சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, August 30, 2013

பதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம் இறுதிப்பக்கம்

சங்கவி : ஈரோடு சேலம் பகுதி பதிவர்களை ஒன்று திரட்டி பதிவர் சந்திப்பிற்கு வரவழைத்த மகாகவிஞர். பத்து வருடங்களாக பதிவெழுதி வரும் சீனியர் பதிவர்களின் பட்டியல் வைத்திருந்து அவர்களிடம் பேசி வரவழைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார். இவர் மேடையில் கவிதை வாசிப்பதாக சொல்ல மிரண்டு போன மயிலன் சந்திப்பிற்கு வரும் எண்ணத்தையே கைவிட்டு விட்டார். அதன் பிறகு அந்த மாதிரி தப்பெல்லாம் செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி அளித்து மயிலனை வரவழைத்த ராஜதந்திரி்.


சுரேஷ் : திருப்பூர் பகுதி பதிவர்களிடமும் வெளிநாட்டில் உள்ள பதிவர்களிடமும் பேசி ஓரளவுக்கு நிதி வசூல் செய்து கொடுத்த மகான். பக்தி படங்களாக பார்த்து இறை பக்தியில் ஊறிப் போன பக்திமான். நாளை காலை முதல் சென்னை பதிவர் சந்திப்புக்கு வரப் போகும் பதிவர்களை ஒருங்கணைத்து தங்குமிடத்திற்கு அழைத்து செல்லுதல், பதிவர் சந்திப்பன்று தங்குமிடத்திலிருந்து பதிவர் சந்தி்ப்பு நடைபெறும் இடத்திற்கு பதிவர்களை அழைத்து செல்லுதல் போன்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.

பிரகாஷ் : தென் தமிழ்நாட்டு பகுதியில் உள்ள பதிவர்களிடம் பேசி ஓருங்கிணைத்து அவர்களை பதிவர் சந்திப்புக்கு அழைத்து வரும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். வாரம் மூன்று பதிவாவது பதிவர் சந்திப்பை பற்றி வெளியிட்டு பதிவர்களிடையே கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியவர். மேடையில் பரதநாட்டியம் ஆட இருப்பதாக கேள்வி. பார்ப்பவர்களின் கதி தான் பாவம்.


கோகுல் : பாண்டிச்சேரியில் ஆசிரமம் அமைத்து அருள்பாலிக்கும் பெரியவர். வட தமிழ்நாட்டு பகுதியிலும் பாண்டிச்சேரியிலும் இருக்கும் பதிவர்களை ஒருங்கிணைத்து பதிவர் சந்திப்புக்கு கொண்டு வரும் பொறுப்பை ஏற்றுள்ளார். வரும் போது நக்கீரனுடன் காரில் வருவதாக தெரிகிறது. பாவம், அவருக்கு வந்த சோதனை நம் எதிரிக்கு கூட வரக் கூடாது.

தனபாலன் : திவ்யதர்ஷினிக்கு பிறகு மக்களால் டிடி என அன்போடு அழைக்கப்படுவர் தலைவர் தான். சொந்த வேலை நெருக்கடியினால் அதிக வேலை பதிவர் சந்திப்புக்கு செய்ய முடியாவிட்டாலும் கூட முடிந்த அளவுக்கு வேலைகளை செய்து வருகிறார். சகபதிவர்களே பொறமைப்படும் அளவுக்கு கிளாமர் முகவெட்டு தலைவருக்கு உண்டு. சினிமாவுக்கு போயிருந்தால் அரவிந்தசாமியை அடித்து வீழ்த்தியிருப்பார்.


ராஜி : சாப்பாட்டு குழு என்று ஒன்று அமைத்து வரவு செலவுகளையும் உணவு ஏற்பாட்டையும் தனியாக மேற்கொள்ள வேண்டும் என்று எங்களை எண்ண வைத்தது அவரின் வார்த்தை தான். முதன் முதலாக சாப்பாட்டிற்கென ஒரு தொகையை தருவதாக வாக்கு கொடுத்து, இது நல்லாயிருக்கே இது போல் யோசிக்கும் மற்றவர்களையும் ஒன்று சேர்த்து இந்த அளவுக்கு சிறப்பாக உணவு ஏற்பாடுகள் நடக்க ஆரம்ப புள்ளி வைத்தவர். சந்திப்பில் பிரியாணியை சுவைப்பதற்காகவே நேற்றிலிருந்து விரதம் இருப்பதாக கேள்வி.

சசிகலா : சென்ற வருடம் பதிவர் சந்திப்பில் புத்தக வெளியீடு நடத்தி ஓரு புது துவக்கம் கொடுத்தவர். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் நாலு புத்தகம் வெளியாவதும், அடுத்த வருடம் இதன் எண்ணிக்கை பத்தாக கூடவிருப்பதும் கூட இவராலே தான் சாத்தியமானது. இந்த ஆண்டு பெண் பதிவர்களை வரவேற்று அவர்களுக்கு தங்கும் இடம் தேவைப்படின் ஏற்பாடு செய்து தருதல், பதிவர் சந்திப்புக்கு வரும் பெண் பதிவர்களை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளை செவ்வனே செய்து வருகிறார்.


ஜீவா : பதிவர் சந்திப்பு தேதி முடிவானதும் கோவையில் இருக்கும் பதிவர்களை ஒருங்கிணைத்து ஒரே பேருந்தில் அவர்கள் வருவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த சுற்றுலா விரும்பி. அதே போல் ஒரு குறிப்பிடத்தக்க தொகையை நன்கொடையாக முதன் முதலில் கொடுத்ததும் இவரே. பதிவர் சந்திப்பில் இவர் பிரியாணியை சுவைத்து எழுதப் போகும் கட்டுரையை சற்றே கிலியுடன் எதிர்பார்த்து ஓட்டல் ஓனர் காத்திருக்கிறார்.

லாஸ்ட் பட் நாட்........ நோ நோ லாஸ்ட் தான்.

நக்கீரன் : நக்கீரன் வரப் போகிறார் என்று தெரிந்ததுமே ஏகப்பட்ட பேர் டரியலாகிப் போனார்கள் என்பது என்னவோ உண்மை. ஆனால் அவர்களை சமாதானப் படுத்திவர செய்திருக்கிறார். நிறைய நண்பர்களிடம் பேசி நன்கொடை தர வைத்தவர். நிறைய சீனியர்களிடம் பேசி பதிவர் சந்திப்புக்கு வர வைத்தவர். இவருக்கு என்று தனியே விளக்கம் தேவைப்படாத அளவுக்கு பதிவே எழுதாமல் உலகமகா பிரபலமான பதிவர் இவர் தான். எல்லாம் நம்மளப் புடிச்ச கெரகம். வாய்யா சிங்கமே, வந்து அமைதியா உறுமிட்டு போ.

--------------------------------------

ஞாயிறன்று நடக்க இருக்கும் நமது பதிவர் சந்திப்புக்கு திரைப்பட பாடலாசிரியர் திரு. நா.முத்துக்குமார் அவர்கள் வருகை தர இருக்கிறார்கள்.

நா.முத்துக்குமார் அவர்களே, வருக வருக.

-----------------------------------------

 பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு!!!

உங்கள் வலைப்பதிவில் பதிவர் விழாவிற்கான நேரடி ஒளிபரப்பு நிரலியை கீழ்க்கண்ட முறையில் இணைக்கவும்.

1. உங்கள் dashboard-இல் புதிய பதிவு எழுதும் பக்கத்தை திறந்து கொள்ளவும்.
2. அதில் பதிவு எழுதும் கட்டத்திற்கு மேலே html என்ற option-ஐ கிளிக் செய்யவும். இதனால் பதிவு எழுதும் பக்கம் html எழுதும் பக்கமாக மாறும்.
3. பின்னர் கீழ்க்கண்ட நிரலிகளை காப்பி/பேஸ்ட் செய்யவும்.
4. காப்பி/பேஸ்ட் செய்த பின் பதிவை தகுந்த தலைப்பு இட்டு வழக்கம் போல வெளியிடவும். விழா ஆரம்பிக்கும் வரை கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல offline என காட்டும். விழா ஆரம்பிக்கும் ஒன்பது மணிவாக்கில்  PLAY button-ஐ அழுத்தி விழா நிகழ்சிகளை கண்டு களிக்கலாம்.

<center>
<iframe frameborder="0" height="340" scrolling="no" src="http://cdn.livestream.com/embed/tamil24news?layout=4&amp;height=340&amp;width=%20560&amp;autoplay=false" style="border: 0; outline: 0;" width="560"></iframe><br />
<div style="align: center; font-size: 11px; padding-top: 10px; width: 560px;">
<a href="http://www.livestream.com/tamil24news?utm_source=lsplayer&amp;utm_medium=embed&amp;utm_campaign=footerlinks" title="Watch tamil24news"></a> <a href="http://www.livestream.com/?utm_source=lsplayer&amp;%20utm_medium=embed&amp;utm_%20campaign=footerlinks" title="Broadcast Live Free"></a></div>
</center>


----------------------------- 

பதிவர் ஒருங்கிணைப்பு குழுவில் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த வேலையை செவ்வனே செய்து முடித்து விட்டேன் என்று நினைக்கிறேன். இது தனிப்பட்ட ஒருவரின் சாதனை நிகழ்ச்சியல்ல. ஒவ்வொரு பிரிவிலும் பலர் வேலை செய்து அவர்களை ஒரு சிலர் ஒருங்கிணைத்து தான் இந்த சந்திப்பு நடக்க இருக்கிறது. நடக்க இருக்கும் சந்திப்பின் வெற்றியில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.

பதிவர் சந்திப்பைப் பற்றிய எல்லா பதிவுகளும் முடிந்து விட்டது. நாளை காலை நான் விழா நடக்கும் இடத்திற்கு சென்று விடுவேன். ஞாயிறு இரவு தான் வீடு திரும்புவேன். பதிவர்களே விழாவுக்கு வாருங்கள். சந்தித்து பேசி மகிழ்வோம். இந்த நிகழ்வுக்காக பிரதிபலன் பாராது உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் நன்றி நன்றி நன்றி.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, August 28, 2013

பதிவர் சந்திப்பு விழாக்குழுவினர் அறிமுகம், உணவு வகைகள்


கேஆர்பி செந்தில் : நிகழ்ச்சியில் உணவு ஏற்பாட்டுக் குழுவினை வழிநடத்தி செல்லும் பொறுப்பை ஏற்றுள்ளார். நிகழ்ச்சியில் உணவு வகைகள் தரமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணகர்த்தா. உணவுக்கென பெரிய அளவில் நன்கொடை வசூல் செய்து கொடுத்தவர். ஒரே சமயத்தில் மிகப்பெரிய புத்திசாலியாகவும் அடுத்த வினாடி ஒன்னும் தெரியாத பாப்பாவாகவும் மாறும் ஸ்ப்ளிட் பர்சனாலிட்டி கேஆர்பி.


