சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, December 1, 2011

போராளி - சினிமா விமர்சனம்

அன்புள்ள வலைப்பூரசிகர்களுக்கு,

போராளி கண்டிப்பாக இந்த ஆண்டின் மிகச்சிறந்த படம், வெற்றிப்படமும் ஆகும் அதில் எந்தவித சந்தேகமுமில்லை. பொதுவா வலைப்பதிவர்களில் சிலர் படம் வெளியான அன்றே படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதுவர். நானும் அப்படித்தான். இன்று அதற்காகவே காலை 08.30 சிறப்புக்காட்சிக்கு சென்று படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே சென்றேன். ஆனால் படத்தைப் பார்த்து விட்டு 11.00 மணிக்கு வெளியில் வந் நான் ஆசை தீராமல் விமர்சனம் எழுதாவிட்டால் கூட பரவாயில்லை என்று மீண்டும் 11.15 காட்சியையும் பார்த்து விட்டு வந்துள்ளேன். கண்டிப்பாக நாளையும் சென்று பார்ப்பேன். ஞாயிறன்று கண்டிப்பாக குடும்பத்துடனும் செல்வேன்.

ஒரு படம் எவ்வளவு சூப்பர் ஹிட் படமாக இருந்தாலும் ஏதோ ஒரு நிமிடம் அல்லது ஒரு நொடி அல்லது ஒரு துளியாவது கண்டிப்பாக போர் அடிக்கும். ஆனால் இந்தப்படத்தில் அப்படி ஒரு வாய்ப்பே இல்லை. படம் துவங்கியவுடன் சீட் நுனிக்கு வந்தால் படம் முடியும் வரை நம்மை அப்படியே உட்கார வைத்து விடுகிறார்கள்.

சரி படத்தின் கதைக்கு வருவோம். 10ம் வகுப்பு பெயிலான நரேஷூம் 6ம் வகுப்பை பாதியில் விட்ட சசிக்குமாரும் வேலைதேடி சென்னை வருகின்றார்கள். நண்பன் கஞ்சா கருப்பு வீட்டில் தங்குகிறார்கள். ஒரு பெட்ரோல் பங்கில் வேலை கிடைக்கிறது. எதிர் வீட்டில் இருக்கும் சுவாதி உதவி செய்த காரணத்தால் சசிக்குமாரை நேசிக்கத் தொடங்குகிறார். பெட்ரோல் பங்கில் உடன் வேலைப்பார்க்கும் ஒரு பெண்ணை நரேஷ் ஒரு தலையாக காதலிக்கிறார். சம்பளம் போதாமல் இவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு நிறுவனத்தை துவக்குகிறார்கள். அது சிறிது சிறிதாக வளர்ந்து அதே பெட்ரோல் பங்கில் அலுவலகம் ஆரம்பிக்கும் அளவுக்கு வளர்ந்து செட்டிலாகிறார்கள். எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கும் போது ஒரு கும்பல் இவர்களை தேடி வருகிறது. இவர்கள் தப்பிக்கிறார்கள். ஏன் தப்பிக்கிறார்கள், யார் அவர்கள், வில்லன் கும்பலை சசிக்குமார் குரூப் சமாளித்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்களா என்பதை திரையில் காண்க.

எத்தனை முறை வேண்டுமானாலும் இநதப்படக்குழுவைப் பாராட்டலாம். இன்னும் என் மனதில் படம் பற்றிய சிந்தனை தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

சசிக்குமார் மிகச்சரியாக பாத்திரத்திற்கு பொருந்துகிறார். இயல்பாக நடிக்கிறார். தன்னம்பிக்கையுடன் கூடிய கதாபாத்திரம். சில நாட்களாக மனம் சரியில்லாமல் இருந்த எனக்கு அந்த கதாபாத்திரம் தான் தன்னம்பிக்கையை ஊட்டியுள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காகவும், தயாரித்ததற்காகவும் தலை வணங்கி பாராட்டுகிறேன்.

நரேஷ் துடிப்பாகவும் நகைச்சுவையுடனும் நடித்துள்ளார். நாக்கை கடித்துக் கொள்ளும் போது கண்கலங்க வைக்கிறார். காதலுக்காக அவர் முயற்சிக்கும் ஒவ்வொரு காட்சியும் சிரிப்பை வரவழைக்கிறது. கவிதை சொல்லும் போது இரண்டு புள்ளி ஒரு ஆச்சரியக்குறியுடன் நம் மனதில் அமர்ந்து கொள்கிறார்.

