சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, October 31, 2011

சென்னையில் விதிமுறைகளை மீறிய வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பு

சென்னை - தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 61 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. சென்னை மேயராக சைதை துரைசாமி பதவியேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளார். கட்டட விதிமுறைகளை மீறியும், முறையான அனுமதி பெறாமலும் உள்ள கட்டடங்களை கண்காணிப்பதற்கு, குழு ஒன்றை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

இதன் தொடர்ச்சியாக, விதிகளை மீறி கட்டப்பட்ட கடைகள் உள்ளிட்ட கட்டடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சியையும், சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையத்தையும் அந்தக் குழு கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில், சென்னையின் முக்கிய வர்த்தகப் பகுதியான தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டபட்ட சுமார் 61 கட்டடங்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், பல கடைகளுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிகாரிகளால் சீலிடப்பட்ட கடைகளுள் சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை, ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்சின் ஒரு கடை,பாலு ஜுவல்லர்ஸ், ஸ்ரீதேவி கோல்டு கவரிங், ரத்னா ஸ்டோர்ஸ் ஆகியவையும் அடங்கும்.

இந்த அதிரடி நடவடிக்கைக்கு கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக தி.நகர் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆனால் எனக்கு இதில் மகிழ்ச்சியே. ஏதாவது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் தான் இதன் விளைவுகள் நமக்கு தெரிய வரும். அதற்கு முன்பே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி நடவடிக்கையின் பின்னணி...

கடந்த 2006-ல் மூத்த சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தொடர்ந்தார்.

அதில், சென்னை நகரின் தியாகராய நகர், பாரிமுனை, மைலாப்பூர் போன்ற இடங்களில் விதிகளை மீறி வணிக வளாகங்கள், அடுக்குமாடி கட்டங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், இதன் மீது நடவடிக்கை எடுக்க உத்திரவிடக்கோரியும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக, சி.எம்.டி.ஏ. பொறியாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுவை நியமித்தது.

தியாகராய நகரிலுள்ள பல கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருந்தது, கண்காணிப்புக் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக, அவ்வாறு விதிமுறைகள் மீறிய கட்டடங்களை இடிப்பதற்கு 2007-ல் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி, அவற்றை இடிக்கவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால், கட்டடங்களை இடிப்பதை நிறுத்தும் வகையில் முந்தைய ஆட்சியில் அவசர சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. கட்டங்களை இடிக்கும்போது சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், வரைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அந்தச் சட்டம் கூறியது.

இதனிடையே, சி.எம்.டி.ஏ. சார்பில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நிதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் காரணமாக, விதிமுறைகளை மீறிய கட்டடங்களை இடிக்கும் நடவடிக்கை முடக்கப்பட்டது.

பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு செல்லும் என்று கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவுடன், மாநில அரசின் அவசர சட்டம் காலாவதியானதை அடுத்து இந்த வணிக வளாகங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டங்களை இடிக்க கடந்த ஜுலை மாதம் மீண்டும் நோட்டீஸ் அனுப்ப கண்காணிப்பு குழு உத்தரவிட்டது. அதன்படி, தியாகராய நகரில் விதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். எனினும், கடந்த மாதம் வரை அடுத்தகட்ட எடுக்கப்படவில்லை. இதற்கு, அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலும் ஒரு காரணம்.

இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டபோது, சி.எம்.டி.ஏ., மாநகராட்சி, மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளின் உயர் அதிகாரிகள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதனால், உயர் நீதிமன்றத்திடம் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், சி.எம்.டி.ஏ.யும், மாநகராட்சியும் இணைந்து இப்போது அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


ஆரூர் முனா செந்திலு



சென்னைக்கு வருவதற்கு மக்கள் படும் பாடு


வர வர தீபாவளி போன்ற பண்டிகைகள் யான்டா வருது என்று கடுப்பாகிறது. வேலைப் பார்க்கும் ஊரிலிருந்து சொந்த ஊருக்கு வந்து திரும்பி செல்வதற்குள் அவன் அவன் பாடு டர் தான். நான், எப்பொழுது திருவாரூரிலிருந்து திரும்பி சென்னை வருவேன் என்பது தெரியாததால் முன்பே டிக்கெட் ரிசர்வேசன் செய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு தான் நேற்று காலை கிளம்பியாகனும் என்று முடிவு செய்து காலை 7.30 மணிக்கு திருவாரூர் பேருந்து நிலையம் வந்தால் 3 சென்னை செல்லும் பேருந்து நின்றது. கூடவே மழை விடாமல் பெய்து கொண்டிருக்கிறது. 10 பேருந்தில் செல்வதற்கான கூட்டம் நிற்கிறது. அடுத்தடுத்து பேருந்து வர வர கூட்டம் தாங்க முடியவில்லை. மழையும் விட்டபாடில்லை. ஒரு வழியாக 8.30 மணிக்கு ஒரு பேருந்தை பிடித்து கிளம்பினால், மழையும் நசநசவென்று பேருந்தின் உள்ளேயே பெய்கிறது. அரசுப் பேருந்தின் லட்சணம் அப்படி. ஒரு வழியாக பேருந்து கிளம்பி கூட்ட நெரிசலிலும் மழையுடனும் சென்னை வந்து சேர இரவு 7.00 மணியாகிவிட்டது. பிறகு ஆப் (Half)உடன் ஆப்பாயில் அடித்த பிறகு தான் டென்சன் குறைந்தது.

நானாவது ஒரு வழியாக வந்து சேர்ந்து விட்டேன். நேற்று இரவு ஊரிலிருந்து கிளம்பும் மக்களின் நிலையை நினைத்தால் வருத்தம் தான் வருகிறது. சென்னை செல்பவர்கள் என்றால் கூட பரவாயில்லை. கூடுதல் பேருந்து விட்டிருப்பார்கள். மாறி மாறி கூட வந்து விடலாம். ஆனால் திருப்பூர், பெங்களூரு, கேரளா போன்ற ஊரில் வேலை செய்யும் மக்களின் நிலை, நினைத்தால் வருத்தமாகத்தான் இருக்கிறது.

யார் தான் இந்த அவல நிலையை தீர்ப்பார்கள். வருடா வருடம் பேருந்துகளும் அதிகமாகிறது. வெளியூர் செல்லும் மக்களும் அதிகமாகிறார்கள்.

நான் 1997ம் வருடத்திலிருந்து தீபாவளிக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு செல்லும் கொடுமையை அனுபவித்து வருகிறேன். இன்றோ பல மடங்கு கூடியிருக்கிறதே தவிர கொஞ்சம் கூட குறைந்தபாடில்லை. அப்பொழுது பேருந்து நிலையம் பாரீஸில் இருந்தது. சிறிய பேருந்து நிலையம் கூட்டம் அளவிட முடியாதது. இதில் ஒரு முறை இரவெல்லாம் பேருந்து கிடைக்காமல் ஒரு இரவு முழுவதும் பேருந்து நிலையத்திலேயே தங்கி விடியற்காலை பேருந்து பிடித்து வந்திருக்கிறேன். அதையெல்லாம் இன்று நினைத்தால் ரத்தக் கண்ணீர் வரும். அந்த சமயத்தில் நானெல்லாம் பரவாயில்லை, குடும்பஸ்தர்கள் நிலை தான் பரிதாபமாக இருக்கும். ஒரு பேருந்து, நிலையத்தின் உள் வந்தால் இடம் பிடிக்க அடித்து பிடித்து நாங்களெல்லாம் சென்று விடுவோம், ஆனால் குடும்பஸ்தர்கள், மனைவி மற்றும் குழந்தையுடன் பேருந்தில் இடம் பிடிக்க அலைவதை பார்க்கும் போதெல்லாம் மிகக் கொடுமையாக இருக்கும்.

எந்த அரசு வந்தாலும் இந்தக் கொடுமை தீரப்போவதில்லை. எவனாவது இந்தப் பிரச்சனையை தீர்க்க வருவான் என்ற நம்பிக்கையில் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை ஓட்டுப் போட்டு காத்திருக்கும் மக்களின் நிலை தான் பாவம்.

என்றாவது இந்த கொடுமை தீரும் என்ற நிலையில் இருக்கும்

ஆருர் முனா செந்திலு



Saturday, October 29, 2011

7ம் அறிவு படத்திற்கு எதிராக நடக்கும் பிரச்சாரங்கள்



சமீப காலமாக தமிழகத்தில் ஒரு டிரெண்ட் நடந்து வந்தது. அதாவது ஒரு படம் வெளியானால் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கு வேண்டாத ஆட்கள் மூலம் தியேட்டரில் வாய்மொழிப் பிரச்சாரம் மூலம் படம் படுதோல்வி எனவும், பார்க்கவே முடியவில்லை என்றும் திரையரங்குகளில் பரப்புவது. இது மட்டுமில்லாமல் எஸ்.எம்.எஸ் மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதி மக்களுக்கும் படத்தை பற்றியும், அதில் நடித்த நடிகரைப் பற்றியும் கிண்டலாக செய்திகள் அனுப்புவது. இதன் மூலம் சுமாரான படங்கள் கூட மக்கள் மத்தியில் படம் போர் என பேச்சு அடிபடுவதால் பிளாப் ஆகின்றன. இத்தனை நாட்களாக நடிகர் விஜய்யின் திரைப்படங்களுக்கு நடந்து கொண்டிருந்தது, எனக்கு தெரிந்து இந்த டிரெண்ட் விஜய் நடித்த ஆதி படம் மூலம் துவங்கியது என நினைக்கிறேன். அந்தப் படம் வெளியான சமயம் ஆதி படம் காலி, தியேட்டரில் இலவசமாக டிக்கெட் கொடுத்து உள்ளே அனுப்புகின்றனர் எனவும் பல தரப்பட்ட எஸ்.எம்.எஸ் கள் மற்றும் பார்வேர்ட் ஈமெயில்கள் மூலமும் அனுப்பப்பட்டது.எப்பொழுதும் ஒரு படம் வெளியாகும் அன்றே பார்க்கும் நான், ஆதி படம் வெளியாகும் நாளுக்கு முதல் நாள் இது போன்ற ஒரு ஈ மெயில் பார்த்ததனால் அந்தப் படத்தை தியேட்டரில் நான் பார்க்கவில்லை. பிறகு ஏதோ ஒரு சானலில் தான் பார்த்தேன்.


