நான் 1997 ம் ஆண்டு டிப்ளோமா அப்ரென்டிஸ்ஸில் நுழைவுத்தேர்வு எழுதி இணைப்பு பெட்டி தொழிற்சாலை(Integral Coach Factory, Southern Railway)யில் சேர்ந்தேன். என்னுடன் அதே ஆண்டு சேர்ந்தவர்கள் மொத்தம் 350 பேர். அனைவருமே எனக்கு மிகச்சிறந்த நண்பர்கள். நாங்கள் முடித்த ஆண்டு 2000.
வழக்கமாக அதற்கு முன்பு அப்ரென்டிஸ் முடித்தால் உடனே அங்கேயே வேலை வழங்கப்படும். ஆனால் நாங்கள் படித்துக் கொண்டிருந்த போது ரயில்வே மிகுந்த நஷ்டத்தில் இருந்ததால் அப்ரென்டிஸ்களுக்கு வேலை வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு தனியாருக்கு வழங்கப்பட இருந்தது. இதனால் எங்களுக்கு வேலை கிடைக்காமல் நாங்கள் அனைவரும் அப்ரென்டிஸ் முடிந்ததும் வேறு வேலைக்கு செல்ல நேர்ந்தது. அதன் பிறகு லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு ரயில்வே லாபத்தில் செல்லத் தொடங்கியதால் எங்களுக்கு சீனியாரிட்டி முறைப்படி வேலை வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு முன்பு 5 வருடமாக காத்திருந்தவர்கள் செல்லத் தொடங்கினார்கள்.
எங்களுக்கு முன்பு பேட்ச் வரை அனைவருக்கும் வேலை கிடைக்க 2010 ஆகி விட்டது. அதற்குள் RRBயின் மூலமாக நுழைவுத் தேர்வு எழுதி எங்கள் பேட்ச்சில் 20 பேர் 2005ம் ஆண்டு வேலை பெற்று விட்டனர். அதன் பிறகு சீனியாரிட்டி படி எங்கள் வகுப்பு நண்பர்களில் 100 பேருக்கு வேலை வழங்கப்பட்டது. பாக்கியுள்ளவர்கள் வேலைக்காக காத்திருந்தனர். ஆனால் இன்று வரை வேலை வழங்கப்படவில்லை.

இந்நிலையில் சென்ற ஆண்டு ரயில்வே பொறியாளருக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் மொத்தம் 30,000 பேர் தேர்வு எழுதினர். இது பொதுவாக இந்தியா முழுவதும் நடைபெற்றதாகும். தேர்வில் மொத்தம் தேர்வானவர்கள் 27 பேர் மட்டுமே. இதில் ரயில்வே அப்ரென்டிஸ்ஸில் தேர்வானவர்கள் நான் ஒருவன் மட்டுமே. எனக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை முடிந்து விட்டது. அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டருக்காக காத்திருக்கிறேன்.
ஆனால் என்னுடன் முடித்த 200க்கும் மேலானவர்கள் ரயில்வே வேலைக்காக காத்திருக்கின்றனர். மூன்று முறை ஐதராபாத், பெங்களூர், பாட்னா போன்ற இடங்களில் வேலை தருகிறேன் என்று கூறி ஐசிஎப் நிர்வாகம் விருப்பக் கடிதம் வாங்கிக் கொண்டது. ஆனால் இன்று வரை ஒருவருக்கும் வேலை கிடைக்கவில்லை. அதனை கண்டித்து எங்களது ரயில்வே ஓல்டு அப்ரென்டிஸ் சங்கத்தின் சார்பாக இன்று காலை 10 மணிக்கு ஐசிஎப்பில் மனித சங்கிலி பேரணி நடைபெறுகிறது. எங்கள் நண்பர்களுக்காக நானும் கலந்து கொள்கிறேன்.
எப்படியாவது எங்கள் நண்பர்களுக்கும் ஐசிஎப்பில் வேலை கிடைக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம்.
இரண்டு நாட்களாக நமது அகில உலக கில்மா ஸடாருக்காக ஜாலியாக பதிவெழுதி விட்டேன். இன்று என் நண்பர்களுக்காக சீரியஸான பதிவு. நன்றி நண்பர்களே.
ஆரூர் முனா செந்திலு

/// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteநல்ல பதிவு ///
நன்றிண்ணே.
போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .அப்படியே வேலையும் கிடைக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteகோவை நேரம் said...
ReplyDeleteபோராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் .அப்படியே வேலையும் கிடைக்க வாழ்த்துக்கள் ///
வாழ்த்துக்கு நன்றி.
போராட்டம் வெல்லட்டும்...செந்தில் வேலை கிடைச்சா...எங்களுக்கெல்லாம்...பிரீ பாஸ் கொடுங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteபணி கிடைக்க வாழ்த்துக்கள்
ReplyDeleteஉடனடி
ReplyDeleteவேலையும் கிடைக்க வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
விரைவில் அபாயின்மென்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
ReplyDelete/// veedu said...
ReplyDeleteபோராட்டம் வெல்லட்டும்...செந்தில் வேலை கிடைச்சா...எங்களுக்கெல்லாம்...பிரீ பாஸ் கொடுங்க.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ///
இல்லை சுரேஸ் எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. நான் அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அவ்வளவு தான். இன்று நடக்கும் போராட்டம் என்னுடன் படித்த சக நண்பர்களுக்கானது.
/// விக்கியுலகம் said...
ReplyDeleteபணி கிடைக்க வாழ்த்துக்கள் ///
மாமா, வாழ்த்துக்கு நன்றி, எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. நான் அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அவ்வளவு தான். இன்று நடக்கும் போராட்டம் என்னுடன் படித்த சக நண்பர்களுக்கானது.
/// புலவர் சா இராமாநுசம் said...
ReplyDeleteஉடனடி
வேலையும் கிடைக்க வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம் ///
நன்றி ஐயா.
/// தமிழ்வாசி பிரகாஷ் said...
ReplyDeleteவிரைவில் அபாயின்மென்ட் கிடைக்க வாழ்த்துக்கள் ///
வாழ்த்துக்கு நன்றி பிரகாஷ், எனக்கு ஏற்கனவே கிடைத்து விட்டது. இன்னும் பதினைந்து நாட்களுக்குள் சேர்ந்து விடுவேன்.
இரண்டு நாட்களாக நமது அகில உலக கில்மா ஸடாருக்காக ஜாலியாக பதிவெழுதி விட்டேன்./////
ReplyDeleteஜாலி ..எங்க??எங்க???எங்க???
/// NAAI-NAKKS said...
ReplyDeleteஜாலி ..எங்க??எங்க???எங்க?? ///
இன்னா அண்ணே நீ இன்னா பேசிகின்னு இருக்கிற. நீ தான்ணே என் தல. அந்த அசித் குமாரு, விசய், ஸிம்பு, தனுஸ் எல்லாம் உன் பீச்சே வருவாங்க ண்ணே.
பதிவு அருமை! மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!
ReplyDeleteபகிர்விற்கு நன்றி நண்பரே!
சிந்திக்க :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"