சுவாதி நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழ்த்திரையில் தோன்றுகிறார். பார்க்க அட்டகாசமாக உள்ளார். எப்பொழுதும் சிடுசிடுவென இருக்கும் கதாபாத்திரம். விபத்தில் சிக்கி சசிக்குமாருடன் மருத்துவமனையில் உரையாடும் போது அவரின் சிடுசிடுப்பின் காரணம் தெரிகிறது.

கஞ்சா கருப்பு நன்றாக நடித்துள்ளார். அவரது காட்சிகள் படம் முழுவதும் வருவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டுக்காரராக வரும் ஞானசம்பந்தன், எப்பொழுதும் மனைவியுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கும் படவா கோபி, வில்லத்தனத்துடன் தோன்றும் நமோ நாராயணன் ஆகியோரும் உள்ளனர். படத்தின் வெற்றி என்பது கிளைமாக்ஸில் வில்லன்களை சசிக்குமார் அடிக்கும் போது நாமும் சேர்ந்து அடிக்கிறோம். அந்த அளவுக்கு நம்மை படத்துடன் ஒன்றிணைத்து விடுகிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.

இன்னும் சொல்வதற்கு நிறைய உள்ளது, கூறினால் மீதி கதையும் சுவாரஸ்யமான காட்சிகளையும் சொல்லி விடுவேனோ என்ற பயத்தில் இத்துடன் முடிக்கிறேன். இது போன்ற படத்தினை திரையரங்கிற்கு சென்று பார்த்து வெற்றிகரமாக ஒடவைப்பது சினிமா ரசிகர்களின் கடமை. கண்டிப்பாக அனைவரும் குடும்பத்தோடு திரையரங்கு சென்று பாருங்கள்.

போராளி - இந்த ஆண்டின் மிகச்சிறந்த வெற்றிப்படம். இதை நான் மட்டும் சொல்லவில்லை. என்னுடன் இரண்டு காட்சிகளாக படம் பார்த்த ரசிகர்களின் ஒட்டு மொத்த மனநிலை இதுதான்.


ஆரூர் முனா செந்திலு


29 comments:

  1. முதல் போராளி...

    ReplyDelete
  2. நீங்கள் சொல்வதை பார்த்தால் நல்ல படமாய்த்தான் இருக்கும்.
    நல்ல படம் என்று கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    பார்க்க முயற்சிக்கிறேன் ..

    ReplyDelete
  3. விமர்சனம் படிச்சதில படம் நல்லாயிருக்குன்னு தெரியுது...இன்னிக்கு போயிரவேண்டியதுதான்....

    ReplyDelete
  4. /// யூர்கன் க்ருகியர் said...

    நீங்கள் சொல்வதை பார்த்தால் நல்ல படமாய்த்தான் இருக்கும்.
    நல்ல படம் என்று கேள்விப்பட்டவுடன் மகிழ்ச்சியாய் இருக்கிறது.

    பார்க்க முயற்சிக்கிறேன் .. ///

    கண்டிப்பாக பாருங்கள்

    ReplyDelete
  5. /// veedu said...

    விமர்சனம் படிச்சதில படம் நல்லாயிருக்குன்னு தெரியுது...இன்னிக்கு போயிரவேண்டியதுதான்... ///

    கண்டிப்பாக பாருங்கள்

    ReplyDelete
  6. மயக்கம் என்ன பார்த்ததில் இருந்து எந்த வெப் விமர்சனத்தையும் நம்பி ஏமாறுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். ஒரு வாரம் பொறுத்து உண்மையான ரிசல்ட் தெரியும் வரை வெயிட் செய்து படம் பார்க்கும் எண்ணம்.

    ReplyDelete
  7. பாஸ்,
    நிஜமா தான் சொல்றீங்களா...கண்டிப்பா டவுன்லோட் செஞ்சு பார்த்த பார்த்துட வேண்டியது தான்.. எங்க ஊருல தமிழ் படம் எல்லாம் ரிலீஸ் ஆகாது....

    படம் பார்த்துட்டு வந்து என்னோட கருத்தை சொல்றேன்

    ReplyDelete
  8. அபுதாபியில் இன்னும் படம் வெளியாகவில்லை (ஒரு வேலை வெளியாகியிருந்தாலும், போய்ப்பாத்திருப்போமா என்பது சந்தேகம் தான், ஏன்னா மயக்கம் என்ன படத்தை முதல்நாளில் பார்த்துக கிடைத்த அனுபவம் அப்படி). முதல் 10 வரிகளை மட்டும் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளேன். கதையைப் படிக்கவில்லை, படித்தால் படம் பார்க்கும் போது ஒரு திரில் இருக்காது.

