சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, November 29, 2012

மும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா

நான் அப்பொழுது திருவாரூரில் பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயம், என் சித்தப்பா ஒருவர் ரேஷன் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அவரைப்போல் ஒரு நபரை வேறு எங்கும் பார்க்க முடியாது. மனிதர் பழகுவதற்கும் அடுத்தவருக்கு ஒரு உதவி என்றால் முன்னின்று செய்வதற்கும் அவரைப்போல் ஒருவர் கிடையாது.  

ஆனால் அவர் ஒரு ஜொள்ளர். வயது வித்தியாசமெல்லாம் அவருக்கு கிடையாது. யார் ஒருவர் புடவைக்கட்டிக் கொண்டு அவரது கடைக்கு வந்தாலும் அவரிடம் வழிந்து பேசுவார், அதுவும் அழகாக இருந்து விட்டால் இலவசங்கெலல்லாம் கிடைக்கும். அதில் சிலவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார், லவற்றில் செருப்படியும் பட்டுள்ளார்.

எங்கள் சொந்தங்களில் எந்த வீட்டு விசேஷம் என்றாலும் அவரே முக்கியஸ்தர் ஆகிவிடுவார், அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப் போட்டு செய்வது என் வயதையொத்த பசங்களை வேலை வாங்குவது எல்லாம் அவரே, ஆனாலும் அவர் சொல்லும் வேலைகளை நாங்கள் விரும்பி செய்வதற்கு காரணம் அவர் சொல்லும் அவரது வாழ்வில் நடந்த கிளுகிளு தைகள்

நாம் நம் வயதில் பார்க்கும் கிழவிகளை பற்றிய டீன்ஏஜ் கதைகலெல்லாம் அவரிடம் இருக்கும். எங்களுக்கெல்லாம் அவர் கதாநாயகர், ஏனெனில் எங்களுக்கு அப்பொழுது பதின்வயது என்பதால் பெண்களைப்பற்றிய ஆர்வமிக்க வயது என்பதால் தான்.

எங்கள் தாத்தா நாங்கள் அவரிடம் சுற்றிக் கொண்டிருக்கும்போது எல்லாம் பசங்களை எல்லாம் உன் போல் ஆக்கிவிடாதே என்று எஙகள் சித்தப்பாவை திட்டிக் கொண்டிருப்பார், இதில் நாங்கள் நாங்கள் நான் கூறுவது நான், என் அத்தை மகன் சதீஷ் (தற்பொழுது மன்னார்குடியில் பேருந்து நிலையம் எதிரில் புட்பிளாசா என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறான்),என் சித்தப்பா மகன் வினோத் (தற்பொழுது ஹூண்டாயில் இன்ஜினியர்),என் மாமா மகன் ஜானகிராமன் (தற்பொழுது அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்) ஆகியோர் தான்.

இந்நிலையில் எங்கள் சித்தப்பா அவரது கூட்டுறவு சங்கத்தின் சார்பாக ஒரு பணிநிமிர்த்தமாக மும்பைக்கு முதல் முறையாக செல்ல வேண்டியிருந்தது. அவரோ அதுவரை ஒருங்கிணைந்த பழைய தஞ்சாவூர் மாவட்டம், பழைய திருச்சி மாவட்டம் ஆகியவற்றை விட்டு வெளியில் சென்றதில்லை. வெளியூர் செல்வதால் அதுவரை பேண்ட் போடாத அவர், புதிதாக கடைக்கு சென்று புது பேண்ட், புது சட்டை, புது ஷு ஆகியவற்றை வாங்கி வந்தார், புதிதாக ஹேர் டை அடித்துக் கொண்டார்

எங்களுக்கெல்லாம் திடீரென்று அவரின் செய்கை வியப்பை அளித்தாலும் நாங்களும் அவருக்கு கிளம்புவதற்குரிய உதவிகளை செய்து வந்தோம், ரு நாள் அதிகாலை சைக்கிள் எடுத்து வீட்டுக்கு வந்து என்னை அழைத்தார், என்னவோ ஏதோவென்று அவருடன் சென்றேன். என்னவென்று விசாரித்தால் அவருக்கு மும்பை செல்வதால் ஹிந்தியில் ஒரு வார்த்தை தெரிந்து கொள்ள வேண்டும், பக்கத்து ஊரில் ஆந்திராவில் வேலை செய்த ஒருவன் இருக்கிறான், அவனிடம் கேட்டு தெரிந்து கொள்வோம் என கூறினார், சரி என்று அவருடன் சென்று பக்கத்து ஊருக்கு சென்று தேடி வந்தவரை அணுகி கேட்டால் அவரோ தனக்கு தெலுங்கு மட்டுமே தெரியுமென்றும், ஹிந்தி தெரியாது என்றும் கூறி விட்டார், நாங்கள் ஊருக்கு திரும்பி விட்டோம்.

என்னை வீட்டில் இறக்கி விடும்போது சித்தப்பா நீ யாராவது ஹிந்தி தெரிந்தவர் இருந்தால் விசாரித்து வை நாம் சென்று அவரிடம் அந்த வார்த்தையை கற்று வருவோம் என்றார், நானும் என் உறவுக்கார பசங்களும் அவருக்காக தேடியலைந்தால் இரண்டு நாட்களாக யாரும் கிட்டவில்லை, இரண்டு நாள் கழித்து வடஇந்தியாவிலிருந்து செட்டியார் கடைக்கு லோடு ஏற்றி லாரி வந்ததாகவும் அவர்களிடம் கேட்டால் தெரியும் என்று கேள்விப்பட்டு சித்தப்பாவை அழைத்துக் கொண்டு சென்றேன்.அவர்களிடம் விசாரித்தால் அவர்கள் ததக்கா பிதக்கபவென பிதற்றினார்கள், பிறகு தான் தெரிந்தது வந்தவர்கள் ஒரிசாக்காரர்கள் அவர்களுக்கும் இந்தி தெரியவில்லை என்று. நொந்துகொண்டே திரும்பி வந்தோம்.

சித்தப்பாவுக்கு செல்லும் நாள் நெருங்கி கொண்டு வந்தது. அப்பொழுது என் நண்பன் பிரசாத் ஒரு ஐடியா சொன்னான். எங்கள் ஊரில் கமலாலயம் தென்கரையில் ஹந்தி டியூசன் சென்டர் இருப்பதாகவும் அங்கு சென்றால் உங்கள் சித்தப்பாவுக்கு வார்த்தைக்கு அர்த்தம் கண்டு பிடித்துவிடலாம் என்றும் கூறினான். மிகுந்த சந்தோஷத்தோடு சித்தப்பா வீட்டுக்கு சென்று அவரிடம் செய்தியை கூறினேன்.  

அவரும் என்னுடன் புறப்பட்டு வந்தார். அவரிடம் சென்று சித்தப்பாவை அந்த ஹிந்தி வார்ததையை கற்றுக் கொள்ளக் கூறினேன். அவர் டியூசன் சென்டர் உள்சென்று சிறிது நேரம் கழித்து சந்தோஷமாக வந்தார். வெளியில் வந்த ஹந்தி வாத்தியார் வெளியில் வந்து தலையில் அடித்துக் கொண்டு இவரையெல்லாம் ஏன் அழைத்து வந்தீர்கள் என்று அலுத்துக் கொண்டார்.
எல்லாம் சரி என்னடா ஓவர் பில்ட்அப் செய்கிறாயே, அந்த வார்த்தை என்னவென்று கேட்கிறீர்களா? அது பெரிய காமெடி, நம்ம சித்தப்பு மும்பை போய் பலான இடத்துக்கு போனா அங்க பேசறதுக்கு கத்துக்கிட்டு போன வார்த்தை "பூரா கப்டா நிக்காலோ". இதுக்கு என்ன அர்த்தம்னு கேட்குறீங்களா, எல்லா துணியையும் கழட்டுன்னு அர்த்தம், எப்பூடி

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, November 28, 2012

மலேசியா மற்றும் சவுதி அரேபியாவில் பணிபுரிய வேலை வாய்ப்பு

 DP10 VISA

URGENT REQUIREMENT – CNC LATHE (TURNING) – MALAYSIA

Our Reputed Client in Malaysia required workers as Details as Follows…,

Working Experience Preferable Experience 20 Workers.:

CNC (Turning) Lathe operating / Setting & Programming Mazak and Howchean Machine Model
Mazak or Fanuc Machine Control. Machining oil & Gas products such as Valves, Pinions and etc
Must understand Drawings. Must work Independently.

Diploma or Degree ( ITI not Required ) More than 5 years.

Malaysian or Singapore companies. Well Communication Skill Must be in English.

Basic RM2000 to RM4000.

Free – Provided by Company.

Kindly Send the Suitable Bio-Datas at Earliest.

Required Datas..

Resume (Microsoft Word Format).
Diploma / Degree Certificate – Scan Copies.
Any Other Course / Skill Certificates – Scan Copies.
Experience Certificates – Scan Copies.
Passport First & Last Page – Scan Copy.
Colour Photo – Scan Copy.

