இந்த உலகில் இப்படியும் ஒரு மனிதனால் சற்றும் சுயநலமின்றி வாழ முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு மக்கள் நலனுக்காகவும், அனைவரும் ஒன்றாக வாழ வேண்டுமென்று அவர்களிடமிருந்த அறியாமையையும் சாதி வேற்றுமையையும் அகற்ற பாடுபட்ட, என்றும் தமிழக தமிழக மக்களால் மறக்க முடியாதவரான 96 வயதான ஈ.வெ.ரா.பெரியார் வேலூர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு பிராணவாயு செலுத்தப்பட்டது. திராவிடர் கழகத் தலைவர் பெரியார், குடல் இறக்க ("இரணியா") நோயினால் அவதிப்பட்டு வந்தார். அதனால், 1973 டிசம்பர் 20ந்தேதி சென்னை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அதற்கு அடுத்த நாள் வேலூருக்கு கொண்டு போகப்பட்டு, சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஞாயிற்றுக்கிழமை அவர் உடல் நிலை கவலைக்கிடமாகியது. தூக்கம் இல்லாததாலும், வலியினாலும் வேதனைப்பட்டார்.
பெரியாருக்கு சிகிச்சை அளிக்க சென்னையில் இருந்து வைத்திய நிபுணர் டாக்டர் ராமச்சந்திரராவ், வேலூருக்கு அனுப்பப்பட்டார். பெரியார் உடல் நிலை பற்றி தகவல் அறிந்ததும், முதல்_அமைச்சர் கருணாநிதி வேலூருக்கு விரைந்தார். ஆஸ்பத்திரிக்குச் சென்று பெரியாரை பார்த்தார். பெரியார் உடல் நிலை கண்டு கண் கலங்கினார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், என்.வி.நடராசன், ப.உ.சண்முகம், ராசாராம், ராமச்சந்திரன் ஆகியோரும் வேலூர் சென்று பெரியாரை பார்த்தார்கள்.
பெரியாரின் மனைவி மணியம்மை, அமைச்சர் ப.உ.சண்முகம், திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீரமணி ஆகியோர் பெரியார் அருகிலேயே இருந்து கவனித்து வந்தனர். சி.எம்.சி. ஆஸ்பத்திரி டாக்டர்கள் பட், பாண்டே, ஜான்சன், சென்னையில் இருந்து சென்ற டாக்டர் ராமச்சந்திரராவ் ஆகி யோர் சிகிச்சை அளித்தனர். தஞ்சையில் சுற்றுப்பயணம் செய்து கொண்டு இருக்கும் அன்பழகனுக்கு ஈ.வெ.ரா.பெரியார் உடல் நிலை பற்றி தகவல் கிடைத்ததும் வேலூருக்கு டெலிபோன் செய்து, டாக்டர் ஜான்சனுடன் டெலிபோனில் பேசினார். பெரியார் உடல் நிலை பற்றி அவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நல்ல முறையில் சிகிச்சை அளித்து, பெரியார் விரைவில் குணம் அடைய ஆவன செய்யும்படி டாக்டரிடம் கேட்டுக் கொண்டார். பெரியார் உடல் நிலை அன்று இரவு மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. நள்ளிரவு 2 மணிக்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈ.வெ.ரா.பெரியார், 1973 டிசம்பர் 24ந்தேதி காலை 7.30 மணிக்கு மரணம் அடைந்தார். அவருடைய உடல், கார் ("வேன்") மூலம் மாலை 4 மணிக்கு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பெரியார் உடல் வந்து சேருவதற்கு வெகு நேரத்திற்கு முன்பே, ராஜாஜி மண்டபத்தின் முன் பெரும் திரளான மக்கள், கண்களில் கண்ணீர் வடிய துயரத்துடன் கூடி நின்றனர். முதல் அமைச்சர் கருணாநிதியும், அமைச்சர்களும் ராஜாஜி மண்டபத்தில் காத்திருந்தனர். பெரியார் உடலை வைப்பதற்காக, ராஜாஜி மண்டபத்தின் முன்புறத்தில் ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மேடையில் ஐஸ் கட்டிகள் வைக்கப்பட்டு, மேலே வெள்ளை துணி விரிக்கப்பட்டு இருந்தது.
