சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, July 17, 2012

பஞ்சேந்திரியா - பில்லா 2 தோல்விக்காக பார்ட்டி கொண்டாடிய விஜய் ரசிகர்

பில்லா 2 டிரைலரிலேயே என்னைக் கவரவில்லை. அதனால் முதல் காட்சி பார்க்க வேண்டும் என்று தோணவில்லை. படம் வெளிவந்த பிறகு தான் தெரிகிறது. அது கடவுளின் அனுக்கிரகம் என்று. ஆத்தா மகமாயி என் மனச மாத்தி பாக்க விடாம பண்ணிட்டா. பாக்க விடாம பண்ண ஆத்தாவுக்கு தீமிதிக்கலாம்னு இருக்கேன்.

பயபுள்ள என்னமா கொன்னுருக்காய்ங்க. பாவம் முதல் காட்சிக்கு போன நண்பன் ஒருவன் இந்த படம் வந்த காலத்துல நானெல்லாம் உயிரோட இருக்கனுமான்னு புலம்பிக்கிட்டு இருக்கான். படம் ரீலீசான அன்னைக்கு சிறப்பு காட்சி 9 மணிக்குன்னு சொன்னானுங்க, அது ஹவுஸ்புல்லானதும், 7.30 மணிக்காட்சி தான் முதல் காட்சின்னு சொன்னானுங்க. அதுவும் புல்லானதும் காலையில 4.00மணிக்காட்சி உண்டுன்னு சொன்னானுங்க பாருங்க. முதல்ல அவனத்தான் குண்டு வச்சிக் கொல்லணும்னு ஒரு கும்பல் இங்க தேடிக்கிட்டு இருக்கு.

பில்லா 2 படத்தின் முன்பதிவு செய்திகளை பார்த்து விஜய் ரசிகனான நம்ம நண்பர் ஒருவர் காண்டாகி கடுப்பில் இருந்தார். திங்கள்கிழமையன்று அம்பத்தூர் ராக்கி தியேட்டரும் முருகன் தியேட்டரும் காலியாக இருப்பதை பார்த்து நண்பர் சரக்கடித்து கொண்டாடினார். நமக்கும் கட்டிங் கிடைத்தது என்பது வேறு விஷயம்.

-----------------------------------

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா

---------------------------------------------

நான் பெரிய அளவில் எழுதும் பதிவர் எல்லாம் கிடையாது. இலக்கியத்தரத்துடன் எழுதவும் வராது. நான் எழுதுவது என்பது என்னைப் பொறுத்த வரையில் என் நண்பர்களுடன் உரையாடுவது போல. என் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன் எழுத்தின் மூலம் அவ்வளவு தான். ஆனாலும் சில சமயம் நமக்கு கிடைக்கும் பாராட்டுகள் நம்மை சற்று உயரத்தூக்கிச் செல்லும் பாருங்கள். அந்த சுகத்துக்காகவே இன்னும் நன்றாக எழுதலாம் என்று தோணும்.

நேற்று வேலையில் பரபரப்பாக இருக்கும் போது மதுரையிலிருந்து சிவக்குமார் என்பவர் போன் செய்தார். தோத்தவன்டா வலைத்தளத்தின் வாசகர் என்றும் என்னுடன் பேச வேண்டும் என்றும் கூறினார். நான் தயங்கிக் கொண்டே 12 மணிக்கு பிறகு பேச முடியுமா, நான் பணியில் இருக்கிறேன் என்றும் கேட்டேன். சரி என்று சொல்லி விட்டு வைத்து விட்டார்.

மீண்டும் சரியாக 12.10க்கு போன் செய்தார். நமது தோத்தவன்டா வலைத்தளத்தை ஆரம்பகாலங்களில் இருந்து வாசிப்பதாகவும், இன்னும் பல பாராட்டுகளை சொல்லி விட்டு என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்றும் சென்னை வந்தால் சந்திக்க முடியுமா என்றும் கேட்டார். வந்து போன் செய்யுங்கள், நான் வந்து பார்க்கிறேன் என்றும் சொன்னேன். ஆனால் அதற்கு அவர் நான் தான் உங்களை சந்திக்க விரும்புகிறேன், அதனால் நான் வந்து பார்ப்பது தான் முறை என்று சொன்னார். நன்றி சிவக்குமார். இது போன்று எப்பவாவது கிடைக்கும் பாராட்டுகள் தான் என்னை சந்தோஷப்படுத்துகிறது.