-----------------------------------------------------------------------

A Leading KOREAN MNC Groups For SAUDI ARABIA
Delegates Interview on Saturday 1st & Sunday 2nd December2012, @ Chennai

WELDER ( TIG ) Certified with Min 04 Yrs exp  - US$ 700(For Indian money :
Rs.38,687)

WELDER ( ARC ) Certified with Min 04 Yrs exp - US$ 500(For Indian money :
Rs.27,634)

PIPE FITTER- Certified with Min 04 Yrs exp - US$ 450(For Indian money : Rs.
24,870 )

IRON WORKER- with Min 04 Yrs exp - US$ 450(For Indian money : Rs.
24,870 )

SCAFFOLDER- Certificate with Min 04 Yrs exp - US$ 500(For Indian money :
Rs.27,634)

RIGGER- Certified with Min 04 Yrs exp - US$ 450(For Indian money : Rs.
24,870 )

LABOUR / HELPER - US$ 250(For Indian money :   Rs.13,817)

QC INSPECTOR ( WELDING ) Degree / Diploma with Min 04 Yrs exp - US$ 1500 TO 2500(For Indian money : Rs.82,902 to Rs. 138,171 )

PIPING FOREMAN- Degree / Diploma with Min 04 Yrs exp US$ 650(For Indian money :
Rs .35,924)

SCAFFOLDING FOREMAN- Diploma with Min 05 Yrs exp - US$ 750(For Indian money :
Rs .41,451)

IRON WORKER FOREMAN- Diploma with Min 05yrs exp - US$ 750(For Indian money :
Rs .41,451)

RIGGING FOREMAN- Min 03 Yrs exp - US$ 700(For Indian money :Rs.38,687)

SAFETY OFFICER- Diploma with Min 05 Yrs exp - US$ 600(For Indian money :Rs.33,161)

PAINT SUPERVISOR- Min 04 Yrs exp in same field - US$ 600(For Indian money :Rs.33,161)

ADMIN STAFF- Min 05 Yrs exp - US$ 600(For Indian money :Rs.33,161)


MATERIAL CONTROL STAFF- Min 03 Yrs exp in same field - US$ 600(For Indian money :
Rs.33,161

DOCUMENT CONTROLLER- Min 04 Yrs exp - US$ 600(For Indian money :Rs.33,161)


ALL ABOVE CANDIDATE MUST HAVE EXPEREINCE MINIMUM 4 YEARS

Working Hours – 8 hours
Food - FREE
Accommodation - FREE
Transportation – FREE
OT(Over Time) – Compulsory
Contract Period - 2 years
Other Benefits as per Company norms

விருப்பமுள்ள தோழர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Friday, November 23, 2012

தமருகம் - என்னை புடிச்ச கெரகம்

வெள்ளிக்கிழமையானால் படம் பார்த்து பழகிப் போச்சு. இன்னைக்கு படம் பார்த்தாக வேண்டும் என கை அரித்தது. சொல்லிக்கிற மாதிரி ஒரு படமும் இல்லை. சரி மாற்று மொழிக்கு தாவலாம் என்று முடிவெடுத்து தேடினால் தமருகம் என்ற படம் ரிலீஸ் என்று போட்டிருந்தது.

போஸ்டரைப் பார்த்தால் நூறு அகோரிகள் நாகார்ஜூனாவையும் அனுஷ்காவையும் வெறி கொண்டு துரத்தி கொண்டு இருந்தார்கள். செம வேட்டை தான் முடிவு செய்து திரையரங்கிற்கு போனால் சிரித்து சிரித்து வாய் வலித்து ரசித்து பார்த்தேன். அப்புறம் உங்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் போனால் சிவன் கண்ணை குத்தி விடுவார்.

சத்தியமாக இந்தப்படம் தமிழுக்கு வரப் போவதில்லை என்பதால் முழு கதையையும் உங்களுக்கு சொல்லுகிறேன்.

ரவிசங்கர் ஒரு அசுரன். அதாவது பழைய காலத்தில் தேவர்கள் அசுரர்கள் என்று இருப்பார்களே அந்த அசுரன். இத்தனை காலங்கள் கழித்து அசுர குலத்தில் அவர் மட்டுமே உயிருடன் இருக்கிறார். ஆந்திராவில் தெலுகு பேசிக் கொண்டு இருக்கும் ஒரு சிறுவன் இருக்கிறான்.

பிற்காலத்தில் அந்த சிறுவன் தான் வளர்ந்து அவரை கொல்லப் போகிறான் என்று தன் குருவினால் அறியும் அசுரன் முரட்டு விலங்கு உருவம் எடுத்து அவர் குடும்பத்தில் அனைவரையும் கொல்லுகிறது. சிறுவனை கடுமையான ஆழம் இருக்கும் ஆற்றுக்குள் தள்ள அந்த ஆற்றின் அடிப்பகுதியில் நெடுநாட்களாக தவம் இருக்கும் ஒரு முனிவரின் கையில் விழுகிறான் அந்த சிறுவன்.

சிறுவனது தங்கைக்கு அடிபட்டு உணர்ச்சிகள் தலைக்கு கீழ் இல்லாமல் இருக்கிறது. சிவன் தான் தன் குடும்பம் இறந்து போனதற்கு காரணம் என்று நினைத்து சிவனே தனக்கு முதல் எதிரி என்று அறிவித்து அந்த காட்டுக்குள் இருக்கும் சிவனின் சிலை மீது தனது ருத்திராட்ச மாலையை கழற்றி வீசுகிறான்.

எல்லாரையும் அழித்து விட்டதாக குருவிடம் ரவிசங்கர் சொல்ல உனக்கு உலகம் அடிமையாக வேண்டுமென்றால் ஐந்து கிரகம் ஒன்று சேர்ந்த நேரத்தில் சிவகோத்திரத்தில் பிறந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டுமென வேண்டி சிவனை நோக்கி தவம் இருக்க சொல்லுகிறான். ரவிசங்கரும் தவம் இருக்க தொடங்குகிறார்.

பெயர் போட்டு முடித்து மெயின் லைனுக்கு இருபது நிமிடங்களுக்கு பிறகு வருகிறார்கள். ஹீரோயின் அறிமுகம். கதைப்படி அனுஷ்கா ஒரு டாக்டர். சிவன் கோயில் தேரை இழுக்க மொத்த ஊரும் முயற்சிக்க தேர் நிலையடியை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டேன் என்றகிறது. அனுஷ்கா வந்து இழுத்ததும் தேர் நகர துவங்குகிறது. தியேட்டரில் இருந்த 20 பேரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

அடுத்தது ஹீரோ அறிமுகம். அந்த கோயிலில் இருந்து 50 லட்சம் பணத்தை நால்வர் கொண்ட குழு வந்து கொள்ளையடித்து விட்டு செல்கிறது. போலீஸ் துரத்த தொடங்க இவர்கள் உடனடியாக ஒரு கண்டெயினர் நிரம்பியிருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள். அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

நம்மை யார் காப்பாற்றுவார் என்று ஒருவன் கேட்க கொள்ளைக்கூட்டத் தலைவன் நம்மை காப்பாற்ற ஒருவன் இருக்கிறான். அவன் வில்லனுக்கு எல்லாம் வில்லன், இப்ப வருவான் என்று சொல்ல ஹீரோ அந்த இடத்திற்கு சரியாக வருகிறார். அவர்களை தனது காரில் ஏற்றி வீலிங் செய்து காரை ஓட்டுகிறார். காரின் முன் சக்கரத்தை தூக்கி காரை எடுக்கிறார். என்ன ஒரு ஹீரோயிசம்.

ஒரு வார்த்தை கூட தெலுகு தெரியாத என் நண்பன் ஓருவன் என்னுடன் படம் பார்க்க வந்திருந்தான். இந்த காட்சியிலேயே அவனுக்கு காதில் ரத்தம் வந்து விட்டது.

20 வருடம் தவமிருந்து சிவனிடமிருந்து அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள சம்மதம் வாங்குகிறான் அசுரன். கிரகணம் அன்று கோயிலுக்குள் குளித்துக் கொண்டிருக்கும் அனுஷ்காவை வெறி கொண்டு பார்க்கிறான். அவளை திருமணம் செய்து கொள்ள அடுத்த கிரகணம் வரை காத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஹீரோ ஒருநாள் குடித்து விட்டு சிவன் கோயிலி்ல் வந்து சண்டையிட்டு செல்ல சிவன் அவனை காப்பாற்ற பிரகாஷ்ராஜ் வேடம் பூண்டு வருகிறார். குடித்து விட்டு தண்டவாளத்தில் கிடக்கும் ஹீரோவை ரயிலில் அடிபடாமல் காப்பாற்றுகிறார். என் நண்பன் என்னை முறைக்க ஆரம்பித்தான்.

சிவன் ஹீரோவுக்கு ப்ரெண்ட்ஷிப் டேவுக்காக பரிசு அளிக்கிறார். ஹீரோயினும் வந்து நட்பு கயிறு கட்டி விடுகிறார். ஹீரோவுக்கு காதல் பூத்து விடுகிறது. ஒரு பாட்டு அட்டகாசமான டிஆர் டைப் செட்டில் வருகிறது.

ரொம்ப லெங்த்தா போகுதா. சரி சரி டக்குனு முடிச்சிக்கிறேன். வில்லன் அனுஷ்காவை கைப்பிடிக்க கணேஷ்வெங்கட்ராமின் உருவில் வருகிறார். சிவனை நாகார்ஜூனாவிடம் இருந்து சதி செய்து பிரிக்கிறார். அப்பாவி சிவனும் ஒன்னும் செய்யாமல் ஹீரோவை அம்போவென விட்டு செல்கிறார்.

துணையில்லாத நாகார்ஜூனா எப்படி அசுரனிடம் இருந்து அனுஷ்காவை மீட்டு டூயட் பாடுகிறார் என்பதே மீதிக் கதை.