மதுமதி : வளர்ந்து வரும் இளம்(!!!) பாடலாசிரியர் கவிஞர் மதுமதி. மேடை பொறுப்பு, பரிசளிக்கும் கேடயம், சால்வைகள், பேனர்கள் மற்றும் விழா நிகழ்ச்சிகள் இறுதி செய்யும் பொறுப்பை ஏற்று திறம்பட செய்து வருகிறார். தமிழ் சினிமா திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர் மற்ற வேலைப்பளுவுக்கு இடையே அலைந்து திரிந்து விழா ஏற்பாடுகளை செய்து வருகிறார். கவிஞர் என்பதற்காக விழாவில் கவிதை வாசித்து மற்றவர்களை இம்சிக்க விரும்பாத நல்ல மனிதர்.

டிஎன் முரளிதரன் : மேடை நிர்வாகத்தில் ஒரு பகுதி, பரிசளிப்பு கேடயம் சால்வைகள் பொறுப்பு போன்றவற்றை ஏற்றுள்ளார். அதிக நெருக்கமில்லாததால் கலாய்த்தால் அடிப்பாரோ என யோசித்து அப்படியே விடுகின்றேன்.



சிவக்குமார் : உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வரும் தமன்னா ரசிகர் மன்ற திநகர் கிளை தலைவர். ஆலோசனை கூட்டங்களை பரபரவென விவாத களமாக்கும் படபடப்பான பேச்சாளர். சிவா ஒரு டீடோட்லர் என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அரசன் : ஜிம்பாடி ராஜா என்ற பட்டப் பெயர் உடைய அரசன் தான் விழாவின் கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் கல்லாப்பொட்டி சிங்காரம். இவரது வங்கிக் கணக்கில் தான் விழாவுக்கான நன்கொடைகள் வரவு வைக்கப்படுகின்றன. வாரா வாரம் ஆலோசனை கூட்டங்களை ஏற்பாடு செய்வது இவர் பொறுப்பு தான். மன்மதன் பார்ட் 2 எடுத்தால் நாயகனாக நடிக்க காத்திருக்கும் கட்டிளங்காளை.

-----------------------------------------

பதிவர் சந்திப்பில் பப்பே முறையில் வழங்கப்படும் மதிய உணவு வகைகள்

அசைவம்
பைனாப்பிள் கேசரி
கிராண்ட் தாஜ் சிக்கன் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
சிக்கன் டிக்கா
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

சைவம்
பைனாப்பிள் கேசரி
வெஜ் சாலட்
கிராண்ட் தாஜ் வெஜ் பிரியாணி
தயிர் பச்சடி
கத்திரிக்காய் சட்னி
பொட்டேட்டோ சிப்ஸ்
தயிர் சாதம்
ஐஸ்கிரீம் 50 கிராம் கப்
வாழைப்பழம்
பீடா

-----------------------------------------

செல்வின் : உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வரும் வரலாற்று ஆய்வாளர். திருவொற்றியூரில் பஞ்சாயத்துகளை கவனிக்கும் பொறுப்புகளுக்கு இடையிலும் ஆலோசனை கூட்டங்களுக்கு வந்து கருத்துக்களை பதிவு செய்யும் ஹிஸ்டரி வாத்தியார்.


சரவணன் : விழாவில் பதிவர் அறிமுகத்திற்காகவும், விழா மலரில் போடுவதற்காககவும் கலந்து கொள்ளும் பதிவர்களின் விவரங்களை தொகுக்கும் சிரமமான பணியை செய்து வருகிறார். ஆலோசனை கூட்டம் முடிந்ததும் எங்களுடன் சேர்ந்து வெளியில் சென்று லேட்டாக வீட்டுக்கு சென்றதால் கும்மாங்குத்து வாங்கி, இப்பவெல்லாம் வண்டியை வீட்டில் விட்டு விட்டு அடுத்தவர் பைக்கில் வந்து கூட்டம் முடிந்ததுமே வீட்டுக்கு செல்லும் புத்திசாலி.


மோகன் குமார் : தனிப்பட்ட அலுவல் காரணமாக ஆலோசனை கூட்டத்திற்கு வராமுடியாமல் போனாலும் வந்த வரை விழா பணிகளை செய்து வருகிறார் தொல்லைக்காட்சி ஓனர். விழாவுக்கு வேண்டிய புரொஜக்டர், திரை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். புத்தகம் வெளியிடும் வேலையிலும் பிஸியாக இருக்கிறார் விளிம்பு நிலை மனிதர்களின் தோழர்.


சீனு : இப்போது வேலை குறைவாக இருந்தாலும் விழாவன்று வருகை தரும் பதிவர்களுக்கு என்ட்ரி போட்டு அடையாள அட்டை கொடுத்து சாப்பாட்டு டோக்கன் கொடுத்து வந்த பதிவர்களின் விவரத்தை மேடைக்கு அனுப்பும் முக்கிய பொறுப்பு சீனுவுடையது தான். சொல்ல சாதாரணமாக இருந்தாலும் மிகுந்த டென்சனை கொடுக்கும் வேலை இது. வாரா வாரம் ஆலோசனை கூட்டம் முடிந்ததும் எங்களுடன் ஸ்கூல் பையன் நகர முயற்சிக்கும் போது நாங்க எல்லாம் மோசமானவர்கள் என்று அவரை பயமுறுத்தி வீட்டுக்கு கூட்டிச் செல்லுவது சீனு தான்.

ரூபக்ராம் : விழாவில் பதிவர் அறிமுகத்திற்காகவும், விழா மலரில் போடுவதற்காககவும் கலந்து கொள்ளும் பதிவர்களின் விவரங்களை தொகுக்கும் சிரமமான பணியை பகிர்ந்து செய்து வருகிறார். விழாவன்று வருகை தரும் பதிவர்களுக்கு என்ட்ரி போட்டு அடையாள அட்டை கொடுத்து சாப்பாட்டு டோக்கன் கொடுத்து வந்த பதிவர்களின் விவரத்தை மேடைக்கு அனுப்பும் முக்கிய பொறுப்பையும் பகிர்ந்து செய்வது இவர் தான். எப்போதுமே ஆலோசனை கூட்டத்தன்று மெளன விரதம் இருக்கும் நல்ல பையன்.

பிரபாகரன் : இவருக்கு இந்த முறை திருமணமாகி சில வாரங்களே ஆனதாலும் பல உறவினர்கள் வீட்டில் விருந்து வெட்ட வேண்டியிருந்ததாலும் பல முறை ஆலோசனை கூட்டத்திற்கு வர முடியாமல் போனது. உணவு ஏற்பாடு, முதல் நாள் வருகை தரும் பதிவர்களை தங்கும் இடத்திற்கு அழைத்து செல்லுதல், சந்திப்பு அன்று வரும் பதிவர்களை வரவேற்றல் போன்ற பணிகளை செய்து வருகிறார்.

முடியவில்லை இன்னும் மிச்சமிருக்கு...

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, August 27, 2013

பதிவர் சந்திப்பு சிறப்பு பேச்சாளர் கண்மணி குணசேகரன்

நமது பதிவர் சந்திப்பில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன். அவர் பதிவர் சந்திப்பில் மதியம் 3 மணிக்கு சிறப்பு உரையாற்றுகிறார். அவரைப் பற்றிய கட்டுரை இது.

கண்மணி குணசேகரன் தென்னாற்காடு வட்டார பேச்சு நடையில் எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.


கண்மணி குணசேகரனின் படைப்புகள், மண் சார்ந்த வாழ்வியல் யதார்த்தத்தைத் தம் அழகியலாகக் கொண்டுள்ளன. கண்மணி குணசேகரன் தலைமுறைக் கோபம், காற்றின்பாடல் என்னும் இரண்டு கவிதைத் தொகுப்புகளையும் உயிர்த் தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை, வெள்ளெருக்கு என மூன்று சிறுகதைத் தொகுப்புகளையும், கோரை, அஞ்சலை ஆகிய இரண்டு நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கடலூர், விருத்தாசலம் பகுதிகளை உள்ளடக்கிய நடுநாட்டு மனித வாழ்க்கையே கண்மணி குணசேகரனின் புனைகளம். அவர் விவசாயிகளின் எழுதித் தீராத துன்பத்தையே தன் படைப்புப் பொருளாக்குகிறார்.


நேரடியான யதார்த்தவாத படைப்புகளை எழுதுபவர் கண்மணி குணசேகரன். நுண்மையான தகவல்களும் இயல்பான கதாபாத்திரச் சித்தரிப்புகளும் கொண்ட அவரது ஆக்கங்கள் நவீனத் தமிழிலக்கியத்தின் சாதனைகள் என்றே சொல்ல முடியும்.

அஞ்சலை, கோரை என்ற இரு நாவல்களும் பேசபப்ட்டவை. உயிர்த்தண்ணீர், ஆதண்டார் கோயில் குதிரை அவரது குறிப்பிடத்தக்க சிறுகதைத்தொகுதி.

பூரணி பொற்கலை - கண்மணிகுணசேகரன் எழுதிய கதைகள். கடலூர் வட்டார தொன்மங்களையும் தெய்வங்களையும் தன் கதைகளின் படிமங்களாக ஆக்குகிறார் கண்மணி.

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் எழுதிய நாவல். கடலூரில் போக்குவரத்து அலுவலக ஊழியரான கண்மணி தன் வாழ்வனுபவங்களின் அடிப்படையில் எழுதிய  ஆக்கம் இது.

ஆரூர் மூனா செந்தில்

--------------------------------------

கண்மணி குணசேகரனின் அஞ்சலை பற்றிய ஜெயமோகனின் கட்டுரை


‘சாதாரணமாகச் சொல்வது’ என்பதைப் பற்றிய ஒர் அழகியல் பிரக்ஞை ஆசிரியரில் செயல்பட்டுள்ளது என்பதை அவரது முன்னுரை காட்டுகிறது. தான் சொல்ல முனையும் வாழ்க்கையின் தரத்துக்கு சிறிய அளவிலான அழகுகள் கூட சுமையாகும் என்று படுவதாக ஆசிரியர் சொல்கிறார். ஆகவே இலக்கணசுத்தமான இயல்புவாத அழகியல் கொண்ட ஆக்கமாக இந்நாவல் உள்ளது.


எளிமையான முறையில் அஞ்சலையின் கதாபாத்திரத்தின் தனித்தன்மைகளை கண்மணி சித்தரித்துக் காட்டுகிறார். படிக்கப்போனவள் வயல்காட்டில் கிடைக்கும் உண்டைச் சோற்றுக்கு ஆசைப்பட்டு பள்ளியை விட்டு ஓடிஓடி வருகிறாள். நாளடைவில் வயல்வேலையே அவள் இயல்பாக ஆகிறது. அஞ்சலையின் இயல்பில் உள்ள இந்த ‘நாக்குத்துடிப்பை’ அவளுடைய அடிப்படையான ஒரு குணத்தின் வெளிப்பாடாக நாம் காணலாம். உடலின்பம் மீது இயல்பாக உருவாகும் இச்சை. இந்த இச்சைக்கும் எப்போதும் வேவுபார்த்தபடி இருக்கும் சமூகத்தின் கண்களுக்கும் இடையேயான முரண்பாடு மூலம் உருவாகும் சிக்கல்களே விரிந்து விரிந்து அவள் வாழ்க்கையை தீர்மானிக்கின்றன என்று எளிமையாகச் சொல்லலாம்.

