சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, March 26, 2013

ஒரு ரகசிய காதல் திருமணம்

மூன்று வாரங்களுக்கு முன்பு ஒரு வியாழன் இரவு என் நெருங்கிய நண்பன் ஒருவன் தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து போனில் அழைத்தான்.

"உன்னை பெரிய மனுசனாக்கப் போறேன். உனக்கு விருப்பமா "

"ஏண்டா நான் நல்லாத்தானே இருக்கேன். புதுசா என்ன பெரிய மனுசனாகனும்"

"ஒரு கல்யாணத்தை ரகசியமாக செய்து வைக்கணும்"

"ஏண்டா பிரச்சனையாகுமா யாரு  பையன், யாரு பொண்ணு"

"அதை அப்புறம் சொல்கிறேன் உன்னால் செய்து வைக்க முடியுமா"

"சரி செய்து வைக்கிறேன் யாரென்று விவரம் சொல்"

"என் தம்பியும் அவன் காதலியும் ஊரிலிருந்து ரயிலில் கிளம்பி விட்டார்கள், நாளை காலை சென்னையில் வந்து இறங்குவார்கள் எப்படியாவது அவர்களுக்கு கோயிலில் திருமணமும் அதனை பதிவு செய்தும் தர வேண்டும்"

"சரி, செய்து வைக்கிறேன்" என்று ஒப்புக்கொண்டேன்.


நமக்கு இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் முன்அனுபவம் உண்டு. எனது இரண்டு நண்பர்களுக்கு இது போல் செய்து வைத்திருக்கிறேன். அதனால் தான் தைரியமாக ஒப்புக் கொண்டேன்.

இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. ஏனென்றால் பொண்ணும் பையனும் ஒரே சாதியில் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள். அதுவும் வம்பு சண்டைக்கு பெயர்பெற்ற சமூகம். ஏதாவது வில்லங்கமென்றால் நம்மை நையப்புடைத்து விடுவார்கள் எனவே ஜாக்கிரதையாக செய்ய வேண்டுமென்று நினைத்தேன்.

உடனடியாக என் நண்பன் ஒருவனுக்கு போன் செய்தேன், அவன் மூலக்கடையில் இருந்தான். அவன் மனைவியும் என் வகுப்புத் தோழி தான். என் வீட்டில் தங்க வைத்தால் எப்படியும் ஆள் பிடித்து வந்து விடுவார்கள். எனவே அவர்கள் வீட்டில் தங்க வைக்க திட்டமிட்டு கேட்டேன். அவர்களும் ஒத்துக் கொண்டார்கள்.


பொழுது விடிந்தது. மறுநாள் வீட்டுக்கு வந்தவர்களை அப்படியே ஆட்டோவில் அழைத்துக் கொண்டு மூலக்கடையில் நண்பன் வீட்டில் தங்க வைத்து விட்டு நான் வேலைக்கு சென்று விட்டேன். காலையில் போன் செய்து அம்பத்தூரில் உள்ள நண்பனிடம் பதிவு திருமணத்திற்கு விவரங்கள் சேகரிக்க சொன்னேன்.

ஏரியாவில் உள்ள கோயிலில் நான் திருமணம் செய்து வைக்க நடைமுறைகளை விசாரித்தேன். பல கோயில்களில் பயந்து பின்வாங்கினார்கள். அவர்களின் பிரச்சனை வேறு. உயரதிகாரிகள் கட்டுப்பாட்டால் திருமணத்தினை நடத்தி வைக்க பயந்தார்கள்.

ஆனால் என் சக ஊழியர் ஒருவர் உதவிக்கு வந்தார். அவருக்கு தெரிந்த கோயிலில் செய்து வைக்க அனுமதி வாங்கித் தந்தார். இவர்கள் இருவரும் வரும்போதே மிகவும் திட்டமிட்டு அனைத்து சர்டிபிகேட்கள், ரேசன் கார்டு நகல்கள் அனைத்தையும் எடுத்து வந்திருந்தனர்.


ஞாயிறன்று திருமணம் கோயிலில் செய்து வைக்கவும், திங்களன்று பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யவும் முடிவானது. அம்பத்தூரில் ஒரு வழக்கறிஞரை பிடித்து அவரிடம் டாக்குமெண்ட்கள் கொடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகளை செய்தோம்.

மாலை நான்கு மணிக்கு கோயிலில் திருமணம் என முடிவாகி சனியன்று அனைவரும் பர்சேசிங் சென்று தங்கத்தில் தாலி, புதுத்துணிகள், மற்ற பொருட்கள் வாங்கி வந்து வைத்து விட்டோம்.

எல்லாம் சரியாத்தான் சென்று கொண்டிருந்தது ஞாயிறு விடியும் வரை. திருமணத்திற்கு ஏற்பாடு செய்தவர் ஒரு தண்ணி வண்டி. அவரை சரக்கில் முழுக வைத்து கொண்டே இருந்தால் தான் வேலை நடக்கும். எனவே வீட்டம்மாவிடம் அன்று மட்டும் தண்ணியடிக்க சிறப்பு அனுமதி வாங்கினேன் (எல்லாம் காலக் கொடுமை).

ஞாயிறு விடிந்ததும் அவருடன் சென்று நானும் மிலிட்டரி சரக்கு வாங்கி வந்து குடிக்க ஆரம்பித்தோம். அது மதியம் வரை சென்று ஏழரையை கூட்டி விட்டது. எல்லோரும் கோயிலில் காத்திருக்க அழைத்து சென்றவரோ ஒயின்ஷாப்பில் மட்டையாகி கிடந்தார்.மணி அப்போது மூன்று.

நாங்கள் இவரை எழுப்பி நாலு மணிக்குள் கோயிலுக்குள் அழைத்து சென்றால் தான் நேரத்திற்கு திருமணத்தை நடத்த முடியும். ஒரு ஆட்டோவை பிடித்து நண்பனின் ரூமுக்கு அழைத்து சென்று குளிப்பாட்டி மோர் கொடுத்து காத்திருந்தால் மனிதருக்கு தெளியவே இல்லை.

நேரம் சென்று கொண்டிருந்தது. இனி காத்திருக்க முடியாமல் அவரது கையை வாய்க்குள் விட்டு வாந்தியெடுக்க வைத்து முடிந்த வரை கன்னத்தில் அடித்து எழுப்பினால் லைட்டாக கண்ணை திறந்தார். மணி நான்கு. நாலரைக்கு ராகுகாலம் வந்து விடும் என அடித்து பிடித்து அவருக்கு வேறு சட்டை மாட்டி அழைத்து சென்றால் வண்டியில் பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டது.

அதன் பிறகு வண்டியை பிருந்தா தியேட்டரின் அருகில் நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து கோயிலுக்குள் நுழைந்தால் மணி 4.20 மந்திரங்கள் சொல்லி தாலி கட்டும் போது மணி 4.27. எனக்கு மட்டும் ஏண்டா இப்படியாகுது என்று கடுப்பாகி விட்டது.

மறுநாள் காலையே விடுமுறை எடுத்துக் கொண்டு அம்பத்தூர் சென்று பதிவு திருமணத்திற்குரிய சான்றிதழ்களை கொடுத்து காத்திருந்தோம். எப்படியும் பதிவு செய்வதற்கு முன்பு நாடோடிகள் படத்தில் வருவது போல் யாராவது வருவார்கள்.

நாம் தான் திருமணத்தை முடித்து வைத்து ஓடிச் சென்று( நான் ஓடிச் சென்றா வெளங்கிடும்) இவர்களை ரகசிய இடத்திற்கு வழியனுப்பி வைக்க வேண்டும், உடலில் எங்கயாவது அருவா வெட்டு விழும் என்று காத்திருந்தால் அப்படியெல்லாம் ஒன்றுமே நடக்கவில்லை.

திருமணத்தை பதிவு செய்து புதுமண ஜோடிகளை ஊருக்கு அனுப்பி வைத்தேன். அங்கு கூட எதிர்ப்புகள் தணிந்து போய் இவர்களை ஏற்றுக் கொண்டு விட்டார்கள். சினிமாவில் நடப்பது போல் நிஜவாழ்வில் நடக்காது போல. என் எதிர்பார்ப்பு தான் புஸ்ஸாகி விட்டது.

ஆரூர் மூனா செந்தில்

Monday, March 25, 2013

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

டிகிரி முடித்தவர்கள் Hotelல்  Supervisor வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


------------------------------------------------------

B.Sc Catering முடித்தவர்கள் Hotelல்  Cook வேலைக்கு தேவை.

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

DHMCT மற்றும் B.Sc (Catering) முடித்தவர்கள் Hotelல்  சர்வர் வேலைக்கு தேவை.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

12 மணிநேரம் வேலை

உடனடி தேவை.

-------------------------------------------------

கல்வித்தகுதி தேவையில்லை

ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் வேலைக்கு ஆள் தேவை

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் ஒரு நாளைக்கு 18 சிங்கப்பூர் டாலர் (8 மணிநேர வேலை)

தினம் 4 மணிநேரம் OT உண்டு

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல்  Sales Man வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, March 22, 2013

பஞ்சேந்திரியா - பதிவெழுதாத பதிவர்களும் எண்டே கேரளமும்

பதிவர்களுக்கு பதிவெழுதாமல் இருப்பது தான் பேஷன் என்று ஆகிவிட்டது. ஆரம்பத்தில் சுறுசுறுவென பதிவுகள் எழுதுவது, பிறகு நட்பு வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு பேஸ்புக்கிலும் கூகிள்பிளஸ்ஸிலும் கூடி கும்மியடிப்பது என வழக்கப்படுத்திக் கொண்டனர்.

படிப்பதை ஆதர்சமாக கொண்ட எனக்கு படிப்பதற்கு பதிவுகள் இல்லாமல் கடுப்படிக்கிறது, அதனால் தான் வேறுவழியில்லாமல் நானே பதிவு எழுதி உங்களை படிக்க வைத்து கொலையாய் கொன்று வருகிறேன். எனவே எழுதுவதை விட்ட நண்பர்கள் மீண்டும் ஒழுங்காக வந்து பதிவெழுதும்படி கேட்டுக் கொள்கிறேன். இல்லையென்றால் இன்னும் பல மொக்கைப் பதிவுகள் உங்களை வந்து அடையும் என்று எச்சரிக்கிறேன்.

கடந்த ஒரு மாதமாக பதிவெழுதுவதை குறைத்துக் கொண்ட மெட்ராஸ் பவன் சிவக்குமார், நல்லவரா கெட்டவரா என்று இன்று வரை எங்களால் யூகிக்க முடியாத கேஆர்பி செந்தில் அண்ணன், ஒரு வருடமாகவே குறைவான அளவில் எழுதும் வீடு சுரேஷ்,

மொக்கையாக எழுதி உயிரை வாங்கினாலும் அதைக்கூட எழுதாத நாய் நக்ஸ் நக்கீரன் மற்றும் பட்டிக்காட்டான் ஜெய், அரசியல் வரலாற்று பதிவுகளை எழுதும் திறமை கொண்ட செல்வின், படிக்கும் போதே குலுங்கி சிரிக்க வைக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,

நிரூபன், அவ்வப்போது வந்து காணாமல் போகும் மாத்தியோசி மணி, வேடந்தாங்கல் கருண், சிறுகதை சிற்பி மதுரை மணிவண்ணன், திருப்பூர் இரவுவானம் சுரேஷ், தமிழ்வாசி பிரகாஷ், புதுச்சேரி கோகுல் இன்னும் பலர் சட்டென நினைவில் வரவில்லை. ஒழுங்காக வந்து வாரம் இரண்டு பதிவுகளையாவது எழுதி இந்த ரசிகரை உய்விக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

யோவ் சீக்கிரம் எழுத வாங்கய்யா.

----------------------------------------------------

எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு சாதாரணமா சொல்லிப்புட்டானுங்க

-----------------------------------------------

இன்று ஒரு வேலையாக வீட்டம்மாவுடன் வெளியில் சென்று விட்டு சாப்பிடுவதற்காக அண்ணா நகரில் இருக்கும் எண்டே கேரளம் என்ற உணவகத்திற்கு சென்றோம். நீண்ட நாட்களுக்கு பிறகு கேரள உணவை ருசி பார்க்கப் போகிறோம் என்று நாக்கு சப்புக் கொண்டி உள்ளே சென்றேன்.

ஒரு அசைவ சாப்பாடும் நெய்மீன் பொலிச்சதுவும் எனக்கு ஆர்டர் செய்தேன். வீட்டம்மா கோதுமை பரோட்டாவும் பீஸ் மசாலாவும் ஆர்டர் செய்தார். முதலில் வந்த நன்னாரி சர்பத் ருசி கூட்டியது கூடவே பசியையும்.