    ReplyDelete
  9. அன்புள்ள செந்தில், போராளி படத்திற்காக www.poraalimovie.com என ஒரு இணையதளம் உருவாக்கி இருக்கிறோம். அந்த இணையதளத்தில் தங்களுடைய விமர்சனத்தை வெளியிடலாம் என இருக்கிறோம். அதற்கு தங்களுடைய அனுமதி தேவை. உங்களுடைய சம்மதத்தை கீழ்காணும் மெயில் ஐடிக்குத் தெரிவிக்கவும். நன்றி,

    தள நிர்வாகி
    டேவிட் கிருபாகரன்
    ourporaali@gmail.com

    ReplyDelete
  10. சாரெ, மீ ஒன் அவர் லேட். வாழ்த்துகள்.... படம் ஓக்கே தான், அதுக்காக இந்த ஆண்டின் இணையற்ற , ஜோடி அற்ற வெற்றிப்படம்னு சொல்றதெல்லாம் ஓவர் , அண்ணன் மப்புல இருக்கார் போல ஹி ஹி

    ReplyDelete
  11. ஏன் தப்பிக்கிறார்கள், யார் அவர்கள், வில்லன் கும்பலை சசிக்குமார் குரூப் சமாளித்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்களா என்பதை திரையில் காண்க.////
    என்ன தலைவரே....பாட்டுப்புத்தகத்திற்கு பின்னால் போட்டிருப்பதுபோல் பட்டென்று முடித்துவிட்டீர்...

    ReplyDelete
  12. நல்ல படத்தை ஓட வைக்கப் போராடும் உண்மையான போராளி நீங்கள்தான்.

    ReplyDelete
  13. படத்தினை பற்றி ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுதுவிட்டீர்கள் கண்டிப்பாக பார்கவேண்டும்

    ReplyDelete
  14. காலை 08.30 சிறப்புக்காட்சிக்கு சென்று படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே சென்றேன்...eppdi sir ipadiyeelam

    ReplyDelete
  15. /// Anonymous said...

    மயக்கம் என்ன பார்த்ததில் இருந்து எந்த வெப் விமர்சனத்தையும் நம்பி ஏமாறுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன். ஒரு வாரம் பொறுத்து உண்மையான ரிசல்ட் தெரியும் வரை வெயிட் செய்து படம் பார்க்கும் எண்ணம். ///

    ஆனால் இந்தப்படம் அப்படியல்ல, பார்க்கவேண்டிய படம், கண்டிப்பாக பாருங்க

    ReplyDelete
  16. /// ராஜ் said...

    பாஸ்,
    நிஜமா தான் சொல்றீங்களா...கண்டிப்பா டவுன்லோட் செஞ்சு பார்த்த பார்த்துட வேண்டியது தான்.. எங்க ஊருல தமிழ் படம் எல்லாம் ரிலீஸ் ஆகாது....

    படம் பார்த்துட்டு வந்து என்னோட கருத்தை சொல்றேன் ///

    கண்டிப்பா பார்த்துட்டு சொல்லுங்க நல்லாயிருக்கும்.

    ReplyDelete
  17. /// MOHAMED YASIR ARAFATH said...

    அபுதாபியில் இன்னும் படம் வெளியாகவில்லை (ஒரு வேலை வெளியாகியிருந்தாலும், போய்ப்பாத்திருப்போமா என்பது சந்தேகம் தான், ஏன்னா மயக்கம் என்ன படத்தை முதல்நாளில் பார்த்துக கிடைத்த அனுபவம் அப்படி). முதல் 10 வரிகளை மட்டும் பார்த்து படம் நல்லா இருக்கும் என்று நம்பிக்கையில் உள்ளேன். கதையைப் படிக்கவில்லை, படித்தால் படம் பார்க்கும் போது ஒரு திரில் இருக்காது.///

    உங்கள் ஊருக்கு படம் வந்ததும் கண்டிப்பாக பாருங்கள்

    ReplyDelete
  18. /// Anonymous said...

    அன்புள்ள செந்தில், போராளி படத்திற்காக www.poraalimovie.com என ஒரு இணையதளம் உருவாக்கி இருக்கிறோம். அந்த இணையதளத்தில் தங்களுடைய விமர்சனத்தை வெளியிடலாம் என இருக்கிறோம். அதற்கு தங்களுடைய அனுமதி தேவை. உங்களுடைய சம்மதத்தை கீழ்காணும் மெயில் ஐடிக்குத் தெரிவிக்கவும். நன்றி,

    தள நிர்வாகி
    டேவிட் கிருபாகரன்
    ourporaali@gmail.com ///

    எனக்கு சம்மதம் கண்டிப்பாக வெளியிடுங்கள்

    ReplyDelete
  19. /// ரஹீம் கஸாலி said...