-------------------------------------


ஒரிஜினல் தமிழினத் தலைவன்


-------------------------------------------

எனக்கு ஒரு பதிவுலக நண்பர் இருக்கிறார். என்ஊர்காரரோ அல்லது உறவினரோ கிடையாது. நாங்கள் தினமும் பேசிக் கொள்வதும் கிடையாது. என் வலைப்பக்கத்தில் அவர் வழக்கமாக பின்னூட்டமிடுவது கிடையாது. நான் அவர் வலைப்பக்கத்துக்கு செல்வதே கிடையாது. ஆனால் நாங்கள் மிக நெருங்கிய நண்பர்கள். எப்பொழுது நேரில் பார்த்தாலும் அன்பு உடனடியாக பூக்கும் இளகிய மனமுடையவர் அவர்.

நான் நேரில் வருகிறேன் என்றால் அதற்காக கருவாடு சமைத்து எடுத்து வந்து ஊட்டி விடும் வெள்ளந்தி மனதுக்காரர் அவர். மாதம் ஒரு பதிவு மட்டுமே போடும் அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தால் அனைத்து பதிவர்களும் சகலநாடியும் அடங்கிப் போய் பேசுவார்கள்.

இத்தனை அருமைக்கும் பெருமைக்கும் உரிய நண்பர் யார் தெரியுமா?

அண்ணன் யார் தெரியுமா?

அவர் தான்

அவர் தான் நாய் நக்ஸ் நக்கீரன்.


ஆரூர் மூனா செந்தில்


15 comments:

 1. அண்ணே...ஏண்ணே....
  இப்படில்லாமா விளம்பரம் தேடிக்கிறது...??????????

  ReplyDelete
  Replies
  1. ஏண்ணே விளம்பரம் உனக்குத்தான அண்ணே

   Delete
 2. ஏனுங்க செந்திலு உங்க பிளாக்குக்கு திருஸ்டி பட்டிருச்சா....? பதிவு கடைசியில பூசணிக்காய் மாட்டியிருக்கீங்க......

  ReplyDelete
  Replies
  1. தலைவரை கிண்டலடித்த உம்மை எச்சரிக்கிறேன். நாங்கள் நாய் நக்ஸின் பாசறை என்பதை நினைவில் கொள்ளும்.

   Delete
  2. டாஸ்மாக்க்கு பூட்டு போடும் போராட்டத்துக்கு எதிரா நக்ஸ் போராட்டம் நடத்த போகிராராமே உண்மையா ?

   Delete
  3. சத்தியமான உண்மை ராஜா

   Delete
 3. நக்ஸ் போட்டோ பார்த்து என் மகன் பயந்து விட்டான் ...

  ReplyDelete
  Replies
  1. பையனுக்கு வேப்பிலை அடிச்சி விபூதி பூசி விடுங்க ராஜா

   Delete
 4. பதிவு ஏன் போடவில்லை என கேள்விக் கேட்ட வாசாரையே பதிவாக்கிவிட்டீர் பிரமாதம். ஆனால் நாய்நக்ஸ் பிரதரை ஏன் மாட்டிவிட்டீர்

  ReplyDelete
  Replies
  1. அசோக்கு, பதிவு என்பதே நம்முடைய அனுபவப் பகிர்வு தானே. நாய் நக்ஸ் நம்ம செல்லம். என்ன வேணாலும் செஞ்சிக்கலாம்.

   Delete
 5. பில்லா அந்த அளவுக்கு வொர்த் இல்லை தல... ஒரு ஈ நின்னு விளையாடுது.. நிறையப்பேரு சொன்ன மாதிரி தலைக்கு ஈ செம ஃபைட் கொடுக்குது போல

  ReplyDelete
  Replies
  1. தல அஜித் எப்பொழுதும் விட்டுக்கொடுத்து போகும் மன பக்குவம் உள்ளவர். கவிதை காதலன் ஏன் இதை புரிந்துக்கொள்ளவில்லை

   Delete
 6. சிறப்பான அனுபவ பகிர்வு!

  ReplyDelete
 7. தலைவர் படம் கலக்கல்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...