அசைவ சாப்பாட்டில் திருவனந்தபுரம் ஸ்டைல் ப்ரைடு சிக்கன், முட்டை ரோஸ்ட், தலச்சேரி மீன் கறி, அவியல், தோரன், கூட்டுக்கறி, சாம்பார், ரசம், தயிர், பப்படம், பரோட்டா, இடியாப்பம், சிவப்பரிசி, சோறு, பால்பாயசம், பயறுபாயாசம் ஆகியவை அடங்கியிருந்தன.

தட்டில் அனைத்தும் ஒரு சேர பார்த்ததும் கண்முழி டொய்ங் என்று வெளியில் வந்து விழுந்தது. பரோட்டாவில் ஆரம்பித்து ஒவ்வொன்றையும் ருசி பார்த்து முடிப்பதற்குள் வயிறு நிரம்பியிருந்தது. அதற்கு அப்புறம் தான் நெய்மீன் பொலிச்சது வந்து சேர்ந்தது.

கேரளாவில் நெய்மீன் சாப்பிடுவற்கு என்றே தினமும் 15 கிலோமீட்டர் பயணம் செய்து திருவனந்தபுரம் பத்மநாபா தியேட்டர் பின்புறமுள்ள ஒரு சிறு கடைக்கு செல்வேன். அந்தளவுக்கு நெய்மீன் அங்கு சுவையாக இருக்கும்.

ஆனால் இங்கு நெய் மீன் என்ற பெயரில் வஞ்சிரம் மீனை வைத்து பொலிச்சதுவை தீய்த்து விட்டு இருந்தனர். மீன் குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பு வாங்கி ப்ரீஸ் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். நல்லாவேயில்லை. கேரள பப்படத்தின் சுவையே தேங்காய் எண்ணெயில் பொரித்தால் தான் வரும். இங்கு ரீபைண்ட் ஆயிலில் பொரித்து இருக்கின்றனர்.

இந்த குறையை தவிர சாப்பாடு சூப்பர் சுவை. ஒரு முறை டிபிக்கல் கேரள சாப்பாட்டை ருசித்துப் பார்க்க செல்லலாம் தப்பேயில்லை. விலை தான் சற்று கூடுதல் ஒரு அசைவச் சாப்பாடு 395 ரூபாய். ஒரு மீன் பொலிச்சது 390 ரூபாய், கோதுமை பரோட்டா ஒன்று 45 ரூபாய்.

ஒரு வழியாக எல்லாத்தையும் முடித்து விட்டு வீட்டுக்கு வந்து ஆட்டை முழுங்கிய மலைப்பாம்பு போல் புரண்டு கொண்டு இருக்கிறேன்.

-----------------------------------------------------

இன்னைக்கு நைட்டு உனக்கு இருக்குடி கச்சேரி


-------------------------------------------------------

பொதுவாக எந்த ஒரு முக்கியப் படத்தையும் முதல் நாள் பார்ப்பதே வழக்கமாக வைத்திருப்பேன். ஆனால் இந்தப் படத்தை எப்படித் தவற விட்டேன் என்று தான் தெரியவில்லை. திரையரங்கிலும் பார்க்கவில்லை, டிவியில் போட்டும் பார்க்கவில்லை.

நேற்று முன்தினம் லோக்கல் சானலில் இரவு பத்துமணிக்கு போட்டிருந்தார்கள். அதிலும் அந்த அஜித் வரும் காட்சியில் இருந்து தான் பார்க்க ஆரம்பித்தேன். படம் முடிந்து அரைமணிநேரம் என்னை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தது இங்கிலீஷ் விங்கிலீஷ்.

என்னா பெர்பார்மன்ஸ் ஸ்ரீதேவியிடம் அப்பப்பப்பா, வீ மிஸ் யூ ஸ்ரீதேவி. ஒவ்வொரு காட்சியிலும், ப்ரேமிலும் என்னை கவர்ந்து விட்டார். இன்றைய ப்ராம்ப்ட் நடிகைகள் இயல்பான நடிப்புக்கு பாடம் கற்றுக் கொள்ளலாம் இவரிடம்.

தயக்கத்துடன் ஆங்கில வகுப்புக்கு போன் செய்யும் போதும், தயக்கத்துடன் அந்த ஆங்கில கல்வி நிறுவனத்துடன் நுழைந்து தயங்கித் தயங்கி ஷஷி என்று சொல்லும் போதும், ஏன் இந்தியாவை த இந்தியா என்று சொல்லக்கூடாது ஏன் யுஎஸ்ஏவை த யுஎஸ்ஏ என்று சொல்கிறோம் என்று கேட்கும் போதும், தலைவலி என்று வீட்டில் பொய் சொல்லிவிட்டு வகுப்புக்கு சென்று வந்து இழுத்துப் போர்த்தி நடிக்கும் போதும், கணவரிடம் கால் வலிக்கிறது என்று பொய் சொல்லி வகுப்புக்கு செல்லும் போதும், இறுதியில் திருமணத்தைப் பற்றி பட்லர் இங்கிலீஷில் பேசும் போதும், கணவனுக்கு மட்டும் இரண்டு லட்டு வைத்து ப்ரியத்தை வெளிப்படுத்தும் போதும் ஸ்ரீதேவி ஸ்ரீதேவி தான்.

படம் முழுவதுமே என்னை ஆக்ரமித்து இருக்கிறது. எந்த காட்சியை விடுத்து எந்த காட்சியை சொல்ல மக்களே தவற விடாதீர்கள். சூப்பரான பீல்குட் மூவி. எந்த மொழியில் டிவிடி கிடைத்தாலும் வாங்கிப் பார்த்து விடுங்கள்.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, March 21, 2013

மாமா பொண்ணுங்க எல்லாம் தேவதைகளே.

2003ல் நண்பன் சாம்பு சுமதியை அழைத்துக் கொண்டு சென்னையில் நான் இருந்த பேச்சுலர் ரூமுக்கு வந்தான். சாம்பு எனது பள்ளிக்கால நண்பன். சுமதி அவன் மாமன் மகள். எனக்கு கூட பள்ளிக் காலத்திலிருந்தே தோழி தான்.


சிறுவயதில் எப்பொழுதும் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்த இருவரும் காதலித்து அந்தஸ்து பேதம் காரணமாக ஊரை விட்டு ஓடி வந்தது எனக்கு பெரும் ஆச்சரியம் தான். அம்பத்தூர் பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து வைத்தேன்.

ஊருக்கு திரும்பி சொந்தமாக ஜெராக்ஸ் கடை வைத்தவன் இன்று பிளக்ஸ் கடை, ரீசார்ஜ் கடை என ஏகத்துக்கும் வளர்ந்து விட்டான். ஆனால் பயந்தாங்கொள்ளியான அவன் தைரியமாக ஊரை விட்டு ஒடி வந்தது பற்றி ஒரு போதைப்பின்னரவில் கேட்ட போது சொன்னான் "என் மாமா பொண்ணு தேவதைடா".


இது சாம்புவுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உண்டு. பால்ய வயதில் ஒரு பெண்ணை கிளர்ச்சி காரணமாக சைட் அடிப்பதற்கும் பிறந்த காலத்திலிருந்து ஆண் பெண் வித்தியாச மில்லாமல் விளையாடி சண்டை போட்டு பிறகு கிண்டல் பேச்சை மட்டும் வளர்த்து பதிண்வயதில் சைட் அடிக்கும் போது கிடைக்கும் இன்பமே அலாதி தான்.

எனக்கு பாமா என்றொரு மாமன் மகள் இருந்தாள். கிராமத்தில் இருந்த அவள் வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் போது எல்லாம் அவளுடன் தான் விளையாடுவேன். நொண்டி ஆட்டம், கண்ணாமூச்சி முதல் விவரம் அறியா அப்பா அம்மா விளையாட்டு வரை.

அந்த வயதிலும் எனக்கு அவளைப் பற்றி தான் கனவு வரும். எங்கு சென்றாலும் நாங்கள் ஒன்றாகவே சுற்றித் திரிந்தோம். திடீரென ஒரு நாள் மாமாவுக்கு அத்தைக்கும் சண்டை வந்து அத்தை குழந்தைகளை தூக்கிக் கொண்டு அவரது அம்மா வீ்ட்டிற்கு சென்று விட்டது.


பல நாட்கள் அவளது நினைவு வந்து நாள் செல்ல செல்ல அவளது நினைவே மறந்து விட்டது. 20 வருடம் கழித்து என் வீட்டு பாட்டி இறந்த போது சாவு வீட்டிற்கு வந்திருந்தாள் தன் குழந்தையை தூக்கிக் கொண்டு. அவளது தாய் மாமனுக்கே திருமணம் செய்து வைத்து விட்டார்களாம். வருத்தத்தில் இரண்டு நாட்கள் குடித்துக் கொண்டே இருந்தேன்.

எனக்கு பெரிய மாமன் மகள் ஒருத்தி இருந்தாள். என்னை விட 8 வயது பெரியவள். அவளுக்கு அம்மா கிடையாது. என் வீடு இருந்த தெருவிலேயே அவர்கள் வீடும் இருந்தது. என் அம்மாவுடன் அரட்டை அடித்துக் கொண்டு எப்பொழுதும் எங்கள் வீட்டிலேயே இருப்பாள். நாள் பள்ளிக்கு சென்று வந்தால் என்னை வம்பிழுப்பது மட்டுமே அவளது வேலை.


எனக்கு பத்து வயது இருக்கும் போது தான் எங்கள் வீட்டில் கேரம் போர்டு விளையாடுவோம். அதை விளையாடவென்றே ஒரு கூட்டம் எங்கள் வீட்டில் ஜெ ஜெ வென்று இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் நாளும் அவளும் மட்டுமே நிரந்தரமாக இருப்போம், மற்றவர்கள் மட்டும் சுழற்சி முறையில்.

அவள் விளையாடுவது பார்க்கவே அவ்வளவு அருமையாக இருக்கும். ஆள்காட்டி விரலை கட்டை விரலால் பிடித்துக் கொண்டு மூன்று விரல்களையும் தூக்கிக் அடிப்பதை பார்க்கவே அவ்வளவு ஆசையாக இருக்கும். ஆனால் அதற்கு மேல் எனக்கு விவரம் தெரியாது.

ஒரு நாள் அம்மாவுடன் அவள் பேசிக் கொண்டு பயிறு உடைத்துக் கொண்டு இருக்கும் போது அம்மா பசிக்கிறது என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த போது என்னை கட்டிக் கொண்டு "என்னைக் கல்யாணம் பண்ணிக்கோடா நான் உனக்கு சமைத்துப் போட்டுக் கொண்டே இருப்பேன்" என்றாள். எனக்கு அம்மா கொண்டு வந்த சாப்பாடு முக்கியமாக இருந்ததால் போடி என்று திட்டி விட்டு வந்து விட்டேன்.

சில வருடங்களுக்கு பிறகு அவளுக்கு ஒரு அமெரிக்க மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயமானது. திருமணத்திற்கு பிறகு சமைக்க வேண்டியிருக்கும் என என் அம்மாவிடம் சமையல் கற்று வந்தாள்.

ஒரு நாள் என் அம்மாவிடம் ஏன் அத்தை எனக்கு முன்பே செந்திலை பெத்திருந்தால் நான் கல்யாணம் பண்ணிக் கொண்டு உங்களுடனே இருந்திருப்பேனே என்று கிண்டல் செய்யவும் என் அம்மா போடி குந்தாணி என்று கிண்டல் செய்தார்கள். எனக்கு 12 வயது என்பதால் நடந்தது புரிந்ததும் புரியாதுமாகவே இருந்தது.

திருமணம் முடிந்த அன்று என் வீட்டுக்கு வந்து எங்கள் வீட்டு பூஜையறையில் தம்பதி சகிதம் விழுந்து வணங்கினார்கள். நான் கொல்லைப்புறத்தில் நண்பர்களுடன் கபடி விளையாடிக் கொண்டு இருந்தேன். அனைவரும் சாப்பிட்டு விட்டு தாம்பூலம் போட்டுக் கொண்டு இருந்த போது பூஜையறையில் உள்ள ஒரு பொருளை எடுக்க வேண்டி என்னை அழைத்தாள் அவள்.

விளையாடிக் கொண்டு இருந்த நானும் பூஜையறையில் உள்ள பொருளை எடுப்பதற்காக உள்ளே வந்தேன். யாருமில்லாத அந்த சமயம் அலமாரியில் பின்னே அழைத்துச் சென்று என்னை கட்டிப் பிடித்து அழுது விட்டு நீ எனக்கு முன்பு பிறந்து என்னை கல்யாணம் செய்து கொண்டிருக்கலாமே என்று சொல்லி விட்டு கன்னத்தில் முத்தமிட்டு சென்று விட்டாள்.