என் நண்பன் படம் முடிந்ததும் என்ன செய்தான் என்று சொன்னால் அது என் கெளரவத்தை பாதிக்கும் என்று நான் நினைப்பதால் அதனை சென்சார் செய்து கொள்கிறேன். ஆந்திராவில் படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் இந்தப்படம்.

அவனவன் ஹாலிவுட் படங்களை பார்த்து விட்டு இன்ஸ்பிரேசன் என்ற பெயரில் காப்பியடித்துக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் இப்படியொரு படம் தெலுகு சினிமாவை இன்னும் சில படிகள் கீழிறக்கவே செய்யும்.

படத்தில் பிரம்மானந்தமும் அவரது கூட்டணியும் செய்திருப்பது எல்லாம் மொக்கை காமெடி.

படத்தின் கிளைமாக்ஸ் சண்டையில் வில்லன் நாகார்ஜூனாவை தூக்கி அடிக்க வானத்தின் மேல் பிஎஸ்எல்வி ராக்கெட்டைப் போல் போய்க் கொண்டே இருக்கிறார். அப்படியே போனவர் கைலாசத்துக்கும் போய் விட அங்கு சிவனை தரிசனம் செய்து கீழிறங்க எரிபொருளை நிரப்பிக் கொண்டு புது தெம்புடன் கீழே வந்து வில்லனை துவம்சம் செய்கிறார்.

அப்படியும் வில்லன் புது ஆயுதத்தை கையில் எடுக்க கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் ஹீரோவுக்கு சிவன் மேலிருந்து தன்னுடைய சூலாயுதத்தை கொடுக்கிறார். அதனை கொண்டு வில்லனை கொன்று அசுர குலத்தை முற்றிலும் அழித்து 2012ல் உலகத்தை அழிக்க இருந்த ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டு உடை மாற்றிக் கொண்டு அனுஷ்காவை போட்டு பொரட்டி எடுக்கிறார். சத்தியமாக நம்புங்கள் மேலே சொன்ன க்ளைமாக்ஸ் அப்படியே படத்தில் இருந்தது.
 
முதல் பாட்டுக்கு வந்து சார்மி செம கெட்ட குத்தாட்டம் போட்டிருக்கிறார். தக்காளி நல்லா பெசஞ்சி வுட்டுருக்கானுங்க போல. கொழ கொழனு இருக்கிறார். அதுவும் பின்புறத்தை மட்டும் ஆட்டிக் கொண்டு ஆடும் அந்த ஆட்டம் இருக்கிறதே. இந்த கொடுமை படத்தை அந்த பாட்டுக்காகவும் சார்மியின் ஆட்டத்திற்காகவும் பார்க்கலாம்.

அனுஷ்கா மட்டும் இல்லையென்றால் ஒரு பயலும் தியேட்டருக்குள்ளேயே இருந்திருக்க மாட்டான். இன்னும் சொல்லாம் தான் ஆனால் இதுக்கே ஆஃப் அடிக்க வேண்டியிருக்கு இன்னும் படத்தினை ரீவைண்ட் செய்து மூளையை குழப்பினால் கூட ஒரு குவார்ட்டரை அடிக்கக் கூடிய ஆபத்தும் இருப்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, November 14, 2012

MECHANICAL ENGINEER JOB IN MALASIYA

Cnc Operator and miller with diploma mechanical engineer job in malasiya.
salary Rs. 60000 + OT
accomodation free.

interested and qualified persons are contact 8883072993 or mail your resume to senthilkkum@gmail.com

Tuesday, November 13, 2012

துப்பாக்கி - சினிமா விமர்சனம்

இந்த தீபாவளி வித்தியாசமாகத்தான் இருந்தது. இதுவரை எந்த தீபாவளியன்றும் காலையில் எண்ணெய் தேய்த்து குளிக்காமல் வெளியில் வந்ததில்லை. இந்த ஆண்டு தான் இந்தப்படத்தை பார்ப்பதற்காக காலை மூணரை மணிக்கு எழுந்து பல்துலக்கி முகத்தை கழுவி அரக்க பரக்க கிளம்பி தியேட்டருக்கு சென்றால் என்னை விட மோசமான நிலையில் பல பேர் இருந்தனர். கும்பலோடு கோயிந்தா போட்டு திரையரங்கிற்குள் நுழைந்தேன்.

கடந்த சில மாதங்களாக வந்த பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாத்தையும் முதல் நாள் முதல் காட்சி பார்த்து நொந்து போய் இருந்த காரணத்தால் இந்த படமாவது சொதப்பாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். வேண்டுதல் நிறைவேறியதா என்பதை விமர்சனத்தில் பாருங்கள்.

விஜய்(ஜெகதீஷ்) மிலிட்டரியில் பணிபுரிகிறார். விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வருகிறார். வந்த இடத்தில் ஒரு குண்டுவெடிப்பு சம்பந்தப்பட்ட ஆள் விஜய்யிடம் சிக்குகிறான்.

அவனை தனியறையில் வைத்து விசாரணை செய்யும் போது இரண்டு நாட்களில் மும்பையில் 12 இடங்களில் குண்டுவெடிக்கப்போவதை அறிகிறார். எந்த விதமான துப்புகளும், குறிப்புகளும் கிடைக்காமல் இருக்கும் போது தனது புத்திசாலித்தனத்தால் அவனை தப்ப விட்டு தன் மிலிட்டரி டீமுடன் பின்தொடர்ந்து சென்று 12 இடத்திலும் குண்டுவைக்க சென்ற மனிதவெடிகுண்டுகளை ஒரே சமயத்தில் சுட்டுக் கொல்கிறார்.

இதனை அறிந்த வில்லன் மும்பைக்கு வந்து விஜய் பற்றிய விவரங்களை கண்டறிந்து டார்கெட் செய்கிறார். க்ளைமாக்ஸில் வில்லனை சுட்டுக் கொன்று விட்டு மீண்டும் மிலிட்டரிக்கு வேலைக்கு செல்கிறார். இந்திய ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு சமர்ப்பணம் என்ற டைட்டிலுடன் படம் முடிகிறது.

ஒரு படம் அதுவும் தீபாவளிக்கு வரும் படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம் ஒரு உதாரணம். பக்கா எண்டர்டெய்னர் மூவி. ஒரு இடத்தில் கூட தொய்வு விழவில்லை. படம் துவங்கி அரைமணிநேரத்திற்குள் நாம் படத்தினுடன் ஒன்றி விடுவோம். அதன் பிறகு படம் முடிந்ததும் தான் மீள்கிறோம்.

மாஸ் எண்டர்டெய்னர் இப்படித்தான் இருக்க வேண்டும். அதுவும் சமீப காலங்களில் சகுனி, தாண்டவம், மாற்றான் போன்ற படங்களை முதல் நாள் பார்த்து நொந்து போன எனக்கு பெரிய ஆறுதலாக அமைந்தது. இது விஜய் வழக்கமான படமல்ல. ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் டாகுடர் நடித்துள்ளார்.

விஜய் படத்தில் அழகாக இருக்கிறார். காஸ்ட்யூம் டிசைனர் மற்றும் ஒளிப்பதிவாளரின் உதவியுடன் ஜம்மென்று வருகிறார். இயல்பாக நடிக்கிறார். நடனம் மட்டும் சொல்ல வேண்டுமா என்ன. குறுந்தாடி பக்காவாக பொருந்துகிறது. இந்த ஒரு படத்தின் வெற்றியை நம்பி கண்டிப்பாக இவர் இன்னும் மூணு மொக்கைப் படங்களில் நடிக்கலாம்.

தமிழ் சினிமாவின் இலக்கணம் மாறாத லூசுப் பெண் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால். அழகாக இருக்கிறார். குத்து சண்டை வீராங்கனையாம். விஜய்யின் மீதுள்ள கோவத்தில் ஒரே குத்தில் எதிரியை வீழத்தி நாக்அவுட் செய்கிறார். விஜய்யை காதலிக்க வீட்டு பால்கனி வழியாக ஏறி வீட்டுக்குள் குதிக்கிறார். இதனை மீறி இன்னும் சொல்லலாம் தான். நம்ம பதிவுலகத்திலேயே அதிகமான காஜல் ரசிகர்கள் இருக்கிறார். அவர்கள் வர்ணித்துக் கொள்வார்கள்.

சத்யன் விஜய் நண்பராக மும்பையில் உள்ள சப் இன்ஸ்பெக்டர் வேடத்தில் வருகிறார். விஜய் நடத்தும் ஆபரேசனில் உதவுகிறார். முதலில் ராணுவத்தை விட போலீசே புத்திசாலிகள் உயர்ந்தவர்கள் என்னும் அவர் படத்தின் முடிவில் ராணுவம் தான் உயர்ந்தது என்பதை ஒத்துக் கொள்கிறார்.

ஜெயராம் சிறு கேரக்டரில் படத்தில் கதையின் ஓட்டத்திற்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத கதாபாத்திரத்தில் வருகிறார். இருக்கிறார் செல்கிறார். அவ்வளவே. படத்தில் வில்லன் பாத்திரம் அமைதியாக வந்து கடைசியில் விஜய்யை இரண்டு அடி அடித்து பிறகு அடிவாங்கி செத்துப் போகிறார்.

அஜித்துக்கு ஒரு மங்காத்தா போல, விஜய்க்கு இந்தப் படம் மாபெரும் வெற்றிப் படமாக அமையும். ஏற்கனவே பத்திரிக்கைகளில் படித்தும் நண்பர்கள் மூலம் சில விஷயங்கள் படத்தை பற்றி கேள்விப்பட்டும் எதிர்ப்பார்ப்பை சற்று குறைவாக வைத்துக் கொண்டே சென்றேன். அதனை மீறி அசத்தி ஜெயித்து விட்டார்கள்.

