சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, December 2, 2011

ரயில் பயணங்களில்


இப்பொழுது எல்லாம் ரயில் பயணம் என்பது நியாயமாக பணம் கொடுத்து செல்பவனுக்கு கிட்டாது என்றே தோன்றுகிறது. திங்கள் கிழமை சொந்த ஊரில் நடக்கும் திருமணத்திற்காக நாளை இரவு திருவாரூர் செல்ல வேண்டியிருந்தது. பல வருடங்களாகவே ஊருக்கு பேருந்திலோ அல்லது காரிலோ மட்டும் சென்று கொண்டிருந்ததால் மாறுதலுக்காக இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய ஆவடி ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள முன்பதிவு நிலையத்திற்கு காலை 07.00 மணிக்கெல்லாம் சென்றேன்.

நண்பர்கள் தட்கலில் எடுக்கும் முறையே ஏற்கனவே சொல்லி அறிவுறுத்தியிருந்ததால் சீக்கிரம் சென்ற நான் அங்குள்ள கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து விட்டேன். எனக்கு முன்னால் 80 பேர் வரிசையில் நின்றிருந்தார்கள். அப்பாவிகளா என்று நினைத்துக் கொண்டு நானும் வரிசையில் நின்றேன். 7மணியிலிருந்து வரிசையில் நின்று 9மணிக்கு என்முறை வந்தது. சென்று முன்பதிவு விண்ணப்பத்தை கொடுத்தால், வெயிட்டிங் லிஸ்ட் 40 என்றார்கள். கடுப்பாகி விட்டது, அவர்களிடம் என்ன சொல்வது, முனகிக் கொண்டே வெளியில் வந்தேன்.


என் நண்பன் ஒருவனிடம் இதுபோல் டிக்கெட் எடுக்கப்போய் வந்த கதையை சொன்னேன். உடன் அவன் ஒரு ரயில் டிக்கெட் ஏஜெண்ட் நம்பரை கொடுத்து தொடர்பு கொள்ள சொன்னான். நான் அந்த நம்பரில் உள்ளவரிடம் கேட்டால் டிக்கெட் தயார் என்று் கூடுதலாக ரூ200 கொடுத்தால் டிக்கெட் கிடைக்கும் என்றும் கூறினான். இதற்கு நான் பேருந்திலேயே செல்லத்தயார் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.

எவ்வளவோ வட இந்தியாவில் உள்ள நகரங்களுக்கு அலுவல் காரணமாக பலமுறை சென்றிருக்கிறேன். அந்தப் பயணங்கள் பெரும்பாலும் நான் மட்டுமே செல்லும்படி இருக்கும். எனவே துணைக்கு மாவீரன் நெப்போலியன் அல்லது VSOP ஆகியோர் கூல்டிரிங்ஸ் பாட்டில்களில் மிக்ஸ் பண்ணி என்னுடன் இருப்பர். கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து இந்த முறை ரயிலில் செல்லலாம் என்று முடிவெடுத்து அதுவும் திருமணமாகி இத்தனை நாட்களில் முதன்முறையாக என் மனைவியுடன் செல்லலாம் என்று அதுவும் மிஸ்ஸானதால் வந்த கடுப்பு இது.

சிறுவயதில் விடுமுறைக்காக திருவாரூரிலிருந்து சென்னை வந்து விடுமுறை நாட்களை மாமா வீட்டில் கழித்து விட்டு திரும்பி செங்கோட்டை பாஸஞ்சரில் மயிலாடுதுறை வரை வந்து அங்கிருந்து மயிலாடுதுறையிலிருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரயிலில் ஏறி திருவாரூர் செல்வோம்.

