பிரகாஷ். இனிமேல் நான் உங்கள் பதிவுக்கு வந்து அட்டன்டென்ஸ் கொடுத்து விடுகிறேன். அடுத்த பதிவு இதனைப் பற்றி உண்டு.

    ReplyDelete
  7. ///veedu said...

    நன்றி செந்தில் முதல் சந்திப்பு என்பதால்...நிறைய நண்பர்களை சந்திக்க நினைத்து முடியவில்லை இனி வரும் சந்திப்பில்...சரியாக இருக்கும்///
    வணக்கம் சுரேஸ். கண்டிப்பாக அடுத்த பதிவர் சந்திப்பில் விலாவாரியாக பேசுவோம்.

    ReplyDelete
  8. /// சி.பி.செந்தில்குமார் said...

    சூப்பர் சதீஷ் நல்ல நண்பர் மட்டுமல்ல சிறந்த விருந்தோம்பல் பண்பு கொண்டவரும் கூட ///

    அண்ணே, சங்கவி மட்டுமல்ல நீங்களும் தான், ஏன் ஈரோடு பதிவர்களின் வரவேற்பும், உபசரிப்புமே தனி மதிப்பு தான்.

    ReplyDelete
  9. //அதற்காக மற்றவர்களை குறைத்து மதிப்பிடுகிறேன் என்ற அர்த்தமல்ல.மற்றவர்கள் பின்இருந்து இயக்கினார்கள் என்றும் முன்நின்று செய்தினாலேயே சங்கவி எனக்கு நெருக்கமானார் என்று எனக்கும் தெரியும், விழா ஏற்பாட்டாளர்களான உங்களுக்கும் தெரியும்.//

    நீங்கள் மற்றவர்களை குறைத்துதான் மதிப்பிடுகிறீர்கள் என சொன்னால் என்ன செய்யப் போவதாக உத்தேசம்? ;)

    விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  10. /// V.Radhakrishnan said...


    நீங்கள் மற்றவர்களை குறைத்துதான் மதிப்பிடுகிறீர்கள் என சொன்னால் என்ன செய்யப் போவதாக உத்தேசம்? ;)

    விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள். ///

    போதையில் இருந்தால் பச்சக்கென்று ஒரு உம்மா கொடுப்பதாக உத்தேசம் இல்லையென்றாலும் போதையை போட்டு விட்டு வருதாக உத்தேசம் உங்க உபசரிப்பு அப்படி அய்யா அதான் வித்தியாசமாக பாராட்டுவோம்னு.

    வாழ்த்துக்கு நன்றி, மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  11. தம்பி உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள் பிறகு பேசுவோம்

    ReplyDelete
  12. /// Rathnavel said...

    நல்ல பதிவு. ///

    நன்றிண்ணே

    ReplyDelete
  13. /// மோகன் குமார் said...

    தம்பி உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள் பிறகு பேசுவோம் ///

    கண்டிப்பாக எப்பொழுது வேண்டுமானாலும் அழையுங்கள் அண்ணே

    ReplyDelete
  14. ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்கீங்க/

    ReplyDelete
  15. /// Lakshmi said...

    ரொம்ப சுவாரசியமா சொல்லி இருக்கீங்க ///

    ரொம்ப நன்றிங்கம்மா

    ReplyDelete
  16. மிகவும் அழகாக சொல்லியுள்ளீர்கள்.
    பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. 'சங்கவி'ன்னு பதிவரை பற்றி சொன்னிங்களா? நான் நான் நம்ம இளைய தளபதி சோப்பு போட்டுவிட்ட பிகருன்னு நெனச்சேன். so Sad...

    ReplyDelete
  18. சுனாமி மாதிரி பதிவுகள் வரும்னு பாத்தா, ரொம்பவும் அடக்கி வாசிக்கிறீங்களே!!!

    அநேகமாக வியாழன் சந்திப்போம்..

    ReplyDelete
  19. /// N.H.பிரசாத் said...

    'சங்கவி'ன்னு பதிவரை பற்றி சொன்னிங்களா? நான் நான் நம்ம இளைய தளபதி சோப்பு போட்டுவிட்ட பிகருன்னு நெனச்சேன். so Sad... ///

    இதெல்லாம் குசும்பு.

    ReplyDelete
  20. /// கே.ஆர்.பி.செந்தில் said...

    சுனாமி மாதிரி பதிவுகள் வரும்னு பாத்தா, ரொம்பவும் அடக்கி வாசிக்கிறீங்களே!!!

    அநேகமாக வியாழன் சந்திப்போம்.. ///

    பரபரப்பான பகுதியை நம்ம சிவா எடுத்துக்கிட்டார்ணே. கண்டிப்பா சந்திப்போம்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...