படத்தில் 12 இடங்களில் குண்டு வெடிக்கும் தினத்தன்று ஒரு வில்லனின் கையாளை தப்ப விட்டு அவனை தன் 12 படை வீரர்களுடன் பின் தொடர்ந்து சென்று அவர்கள் பிரிந்து செல்லும் போது விஜய் டீமும் பிரிந்து சென்று ஒரே நேரத்தில் 12 பேரையும் சுட்டுக் கொல்லும் காட்சி பெரியதாக பேசப்படும்.

அது போல 5 வீரர்களின் பெண் உறவினர்களை கடத்தி சென்று விஜய்யை கண்டுபிடிக்க வில்லன் முயற்சி செய்யும் திட்டத்தில் புத்திசாலித்தனமாக தன் தங்கையை நுழைத்து தன் வீட்டு நாய் உதவியுடன் கண்டுபிடிக்கும் காட்சியும் அசத்தலாக படமாக்கப்பட்டு இருக்கிறது.

ஒரு சம்பவத்தை மறக்காமல் குறிப்பிட வேண்டும். காலையில் 4 மணிக்கு காட்சிக்கு செல்லும் போது வெளியில் இருந்த கட்அவுட், பேனர் எதையும் கவனிக்காமல் அவசர அவசரமாக பைக்கை பார்க் செய்து விட்டு உள்ளே சென்று விட்டேன். படம் முடிந்து திருப்தியான மனநிலையில் வெளியே வந்தால் பயங்கர கூட்டம் நின்று கொண்டிருந்தது அடுத்த காட்சிக்காக.

அதில் ஒரு புத்திசாலி ரசிகன் அங்கு இருந்த ஒரு சிறு கட்அவுட்டுக்கு ஆயிரம் வாலா வெடியை மாலையாக போட்டு பற்ற வைத்து விட்டான். தியேட்டர்காரர்கள் வந்து நெருப்பை அணைத்து விட்டு அவனை துரத்திக் கொண்டு இருந்தார்கள். அந்த புத்திசாலி ரசிகனின் செயலை நினைத்து வரும் வழியெல்லாம் சிரித்துக் கொண்டே வந்தேன். இவர்களை நம்பி கட்சியை ஆரம்பித்தால் பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடித்து விடலாம்.

படத்தில் சில இடங்களில் லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் நல்ல மாஸ் எண்டர்டெயினர் படத்தில் பொருட்படுத்த வேண்டியதில்லை. படத்திற்கு பெண்களின் ஆதரவும் இருக்கிறது. இன்று எங்கள் தெருவில் உள்ள முக்கால்வாசி குடும்பத்தினர்கள் இன்று படத்திற்கு செல்வதற்கு டிக்கெட் முன்பதிவு செய்து காத்துள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.



ஆரூர் மூனா செந்தில்

Monday, November 12, 2012

மனம் கவர்ந்த தீபாவளி

சிறுவயதில் இருந்தே தீபாவளி என்றால் ஒரு சந்தோஷம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்திருக்கிறது. தீபாவளிக்கான முதல் சந்தோஷம் எங்கள் வீட்டு பலகாரம். என் அம்மா 20க்கும் மேற்பட்ட பலகாரங்களை செய்வார். சாப்பிட்டு மகிழ்வதே முதல் காரியமாக இருந்தது.

தீபாவளியன்று விடியற்காலை எண்ணெய் தேய்ப்பது நாங்கள் இருந்த வீட்டுக்கும் வீட்டு ஓனர் வீட்டுக்கும் ஒரே கொல்லை தான். அவர்கள் வீட்டில் ஆட்கள் அதிகம் இருப்பார்கள். விடியற்காலையில் அப்பா எழுப்பி விடுவார். புலம்பிக் கொண்டே எழுந்திரிப்பேன். எண்ணெய் தேய்த்ததும் கொல்லையில் வெந்நீர் போடும் அடுப்பின் அருகில் அமர்ந்து கொள்வேன்.

பக்கத்து வீட்டு ஆட்களும் கொல்லையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களுடன் பேசி கலாய்த்துக் கொண்டு அடுப்பில் இருக்கும் நீர் சுட்டதும் குளியல். அதன் பிறகு அப்பா பூஜையறையிலிருந்து எடுத்து கொடுக்கும் புதுத்துணிகளை போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்க ஆரம்பித்து விடுவேன்.

அடுத்ததாக பட்டாசுகள். என் அப்பா சிறுவயதில் இருநூறு ரூபாய்க்கு பட்டாசுகள் வாங்குவார். அதில் எனக்கென பிரிக்கப்பட்ட பங்கை எடுத்து வெயிலில் காயவைப்பது, இரண்டு மூன்று பிஜிலி வெடிகளை பிரித்து அதில் உள்ள வெடிமருந்தை ஒருவெடியாக செய்து வெடிப்பது. வெடிக்காமல் போன வெடிகளை பிரித்து வெடிமருந்தை நேரடியாக புஸ் கொளுத்தி விளையாடுவது என அனைத்தும் அருமையான நினைவுகள் தான்.

தீபாவளிக்கென புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது முதல்காட்சி பார்க்கும் சுகம் இருக்கிறதே. அப்பப்பப்பா, அதனை வார்த்தைகளில் அடக்க முடியாது. நான் முதல் முதலாக நண்பர்களுடன் தீபாவளியன்று சென்ற திரைப்படம் அவசர போலீஸ் 100. அந்த சமயத்தில் எனக்கு பத்து பதினொரு வயது இருக்கும். தனியாக சென்று படம் பார்த்ததில் பெரியமனுசனாகி விட்ட நினைப்பு.

பள்ளிப்படிப்பு முடிந்து சென்னைக்கு படிக்க வந்ததும் தீபாவளிக்கு ஊருக்கு செல்ல பட்ட சிரமங்கள் கொடுமையாக இருக்கும். 1998 தீபாவளிக்கு நான் திருவாரூர் செல்ல பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு வந்தேன். நின்று நின்று பார்த்து கடைசி வரை பேருந்து கிடைக்கவில்லை. நடுராத்திரிக்கு பிறகு ஒரு கட்டத்தில் பேருந்துகளே இல்லை.

தீபாவளிக்கு மறுநாள் திரும்பவும் சென்னை வந்தாக வேண்டும். அழுகையே வந்து விட்டது. விடியற்காலை 2 மணிக்கு பாண்டிச்சேரி செல்லும் பேருந்து வந்தது. அதில் ஏறி பாண்டி சென்று அங்கிருந்து மாறி மாறி காலை 9 மணிக்கு திருவாரூர் சென்றேன். தீபாவளியை தவற விட்டது போன்ற உணர்வே இருந்தது.

சென்னையில் படிக்கும் காலத்தில் திரையரங்கிற்கு சினிமா பார்க்க செல்லும் போது தான் என்னுடன் பள்ளியில் படித்த நண்பர்களையே பார்க்க முடியும். அனைவரும் கல்லூரிப் படிப்புக்கு வெளியூரில் இருந்தார்கள். உள்ளூரில் இருந்தவர்கள் வெகு சொற்பம் தான். நண்பர்களுடன் அளவளாவிக் கொண்டு அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வருவேன்.

வீட்டுக்கு வந்ததும் நல்லி எலும்பு அதிகம் போட்டு மட்டன் குழம்பு, சிக்கன் வறுவல் உடன் தோசை பிரமாதமான சாப்பாடு. மறுபடியும் வெடி வெடிக்க வேண்டும் என்பதற்காகவே அரக்கபரக்க தோசையை பிய்த்து வாயில் போட்டுக் கொண்டு ரோட்டுக்கு ஓடிவிடுவேன்.

இந்த காலத்து பசங்களுக்கு இது போன்ற சந்தோசங்கள் குறைந்து விட்டது. காலங்கள் மாறிக் கொண்டு இருக்கிறது. பட்டாசை வெடிப்பதை குறைத்துக் கொண்டு விட்டனர்.

இந்த ஆண்டு எனது பாட்டி காலமான காரணத்தால் தீபாவளி கிடையாது. எனவே பிறந்ததிலிருந்து முதல் முறையாக இந்த தீபாவளியன்று என் பெற்றோரை பிரிந்து இருக்கிறேன். அதுவே பெரிய வருத்தமாக இருக்கிறது. அடுத்த முறை சேர்த்து கொண்டாடி விட வேண்டியது தான்.

நாளை சென்னையில் இருப்பதால் முதல் காட்சி துப்பாக்கி பார்க்க இருக்கிறேன். காட்சி காலை நான்கு மணிக்கு எனவே நம் வலைதளத்தில் 8 மணிக்கே துப்பாக்கி விமர்சனம் எதிர்பார்க்கலாம்.

என் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், சக பதிவர்களுக்கும், வாசக நண்பர்களுக்கும் இனிய இனிய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். குடும்பத்துடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுங்கள்.


ஆரூர் மூனா செந்தில்

Thursday, November 8, 2012

ஸ்பானிய பெண்ணுடன் 15 நாட்கள் நான்...



சத்தியமா பொய் சொல்லலீங்க. ஆனா அதுக்காக இது கில்மாவும் இல்லைங்க. நான் 2006ம் ஆண்டில் இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான ஒரு தனியார் நிறுவனத்தில் சென்னை மண்டல அலுவலகத்தின் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். அந்த ஆண்டு சென்னையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக அரசு டெண்டர் வெளியிட்டது. அந்த டெண்டரின் கட்டுப்பாடுகளில் ஒன்றாக ஏற்கனவே இது போன்ற கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செய்திருக்க வேண்டும் என்று இருந்தது.