உணவுச்சுவை போலவே எளிமையான காமம்தான் அஞ்சலை தேடுவது. சின்ன அக்கா கணவன் அவளை பெண் கேட்டபோது ஒரு சிறு யோசனைக்குப் பிறகு அதை ஒப்புக் கொள்வதில் அவளுக்கு தயக்கம் இல்லை. அவளை தனியாகச் சந்திக்கும் சின்ன அக்கா தங்கமணி ”… இந்தா பாரு புள்ள படுபயலா இருந்தாலும் வேற எவனையாம் பாத்துக் கட்டிக்க. மீறி நீயும் உன் அம்மாவும் ஏதாவது திட்டம் போட்டீங்க,அப்றம் என் பொணத்தைத்தான் பாக்கலாம்…” என்று மிரட்டியமையால்தான் அவள் பின் வாங்குகிறாள்.

பெண்பார்க்க வந்த கும்பலில் மாப்பிள்ளையாகக் காட்டப்பட்டவன் திடகாத்திரமாக இருக்கிறான். அதுவே அவளுக்கு ஆழமான உவகையும் மெல்லிய காதலுணர்வுகளையும் அளித்துவிடுகிறது. கிட்டத்தட்ட பசிக்கு உணவு என்ற அளவிலேயே இது இருப்பதை கண்மணி நுட்பமாகச் சொல்லிச் செல்கிறார். ஏமாற்றப்பட்டு இன்னொருவன் கணவனாகும்போது அஞ்சலையை உண்மையில் வதைத்தது எது என சொல்வது கஷ்டம். ”எமாத்தின பயலுவோடா நீங்க…உங்கள கண்டாலே பத்தி எரியுதுடா” என்று அவள் தினம் எல்லாரிடமும் பொங்கி வடிந்தாலும் உள்ளூர இருப்பது நிறைவிலா காமத்தின் வெம்மையே. அவளுடைய பசிக்கு இயலாத உணவு அவள் கணவன் என்பதே உண்மையான சிக்கல்.

உள்ளூர அவளுக்குத் தெரியும், அவளது கணவன் மண்ணாங்கட்டி அவளை ஏமாற்றவில்லை என்று. ஆனாலும் அவனை வெறுக்கிறாள். அவனை அவமதித்து வெறுகிறாள். ஆனால் அவளை திட்டம் போட்டு ஏமாற்றிய மீசைக்காரக் கொழுந்தனை அவள் வெறுக்கவில்லை. அவனுடன் காம உறவையே அவள் நாடுகிறாள். அவனை பார்ப்பதே அவளுக்குப் பரவசம் அளிக்கிறது. அவனைப்பற்றிய நினைவு எந்நேரமும் அவளில் நிறைந்திருக்கிறது. அவளை கோபம் கொள்ளச் செய்வது அவனது உதாசீனமே. அந்த வெறியில் அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு அவள் கேட்பதெல்லாம் ,” எனக்கொரு வழி சொல்லுடா கம்னாட்டி ” என்றுதான் ‘..உன் பெண்ணாட்டி உன்னை என் கூட விடுவாளா?’ என்றுதான். அவன் அதற்கு ஒப்புக் கொண்டிருந்தான் என்றால், அவன் மனைவி அப்படி ஒரு ஆவேசமான பெண்ணாக இல்லாலிருந்தால் கதை அங்கேயே முடிந்திருக்கும். அஞ்சலை அக்கா கல்யாணி போல அவளுக்கும் ஒரு மீறல்வாழ்க்கை அமைந்திருக்கும்.

கணவனை உதறிவிட்டு தன் அக்கா கல்யாணியுடன் சென்று ஆறுமுகத்தைப் பார்த்தக் கணமே அவனால் அஞ்சலை கவரப்படுகிறாள்.பசித்தவன் உணவைக் கண்டது போல என்றுதான் மீண்டும் சொல்ல முடிகிறது. அவனது சிவப்பு நிறம் மற்றும் அழகிய தோற்றம் குறித்து அவள் கொள்ளும் பரவசத்தை விரிவாக எழுதும் கண்மணி அவள் ஒரே கணத்தில் தன் முந்தைய வாழ்க்கையை உதறி ஆறுமுகத்தை கணவனாக ஏற்றுக் கொள்வதைக் காட்டுகிறார். அவனுடனான உறவில் அவள் நிறைவு கொள்கிறாள். அவனுக்கும் கல்யாணிக்குமான உறவு தெரியவந்தபோது அவள் கொதிப்பும் வெறுப்பும் கொண்டபோதிலும்கூட மெல்லமெல்ல அதை ஏற்றுக் கொள்ளும் இடத்தை அடைவதைக் காண்கிறோம்

கல்யாணிக்கு அஞ்சலை மீது பொறாமையும் குரோதமும் வளராவிட்டால், ஆறுமுகம் ஓரளவு இருவரையும் சரிசமமாக நடத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும்? அஞ்சலை சாதாரணமாக அதை ஏற்றுக்கொண்டு சிறு அதிருப்தியுடன் வாழ்க்கையை முன்னெடுத்திருப்பாள். தங்கமணியின் கணவனிடம் வாழ்க்கையைப் பகிர எளிதில் முன்வந்தவள் தானே அவள்? அவளது தேவை எளிய பசி மட்டுமே. பெரிய கனவுகள் அவளை வழிநடத்தவில்லை.

மீண்டும் முதல்கணவனிடம் திரும்போது அஞ்சலை உடலும் மனமும் தளர்ந்து காம நாட்டத்தை இழந்து வெறும் தாய் மட்டுமாக ஆகிவிட்டிருக்கிறாள். நான்குபேர் மதிக்கும் ஒரு எளிய வாழ்க்கை. குழந்தைகளின் நலமான வாழ்க்கை. அவளுக்கு அதுவே பெரும் சுமையாக உள்ளது. அவளைச்சூழ்ந்த சமூகம் அதை அவளிடமிருந்து பறிக்கிறது.

இந்நாவலில் முக்கியமாக முதன்மைப்படும் சமூகப்பிரச்சினையே சமூகத்தின் வன்முறைதான். அஞ்சலையை ஓட ஓட துரத்தியடிக்கிறது சமூகம். இந்திய சமூகத்தில் எல்லா சாதிகளுக்குள்ளும் புறங்கூறுதல், வம்பு பேசுதல் இயல்பாக உள்ளது என்றாலும் ஐச்சூழலில் அது இன்னும் அதிகமாக இருக்கிறது. நாவலே அதற்கான காரணங்களையும் காட்டிச்செல்கிறது. மனிதர்கள் அசாத்தியமான அளவுக்கு அடர்ந்து நெருங்கியடித்து சேரியின் சந்துக்குள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் இன்னொருவரின் கண்முன் தான் வாழ்க்கையைந் அடத்த வேண்டியிருக்கிறது. அந்தரங்கமே இல்லை. ஆகவே அந்தரங்கம் என ஒன்று உண்டு என்ற நினைப்பே எவரிடமும் இல்லை.

நாவலுக்குள் பல கதாபாத்திரங்கள் ஒருவரோடொருவர் காட்டும் கொடிய வெறுப்பும் இழைத்துக்கொள்ளும் தீங்குகளும் முதல் நோக்கில் அதிர்ச்சி ஊட்டுகின்றன. ஆனால் கூரிய வாசிப்பில் அவர்கள் எதிரிகளிடம் மட்டுமல்ல சொந்தக் குழந்தைகளிடம்கூட அதே குரூரத்துடன் நடந்துகொள்வதையே மீண்டும் மீண்டும் காண்கிறோம். அஞ்சலை உட்பட அனைவருமே பெற்ற குழந்தைகளை காரணமிருந்தும் இல்லாமலும் அடித்து துவைக்கிறார்கள். கணவனையும் தாயையும்கூட கொடுமையாக வசை பாடுகிறார்கள். அடிக்கவும் துணிகிறார்கள். அந்த வன்மம் ஒருவகையில் தன்மீதான, தன் விதி மீதான வன்மம். ஒரு மொத்தப்பார்வையில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட அவ்வாழ்க்கை மீதான ஆறாக் கசப்பு அது.

பாக்கியத்தின் குணங்களின் வாரிசாகவே நாவலில் அஞ்சலை வருகிறாள். கன்று பசுவைத் தொடர்கிறது. பாக்கியத்தின் பெண்களில் தங்கமணி ஓர் எல்லை. அவளும் ஆவேசமும் வேகமும் கொண்ட உழைக்கும் பெண்தான். ஆனால் கணவனுக்குக் கட்டுப்பட்டவள். நல்லவள் அத்துடன் உணர்ச்சிகரமான பலவீனம் கொண்டவள். அவள் கணவன் அதையே பயன்படுத்திக் கொள்ள முயல்கிறான். கல்யாணி மறு எல்லை. கணவனின் பலவீனத்தை அவள் பயன்படுத்திக் கொள்கிறாள். காமமும் உலகியலாசையும் கொண்டபெண். அதன் வேகமே அவளிடம் குரூரமாக வெளிப்படுகிறது. தன் முன் இருக்கும் ஒன்றை இழக்க விரும்பாத பசியின் உக்கிரமே அவள் ஆளுமை.

அஞ்சலை இரு எல்லைகள் நடுவே இருக்கிறாள். அவளை கண்மணி வழக்கமான மிகையுணர்ச்சிக் கதைகளில் வரும் நாயகி போல அனைத்து நன்மைகளும் நிரம்பியவளாகக் காட்ட முனையவில்லை. அஞ்சலையின் இயல்பான காமவிழைவு நாவலில் நேரடியாகவே சொல்லப்படுகிறது. அச்சூழலில் பிறரிடம் இருக்கும் அதே குரூரம் அவளிடமும் இருக்கத்தான் செய்கிறது. சிறந்த உதாரணம் அவள் தன் கணவனிடம் நடந்துகொள்ளும் முறை. அதைவிட கணவனின் வயோதிகத் தந்தையை நடத்தும் முறை. பல தருணங்களில் அது எல்லை மீறிச்செல்கிறது. அஞ்சலை கையாளும் பல சொற்கள் அவளுக்குள் இருக்கும் கல்யாணியைக் காட்டுபவை. அவற்றை கண்மணி குணசேகரன் மழுப்பவேயில்லை.