    ஏன் தப்பிக்கிறார்கள், யார் அவர்கள், வில்லன் கும்பலை சசிக்குமார் குரூப் சமாளித்து வாழ்க்கையை எதிர்கொள்கிறார்களா என்பதை திரையில் காண்க.////
    என்ன தலைவரே....பாட்டுப்புத்தகத்திற்கு பின்னால் போட்டிருப்பதுபோல் பட்டென்று முடித்துவிட்டீர்... ///

    அண்ணே போன படத்தின் விமர்சனத்தில் முழுக்கதையும் சொன்னேன், படம் பார்க்கும் முன் ஏன் சொன்னாய் என்று ஏகப்பட்ட கண்டனங்கள் அதற்காகத்தான் சுருக்கமாக முடித்தேன்.

    ReplyDelete
  20. /// சி.பி.செந்தில்குமார் said...

    சாரெ, மீ ஒன் அவர் லேட். வாழ்த்துகள்.... படம் ஓக்கே தான், அதுக்காக இந்த ஆண்டின் இணையற்ற , ஜோடி அற்ற வெற்றிப்படம்னு சொல்றதெல்லாம் ஓவர் , அண்ணன் மப்புல இருக்கார் போல ஹி ஹி ///

    அப்படியில்லண்ணே, நானெல்லாம் சி கிளாஸ் ரசிகன். படமோ படத்தில் உள்ள காட்சிளோ ரிப்பீட்டாக இருந்தாலும் பிற மொழிப்படங்களில் இருந்து சுட்டதாக இருந்தாலோ கூட பரவாயில்லை, ரசிக்கும் படி இருந்தால் ரசிப்பேன், அவ்வளவே

    ReplyDelete
  21. /// வெண் புரவி said...

    நல்ல படத்தை ஓட வைக்கப் போராடும் உண்மையான போராளி நீங்கள்தான். ///

    நல்லப்படமாகவும் இருந்து நமக்கு பிடித்ததாகவும் இருந்தால் செய்யலாம்ணே

    ReplyDelete
  22. /// FARHAN said...

    படத்தினை பற்றி ஏக எதிர்பார்ப்பினை ஏற்படுதுவிட்டீர்கள் கண்டிப்பாக பார்கவேண்டும் ///

    கண்டிப்பாக பாருங்கள்

    ReplyDelete
  23. /// Elamparuthi said...

    காலை 08.30 சிறப்புக்காட்சிக்கு சென்று படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே சென்றேன்...eppdi sir ipadiyeelam ///

    மறைச்சு சொன்னாலும் அதான் உண்மைண்ணே

    ReplyDelete
  24. தலைவா ரொம்ப நாளா மறந்திருந்த சிராக்கோவை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி இந்தப்பதிவின் மூலம் நானும் நன்பர்களை நினைத்து மகிழ்ந்தேன் நன்றி மீண்டும் நன்றி அந்த குதிரை சீனை இன்னமும் நாங்கள் சிலாகித்து பேசுகிறோம் அதைவிட (மோஷமான)போர்னோ படங்களை பார்த்தபின்பும்

    ReplyDelete
  25. ஞாயிறு அன்று படம் ரிசர்வ் செய்துள்ளேன் தல.

    ReplyDelete
  26. //ஆரூர் முனா செந்திலு said...

    காலை 08.30 சிறப்புக்காட்சிக்கு சென்று படத்தைப் பார்த்து விட்டு விமர்சனம் எழுதினால் நிறைய ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே சென்றேன்.

    மறைச்சு சொன்னாலும் அதான் உண்மைண்ணே.//

    இப்படி சொல்ல நிறைய பேருக்கு மனசு வராது. எனக்கும்தான். உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  27. ! சிவகுமார் ! said...

    ஞாயிறு அன்று படம் ரிசர்வ் செய்துள்ளேன் தல.

    கண்டிப்பாக பாருங்கள்

    ReplyDelete
  28. உங்களின் விமர்சனம், படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். பகிர்விற்கு நன்றி நண்பரே! நம்ம தளத்தில்:
    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  29. சூப்பர்.. அப்ப கண்டிப்பா பாக்க வேண்டியதுதான்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...