அந்தப் பயணத்தில் திருவாரூரிலிருந்து சென்னை செல்லும் போதும், சென்னையிலிருந்து மயிலாடுதுறை வரையும் உள்ள பயணம் இருட்டில் இருப்பதால் அவ்வளவாக ஈர்க்காது. ஆனால் காலை 06.00 மணிக்கு மயிலாடுதுறையில் இறங்கி பல் துலக்கிய பிறகு ரயில் நிலையத்தில் காலை சிற்றுண்டியாக இட்லி வடை அப்பா வாங்கித்தருவார். அதை ரயில் நிலையத்தில் அமர்ந்து சாப்பிடும் போது, அடடா அதன் சுவையே தனி. பிறகு 07.00 ரயில் மயிலாடுதுறையிலிருந்து புறப்படும். அது செல்லும் பாதையே மிகுந்த ரசனையாக இருக்கும்.

ஆற்றுப்பாலங்கள், இரு பக்கமும் தோப்புகள் என சுற்றுப்புறமும் அந்த காலை ரம்மியமான சூழ்நிலையும் அருமையாக இருக்கும். பிறகு +2 முடித்த பிறகு நான் படிப்பதற்காக சென்னைக்கு வந்து இங்கேயே தங்கி விட்டதாலும் பேருந்து பயணம் மட்டுமே வகுப்பு நேரத்திற்குரிய வசதியாக அமைந்து விட்டதால் அப்போதிலிருந்து பேருந்து பயணம் மட்டுமே. இப்பொழுதெல்லாம் கார் அல்லது ஆம்னி பஸ் மட்டுமே.

தற்பொழுது மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் வரை பிராட்கேஜ் பணிகள் நடப்பதால் ரயில்கள் மயிலாடுதுறையிலிருந்து கும்போணம், தஞ்சாவூர் வழியாக திருவாரூர் செல்கின்றன. மீண்டும் இந்த மார்க்கத்தில் ரயில் பயணம் துவங்கிய பின்பே நான் அந்த பயண சுகத்தை அனுபவிக்க முடியும்.


ஆரூர் முனா செந்திலு


10 comments:

  1. எனக்கும் இது போல் தடங்கல்கள் ஏற்பட்டிருக்கிறது, எல்லாம் நேரம் தான் நண்பா என்ன செய்ய.

    ReplyDelete
  2. ரயில் வண்டி பயணம் என்றால் முன்பதிவேல்லாம் செய்வதில்லை, பெரும்பாலும் ஜெனரல் வகுப்பு தான்... அந்த படிக்கட்டு பயணம் வாழ்க்கையில் என்றும் மறக்க மாட்டேன்

    ReplyDelete
  3. /// suryajeeva said...

    ரயில் வண்டி பயணம் என்றால் முன்பதிவேல்லாம் செய்வதில்லை, பெரும்பாலும் ஜெனரல் வகுப்பு தான்... அந்த படிக்கட்டு பயணம் வாழ்க்கையில் என்றும் மறக்க மாட்டேன் ///

    நீங்கள் சொல்லும் முறையில் பயணம் செய்வதே இனிமையான பயணம் எனக்கும் அதில் தான் ஆர்வமும் கூட. ஆனால் நாம் குடும்பத்தாருடன் செல்லும் போது செளகரியம் தான் முன்னிலை வகிக்கிறது.

    ReplyDelete
  4. thala, online-la ticket edukirathu.... veetamma software-la veelai parkirarkal.... oru computer potti vangi vetula vaikirathu...... (saraku adikira kasula oru computer center...... vachikiralamea.......)

    ReplyDelete
  5. /// Anonymous said...

    thala, online-la ticket edukirathu.... veetamma software-la veelai parkirarkal.... oru computer potti vangi vetula vaikirathu...... (saraku adikira kasula oru computer center...... vachikiralamea.......) ///

    வீட்ல ஏற்கனவே அந்த பொட்டி இருக்கு தல, அடிக்கடி ரயில் பயணம் இல்லாததால் IRCTC கார்டு வாங்கவில்லை. IRCTC தவிர வேறு இணையதளங்கள் முன்பதிவு செய்பவையாக இருந்தால் சொல்லு, டெபிட் கார்டின் மூலம் அதனை வாங்க முயற்சிக்கிறேன். இன்னொரு விஷயம் ஏற்கனவே எனக்கு திருவாரூரில் சொந்தமாக கம்ப்யூட்டர் சென்டர் இருக்கிறது. இத்தனை நாள் அதனை நான் தான் நிர்வகித்து வந்தேன். தற்பொழுது எனக்கு ரயில்வேயில் இஞ்சினியர் வேலை கிடைத்து விட்டதால் சென்னை வந்து விட்டேன். கடையை என் தந்தை கூடுதலாக கவனித்துக் கொள்கிறார். போதுமா டீட்டெயிலு.