பிறகு பல படங்களுக்கு இது போல் நடந்தது. உதாரணத்திற்கு விஷாலின் சத்யம், விஜயின் பல படங்கள், அஜித்தின் அசல் மற்றும் பல படங்கள். படம் நன்றாக இருக்கிறதோ இல்லையோ இது போன்ற கீழ்த்தரமான மார்க்கெட்டிங்கினால் மொக்கைப் படங்களை விடுங்கள், சுமாரான படங்கள் கூட ஓடவில்லை. இது போன்ற விமர்சனங்களால் நாம் படம் பார்க்கும் கூட்டத்தில் பாதிப் பேரை வெளியேற்றி விடுகிறோம். அப்பொழுது எல்லாம் இவ்வளவு தூரம் நான் பதிவுலகில் இருந்தது கிடையாது. அதனால் அதன் விவரம் எனக்கு அப்போது தெரியவில்லை. ஆனால் இன்று கண்கூடாக ஒரு படத்திற்கு இது போன்று நடப்பதை பார்க்கிறேன். இத்தனைக்கும் நானும் மொக்கப்படம் என்றால் கமெண்ட் அடிப்பதும் உண்டு, ஆனால் படம் பார்த்து விட்டே அந்த காரியத்தை நான் செய்வேன்.


எனக்கு நன்றாக தெரிகிறது, பெயர் குறிப்பிட விரும்பவில்லை, சில பதிவர்கள் படம் பார்க்கவேயில்லை. ஏற்கனவே படம் பார்த்து விட்டு விமர்சனம் வந்துள்ள சில வலைப்பூக்களில் இருந்து விமர்சனங்களை படித்து விட்டு அப்படியே ஒரு பார்வேர்ட் பதிவு இட்டிருக்கிறார்கள். ஏனென்றால் 7ம் அறிவைப் பற்றி விமர்சனம் போட்டால் ஹிட் கிடைக்கும் என்பதற்காகவே. பல வலைப்பூக்களை எடுத்துப் பாருங்கள் ஒருவர் சுமார் என்பார், அடுத்தவர் ரொம்ப சுமார் என்பார். அதற்கடுத்தவர் போர் என்பார். அதற்கடுத்தவர் படு போர் என்பார். இது தான் 7ம் அறிவு படத்தின் விமர்சனத்தில் நடந்துள்ளது.


7ம் அறிவு படத்தை எடுத்துக் கொள்ளுங்கள். படம் நாம் எல்லாம் எதிர்ப்பார்த்த அளவு இல்லை. ஏ.ஆர்.முருகதாஸோ அல்லது சூர்யாவோ படம் வெளிவருவதற்கு முன் கூறியபடி இது ஒன்றும் பார்த்தே தீர வேண்டிய படமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் அதே சமயம் பார்க்கக்கூடாத படமும் அல்ல. எதிர்ப்பார்ப்பின்றி போனால் சுமாராக இருக்கு என்று சொல்லுமளவுக்கு பார்க்கக்கூடிய படம் அவ்வளவே.


ஆனால் இந்தப்படத்திற்கும் உள்குத்து வேலைகள் படம் வெளியாவதற்கு முன்பே துவங்கி விட்டன. போதி தர்மர் தமிழரே இல்லை எனவும், அவர் ஒரு மந்திரவாதி எனவும். படம் படு மொக்கை எனவும் ஏகப்பட்ட ஈமெயில்கள் எனக்கு தீபாவளிக்கு முதல் நாளே வரத்துவங்கி விட்டது. இதை விட மோசம் படம் வெளியான அன்று 200 ரூபாய்க்கு விற்ற தியேட்டர்காரர்கள் மறுநாளே 50 ரூபாய்க்கு விற்றால் தான் திரையரங்கம் நிறையும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது தான். எங்கள் ஊரிலும் இது நடந்தது, அதனால் எனக்கு தெரிய வந்தது.


நான் ஒன்றும் சூர்யா ரசிகர் மன்ற தலைவனோ அல்லது காசு வாங்கிக் கொண்டு இந்தப்படம் பற்றி பிரச்சாரம் செய்பவனோ அல்ல. இத்தனை நாள் எனக்கு தெரியாமல் இருந்தது. இந்தப் படத்திற்கு என் கண் முன் நடக்கிறது. அதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறேன் அவ்வளவே.

ஆரூர் முனா செந்திலு

Friday, October 28, 2011

குறட்டை விட்டால் என் மனைவி கிள்ளுறாப்பா


உலகத்தில் கஷ்டமான விசயம் என்று பெரிதாக ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் ரொம்ப சுகமான விசயம் என்றால் பலர் கூற தயாராக இருக்கிறார்கள். முக்கால்வாசி பேர் 'காலைக் கடன் ' கழிப்பதே சுகம் என்று கூறிக் கொண்டு அலைகிறார்கள். கஷ்டமான விசயம் என்னவென்று என்னை கேட்டால் , ஒரு குறட்டை விடுபவரின் அருகில் படுத்து உறங்குவதே என்பேன். இந்த உலக மகா கஷ்டத்தை அனுபவித்து பார்த்தவர்களுக்கே தெரியும் நான் சொல்வது உண்மையென்று.


எதுக்காக ஆண்டவன் இதை மனிதர்களுக்கு குடுத்தான் என்று தெரியவில்லை. என்னோடு சேர்ந்து இரண்டு பேருக்கு பக்கத்து கோயிலில் கதாகாலட்சேபம் செய்து கொண்டு இருந்த ஒரு பெரியவரிடம் இந்த சந்தேகத்தை கேட்டேன். 'ஆண்டவன் மனிதர்களுக்கு டேய் மானிடா நீயும் மிருகஙகளை போலதாண்டா. அதில் இருந்து வந்தவந்தாண்டா ' என்பதை புரிய வைக்க, இந்த தண்டனையை கொடுத்ததாகச் சொன்னார். ஆனால் அந்த தண்டனை அருகில் இருப்பவர்களுக்கு தானே என்று நான் அவரிடம் விவாதம் செய்யவில்லை. அவருக்கும் ஆண்டவனுக்கும் எந்த அளவு நெருக்கம் என்பது எனக்கு தெரியாததால் நான் அதை ஆட்சேபிக்கவில்லை.


ஆனால் எதுக்காக இது தோன்றியது என்பது வேறு விசயம். ஆனால் சில பேர் நல்ல தூக்கம் என்றாலே 'குறட்டை விட்டு தூங்குவதுதான் ' என்ற எண்ணத்துடன் அலைகிறார்கள். பல பேச்சு வழக்கங்களிலும் , ' ஊம் நல்ல சாப்பாடு ஆச்சு .... இனி குறட்டை விட்டு தூங்க வேண்டியது தான்... ' என்று குறட்டை விடாதவர்களும் கூறுவது இதற்கு காரணமாக இருக்கலாம். இதனால் பக்க விளைவு என்னவென்று பார்த்தீர்கள் என்றால் , குறட்டை விடாமல் தூங்குபவர்களுக்கு ஒரு கழிவிறக்கம் ஏற்பட்டதுதான். இவர்கள் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போதெல்லாம் , ' சே !! சுகமான ஜீவன்பா. என்னம்மா தூங்கறான் பாரு.. ' என்று ஒரு எண்ணம் தோன்றுவது தவிர்க்க முடியாதது.


என்னை பொறுத்தவரை , குறட்டை விடுபவர்களை இரண்டு விதமாக பிரிக்கலாம். இதில் முதல் விதம் எப்படியென்றால் படுத்து சிறிது நேரம் கழித்து மெதுவாக குறட்டையை ஆரம்பிப்பார்கள். முதலில் எங்கயோ எலி குடைவது போல் சத்தம் கேட்கும். பிறகு மெதுவாக சத்தம் கூடி உச்சஸ்தாயில் இரண்டு கிரேன் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வேலை செய்வது போல் கர்ண கடூரமாக இருக்கும். இரண்டாவது விதம் எப்படி என்றால் படுத்து சில நிமிடங்களிலியே குறட்டை உச்சஸ்தாயில் ஆரம்பிக்கும். இவர்கள் அருகே படுப்பவர்கள்தான் அதி பாவமான ஜீவன்கள்.
சில சமயம் , பேருந்து அல்லது இரயிலில் நீங்கள் இரவு பயணம் செய்தீர்கள் ஆனால், அருகில் குறட்டை விடாத ஜீவன்கள் வந்து அமர வேண்டும் என்று தங்கள் குல தெய்வத்திடம் வேண்டிக் கொள்வது நல்லது. ஏன் என்றால் உங்களால் அவர் குறட்டை சத்தத்தை ஆராய்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது. சிலர் தாங்க முடியாமல் ரயில் பயணங்களில் அபாய சங்கிலியை இழுத்து விடுவதும் உண்டு. இந்த நேரத்தில் உங்களை ஒரு விசயத்தில் எச்சரிக்க விரும்புகிறேன். 'சே என்ன பெரிய குறட்டை தொந்தரவு. விடரவனை எழுப்பிட்டா குறட்டை நிக்கப் போவுது. ' என்று விஷப் பரிட்சை செய்ய வேண்டாம். காரணம் இப்படி குறட்டை விடுபவரை எழுப்பினீர்கள் என்றால், முதலில் Vacuum cleaner ஐ அணைக்கும் போது ஏற்படுவது போல் ஒரு ஒலியை எழுப்பி விட்டு, அப்பாவியாக அந்த குறட்டை ஜீவன் முழித்துப் பார்க்கும். 'அய்யோ பாவம்.. இவரை போய் எழுப்பிட்டோமே !! ' என்ற எண்ணமே உங்களுக்கு ஏற்படும். மீண்டும் அவர் தூங்க ஆரம்பித்த பிறகு அவர் குறட்டை முன்னை விட அதி ஆத்திரமாக ஒலிக்க ஆரம்பிக்கும்.