எனக்கு அப்பொழுது ஒன்றுமே புரியவில்லை. சற்று நேரம் அவள் அழுததற்காக மட்டும் வருந்தி விட்டு கபடி விளையாட சென்று விட்டேன். நாட்கள் செல்லச் செல்ல தான் அவளின் உணர்வுகள் எனக்கு புரியவந்தது. அவளுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றக் கூட விவரமில்லையே என்று எனக்குள் கோவம் ரொம்ப வருடங்களுக்கு கனன்று கொண்டிருந்தது.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து தான் எனக்கு இன்னொரு விஷயம் புரிந்தது. அவளுக்கு அந்த எண்ணம் ஏற்பட காரணம் நான் மட்டுமல்ல. தாயில்லாத அவள் வாழ தேடிய வீட்டில் தேடியது என் தாயைப் போல இன்னொருவரும் கூட என்று.

இன்று எங்கோ கண்காணாத தேசத்தில் இருக்கும் அவள் மீது இன்று கூட எனக்கு காதல் உண்டு. அது மனம் சார்ந்தது. இன்று கூட உரக்கச் சொல்வேன் எல்லாருக்கும் மாமன் பொண்ணுங்க தேவதைகள் தான்.

 ஆரூர் மூனா செந்தில்

Wednesday, March 20, 2013

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


டிகிரி முடித்தவர்கள் Hotelல்  Dish Washer வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1000 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

12 மணிநேரம் வேலை

உடனடி தேவை.

-------------------------------------------------

B.Sc Catering முடித்தவர்கள் Hotelல்  Cook வேலைக்கு தேவை.

சம்பளம் 1900 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

DHMCT மற்றும் B.Sc (Catering) முடித்தவர்கள் Hotelல்  Cook மற்றும் சர்வர் வேலைக்கு தேவை.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

12 மணிநேரம் வேலை

உடனடி தேவை.

-------------------------------------------------

கல்வித்தகுதி தேவையில்லை

ஒரு தனியார் நிறுவனத்தில் பெயிண்டர் வேலைக்கு ஆள் தேவை

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் ஒரு நாளைக்கு 18 சிங்கப்பூர் டாலர் (8 மணிநேர வேலை)

தினம் 4 மணிநேரம் OT உண்டு

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல்  Sales Man வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Tuesday, March 19, 2013

எனக்கு சனியன்று வாயில சனி

மூன்று நாட்களாக திருவாரூர் வாசம் செய்து இன்று தான் சென்னை திரும்பினேன். நான்கு நாட்களாக பதிவு எழுதாததால் இன்று எழுதலாம் என்று உட்கார்ந்தால் மனதில் எதுவுமே ஒடமாட்டேங்குது. எப்படிடா பதிவு தேத்துறது என்று மதியத்திலிருந்து யோசித்து உட்கார்ந்திருந்தேன்.


இதுக்கு மேலயும் உக்கார்ந்திருந்தா வேஸ்ட்டுனு தோணிச்சி. அதான் ஆரம்பிச்சிட்டேன். ஆனால் எப்படியும் சுவாரஸ்யமாக முடிப்பேன்னு மட்டும் நம்புறேன்.

சுற்றுலா பயணிக்கும் பிரயாணிக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. எதையும் திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணத்திற்கு தேவையான எல்லாப் பொருட்களோடு கிளம்புகிறவன் சுற்றுலா பயணி. எதையும் திட்டமிடாமல் அந்த நேரத்திற்கு உள்ள வாகனத்தில் ஏறி கிளம்புகிறவன் பிரயாணி.

இந்த சனிக்கிழமை கூட திருவாரூருக்கு கிளம்ப வேண்டியிருந்தது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்ஸில் ஏறி மாயவரத்தில் இறங்கி அங்கிருந்து பேருந்தில் ஊருக்கு செல்லலாம் என முடிவு செய்தேன். 4 மணி ரயிலுக்கு 3 மணிக்கு சென்றால் போதும் என முடிவு செய்து எழும்பூர் சென்றால் வண்டி ஏற்கனவே பிளாட்பாரத்தில் நின்றது. முன்பதிவில்லாத பெட்டி நிரம்பி வழிந்தது.


ஏறி நின்று விட்டேன். 6 மணிநேரம் தானே நின்றே சென்று விடலாம் என்று முடிவு செய்து ஓரு அழகான பெண் பார்வையில் படுமாறு நின்று கொண்டேன். மாயவரம் செல்லும் வரை பொழுது போக வேண்டுமே.

நேரம் ஆக ஆக கூட்டம் அம்ம ஆரம்பித்தது. வண்டி புறப்படும் போது ஒத்தைக்காலில் தான் நின்றிருந்தேன். எல்லாம் வேலை முடிந்து தாம்பரம், செங்கல்பட்டில் இறங்கும் கூட்டம். இதில் சில பசங்க குடித்து விட்டு வந்து கானா பாட்டு பாடி வந்தனர்.


செங்கல்பட்டு வரை பிதுக்கிய கூட்டம் ஓரளவு குறைந்தது. செங்கல்பட்டில் ஒரு செளராஷ்ட்ரா குடும்பம் ஏறியது. உள்ளே நுழைந்தவுடன் அந்த குடும்பத்து தலைவர் எல்லாரையும் இடித்து தள்ளி விட்டு சத்தம் போட்டுக் கொண்டே நுழைந்தார். பர்த்தில் படுத்திருந்தவர்களை எழுப்பி தன் மகன்களை ஒரு பர்த்திலும் ஏற்றி விட்டு தான் ஒரு பர்த்திலும் ஏறிக் கொண்டார்.


எனக்கோ நின்று நின்று கால் கடுக்க ஆரம்பித்தது. விழுப்புரம் வந்ததும் ஒரு டீயை அடித்து விட்டு கால் வலியோடு நின்றேன். மாயவரத்தில் இறங்கி பேருந்து பிடிப்பதெல்லாம் சாத்தியமில்லாதது என தெரிந்தது. எனவே வீட்டுக்கு போனடித்து காரை மாயவரத்திற்கு அனுப்ப சொன்னேன்.

அப்பொழுது ஒரு சிங்கிள் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு பாட்டி என்னைப் பார்த்து "தம்பி, நீ ரொம்ப நேரமா நின்னுகிட்டு வர்ற. நான் கடலூரில் இறங்கிவிடுவேன். என் சீட்டில் அமர்ந்து கொள்" என்றது.

எனக்குள் ஒரு நம்பிக்கை பிறந்தது. பாட்டியை எப்படியும் கவர் செய்து சீட்டை பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து "பாட்டி நீங்கள் கடலூரில் எங்கு செல்ல வேண்டும் கடலூர் ஓடியா அல்லது என்டியா" என்று கேட்டேன்.


எப்படியும் நான் விவரம் தெரிந்தவன் என்று பாட்டிக்கு புரிய வைத்து சீட்டை பெற வேண்டி விளக்க ஆரம்பித்தேன். "கடலூர் ஓடி என்பது ஓல்டு டவுன் துறைமுகம் அருகில் வரும். என்டி என்றால் நியுடவுன் ஸ்டேசன் பெயர் திருப்பாதிரிப்புலியூரில் நிற்கும்" என்று அடித்து விட்டேன். பாட்டி "தம்பி நான் கடலூர் ஓடிக்கு செல்ல வேண்டும்" என்றது. "நான் சரியான ஸ்டேசன் பார்த்து இறக்கி விடுகிறேன்" என்று சொன்னேன்.

விழுப்புரத்திற்கு அடுத்ததாக திருப்பாதிரிபுலியூரில் தான் நிற்கும் என்று தெரிந்ததால் "அடுத்த ஸ்டேசன் தான் பாட்டி கடலூர் ஓடி" என்றேன். பாட்டி பெருந்தன்மையுடன் "ஒரு ஸ்டேசன் தானே நான் நின்று கொள்கிறேன், நீ ரொம்ப நேரமாக நிற்கிறாய் உட்கார்" என்று இருக்கையை விட்டு எழுந்தது.

நான் இருக்கையில் அமர்ந்து குனிந்து பார்த்தால் ஸ்டேசன் பெயர் நெல்லிக்குப்பம் என்று போட்டிருந்தது. முதல் பல்பு எனக்கு. பாட்டியிடம் "சாரி பாட்டி தவறுதலாக சொல்லி விட்டேன். இன்னும் ஒரு ஸ்டேசன் போக வேண்டும், அதுவரை உட்கார்ந்து கொள்ளுங்கள்" என்றதும் சிரித்து கொண்டிருந்த பாட்டி லைட்டாக முறைத்துக் கொண்டு "பரவாயில்லை நீ உட்காரு" என்றது.

அப்பாடா தப்பித்தேன் என்று உட்கார்ந்தேன். திருப்பாதிரிபுலியூர் வந்ததும் ரயிலில் இருந்து பலர் இறங்கினர். அப்போது கூட நான் பாட்டியிடம் "அடுத்த ஸ்டேசனில் நீங்க இறங்க வேண்டும்" என்றேன். மறுபடியும் பாட்டி சிரித்தது.

திருப்பாதிரிபுலியூரில் இருந்து வண்டி கிளம்பியதும் கதவருகே கூட்டத்துடன் நின்றிருந்த பாட்டி திரும்பி வந்து "வண்டி கடலூர் ஓடியில் நிற்காதாம்ல" என்றது. எனக்கு வயித்தை கலக்க ஆரம்பித்தது. நான் போனில் திருவாரூர் ஸ்டேசனில் தொடர்பு கொண்டு கேட்டால் ஆமாம் வண்டி இப்போதெல்லாம் கடலூர் ஓடியில் நிற்பதில்லை என்று தகவல் வந்தது.

மாட்னேண்டா என்று நினைத்து "பாட்டி சிதம்பரத்தில் தான் அடுத்தது வண்டி நிற்கும், அங்கிருந்து பேருந்து பிடித்து கடலூர் ஓடி செல்லலாம்" என்று சொன்னதும் என்னை கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தது.

மறுபடியும் இருக்கையை விட்டு எழுந்து நின்று கொண்டேன். இருக்கையில் அமர்ந்த பாட்டி என்னைப் பார்த்து திட்டிக் கொண்டே வந்தது. ரயிலில் இருந்த பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தனர். அவமானமாகிப் போய் அங்கிருந்து நகர்ந்து கக்கூஸின் அருகில் நின்றவாறே மாயவரம் வரை பயணித்தேன். எனக்கு அன்னைக்கு பார்த்து வாயில சனி போல, ஒரு வேளை ஒன்பதுல குரு பார்த்த எபெக்ட்டா இருக்குமோ.

 
ஆரூர் மூனா செந்தில்

Friday, March 15, 2013

பரதேசி - சினிமா விமர்சனம்

பாலா படங்களுக்கு என்று ஒரு பார்முலா இருக்கும். படத்தில் மிக முக்கியமான ஒருவர் இறந்து விடுவார். அதனால் கோவப்படும் மற்றொருவர் வில்லனை மிருகவதை சட்டத்தில் கைது செய்யலாம் என்று சொல்லும் அளவுக்கு அடித்து நொறுக்கி படத்தை முடித்து வைப்பார்.அவன் இவன் படம் பார்த்த போது பக் என்று இருந்தது, பாலா டொக்கு ஆயிட்ட மாதிரி இருந்தது.


ஆனால் என்னுடைய எல்லா நெகட்டிவ் எண்ணத்தையும் அடித்து நொறுக்கி மீண்டும் தான் ஒரு சிங்கம் என்பதை சந்தேகமில்லாமல் நிரூபித்து இருக்கிறார். மீண்டும் தைரியமாக சொல்வேன் நான் பாலாவின் ரசிகன் என்பதை.

பொதுவாக தமிழ்ப்படத்தின் இலக்கணம் என்ன? நல்லவனை கெட்டவன் கொடுமை செய்வான். கெட்டவனை வீழ்த்தி நல்லவன் நீதியை நிலைநாட்டுவான். பார்ப்பவனுக்கும் அப்பொழுது தான் ஒரு படம் பார்த்த திருப்தி இருக்கும். அந்த இலக்கணத்தை வீழ்த்தி இருக்கிறார் பாலா.

சந்தேகமில்லாமல் இது ஒரு ஆவணப்படம் தான். நூறு வருடங்களுக்கு முன்பு தமிழகம் குறிப்பாக தென் தமிழகம் எப்படி இருக்கும் என இந்த படத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த குடிசையில் பனைஓலை வேய்ந்திருப்பதில் கூட நேர்த்தி இருக்கிறது. இந்த கோயில் திருமண சடங்குகள், சாப்பாட்டு பந்தி என எல்லாமே நம்மை சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்திற்கு அழைத்து செல்கிறது.


படத்தின் கதையை தைரியமாக வெளியில் சொல்லலாம், இது சஸ்பென்ஸ் படமல்ல, தமிழனின் ஆவணப்படம்.

சாலூர் என்ற கிராமத்தில் படம் துவங்குகிறது. ஒட்டுபொறுக்கி என்று ஊரார்களால் அழைக்கப்படும் அதர்வா வெள்ளந்தியான பையன். ஊரில் வருமானமில்லாமல் தண்டோரா அதற்கு கூலியான அரிசி பிச்சை எடுத்து அதில் தன் பாட்டியுடன் வாழ்பவன். அவனை விரட்டி விரட்டி காதலிக்கும் அங்கம்மாவாக வேதிகா. ஒரு தனிமையில் சலனப்பட்டு ஒன்று சேர்கிறார்கள்.