அத்துடன் அவள் மண்ணாங்கட்டி மீது காட்டும் முழுமையான உதாசீனம் நாவலின் முக்கியமான ஒரு சரடாகும். அவன் தரப்பில் நின்று நோக்கினால் அதன் முகம் கொடூரமானது. அதையும் கண்மணி மழுப்பவில்லை. அவன் அஞ்சலை போன்ற ஒரு பெண்ணை மணக்க விரும்பவோ முயலவோ இல்லை. அவனையும் ஏமாற்றித்தான் அஞ்சலைக்கு கணவனாக்கியிருக்கிறார்கள். இருந்தும் அவன் அவள்மீதான தன் உரிமையை வன்முறை மூலம் காட்டவில்லை. அவள் மீது மதிப்பும் அனுதாபமும் கொண்டிருக்கிறான். அவளை வழிபடுகிறான். அவள் உணர்வுகளைப் புரிந்துகொள்கிறான். அவள் உதறிச்சென்றபின்னரும் காத்திருக்கிறான். அவள் மீண்டு வரும்போது ஏற்றும் கொள்கிறான்

அந்தப்பிரியத்தை அஞ்சலை எதிர்கொண்ட விதம் எப்படி? அவளுக்கு ஆணின் தோற்றம் மட்டுமே முக்கியமாக இருக்கிறது. அயோக்கியனாக இருந்தும் ஆறுமுகத்தை கெஞ்சிக் கொண்டிருந்தவளுக்கு மண்ணாங்கட்டி ஒரு மனிதனாகவே படவில்லை. அவனுடைய உழைப்பில் குடும்பத்தை கட்டி எழுப்பும்போதுகூட அவனை அவள் அன்புடனும் மதிப்புடனும் நடத்தவில்லை. ஒரு கட்டத்தில் கணவன் என்ற இடத்திலிருந்தே விலக்கி விடுகிறாள். மண்ணாங்கட்டி அவள் மீது கொள்ளும் மனத்திரிபுக்கும் ஐயத்திற்கும் அதுவே ஊற்றுக்கண். அவ்வகையில் பார்த்தால் அஞ்சலையின் கடைசிக்காலத்து நிராதரவான நிலைக்கு அவளே பொறுப்பு.

இதேபோல இன்னொரு இடம் இறுதியில் பாக்கியம் அஞ்சலையிடம் சொல்லும் கிட்டத்தட்ட கடைசி உரையாடல். ”அதுக்குல்லாம் யாரைச் சொல்லியும் குத்தமில்லை. எல்லாம் ஒன்னாலத்தான். நல்லதோ கெட்டதோ அவன்கிட்டயே இருந்திருந்தேன்னா இப்டி நடக்குமா?வெளிய வந்துட்ட. வந்த எடத்தில ஒத வாங்கினாலும் அடி வாங்கினாலும் நம்ம கையில புள்ள இருக்குத இத தூக்கிட்டு வராம இருந்திருக்கணும்…அதுவும் இல்ல. பழையபடி வேப்பம்பழமா இருந்தவன் பெலாப்பழமா இனிக்குதான்னு அவன் கிட்ட போயி ரெண்டு பெத்துக்கிட்ட”

அஞ்சலையின் முக்கியமான சிக்கலை அம்மா இங்கே தொட்டு விடுகிறாள். வாழ்க்கையை உறுதியாக எதிர்கொள்ளாமல் சட்டென்று உடைந்துபோய் நழுவி ஓடிவிடுவதே அவள் மீண்டும் மீண்டும் செய்வது. கடைசியில் அவள் கொள்ளும் தற்கொலைமுயற்சிகூட ஒரு தப்பி ஓட்டமே. ஆனால் நிலா அப்படி இல்லை. நாவலின் இறுதியில் அவள் சொல்லும் சொற்களில் திடமாக முடிவெடுத்து நின்று எதிர்கொள்ளும் மன ஆற்றல் தெரிகிறது.

கார்குடல் ,மணக்கொல்லை, தொளார் என மூன்று ஊர்களையும் அதிகமாக விவரிக்காமலேயே வேறுபடுத்திக் காட்டுகிறார் கண்மணி குணசேகரன். வயலும் நீரும் நிறைந்த கார்குடல், முந்திரிக்காடுகள் மண்டிய மணக்கொல்லை, நகர்சார் ஊரான தொளார் என இயற்கை மக்களின் இயல்பு அனைத்துமெ திட்டவட்டமாக மாறுபடுகின்றன. நிலக்காட்சிகளை தீட்டுவதில் பருவ மாறுதல்களைச் சொல்வதில் ஆர்வம் காட்டாத சித்தரிப்பு முறை இது. கதாபாத்திரங்களின் கண்வழியாக தெரியும் தகவல்களே அச்சித்திரங்களை எளிமையாக வாசக மனத்தில் உருவாக்குகின்றன.

கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு வாழ்க்கையை கண்ட அனுபவத்தை அளிப்பதே இயல்புவாதத்தின் கலை. பரிசீலனை அல்ல. வரலாற்றில் வைத்துப் பார்த்தல் அல்ல. உட்புகுந்து அறிதல் கூட அல்ல. ஆசிரியர் ‘இல்லாமலேயே’ நிகழும் கூறல் அது. உண்மையான வாழ்க்கை எப்போதுமே முடிவுகளும் பதில்களும் அற்றது. அறியும்தோறும் விரிவது. அவ்வனுபவத்தை அளிக்கையில் இயல்புவாத நாவல் கலைவெற்றி கொள்கிறது. அஞ்சலை அப்படிப்பட்ட வெற்றிகரமான இலக்கிய ஆக்கம்.

நன்றி ஜெயமோகன்

Monday, August 26, 2013

பஞ்சேந்திரியா - பதிவர் சந்திப்பு சிறப்பிதழ்

பதிவர் சந்திப்புக்கு அருகில் நெருங்கிவிட்டோம். கடைசி வாரம் இது. வேலைகள் அடிப்பொலியாக நடந்து கொண்டு இருக்கிறது. ஏற்பாட்டுக் குழுவினர் தூள் பரத்திக் கொண்டு உள்ளனர். இந்த ஆண்டு பதிவர் சந்திப்பு வேலைகளை களத்தில் இறங்கி செய்து கொண்டு இருக்கும் பதிவர்களை பற்றிய சிறு அறிமுகம் .

புலவர் சா.ராமானுஜம் அய்யா : 80+ வயதிலும் ஒவ்வொரு ஆலோசனை கூட்டத்திற்கும் வந்து எங்களை வழிநடத்தி செல்லும் மூத்தவர். அடுத்த ஆண்டு மதுரையில் பதிவர் சந்திப்பு நடைபெறும் போது முதல் ஆளாக பேருந்தில் இடம் பிடிக்க காத்திருக்கும் இளமை பதிவர். இந்த மாதம் துணைக்கு ஆளின்றி டிராவல்ஸ்ஸில் புக் செய்து கொண்டு குழுவினருடன் மொத்த ஐரோப்பாவையும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வந்த ஜாலிமேன்.

சென்னை பித்தன் : அவ்வப்போது ஆலோசனை கூட்டத்திற்கு வந்து ஆலோசனைகளை சொல்லியும் பதிவர் சந்திப்பு பற்றிய பதிவுகளை விடாமல் அவருடைய பல தளங்களில் வெளியிட்டு அந்த பெப்பை கரண்ட்டிலேயே வைத்து இருப்பவர். தனது தலைமுடியில் இருப்பது இளநரை தான் என உறுதியாக நம்பும் தலைமகன். எந்த சூழ்நிலையிலும் மற்றவர்கள் தன்னை அய்யா என்று கூப்பிட்டு வயதானவராக காட்டி விடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்.

கவியாழி : அவரது பெயரை அதுவரை தான் போட வேண்டும் என்றும் அதற்கு மேல் போடக் கூடாது என்று கண்டிப்பாக கூறிவிட்டார். என்னவென்று கேட்க வேண்டாம் அது சிதம்பர ரகசியம். பதிவர் சந்திப்பு பற்றிய ஆலோசனை கூட்டங்கள் அவ்வப்போது கடும் சச்சரவுகளுடன் சட்டையை கிழித்துக் கொள்ளும் அளவுக்கு சூடேறிப் போகும். அப்போது டக்கென கமெண்ட் அடித்து சபையை காமெடி கிளப்பாக மாற்றிவிடுவதில் அசகாய சூரர்.

பாலகணேஷ் : அழைப்பிதழ் தொடங்கி ஐடி கார்டு விண்ணப்பங்கள் சிறப்பு அழைப்பாளர்களுக்கான பேனர்கள் வரை எல்லாவற்றையும் அண்ணன் தான் தயார் செய்கிறார். அதுமட்டுமில்லாமல் பதிவர் சந்திப்பில் வெளிவர இருக்கும் சங்கவியின் புத்தகம் மற்றும் சேட்டைக்காரனின் புத்தகத்தின் வடிவமைப்பையும் செய்து கொண்டுள்ளார். சிவா சொன்னது போல காது வழியாக புகையை விடுவதில் மன்னர். அசந்தால் நம் காதில் புகையை வரவழைத்து விடுவார்.

மற்றவர்களின் விவரம் நாளை

---------------------------------

எல்லோருக்கும் தெரிந்து விட்டதால் தங்கும் அறைக்கான கோர்டுவேர்டு மாற்றப்பட்டு விட்டது. சென்ற முறை சொன்னது போல ஒத்தை கண் மனிதர் இருக்க மாட்டார். அந்த டயலாக்கும் கிடையாது. விடுதியின் வாசலில் ஒரு அன்ரூல்டு நோட்டில் கவிதை எழுதிக் கொண்டு ஒருவர் நிற்பார்.