ஆகவே இதை சமாளிக்க, இதை ரசிக்க ஆரம்பிப்பதே நல்லது. குறட்டை விடுபவர் ஒரு சங்கீத வித்வானாய் இருந்தாலோ, அல்லது கேட்கும் உங்களுக்கு சங்கீத ஞானம் இருந்தாலோ ரொம்ப நல்லது. சங்கீத வித்வான்கள் குறட்டை அருமையாக ஆரம்பிக்கும். மெதுவாக ஆரம்பித்து, சூடு பிடித்த பிறகு அருமையான ஆலாபனை நடைபெறும். வார்த்தகள் இல்லாமல் , 'ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ' என்று ஏதாவது ராகத்தை ஒரு பிடி பிடித்து விடுவார். இவர்களிடம் ஒரு நல்ல விசயம் என்னவென்றால், நடு நடுவே சில நிமிடங்கள் பக்க வாத்தியக்காரர்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் குறட்டை நிற்கும்.


பிறகு காலை வேளையில் அருமையாக மங்கலம் பாடி முடித்து விடுவார். இன்னும் சிலர் எப்படியென்றால் குறட்டையிலேயே பேசுவார். அவர் குறட்டை சத்தத்தின் ஸ்ருதி மாறுதல்களை வைத்தே என்ன கனவு காணுகிறார், அல்லது உங்களிடம் என்ன சொல்ல வருகிறார் என்பதை அறிந்து கொள்ளலாம். நான் சில வீடுகளில் கணவாிடம் இருந்து அவர் குறட்டை மூலமே பல ரகசியங்களை அறிந்து கொள்ளும் மனைவிகளையும் பார்த்து இருக்கிறேன்.


ஆனால் சில வீடுகளில் சிறிது அதிகமாகவே நடப்பதுண்டு. குறட்டையை நிறுத்துகிறேன் பேர்வழி என்று மல்லாந்து படுத்து தூங்கி கொண்டு இருப்பவரை சடாரென்று திருப்பி விடுவர் அருகில் தூங்குபவர், அதாவது மல்லாக்க படுத்தால் குறட்டை அதிகமாக வருமாம். பாவம் அந்த நபர், என்ன தாக்கியது என்று தெரியாமல், எழுந்து உட்கார்ந்து திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி முழித்துக் கொண்டு இருப்பார். ஏதாவது கெட்ட கனவு கண்டு விட்டோமோ என்று பயந்து வேறு போய் இருப்பார். இன்னும் சில வீடுகளில் குழந்தகள் செய்யும் சேஷ்டைகள் தாங்க முடியாது. என் நண்பர் வீட்டில் , அவர் குறட்டை விட்டு தூங்கும் போது அவர் சிறு பையன் பஞ்சால் மூக்கை அடைப்பது, இடுப்பில் கிச்சு கிச்சு மூட்டுவது போன்று பல ஆராய்ச்சிகளின் ஈடுபடுவான்.


சில சமயம் குறட்டை விடுபவர் மிகவும் நல்லவராக இருந்தால், நம் அருகே தூங்கச் செல்லும் முன் , 'ஸார், நான் தூக்கத்தில கொஞ்சம் குறட்டை விடுவேன் .. ' என்று அபாய அறிவிப்பு கொடுத்து விட்டு தூங்கச் செல்வார். அந்த 'கொஞ்சம் ' என்பது எவ்வளவு என்பது நமக்கு தெரியாததால், புஸ்வானத்திற்கு நெருப்பு வைக்கும் போது 'இது பொறி விடுமா.. அல்லது வெடிக்குமா !! ' என்ற பயம் மாதிரி, அவர் குறட்டை விட ஆரம்பிக்கும் வரை கண்கள் விரிய உட்கார வேண்டி வரும்.


ஆனால் குறட்டை சத்தம் அதிகமாக இருப்பதால் பல நல்ல உபயோகங்களும் உண்டுதான். உதாரணமாக, கல்யாண நேரத்தில், மூகூர்த்தம் அதிகாலையில் என்றால், இவர்களை திருமண மஹால் நடுவில் தூங்க வைத்து விட்டால் போதும். குறட்டை சத்தத்தில் சரியான நேரத்தில் யாவரும் எழுந்து விடுவர், ஏன் பலரால் தூங்க கூட முடியாது. அதே மாதிரி பரிட்சை நேரங்களில் பிள்ளைகளுக்கு இதை விட ஒரு நல்ல alarm கிடைக்கவே கிடைக்காது. ஒரு குறட்டை விடுபவரை பரிட்சை எழுதப்போகும் பிள்ளைக்கு அருகில் தூங்க விட்டால் போதும்.


குறட்டை விடாதவர்கள் கூட சில சமயம் குறட்டையில் தள்ளப் படுகிறார்கள். அதீத அலைச்சல், விளையாட்டு போன்றவற்றால் சில சமயம் குறட்டை விடாதவர்களும் குறட்டை விடலாம். ஆனால் இது இரண்டு மாதங்கள் வரும் சிறிய தொலைக்காட்சி தொடர் மாதிரி . அதிக தொந்தரவில்லை. என்றும் எங்கும் குறட்டை விடுபவர்களே நம் ஆயுள் முழுவதும் வரும் மெகா தொடர்.


பலரின் குறட்டை சத்தத்தில் நாம் காதை பொத்திக் கொண்டு தூங்கி விடலாம். ஆனால் சிலர் அதீத சத்தத்தில், DOLBY மற்றும் DTS எஃபக்ட்டில் குறட்டை சத்தத்தை உற்பத்தி செய்வர். இவர்கள் அருகில் தூங்குவது என்பது ஒரு பிரம்ம பிரயத்தனம்.


என்னடா இப்படி உளர்ரானே, பாதி தூக்கத்தில எந்தரிச்ச மாதிரின்னு உங்கள்ல யாராவது நினைச்சு இருந்தீங்கன்னா, அவர்கள் நோபல் பரிசு வாங்க என்னால் பரிந்துரைக்கப் படுகிறார்கள். (ஏய்.. யாரங்கே !!)


என்னடா தூக்கத்தில் இருந்து எழுந்தவனைப் போல் உளறுகிறானே என்று பார்க்கிறீர்களா, அது வேறொன்னுமில்லீங்கண்ணா என் குறட்டையின் காரணமாக என் மனைவி தூங்க முடியாமல் எழுந்து என்னை கிள்ளிவிட்டதனால் தீடீரென்று எழுந்தவனிடம் என் மனைவி புலம்பியதன் பாதி தொகுப்பே இது. முழுவதும் கேட்டால் நீங்கள் தூங்கப் போய் விடுவீர்கள். ஆவ்வ்வ் . . .(தூக்கம் வருதுங்க, நாளை சந்திப்போமா)

ஆரூர் முனா செந்திலு



Thursday, October 27, 2011

7ம் அறிவு படத்தினை குறை சொல்லும் பதிவர்களின் கவனத்திற்கு




பதிவுலகில் சத்தமில்லாத சமாச்சாரம் இப்பொழுது மெல்ல மெல்ல வெளிவருகிறது. அதாவது ஒரு படத்தைப் பற்றி யாராவது ஒருவர் முதலில் விமர்சனம் எழுதிவிட்டால் மற்ற அனைத்து விமர்சனங்களும் அதனையொட்டியே எழுதப்படுகின்றன. உண்மையில் விமர்சனம் எழுத நினைக்கும் ஒருவர் படத்தை பார்த்து விட்டு எந்த வகையான விமர்சனங்களையும் படிக்காமல் எழுத வேண்டுமே தவிர மற்ற விமர்சனங்களையெல்லாம் படித்து விட்டு எழுதினால் அந்த விமர்சனத்தில் அதன் தாக்கம் கண்டிப்பாக இருக்கும்.




நேற்று 7ம் அறிவு படம் வெளிவந்தது. பதிவர்களிடையே போட்டியே யார் படத்திற்கு முதலில் விமர்சனம் எழுதுவது என்பதில் தான் நேற்று இருந்தது. கண்டிப்பாக ரசனை என்பது ஒருவருக்கொருவர் மாறுபட கூடியது. நானெல்லாம் பக்கா Bகிளாஸ் ரசிகன். எனது ரசனை என்பது அதற்குட்பட்டே இருக்கும். அது மற்ற கிளாஸ் ரசிகர்களுடன் ஒத்துப்போக வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது.நான் சொந்த ஊரான திருவாரூர் வந்து விட்டதால் என் PCயில் டைப் அடிப்பது போல் இலகுவாக என் தம்பியின் லேப்டாப்பில் டைப் அடிக்க முடியவில்லை. அதனால் படம் முடிந்து வந்ததும் மற்ற விமர்சனங்களை படிக்காமல் 3மணியிலிருந்து டைப் அடித்து முடிக்கவே 4 மணியாகி விட்டது.