அந்த ஊர்ப்பக்கம் வந்த கங்காணி ஒருவன் சாலூர் மக்களை எஸ்டேட் கூலி வேலைக்கு அதிக சம்பளம் கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி அழைத்து செல்கிறான்.வேதிகாவை திருமணம் செய்ய பணம் வேண்டி அதர்வாவும் பயணிக்கிறார். 48 நாட்களுக்கு மேல் நடந்தே எஸ்டேட்டை அடைகிறார்கள்.


அங்கு சென்ற பின்பு தான் அது கொத்தடிமை வேலை என்று தெரிகிறது. அங்கு கைக்குழந்தையுடன் இருக்கும் தன்ஷிகாவை சந்திக்கிறான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் ஏதாவது காரணம் சொல்லி கூலியாட்களை வெளியில் அனுப்ப மறுக்கிறான் கங்காணி.

ஊரில் அங்கம்மா கர்ப்பமாக இருப்பதை கடிதம் மூலம் அறியும் அதர்வா அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார். அவரைப்பிடிக்கும் கங்காணி அவரது பின்னங்கால் நரம்பை அறுத்து விடுகிறான்.

சில வருங்களுக்கு பிறகு அந்த பகுதியில் தொற்று வியாதி பரவி ஏராளமான மக்கள் இறக்கிறார். தன்ஷிகாவும் இறக்க அவரது மகளை தன்னுடன் வைத்துக் கொண்டு காப்பாற்றுகிறார்.


மேலும் பல வருடங்கள் கழிந்த பின்பு அதர்வாவைத் தேடி வேதிகாவும் கொத்தடிமையாக அந்த எஸ்டேட்டுக்கு வருகிறார். படம் முடிகிறது.

முதல் காட்சியில் வாயை ஒரு மாதிரி வைத்துக் கொண்டு சற்று குழப்பத் தமிழில் நியாயமாரே என்று கத்தும் போது நான் பயந்தேன். படம் முழுக்கவே இப்படித்தான் வாயை வைத்துக் கொண்டு பேசுவாரோ என்று. ஆனால் அதன் பிறகு அடிப்பொளி ஆக்கியிருக்கிறார் அதர்வா.

அப்பாவியாக சாப்பாட்டு பந்தியில் தனக்கு மட்டும் சாப்பாடு வைக்காத போது மருகி அழும் போதும், திருமணம் செய்யக் கூடாது என நடக்கும் பஞ்சாயத்தில் வேதிகாவுடன் கண்களால் பேசிக் கொண்டே வெட்கப்படும் போதும், க்ளைமாக்ஸ் காட்சியில் குன்றின் உச்சியில் நின்று கதறும் போதும் நல்ல நடிகராக மிளிர்கிறார்.

வேதிகாவா இது முனி படத்தில் பார்த்த போது வசனம் கூட சரியாக ப்ராம்ட் செய்யத் தெரியாமல் இருந்தார். இந்த படத்தில் அசத்தியிருக்கிறார். முகபாவனைகள் எனக்கு பிடித்திருந்தது.

தன்ஷிகா கதாபாத்திரம் இடைவேளைக்கு பின்பு தான் வருகிறது. ஆனாலும் படத்தின் சிறந்த நடிப்பில் முதல் வரிசையில் வருகிறார். அவருக்கு இயல்பாகவே சற்று முரட்டு குதிரை தோற்றம். அதற்கேற்ற கதாபாத்திரம் அமைந்ததால் இயல்பாகவே நடித்திருக்கிறார்.

கங்காணியாக வரும் ஜெர்ரி வில்லன் பாத்திரத்தை கண்முன் நிறுத்துகிறார்.

கிறிஸ்துவ மதம் எப்படி அப்பாவி மக்களிடம் பரவியது என்பது தெரியும் போது நம் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள் என்று எனக்குள் கோவம் பரவியது தான் அந்த காட்சிக்கான வெற்றி.

பாடல்கள் இதற்கு முன்பு கேட்டதேயில்லை, இப்போது படத்துடன் பார்க்கும் போது நன்றாக இருந்தது. கதையோட்டத்துடன் கூடிய மாண்டேஜ் பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது.

மக்களே தவற விடக்கூடாத படம் இது. தன் மீதான விமர்சனங்களையெல்லாம் உதறித் தள்ளி விட்டு தான் டொக்கு ஆகவில்லை என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படங்களுக்காக வரிசையில் இந்த படத்திற்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

இந்த படத்திற்கான வெற்றியே படம் முடிந்ததும் பார்வையாளர்களிடம் இருந்த மெளனம் தான். என்னால் இன்னும் சில நாட்களுக்கு படத்தை விட்டு வெளியில் வர முடியாது.

படம் பார்த்த ஒவ்வொருவருக்கும் தேநீர் அருந்தும் போது நம் முன்னோர்கள் இந்த தேயிலை தோட்டத்திற்காக சிந்திய ரத்தங்கள் நினைவுக்கு வரும்.

பாலா பாலா தான்.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, March 14, 2013

பிரபல பின்னூட்டப் புலி பதிவராவது எப்படி

புதிதாக பதிவு எழுத வந்திருக்கும் பதிவர்களுக்கு உபயோகமாக இருக்குமே என்று முதலில் பிரபல பதிவராவது எப்படி என்ற பதிவை நமது தோத்தவண்டா வலைத்தளத்தில் பார்த்திருப்பீர்கள்.


அதற்கு அடுத்த கட்டமாக இலக்கிய ஒளிவட்ட பதிவராவது எப்படி என்றும் பார்த்திருப்பீர்கள். இவற்றை பயன்படுத்தி தமிழின் முன்னணி பதிவராக உருவெடுத்திருக்கும் பதிவுலக நண்பர்களே அடுத்த கட்டமாக பின்னூட்ட புலியாவது எப்படி என்று இந்த கட்டுரையில் உங்களுக்கு விளக்குகிறேன்.

இதனை பயன்படுத்தி நீங்கள் புலி மட்டுமல்ல மாட்டும் எலிகளையும் அடித்து விளையாடலாம். இதற்கு நீங்கள் பார்க்கப் போவது முதல் பாடம். நாம் எல்லோருக்கும் போய் பின்னூட்டம் போடுவது பற்றி பிறகு பார்க்கலாம்.

நாம் என்று பதிவு எழுதுகிறோமோ அன்று யாரெல்லாம் பதிவு எழுதியிருக்கிறார்களோ அவர்களது பதிவில் போய் மொக்கையாக ஒரு பின்னூட்டம் இட வேண்டும். அடுத்த பின்னூட்டமாக இன்று என் வலையில் என்று போட்டு தங்களது பதிவை பகிர வேண்டும்.


இந்த கட்டத்தில் நாம் கொஞ்சம் உசாராக இருக்க வேண்டும். ஏனென்றால் இது கொஞ்ச காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். அதன்பிறகு மற்றவர்கள் கடுப்பாகி நம்மை திட்டி விட வாய்ப்புண்டு. அவர்கள் அந்த கட்டத்திற்கு வருவதை அறிந்தவுடன் நாம் அவர்களுக்கு இது போன்ற டெம்ப்ளேட் கமெண்ட் போடுவதை நிறுத்தி விட வேண்டும்.

அடுத்ததாக ஓட்டுக்கு பின்னூட்டம். ஒரு 10 பேரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். இவர்களுக்கான தகுதிகள் பதிவை ரசிக்கும்படி எழுதத் தெரியாமல் பிரபலப்படுத்த மட்டுமே தெரிந்தவர்கள். இதற்கு நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டியதில்லை. ஏதாவது ஒரு பதிவரை மட்டும் பிடித்தால் போதும் அவருக்கு வரும் பின்னூட்டத்தின் மூலமாகவே மற்ற பதிவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.


இந்த பத்து பேருடைய பதிவும் எப்படியும் சொல்லிக் கொள்வது போல் இருக்காது. ஆனாலும் டெம்ப்ளேட்டாக அருமை, அசத்தல், தொடருங்கள் நன்றி என்று கமெண்ட் போட வேண்டும். பிறகு அவர்களுக்கு ஒரு ஓட்டு போட்டு த.ம 4, கூ.பி 201 என்று பின்னூட்டத்தில் அறிவித்து விட வேண்டும்.

இவ்வாறு செய்தால் அவர்களுக்கு நீங்கள் பின்னூட்டமும் ஓட்டும் போட்டது தெரிந்து அவர்களும் இது போலவே உங்களுக்கும் ஓட்டு போடுவார்கள். நீங்கள் சற்று பிரபலமாவீர்கள். ஆனால் இதிலும் ஒரு பிரச்சனை சில நாட்களில் இந்த குழுவைத் தவிர மற்ற பதிவர்களுக்கு நீங்கள் ஜல்லியடிக்கும் பார்ட்டி என்று தெரிந்து விட வாய்ப்புண்டு. இருந்தாலும் அவற்றையெல்லாம் உதறி விட்டுக் கொண்டால் பின்னூட்ட புலி தான்.


மூன்றாவது பாடம் ஆங்கிலத்தில் பின்னூட்டமிடுவது இந்த வகைப் பதிவரின் பெயரை மட்டும் நான் தைரியமாக சொல்லலாம். நான் என்ன செய்தாலும் பொறுத்துக் கொள்ளும் நெருங்கிய நண்பர் அவர். இந்த கமெண்ட் மட்டும் அலை பேசியில் இருந்து போட வேண்டும்.

அவ்வளவு என்பதைக் கூட Avvvvvvvvvvalavvvvvvu என்று போட வேண்டும், படிக்கிறவன் டென்சனாக வேண்டும். இதை படிக்க முடியாமல் ஆக்ஸ்போர்ட் டிக்ஸ்னரியை தேடி ஓட வேண்டும். இதனால் உங்கள் பின்னூட்டத்தை பார்த்த பிறகு பதிவெழுதியவர் கதற வேண்டும்.

அடுத்த பாடம் வம்பிழுப்பது. இதற்கு முதல் வேலையாக அண்ணாச்சி கடைக்கு போய் விளக்கெண்ணெய் வாங்கி வர வேண்டும். கண்ணில் இரண்டு சொட்டு விட்டுக் கொண்டு பதிவினை படிக்க வேண்டும். ஒரு பிழை காண நேர்ந்தால் அதனை குறிப்பிட்டு கிண்டலாக பின்னூட்டமிட வேண்டும்.

அவருக்கு கோவம் வந்து விளக்கம் கொடுக்கும் போது ஹி ஹி என்று இளித்து விட்டு ஜகா வாங்கி விட வேண்டும். எழுத்துப்பிழைக்கு இதற்கு மேல் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.

இது கடைசி மற்றும் முக்கிய பாடம், பிரபல பதிவர்களை குறி வைக்க வேண்டும். அவர்கள் போடும் எல்லாப் பதிவுக்கும் கண்டனப் பின்னூட்டம் போட வேண்டும். சினிமா விமர்சனம் போட்டிருந்தால் அதில் போய் "உனக்கு படம் பார்க்கவே தெரியவில்லை, அட்டு விமர்சனம்" என்று போட வேண்டும்.

அவர்கள் கடுப்பாகி பதில் அளித்தால் மறுபடியும் கோவப்படுத்துவது போல் பதிலளிக்க வேண்டும். பிறகு அந்த பின்னூட்டத்தையெல்லாம் ஸ்கிரீன் ஷாட் எடுத்து நாம் ஒரு பதிவு போட்டு ஹிட்ஸ் தேத்த வேண்டும். சண்டை போட்டே பரபரப்பான பதிவர் ஆகி விடலாம்.ஆரூர் மூனா செந்தில்

Wednesday, March 13, 2013

ஹைய்யா நான் ஒல்லியாகப் போகிறேன்

பதிவு எழுத வந்த காலங்களில் இருந்து நான் பயன்படுத்தி வந்த யுனிகோட் ரைட்டர் திடீரென இயங்காமல் போகவே சில நாட்கள் பதிவு எழுத முடியாமல் தவித்தேன். பிறகு நிலைத்தகவலை பதிவிலும் முகநூலிலும் பகிர்ந்த பின்பு நண்பர்கள் பலரும் வந்து புதிய யுனிகோட் ரைட்டர் பற்றிய தகவலை பகிர்ந்து எனக்கு உதவினார்கள். அதன் மூலம் நான் சிற்சில தடுமாற்றங்களுடன் எழுதத் தொடங்கி இப்பொழுது பழகி விட்டது. உதவிய நண்பர்களுக்கு நன்றி.