அவ்வப்போது அதனை புகைப்படமும் எடுப்பார். அவரிடம் சென்று பிரபல பிளாக்கர் என்று கூற வேண்டும். அதற்கு பதிலாக அவர் Shut your mouth என்று கூறுவார். கோவப்பட்டு அடிக்கப்போய் விடக் கூடாது. அதற்கு பதிலாக நீங்கள் என்ன சொல்லி வெறுப்பேற்றி சாவியை பெற வேண்டும் என்பதை முகநூல் உள்டப்பி வந்தால் சொல்கிறேன்.# ஹியூமர் ஹியூமர்

---------------------------------

நம்ம சேட்டைக்காரனின் புத்தகம் பதிவர் சந்திப்பு அன்று வெளியிடப்படுகிறது


--------------------------------

பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்
அகர வரிசையில் கொடுக்கப்பட்டுள்ளது

அ.சிவசங்கர்
அஞ்சாசிங்கம் செல்வின்
அகநாழிகை பொன் வாசுதேவன் 
அகலிகன்   http://agaligan.blogspot.in/
அப்துல் பாசித் பிளாக்கர் நண்பன்
அமுதா கிருஷ்ணா அக்கம் பக்கம்.http://amuthakrish.blogspot.in/
அதிஷா
அரசன் (கரைசேரா அலை)
அரவிந்தன்
ஆதிமனிதன்
ஆரூர் மூனா செந்தில்
இப்படிக்கு இளங்கோ
இம்சை அரசன் பாபு
இரவுவானம் சுரேஷ்
இரா.மாடசாமி வானவில்
உமாமகேஸ்வரி அபயாஅருணா
உண்மைத் தமிழன் சரவணன்
உலகசினிமா பாஸ்கரன்
என் ராஜபாட்டை ராஜா
ஒட்டக்கூத்தன்
கடல் பயணங்கள் சுரேஷ் குமார்
கண்மணி ராஜன்
கருத்து கந்தசாமி
கலாகுமரன்
கவிஞர் மதுமதி
கவிதைவீதி செளந்தர்
கவியாழி
காணாமல் போன கனவுகள் ராஜீ
கார்த்தி ஈரோடு
கிராமத்துக் காக்கை
குடந்தையூர் ஆர். வி. சரவணன்
குணா
குருவை மாதேஸ்
கெளதமன் K G எங்கள் பிளாக்
கே.ஆர்.பி.செந்தில்
கேபிள் சங்கர்
கோகுல் மகாலிங்கம் – பாண்டிச்சேரி
கோவை ஆவி
கோவை கமல்
கோவை கோவி
கோவை சக்தி
கோவை சதிஸ்
கோவை நேரம் ஜீவா
கோவை ராமநாதன்
கோவை2தில்லி
சங்கர இராமசாமி http://rssairam.blogspot.com/
சங்கரலிங்கம் உணவு உலகம்
சசிகலா (தென்றலின் கவிதைகள்)
சசிகலா திருவண்ணாமலை
சசிமோகன்
சம்பத் குமார் தமிழ்பேரண்ட்ஸ்
சதீஸ் சங்கவி
சதீஸ் செல்லதுரை
சமீரா
சரவணன்(ஸ்கூல் பையன்)
சாமக்கோடங்கி பிரகாஷ்
சிகா, லெனின் http://kenakkirukkan.blogspot.com/
சிபி செந்தில்குமார்
சிராஜுதீன்
சிவகாசிகாரன் ராம் குமார்,
சிவகுமார்(மெட்ராஸ்பவன்)
சிவசங்கர் திருப்பூர்
சிவா அவ்னிசிவா avanishiva.blogspot.in
சின்ன சின்ன சிதறல்கள் அகிலா,
சீனு (திடங்கொண்டுபோராடு)
சுகுமார் சுவாமிநாதன் வலைமனை
சுட்டிமலர்
சுப்பு ரத்தினம் என்கிற சுப்பு தாத்தா.
சுரேகா கவிஞர்
சூரஜ் மனசாலை manasaali.blogspot.com
செ.அருட்செல்வப் பேரரசன் www.arasan.info,
செல்லப்பா (‘இமயத்தலைவன்’) (‘செல்லப்பா தமிழ் டயரி’)
சென்னை பித்தன்
சேலம் தேவா
சேது மூன்றாம் பால்
சைதை அஜீஸ்
டி.என்.முரளிதரன்
டிபிஆர்.ஜோசப் என்னுலகம் டிபிஆர்
தங்கம் பழனி
தமிழ்வாசி பிரகாஷ் – மதுரை
தருமி - http://dharumi.blogspot.in/
தனபாலன் - திண்டுக்கல்
தாமோதர் சந்துரு
தேவகுமார்
நண்டு நொரண்டு ராஜசேகரன்
நம்பி
நாகராசன் http://revakavithaikal.blogspot.com/
நாய் நக்ஸ் நக்கீரன்
நிகழ்காலம் எழில்
பகவான்ஜி http://jokkaali.blogspot.com
பட்டிகாட்டான் ஜெய்
பலாபட்டறை ஷங்கர்
பரமேஸ்வரன் ஈரோடு http://konguthendral.blogspot.com
பரமேஸ்வரன் டிரைவர்
பரிதி.முத்துராசன் http://parithimuthurasan.blogspot.in/
பழனி கந்தசாமி(மன அலைகள்)
பட்டர்ப்ளை சூர்யா
படுக்காளி..............  http://padukali.blogspot.in/
பன்னிக்குட்டி ராமசாமி
பாலகணேஷ் (மின்னல்வரிகள்)
பாலபாரதி
பாலாஜி http://www.aniyayangal.blogspot.in/
பிரபு கிருஷ்ணா கற்போம்
பிலாசபி பிரபாகரன்
புரட்சிமணி http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.in/
புலவர் இராமானுஜம்
பெருங்குளம் ராமகிருஷ்ணன்
மங்குனி அமைச்சர்
மணிஜி தண்டோரா
மனக்குதிரை தினேஷ் http://manakkuthirai.blogspot.in/
மதுரை சரவணன் - http://veeluthukal.blogspot.in/
மதுரை ரேவதி http://revakavithaikal.blogspot.com/
மலர்வண்ணன் http://www.malarinninaivugal.blogspot.in/
மயில் ராவணன்
மயிலன் கவிஞர்
முகமது சபி சக்கரக்கட்டி
முரளிக்கண்ணன் மதுரை
முனைவர் இரா.குணசீலன்
மோகன்குமார்(வீடு திரும்பல்)
ரஞ்சனி நாராயணன்
ரமணி. எஸ்
ரமேஷ் சிரிப்பு போலீஸ்
ரஹீம் கஸாலி
ராகவாச்சாரி
ராமசாமி கண்ணன் என்னும் கரா
ராஜ்குமார் சின்னசாமி
ராஜா சந்திரசேகர் http://rajachandrasekar.blogspot.com
ரீகன் ஜோன்ஸ் http://www.tamilpriyan.com/
ருக்மணி சேஷசாயி (chuttikathagai.blogspot.com)
ரூபக்ராம்
ரேகா ராகவன்
ரோஷ்ணி வெளிச்சக்கீற்றுகள் [http://roshnivenkat.blogspot.in/]
வழிப்போக்கன் யோகேஷ்
வா.மு.முரளி
வால்பையன்
விக்ரமன் http://iamthekeechan.blogspot.in/
வியபதி http://ethaavadhu.blogspot.in
விஜயன் துரைராஜ் கடற்கரை
வீடு சுரேஷ்
வீரகுமார்
வெங்கட் நாகராஜ்
வெங்கட் கோகுலத்தில் சூரியன்
வெண்பா சுஜாதா
வௌங்காதவன் இலக்கிய செம்மல்
வெற்றிவேல் (http://iravinpunnagai.blogspot.com/)
வேடந்தாங்கல் கருண்
வேடியப்பன்(டிஸ்கவரி புக் பேலஸ்)
வைதீஸ்வரன்.S http://vaidheeswaran-rightclick.blogspot.in/
ஜ்யோவ்ராம் சுந்தர்
ஜாக்கி சேகர்
ஜீவன் சுப்பு,
ஜோதிஜி திருப்பூர்
ஹம்சா முகம்மது சிங்கப்பூர்
ஹைடெக்ரமேஷ் சிந்தனைக்கு மனிதா
------------------------------------

தங்களது பெயர்கள் சேர்க்கப்படாமல் இருந்தால் அதனை குறிப்பிட்டால் உடனடியாக சேர்த்து விடுகிறேன்

நன்றி

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, August 21, 2013

பதிவர் சந்திப்புக்கு வரும் பதிவர்களின் பட்டியல்

இதுவரை வர உறுதி செய்துள்ளவர்களின் பட்டியல் இன்னும் அப்டேட் செய்ய வேண்டியுள்ளது. இது இறுதிப் பட்டியல் அல்ல. இதில் எந்த பதிவரின் பெயர் விடுபட்டிருந்தாலும் அதற்கு என் கவனமின்மை தான் காரணம் பதிவர்கள் என்னை மன்னித்து தெரியப்படுத்தினால் சேர்த்து விடுகிறேன்.


தமிழ்வாசி பிரகாஷ், கோகுல் மனதில் கோகுல், திண்டுக்கல் தனபாலன், சதீஷ் சங்கவி, கோவை நேரம் ஜீவா தங்களின் கவனத்திற்கு : இந்த பட்டியலில் உள்ளவர்களில் தங்கள் பகுதியில் இருந்து வருபவர்களின் பெயர்கள் விடுபட்டு இருந்தால் உடனடியாக தெரியப்படுத்தவும்.

இது இரண்டாம் கட்ட பட்டியல் மட்டுமே, இன்னும் வருவதாக வாய்வழி செய்தியாக சொல்லியிருப்பவர்கள் இன்னும் நூறு பேருக்கு மேல் உள்ளனர். அவர்களிடம் இருந்து மின்னஞ்சல் வரவில்லை. வந்ததும் அவர்களின் பெயரையும் இணைத்து விடுவேன்.

கடைசி செய்தி : இதில் பெயர் விடுபட்டு இருப்பின் தவறை பொருட்படுத்தாமல் தெரியப்படுத்துங்கள். நான் இணைத்து விடுகிறேன். சனி காலை முதல் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பதிவர்கள் குறிப்பிட்டால் நான் அவர்களுக்கு தங்கும் அறையின் விவரங்களை அனுப்பி விடுகிறேன்.

பதிவர்களின் பட்டியலை பார்க்க இங்கே அழுத்தவும்

-------------------------------------

பதிவர் சந்திப்பு திருவிழாவின் அழைப்பிதழ்


நன்றி

ஆரூர் மூனா செந்தில்
பதிவர் ஒருங்கிணைப்புக் குழு

டிஸ்கி : நமது தங்கும் அறையின் சாவி மற்றவர்களின் கைக்கு சென்று விடக்  கூடாது அல்லவா. அதற்கு ஒரு கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. தங்கும் அறையின் சாவி வாங்க வேண்டுமென்றால் லாட்ஜின் வரவேற்பறையில் ஒற்றை கண்ணுடன் ஒத்தை சோபாவில் அமர்ந்திருக்கும் நபரிடம் சென்று நீங்கள் "பிளாக்கர்" என்று சொல்ல வேண்டும். அதற்கு அவர் "பனை மரத்துல தென்னங்காய் இருக்கு"ன்னு சொல்லுவார். அதற்கு நீங்கள் "தென்னை மரத்துல பனங்காயா" என்று கேட்டால் சாவியை கொடுத்து விடுவார். நீங்கள் அறைக்கு சென்று விடலாம். # என்ன புரியலையா ஹியூமர் ஹியூமர்.

Tuesday, August 20, 2013

பதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் அசத்தப் போகும் பதிவர்கள்

நம்ம நாய்நக்ஸ் நக்கீரன் அவர்கள் ஒரு ப்ளே ஏற்பாடு செய்து வைத்துள்ளார். அது என்னவென்றால் நக்கீரன் ஒரு கால்சென்டர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார். அங்கிருந்து இன்சூரன்ஸ் போடுவதற்காக பல பதிவர்களிடம் போனில் மார்க்கெட்டிங் செய்கிறார். அவரிடம் மாட்டி மற்ற பதிவர்கள் என்னபாடு படுகிறார்கள் என்பதே ப்ளேவின் சாராம்சம்.


