சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, November 15, 2011

பெருந்தலைவர் காமராஜரின் கடைசி நாள் - பகுதி 2



காந்தியடிகள் பிறந்த நாள் - அக்டோபர் 2. அதுவே காமராஜ் பிரிந்த நாளாகவுமாகியது. காந்தி மறைந்த செய்தி கேட்டபோது ஏற்பட்ட அதிர்ச்சி, அன்றும் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டது. புனிதன் போனால் பூவுண்டு நீருண்டு என்பது பெரியவர்கள் வாக்கு. அது காமராஜர் மறைவிலும் பொய்க்கவில்லை. அன்று விடாத மழையிலும் கூடப் காமராஜர் மறைவுச் செய்தி காட்டுத்தீயாக நாடு முழுக்கப் புயல் வேகத்தில் பரவியது.

உதடுகளிலே ஒரு மவுனப் புன்னகை, எளியத் தோற்றத்தில் பெருந்தலைவன் புகழோடு ஐக்கியமாகி விட்டான். தமிழகம் எங்கு நோக்கினும் கதறியழும் மனிதர்கள். ராஜாஜி மண்டபத்துக்கு அவர் உடலைக் கொன்டு செல்ல முடிவானது. அன்று மாலை 05.30 மணிக்கு விசேஷ மோட்டார் வண்டியில் காமராஜ் உடல் ராஜாஜி மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது.


மறைவு பற்றிய செய்தி அறிந்ததும் நாடெங்கும் எல்லாக் ட்சிக் கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டன. கடைகள் மூடப்பட்டன. சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. காமராஜ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் காந்தி ஜெயந்தி விழாக் கொண்டாட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை என்றும், தமிழ்நாடு அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. கிராமங்கள், நகரங்களில் எல்லாம் தெருக்களிலும் வீடுகளிலும் தலைவர் படத்துக்கு மலையிட்டு தீபம் ஏற்றி வைக்கப்பட்டது.

ராஜாஜி மண்டபம் மக்கள் கடலால் முற்றுகையிடப்பட்ட சிறு தீவு போல் விளங்கியது. மக்கள் வெள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினார்கள். மூவர்ணக் கொடியால் காமராஜரின் உடல் போர்த்தப்பட்டு, ராஜாஜி மண்டபத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டது.


அப்போதைய தமிழக கவர்னர் ஷா, முதல் மந்திரி கருணாநிதி, புதுவை கவர்னர் சேத்திலால், தமிழக மந்திரிகள், அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், தமிழக தலைவர்கள், சிவாஜி கணேசன் ஆகியோர் மலர் வளையம் வைத்தனர். காமராஜரின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் சிலர் மயங்கி விழுந்தனர். மாரடைப்பு ஏற்பட்டு இரண்டு பேர் மரணம் அடைந்தனர்.

தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டன. 20க்கும் அதிகமானோர் வரும் வழியில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் மாண்டனர். காமராஜரின் உடலைக் கண்டு அஞ்சலி செலுத்த வந்த கூட்டம் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. 2மைல் தூரம் வரை இரண்டு மூன்று வரிசைகளில் தலைவர்கள் முகத்தை கடைசியாக கண்டுவிட மக்கள் திரண்டு நின்றனர்.

இரவு கொட்டும் மழையிலும், தலைவருக்கு நினைவாலயம் அமைப்பதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க முதல் மந்திரி கருணாநிதியும், காங்கிரஸ் செயலாளர் திண்டிவனம் ராமமூர்த்தியும், ராஜ்பவன் தோட்டத்திற்கு சென்றனர். மகாத்மா காந்தி நினைவு மண்டபத்தின் அருகே, இரண்டு ஏக்கர் நிலத்தில் நினைவாலயம் எழுப்ப முடிவு செய்யப்பட்டது.

இரவில் வெளியூர் மக்கள் குவியத் தொடங்கினர்.

ஆரூர் முனா செந்திலு

S

1 comment:

  1. இன்றைய அரசியல்வாதிகள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ளலாம். வாழும் போது மனிதனாக மட்டுமே வாழ்ந்த மனிதர், இவரது காலத்தில் நான் இல்லாதது எனக்கு இழப்பே. மிக அருமையான பதிவு நண்பா. நீ எழுதும் மொக்கை பதிவுகளுக்கு இது எவ்வளவோ மேல். எப்படி நீ இது போன்ற நல்லப் பதிவும், மொக்கைப் பதிவும் ஒரு சேர எழுதுகிறாய்.

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...