-----------------------------------------

பிறந்ததிலிருந்தே குண்டாகவே இருந்து விட்டேன். அவ்வப்போது குண்டாக இருப்பது பற்றிய தாழ்வு மனப்பான்மை வந்து போகும். அப்படி வரும் சமயங்களில் விடியற்காலை எழுந்து திருவாரூர் கமலாலய குளத்தை நான்கு ரவுண்டு ஓடி வருவேன். பதினைந்து நாட்களில் ஆர்வம் குறைந்து விட்டு விடுவேன்.


திருமணத்திற்கு சில மாதம் முன்பு உடலை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக முடிவு செய்து அண்ணாநகரில் இருக்கும் தல்வாக்கர் ஜிம்மில் சேர்ந்தேன். அவர்கள் எந்த பகுதியில் எந்த அளவுக்கு குறைய வேண்டும் எவ்வளவு கிலோ குறைய வேண்டும் என்று கேட்டு உடற்பயிற்சி அட்டவணை போட்டுக் கொடுத்தார்கள். ஒரு வருட கட்டணம் 50,000 ரூபாய்.

அங்கு இருந்த டயடீசியன் என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு சார்ட் போட்டுக் கொடுத்தார். அவற்றினை பார்த்தால் ஒரு மனிதன் செய்யவே முடியாத அளவுக்கு ஒரு அட்டவணை. அதுவும் அந்த உணவுபொருட்களை செய்து கொடுப்பதற்கே ஒரு சமையற்காரர் வேண்டும். இத்தனைக்கும் நான் பாச்சிலர் ரூமில் தங்கியிருந்தேன்.

சார்ட்டை பார்த்தால் மயக்கமே வந்து விடும். காலையில் ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான குடிநீர் இரண்டு டம்ளர், ஜிம்முக்கு சென்று வந்த பிறகு ஒரு கப் ஓட்ஸ், அல்லது இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. தேங்காய் சட்னி கூடாது. பருப்பு கூடாது.


பதினொரு மணிக்கு மோர், மதிய சாப்பாடு ஒரு கப் சாதம், ஒரு கப் காய்கறிகள், நான்கு மணிக்கு நான்கு மேரி பிஸ்கட்டுடன் ஓரு பிளாக் டீ. ஏழு மணிக்குள் சப்பாத்தி இரண்டு எந்த உணவும் வறுக்கப்படக் கூடாது, பொறிக்கப்படக் கூடாது. தேங்காய் எந்த உணவிலும் சேர்க்கப்படக் கூடாது. அவ்வளவு தான் டயட்.

நானோ சாயந்திரம் டீக்கு சைடாக முழு தந்தூரி கோழியை முழுங்கும் ஆள். மதிய சாப்பாட்டை 3 மணிக்கு சாப்பிடும் பழக்கமுள்ளவன், இரவு சாப்பாட்டை 11 மணிக்கு முன்பாக சாப்பிட்டதாக வரலாறே கி்டையாது அதுவும் குவார்ட்டர் உடன் தான்.

பேச்சிலர் ரூமில் இருக்கும் நான் இந்த டயட் சார்ட் உணவுகளை எங்கே போய் செய்ய, ஒரு வெறியில் முயற்சித்தேன். எடையும் வலுவான உடற்பயிற்சியினாலும், டயட்டினாலும் குறைந்தது. ஆனால் எனக்கு எந்த நேரமும் பசியாகவே இருக்கும்.


ஓட்ஸை பார்த்தால் கொலை கடுப்பாகும். காய்கறிகள் மட்டும் தின்று தின்று கொம்பு முளைக்காதது தான் குறை. இரண்டு மாதம் 15 கிலோ குறைந்தேன். ஆனால் கண்ணெல்லாம் கறுப்பு விழுந்து, டொக்கு மாதிரி ஆகிவிட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றால் என் அப்பா ரெய்டு விட்டார் "இந்தளவுக்கு மோசமான நிலையில் நீ உடலை குறைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒழுங்காக ஜிம்முக்கு போவதை கைவிடு, குண்டாக இருப்பது பரம்பரை உடல்வாகு" என்று. அதோடு விட்டவன் தான்.


அதன்பிறகு முடிந்த அளவுக்கு சாப்பாட்டு அளவை மட்டும் தான் குறைத்திருந்தேன். உடல் பருமனை குறைக்க முயற்சிக்கவே இல்லை. என் சக ஊழியர் ஒருவர் 120 கிலோ எடை இருந்து இப்பொழுது 80 கிலோவாக குறைந்து விட்டார். அவரிடம் எடை குறைந்த காரணத்தை கேட்ட போது அக்குபஞ்சர் மூலமாக குறைத்ததாக கூறினார்.

அது மட்டுமில்லாமல் என்னையும் கூட்டிப் போவதாகவும் நானும் எடை குறைந்து விடுவேன் என்று நப்பாசை காட்டினார். நானும் ரொம்ப நாட்களாகவே மறுத்து வந்தேன். ஒரு நாள் வீட்டம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லப் போக அவரும் என்னை அங்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.

வேறு வழியில்லாமல் இன்று அவருடன் அந்த அக்குபஞ்சர் மருத்துவமனைக்கு சென்றேன். உள்ளே ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. குறைந்தது 100 பேர் இருக்கும். என் நண்பர் முன்பதிவு செய்திருந்ததால் நாங்கள் உடனடியாக அக்குஹீலரை சந்தித்தோம்.

நான் இதுவரை முன்பின் அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் பார்த்தது இல்லை. என்ன மாதிரி மருத்துவம் செய்வார்கள் என்பதே தெரியாது. அக்குஹீலர் முன் அமர்ந்து என்ன செய்யப் போகிறாரோ என்று யோசித்தேன்.

என் கையில் ஒரு நிமிடம் இரண்டு இடங்களில் நாடி பார்த்தார். அவ்வளவு தான். தினமும் இரண்டு வேளை மட்டும் சாப்பிடுங்கள், பால் தயிர் வேண்டாம், பதினைந்து நாட்கள் கழித்து வந்து பார்க்கவும் என்று சொல்லி அனுப்பி விட்டார். நூறு ரூபாய் கட்டணம்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது அவர் உன் கையைப் பிடித்து அதில் இரண்டு நரம்புகளை ஓரு நிமிடம் நிறுத்தி பிறகு விடும் போது ரத்த ஓட்டம் சீராகி உடல் எடை குறையத் தொடங்கும் என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவனவன் உடல் எடையை குறைக்க காலங்கார்த்தால உயிர விட்டு ஓடிக்கிட்டு இருக்கான். இது என்னடானா கையை பிடிக்கிறார். அவ்வளவு தான். பதினைந்து நாள் கழித்து மீண்டும் கையை பிடிப்பாராம்.

டயட்டும் கிடையாது. உடற்பயிற்சியும் கிடையாது. ஆனால் எடை குறையுமாம். எனக்கு ஒன்னும் புரியலை. பதினைந்து நாள் கழித்து பார்த்து தான் முடிவு செய்ய முடியும்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, March 12, 2013

மண்டையா மண்டைல போடு சண்டையா சட்டுனு போடு

 இந்த வார்த்தைக்கு நான் என்ன அர்த்தம் சொல்ல. சில மிருகங்கள் மனிதனென்று மண்டையில் கிரீடம் கொண்டு அலையுதுங்க. என்னைப் போல் சில இளிச்சவாயன்கள் இவர்கள் சரி செய்து விடுவார்கள் என்று காத்திருக்கவேண்டும்


ஆத்திச்சூடி சிறப்பு

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி

"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு

ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச்செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு

ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு

மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.


மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.


நண்பர்களே இது போல் தான் என்னையும் மற்ற சில நண்பர்களையும் ஈழத்தமிழர் விஷயத்தில் நன்மை கிடைக்கும் என்று ஏமாத்தியிருக்கிறார்கள். நானும் நண்பர்களும் இவர்களை நம்பிப் போய் ஏமாந்து இருக்கிறோம்.


மக்களே இனியும் தலைப்பை பார்த்து ஏமாறதீர்கள்.

மன்னிக்கவும்

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : ரொம்ப நாள் கழித்து என் மனைவி ஓரு நாள் விடுமுறையாக வெளியூர் சென்றிருக்கிறாள். நான் இன்று கூட குடித்து விட்டு இது போல் சலம்பாவிட்டால் குடிக்கு என்ன மரியாதை.Monday, March 11, 2013

மாணவர்களின் உண்ணாவிரதத்தால் வலுப்பெறும் போராட்டம்

படித்ததில் பிடித்தது : ஒரு பறவை தனது இனத்துக்காக வீழ்த்தப்பட்ட போதே அடுத்த பறவை போராட்டத்திற்கு தயாராகி விடுகிறது. ஆங்ரி பேர்ட்ஸ்(Angry Birds) சொல்லி தரும் வாழ்க்கை பாடம்


நீண்ட நாட்களாக ஈழ விவகாரத்தில் இது போன்ற ஒரு கொந்தளிப்பு மக்களிடையே ஏற்பட வேண்டும் என்று தான் காத்திருந்தேன். அரசியல்வாதிகளால் ஏற்படாத மாற்றம் மக்களின் கொந்தளிப்பினால் ஏற்படும் என நினைத்தது நிஜமாகத் தொடங்கியிருக்கிறது.

மக்களிடையே போராட்டத்திற்கு ஆதரவு வலுக்கத் தொடங்கியிருக்கிறது. மாணவர்கள் மற்ற ஊர்களில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியிருக்கிறார்கள். இது நிற்காமல் தொடர வேண்டும். ஈழ மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும். சிங்கள போர் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நான் இன்று சந்தித்த ரயில்வே தொழிலாளர்களிடையே உண்ணாவிரத பந்தலில் இருந்து மாணவர்கள் அப்புறப்படுத்தப்பட்ட விஷயம் தான் பரவலாக பேசப்பட்டது. ஒவ்வொரு மக்களும் மனதால் கொதித்து போய் இருக்கிறார்கள். இன்றைய ஈழ மக்களின் நல்வாழ்வுக்கு தேவை தமிழக மக்களின் எழுச்சி தான்.


அதிகாரத்தில் இருக்கும் தமிழக தலைவர்கள் நல்லது செய்வார்கள் என்று காத்திருந்து காத்திருந்து ஈழத்தமிழர்களுடன் நாமும் தான் ஏமாந்து போனோம். இன்று அதனை மறைக்க திமுகவினர் என்னதான் போராட்டம் நடத்தினாலும் அதனை நம்பி ஏமாற படித்த மக்கள் தயாராக இல்லை.

வெறும் பொய் வாக்குறுதிகளாலும் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்று நம்ப வைத்ததாலும் மொழிபோரை தனக்கு சாதகமாக்கி ஏமாற்றியதாலும் தான் நல்லாட்சி செய்த காமராஜரை வீழ்த்தினார்கள் திமுகவினர்.

படிப்பறிவு குறைந்திருந்த அந்த காலத்தில் மக்கள் மனதால் சிந்தித்தார்கள். வெறும் வாய்ச்சவடால்களில்  ஏமாற்ற முடிந்தது. இன்று படிப்பறிவு பெற்ற மக்கள் நிறைந்திருக்கிறார்கள். புத்தியால் சிந்திக்கிறார்கள். இன்று என்னத்தான் குட்டிக்கரணம் அடித்தாலும் மக்கள் ஏமாறத் தயாராக இல்லை.


ஆனால் பாருங்கள் இந்த மக்கள் படிப்பறிவு பெற்றதே இவர்களிடம் தோற்றுப் போன காமராஜரால் தான். தேவர் மகன் படத்தில் சிவாஜி சொல்லுவார். விதை நான் போட்டது, இதுல என்ன பெருமையா, கடமை என்று. அது அப்படியே காமராஜருக்கு பொறுத்திப் பாருங்கள். சரியாக இருக்கும்.

இவர்கள் வெறும் வாய்ச்சொல் வீரர்கள் தான். 2009ல் மட்டும் இவர்கள் மத்தியில் ஆட்சியை விட்டு வெளியில் வந்து எம்பிக்கள் அனைவரும் ராஜினாமா செய்திருந்தார்கள் என்றால், சத்தியமாக சொல்லுகிறேன், நெஞ்சை கிழித்து எழுதியிருப்பேன் தமிழினத் தலைவன் திமுக தலைவர் தான் என்று. என்னைப் போல் லட்சக்கணக்கான இளைஞர்கள் அந்த மனநிலையில் தான் இருந்தனர். அன்று சுயநலத்துக்காக ஒரு உண்ணாவிரத நாடகம் ஆடிவிட்டு இன்று என்னதான் டெசோ புசோ என்றாலும் யாரும் நம்பத்தயாராக இல்லை.