இதில் டைப் செய்வதில் உள்ள சிரமம் காரணமாகவும் படத்தின் குறைகளை விரிவாக எழுதமுடியவில்லை. நேற்று மதிய சாப்பாடு வீட்டில் தோசையுடன் கறி பிரட்டல், சிக்கன் வறுவல் என பெரும் விருந்து காத்திருந்ததால் அவரச அவரசமாக பதிவெழுதி திரட்டிகளில் இணைத்து விட்டு சரக்கடிக்க சென்று விட்டேன். பிறகு சரக்கடித்து விட்டு வீட்டில் சாப்பிட்டு விட்டு மீண்டும் கடைக்கு வந்து லேப்டாப்பை எடுத்துப் பார்த்தால் தான் தெரிகிறது. மற்ற எல்லார் விமர்சனமும் ஒன்று போல் படத்தின் குறைகளை மட்டும் மையப்படுத்தியே இருந்தது. யாராவது ஒருவர் ஒரு குறையை சுட்டிக்காட்டினால் மற்றவரும் அதையே குறை என்று பதிவிடுகிறார். இந்த சீன் அருமை என்று யாராவது பதிவிட்டிருந்தால் மற்ற விமர்சனங்களும் அதையே சுட்டிக்காட்டுகின்றன.




படம் சுமார் என்று எனக்கு தெரியும். ஆனால் அதனை நாம் முன்னிலைப்படுத்த வேண்டாம் என்று தோன்றியதால் நான் எழுதவில்லை. ஒரு வேளை நான் இந்த விமர்சனங்களையெல்லாம் எழுதுவதற்கு முன் படித்திருந்தால் கண்டிப்பாக நானும் குறைகளையே சுட்டிக்காட்டி எழுதியிருப்பேன். இதனால் ஒருவர் துவங்கி வைத்த 7ம் அறிவு படம் சுமார் என்ற விமர்சனம் மற்றவர்களால் முன்மொழியப்பட்டு இன்று சிலரின் விமர்சனத்தில் மோசம் என்று ஆகி விட்டது.




******




இந்த லேப்டாப்பிலிருந்து என்னுடைய பெயரில் பின்னூட்டமிட முடியவில்லை. பதிவுலக நண்பர்கள் என்னடா இவன் நாம் எழுதும் பின்னூட்டத்திற்கு பதில் எழுதமாட்டேங்றானே என்று நினைக்க வேண்டாம். வரும் திங்கள் அன்று சென்னை வந்ததும் கண்டிப்பாக பதில் எழுதுகிறேன். நன்றி


ஆரூர் முனா செந்திலு






Wednesday, October 26, 2011

7ம் அறிவு - திரை விமர்சனம்



தீபாவளியாச்சே புதுப்படம் போகலாம் என்று முடிவு செய்து மிகவும் எதிர்பார்ப்பை கிளப்பியதால் 7ம் அறிவு படத்துக்கு சென்றோம். திருவாரூரில் டிக்கெட் விலை 200 ரூபாய். இதுக்கு சென்னையிலேயே படம் பார்த்திருக்கலாம். படத்துக்கு வருவோம்.




5ம் நூற்றாண்டில் வாழ்ந்த போதிதர்மர் காஞ்சிபுரத்திலிருந்து சீனாவுக்கு செல்கிறார். அங்கு சென்று சீன மக்களை மிகப்பெரும் நோயிலிருந்து காப்பாற்றுகிறார். பிறகு அந்த மக்களுக்கு தற்காப்பு கலையை கற்றுக் கொடுக்கிறார். அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க அங்கேயே சமாதியாகிறார்.



தற்காலத்திற்கு கதை வருகிறது, சீனாவிலிருந்து ஒருவர் ஸ்ருதியை கொல்வதற்கு அந்த நாட்டு அரசாங்கத்தால் அனுப்பப்படுகிறார். இங்கு, சென்னையில் சர்க்கஸ் கலைஞரான சூர்யா ஸ்ருதியை காதலிக்கிறார். ஸ்ருதியோ சூர்யாவின் டி.என்.ஏ போதி தர்மருடையது என்பதால் ஆராய்ச்சிக்காக அவரை சுற்றி வருகிறார். சீனாவின் ஆபரேசன் ரெட் என்ற திட்டம் இந்தியாவில் துவங்கப்படுகிறது. அந்த திட்டம் முறியடிக்கப்பட்டதா? வில்லனிடம் இருந்து ஸ்ருதியை சூர்யா காப்பாற்றினாரா? போதிதர்மர் சூர்யாவுக்குள் வந்தாரா என்பதை திரையில் காண்க.



உண்மையில் தமிழர்கள் பார்க்க வேண்டிய படம். எங்களூர் பாஷையில் சொல்வதானால் முதல் பத்து நிமிஷத்துக்கே கொடுத்த காசு போய் விட்டது. சூர்யாவின் நடிப்பு பிரமாதம். ஸ்ருதிக்கும் கொஞ்சம் வெயிட்டான கேரக்டர். அந்த நோக்கு வர்மத்தின் மூலம் இந்தியர்களை சரமாரியாக சூர்யாவின் மீது ஏவும் காட்சியும் அதற்கான பின்னணி இசையும் பிரமாதம். ஈழப்போரினைப் பற்றிய விளக்கம் எனக்கு கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. ஆமாம் உண்மையில் வீரத்திற்கும் துரோகத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. ஈழத்தில் நடந்தது துரோகம் என்பதற்கான விளக்கமும் சூப்பர்.


ஆனாலும் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. சராமரியாக வில்லன் போலீசாரை கொல்வதும் அதனை பல நாட்களுக்கு அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதும் இடிக்கிறது.



இருந்தாலும் பிளாஷ்பேக் காட்சிக்காகவும் உழைப்புக்காகவும் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம்.

ஆரூர் முனா செந்திலு

Saturday, October 22, 2011

இந்த அப்பாக்களுக்கும் பசங்களுக்கும் ஏன்டா ஒத்துக்க மாட்டேங்குது?


அப்பனுங்க எப்பப் பார்த்தாலும் நம்மள ஒரு மனுஷனாவே மதிக்க மாட்டேனுங்குறானுங்க. ஏன்டா என்ன பிரச்சனைனு கேட்டா இந்த மாதிரி எல்லாம் காரியம் பண்ணா மதிப்பானுங்களா இல்ல மிதிப்பானுங்களா





இந்த மாதிரி டி ஷர்ட் போட்டா அப்பாக்களுக்கு பிடிக்குமா?



இந்த மாதிரி நாய்குட்டி வளர்த்தா பிடிக்குமா.

விடுங்கப்பா இந்த அப்பனுங்களே இப்படித்தான். நம்மளையும் புரிஞ்சிக்க மாட்டானுங்க. நம்ம அறிவையும் புரிஞ்சிக்க மாட்டானுங்க.


ஆரூர் முனா செந்திலு




Friday, October 21, 2011

கேரளாவிலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்


நான் இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர் தலைவர் தான் என்பதை முதல் நாள் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணியின் காரணமாக அங்கிருந்தேன். அன்று படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது. மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.


அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்தது விட்டோம். படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும் ரிலீஸ். மற்றும் கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. தலைவரின் படம் 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று. இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன். மொழி கடந்து மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.


ஆரூர் முனா செந்திலு




Thursday, October 20, 2011

தீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தில் தனியார் பேருந்துகள்


தீபாவளிக்கு ஊருக்கு போவதற்காக டிக்கெட் பதிவு செய்ய வேண்டியிருந்தது. செல்லும்நாள் தெரியாததால் முன்பே ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. வரும் வெள்ளிக்கிழமை அன்று செல்வதாக திட்டமிட்டு பேருந்தில் முன்பதிவு செய்யலாம் என்று இருந்தேன். ஆனால் அரசுப்பேருந்தில் டிக்கெட் கிடைக்கவில்லை.

தனியார் பேருந்து என்றால் பணம் அதிகமாக கேட்பாங்களே என்று யோசித்து வேறு வழியில்லாமல் தனியார் பேருந்து நிலையம் சென்று திருவாரூர் செல்லும் தனியார் பேருந்தில் வெள்ளியன்று ஊர் செல் டிக்கெட் கேட்டேன். டிக்கெட் 600 ரூபாய் என்றான். எனக்கு பகீர் என்றது. டிக்கெட் விலை அதிகம் சொல்லுவான் என்று எதிர்பார்த்து சென்றிருந்தாலும் 600 ரூபாய் மிக அதிகம். இது வெறும் டீலக்ஸ் பஸ்ஸூக்குத் தான். அதுவே ஏசி பஸ் என்றால் 1000 ரூபாயாம். சாதாரண நாட்களில் அரசு டீலக்ஸ் பேருந்தில் 160 மட்டுமே கட்டணம். தனியார் பேருந்தில் 300 மட்டும். அதுவும் நான் முன்பதிவு துவங்கிய நாளிலிலேயே முன்பதிவு செய்ததால் டிக்கெட் விலை 600.இவர்கள் கடைசி நேரத்தில் விற்பதற்காக பாதி டிக்கெட்களை பதுக்கி வைத்திருப்பார்கள். கண்டிப்பாக அதன் விலை அன்று 1000க்கு குறையாமல் இருக்கும்.

இங்கிருந்து 320 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருவாரூருக்கு செல்வதற்கே இந்த நிலையென்றால் மதுரை, திருநெல்வேலி தாண்டி செல்பவர்களின் நிலையோ பரிதாபம் தான். ஒரளவுக்கு வசதியுள்ளவர்கள் எவ்வளவு விலையேற்றினாலும் தேவை கருதி கொடுத்து செல்வார்கள். குறைந்த சம்பளத்தில் வேலைக்கு சென்னையில் இருக்கும் பேச்சிலர்கள் என்றால் அரசுப்பேருந்தில் அடித்துப்பிடித்துக் கொண்டு நின்று கொண்டாவது செல்ல முயற்சிப்பார்கள்.