எங்கள் நிறுவனத்திற்கு அதற்கு முன் அது போன்ற வேலைகளில் முன் அனுபவம் இல்லாததால் அதற்குரிய அனுபவம் ஏற்கனவே பெற்றிருந்த ஒரு ஸ்பெயின் கம்பெனியுடன் ஜாயின்ட் வென்ச்சர் போட்டு இந்த டெண்டரை பெற எங்கள் கம்பெனி முனைந்தது. டெண்டர் போட்டு அந்த புராஜெக்ட் எங்கள் நிறுவனத்திற்கு கிடைத்தது.

புராஜெக்ட் கிடைத்ததும் Project Analysis Report தயார் செய்வதற்காக அந்த ஸ்பெயின் நிறுவனத்தின் Planning Head ஆக இருந்த அலெக்ஸான்ரியா செ கார்லெ என்பவர் சென்னை வந்தார். எங்கள் பாஸ் என்னை அந்த அம்மிணிக்கு Co-Ordinator ஆக என்னை நியமித்தார். அதன் பணி என்னவென்றால் அந்த அம்மிணி சென்னை வந்ததும் விமான நிலையத்தில் வரவேற்பது முதல் அந்த அம்மிணி Prepare செய்யும் Project Analysis Report ஐ முடித்து திரும்பி அனுப்பி வைப்பது வரை நான் உடனிருக்க வேண்டும்.

ஆஹா நமக்குள் கற்பனை பறக்கிறது. அவளுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொள்வது முதல் வரும் அம்மிணி நன்றாக இருந்தால் பிக்அப் செய்து ஸ்பெயினில் செட்டிலாகி விட வேண்டும் என்பது வரை யோசித்து பார்த்து விட்டேன். நம்மால் முடிந்தது யோசிக்க மட்டும் தானே. அந்த நாளும வந்தது. விமான நிலையத்தில் காத்திருந்தேன். சில மணித்துளிகளுக்கு பிறகு அவர் வந்தார். அடடடா என்னா கலரு என்னா பிகரு. பார்த்ததும் கொஞ்ச நேரம் மெய்மறந்து நின்றேன். மிகக்கொஞ்ச நேரமே. என்னிடம் வந்து ஆர் யூ மிஸ்டர் செந்தில் என்றாள். ஆஹா என்ன குரல். குயில் ஆங்கிலத்தை ஸ்டெயிலாக பயன்படுத்தியது போல் இருந்தது.

கொஞ்சம் நில்லுங்கள். ஒவர் பில்ட் அப்பாக இருக்குது. ஜொள்ளு கதையா இது என்று நினைக்க வேண்டாம். அந்த அம்மிணியை பற்றிய நல்ல நினைப்பெல்லாம் சில மணிநேரங்களுக்கு மட்டுமே. அதன் பிறகு நடந்ததெல்லாம் டெரர் தான்.

வந்து காருக்குள் நுழைந்ததும் சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். டமால் டுஸ் டகீர். என்னடா புரியாத சப்தம் என்று பார்க்காதீர்கள். என் இதயம் வாய் வழியாக வெளி வந்து உடைந்து நொறுங்கி விட்டிருந்தது. என் எதிர்பார்ப்பெல்லாம் காலி.

அவர் வருதற்கு முதல் நாள் இரவு ஒரு அழகான வெள்ளைக்காரப் பெண் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "அத்தான் காபி சாப்பிடுங்க".

நல்ல கனவு, கனவுடனே சென்று விட்டது. அந்த சமயத்தில் என் கற்பனையில் அதே பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் சொன்னாள் "மச்சி நெருப்பு இருக்கா".

கல்யாண கனவு கலைந்து சும்மா குஜாலுக்காவது முயற்சி பண்ணுவோமே, எதிர்பார்ப்பு அடுத்த கட்டமாக இறங்கி வந்தது. அவர் வந்து என் நிறுவனத்தின் மேலதிகாரிகளை சந்தித்த பின் அவருக்கென்று ஒதுக்கப்பட்ட கெஸ்ட் அவுஸில் தங்க வைக்க அழைத்து சென்றேன். இரண்டு நாள் ஒய்வு தேவை, டிரைவர் மட்டும் போதும், இரண்டு நாள் கழித்து பணியை துவங்குவோம் என்றார். நான் எங்கள் டிரைவர் அண்ணாதுரையை விட்டு விட்டு சென்றேன். நாமும் உடனடியாக முயற்சித்து விடக்கூடாது பொறுமை காக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.

இரண்டு நாள் கழித்து காலையில் அவரை அழைக்க சென்றேன். காலையிலேயே வின்டெஜ் கட்டிங் அடித்துக் கொண்டிருந்தார். மிச்சமிருந்த நம்பிக்கையும் கரைந்து ஒடி விட்டது. இனிமேல் இவரை ஒண்ணும் பண்ண முடியாது. நமக்கு நீடாமங்கலம் பக்கத்தில் உள்ள குக்கிராமங்களில் இருந்து மாமா இது தான் அண்ணா சமாதியா என்று கேட்டு வியக்கும பெண்ணே சிறந்தது என்று முடிவு செய்து விட்டேன்.

மீதமிருந்த நாட்களும் எந்த எதிர்ப்பார்ப்புமில்லாமல் சென்றது. ஒரு நாளைக்கு 3 பாக்கெட் தம்மடிப்பார். ஒரு புல் பாட்டில் அடிப்பார். ஆனால் ஆள் போதையில் இருப்பது போலவே தெரியாது. நானெல்லாம் ஆப் தாண்டிவிட்டால் நடுரோட்டில் குட்டிக்கரணம் அடிப்பேன். நாம இன்னும் வளரணும் என்பது மட்டும் தெரிந்தது.

இதையெல்லாம் விடுங்க. எங்களுக்குள் பேச்சுவார்த்தைகள் எந்தளவுக்கு நடந்தது என்பதை சொன்னால் நான் ஜோக்கராகி விடுவேன். தமிழோடு கலந்து பேசும் தமிங்கிலீஷ் தெரியும், மலையாளி பேசும் மங்கிலீஷ் தெரியும், அது போலவே தெங்கிலீஷ், ஹிங்கிலீஷ் எல்லாம் கேட்டு விட்டேன். எனவே நான் மிகப்பெரிய இங்கிலீஷ்மேன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் வந்து பேசிய இங்கிலீஷ் இருக்கே அப்பப்பப்பா, அது ஸ்பெங்கிலீஷ். இங்கிலாந்துகாரன் பேசும் இங்கிலீஷே புரியாது ஸ்பானிஷை தாய்மொழியாக கொண்டவள் பேசும் இங்கிலீஷ் எப்படியிருக்கும். அவள் பேசுவதை கேட்டால் விவேகானந்தா கல்வி நிலையத்தின் ஓனரே பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒடுவார். நானெல்லாம் எம்மாத்திரம். சிக்கிட்டேன். பேசிப்பேசியே என்னை சிதைச்சிட்டார்.

கெஸ்ட் அவுஸ் சர்வீஸ் பையனிடம் இவர் ஒன்று கேட்க அவன் என்னைப் பார்க்க நான் ஒன்று சொல்ல அவன் வந்து கொடுத்த பிறகு தான் தெரியும் அவர் கேட்டது வேறு என்று. பலமுறை நடந்த இந்த கூத்தை என் பாஸ் ஒரு முறை பார்த்து விட்டார். பிறகென்ன என்னை கிழிகிழி என்று கிழித்து விட்டார். வெக்கம், மானத்தை விட்டு எப்படியெல்லாம் வேலைப் பார்க்க வேண்டியிருக்கு. துடைச்சிக்கிட்டு வந்துட்டேன்.

ஒரு வழியாக அவர் கேட்ட பொருட்களின் ரேட்களை எல்லாம் நான் மார்க்கெட்டில் விசாரித்து கொடுக்க ஒரு வழியாக புராஜெக்ட் ரெடி செய்து விட்டு புறப்பட்டார். ஏர்ப்போர்ட்டில் வழியனுப்பும் போது தாங்க்யூ பார் எவரிதிங் என்று சொல்லி ஒரு அழுத்தமான முத்தம் கொடுத்து விட்டு புறப்பட்டார். கடைசி வரையில் என்னன்னமோ எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு கிடைத்தது சிகரெட் வாசத்துடன் கூடிய ஒரு உதட்டு முத்தம் தான். நல்லவேளை தப்பித்தேன்.

அன்றிரவு மீண்டும் கனவு அதே வெள்ளைக்காரப் பெண் அதே போல் புடவை கட்டி நல்ல பொட்டிட்டு பூச்சூடி வந்து என்னிடம் கேட்டாள் "மச்சி நெருப்பு இருக்கா".