வெளியில் வந்திருந்தாலும் இலங்கையில் நடந்ததை தடுத்திருக்க முடியாது என்று கூறும் உபிக்களே, முட்டைய ஒடச்சா தான்யா ஆம்லேட்டு போட முடியும். இந்த முட்டையை உடைச்சாலும் ஆம்லேட்டு போட முடியாது, இது கூமுட்டைனா யாருய்யா ஒத்துக்குவான்.(கொஞ்ச சீப்பான உதாரணம் தான், ஆனால் அவசரத்திற்கு வேறு உதாரணங்கள் நினைவில் இல்லை)


ஏன் எங்களை மட்டும் சொல்லுகிறீர்கள், அதிமுக அரசு தானே மாணவர்களை அப்புறப்படுத்தியது என்று வெட்டிநாயம் பேசும் உபிக்களே. நாங்கள் என்றுமே அவர்களை ஈழ விஷயத்தில் எதிர்பார்த்தது இல்லை. கலைஞரை மட்டும் தானே காக்கும் கடவுள் என நம்பி வீணாப் போனோம்.

தயவுசெய்து இனியாவது மாணவர்களை சுதந்திரமாக போராட விடுங்கள். இப்பொழுது தான் போராட்டம் தமிழகமெங்கும் பரவ தொடங்கியிருக்கிறது. இதிலும் உங்கள் பாழாய்ப் போன அரசியலை நுழைத்து போராட்டத்தை நீர்த்துப் போக செய்யாதீர்கள்.

உம்மால் முடிகிறதா நீங்கள் தனியாக எதாவது செய்யுங்கள். ஆப்பிரிக்கா போங்கள், அம்பேரிக்கா போங்கள். மாநாடு போட்டு ஆகிற காரியத்தை பாருங்கள். மாணவர்கள் அவர்கள் வழியில் போராடட்டும். ஈழ மக்களுக்கு யார் மூலமாவது நல்லது நடந்தால் போதும் என எதிர்பார்த்து காத்திருக்கும் அப்பாவி தமிழன்.

ஆரூர் மூனா செந்தில்

-----------------------------------------------------------

கேஆர்பி செந்தில் பார்வையில் : மாணவர்கள் போரட்டத்தை மட்டுமல்லாது ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து எப்போதும் தனி ஈழ கோரிக்கையை முன்வைத்து போராடி வரும் வைகோ, நெடுமாறன், சீமான், கொளத்தூர் மணி, ராமதாஸ், தமிழருவி மணியன் போன்றோரை இணையத்தில் இயங்கும் நாலு புளியங்கொட்டைகள் கிண்டலடித்து வருகிறார்கள்.

தம்பிகளா ஒட்டு மொத்தமாக டி.யெம்,கேவை பின்னுக்கு கொண்டுபோகும் உங்களது முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு போடாத பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நீங்கள் உங்கள் வாரிசுகளையாவது தன்மானத்துடன் வாழவிடுங்கள்.

ஏனெனில், பிரபாகரன் எனும் ஒப்பற்ற தலைவன் இனத்துக்காக களத்தில் தன்னையும், குடும்பத்தையும் பலிகொடுத்தார். உமது தலைவன் குடும்பத்துக்காக இனத்தையே பலி கொடுத்தவர்.

காலம் கடந்திருந்தாலும் சரியான சமயத்தில் போரட்டத்தை கையிலெடுத்திருக்கும் மாணவர் சமுதாயத்துக்கு எனது வணக்கங்கள்...

-----------------------------------------------------------------

உண்மை சுடும் இரா.ச.எழிலன் அவர்களின் பார்வையில் 2009 ...........

2009 என்று கூட சொல்ல முடியாது 2008-ன் பிற்பகுதி.

கைப்பேசி கிடையாது , இன்றைய அளவு இணையப்பயன்பாடு கிடையாது , முக்கிய செய்தி என்றாலும் தொலைபேசி வாயிலாகவே களத்திலிருந்து ' நம்பிக்கையான ' நபர்கள் யாரேனும் செய்தி கொடுத்தாக வேண்டும்.


கிடைத்த தகவல்களை வைத்து கள நிலவரத்தை புரிந்துக்கொண்டு போராடினோம். செய்தி சிறிய அளவு பொய்யென்றாலும் போராட்டம் போச்சு. கைது செய்யப்பட்ட எங்களை பெரியார் திக வின் தீவிர இன உணர்வாளர்கள் வெளியே கொண்டு வந்தார்கள். இதில் ஒரு அமைப்பின் தோழர் சிறு நீர் கூட கழிக்க முடியாத அளவிற்கு தாக்குதலுக்கு உட்பட்டிருந்தார். அந்த செய்தி கூட வெளியே போய் சேரவில்லை.

தேசியத்தலைவர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நாளன்றும் அதற்கு முன்னதாக சில நாட்களும் அரிதாக கிடைத்த செய்தியையும் , புகைப்படங்களையும் வைத்தே அங்கே என்ன நடக்கிறதென அவதானிக்க முடிந்தது. போராடினோம். துரோகத்தால் வீழ்ந்தோம்.

என்ன சொல்ல வரேன்னா , இந்த தமிழகத்தின் ஏதோ ஒரு ஈ'சாணி' மூலையில் இருக்கும் வெகு சாதாரண மனிதன் ' எழிலன் ' எனப்படும் எனக்கே இலங்கையில் எம் அக்காள் தங்கைகள் கொல்லப்படும் செய்தி பல தடைகளைத் தாண்டி நேரலையாக கிடைத்து , வீதிக்கு வந்து போராடினோம்.

அக்கா மவன் மிகப்பெரிய ஊடகம் ஒன்ன வச்சிருக்கான் , பத்தாததுக்கு பெரிய ' டமிளர் ' கட்சி தலீவர் வேற , உங்களுக்கு எந்த செய்தியும் வரவே இல்லையா ?????

இல்லை ஏன் இந்த 'டெசொ' வை 2008 ல் அமைக்கவில்லை ??????? என்ற தோழர் சிம்பு தமிழ் க்கு ஏற்பட்ட அதே ஐயம் தான் எனக்கும். ஐ நா வுக்கு அப்போது விடுமுறையா ???????? இல்ல , கட்சியில யாரும் இல்லையா ???? இல்ல, போர் நடந்தது உங்களுக்கு தெரியவே தெரியாதா ????? இல்ல , அது சும்மாக்காச்சும் செய்தின்னு நினைத்து விட்டீர்களா ????

சிங்களவனை விடவும் ஆபத்தான ஓநாய்கள் இந்த உடன்பிறப்புகள். அதற்கு மேலே இருக்கும் வரலாற்று சம்பவங்களே ஆதாரம்.

'தலீவர' பத்தி பேசினா உடனே கோவம் வருதுல்ல , உடனே தலைமைக்கு அழைத்து கேளுங்க இந்த கேள்விகளுக்கு என்ன பதில்ன்னு. அது வரை தலீவர் மீதான 'கருத்து' தாக்குதல்கள் தொடரும்.

பதிலுக்கு உங்களுக்கு தெரிந்த நான்கு தமிழ் உணர்வாளர் தலைவர்களை நீங்கள் திட்டிக்கொள்ளுங்கள். நிச்சயமாக தக்க பதிலடி இருக்கும். சோர்ந்து போய் விட மாட்டோம். கருத்துகளை கண்ணியமாக கையாளுங்கள் , அதிலேயே உங்கள் கட்சியும் கொள்கையும் தெரிந்துவிடும்.

கவலைப்படாதீர்கள் , நீங்கள் மனம் மாறும் வரை உங்களை விடுவதாயில்லை. உங்கள் வழியில் நீங்கள் மனசாட்சியை கொன்று யாருக்கோ விசுவாசமாய் இருங்கள். கட்சி மாறலாம் , கொள்கை மாற்றலாம். ஆனால் , தமிழ் ' இன , மொழி உணர்வை ' மாற்ற முடியாது. இதில் தான் வேறுபட்டு நிற்கிறோம் , நீங்களும் நானும்..

-----------------------------------------------------------

நண்பர்கள் எடக்கு மடக்கு பதிவில் பகிர்ந்துள்ளது

ஈழ விவகாரத்தில் நமது லயலோ கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம், உலகின் ஒட்டு மொத்த தமிழர்களையும், தமிழர் அல்லாத மற்றவர்களையும் சற்றே நினைத்து பார்க்க வைத்துள்ளது. அரசும் அவர்களை நள்ளிரவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதோடு அல்லாமல், போராட்டத்தை பிசுபிசுக்க வைக்க நினைத்தது. இங்கதான் மாபெரும் தவறான ஆலோசனைகளை மிக அறிவுபூர்வமான ஆட்கள் அரசுக்கு சொல்லி இருக்க வேண்டும்.

எல்லாரும் சொல்லுவதை போல் தேன் கூட்டில் கை வைத்தது போல
ஆகிவிட்டது. இன்று தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டம் களை கட்டியுள்ளது. இனிதான் அரசுக்கு தலை சொறிதல் ஆரம்பம். மாணவர்களின் போராட்டத்தை இனி வேறு வகையில் திசை  திருப்பும்  அரசு. நடத்திப் பார்க்கட்டும். அதையும் உலக தமிழர்கள் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள்.

1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் எப்படி தமிழகம், மற்றும் மாணவர்களிடையே மிகப் பெரிய எழுச்சி உண்டானதோ அதே போல ஒரு எழுச்சி இப்போது உருவாக்கி உள்ளது. அப்போதாவது தி.க., மற்றும் தி.மு.க. போன்ற கட்சிகள் போராட்டத்தை முன் எடுத்து சென்றது.

இன்றைக்கு அனைத்து அரசியல்(வியா)(வா)திகள் தம் சுயநலம் கொண்டு இந்த போராட்டத்தினால் திகைத்து நிற்பது நிஜம். எப்படி எந்த ஒரு கட்சியையும் சாராமல், யாருடைய ஆதரவும் கோராமல் எதன் அடிப்படையில், இவர்கள் போராட்டத்தை முன் எடுத்து செல்கிறார்கள்? எப்படி இது இந்த அளவுக்கு தீ பொறி போல் பரவியது? கடந்த இரண்டு  நாட்களாக தூங்காமல் அனைவரையும் கக்கா போகும்போது கூட யோசிக்க வைத்துள்ளது இந்த வியாதிகளுக்கு.

மேலும் படிக்க எடக்கு மடக்கு பதிவு

Sunday, March 10, 2013

உலகின் மிக வினோதமான சட்டங்கள் - தற்பொழுதும் நடைமுறையில் இருப்பவை

கலிபூர்னியா, பசிபிக் குரோவ்

பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்

கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்

நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.

ஃப்ளோரிடா, சரசோடா

பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்

இல்லினாய், சிக்காகோ

தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்

மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா

தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா

எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்

ஓஹையோ மாநிலம், அமெரிக்கா

நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்

கனடா டோரண்டோ மாநிலம்

ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்

க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்

வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்

அரிசோனா மாநிலம், அமெரிக்கா

ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்

அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா

ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்

மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா

குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்

அவினான், ஃப்ரான்ஸ்

சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்

ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்

விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா

துப்புவது சட்டப்படிகுற்றம்

டிஸ்கி 1: இரண்டு வருடத்திற்கு முன்பு இதையெல்லாம் ஒரு பதிவுன்னு நானும் எழுதியிருக்கேன். எங்கோ ஆங்கிலத்தில் படித்ததை அப்படியே தமிழில் மாற்றி ஒரு பதிவு தேத்தியிருக்கிறேன். இன்று படித்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது நாம் எவ்வளவு மொக்கையாக இருந்திருக்கிறோம் என்று. பழகப் பழக எதுவும் வசமாகும் என்பது இன்று ஓரளவுக்கு உண்மை.

டிஸ்கி 2: இது ஒரு மீள் பதிவு

ஆரூர் மூனா செந்தில்

Friday, March 8, 2013

ஒன்பதுல குரு - சினிமா விமர்சனம்

சில சமயங்களில் இயற்கை நமக்கு சிக்னல் கொடுக்கும். இது தவறு என்றால் அந்த இடத்திற்கு போகாத படி தடங்கல்களை ஏற்படுத்தும். நல்லவிஷயம் என்றால் தடங்கல் வருவது போல் இருந்தாலும் காப்பாற்றி குறிப்பிட்ட இடத்திற்கு நம்மை கொண்டு போய் சேர்க்கும்.


இது போல் இன்று நான் வேலைப்பளு குறைவாக இருந்ததால் ஒன்பதுல குரு சினிமாவுக்கு போக வேண்டும் என்று முடிவெடுத்து அசோக்கிடம் சொல்லிய பிறகு ஓர பெரிய வேலை பெண்டிங் இருக்கும் வண்டி டிராபிக் என்று 11 மணிக்கு உயரதிகாரி போனில் அழைத்து தெரியப்படுத்தினார்.

என்னடா முதல் காட்சி மிஸ் ஆகி விடும் போல இருக்கே, இருந்தாலும் முயற்சிப்போம் என்று அரக்க பரக்க வேலைகளை தொடங்கி செய்து கொண்டு இருக்கும் போது தொழிற்சாலை முழுவதும் பவர் கட். பொதுவாக ரயில்வே தொழிற்சாலைகளில் பவர் கட் வரவே வராது.


