சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, August 31, 2011

மங்காத்தா விமர்சனம் சுட சுட


உண்மையில் இது போல்முதல் நாள் திரைப்படத்தில் இவ்வளவு ஆர்வம் கூட்டம் பார்த்து ரொம்ப நாளாகிவிட்டது. இன்று காலை அம்பத்தூர் ராக்கி திரையரங்கில் எட்டரை மணி ஷோவுக்கு சென்றேன். என்ன ஒரு கூட்டம். ஆவடி - அம்பத்தூர் ரோடு புல் டிராபிக் இல் மாட்டிக்கொண்டது. இத்தனைக்கும் அவரது ரசிகர் மன்றங்களை அவரே கலைத்து விட்டார். ஆனாலும் ரசிகர் கூட்டம். அப்பப்பா. நானும் விஜய், விக்ரம், சூர்யா ஆகியோர்களின் படங்களுக்கு முதல் நாள் சென்றிருக்கிறேஇன். ஆனால் இது போல் ஒரு ரசிகர்களின் அன்பு வெறி வேறு எந்த ஹீரோவிடமும் இல்லை. இத்தனைக்கும் இவர் அதிகமான தோல்வி படங்களை கொடுத்தவர்.

சரி படத்தின் கதைக்கு வருவோம். நான் சினிமாவுக்கு எல்லாம் விமர்சனம் எழுதுபவன் அல்ல. கேபிள் சங்கர் போல் டெக்னிகலாக எல்லாம் எழுத தெரியாது.
அஜித் ஒரு பணிநீக்கம் செய்யப்பட காவல் அதிகாரி. அவரின் காதலி த்ரிஷா. அவரது தந்தை ஜெயப்ரகாஷ் மும்பையில் ஒரு தாதா. சூதாட்ட க்ளப் வைத்துள்ளவர். அவர் கிரிக்கெட் சூதாட்டம் நடத்துகிறார். அதில் வரும் 500 கோடி பணத்தை அவரிடம் வேலை செய்யும் வைபவ், ஒரு உதவி கமிசனர், ஒரு பார் ஓனர் அவரது நண்பர் IIT Gold medalist பிரேம்ஜி ஆகியோர் கொள்ளை அடிக்க திட்டமிடுகின்றனர்.

இவர்களுக்கு தெரியாமல் இவர்களது நடவடிக்கை மூலம் அஜித் அவர்களின் திட்டத்தை கண்டு பிடிக்கிறார். பிறகு அவர்களை மிரட்டி அவர்களுடன் திட்டத்தில் தானும் சேர்ந்து கொள்கிறார். இவர்கள் ஐவரும் மிக திறமையாக திட்டமிட்டு பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். பணத்தை ஒரு பாதுகாப்பான இடத்தில வைத்து விட்டு பிறகு எடுத்து கொள்ளலாம் என பிரிகின்றனர்.
இந்த சம்பவத்தை கண்டு பிடிக்கிறார். போலிஸ் அதிகாரியான அர்ஜுன். உண்மையில் அஜித் யார், அவரின் திட்டம் என்ன ஐவர என்னவாகிறார்கள். என்பதை சொனால் நன்றாக இருக்காது. நீங்கள் thiraiyil காண்க .

அஜித் பார்க்கஅழகாக இருக்கிறார். படம் பக்கா ஆக்சன் மூவி
படம் சூப்பர் ஹிட். பார்க்க அருமையாக இருக்கிறது . கொஞ்சம் கூட போர் அடிக்கவில்லை . கண்டிப்பாக பாருங்கள்.
இன்னும் படம் பற்றி சொல்லலாம் என்று ஆசை தான். படம் பார்த்தவுடன் விமர்சனம் எழுதலாம் என்று ஒரு ப்ரௌசிங் சென்டரில் அமர்ந்தேன் பாடாவதி கம்ப்யூட்டர் படுத்துகிறது . இதை முடிக்கவே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.


ஆரூர் முனா செந்திலு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...