அன்றிலிருந்து ஒரு வருடத்திற்கு தினமும் மட்டையாகும் அளவுக்கு சரக்கடிக்காமல் நான் தூங்கியதில்லை.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு


Wednesday, November 7, 2012

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விவரங்கள்

சிங்கப்பூர் மற்றும் சவுதிக்கு கீழ்கண்ட தகுதியுடைய நபர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வரும் வாரம் நடைபெற இருக்கிறது. விருப்பமுள்ள தோழர்கள் தங்களது பயோடேட்டாவை senthilkkum@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும் அல்லது 8883072993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

B.E (EEE)
B.E (MECHANICAL)
B.E (CIVIL)
DIPLOMA (CIVIL)
DIPLOMA (EEE)
DIPLOMA (MECHANICAL)
FIRE & SAFETY
PIPE FITTER
WELDER
Ac-MECHANIC
ITI ELECTRICAL
HVACs TECHNICIAN
CLASS -3 DRIVER ONLY SINGAPORE
HEAVY DRIVER SINGAPORE AND SAUDI
GENERAL WORKER NO NEED QUALIFICATION
TESTING PERSON (ITI,DIPLOMA)
CNC (MILLING,OPERATOR)


 
ஆரூர் மூனா செந்தில்

Tuesday, November 6, 2012

சட்டையில்லாமல் கடுப்புடன் பார்த்த முகமூடி

மன்னிக்கனும். இது மூணு மாசத்துக்கு முன்னமே எழுதியிருக்க வேண்டிய பதிவு. கொஞ்சம் வேலை இருந்ததால் சில நாள் தள்ளிப் போச்சு. அதன் பிறகு சோம்பேறித்தனத்தால் எழுத தோணவில்லை. இப்பொழுது எழுத வேண்டும் என்று முடிவு செய்து வலுக்கட்டாயமாக எழுதிக் கொண்டு இருக்கிறேன்.

நினைவுகளை பின்னோக்கி தள்ளி நடந்த சம்பவங்களை அசை போட்டு எழுத வேண்டியிருக்கிறது. பார்ப்போம். எந்த அளவுக்கு சாத்தியம் என்று.

என் அப்பாவுக்கு அறுவை சிகிச்சையின் காரணமாக ஏப்ரல் மாதத்தில் 25 நாட்களுக்கு மேல் திருவாரூரில் தங்கியிருந்ததாலும் வேலையில் சேர்ந்து சில மாதங்கள் வரை லீவு எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததாலும் கொஞ்ச நாட்களுக்கு ஊருக்கு செல்லாமல் இருந்து செப்டம்பர் மாதம் தான் சென்றேன்.

வெள்ளியன்று ஊருக்கு கிளம்பியதால் முகமூடி சென்னையில் பார்க்க முடியவில்லை. சனி இரவு திருவாரூர் நடேஷ் திரையரங்கில் படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்து நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தால் ஒருத்தனும் ஊருக்குள் இல்லை. சரியென்று நீண்ட நாட்களுக்கு பிறகு திருவாரூரில் தனியாக சினிமாவுக்கு சென்றேன்.

ஆனால் நான் செய்த தவறு ஒன்று என்னவென்றால் நீ்ண்ட நாட்களுக்கு பிறகு ஊருக்கு செல்கிறோமே, அங்கும் தண்ணியடித்தால் அப்பா வருத்தப்படுவார் என்று நினைத்து அந்த ட்ரிப் முழுவதும் தண்ணியடிக்கவில்லை. ஆனால் அது மகா தவறென்று படம் தொடங்கியதும் தான் தெரிந்தது.

டிக்கெட் எடுக்கும் போதே நண்பன் ராஜி, அவன் தம்பிகள் முத்து, பிரமையா சகிதம் வந்தான். கையில் பாலிதீன் கவர் இருந்தது. என்னிடம் சில நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு பையில் சரக்கு என்று சொல்லி கண்ணடித்து விட்டு சென்றான்.

நானும் பால்கனி உள்ளே சென்று ஒரு ஓரமாக மின்விசிறிக்கு கீழ் அமர்ந்தேன். இத்தனைக்கும் அது குளிரூட்டப்பட்ட திரையரங்கு. படம் போட்டதும் எனக்கு முதல் வரிசையிலிருந்து ஒரு கும்பல் சரக்கை ஊத்தி திரையரங்கின் உள்ளேயே அடிக்க ஆரம்பித்தது.

சரக் சரக்கென்று சத்தம் சற்று எட்டிப் பார்த்தால் உள்ளேயே பத்து குரூப்புக்கு மேல் தண்ணியடித்துக் கொண்டு இருந்தது. வெளியில் அடித்து விட்டு வந்தவர்களோ சலம்பிக் கொண்டு இருந்தார்கள். எனக்குள் ஒரு மணி டொய்ங் என்று அடித்தது. நம்முடைய திட்டம் ஊத்திக் கொண்டதே, பேசாம நாமும் கூட சரக்கடித்து விட்டு வந்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது. வீட்டை நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.

படம் போட்டு அரைமணிநேரத்தில் ஏசியை நிறுத்தி விட்டார்கள். அரங்கம் முழுவதும் சரக்கு வாசனை மிதக்க ஆரம்பித்தது. நான் மின்விசிறிக்கு கீழ் அமர்ந்திருந்ததால் காற்று வந்தது. தப்பித்துக் கொண்டேன் என்று நினைத்துக் கொண்டேன். அந்த நினைப்புக்கும் மண் விழுந்தது.

சற்று நேரத்தில் மற்றுமொரு குரூப் உள்ளே நுழைந்தது. அவர்களுக்கு இடமில்லாததால் என்னை இருக்கை மாறி அமரச் சொல்லி கேட்டார்கள். நானோ கடுப்பில் மறுக்கவே அவர்கள் கெஞ்சினார்கள். சரியென்று அதே வரிசையில் கடைசி இருக்கைக்கு வந்து அமர்ந்தேன்.

இவர்களும் உட்கார்ந்ததும் கையில் கிளாஸை பிடித்து செல் வெளிச்சத்தில் சரக்கை ஊத்தி அடிக்க ஆரம்பித்தார்கள். எனக்கு நெடி மூக்கில் ஏறியதும் இன்னும் கடுப்பானது. சற்று நேரத்தில் பரோட்டாவை பிரித்து அந்த இருட்டிலேயே தின்றார்கள். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்து விசிலடிக்க ஆரம்பித்தார்கள்.

நானோ கடுப்பின் உச்சத்தில் இருந்தேன். அவர்கள் செய்த அலம்பலுக்காக அல்ல. நிர்வாண ஊரில் ஒருவன் மட்டும் ஜட்டியுடன் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி. அதுவும் இயலாமையின் கடுப்பு இருக்கிறதே, அதை சொல்லி புரியவைக்க முடியாது.

இன்டர்வெல் விட்டதும் அரங்கின் உள்ளே ஏகப்பட்ட தெரிந்த நண்பர்கள் இருந்தாலும் வெறுப்பின் உச்சத்தில் இருந்த நான் தனியே நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது மூர்த்தி என்ற ஒரு தெரிந்த பையன் போதையில் வந்து என் முன்னே தம்மடித்துக் கொண்டு அப்புறம்ணே எப்ப ஊர்லேர்ந்த வந்தீங்க என்றான்.

அவனுக்கு பதினேழு அல்லது பதினெட்டு தான் வயது இருக்கும். நான் பனிரெண்டாம் வகுப்பு முடிந்து திருவாரூரை விட்டு கிளம்பிய பிறகு பிறந்த பையன் அவன். என் முன்னே புகையை விட்டுக் கொண்டு அதுவும் முகத்திலேயே விட்டுக் கொண்டு பேசினான். மொத்த கடுப்புக்கும் சேர்த்து ஒரே அறை விட்டேன். அறையை வாங்கிக் கொண்டு அழுதுக் கொண்டே சென்றான்.

இன்டர்வெல் முடிந்து படம் துவங்கியதும் இன்னும் மோசமாக வேர்க்கத்துவங்கியது. பொறுத்து பார்த்த நான் ஒரு கட்டத்தில் சட்டை, பனியனை கழற்றி வைத்து விட்டு வெற்றுடம்புடன் படத்தை பார்த்தேன். இதுக்கு மேல ஒருத்தனுக்கு வெறுப்பின் உச்சக்கட்டம் வரமுடியாது என்று தானே நினைக்கிறீர்கள்.

எனக்கு வந்ததே பக்கத்தில் சரக்கடித்த பசங்களில் ஒருத்தன் டபக்கென்று என் காலின் அருகிலேயே வாந்தியெடுத்தான். எடுத்து முடித்ததும் அதன் மேலேயே படுத்து மட்டையானான். அவன் கூட வந்தவர்கள் யாரும் அதனை பற்றி கவலைப்படாமல் படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.

சுற்றி சரக்கு வாசனை, காத்து இல்லாமல் சட்டையை வேறு கழட்டியிருந்தேன். போதாத குறைக்கு என் காலின் அருகிலேயே வாந்தி வேறு. அந்த இடத்தில் மட்டும் நானும் போதையில் இருந்தேன் என்றால் கலாட்டா வேறு மாதிரி இருந்திருக்கும்.

படம் முடிந்ததும் எல்லோரும் கத்திக் கொண்டும் தம்மடித்துக் கொண்டும் சென்றார்கள். நான் மட்டும் கொலை காண்டுல வெளியில் வந்தேன். இரவு ரெண்டு மணிக்கு வீட்டுக்கு வந்து குளித்து விட்டு தான் படுத்தேன்.

அதனை போக்க மீண்டும் சென்னை வந்ததும் ஒரு முக்கால் பங்கை உள்ளே விட்டதும் தான் வெறுப்புகள் அனைத்தும் வடிந்தது. சரக்கடித்த மற்றவர்களின் சலம்பலுக்கு இடையே சரக்கடிக்காமல் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தை இருக்கிறதே அய்யகோ. மெட்ராஸ் பவன் சிவக்குமாரே உமக்கு கோயில் கட்டித்தான்யா கும்பிடனும்.