எனக்கான சோதனை இது என்று தேற்றிக் கொண்டு வெல்டிங்கைத் தவிர மற்ற வேலைகளை முடித்து விட்டு கரண்ட் வந்ததும் அந்த வேலையையும் முடித்து விட்டு வீட்டு வரும்போது மணி 1.30. அடுத்த ஆட்டத்திற்காவது போகலாம் என்று முடிவெடுத்து அசோக்கை 2.45 மணிக்காட்சிக்கு கொளத்தூர் கங்கா திரையரங்கிற்கு வரச்சொன்னேன்.

சரியாக மற்றொரு நண்பன் சத்யா 2.15 மணிக்கு போனில் அழைத்து ஓரு முக்கியமான கொட்டேஷன் அடித்து தரவேண்டும் என்று கேட்டான். அவனுக்காக அதனையும் அடித்து மெயிலில் அனுப்பி விட்டு பார்த்தால் மணி 2.50. இத்தனை தடங்கல்களையும் தாண்டி படத்திற்கு போய் தான் ஆவேன் என முடிவெடுத்து திரையரங்கிற்கு போனேன்.

பைக் பார்க்கிங்கிற்கு 20 ரூபாய் வாங்கினார்கள். நல்லாயிருங்கடா என சாபம் கொடுத்து 3.00 மணிக்கு திரையரங்கினுள் போய் அமர்ந்தால் இயற்கை என்னை இந்த கொடுமையை காண வேண்டாம் என்று எவ்வளவு எல்லாம் தடுத்திருக்கிறது என்று அப்போது தான் புரிந்தது.


படத்தின் கதை என்ன? கல்லூரி காலத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்த நான்கு நண்பர்கள் திருமணத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டு அதனால் வீட்டை விட்டு வெளியேறி பழைய பேச்சிலர் வாழ்க்கைக்கே போகலாம் என்று கூடிப் பேசி முடிவெடுக்கிறார்கள். அதன்படி பெங்களூரு வந்து தங்கும் இடத்தில் லட்சுமிராயை கண்டு ஜொள்ளு விட்டு அதன் விளைவுகளை அனுபவித்து குடும்ப வாழ்க்கையே மேல் என்று திரும்பவும் மனைவியிடம் வந்து சேருகிறார்கள்.

கேட்பதற்கு கொஞ்சம் சுமாராக இருப்பது போல் இருக்கும் இந்த கதையை இப்படிச் சொல்லித்தான் இயக்குனர் தயாரிப்பாளரிடம் படத்திற்கான அனுமதியை பெற்றிருப்பார் என நினைக்கிறேன். ஆனால் அதனை படமாக கொடுக்கும் போது சொம்மா சொழ்ட்டி சொழ்ட்டி அடித்திருக்கிறார்கள். எனக்கு நவத்துவாரங்களிலும் ரத்தமாக வழிகிறது.

நான்கு ஐந்து கதாநாயகி வாய்ப்பு தேடி வந்த பெண்களை இயக்குனர் கில்மாவுக்கென தேர்ந்தெடுத்து அவர்களுக்கு நாயகிகள் வேஷம் கட்டி சம்பந்தமில்லாமல் படமெடுத்து தயாரிப்பாளர் தலையில் மிளகாய் தோட்டத்தையே அரைத்திருக்கிறார்.


உன்னாலே உன்னாலே மற்றும் ஜெயம்கொண்டான் படங்களில் வினய்யை பார்த்த போது சிறந்த நடிகர் தமிழுக்கு கிடைத்திருக்கிறார் என நினைத்தேன். ஆனால் மிரட்டல் மற்றும் ஒன்பதுல குரு படங்களில் நடித்த பிறகு தான் இவரின் படம் தேர்ந்தெடுக்கும் திறமை தெரிகிறது.

ஒரு காலத்தில் கங்கா, வெற்றி விக்னேஷ் என்று சில மொன்னை நடிகர்கள் சில படங்களில் கதாநாயகனாக நடித்து பிறகு காணாமல் போனார்கள். அவர்கள் இடத்தை நிரப்ப இப்பொழுது வினய் வந்திருக்கிறார் என நினைக்கிறேன். டயலாக் பேசும் போது வாயை டாய்லட் பேசின் மாதிரியே திறந்து வைத்திருக்கிறேன். சீக்கிரம் தமிழ் சினிமாவை விட்டு காலி பண்ணுங்க சாமி.

அடுத்த கதாநாயகனாக அரவிந்த் ஆகாஷ். எப்படிப்பட்ட நடிகராக வந்திருக்க வேண்டியவர் தெரியுமா இவர். காதல் சாம்ராஜ்யம் என்று ஒரு படம் பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அகத்தியன் இயக்கத்தில் தயாரானது. அதில் வெங்கட் பிரபு, சரண், யுகேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

அந்த படத்தில் இவர் தான் கதாநாயகன். கோடம்பாக்கம் பாலத்தில் அந்த படத்திற்கொன வைக்கப்பட்டிருந்த பேனரைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் படம் முடிவடைந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக படம் வெளிவரவே இல்லை. பிறகு எப்படியோ தட்டுத்தடுமாறி சில படிகள் மேலே ஏறியவர் இந்த படத்தினால் மீண்டும் சரக்கென்று துவங்கிய இடத்திற்கே வந்து விட்டார்.

சத்யன் இவர் கூட பெரிய கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நடிக்கும் போது தான் மிளர்கிறார். இந்த படத்தில் நம்மளை போட்டு சொறிகிறார். இருந்தாலும் இந்த படத்தில் நடித்திருக்கும் நடிக பட்டாளங்களில் இவர் மட்டுமே கவனம் ஈர்க்கிறார்.

பிரேம்ஜி இந்த படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை.மொக்கையாக சில காட்சிகள் வந்து குரங்கு சேஷ்டைகள் செய்து நம்மை கடுப்பேற்றி விட்டு போகிறார். அவரு ஆளும் மண்டையும் காது கடுக்கனும் கொலைவெறியாக்குகிறது.

படத்தில் பளிச்சென கைதட்டலும் விசிலும் வாங்குவது மூவர் மட்டுமே. அவர்கள். லட்சுமிராய், மந்த்ரா அப்புறம் சோனா.

லட்சுமிராய் படத்தில் அடக்கமான பெண்ணாக வந்து சில காட்சிகளில் ஜொள்ளு விட வைத்து விட்டு கிளைமாக்ஸில் டைட் பேண்ட் போட்டு கவுட்டியில் கட்டி வந்த மாதிரி நடந்து வரும் போது நான் டிக்கெட்டிற்கு கொடுத்த காசு பகபக வென்று பத்தி எரிவது போல் தோன்றுகிறது.

அதை விட மகா அவஸ்தை சத்யனின் மாமியாரான மந்த்ரா கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றவராம். அதை வைத்து கிளைமாக்ஸில் ஒரு கிளுகிளு சண்டைக்காட்சி வேறு.

டேய் இவ்வளவு காசை வச்சிக்கிட்டு இப்படி ஒரு படத்தை எடுக்க எப்படி மனசு வந்தது உங்களுக்கு. பாவம்யா அந்த தயாரிப்பாளர், கிளுகிளுப்பை கூட்டி எடுத்தால் படத்திற்கு செலவு செய்த காசை எடுத்து விடலாம் என யாரோ அவருக்கு சொல்லியிருப்பார்கள் போல.

என்னைப் போன்ற ரசிகர்கள் எல்லாம் இந்த தமிழ் சினிமாவுக்கு செய்யும் நல்ல காரியம் என்னவென்றால் இது போன்ற படங்களை புறக்கணிப்பது தான். சும்மா கூப்பிடுவானுங்க படத்திற்கு போயிடாதீங்க. அடிச்சுக்கூட கூப்பிடுவாங்க படத்திற்கு போயிடாதீங்க. ஆயிரம் ரூபாய் காசு கூட கொடுக்கிறேன்னு கூப்பிடுவாங்க அப்பக்கூட இந்த படத்திற்கு போயிடாதீங்க.

ஒன்பதுல குரு - 3மணிக்கு என்னைபுடிச்ச சனி

ஆரூர் மூனா செந்தில்

Thursday, March 7, 2013

தொல்லைக்காட்சி - முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா - சென்னைக்கு மிக அருகில்

சென்னைக்கு மிக மிக அருகில்

வழக்கமாக நான் பார்த்து வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சி சென்னைக்கு மிக மிக அருகில் பிளாட் வாங்கலாம் வாங்க நிகழ்ச்சி தான். எவ்வளவு அருமையான நிகழ்ச்சி. சென்னைக்கு மிக மிக அருகில் மேல்மருவத்தூரில் இருந்து வந்தவாசி செல்லும் சாலையில் ஒரு மணிநேர பயணத்தில் ஆடு கிடைக்கு போட்ட இடத்திற்கு பின்னால் வருவது ஓம்சக்தி நகர்.


சென்னையில் வசிக்கும் நாம் அங்கு சென்று இடம் வாங்கினால் தான் மிகச்சில வருடங்களில் அதாவது குறைந்து 50 வருடத்திற்குள் சென்னையின் மாநகர எல்லைக்குள் ஓம்சக்தி நகர் வரும். இது நமக்கு எவ்வளவு பெரிய வாய்ப்பு. 6000 ரூபாய் சம்பாதித்து போதாமல் சிரமப்படும் ஒருவன் இந்த ஏரியாவில் பிளாட் வாங்கினால் சீக்கிரமாகவே கோடீஸ்வன் ஆகி விடலாம்.

எனவே சென்னை வாழ் மக்களே அல்லது சென்னையில் குடியேற வேண்டும் நினைக்கும் மக்களே நீங்களும் இது போன்ற நிகழ்ச்சிகளை பார்த்து சென்னைக்கு மிக மிக அருகில் இடம் வாங்கி முன்னேறுங்கள்.

என்னைக் கவர்ந்த விளம்பரம்

முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா

ஜாக்கி ஷெராப் தோன்றும் இந்த விளம்பரத்தின் சிறப்பம்சமே இந்த மாத்திரை எதற்கு பயன்படும் என்று தெளிவாக விளக்காமல் குழப்பியடிப்பது தான். இந்த விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு குதிரை கிளர்ந்தெழும். ஆனால் முடிவில் பள்ளிக்கு செல்லும் மாணவி கூட கேட்டு வாங்கும் போது தான் மண்டை சொறியத் தொடங்கும்.

ஏண்டா ஒரு விளம்பரம் போடுறீங்க. அதனை கொஞ்சம் விளக்கமாக போட்டால் என்னைப் போன்ற தத்திகளுக்கு விளக்கமாக புரியுமல்லவா. சின்ன வயதில் நான் பார்த்த கோஹினூர் விளம்பரத்தில் ஏதுவென்றே குறிப்பிடாமல் இருப்பார்கள். அது புரியாமல் நான் புதிதாக கல்யாணமான என் மாமாவிடம் கேட்டு கும்மாங்குத்து வாங்கியதெல்லாம் பெரும்கதை.

உள்ளத்தை கொள்ளைக் கொண்டாய்

பாலிமர் டிவியில் வந்து கொண்டிருக்கும் ஒரு டப்பிங் நாடகம் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டாய். அவ்வப்போது சேனலை மாற்றிக் கொண்டு இருக்கும் போது இந்த நாடகம் வந்தால் அப்படியே நின்று விடுவேன். என்ன ஒரு நாடகம்.

கதாநாயகன் என்னைப் போல் ஒருவன். அவனும் என்னைப் போல் 100+ கிலோ இருப்பான். அதுவே நான் இந்த நாடகத்தில் ஒன்றிப் போக ஒரு காரணம். ஆனாலும் ஓரு வருத்தம் உண்டென்றால் அவன் சிகப்பு, நான் கருப்பு.

ஆனாலும் அந்த உடம்பை வைத்துக் கொண்டுள்ள ஹீரோவுக்கு லட்டு மாதிரி ஒரு ஆண்ட்டி ஹீரோயின். மச்சக்காரன்யா அவன். ரொமான்ஸ் என்ன, டூயட் என்ன. அவ்வப்போது நடக்கும் நாத்தனார் சண்டை தான் நாடகத்தின் ஹைலைட். இன்னும் எத்தனை நாடகங்களில் இவர் ஹீரோவாக நடித்தாலும் நான் பார்ப்பேன் என்பதை நான் ரசிக்கும் பதிவர் வாஞ்சூர் மேல் ஆணையிட்டு கூறுகிறேன்.

எனக்கு தெரிந்து தமிழகத்தில் இந்த நாடகத்தை பார்க்கும் 8 பேரில் நானும் ஒருவன் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது.

