சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, November 28, 2011

காலத்தினால் கலர் மாறிய சினிமா வில்லன்கள் - பகுதி 4

1999-ன் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியான "சேது' திரைப்படத்தினால் மக்கள் மாறினார்கள். ஆனால், கோடம்பாக்கம் மாறவில்லை. அதன் பிறகும் வில்லன்கள் வந்தனர். ஆனந்தராஜ், நாசர், ரகுவரன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதீத பணக்கார பின்புலத்துடன் வில்லனாக வலம் வந்தனர். "சேது'வுக்கு பிறகு, தொடர்ந்து பல திரைப்படங்கள் தோல்வியுற்றபோதும் மக்களின் ரசனை மாற்றத்தை கோடம்பாக்கம் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை.

தயாரிப்பாளர்கள் மீண்டும் க்ளைமாக்ஸ் கருத்து சொல்லும் படங்களையும், பணக்கார வில்லன்களையும் எதிர்பார்த்தனர். இக்கால கட்டத்தில்தான் பல இந்திக்கார வில்லன்கள் கஷ்டப்பட்டு தமிழ் பேசி விஜயகாந்த், அர்ஜுன் மற்றும் விஜய், அஜித், சூர்யா, விக்ரமோடு சண்டை போட்டனர். பிரகாஷ்ராஜ் அவர்களை தன் அனாயசமான வசன உச்சரிப்பால் ஓரம் கட்டி ஆதிக்கம் செலுத்தினார். இக்காலத்தில் தங்கர்பச்சான் "அழகி' எனும் மாறுபட்ட ஒரு திரைப்படத்தை மக்கள் முன் வைத்தார். பச்சையான மரம் செடிகொடிகளைபோல தங்கர்பச்சானின் செம்பட்டை முடி மனிதர்களும் பச்சையான வாசத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார்கள். இவர் படத்தில் வில்லன் வாழ்க்கையின் விதியும், காலமுமாக இருந்தது.

"சேது'வில் மன நலம் குன்றியவர்களை காண்பிக்கும் காட்சியும், "அழகி'யில் சிறுவயது பருவ காட்சிகளிலும் இயக்குநர்கள் தங்களது தனித்தன்மையை நிரூபித்திருந்தனர்.

இக்காலத்தில் தமிழில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதன் காரணமாக இயக்குநர்களின் கதை சொல்லல் போக்கும் நிறையவே மாறத் துவங்கியிருந்தது. கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் போன்ற தொழில்நுட்ப தேர்ச்சி கொண்ட, அதே சமயம் புதிய தலைமுறைக்கான ரசனைகளை அறிந்த இயக்குனர்கள் இளைஞர்களை கவர்ந்தனர். செல்வராகவனின் "துள்ளுவதோ இளமை' இக்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் உளவியலை அப்பட்டமாக சித்தரித்திருந்தது. அதன் பிறகு, வெளியான இவரது படங்களில் செக்ஸூம், வன்முறையும் இடம் பிடித்ததே தவிர, அந்த யதார்த்தம் காணாமல் போனது ஒரு இழப்பு.

இவர்களின் வரவுக்குப் பிறகு தமிழின் மிகச் சிறந்த மாறுதல் 2004-ல் தான். இதற்கு முன் பாலா, தங்கர்பச்சான் ஆகியோரது பாதையில் சேரன் மற்றும் பாலாஜி சக்திவேல் பயணத்தை துவங்கினார்கள். "ஆட்டோகிராஃப்', "காதல்' இந்த இரண்டு படங்கள்தான் முதன் முதலாக திரைக்கதை வசனத்தை சினிமாவாக பிரதி எடுக்கும் வழமையான போக்கை மாற்றின. அதுவரை காட்சி ரீதியாக கதை நகர்த்தும் தன்மை விலகி ஷாட் பை ஷாட்டாக கதை நகர்த்தும் உலக சினிமாவின் அடிப்படை தகுதியை தமிழ் சினிமா இப்படங்களின் மூலமாகத்தான் எட்டத் துவங்கியது. இதில் "காதல்' படத்தில் வில்லன் இருந்தாலும் அக்காலகட்டத்தில் மண் சார்ந்த அல்லது இனவரவியல் கூறுகளுடன் கூடிய பாத்திரப்படைப்புகளின் துவக்கமாக இந்த படத்தின் வில்லன்களின் தன்மை மாறியிருந்தது. இந்த இரு படங்களும் தமிழில் தர அடிப்படையில் முதன் முதலாக வெளிநாடுகளில் நடக்கும் உலக பட விழாக்களில் பங்கேற்கும் தகுதியைப் பெற்றிருந்தன.

(தொடரும் ...)
ஆரூர் முனா செந்திலு

3 comments:

  1. வாசகர்களின் கனிவான பார்வைக்கு !

    இஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,

    இந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் இயங்குகின்றன.

    "அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்"

    சுட்டியை சொடுக்கி படியுங்கள்.

    ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****

    .

    ReplyDelete
  2. அதெல்லாம் காசு பணம் வந்தா கழுதை கூட கலராயிடும் தலைவரே...

    ReplyDelete
  3. எப்பய்யா மூணு பாகம் எழுதினீங்க.... சொல்லவே இல்லை...

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...