அடுத்ததாக ஸ்கூல் பையன் பாடுகிறார். ஐந்து நிமிடம் கொடுத்துள்ள இடத்தில் சினிமா பாடல்களை பாடுவதற்கு பதிலாக வித்தியாசமாக இருக்கட்டுமே என நம்ம குபீர் கவிஞரின் பாடலை எடுத்து மெட்டமைத்து பாடுகிறார். இரண்டு நிமிடத்தில் அரங்கில் குறட்டையொலி எழும்புகிறது.


யாரென்று கண்டுபிடிக்க முயற்சித்தும் யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் அரங்கமே உறங்குகிறது. இதில் குறட்டையை மட்டும் எங்கிருந்து வருகிறது என்று எப்படி கண்டுபிடிக்க முடியும். அவசரஅவசரமாக பாடலை முடித்து மேடையை விட்டு இறங்கி விடுகிறார்.

கவிஞர் சங்கவி என்று மேடையேறுகிறார். முதல் கவிதையை வாசித்ததும் பின்னால் இருந்து அய்யோ என ஒரு குரல் கேட்கிறது. ஒரு பதிவர் மயங்கி விழுந்து இருக்கிறார். மருத்துவர் மயிலன் மயங்கியவரின் நிலையை கண்டறிந்து கவிதையை நிறுத்தச் சொல்கிறார். மேடை காலியாகிறது.


காலியான மேடையை புதிதாக உதயமாகி இருக்கும் மாகவிஞர் பட்டிக்ஸ்ஜி நிரப்புகிறார்.  கவிதை வெளி வருகிறது. அய்யய்யோ என பெருங்குரல் திரும்பிப் பார்த்தால் மயிலனே மயக்கமடைந்து கிடக்கிறார்.




---------------------------------


நாங்கள் ஏற்கனவே இந்த பதிவர் சந்திப்பில் தனித்திறன் நிகழ்வில் நாடகம் போடுவதாக முடிவு செய்து ஓரளவுக்கு நாடகத்தின் காட்சிகளை ரெடி செய்து வைத்திருக்கும் போது பதிவர் சந்திப்பு பற்றிய பதிவில் நாடகத்திலிருந்து சில காட்சிகளை லேசாக எடுத்து விட நாடகத்தின் கதை லீக் அவுட் ஆகி விட்டதே என சக நண்பர்கள் என்னைப் போட்டு வெளு வெளுவென வெளுத்து விட்டனர்.

ரெண்டு நாளைக்கு கிர்ராகி திரிஞ்சேன். முக்கியமாக நொங்கியவர்கள் அஞ்சாசிங்கம் வீடு சுரேஷ் அப்புறம் கேஆர்பி செந்தில். நான் அப்படி செய்ததற்கு காரணம் இதனைப் பார்த்து மற்றவர்கள் இது போல் நாடகம் அல்லது நிகழ்ச்சிகள் செய்வார்கள் என்று யோசித்து தான். கடைசியில் அது எனக்கே திரும்பி ஆப்பு ஆக அமைந்து நானே எதிர்பார்க்காத ட்விஸ்ட்.

அதனால் இது நடந்தால் எப்படியிருக்கும் என்று நான் தனியாக ரூம் போட்டு யோசிச்சி தான் இந்த பதிவைப் போட்டு இருக்கிறேன். இதைப் பற்றி யாரும் என்னிடம் டிஸ்கஸ் பண்ணவில்லை என்று பாடிகார்டு முனீஸ்வரன் மீது சத்தியம் செய்கிறேன். யப்பா விடுங்கடா சாமீ.


ஆரூர் மூனா செந்தில்

Friday, August 16, 2013

பஞ்சேந்திரியா - கொய்யா தோப்பு தாவணியும், பொண்ணு பார்க்க போன கலாட்டாவும்

மாயவரம் பக்கத்துல ஒரு கிராமத்திற்கு எனக்கு 20 வயசிருக்கும் போது என் நண்பனின் அக்காவின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க சென்றிருந்தேன். நானும் அவனும் சென்று இறங்கியதும் அவனது சொந்தக்காரர்கள் எல்லோரும் வயலுக்கு சென்றிருந்ததால் என்னை ஒரு கொய்யா தோப்பில் நிற்க வைத்து மற்ற உறவினர்கள் வீட்டுக்கு பத்திரிக்கை வைக்க அவன் சென்று விட்டான். என் வயதையொத்த ஒரு பெண் அதே தோப்பில் கொய்யாக்களை பறித்து மூட்டை கட்டிக் கொண்டு இருந்தாள்.


சில நிமிட பார்வைகளில் இருவரது கண்ணும் கண்ணும் நோக்கியாவானது. அந்த வயதில் ஒரு பெண்ணிடம் வார்த்தைகளால் பேசுவதே பெரிய வீரமாக கருதப்பட்டதால் கண்களால் மட்டுமே பேசிக் கொண்டு இருந்தேன். நாட்டு கொய்யாக்களில் பழுத்த கொய்யா ஒன்றினை ஒரு கடி கடித்து எனக்கு கொடுத்து சென்றாள்.

அந்த நாலு மணிநேரமும் என்னிடம் கண்களால் பேசிக் கொண்டே இருந்தாள். பாவடை தாவணி அணிந்திருந்த லாவகமும், அவள் நெற்றியின வியர்வைத் துளிகளும் என்னை அவள் பால் இயல்பாகவே இழுத்துச் சென்றன.

நான்கு மணிநேரம் வரை அந்த தோப்பில் இருந்தும் அவளிடம் பேச பயமாகவே இருந்தது. கடைசியில் ஒருவாறாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளிடம் பேச முயற்சிக்கும் போது என் நண்பன் வந்து விட்டான். ஏதும் சொல்லாமல் கண்களாலேயே பை பை சொல்லி விட்டு ஊருக்கு வந்து விட்டேன்.


அன்று அந்த கொய்யாவில் இருந்த ருசி பல நாட்களுக்கு என் நினைவில் இருந்தது. அன்று ஒன்றுமே பேசாமல் திரும்பி விட்டாலும் பல நாட்கள் அவளை காண வேண்டி அதே தோப்புக்குள் வந்து நின்றிருக்கிறேன். ஆனால் பார்க்க தான் முடியவில்லை. இரண்டு வருடம் வரை என் முயற்சியை கைவிட வி்ல்லை. ஆனால் பலன் பூஜ்யம் தான்.

இன்று ஊரிலிருந்து அப்பா வந்திருந்தார். ஊரில் எங்கள் கொல்லையில் இருந்து பறித்த கொய்யாக்களை எடுத்து வந்திருந்தார். அதை சாப்பிடுவதற்காக வெட்டும் போது தான் கவனித்தேன். அன்று தின்ற கொய்யாவின் அதே நிறம், அதே சுவை.

அன்று வெட்கத்தால் தவற விட்ட அவளின் அந்த ஒரு நாள் நினைவுகள் எனக்குள் பசுமையாய்.

-----------------------------------------

பொண்ணு பாக்க நண்பனுடன் போகவே கூடாது என்பதை நினைவு படுத்திய சம்பவம் அது. 12 வருடங்களுக்கு முன்பு என் நண்பன் வெங்கடேஷ் என்பவனுக்கு பொண்ணு பார்க்க நானும் உடன் சென்றேன். ஆனால் அவனுக்கு அப்போது வேலையும் இல்லை, வயதும் என் வயது தான், அப்போது 21.

ஆனால் அவனின் அப்பா போலீஸ் இன்ஸ்பெக்டர், பொண்ணு வீடும் பயங்கர சொத்து பார்ட்டியாக இருந்ததால் கல்யாணம் செய்து முடித்து விட நினைத்து பெண் பார்க்க எங்களையெல்லாம் கிளப்பினார். வெங்கடேஷூக்கோ விருப்பமில்லை, வீட்டில் எல்லோரையும் திட்டிக் கொண்டு இருந்தான்.

அவங்க அப்பாவோ எதற்கும் அசராமல் வண்டியும் கொண்டு வந்து விட்டார். பையன் ஷேவ் கூட செய்ய மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டு இருந்தான். திருச்சிக்கு போக வேண்டும். அப்படியே சுமோவில் ஏறிச் செல்கிறோம். போகும் வழியெல்லாம் நான் பெண்ணைப் பார்த்ததும் பிடிக்கவில்லை என்று சொல்லி விடப் போகிறேன் என்று புலம்பிக் கொண்டே வந்தான்.

நாங்களும் பெண்ணின் வீட்டில் சென்று அமர்ந்தோம். பெண்ணும் வந்தது. இவன் என்ன கலாட்டா செய்யப் போகிறானோ என்று பயம் எனக்கு. கொடுத்த காபியை ரசித்து சாப்பிட்டு விட்டு மாடியில் நின்று பேசிக் கொண்டு இருந்தோம். அப்பவரை நான் வீட்டுக்குப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.

அவங்க அப்பா மாடிக்கு வந்து பெண் பிடித்து இருக்கிறதா என்று கேட்டார். சில நிமிடம் பேசாமல் இருந்த அவன் பொண்ணை சரியாக பார்க்கவில்லை. இன்னொரு முறை பார்க்க முடியுமா என்று கேட்டான். போடா ம#$ரு என்று திட்டி விட்டு பஸ் பிடித்து திருவாரூருக்கு வந்து விட்டேன். # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்


ஆரூர் மூனா செந்தில்

Monday, August 12, 2013

கண்ணீர்க் காவியம் புல்லுகட்டு முத்தம்மா

புல்லுகட்டு முத்தம்மாவுடன் கதாநாயகன் பம்புசெட்டு ரூமில் படுத்துக் கொண்டு முத்தம்மாவின் பவுடர் வாசனையை முகர்ந்து பார்த்து பிராண்ட் கண்டுபிடிக்க முயன்று கொண்டு இருக்கிறான். அப்பொழுது அந்த பக்கமாக வந்த சித்ரா அவர்களை ஜன்னல் வழியாக பார்த்து விடுகிறார். அந்த கணத்தில் ஜன்னல் உள்ளேயிருந்து இடைவேளை என்ற எழுத்து வந்து விழுந்தது பாருங்கள் அங்கு நிற்கிறார் இயக்குனர்.


சித்ராவை வீட்டுக்கு ட்ராப் செய்ய கதாநாயகன் வீட்டுக்கு அழைத்து வரும் போது வழியில் ஆக்சிடெண்ட் ஆகி சித்ராவுக்கு கால்முட்டியில் அடிபட வீட்டுக்கு அழைத்து வந்து "மருந்து போடும் போது புடவையில் பட்டால் கறையாகி விடும். நீங்கள் உடைமாற்றிக் கொண்டு வாருங்கள்" என்று கதாநாயகன் கூற உடனே உள்ளே சென்று தான் ஐந்தாம் வகுப்பு படித்த போது போட்ட ப்ராக்கை அணிந்து கொண்டு சித்ரா வரும் காட்சியின் ஆக்கம் தான் இந்த தமிழ்திரையுலகிற்கு ஒரு புது ட்ரெண்ட் உருவாக்கும் இயக்குனர் வந்து விட்டார் என்பதை பறைசாற்றுகிறது.