சிட்டுக் குருவி லேகிய விளம்பரம்

கேப்டன் டிவியில் தினந்தோறும் நள்ளிரவு வரும் ஒரு விளம்பரத்தை நான் மிகவும் ரசித்துப் பார்க்கிறேன். என்ன ஒரு விளம்பரம் அது. ஐம்பது வயதை கடந்த ஒரு பெரிசு இரவு அசைக்கக்கூட முடியாமல் படுத்து கிடக்கிறார். அவரது அருகில் வந்து ஏக்கத்துடன் பார்க்கும் அவரின் இணை ஏக்கப் பெருமூச்சு விடுகிறது.

உடனே வானத்தில் இருந்து ஒரு ஒளி வந்து டெபிளின் மேல் விழுகிறது. ஓரு டப்பா கேப்சூல் அது. அதனை எடுத்து பெரிசு விழுங்கியதும் ஓரு குதிரை அவருக்குள் எழுகிறது. பயங்கரமாக அசைத்துப் பார்க்கிறார். இருவருக்கும் ஓருமணிநேரம் கிரவுண்ட்டை ஓடியது போல் வேர்த்து இருக்கிறது. பார்க்கவே புல்லரிக்கச் செய்யும் விளம்பரம். என்ன ஒன்று யாருக்கும் தெரியாமல் எல்லோரும் தூங்கிய பின்பு தான் பார்க்க முடிகிறது.

பார்த்த படம் - நாயகன்

நீங்கள் நினைப்பது போல் அந்த நாயகன் இல்லை. இது இந்த நாயகன். புரியவில்லை, நம்ம வீரத்தளபதி நிலா நிலா ஓடிவா என்று துள்ளிக் குதித்து ஓரு நடனம் ஆடியிருப்பாரே அந்த படம் தான்.


வீரத்தளபதிக்கு நிஜக்குரல் கொஞ்சம் தொங்கலாக இருக்கும் என்பதால் வீரமான ஒருவனை வைத்து குரல் கொடுக்க வைத்து கதாபாத்திரத்தை காப்பாற்றி இருக்கிறார்கள். படத்தின் பலம், பலவீனம், சூப்பர், டூப்பர் எல்லாமே வீரத்தளபதி தான்.

ஒரு முறை முயற்சித்து பார்ப்போம் என்று இந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்து தலைதெறிக்க ஓடி வந்தவர்களுள் நானும் ஒருவன். ஆனால் இந்த படத்தை இன்று டிவியில் பார்க்கும் போது தான் ஒரு அமர காவியத்தை தவற விட்டது புரிந்தது.

--------------------------------------

போதும்னு நினைக்கிறேன், இதுக்கு மேல தொடர்ந்தால் மடிப்பாக்கம் பக்கத்திலிருந்து கல் வந்து விழ வாய்ப்பிருப்பதால் நான் கழண்டுக்கிறேன்.


ஆரூர் மூனா செந்தில்

Wednesday, March 6, 2013

டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

டிகிரி முடித்தவர்கள் Textile Show Roomல்  Sales Man வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

 -------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1800 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Monday, March 4, 2013

பதிவுக்கு தற்காலிக ஒய்வு

http://www.bibleuncle.com/p/tamileditor.html என்ற வெப்சைட்டில் தான் இத்தனை நாட்களாக டைப் செய்து வந்தேன் . இன்று காலையில் இருந்து அது ஓப்பன் ஆகவில்லை. அதற்கு நிகரான தமிழ் தட்டச்சு வெப்சைட் என்ன .யாருக்காவது தெரியுமா. என்னால் பதிவு போட முடியவில்லை . நண்பர்கள் உதவவும்
 எனக்கு தமிழ் யுனிகோட் ரைட்டர் கிடைக்கும் வரை பதிவு எழுதுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது .
ஆரூர் மூனா செந்தில் 

Friday, March 1, 2013

சீதம்மா வாகிட்லோ சிரிமல்லே செட்டு


இந்த படத்தை நான் எப்பவோ பார்த்தாச்சு. ஆனால் படத்தின் விமர்சனம் போட நேரம் தான் அமையவில்லை. இந்தவார கோட்டாவுக்கு படம் பார்க்க இன்று காலையிலேயே ராம்கோபால் வர்மாவின் மும்பை அட்டாக் பற்றிய 26/11 படத்திற்கு போகலாம் என்று எண்ணியிருந்தேன்.


ஆனால் இன்று காலை என்னையும் ஒரு பெரிய மனுசன் என்று நம்பி ஒரு பெரிய வேலை ஒப்படைக்கப்பட்டது. எனவே இந்த வார திரை விமர்சனம் கேன்சல். இப்பொழுது அந்த வேலையைப் பபற்றி சொல்லக்கூடாது. சுவாரஸ்யமான அதன் தொகுப்பை அடுத்த வார இறுதியில் பகிர்கிறேன். எனவே இப்பொழுது நேரம் இருந்ததனால் இந்த படத்தினை மனசுக்குள் ஒரு ஓட்டு ஓட்டி விமர்சனம் எழுதுகிறேன்.

இரண்டு ஆக்சன் ஹீரோக்களை வைத்து என்னவெல்லாம் செய்திருக்கலாம்.

முதல் கதையாக இவர்களுக்கு ஒரு தங்கச்சி, அந்த பெண்ணை ஒரு குடிகார சந்தேக பேர்வழிக்கு கட்டிக் கொடுக்கிறார்கள். அவன் கொடுமைப்படுத்தி சூடு வைக்கிறான். அண்ணன் தம்பிகளில் ஒருவர் சாப்ட் பார்ட்டி அவர் செண்ட்டிமென்ட்டான ஆள். அவர் தங்கச்சியை நினைத்து அழுது அழுது வரும் தாய்மார்களை கதறி அழ வைக்கிறார்.


மற்றொருவர் கோவக்கார அண்ணன். தங்கச்சியை அடித்தவர்களை தட்டிக் கேட்க அந்த வீட்டுக்கு சென்று தங்கச்சியின் மாமனார், மாமியார், ஒன்னு விட்ட ஓரகத்தி, அவர்கள் வீட்டு நாய் ஆகியவற்றை பொட்டு பொரட்டி எடுக்கிறார். இறுதியில் அந்த குடும்பமே சேர்ந்து தங்கச்சியை கொன்று விடுகிறது.

அண்ணன் தம்பிகள் ஒன்று சேர்ந்து அந்த குடும்பத்தையே கொன்று தங்கச்சி பிணத்துடன் சேர்த்து எரிக்கிறார்கள். போலீஸ் கைது செய்கிறது. இருவரும் கைவிலங்கை சூரிய வெளிச்சத்திற்கு முன்னே கையை உயர்த்தி காட்டுகிறார்கள். படம் நிறைவு பெறுகிறது. படம் சில்வர் ஜூப்ளி தான்.

இன்னொரு கதை இருக்கிறது. சிறு வயதிலேயே சகோதரர்களின் அப்பாவை வில்லன்கள் கொன்று விடுகிறார்கள். அம்மாவுடன் சகோதரர்கள் ரயிலில் ஊரை விட்டு போகும் போது ஒருவன் தொலைந்து போய் விடுகிறான். மற்றொரு சிறுவன் அம்மாவை அழைத்துக் கொண்டு வெளியூர் சென்று நல்லவனாக வளர்கிறான்.


தொலைந்து போனவன் ஒரு ஊரில் பசியால் வாடி வேறு வழியில்லாமல் ரெளடியாகிறான். நல்லவன் சாம்பார் போல் வளர்கிறான். ஒரு கால கட்டத்தில் இருவருக்கும் இரண்டு ஹீரோயின்களுடன் தனித்தனியே காதல் ஏற்படுகிறது.

பிறகு ஊட்டி மலையில் ஓரு குழியைத் தோண்டி அதில் ஓரு நாட்டு வெடியை வைத்து அதன் மீது கலர் கலராக கோலமாவு பரப்பி விட்டு அதனை வெடிக்கச் செய்து நடனமாடி டூயட் பாடலாம். கிளைமாக்ஸூக்கு முன்னர் ஓரு குடும்பப் பாடலில் இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.

பிறகு வில்லன் அவர்களின் அம்மாவை கடத்தி சென்று விடுகிறான். இருவரும் ஓரு ஓப்பன் ஜூப்பில் ஜெயிக்கப் பிறந்தவர்கள் என்று பாட்டுப் பாடி வில்லன் இடத்திற்கு சென்று ஏகப்பட்ட சண்டைகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்து நடுவில் அம்மா இரு பக்கமும் ஹீரோக்கள் அதன் பிறகு ஹீரோயின்கள் என போஸ் கொடுக்க படம் முடிகிறது.


ஆனால் பாருங்கள் இந்த படத்தில் ஓரு சீரியஸ் சண்டைக் காட்சிக்கூட கிடையாது. உண்மையாக இரு சகோதரர்களுக்கிடையே இருக்கும் ஈகோ, பாசம், விட்டுக் கொடுத்தல் என எல்லாமே வெகு இயல்பாக படமாக்கி இருக்கிறார்கள். சற்று நெருங்கிப் பார்த்தால் நமது சகோதரர்கள் போல் தோன்றுவது தான் படத்தின் வெற்றிக்கு அடிநாதம்.

உண்மையிலேயே நம்ப முடியாமல் கண்களை கசக்கி விட்டு பார்க்கிறேன். படத்தில் இருவருக்கும் நான் முந்தி, நீ முந்தி என்ற போட்டி கிடையாது. விட்டுக் கொடுத்து நடித்து அசத்தியிருக்கிறார்கள். படத்தில் இருவருக்கும் சரி பங்கு பிரித்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இது போன்ற ஒரு அப்பா நமக்கு கிடைக்க மாட்டாரா என்று ஏங்க வைக்கிறார் பிரகாஷ்ராஜ். எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும், எல்லோரையும் விகல்பமில்லாமல் நல்லவர் என நம்பும் பாஸிட்டிவான அப்பா. போன வாரம் கூட சொன்ன பேச்சு கேட்கவில்லை என என்னை நாயே என்று திட்டிய என் அப்பாவை நினைத்துப் பார்த்தேன். ம்ஹூம் இது எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் போல.

அஞ்சலி குடும்பப் பாங்கான கதாபாத்திரத்தில் அசத்துகிறார். அவரைப் பெண் பார்க்க வெளி ஆள் வந்திருக்கும் போது வெங்கடேஷ் அவரை அழைக்கக்கூடாது என்று வேண்டும் இடத்தில் எனக்கு இது போல் ஒரு அத்தைப் பொண்ணு இருந்திருக்கக்கூடாதா என ஏங்க வைக்கிறார்.


சமந்தா அழகாக இருக்கிறார். அழகாக ரொமான்ஸ் செய்து அழகு பொம்மையாக வந்து போகிறார். அவ்வளவே. பாடலுக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

ஒரு கல்யாண ரிசப்சனுக்கு டக் இன் செய்து வந்து மிகவும் சிரமப்பட்டு அமர்ந்து இயல்பாக இருக்க முடியாமல் நெளிந்து வளைந்து இருந்து விட்டு ரிசப்சன் முடிந்ததும் வெளியில் வந்து டக் இன்னை அவசரமாக எடுத்து விட்டு தம் பற்ற வைக்க எடுக்கும் போது இயல்பான நான் பலமுறை சந்தித்திருக்கும் நண்பர்களை நினைவுப் படுத்துகிறார்.

வெங்கடேஷ் என் தம்பியைப் போல் சட்டு சட்டென கோவப்படும் பிறகு அதற்காக வருத்தப்படும் இளைஞராக நடித்து அசத்தியிருக்கிறார். அதுவும் எதற்கெடுத்தாலும் ஏய் என அஞ்சலியை அழைப்பதும் ஒரு நாள் அஞ்சலியை மற்றொருவர் பெண் பார்க்க வந்திருக்கிறார் என அறிந்து அதே இடத்திலும் ஏய் என அழைத்து தன் விருப்பத்தை தெரியப்படுத்தும் போதும் என் தம்பியை நினைவுபடுத்துகிறார்.

அம்மா சற்று தள்ளி டம்ப்ளரில் காப்பியை வைத்து விட்டு போக அதை கையில் தான் கொடுக்க வேண்டும் என்பதற்காக டம்ளரை இங்கு வா, இங்கு வா என மகேஷ் அழைப்பது எனக்கு மிகவும் பிடித்த சீன். பாட்டியுடன் மிக இயல்பாக நெருக்கமாக இருப்பதும் கிண்டல் செய்வதும், அடிக்கடி கடித்து விளையாடுவதும் எனக்கு கூட இது போல் ஒரு பாட்டி இல்லையே என ஏங்க வைத்தது.

இடைவேளை சற்று தாண்டியதும் அழ ஆரம்பித்த நான் படம் முடியும் வரை அழுகையை நிறுத்தவில்லை. எனக்கும் என் தம்பிக்கும் இருக்கும் நெருக்கத்தை நான் இன்னும் பலப்படுத்த வேண்டும் நினைக்க செய்த இந்த படம் நிஜமாகவே என் நெஞ்சில் நீங்கா படம் தான்.


ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...