சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, April 7, 2011

ப்ளூ பிலிம் பார்த்த போது . . .

அப்பொழுது எனக்கு வயது 16. பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். தஞ்சையில் உள்ள எனது அத்தை வீட்டிற்கு சென்று அங்குள்ள எனது நண்பர்களுடன் விடுமுறையில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்த நேரம்.

ஒரு சிகரெட் வஅந்த சமயம் ராணிபேரடைஸ் தியேட்டரில் சிராக்கோ என்ற ஆங்கிலப்படம் அதுவும் ஏ படம் வந்திருந்தது. நாங்கள் படத்தை பலமுறை சென்று பார்த்து அதில் வரும் ஒரு குதிரை சீனை பற்றி சிலாகித்து பேசிக் கொண்டிருப்போம்.

அந்த சிராக்கோ படம் அந்த தியேட்டரில் 100 நாட்களை கடந்து ஒடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எனது நண்பர்களில் ஒருவனான சரண் வீட்டில் வீடியோ கேசட் பிளேயர் இருந்தது.

நாங்கள் அவர்கள் வீட்டில் யாருமில்லாத ஒரு நாளில் எப்படியும் ப்ளு பிலிம் கேசட் வாங்கி பார்த்து விடுவது என்று முடிவு செய்து அதற்காக அவர்கள் வீட்டில் எப்பொழுது வெளியில் செல்வார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம்.


அந்த நாளும் வந்தது. ஒரு நாள் அவர்கள் வீட்டில் எல்லோரும் திருப்பதி செல்ல முடிவெடுத்தார்கள் சரணை தவிர. எங்களுக்கு இரண்டு நாட்கள் கிடைத்தது. அவர்கள் அன்று காலை 11 மணியளவில் டாடா சுமோவில் கிளம்பினார்கள்.

அவர்கள் செல்லும் வரை நல்லவர்கள் போல் நெற்றியில் பட்டை போட்டு காத்திருந்த நாங்கள் அவர்கள் சென்ற பின் மூன்று சைக்கிளில் மூவர் மூவராக மொத்தம் ஒன்பது பேர் கிளம்பினோம். மருத்துவ கல்லுரி சாலையில் பாலாஜி நகரில் இருந்த ஒரு வீடியோ கடைக்கு சென்று ஐந்து கேசட் வாங்கினோம்.

அதில் தமிழ் இரண்டு, ஆங்கிலம் இரண்டு மற்றொன்று நண்பன் தினேஷ் விருப்பப்பட்டதால் விலங்கு சம்மந்தப்பட்டது. அவற்றை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வேகுவேகு வென்று சைக்கிளை மிதித்து கொண்டு சரண் வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

என் அத்தையிடம் என் நண்பன் வீட்டில் யாருமில்லை என்றும், அதனால் அங்கு இரவு தங்குவதாக கூறி விட்டேன். என் நண்பர்களும் அதைப்போல். வீட்டுக்காவலுக்காக ஒருவன் வாசலில் இரண்டு மணி நேரம் படிப்பது போல் உட்கார்ந்திருக்க வேண்டும். பிறகு மற்றொருவன் என எங்களுக்குள் ஒப்பந்தம். படம் ஒட ஆரம்பித்தது.

ஆகா அந்த நாட்களில் பார்ப்பதில் இருந்த சந்தோஷம். இரண்டு நாட்களும் முடிந்தது. மறுநாள் மாலை 3 மணிக்கு அவர்கள் வீட்டிற்கு போன் வந்தது. அவர்கள் திருப்பதியிலிருந்து கிளம்பி விட்டதாகவும் 5 மணிக்கு வீட்டிற்கு வந்து சேருவதாகவும் கூறினார்கள்.

நாங்கள் அவர்கள் வருவதற்கு அரைமணிநேரம் முன்பு வரை பார்ப்பது 04.30க்கு கிளம்பி விடுவது என்று முடிவு செய்தோம். ஆனால், நாங்கள் படம் பார்த்துக் கொண்டிருந்த போது சரியாக 4 மணிக்கு கரண்ட் கட் ஆனது. எங்களுக்கு பக் என ஆனது.

அவர்கள் வருவதற்குள் கேசட் பிளேயரில் இருந்து கேசட்டை எடுக்க வேண்டும். உடனே ஆளுக்கொரு திசைக்கு கிளம்பினோம். எந்த பகுதியில் கரண்ட் உள்ளதோ அங்கு பிளேயரை எடுத்து சென்று கேசட்டை வெளியில் எடுக்கலாம் என்று கிளம்பினோம்.

ஆனால் நான் எனது பகுதிக்கு சென்று அங்கு பேன்சி ஸ்டோர் வைத்திருந்த என் மாமாவை கேட்டேன். அவர் எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்து விட்டதாகவும் 7 மணி வரை கரண்ட் வராது என்றும் கூறினார். எனக்கு பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது. வீட்டில் இருந்த சரணிடம் போன் செய்து கூறினேன். அவன் அழ ஆரம்பித்தான்.