படத்தின் கதை இது தான். ராஜாவுக்கும் ராதாவுக்கும் திருமணமாகிறது. அவர்களுக்குள் அது நடக்கும் போது ராஜாவுக்கு அது வராமல் அது நடக்காமலே போய்விடுகிறது. மறுநாள் அது நடக்க வேண்டி சேலம் சித்த வைத்தியரிடம் மாத்திரை வாங்கி போட்டு போகிறார் ராஜா, ஆனால் மாத்திரையோ ஓவர்டோஸாகி ராஜாவை கோமாவுக்கு ஆழ்த்தி விடுகிறது.

மருத்துவமனையில் டாக்டரிடம் தன்முன்காலத்தில் தான் ஆடிய ஆட்டங்களின் தொகுப்பை நாம் பார்த்து ரசிக்கும் விதத்தில் சொல்கிறார் ராஜா. ஏகப்பட்ட சிக்ஸர் விளாசியதால் பேட்டு உடைந்து போனது டாக்டருக்கு தெரிய வருகிறது கூடவே நம்மளுக்கும் தான்.


இந்நிலையில் அவர்களுக்குள் அது நடக்காமலே ராதாவுக்கு அது உருவாகி விடுகிறது. அந்த ரகசியம் அறிந்த ராஜா என்ன முடிவெடுக்கிறார் என்பது தான்  உலகத்தரம் வாய்ந்த க்ளைமாக்ஸ்.

கதாநாயகனாக ராஜா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முகத்தில் ஒவ்வொரு விஷயத்திற்கும் இவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் சிவாஜி கமலுக்கு அடுத்த வரிசையில் இடம் பிடிக்கும் எல்லாத் தகுதியும் அவருக்கு இருக்கிறது.

கதாநாயகியாக ராதா நல்ல ரூம்லியான சாரி ஹோம்லியான முகம். சுஜாதா, சுஹாசினி, ரேவதி வரிசையில் பெர்பார்மன்ஸ் செய்யும் நாயகி. அந்த நாளில் அது நடக்கும் போது அவர் காட்டும் முகபாவனைகள் டன்டனா டன். கடைசியில் அது எங்கேயோ நடந்து அது உருவாகி விட்டதை அவர் விவரிக்கும் போது கல்நெஞ்சும் கரைந்து விடும். நானெல்லாம் குமுறிக் குமுறி அழுதேன்.

கவர்ச்சிப் புயல் முத்தம்மா கலக்கியிருக்கிறார். கண்களாலேயே கிளாமரை வழிய விடுகிறார். அடுத்த நமீதாவாக வர எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. பம்புசெட்டில் குளிக்கும் போது தியேட்டரில் எல்லோரும் எழுந்து நிற்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இருவது வருங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருந்தால் குஷ்புவுக்கு சரியான போட்டியாக இருந்திருப்பார். தமிழ்நாடு அந்த சமயத்தில் இந்த வாய்ப்பை இழந்து விட்டது.

அடுத்ததாக படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சித்ரா, கணவன் வெளிநாட்டில் இருக்க விரகதாபத்தில் அவஸ்தைப்படும் கேரக்டரில் வருகிறார். ஆசைப்பட்டு தவறு செய்து பின் திருந்தி விஷம் குடித்து இறந்து இந்த சமுதாயத்திற்கு தீயவழியில் செல்லக்கூடாது என்ற கருத்தை சொல்லும் உன்னத கதாபாத்திரம்.

பாடல்கள் அனைத்தும் அதிஅற்புதம், அதிலும் சந்திரமுகி படத்தில் கொஞ்சநேரம் என்ற பாடலை பாடலை பாடிய மதுபாலகிருஷ்ணன் இந்த படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார். சூப்பரான அந்த பாடல் எனக்குத்தான் மறந்து விட்டது. ஞாபகமறதிக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கி இளஞ்சூடாக நாக்கில் படாமல் விழுங்க வேண்டும்.

உண்மையிலேயே படம் ஹிட்டு என்பதை நான் ஆணித்தரமாக அடித்துக் கூறுகிறேன். இரண்டாவது வாரம் மதியம் ஒரு மணிக்காட்சிக்கு ஒரு திருநங்கை, ஒரு நாலுவயசுப் பையன் உட்பட 80 பேர் வந்திருந்தார்கள் என்பதை விட ஒரு சாட்சி வேண்டுமா என்ன.

பிறர்பொருளுக்கு ஆசைப்படுபவன் தன் பொருளை இழப்பான் என்ற கருத்தை வலியுறுத்தும் புல்லுகட்டு முத்தம்மா காண வேண்டிய கண்ணீர்க் காவியம்

ஆரூர் மூனா செந்தில்

Saturday, August 10, 2013

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

Any Master Degree முடித்தவர்கள் இந்தியன் டிரைவிங் லைசன்ஸ் இருப்பவர்கள் வேலைக்குத் தேவை.

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்

தங்குமி்டம் இலவசம்

10 காலியிடம்

---------------------------------

BE (EEE) 2006க்கு முன்பு முடித்தவர்கள் வேலைக்குத் தேவை

சம்பளம் 2200 சிங்கப்பூர் டாலர்

5 காலியிடம்

---------------------------------

Project Manager (Applications) 

    Knowledge of RDBM
    Experience in Object Oriented Development

    4-6 project management experience , 2 years on J2EE and/or .Net
    Possession of PMP Certification will be an advantage

----------------------------------

Senior Application Developer (J2EE) - various openings

    5-8 years of experience in application development and maintenance on J2EE technologies.
    Experience in software architecture and technical design.
    At least 3 years supporting users in application issues
    Working knowledge of struts, hibernate, spring, oracle pl/SQL and crystal reports
    Familiar with software development life cycle
    Dynamic, independent and demonstrates initiative in his work performance.
    Possess good communication and presentational skills.
     Good degree in Computer Science/IT or related discipline

----------------------------------

Application Support Engineer (Java) -fresh grad welcome

Diploma in Computer Science / Computer Engineering / Electronic / Electrical Engineering or other IT-related disciplines.
2 years of programming exp preferably in Java/J2EEPreferably with IT Infrastructure support experience in desktop and serversGood analytical and problem-solving skills.
Able to work in a team as well as independently.
Excellent written and spoken communication skills with strong presentation skills.
Result-oriented, motivated, positive attitude and willingness to learn.

-----------------------------------

Project Coordinator

    At least 3 years of working experience in Information Technology projects.
    Experience in business process analysis, Enterprise Architecture work, project   management/   project co-ordination,   system implementations
    Good knowledge of information technology; familiarity with ASP.Net would be advantageous
    Good knowledge and technical skills on Dot Net technologies.

----------------------------------

Qa Executive / IT Tester

Experience in 2nd level support will be advantageous, preferably with experience from create images from scratch.
Some certifications including MCSE
Good qualification and attitude
Possess both desktop & server experience (they realise cdd with server experience seem to be able to trouble better on the desktop level)

----------------------------------

Software Engineer (.Net/Sharepoint)  -

    At least 4 years of application development and support experience
    Preferably with working and academic projects on sharepoint, lotus notes and/or .net.  Training will be provided for those without sharepoint development experience.
    Strong written and oral communication skills

----------------------------------

Senior Application Developer (J2EE) - various openings

    5-8 years of experience in application development and maintenance on J2EE technologies.
    Experience in software architecture and technical design.
    At least 3 years supporting users in application issues
    Working knowledge of struts, hibernate, spring, oracle pl/SQL and crystal reports Familiar with software development life cycle

----------------------------------

Application Support Engineer (Java)

    5-8 years of experience in application development and maintenance on J2EE technologies.
    Experience in software architecture and technical design.
    At least 3 years supporting users in application issues
    Working knowledge of struts, hibernate, spring, oracle pl/SQL and crystal reports

----------------------------------

Project Executive (Info Tech) 

    At least 3 years of working experience in Information Technology projects.
    Experience in business process analysis, Enterprise Architecture work, project   management/   project co-ordination,   system implementations
    Good knowledge of information technology; familiarity with SAP HCM ERP would be advantageous
    Good knowledge and technical skills on the ARIS architecture tool;  familiarity  with  EA  Best  Practices,  like  ARIS  Value Engineering, SAP Reference Model would be advantageous

----------------------------------

Desktop Engineer Team Leader

 Diploma holder  exp 1 yr
* Team Leading experience
* Able to work in a fast pace environment

-----------------------------------

Software Engineer (Based in KL, Malaysia)

1+ years of technical or integration support experience preferred.
• HTML and/or XML experience required
• Experience with one or more of the following preferable: C/C++, Perl, Java, VB, .Net, SQL, MySQL, PHP, Cold Fusion, ASP, Window Servers, Unix/Linux.

------------------------------------

Senior/Application Developers (J2EE)

    4-5 years of experience in application development and maintenance on J2EE technologies.
    At least 3 years supporting users in application issues
    Strong technical proficiency in struts, hibernate, spring, crystal reports and oracle
    Familiar with software development life cycle
    Dynamic, independent and demonstrates initiative in his work performance.
    Possess good communication and analytical skills.
     Good degree in Computer Science/IT or related discipline

------------------------------------

Project Executive (IT System) 

    At least 3 years of working experience in Information Technology projects.
    Experience in business process analysis, Enterprise Architecture work, project   management/   project co-ordination,   system implementations
    Good knowledge of information technology; familiarity with SAP HCM ERP would be advantageous
    Good knowledge and technical skills on the ARIS architecture tool;  familiarity  with  EA  Best  Practices,  like  ARIS  Value Engineering, SAP Reference Model would be advantageous


******************************************


Position Project Manager

·         5 years relevant experience

·         Degree in Civil Engineering recognized by PE Board 2 Positions

Safety Officer

·         At least 3 years of post registration with MOM 1 Positions


Project Engineers

·         At least 3 years of relevant experience

·         Degree in Civil Engineering recognized by PE Board 1 Positions

Quantity Surveyor

·         Minimum Dip in related discipline or equivalent 2 Positions

Site Supervisor

·         Certificate in Pavement Construction & Maintenance 3 Positions

Public Relation Officer

·         Minimum 2 years relevant experience 1 Positions

-----------------------------------

We have currently more openings for U Turn worker

Rebar supervisor with certificates (Salary S$1000+OT)

Rebar with certificates (salary based on experience)

Excavator operator with certificates experienced above 5yrs after
getting certificates (salary S$40)

General Manager E Pass (salary S$3500/-) must have 5yrs above
experience in hotel management, marketing, financing, and providing
appealing restaurant service; managing staff.