ஆரூர் மூனா செந்தில்

Monday, November 5, 2012

கும்பகோணம் டிகிரி காபியின் தில்லுமுல்லு


சென்ற வாரம் காரில் திருவாரூரிலிருந்து சென்னைக்கு வந்தேன். வரும் வழியில் திண்டிவனத்தை தாண்டியதும் செங்கல்பட்டு வரை 8க்கும் மேற்பட்ட கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயரில் கடைகள் இருந்தன. ஒரு கடையில் காபி குடித்துப் பார்த்தால் கன்றாவியாக இருந்தது. கும்பகோணத்திலேயே டிகிரி காபி பல இடங்களில் வாயில வைக்க சகிக்காது. கும்பகோணம் டிகிரி காபி என்று பெயர் வைத்தால் என்று வியாபாரம் நன்றாக நடக்கும் என்று எவன் கண்டுபிடித்தானோ அவனை கல்லால் தான் அடிக்க வேண்டும். டீக்கடையின் பரப்பளவை விட பெயர்ப்பலகையின் பரப்பளவு பெரியதாக இருக்கிறது. அதைவிடக் கொடுமை என்னவென்றால் ஒரு செட்டிநாட்டு கடையின் வாசலிலும் கும்பகோணம் டிகிரி காபி கடை என்ற பெயர்ப்பலகை இருந்தது. என்ன கொடுமைடா சாமி.

இவ்வளவு தான் விஷயம், இதனை பஞ்சேந்திரியாவில் ஒரு பகுதியாக போட தட்டச்சு செய்தேன். என் நண்பன் ஒருவன் சீனாவிலிருந்து போன் செய்தான். நான் எழுதும் பதிவுகள் ராவாக இருப்பதாகவும், அதனை சற்று கற்பனை கலந்து எழுதிப் பார் என்று சொன்னான். அதற்கான முயற்சி தான். இது சற்று நீட்டி முழக்கி ஒரு பதிவாக தயார் செய்து விட்டேன். நன்றாக இருந்தால் ரசியுங்கள். மொக்கையாக இருந்தால் காறித்துப்புங்கள். நான் ஏற்றுக் கொள்ளத் தயார்.

----------------------------------------


எங்கள் வீட்டில் நடந்த விசேசத்திற்காக வந்திருந்த உறவினர்கள் அனைவரும் கடும் மழைக்கிடையே ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். நானும் சென்னை திரும்ப பேருந்து இருக்கையை முன்பதிவு செய்ய பேருந்து நிலையம் வந்தேன். நான் பார்த்த நாள் முதலே தைலம்மை திரையரங்கின் எதிர்புறம் பிச்சையெடுத்துக் கொண்டிருந்தவனை காணும். அடுத்த வாரிசு வரும் வரை இடம் காலியாக இருக்கும் என நினைக்கிறேன். நல்ல வியாபார இடம். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ.

பேருந்து நுழையும் இடத்தில் அதே பழைய மூத்திர வாசனை. அதை தாண்டி வந்து முன்பதிவு கவுண்ட்டருக்கு முன் நின்றேன். ஆள் அரவமின்றி இருந்த கவுண்ட்டரில் ஓட்டை ஃபேனுக்கு முன்னாடி அமர்ந்திருந்தவன் சுகமாக காது குடைந்து கொண்டிருந்தான். நான் வந்து அவன் சுகத்தை கெடுத்த கடுப்பில் முன்பதிவு செய்ததும் பத்து ரூபாய் குறைந்ததற்கு டிக்கெட்டை வாங்கி வைத்துக் கொண்டு என்னை சில்லறை வாங்கி வரச் சொன்னான். பத்து ரூபாய்க்காக ஒரு குங்குமம் புத்தகத்தை வாங்க வைத்து புண்ணியம் தேடிக் கொண்டான்.

டிக்கெட்டை பெற்றுக் கொண்டதும் மீண்டும் அதே மூத்திர வாசனை இடத்தை கடந்து தைலம்மை திரையரங்கின் முன் காலியாக இருந்த இடத்தை பெருமூச்சு விட்டு பொறாமையாக பார்த்துக் கொண்டே வண்டியை கிளப்பி வீடு வந்தடைந்தேன்.

வீட்டுக்கு வந்ததும் மாமா ஒருவர் அப்பாவுக்கு போன் செய்து நான் சென்னை செல்கிறேன், என்னுடன் வரச் சொல்லுங்கள் என்று சொல்லவே மீண்டும் அதே வழிப் பயணத்தில் சென்று காது குடைந்த புண்ணியவானிடம் டிக்கெட் கான்சல் என்று சொல்லவே முணுமுணுத்துக் கொண்டே பணத்தை திருப்பிக் கொடுத்தான்.

மதியம் வீட்டுக்கு கார் வந்தது.

நிற்க. . இந்த இடத்திலிருந்து திண்டிவனம் வந்தது வரை நான் சொல்ல வேண்டுமானால் நாவல் தான் போட வேண்டும். எனவே கார் திண்டிவனம் வரும் வரை படிக்கும் அனைவரும் தூங்கி விடவும்.

எழுந்திருக. வண்டி பாண்டி வழியாக திண்டிவனத்தை வந்தடைந்தது. கண்ணாடி முழுவதும் ஏற்றி விட்டிருந்தாலும் காற்று சில்லென்று வீசிக் கொண்டிருந்தது. எப்படி என விழிக்க கூடாது. ஏசி ஓடிக் கொண்டிருந்தது. திண்டிவனத்தை கடந்து ஒரு மணிநேரம் ஆகி விட்டிருந்தது.

மேல்மருவத்தூர் வந்தது. ஊரில் ஒரே சிவப்பு உடை தரித்து மக்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். ஏதோ கம்யூனிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டம் போல. மாநாடு நடக்கும் பகுதியை தாண்டியதும் ஒரே இருட்டு காரின் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருந்தது. என்ன ஒரு ஆச்சரியம் எதிரில் வந்த வண்டிகளும் விளக்கை எரியவிட்டுக் கொண்டே சென்றன. மின்சார தட்டுப்பாடு தலைவிரித்து ஆடும் இந்த மாநிலத்தில் இதெல்லாம் தேவையா.

ஒரு மேம்பாலத்தில் ஏறிய போது மதுராந்தகம் ஏரி இடது பக்கம் வந்தது. ஏரியில் தண்ணியே இல்லை. வலது பக்கம் ஊர் இருந்தது, அதுதான் மதுராந்தகம். ஆனால் அந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. பின்னே கார்களில் செல்பவர்கள் விளக்கை எரிய விட்டுக் கொண்டிருந்தால் எப்படி நகருக்கு மின்சாரம் கிடைக்கும். அவர்களை விட்டுவிடுவோம். பாவம் அவர்கள் விபரமில்லாதவர்கள்.

மதுராந்தகம் தாண்டியதும் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஏற்கனவே இரண்டு கும்பகோணம் டிகிரி காபி கடையை தவற விட்டு வந்த அடுத்த கடையில் கண்டிப்பாக குடித்து விட வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். அதன்படி அடுத்ததாக மிகப்பெரிய பெயர்ப்பலகையை உடைய கும்பகோணம் டிகிரி காப்பி கடையை கண்டோம்.

வண்டியை இடம் பக்கம் ஒடித்து திருப்பி வண்டியை நிப்பாட்டினால் அடப்பாவிகளா அது டீக்கடை. பெயர்ப்பலகையை பாதியாக உடைத்து வைத்தால் கூட உள்ளே வைக்கமுடியாது. அந்த கடையில் பாதி பங்க்கு கடை.

டீக்கிளாஸில் காபியை கொடுத்தார்கள். கருமம் நாலாவது முறை வடிகட்டிய டிக்காசனாக இருக்கும் போல இருக்கிறது. அதற்கு மேல் கசப்புக்கு ஏதோ புளியங்கொட்டையை அரைத்து போட்டிருந்தார்கள் என்று நினைக்கிறேன். பாதி குடித்து விட்டு கிளாஸை அப்படியே வைத்து விட்டு வந்து விட்டேன்.

நானெல்லாம் குடித்து மட்டையானாலும் மிச்சமிருக்கும் சரக்கை குடிப்பதற்காக வாந்தியெடுத்து விட்டு வந்து முழுவதும் சரக்கடித்து விட்டு மட்டையாகும் ஆள். நானே பாதி கிளாஸ் காபியை வைத்து விட்டு வந்து விட்டேன் என்றால் அது எந்த அளவுக்கு கன்றாவியாக இருக்கும் என்பதை நீங்களே நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

கும்பகோணம் காபி கடை என்று பெயர் போட்டால் காபி விற்கும் என்ற ட்ரிக்கை எவன் கண்டுபிடித்தான் என்று தெரியவில்லை. மவனே அவன் மட்டும் என் கையில் கிடைத்தால் மூஞ்ச தார்ரோட்டில் வச்சி தேய்ச்சிப்புட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.

அதற்கு அப்புறம் வண்டி கிளம்பியது. சென்னை வரும் வரை நடந்தை சொல்ல வேண்டுமென்றால் நான் நாவலின் இரண்டாம் பாகம் போட வேண்டி வரும் எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்

ஆரூர் மூனா செந்தில்

Friday, November 2, 2012

கேரள நாட்டிளம் பெண்கள்

பதிவெழுதி ரொம்ப நாள் ஆகிறது. இத்தனைக்கும் நேற்று ஸ்கைபால் முதல் காட்சியே பார்த்து விட்டேன். ஆனால் விமர்சனம் எழுத ஆர்வம் வரவில்லை. வர வர எழுதுவதற்கு ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இல்லை நம்மிடம் சரக்கு தீர்ந்து விட்டதா எனவும் தெரியவில்லை.