ஆனால் இந்த திருமணமாகி கைக்குழந்தையுடன் இருக்கும் கீழ் நடுத்தர வர்க்கத்து ஆண்களின் நிலை தான் இது போன்ற சமயங்களில் பரிதாபமாக இருக்கும். கையில் குழந்தை, குறைந்தது இரண்டு பேக்குகள் உடன் மனைவியுடன் பேருந்துக்காக அல்லாடும் போது மனதை என்னவோ செய்யும். அவர்களுக்கு முன்செல்வதற்கான திட்டமிடுதலும் இருக்காது. அதிக விலை கொடுத்து செல்லவும் முடியாது. பேருந்து நிலையத்தின் உள்நுழையும் முன்பே பேச்சிலர்கள் என்றால் முண்டியடித்து உள்ளே சென்று விடுவார்கள். குடும்பஸ்தர்களுக்கோ அதுவும் முடியாது. பிறகு விடியற்காலை எப்படியாவது ஒரு பேருந்தில் அடித்துப்பிடித்து நின்று செல்ல இடம் வாங்கி வீட்டிற்கு செல்லும் ஆயிரம் ஆண்களை நான் அறிவேன். அவர்கள் வீட்டிற்கு செல்லவும் மதியமாகி விடும். அதற்குள் பண்டிகையும் முடிந்திருக்கும். இந்தியனாக பிறந்ததற்கு அதுவும் தமிழனாக பிறந்ததற்கு அவர்களின் நிலை இப்படித்தான் இருக்கும்.

இதற்கு தீர்வு காண்பது யார்?

இது போன்ற பணடிகையன்று அதிக விலை நிர்ணயித்து கிடைத்த வரை அள்ளிவிட நினைக்கும் தனியார் பேருந்து முதலாளிகளை யார் கேட்பது.

தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மாநில அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

மொத்தமாக ரயில் டிக்கெட்டுகளை புக்கிங் செய்து பண்டிகைக்கு முன்தினம் அதிக விலைக்கு விற்கும் தரகர்களை யார் தான் கேட்பது.

ரயில் டிக்கெட் தரகர்களிடம் வாங்க வேண்டியதை வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களை யார் தான் கேட்பது.

இதற்கு கோபப்பட முடியாமல் குடும்பஸ்தனாகி அதிக விலை கொடுத்தாவது டிக்கெட் வாங்கி ஊருக்கு சென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை தமிழன் ஆரூர் முனா செந்திலு.







Wednesday, October 19, 2011

கண்டுபிடியுங்கள் இது என்ன திருவிழா


இது என்ன பண்டிகை கண்டு பிடியுங்கள். நாம் இது போல் ஒரு திருவிழாவை கிருஷ்ணஜெயந்தி அன்று கண்டிருப்போம். மும்பையில் இது மிகப்பெரிய திருவிழா ஆனால் இது என்ன.?

"

"

"

"

"

"

"

"

"

இது ரக்சா பந்தன்.

எப்பூடி


ஆரூர் முனா செந்திலு




அனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா


நான் ஏற்கனவே ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்தவன். அங்கும் மற்ற துறையினரை விட இந்த HRDக்கள் மட்டும் லையில் கொம்பு முளைத்தது போல் நடந்து கொள்வர். பிரமோஷன், இன்க்கிரிமெண்ட், டிரான்ஸ்பர் பற்றி நாம் எந்த கோரிக்கை கொடுத்தாலோ அல்லது சந்தேகம் கேட்டாலோ ஏதோ அவர்கள் வேலையில் நாம் தலையிட்டு இடைஞ்சல் செய்தது போல நடந்து கொள்வர். இங்கு மட்டுமல்ல, எந்த ஐடி கம்பெனியிலும் அவர்கள் அப்படித்தான். சரி இவர்கள் தனியார் துறையில் அதிக சம்பளத்தில் இருப்பதனால் தான் இப்படி நடந்து கொள்கிறன்றனர் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நேற்று முன்தினம் வரை.

எனக்கு நேற்று முன்தினம் ரயில்வே வேலைக்கான சர்டிபிகேட் வெரிபிகேசன் சென்னை எழும்பூரில் உள்ள ஆர்.ஆர்.பி அலுவலகத்தில் நடந்தது. 12.45 மணிக்கு உள் செல்ல வேண்டும். என்னுடன் அதே நேரம் உள் செல்ல வேண்டியவர்கள் மொத்தம் 70 பேர். அவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் வடமாநிலத்தவர்கள். அவர்கள் அனுபவ அறிவும் குறைவு தான். புது இடம் என்பதால் அவர்கள் விசாரித்து வரவே சில நிமிடங்கள் நேரமாகிவிட்டது. அப்படி வந்தவர்களை ரயில்வே HRDக்கள் உள்ளேயே அனுமதிக்க மறுத்து விட்டனர். அவர்கள் கெஞ்சிய பிறகு ஒருவாறாக திட்டிக் கொண்டே உள்ளே அனுமதித்தனர்.

கவுன்சிலிங் துவங்கியது. நான் ஒரு விஷயத்தில் சொதப்பி விட்டேன். அதாவது அவர்கள் மொத்தம் 3 போட்டோக்கள் கேட்டிருந்தனர். ஆனால் நான் 2 போட்டோ மட்டுமே கொண்டு சென்றிருந்தேன். அவர்களில் ஒருவரிடம் விஷயம சொல்லி பத்து நிமிடம் டைம் கொடுங்கள். நான் சென்று ஸ்டுடியோவில் எடுத்துக் கொண்டு வந்து விடுகிறேன் என்றேன். உடனே அவர் போட்டோ இல்லையா, வெளியே போ உனக்கு வேலையில்லை என்றார். என்னடா இது வம்பாகிவிடடது. அவ்வளவு சிரமப்பட்டு எழுதி வாங்கிய வேலை ஒரு போட்டோ குறைந்ததால் இல்லையென்கிறார்களே என்று கடுப்பாகி விட்டது. வேறு வழி இன்றி பேசாமல் அமர்ந்தேன்.

கவுன்சிலிங்கில் இவர்கள் வடஇந்தியர்களை படுத்தியபாடு இருக்கிறதே, இவர்களுக்கோ இந்தி சரிவர பேச வரவில்லை. வடஇந்தியர்களுக்கோ இந்தியை தவிர வேறு மொழி தெரியவில்லை. அவர்களை பாடாய்ப்படுத்தி விட்டனர். போட்டோ சரியில்லை, கையெழுத்து சரியில்லை, கைரேகை சரியில்லை என்று அவர்களை பயமுறுத்தி வந்தனர். இரண்டு மணி நேரம் கழித்து என் முறை வந்ததும் என் பெயர் சொல்லி அழைத்தனர். நான் அவர்கள் டேபிள் முன் உட்கார்ந்தேன். போட்டோ இல்லை என்று நான் கூறிய நபர் மற்றவர்களிடம் இவன் போட்டோ எடுத்து வரவில்லை என்ன செய்யலாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர்களில் மலையாளி ஒருவர் என்னுடைய புரொபைலை எடுத்து அதில் ஏற்கனவே நான் அப்ளை செய்யும் போது அனுப்பி இருந்த எக்ஸ்ட்ரா போட்டோவை கொடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளும்படி கூறினார்.

ஒரு வழியாக கவுன்சிலிங் முடித்து வெளிவந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் மெடிக்கல் டெஸ்ட்டுக்கான லெட்டர் வீட்டுக்கு வரும் என்று கூறி அனுப்பினர்.

நான் உள்சென்று அமர்ந்ததிலிருந்து என்னை அழைக்கும் வரை எனக்கு 2மணிநேரம் இருந்தது. என்னை வெளியில் அனுப்பியிருந்தால் நான் பக்கத்தில் இருந்த ஸ்டுடியோவில் போட்டோவை பிரிண்ட் எடுத்து அதிகபட்சம் 15 நிமிடத்தில் உள்ளே வந்திருப்பேன். அதை விட்டு என்னை 2மணிநேரமும் டென்ஷனில் நகம் கடிக்க வைத்தவர்களை என்னவென்று சொல்வது

ஏன்
இந்த HRDக்கள் மட்டும் இப்படி நடந்து கொள்கின்றனர். இந்த துறைக்கு வந்தால் சட்டென்று கொம்பு முளைத்து விடுமா என்ன


ஆரூர் முனா செந்திலு





Tuesday, October 18, 2011

பருவ காலத்தில் சபலப்பட்டு வாங்கியது


அது புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடி எனது பெரியம்மா வீடு. நான் கோடை விடுமுறைக்காக செல்லும் வீடு. அங்கு என்னுடன் வயதையொத்த என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டு பையன் முத்துவீறு. நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலராக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது. வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம்.

அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். நாங்கள் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து என் பெரியம்மாவிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்..
அந்த பக்கம் நடைபெறும் கரகாட்டத்தில் கவர்ச்சி மிகத்தாராளமாக வே இருக்கும். அப்பொழுது தான் விடலைப்பருவம் என்பதால் அதைப் போன்ற கரகாட்டகங்ககளை கான்பதர்ர்காகவே செல்வோம்..

அந்த சிற்றூரில் திருவிழா நாங்கள் கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை உக்ஷார்பத்தினி ரெய்டு (அது சென்னையில் எங்கள் பகுதியில் உள்ள சங்கேத வார்த்தை) செய்யலாம் என்று பார்த்து அவளை சரி செய்யலாம் என்று, அங்ககிருந்து சிக்னல் பாஸ் செய்தால் அந்த பக்கம் இருந்தும் வந்தது. சரி என்று அருகில் சென்று தயங்கி கொண்டே மிக மெல்லிய குரலில் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள்.

முத்துவீறுவுக்கு இந்த செயல்களை எல்லாம் பார்த்தவுடன் நடுக்கம் ஏற்பட்டது. என்னிடம் வந்து வாடா நாம் வீட்டிற்கு செல்வோம் என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ என்றேன். முத்துவீறு சபலப்பட்டான் கூடவே பயமும் அவனுக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது கையால் சைகை செய்வது இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.

கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.

அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளிஏறினாள்.. முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். அவளை பின் தொடர்ந்தன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில என்னைப்பற்றியும் முத்துவீறுவைப்பற்றியும் கூறிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தன்.
ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் .

அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையறினாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உக்ஷராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த டேம் நோக்கி நகர்ந்தன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் நாங்கள் கணக்கு செய்ய துவங்கியதிலிருந்து வயல்காட்டிற்குள் உள்ளதுவரை அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.

அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குல்லேயே மண்டி போட்டு செல்ல ஆரம்பித்தோம் . விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை வரை வந்திருந்தோம் . பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம் . இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .

அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீர்று, அதேபோல் திருவிழா ஆனால் வேறொரு சிற்றூர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். ‘என்னடா முத்துவீறு ரெடியா’ என்று கேட்டு திரும்பிப் பார்த்தேன் . அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.

(இது ஒரு மீள் பதிவு. பதிவு எழுதத்துவங்கிய காலத்தில் எழுதப்பட்ட பதிவு. இப்பொழுது அதிக பதிவர்கள் படிப்பதால் மறு பதிவு செய்கிறேன்.)

ஆரூர் முனா செந்திலு




Monday, October 17, 2011

பெண்களின் நிராகரிப்பும் ஆண்களின் நிராகரிப்பும்


ஒரு ஆணை நிராகரிக்க, பெண்கள் சொல்லும் தலையாய பத்து காரணங்கள் (அதன் உண்மையான அர்த்தத்துடன்)

10) உன்னை என் சகோதரன் போல நினைத்துக்கொண்டிருக்கிறேன். (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் ஒரளவுக்கு வயசு வித்தியாசம் இருக்கிறது (நீ என் அப்பா மாதிரி இருக்கிறாய், அல்லது உனக்கு வழுக்கை விழுந்துவிட்டது)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ மிகவும் அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு ஆண் நண்பன் இருக்கிறான் (உன்னைப் பார்த்தால் என் வீட்டுப் பூனையும் அருண் ஐஸ்கிரீமுமே மேல்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு ஆளை காதலிப்பதை விரும்புவதில்லை (நீ உலகத்திலேயே, அல்லது இந்த பேரண்டத்திலேயே ஒரே ஒரு ஆண்மகனாக இருந்தாலும் உன்னை காதலிக்க மாட்டேன், ஒரே கட்டிடத்தில் இருக்கிறோம் என்பதற்காக காதலித்துவிடுவேனா ?)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் ( நீதான் காரணம்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (மகா அலுப்படிக்கும் என் வேலையே உன்னை விட பரவாயில்லை)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (உன்னைப் போன்ற ஆட்கள் இருப்பதால்தான்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நான் உன் கூடவே இருந்து நான் சந்திக்கும் ஆண்களைப் பற்றி எல்லாம் புகழ்ந்து உன்னை வெறுப்பேற்றத்தான்)

****

பெண்ணை நிராகரிக்க ஆண்கள் சொல்லும் காரணங்களில் தலையாயவை

10) உன்னை என் சகோதரி போல நினைக்கிறேன் ( நீ அசிங்கமாக இருக்கிறாய்)

9) நமக்குள் சிறிதளவு வயது வித்தியாசம் இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

8) உன் மேல் எனக்கு 'அதுமாதிரி ' கவர்ச்சி இல்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

7) என் வாழ்க்கை தற்சமயம் மகா சிக்கலாக இருக்கிறது (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

6) எனக்கு ஏற்கெனவே ஒரு பெண் நண்பி இருக்கிறான் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

5) நான் வேலை செய்யும் இடத்திலேயே ஒரு பெண்ணைக் காதலிப்பதை விரும்புவதில்லை (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

4) நீ காரணமில்லை, நான்தான் காரணம் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

3) இப்போதைக்கு என் வேலையில் முன்னேற உழைத்துக்கொண்டிருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

2) நான் திருமனம் செய்து கொள்ளவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன் (நீ அசிங்கமாக இருக்கிறாய்)

எல்லாவற்றிலும் தலையாய சொல்லப்படும் காரணம்.....

1) நாம் நண்பர்களாக இருப்போம்

(நீ உண்மையிலேயே படு அசிங்கமாக இருக்கிறாய் )


எப்பூடி
ஆரூர் முனா செந்திலு




Saturday, October 15, 2011

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை

காப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை என்று இப்போது ஒரு புது டிரெண்ட் துவங்கியுள்ளது. யார் ஏதாவது ஒரு புத்தகத்திலிருந்து மேற்கோள் காட்டி பதிவிட்டிருந்தாலோ அல்லது நாளிதழில் உள்ள கார்டூனை அதிலுள்ள குறைகளையோ அல்லது நமது கருத்தை பதிவிட்டாலோ சரி. உடனடியாக நீ காப்பியடிப்பவன். இந்த பதிவில் உள்ளது இந்த நாளிதழில் வந்துள்ளது என்று கூறி அனானிமஸ்ஸாக பின்னூட்டமிடுகிறார்கள். அடுத்தவர் குறையை சுட்டிக்காட்டும் அளவுக்கு சமூக பொறுப்புள்ளவன் என்றால் பெயரைப்போடு. இத்தனைக்கும் நான் எல்லாப்பதிவுகளையும் காப்பியடித்து போடுபவன் அல்ல. பத்தில் ஒன்று தான் இருக்கும். ஆனாலும் அதன் கீழ் நன்றி என்று எந்த பத்திரிக்கையோ அல்லது எழுதியவரின் பெயரைப் போட்டு விடுவேன்.

என்னால் ஒரு கவிதையை எழுத முடியாது. ஆனால் ரசிக்கத் தெரியும். ரசித்த கவிதையை என்னுடைய வலைப்பூவில் எழுதியவரின் பெயருடன் வெளியிட்டால் அது எப்படி காப்பி பேஸ்ட் ஆகும். அதற்கென்று வேறு நபர்கள் இருக்கிறார்கள். என்னுடைய விமர்சனத்தையே அப்படியே காப்பியடித்து தன்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பதிவரையும் நான் அறிவேன். இது அதற்காக எழுதப்பட்டது அல்ல, குறைகளை சுட்டுக்காட்டும் கோமகன்கள் தன்னுடைய பெயரைப்போடவே தைரியமில்லாதவர்கள் எப்படி சரியானவர்களாக இருக்க முடியும்.


ஆரூர் முனா செந்திலு





Thursday, October 13, 2011

தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படங்கள்


வரும் தீபாவளிக்கு தமிழ்த்திரையில் ஆறு படங்கள் வருவதாக இருந்தன. ஆனால் 7ம் அறிவு மற்றும் வேலாயுதம் என்ற இரண்டு புயல்களுக்கு முன்னால் வரவிருந்து ஒஸ்தி, மயக்கம் என்ன மற்றும் பல படங்கள் திரையரங்கு கிடைக்காத காரணத்தால் பின்வாங்கி விட்டன. இந்தியில் வெளியாவதால் ரா 1 தமிழ் டப்பிங் படமாக வெளிவருகிறது. சரி தீபாவளியன்று வரும் படங்களைப்பற்றிப் பார்ப்போம்.

1. 7ம் அறிவு
கஜினியின் வெற்றிக்கு பிறகு சூர்யா, .ஆர். முருகதாஸ் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் ரவி கே சந்திரன் வேறு இணைந்திருப்பதாலும், மேலும் இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குங்ஃபூ வை சீனா முழுவதும் பரப்பிய போதிதர்மரின் வரலாற்று தகவல்களும் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் வருவதாலும் படத்திற்கு எதிர்பார்ப்பு ராக்கெட் வேகத்தில் எகிறி இருக்கிறது. மேலும் கமலின் மகள் ஸ்ருதி ஹாசன் வேறு இதில் அறிமுகமாகிறார்.

எனது முதல் சாய்ஸ் தீபாவளியன்று 7ம் அறிவு தான். என்ன நான் அன்று திருவாரூரில் இருக்க வேண்டியிருப்பதால் நல்ல திரையரங்குகளில் பார்க்க முடியாது. திருவாரூரில் தான் பார்க்க வேண்டியிருக்கும். இத்தனைக்கும் படம் வெளியாகும் சென்னை திரையரங்குளின் லிஸ்ட்டைப் பார்த்தால் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு இந்தப் படம் பற்றிய பேச்சாகத்தான் இருக்கப் போகிறது. லிஸ்ட்டைப் பார்த்தால் சென்னையில் மட்டும் நூறு தியேட்டர்களுக்கு குறையாமல் வெளியாகும் என்று தெரிகிறது.

படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்

2. வேலாயுதம்
7ம் அறிவைப் போல் கதையைப் பற்றிய எதிர்ப்பார்ப்பு இல்லாமல் இருந்தாலும் விஜய் என்ற ஒரு பெயரே போதும் படத்தின் எதிர்ப்பார்ப்புக்கு. விஜய் மற்றும் ஜெயம் ராஜா இணைந்திருப்பதும் செலவு செய்ய அஞ்சாத தயாரிப்பாளர் என்று பெயர் எடுத்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பதாலும் இந்தப்படத்தின் எதிர்ப்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. இந்தப்படமும் சென்னையில் 7ம் அறிவு படத்திற்கு குறைவில்லாமல் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது. எனது ஊரான திருவாரூரில் இந்தப்படத்திற்குத்தான் 7ம் அறிவு படத்தை விட கூட்டம் அதிகம் இருக்கும் இந்தப்படத்திற்கு செல்வதற்குத் தான் சற்று சிரமப்பட வேண்டியிருக்கும். விஜயின் தனித்துவமே படம் போரடிக்காமல் சுமாராக இருந்தாலே ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிப் பெற்று விடும்.