    ReplyDelete
  6. அனுபவித்து எழுதி உள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே!
    நம்ம தளத்தில்:
    "அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

    ReplyDelete
  7. (போதுமா டீட்டெயிலு. )

    சாரி, தல. ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டேன்.... சரக்கு பற்றி அடிக்கடி கூறுவதால் தவறாக நினைத்து விட்டேன்.

    வாழ்க..... திருவாரூர் பில் கேட்ஸ் .
    வாழ்க..... திருவாரூர் அம்பானி .
    வாழ்க..... திருவாரூர் கல்வி வள்ளல் .
    வாழ்க..... திருவாரூர் கம்ப்யூட்டர் நாயகன் .

    நீங்கள் கூறிய IRCTC கார்டு விவரம் புரியவில்லை. நான் (IRCTC) online இல் தான் எடுக்கிறேன். (USER ID CREATE செய்து)

    (வீரனாக இருந்த என்னை மனிதனாக மாற்றியது Anonymous பதில் கூறும் உங்களது பண்பு. தொடரட்டும் உங்களது சேவை.... RAILWAY DUTY சேர்ந்த பின்னரும்....)

    ReplyDelete
  8. ரயில்வே ஆளுக்கே ரயிலில் சீட் இல்லையா என்ன கொடுமை தல இது? ஆமாம் ரயில்வே ஆளுங்களுக்கு ப்ரீ பாஸ் கொடுப்பாங்களே அது வேலைக்காதா?

    ReplyDelete
  9. /// Anonymous said...

    (போதுமா டீட்டெயிலு. )

    சாரி, தல. ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டேன்.... சரக்கு பற்றி அடிக்கடி கூறுவதால் தவறாக நினைத்து விட்டேன்.

    வாழ்க..... திருவாரூர் பில் கேட்ஸ் .
    வாழ்க..... திருவாரூர் அம்பானி .
    வாழ்க..... திருவாரூர் கல்வி வள்ளல் .
    வாழ்க..... திருவாரூர் கம்ப்யூட்டர் நாயகன் .

    நீங்கள் கூறிய IRCTC கார்டு விவரம் புரியவில்லை. நான் (IRCTC) online இல் தான் எடுக்கிறேன். (USER ID CREATE செய்து)

    (வீரனாக இருந்த என்னை மனிதனாக மாற்றியது Anonymous பதில் கூறும் உங்களது பண்பு. தொடரட்டும் உங்களது சேவை.... RAILWAY DUTY சேர்ந்த பின்னரும்....) ///

    வஞ்சப்புகழ்ச்சி அணி என்று ஒன்று தமிழில் உள்ளது. அதன்படி நீர் படைத்த இந்த படைப்பிலக்கியம் நன்று.

    ReplyDelete
  10. /// Anonymous said...

    ரயில்வே ஆளுக்கே ரயிலில் சீட் இல்லையா என்ன கொடுமை தல இது? ஆமாம் ரயில்வே ஆளுங்களுக்கு ப்ரீ பாஸ் கொடுப்பாங்களே அது வேலைக்காதா? ///

    பாஸ் உண்டு, ஆனால் அதனை வைத்து ஒரு முறை மட்டுமே ரிசர்வ் செய்ய முடியும். அன்ரிசர்வில் என்றால் எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம். ரயில்வே பாஸ்ஸில் உள்ள நடைமுறை சிக்கல் அதுதான்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...