மாலை 4 மணிக்கு, பெரியார் உடல் வைக்கப்பட்ட "வேன்" ராஜாஜி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது. பெரியார் உடல், வேனில் இருந்து இறக்கப்பட்ட போது, கருணாநிதியும், மற்ற அமைச்சர்களும் கண் கலங்கினார்கள். திராவிட கழகத் தொண்டர்கள் கதறி அழுதார்கள். பெரியார் உடல் வந்த வேனில், மணியம்மை இருந்தார். அவர் கதறி அழுதபடி இருந்தார். அமைச்சர்கள் ப.உ.சண்முகம், மன்னை நாராயணசாமி, திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி, ஈ.வெ.கி.சம்பத் ஆகியோர் பெரியார் உடல் வந்த வேனுடன், வேறொரு காரில் வந்தனர். ராஜாஜி மண்டபத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேடையில் பெரியார் உடல் வைக்கப்பட்டது. உடல் மீது, திராவிட கழக கொடி போர்த்தப்பட்டு இருந்தது. பெரியார் உடல் மீது முதலில் கருணாநிதி மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் நெடுஞ்செழியன், அன்பழகன், என்.வி. நடராசன், சத்தியவாணிமுத்து, அம்மையார், மாதவன், சாதிக் பாட்சா, சி.பா.ஆதித்தனார், ராசாராம், ஓ.பி.ராமன், அன்பில் தர்மலிங்கம், ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர்.
நடிகர் சிவாஜிகணேசன் மலர் வளையம் வைத்து விட்டு, பெரியார் காலடியில் தலை வைத்து கதறி அழுதார். ப.காங்கிரஸ் தலைவர்கள் காமராஜர், ப.ராமச்சந்திரன், கருத்திருமன், அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர்., தமிழரசு கழகத் தலைவர் ம.பொ. சிவஞானம், இ.கம்யூனிஸ்டு தலைவர் ராமமூர்த்தி, பல்கலைக்கழக துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, தமிழ்நாடு கம்யூனிஸ்டு தலைவர் மணலி கந்தசாமி, மேல்_சபை தலைவர் சி.பி.சிற்றரசு, பார்வர்டு பிளாக் தலைவர் மூக்கையா தேவர், சென்னை செரீப் கே.எஸ்.நாராயணன், பாராளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள், மதுரை மேயர் முத்து, திராவிட கழக பிரமுகர்கள், நடிகர்கள் எம்.ஆர்.ராதா, எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, டி.கே.பகவதி ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினர். திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் கறுப்பு சட்டை அணிந்திருந்தனர்.
பெண்கள் கறுப்பு சேலை அணிந்திருந்தனர். பெரியார் உடலைப் பார்த்ததும் பலர் "அய்யா, அய்யா" என்று கதறினர். ராஜாஜி மண்டபத்தின் முன்னால் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் நீண்ட கியூ வரிசைகளில் நின்றனர். "கியூ"வின் நீளம் ஒரு மைல் தூரம் இருந்தது. அவர்கள் வரிசையாகச் சென்று, பெரியாருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். பெரியார் உடல், ராஜாஜி மண்டபத்தில் உள்ள மேடை மீது வைக்கப்பட்ட போது, திராவிட கழக பொதுச் செயலாளர் வீரமணி மயங்கி விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கிச் சென்று மயக்கம் தெளியச் செய்தனர். பெரியார் மறைவுக்கு பிரதமர் இந்திராகாந்தி அனுதாபம் தெரிவித்தார். இன்றளவும் தமிழகத்தில் சாதிப் பெயரை தன் பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ளாத தலைமுறையை உருவாக்கிய தந்தை பெரியார் எனும் சகாப்தம் முடிவடைந்தது.
ஆரூர் முனா செந்திலு

மிக அருமையாக இந்த தொடரை தொடர்கிறீர்கள். உண்மையிலேயே அருமை. நானும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். உங்களுடைய பதிவு மெருகேறிக் கொண்டே செல்கிறது. முன்னணி எழுத்தாளராக வருவீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅருமையான பதிவு. ஒவ்வொரு தலைவரின் கடைசி நாட்களை மிக சுவாரஸ்யமாகவே தொகுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் செந்தில்.
ReplyDeleteஅருமை. செந்தில் இந்த விஷயங்கள் ஏதேனும் புத்தகம் அல்லது வேறு source-லிருந்து எடுத்தால் அது எங்கிருந்து என்றும் குறிப்பிடலாம். அப்படி குறிப்பிடாத பட்சத்தில் முழுவதும் நீங்களே எழுதியது என்று ஆகும் !!
ReplyDeleteஇதில் விடுபட்ட ஒரு சம்பவம்.....
ReplyDeleteபெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பிய முதல்வர் கலைஞர், அப்போதைய உள்துறை செயலாளரிடம் சொல்ல, அதற்கு அவர்,
பெரியார் எந்த அரசு பதவியிலும் இல்லாதவர் என்று மறுத்தாராம்.