அதிலும் டிரெய்லரில் பார்த்த சந்தானத்தின் ஒரு சிறு காமெடியே படத்தின் காமெடிக்கு எதிர்ப்பார்ப்பை தூண்டுகிறது.

படம் வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.

3. ரா 1
இந்தப் படமும் சும்மா இல்லை. இந்தி சினிமாவிலேயே மிகுந்த பொருட்செலவில் தயாராகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடந்துள்ளது. 3டியில் வேறு படம் வெளியாகிறது. மற்றும் எனது ஆதர்ச நாயகனாக ரஜினி சிறு வேடத்தில் நடித்திருப்பதும் படத்தை முதல் வரிசையில் வைத்துள்ளது. மேற்கூறிய இரு படங்களுக்கு நடுவில் இந்தப்படமும் சென்னையில் தரமுள்ள பல தியேட்டர்களில் வெளியாகிறது. நமக்குத்தான் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு பற்றி தெரியவில்லை. சில நாட்களுக்கு முன் நான் ஒரு தொழில் விஷயமாக வழக்கமாக செல்லும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள இந்தூர் என்ற ஊருக்கு சென்றிருந்தேன். எனக்கு தெரிந்து அந்த ஊரில் ஐம்பது தியேட்டர் உள்ளது. 90 சதவீத தியேட்டர்களில் ரா 1 படம் தான் ரலீஸ் ஆகிறது என்று அங்குள்ள என் நண்பர்கள் கூறினர். போபாலிலும் அதே நிலைமை தான்.

படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

ஒரு வருத்தம்
நேற்று மறுபடியும் வாகைசூடவா படம் பார்க்கலாம் என்று திரையரங்கிற்கு சென்றேன். ஆனால் பாருங்கள் நான் சென்ற அனைத்து தியேட்டர்களிலும் படத்தை எடுத்து விட்டனர். சில தியேட்டர்களில் மட்டும் ஒரு காட்சி ஓடுகிறது. பார்க்கவே முடியாத வெடி மட்டும் நான்கு காட்சிகளிலும் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் கூட்டத்தைத்தான் காணோம்.


ஆரூர் முனா செந்திலு






Tuesday, October 11, 2011

கேபிள் சங்கர் பிளாக்கர்களுக்கு உதவ வேண்டும்



இன்னாது சம்பந்தமில்லாமல் பதிவு இருக்கேன்னு யோசிக்கிறீங்களா, கேபிள் அண்ணன் பதிவுலகில் சூப்பர் ஸ்டார் போல, சும்மா அவர் பேரைப் போட்டே அவரவர்கள் பதிவை ஓட்டுகிறார்கள். இன்று கூட ஒரு பதிவு வெறும் நாலு வரியில் கேபிள் அண்ணன் பெயரைப் போட்டு அமோக ஓட்டம். அதான் நானும் கேபிள் அண்ணனின் பெயரைப் போட்டு என் பதிவை ஓட்டி விட்டேன். வரும் ஹிட்கள் பிளாக்குக்கு. வராத திட்டுகள் நல்லதுக்கு.

சத்தியமா இன்னைக்கு தண்ணியடிக்கலப்பா.

ஆரூர் முனா செந்திலு




Monday, October 10, 2011

பதிவிடுபவன் எல்லாம் முட்டாளா?

எவன்டா இந்த பதிவ கண்டுபிடிச்சது. என் கண்ணுல மாட்டுனான்னா அவனை நானே கழுத்தறுத்து கொன்னுபோட்டுடுவேன். கொல செய்ய தூண்டுறவனுங்களா, என்ன கொடுமைங்கண்ணா இது. இதுல விஷேசம் என்னவென்றால் ஏதோ ஓரு நாள் இணையத்தில் தேடிய போது ஒரு நாள் சவுக்கு அண்ணனின் பதிவு கிடைத்தது, அவருடன் தொடர்ந்த போது கேபிள் அண்ணன், உண்மைத்தமிழன் அண்ணன், ஜாக்கி அண்ணன் ஆகியோரின் பதிவு எனக்கு கிடைத்தது. அவர்களின் பதிவை படித்த போது தமிழில் எழுதுபவர்கள் பற்றி புளங்காகிதம் அடைந்தேன். சில நாட்களுக்கு பிறகு நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இது படிப்படியாக வளர்ந்து நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் ஒன்னு தான். சரி விடு.

ஐயா சாமி, எழுத்தாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. பதிவில் எழுதும் திறமையாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. ஏனென்றால் நான் படிப்பவன் மட்டுமே. இத்தனைக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். யாராவது என்னைப்போல் தமிழ்ப்புத்தகங்களை படிப்பவர்கள் யாராவது இருந்தால் நான் அவர்கள் காலில் மண்டியிடுகிறேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் குறைந்தது 10000. ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் நடந்ததல்ல. நான் பத்து வருடங்களில் புத்தக கண்காட்சியில் சேர்த்தது.

ஆனாலும் ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய பணக்காரனாக இருந்து ஒரே நாளில் பங்கு சந்தையில் ஒரு கோடிக்கு மேல் தங்கத்தில் விட்டவன் நான் . அதிலிருந்து மீளவே எனக்கு இரண்டு வருடம் பிடித்தது. அந்த இடைவெளியில் நான் இழந்தது பல லட்சம் ரூபாய்கள். எல்லாம் இழந்து ஊருக்கு போகும் போது கூட என்னுடன் வந்தது என் மனைவியுடன் சேர்த்து என் புத்தகங்கள் மட்டுமே,.

என்னால் மற்ற பதிவர்களின் பதிவை பாராட்டி அதன் மூலம் என் பதிவின் ஹிட் பெறவேண்டும் என்று நினைப்பவன் நான் அல்ல.

என்றாவது ஒரு நாள் இத்தனை புத்தகங்கள் படித்ததன் மூலம் நானும் ஓரு சவால் விடுகிறேன். என்னைப்போல் படித்துப்பாருங்கள். நீங்களும் ஒரு நாள் எழுத்தாளர் ஆவீர்கள் நன்றி.

ஆரூர் முனா செந்திலு.






ஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி

என் அப்பா ரிடையர்மெண்ட் அமெளண்ட் செட்டில்மெண்ட் கேஸூக்காக ஊரிலிருந்து வந்திருந்தார். அவருடன் இதே பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்த என் அப்பாவுடன் வேலை பார்த்த இருவரும் வந்திருந்தார்கள். வழக்கறிஞர் என் அப்பாவை அவருடைய சேம்பருக்கு அழைத்திருந்ததால்,அவருடன் நான் இன்று சென்னை கோர்ட் வளாகம் சென்றிருந்தேன்.எஸ்பிளனேடு நுழைவாயில் வழியாக மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

காலை 10 மணியிலிருந்து நுழைவாயிலில் காத்திருந்து அரை மணிநேரம் கழித்தே எங்களால் நுழைவாயிலை தாண்ட முடிந்தது. உள்ளே செல்லும் அனைவரையும் ஏதோ ஒரு ஐடிகார்டு காட்டினால் தான் உள்ளே அனுமதிக்கிறார்கள். உள்ளே சென்றதும் தீயணைப்பு அலுவலகம் மட்டும் வரை மட்டுமே பொதுமக்களின் டூவீலரை அனுமதிக்கிறார்கள். அங்கு வண்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல முயன்றால் அனுமதி சீட்டு தனியாக வாங்க வேண்டுமென்றும் அதற்கு ஒரு 4 சைஸ் பேப்பரில் அப்ளிகேசன் கொடுத்து அதனை நிரப்ப சொல்கிறார்கள். எங்களுக்கு வக்கீலின் போன் நம்பர் மட்டும் தெரியும் அவரின் ஐடி நம்பரெல்லாம் கேட்டு இருந்தது. நாங்கள் கோர்ட்டுக்கும் செல்லவில்லை. சேம்பருக்குள் சென்று எங்கள் வக்கீலை பார்த்து அவரிடம் உள்ள பாரத்தில் என் அப்பா ஒரு கையெழுத்து போட்டு விட்டு வர வேண்டும் அவ்வளவே.

வக்கீலுக்கு போன் செய்தால் அவர் எடுக்கவில்லை. என்னடா இது வம்பா போய் விட்டது. என் அப்பா இன்றிரவே திருவாரூருக்கு திரும்ப வேண்டும், நாளை அவருக்கு முக்கிய வேலை ஒன்று ஊரில் உள்ளது. ஒன்றும் புரியாமல் எங்கள் வழக்கறிஞருக்கு போன் செய்தே இரண்டு மணிநேரம் ஆகிவிட்டது. எங்களுக்கே இந்த நிலைமை, ஏதேதோ ஊர்களிலிருந்து அவ்வளவு விவரம் புரியாமல் எவ்வளவோ பேர் வந்திருந்து விழித்ததை பார்த்த போது வருத்தமாகத்தான் இருந்தது. பிறகு 12.30 மணியளவில் எங்கள் வக்கீல் போன் செய்து அவர் ஒரு கேஸ் விஷயமாக கோர்ட்டின் உள் இருந்ததால் போன் எடுக்க முடியவில்லை என்றும் தானே நுழைவாயிலுக்கு வந்து அழைத்து செல்வதாகவும் கூறினார். நான் மட்டும் வெளியில் நின்று கொண்டேன். அப்பா மற்றும் அவருடன் வந்திருந்த மற்ற இருவர் ஆகியோர் வக்கீலுடன் சேம்பர் உள் சென்றனர். வெளியில் நின்று கொண்டபடி மக்களை நோட்டம் விட்டு டைம்பாஸ் செய்து கொண்டிருந்தேன். அந்த சமயம் வெளியில் நூற்றுக்கணக்கானோர் பாரம் நிரப்பிக் கொண்டிருந்தனர். பாதிப்பேருக்கு விபரம் தெரியவில்லை. என்னால் முடிந்த அளவுக்கு குறைந்தது ஒரு இருபது பேருக்காவது பாரம் நிரப்பி கொடுத்தேன். அதற்குள் என் அப்பா வந்து விட்டார்.