இனி கொஞ்ச நாட்களுக்கு நன்றாக இருக்கிறதோ இல்லை மொக்கையாக இருக்கிறதோ தோணுவதையெல்லாம் பதிவாக எழுதலாம் என்று இருக்கிறேன். பழைய ஆர்வம் வரும் வரை தான் வாரம் நான்கு பதிவு இருக்கும். சோதனையாக இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே.


அதென்னவோ தெரியவில்லை. கேரள ஆண்களை பார்த்தால் எந்த அளவுக்கு கடுப்பாகிறதோ அதை விட கூடுதலாக கேரளத்து பெண்களை பார்த்தால் ஜொள்ளு விட தோன்றுகிறது. எப்படித்தான் செஞ்சு வச்ச சிலை மாதிரி இருக்காங்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம்.

எங்கள் ஊருக்கு மிக அருகில் தான் வேளாங்கண்ணி இருக்கிறது. பைக்கில் அரை மணிநேரத்தில் சென்று விடலாம். செல்லும் போதெல்லாம் கேரளத்து பெண்களை பார்க்கும் போது நம்மூரில் இது போன்ற பெண்களை பார்க்க முடிவதில்லையே என்ற ஏக்கம் எழும். அவர்களை தூர நின்று ஏக்கப்பெருமூச்சு விட்டு வந்து விடுவதோடு சரி.

திருச்சூரில் பூரம் திருவிழாவுக்காக ரயில்வேயின் சார்பாக ஸ்டால் போடுவார்கள். அதாவது மினியேச்சர் ரயில் செய்து அதற்கென தண்டவாளமும் செய்து அதில் ஓட விடுவது போல அமைக்கப்பட்ட கண்காட்சி கூடம்.

இதற்கென ரயில்வே குழு ஒன்று சென்னையிலிருந்து கிளம்புவதென முடிவெடுத்து விட்டால் இதற்கென தனியாக கோச்சு ஒன்று திருவனந்தபுரம் செல்லும் ரயிலில் இணைத்து விட்டு அதில் அனைத்து பொருட்கள், அப்ரெண்டிஸ்கள் 20 பேர், கண்காணிக்க இஞ்சினியர் இருவர் என குழு புறப்பட்டு இருபது நாட்கள் தங்கி கண்காட்சி கூடம் அமைத்து முடிந்ததும் அதே கோச்சில் அனைத்து பொருட்களையும் ஏற்றி திரும்ப சென்னை வருவது வழக்கம்.

1999ம் ஆண்டு சென்ற குழுவில் நானும் இருந்தேன். திருச்சூர் சென்று கண்காட்சி கூடத்தை அமைத்த பிறகு எங்களுக்கு நேரம் இருந்ததால் அனைவரும் குருவாயூர் கோயிலுக்கு செல்வதென முடிவெடுத்து விடியற்காலையிலேயே கிளம்பி சென்றோம். அங்கு இறங்கியதும் பெண்களை கண்டதும் எனக்கிருந்த ஆனந்தம் சொல்லில் வடிக்க முடியாது.

அட ஆண்டவா எதைப் பார்க்க எதை விட. மற்ற ஊர்களில் சாதாரணமாக இருக்கும் கேரளத்து பெண்கள் குருவாயூர் செல்லும் போது மட்டும் வெண்பட்டு புடவையில் தலைகுளித்து, நெற்றியில் சந்தனம் வைத்து வரும் போது நமக்கு தெரியும் அழகு இருக்கிறதே. எந்த சினிமா கதாநாயகிக்கும் மும்பை அழகிக்கும் வராத தெய்வீக அழகு அது.

அன்றே முடிவெடுத்து விட்டேன். நாம் திருமணம் செய்தால் இது போன்ற கேரளத்து பைங்கிளியைத்தான் காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டுமென.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அழகு. சென்னையில் டொக்கு போல் திரியும் மலையாள பெண் கூட குருவாயூர் சென்றால் அந்த காஸ்ட்யூமில் பார்த்தால் நமக்கு அவளையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தோன்றும்.

அதன் பிறகு திருச்சூர் வந்த பிறகு கூட பூரம் திருவிழாவில் இரவு பகலென அலைந்து சைட் அடித்துக் கொண்டு இருந்தேன். கண்களில் மலையாள பெண்ணின் அழகை தேக்கி தேக்கி அளவு கொள்ளாமல் வழிந்து ஒடிக் கொண்டு இருந்தது.

மீண்டும் சென்னைக்கு திரும்பியதும் அதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த என்னுடன் படித்த மலையாளப் பெண் ஜெயஸ்ரீயை சைட் அடிக்க முயற்சிக்க அவளோ தன் காதலனான சங்குவிடம் போட்டுக் கொடுக்க அவன் என்னை தனிமையில் அழைத்து சிறுகத்தியை காட்டி மிரட்டி விட்டு சென்றதெல்லாம் நம்ம வரலாற்றில் வரும்.

ஜெயஸ்ரீயோ கடைசி வருடம் அவனையும் கழற்றி விட்டு இந்திரனை பதிவுத்திருமணம் செய்து கொண்டாள். கடைசி வரை இருவரும் தம்பதிகளாகவே வகுப்புக்கு வந்தது வேறு கதை. அதன் பிறகு சில காலம் கேரளாவுக்கு செல்லும் வாய்ப்பில்லாமல் இருந்தாலும் எங்காவது நெற்றியில் சந்தனம் இட்டிருக்கும் பெண்ணை கடக்கும் போது ஒரு நொடி தரிசித்து விட்டு செல்வதே வழக்கமாகி போனது.

ஒரு வார்த்தை கூட மலையாளம் தெரியாவிட்டாலும் சங்கம் திரையரங்கை கடக்கும் போது ஏதாவது மலையாள படம் போட்டிருந்தால் போய் பார்த்து கதாநாயகியை ஜொள்ளு விட்டு வந்ததும் வரலாற்றின் அடுத்தடுத்த பக்கங்கள். மஞ்சு பார்கவி எனக்கு பிடித்த நடிகை. அவருக்கு திருமணமாகியதும் காவ்யா மாதவன் மேல் பித்து பிடித்து திரிந்தேன்.

இதற்கிடையில் என் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ஒரு மலையாள அத்லெட் குடும்பம் குடிவந்தது. அவர்கள் வீட்டுக்கு வந்த கேரளத்து சிட்டை தனியாக முயற்சித்து நெருங்கி வரும் வேளையில் அதுவும் சத்தமின்றி கேரளாவுக்கு பறந்து சென்று என் சபதத்திற்கு முட்டுக் கட்டை போட்டது.

2005ம் ஆண்டு நான் வேலை பார்த்த கட்டுமான நிறுவனம் கேரளத்தில் கால் ஊன்ற திட்டமிட்டு சென்னையில் சிறந்த ஊழியர்களாக பார்த்து திருவனந்தபுரம் புதிய அலுவலகத்திற்கு பணிமாறுதல் செய்தது. நான் நிர்வாக அலுவலராக சென்றேன். அங்கு சென்ற பிறகு செய்த முதல் வேலை மலையாளம் கற்றுக் கொண்டது தான்.

நிறுவனத்திற்கு தற்காலிக பணியாளராக வந்த ஒரு மலையாளியை கூட்டு சேர்த்துக் கொண்டு சில வாரங்களில் சமாளிக்கும் அளவுக்கு பேசக் கற்றுக் கொண்டேன். சிறு அலுவலகம் என்பதால் நானே கணக்காளர் வேலையையும் சேர்த்து பார்த்தேன். பணம் எடுப்பதற்காக சாலையில் உள்ள வங்கிக்கு சென்ற திரும்புவேன்.

சாலைக்கு செல்லும் போதெல்லாம் எதிரில் இருக்கும் பத்மநாபசாமி கோயிலுக்கு சென்று தரிசித்து விட்டே திரும்புவேன். யாரை என்று நீங்கள் கேட்டால் உம்மை விட வாத்து யாரும் இருக்க முடியாது. ஆனாலும் கடைசி வரை நமக்கு திருவனந்தபுரத்தில் ஒரு கிளியும் சிக்கவில்லை.

முயற்சித்து கிடைக்காத தோல்வியுடன் மீண்டும் சென்னைக்கு மாற்றலாகி வந்தேன். எட்டுமாத காலம் அங்கு வேலை பார்த்ததால் எனக்கு கிடைத்தது மலையாள மொழி மட்டுமே. ஒரு கிளியும் சிக்கவில்லை.

ஒரு நல்ல நாளில் ஆந்திரத்து அந்தமைன அம்மாயி ஒன்றை கண்டு ஏகப்பட்ட சண்டைகள் போட்டு கடைசியில் திருமணமும் செய்து கொண்டதும் என் வரலாற்றின் முக்கிய திருப்பங்கள். இன்றும் கேபிளில் சானல் மாற்றும் போது சூர்யா டிவியை கடந்து போகும் போதெல்லாம் என் தோல்வியின் வடுவும் கடந்தே செல்கிறது.

அதற்காக நீங்களும் முயற்சித்தால் கிடைக்காதோ என்று எண்ண வேண்டாம். முயற்சியுங்கள், வெற்றியடையுங்கள். கேரள நாட்டிளம் பெண்களுடனே என பாரதியாரின் பாட்டை மெய்ப்பியுங்கள்.



ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...