உடனே கலைஞர்..
காந்தி கூடத்தான் அரசு பதவி வகிக்கவில்லை. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதே என்று சொன்னார்.
அந்தக்கேள்விக்கு பதிலளித்த உள்துறை செயலாளர்.. காந்தி இந்தியாவின் தந்தை,(gandhi is father of nation) அதனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என்று பதிலளித்தார்.
உடனே கலைஞர் பெரியார் தமிழகத்தின் தந்தை(periyar is father of tamilnadu என்று சொல்லி அரசு மரியாதையுடன் பெரியார் உடலை அடக்க உத்தரவிட்டார்.
ஈரோடு சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்கிறோம் நீங்களும் வர முயலுங்கள்
ReplyDelete<<< ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஇதில் விடுபட்ட ஒரு சம்பவம்.....
பெரியார் உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய விரும்பிய முதல்வர் கலைஞர், அப்போதைய உள்துறை செயலாளரிடம் சொல்ல, அதற்கு அவர்,
பெரியார் எந்த அரசு பதவியிலும் இல்லாதவர் என்று மறுத்தாராம்.
உடனே கலைஞர்..
காந்தி கூடத்தான் அரசு பதவி வகிக்கவில்லை. அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டதே என்று சொன்னார்.
அந்தக்கேள்விக்கு பதிலளித்த உள்துறை செயலாளர்.. காந்தி இந்தியாவின் தந்தை,(gandhi is father of nation) அதனால் அவருக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டது என்று பதிலளித்தார்.
உடனே கலைஞர் பெரியார் தமிழகத்தின் தந்தை(periyar is father of tamilnadu என்று சொல்லி அரசு மரியாதையுடன் பெரியார் உடலை அடக்க உத்தரவிட்டார். >>>
விவரங்களுக்கு நன்றி அண்ணே, உங்களுக்கு வரலாற்று விபரங்கள் பற்றி அதிகம் தெரிந்திருக்கிறது. வாழ்த்துக்கள்
<<< மோகன் குமார் said...
ReplyDeleteஅருமை. செந்தில் இந்த விஷயங்கள் ஏதேனும் புத்தகம் அல்லது வேறு source-லிருந்து எடுத்தால் அது எங்கிருந்து என்றும் குறிப்பிடலாம். அப்படி குறிப்பிடாத பட்சத்தில் முழுவதும் நீங்களே எழுதியது என்று ஆகும் !! >>>
அப்படியில்லண்ணே, வரலாற்று தகவல்கள் என்பது எப்படி நமது சொந்த கதையாக இருக்க முடியும், அதுவும் இந்த சம்பவம் நான் பிறப்பதற்கு முன் நடந்தது. நான் படித்த பெரியார் வாழ்க்கை வரலாறும் மாலை மலரில் வந்த கட்டுரையும் தான் மூலப்புத்தகங்கள். அதில் கலந்து கொண்ட நபர்களின் விபரங்களை புத்தகங்களில் இருந்து எடுத்தேன். எழுத்து நடை என்னுடையது.
<<>>
ReplyDeleteஅண்ணே எனக்கும் வர வேண்டுமென்று ஆசை தான், ஆனால் அன்று பெரியம்மா வீட்டில் ஒரு விஷேசம் உள்ளது. நீங்கள் யாருடன் செல்ல திட்டமிட்டுள்ளீர்கள். உங்கள் பயணத்திட்டம் பற்றி கூறினால் முடிந்தால் நானும் இடையில் உங்களுடன் சேர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete* வெத்து வேட்டு விஜயகாந்து! எத்தனை படத்தில் தேசபக்தி பேசி தீவிரவாதிகளை அடக்கி இந்தியாவை காப்பாற்றினீர்களே! பாவம் சார் நீங்கள்!
ReplyDelete* முல்லை பெரியாறு, கூடங்குளம் ஒருங்கிணையும் தமிழர்கள்! தமிழர் எழுச்சி ஓங்கட்டும்!
* மோதல்களை தடுத்து நிறுத்துங்கள் SDPI ! சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கோரிக்கை
* தமிழர்களின் எழுச்சியும், ஹிந்துத்துவாவின் ஆர்ப்பாட்டமும்! கூடங்குளம் அணுமின் நிலயத்தை உடனே திறக்க வேண்டும் இந்து மகாசபா ஆர்ப்பாட்டம்!
நல்ல பகிற்வு நண்பா வாழ்த்துக்கள் !
ReplyDeleteஉண்மைவிரும்பி.
மும்பை