இன்று தான் இந்த கெடுபிடிக்கு முதல் நாளாம், இது போன்ற கெடுபிடியையெல்லாம் கொஞ்சம் தளர்த்தி கொண்டு இருந்திருக்கலாம், அல்லது பாரம் நிரப்பும் இடத்தில் உதவிக்கென ஒரு ஐந்து பேரையாவது இருக்க வைத்திருந்தால் மக்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும். கோர்ட் என்பதே மக்களுக்காகத்தானே. அவர்களை தவிக்க விட்டு இந்த அளவுக்கு கெடுபிடி செய்தால் யாருக்கு என்ன பலன்.

பாதுகாப்பு முக்கியம் தான் இல்லையென்று சொல்லவில்லை. அதற்காக படிப்பறிவு குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாட்டில் இந்தளவுக்கு சிக்கலான வழிமுறைகள் தேவைதானா?


ஆரூர் முனா செந்திலு






Sunday, October 9, 2011

வேட்பாளர்களிடம் சிக்கி நான் படும் பாடு.


எனது வீடு ஆவடி நகராட்சி 9வது வார்டில் வருகிறது. ஆனால் எனக்கு ஒட்டு திருவாரூர் நகராட்சி 13வது வார்டில் இருக்கிறது. ஓட்டு போட நான் திருவாரூர் செல்ல வேண்டும். ஆனால் அதே தேதியில் எனக்கு ஆர்.ஆர்.பி சென்னை அலுவலகத்தில் சர்டிபிகேட் வெரிபிகேஷன் உள்ளது. எனவே இந்த தேர்தலில் என்னால் ஓட்டு போட முடியாது. ஆனால் பாருங்கள் எனக்கு வந்த சோதனை. ஆவடி நகராட்சி கவுன்சிலர் வேட்பாளர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தினமும் ஓட்டு கேட்டு எனது வீட்டிற்கு வருகிறார்கள். வாசலில் இருந்து அழைக்கிறார்கள் என்பதற்காக சட்டையை போட்டு வந்து அவர்களிடம் பேசினால் அவர்கள் அண்ணே எங்கள் வேட்பாளருக்கே ஒட்டு போட வேண்டும் என்றும், எங்கள் சாலை மோசமாக இருப்பதால் கண்டிப்பாக நாங்கள் சரி செய்து தருகிறோம் என்றும் கூறி செல்கிறார்கள், ஒரு முறை அல்லது சில முறை என்றால் பரவாயில்லை. ஒரு மணிநேரத்திற்கு ஒரு குழு வந்து ஒட்டு கேட்கிறது. நான் அவர்களிடம் எனக்கு ஒட்டு இந்த தொகுதியில் இல்லை என்று சொன்னாலும் ஒட்டு கேட்பது ஓய்ந்தபாடில்லை. அதே குழு ஒரு மணிநேரம் கழித்து வந்து என்னிடம் வந்து மீண்டும் ஓட்டு கேட்கிறது. இதில் ஒருவர் இருக்கிறார், ஒவ்வொரு குழு வரும்போதும் அத்தனை குழுவிலும் அவர் இருக்கிறார். அவருடைய வேலை வாழ்க சொல்வது தான். இந்த தேர்தல் முடியும் வரை அவருக்கு நல்ல வருமானம் தான். என் மனைவியோ வேலைக்கு சென்று விடுவதால் அவள் இந்த தொல்லையிலிருந்து தப்பித்து விடுகிறாள். நான் வீட்டில் தனியாக இருப்பதால் மாட்டிக் கொள்கிறேன். தேர்தல் முடியும் வரை என் பாடு திண்டாட்டம் தான்.

ஆரூர் முனா செந்திலு





Saturday, October 8, 2011

தவற விட்ட பதிவர் சந்திப்பு


இன்று காலை பிலாசபி பிரபாகரன் எனக்கு செல்லில் போன் செய்து இன்று மாலை பதிவர் சந்திப்பு இருப்பதாகவும் என்னை வரும்படியும் கூறினார். ஆனால் நான் என்ன செய்ய, முன்பே நான் என் அப்ரன்டிஸ் நண்பர்களுக்கு இன்று மதியம் நான் ஆர்.ஆர்.பி தேர்வில் தேர்ச்சியடைந்ததற்காக பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தேன். அது 12 மணியளவில் துவங்கியது. என் நண்பர்கள் கார்த்திக், கலாநிதி, சத்யா, தணிகா, மணி, ஜெகன், குட்டி, ஆனந்த் மற்றும் ரமணன் ஆகியோர் வந்திருந்தனர். துவங்கிய பார்ட்டி முடிய முடியவேயில்லை. மூணு மணிக்கு நான் பிரபாவுக்கு போன் செய்து என்னால் வரமுடியாது என்றும் அம்பத்தூரில் பார்ட்டி முடியவில்லை என்றும் கூறினேன். அவர் பரவாயில்லை என்றும முடிந்தவுடன் தனக்கு போன் செய்யும்படியும் கூறினார்.

கார்த்திக் நேரம் ஆக ஆக உளற ஆரம்பித்தான். பார்ட்டியில் கலாட்டா துவங்கியது. கடைசி வரை பார்ட்டி முடியவில்லை. சரி என்று பிரபாவுக்கு போன் செய்து வரமுடியவில்லை என்று கூறினேன். அவர் என்னை நாளை நடக்கும் இன்டிபிளாக்கர் கலந்துரையாரடலுக்கு வரும்படி கூறினார், ஆனால் என் அப்பா நாளை பகலில் திருவாரூரிலிருந்து ரயிலில் வருவதால் நான் எழும்பூரில் அழைத்து வர செல்ல வேண்டும் என்று கூறி வர முடியாததற்கான காரணத்தை கூறினேன். அவரும் ஒத்துக் கொண்டார்.

ஆனால் எனக்கு ஒரு ஆச்சரியம் என்ன வென்றால் நான் இது வரை பிலாசபி பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. இன்று தான் எனக்கு போன் செய்து தான் என்னை விட சிறியவென்று கூறினார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பரவாயில்லை, பதிவர்களே நாளை இன்டிபிளாக்கர் கருத்தரங்கில் ஒன்று கூடுங்கள்.

நான் அடுத்த சந்திப்பில் பதிவர்களை சந்திக்க வருகிறேன்,

நன்றி வணக்கம்

ஆரூர் முனா செந்திலு,




ஊழலுக்கான நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் இந்தியருக்கே

ஒவ்வொரு ஆண்டு மட்டுமல்ல. காலம் முழுவதும் அது இந்தியருக்கே

நன்றி : தினமணி

ஆரூர் முனா செந்திலு

நண்பர்களே என்றும் மாறாதவர்கள்

அகில இந்திய அளவில் நடந்த செக்ஷன் இஞ்சினியர் பதவிக்கான நடந்த ஆர்.ஆர்.பி நுழைவுத் தேர்வில் பல லட்சம் பேர் எழுதினர். அதில் தேர்வானவர்கள் வெறும் முப்பந்தைந்து பேர் மட்டுமே. இதில் நானும் ஒருவன். தேர்வானதால் என் சுற்றத்தார்கள் எனக்கு கொடுக்கும் பாராட்டு இதுவே.

என் அப்பா : என் பையன்னு நிரூபிச்சிட்டடா
என் அம்மா : எல்லாம் திருவாரூர் தியாகராஜர் சுவாமிகளின் அருளால் கிடைத்து விட்டது.
என் மனைவி : உங்க அறிவுக்கு முன்னால் இந்த தேர்வு சாதாரணம்டா, லவ் யூடா (செல்லமா டா போட்டுத்தான்ங்க கூப்பிடுவா)
என் தம்பி : நீ என் அண்ணன்னு சொல்றதுக்கே பெருமையா இருக்குடா
நான் படித்த ஐசிப் தொழில்நுட்ப கல்லூரியின் பிரின்சிபால் : நீ எழுதும் போதே எனக்கு தெரியும்டா, இந்த தேர்வில் தேர்வாகிவிடுவாய் என்று
என் நண்பர்கள் : மச்சான் பார்ட்டி டா (தேர்வு முடிவு வந்ததிலிருந்து வாரம் குறைந்தது மூன்று முறை நடக்கிறது.)


ஆனால் ஒரு வேளை நான் தேர்வாகியிருக்கா விட்டால் இவர்கள் என்ன சொல்லியிருப்பார்கள் என்று யோசித்த போது,


என் அப்பா : பொறுக்கி, தருதல நீயெல்லாம் திருந்தவே மாட்டடா
என் அம்மா : எப்பப் பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்திருந்தா எப்படிடா பாஸாவ
என் மனைவி : நீ தேர்ச்சியடையாததற்கு நான் தான் காரணம்னு என் தலை உருளப் போகுது, உன்னை கட்டுனதுக்கு எனக்கு இதுவும் தேவை தான்.
என் தம்பி :நீ பனிரெண்டாவதுலேயே சங்கீதாவை சைட் அடிச்சு கோட்டை விட்டவன், இதுல மட்டுமா திருந்திடுவ.
நான் படித்த ஐசிப் தொழில்நுட்ப கல்லூரியின் பிரின்சிபால் : நீ படிக்கும் போதே குடிச்சிட்டு வந்து வகுப்பில் உட்கார்ந்தவன், நீ எழுதும் போதே எனக்கு தெரியும்டா பிரம்மஹத்தி
என் நண்பர்கள் : மச்சான் பார்ட்டி டா

வெற்றியிலும் தோல்வியிலும் தன்நிலையை மாற்றிக்கொள்ளாதவர்கள் என் நண்பர்களே, நண்பர்கள் வாழ்க,

ஆரூர் முனா செந்திலு




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...