அவனிடம் நண்பர்கள் அனைவரையும் அவர்கள் உனக்கு போன் செய்தால் வீட்டிற்கு வர சொல் என்று கூறிவிட்டு அவன் வீட்டிற்கு விரைந்தேன். எங்கள் குழுவில் ஒருவனான சிங்கமுத்து ஒரு யோசனை கூறினான். ஏதாவது ஒரு கடையில் ஜெனரேட்டர் இருக்கும் அங்கு கூடுதலாக பணம் கொடுத்தால் அங்கு கேசட்டை வெளியில் எடுத்து விடலாம் என்று கூறியது சரியாக படவே அதன் படி யூகோ பேங்க் அருகிலிருந்த ஒரு எலட்ரானிக்ஸ் கடைக்கு எடுத்து சென்று கூடுதல் பணம் கொடுத்தோம்.

அப்பொழுது மணி நாலே முக்கால். அவர் கேசட்டை வெளியில் எடுத்துக் கொடுத்தார். மற்றவர்களை அவரவர் வீட்டிற்கு செல்ல சொல்லிவிட்டு அங்கிருந்து சைக்கிளை மிதித்துக் கொண்டு நானும் சரணும் கிளம்பினோம். என் வாழ்நாளில் அவ்வளவு வேகமாக நான் சைக்கிளை ஒட்டியதில்லை. நான் அவனை வீட்டு வாசலில் இறக்கி விட்டு கிளம்பினேன்.

அவன் பிளேயரை வைக்கவும் அவர்கள் வரவும் சாpயாக இருந்தது. இன்று காலம் எங்களை ஒவ்வொரு திசைக்கு அனுப்பி விட்டது. சரண் மருத்துவம் முடித்து புதுதில்லியில் நரம்பியல் மருத்துவராக பணிபுரிகிறான். எப்பொழுதாவது சந்திப்போம்.

பத்து நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் நான் நின்று கொண்டிருந்த போது மாப்ளே என்று சத்தம் வந்தது. யாரவன் என்று திரும்பி பார்த்தால் சரண், அவனுடன் சிங்கமுத்து மற்றும் அதேகுழுவில் இருந்த மற்ற இருவர். அது விமான நிலையம்,

நாங்கள் கௌரவமான நிலையில் இருக்கிறோம் என்பதை மறந்து அனைவரையும் கட்டித்தழுவி வெளியில் வந்து பழைய முறைப்படி பில்டர் கோல்ட் பிளேக் சிகரெட் வாங்கி ஆளுக்கொரு பப் இழுத்து அன்றை தினம் நாங்கள் பட்ட பாட்டை திரும்ப நினைவுக்கு கொண்டு வந்து சிரித்து கொண்டிருந்தோம். பிறகென்ன மெரிடியன் ஹோட்டலுக்கு வந்து தாகசாந்தி தான். ஆகா அந்தநாட்கள் இனி கிடைக்காது.


ஆரூர் முனா


11 comments:

  1. ம்..கிளுகிளுப்பு..திரில்..னு எல்லாம் கலந்த ஒரு அனுபவம்.நல்ல ஃப்ளாஷ்பேக்..

    ReplyDelete
  2. எனக்கும் இதுபோலான அனுபவம் உண்டு. படிக்கும் போது அதை நினைத்து சிலாகித்தேன்.

    ReplyDelete
  3. தலைவா ரொம்ப நாளா மறந்திருந்த சிராக்கோவை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி இந்தப்பதிவின் மூலம் நானும் நன்பர்களை நினைத்து மகிழ்ந்தேன் நன்றி மீண்டும் நன்றி அந்த குதிரை சீனை இன்னமும் நாங்கள் சிலாகித்து பேசுகிறோம் அதைவிட (மோஷமான)போர்னோ படங்களை பார்த்தபின்பும்

    ReplyDelete
  4. சிராக்கோவை ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  5. Balaji nagar, Balaji videos shop. enakkum antha anubavam undu.. :)

    ReplyDelete
  6. நண்பரே...... இதே இதே இதே அனுபவம் எனக்கும் இருக்கு ! சேம் பின்ச் :-)

    ReplyDelete
  7. இந்த அனுபம் இல்லாத மனிதர்கள் குறைவே

    ReplyDelete
  8. இதே மலரும் அனைவர்க்கும் இருக்கும் வாசம் மட்டும் மாறலாம் ........ இனிமையான பகிர்வு அண்ணா ......

    ReplyDelete
  9. இதே மலரும் நினைவுகள் அனைவர்க்கும் இருக்கும் வாசம் மட்டும் மாறலாம் ........ இனிமையான பகிர்வு அண்ணா ......

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...