**"S-Pass JOB ORDER"*

1) *Maintenance Technician     - 5 Nos


*Salary: S$ 1200 Per Month When Having Indian Driving License*


*S$ 1500 Per Month When Taken Singapore Driving License*

Accommodation : Free : FOOD: N/A

Duty Hrs : 12 Hrs Per Day; 2 Days off Per month

O.T : S$4 Per Hour

Qualification : Must have Diploma or Degree in Automobile or Mechanical or
Electrical

*Requirements: *Must have* *able to hands on repair of cleaning machinery &
equipment, Knowledge of vehicle's engine basic maintenance such as changing
of oil, filter, spark plugs etc... will be a added advantage.and other
General works Assigned by the Employer.

**"WORK PERMIT JOB ORDER"*

1) *Gardener - South Indians Only     - 5 Nos

*Salary: S$ 900 Per Month

Accommodation : S$200 : FOOD: N/A

Duty Hrs : 08 Hrs Per Day; 4 Days off Per month

O.T : N/A

Qualification : Must have Completed S.S.L.C and Must able to Speak, Read
and Write English or Tamil

Requirements: Must Ready to do Hard works, Gardening, Grass Cutting **and
other General works Assigned by the Employer. *

* **"Marine Permit(W.P) JOB ORDER"*

1) *Mason (Dubai Return) North or South Indians - 5 Nos

*Salary: S$ 20 Per Day & Above

Accommodation : Free  : FOOD: N/A

Duty Hrs : 08  Hrs Per Day; 4 Days off Per month

O.T : AS PER THE COMPANY RULES

Qualification : Must able to Read, Write and Speak Tamil & English

Requirements: Minimum 3 - 5 years of Experience in Mason works in Middle
East with Experience in Tiles Pasting **and other General works Assigned by
the Employer.*

**************************************

Company Name : Tiong Asia (Keppel)

*Pipefitter – 50 indian worker (Working at Philippine)

Salary   : $2.5/= Per hour

O.T     : 1.5 Rates

Have experience in piping fitter, or Shipyard U-turn worker

Must need Resume, write in experience where to working before in which shipyard.

U-turn marine worker

---------------------------------

SCAFFOLDING –50 indian worker(Working at Philippine)

Salary   : $2.5/= Per hour

O.T     : 1.5 Rates

Must Have MMSE (Marine Metal Scaffold Erector pass).

--------------------------------

Sand Blaster – 50 indian worker (Working at Philippine)

Salary   : $2.5/= Per hour

O.T     : 1.5 Rates

Have experience

Must need Resume, write in experience where to working before in which shipyard.

U-turn marine worker

Scaffolding Must Attach MMSE Pass, passport copy and passport size photo.

Other pls attach Resume, passport copy and passport size photo.

Deduction of Utilities fee about $ 60-100 (include Rental) 

(contract is 2 year , must do full)

-------------------------------


BE Mech or EEE முடித்தவர்கள் Autocadல் அனுபவமுள்ளவர்கள் தேவை

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, August 9, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் சிக்கலுடன் பார்த்த கதை

படம் பார்க்க போன கதையை சம்பிரதாயத்துக்கு எழுதிய படங்கள் பல உண்டு. ஆனால் இந்த படம் பார்த்த கதை வரலாறு தான். ஏற்கனவே சென்னை எக்ஸ்பிரஸ்ஸூக்கும் தலைவாவுக்கும் முதல் காட்சி டிக்கெட் முன்பதிவு பண்ணியாச்சி என்று சந்தோசத்தில் இருந்தேன்.


தலைவாவுக்கு தடை என்று செய்திகள் வந்ததும் அப்செட் ஆகி சரி இந்த படத்தை மட்டுமாவது பார்ப்போம் என்று மனசை தேற்றிக் கொண்டேன். அது மட்டுமில்லாமல் நண்பர் ஹம்சா மொகம்மத் சிங்கப்பூரில் இருந்து நேற்று காலையே படத்தை பார்த்து விட்டு படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்.

மதியம் 12 மணி வரை எல்லாம் சுபமாகத்தான் போய்க் கொண்டு இருந்தது. பிரச்சனை அங்கு தான் ஆரம்பித்தது. எனக்கு ஒரு பிரச்சனை உண்டு. சுகாதாரமற்ற கழிப்பிடங்களில் சிறுநீர் கழித்தால் நோய்த்தொற்று ஏற்பட்டு யூரினல் பிளாடர் மற்றும் கிட்னியில் வலி வந்து விடும். வலி என்றால் கடுமையான வலி. தாங்கவே முடியாது.

இந்த பிரச்சனையை தவிர்க்க முடிந்த வரை பொதுக் கழி்ப்பிடத்தை தவிர்ப்பேன். தவிர்க்க முடியாத சமயங்களில் மாட்டிக் கொள்வேன். ஆறு மாதத்திற்கு ஒரு முறை எப்படியும் இந்த பிரச்சனை வந்து விடும்.


நேற்று மதியம் அது போல் வலிக்க ஆரம்பித்தது. நானும் அதற்கேற்ற மருந்தை எடுத்துக் கொண்டு படுத்தேன், ஆனால் நேரம் ஆக ஆக வலி படுத்தி எடுக்க ஆரம்பித்தது. பொறுக்க முடியவில்லை. 5 மணிக்கு மேல் வலி தாங்க முடியாமல் நண்பன் அசோக்குடன் மருத்துவமனைக்கு கிளம்பினேன்.

பல இடங்களிலும் தேடி மருத்தவர் கிடைக்காததால் கொளத்தூர் பக்கமாக போகும் போது யூராலஜிஸ்ட் ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் ஒன்று இருந்தது. போய் மருத்துவரை சந்தித்து அவரிடம் இன்ஜெக்சன் எடுத்துக் கொண்ட பிறகு வலி குறைய ஆரம்பித்தது.


ஆறரை மணிக்கு வலி நின்றதும் சினிமாவுக்கு புறப்படலாம் என்று தோன்றியது. காலையில் நண்பர் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. சினிமாவுக்கு போறேன் என்று சொன்னால் தோசை திருப்பி என்னை நோக்கும் வாய்ப்பு இருந்ததால் வீட்டம்மிணியிடம் பொய் சொல்லி விட்டு சினிமாவுக்கு புறப்பட்டேன்.

தியேட்டருக்கு சென்றதும் கவுண்ட்டரில் நான் கேட்ட முதல் கேள்வியே "தலைவா படம் ரிலீஸ் இல்லைனா டிக்கெட் எடுத்தவங்களுக்கு எப்பங்க ரீபண்ட் தருவீங்க" தான். அவர்கள் சொன்னதோ "நாளை காலை 6 மணிக்கு வாங்க படம் இல்லையென்றால் ரீபண்ட் தருவார்கள்" என்பது தான்.

உள்ளே சென்று அமர்ந்து சுற்றிப் பார்த்தால் பாதிக்கும் மேல் ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாத தமிழ் இளைஞர்கள் தான். பல வசனங்களுக்கு அவர்களாகவே ஒரு அர்த்தம் பண்ணிக் கொண்டார்கள். பத்து வருடங்களுக்கு முன் நான் இருந்ததை நினைத்துப் பார்த்து சிரித்துக் கொண்டேன்.

படத்தில் ஒரு காட்சி ஒரு மலையாளியிடம் ஷாருக் லிப்ட் கேட்பார். அதற்கு அந்த மலையாளி "எந்தானு ஜோலி" என்பார். அதற்கு ஷாருக் "ஐ யம் நாட் ஏஞ்சலினா ஜோலி" என்பார், சட்டென்று அர்த்தம் புரிந்து ஒருவர் வெடிச்சிரிப்பு சிரிக்க மற்றவர்களையும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது. திரையரங்கத்தின் சிரிப்பு சத்தம் அடங்க 5 நிமிடம் ஆனது.

இது தான் படத்தின் பலம், நீங்கள் தனியாகப் பார்த்தால் பல காட்சிகள் சிரிப்பு வராது. ஆனால் திரையரங்கில் மக்களுடன் சேர்ந்து பார்க்கும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்கள். அதுதான் இதுபோன்ற ஆவரேஜ் சிரிப்பு படங்களை ஹிட் ஆக்குகிறது.

குறை சொல்லலாம் என்றால் நிறைய தமிழ்ப்படங்களில் இருந்து காட்சிகள் சுடப்பட்டு இருக்கிறது. அது  நமக்கு தெரிகிறது. ஆனால் ஹிந்திக்காரர்களுக்கு புதுசா இருக்கும். இந்த படத்தின் வெற்றி இன்னும் பல படங்களை தென்னிந்தியாவின் களத்தில் எடுக்க வைக்கும் என்பது தான் நமக்கு சந்தோசம்.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 8, 2013

சென்னை எக்ஸ்பிரஸ் - சினிமா விமர்சனம்

நானும் தமிழ்ல ரெண்டு சுழி ன மூணு சுழி ண எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனா வணிகம் என்று எழுதியிருக்கும் பலகையில் நாலு சுழி போட்டு ஒரு ண வருது பாருங்க மெரண்டுட்டேன்.


கில்லி படத்துல வில்லன்கள் நடுவில் த்ரிஷாவின் கழுத்தில் கத்தியை வைத்து கடத்திச் செல்வாரே அந்த காட்சியை அப்படியே சுட்டு இந்த படத்திலும் காட்சி வைத்திருக்கிறார்கள். ஆனால் சம்பந்தமே இல்லாமல் வில்லன் கூடவே வந்து சேற்றில் விழுவது எதற்காக என்று தான் தெரியவில்லை. தமிழ்ல பிரகாஷ்ராஜ் கழுத்திலயாவது துண்டு இருக்கும். இதுல ம்ஹூம்.

படம் 90 சதவீதத்திற்கு மேல் தமிழ்நாட்டில் நடப்பது போலவே காட்டப்பட்டு இருக்கிறது. ஆனால் ஒரு சதவீதம் அதுவும் பாம்பன் பாலம் மட்டும் ஒரு காட்சியில் காட்டப்பட்டு இருக்கிறது. மற்றபடி எல்லா காட்சிகளையும் தமிழ்போர்டு வைத்து லோனாவாலாவில் சுட்டு இருக்கிறார்கள். லோனாவாலா மகாராஷ்ட்ராவில் இருக்கும் மிகச்சிறந்த சுற்றுலா மலைப்பிரதேசம்.


Don't under estimate the power of the Common man என்ற வசனம் படத்தில் கிட்டத்தட்ட நூறு முறைக்கு மேல் வருகிறது. ஆனால் படத்தில் ஒவ்வொரு முறையும் போரடிக்காமல் இருப்பது தான் ஆச்சரியம். சில இடங்களில் Common manக்கு பதில் ஹல்வாயி.

படத்தின் கதையை தைரியமாகவே நீட்டி முழக்கிச் சொல்லலாம். மும்பையில் தாய் தந்தையில்லாமல் பாட்டி தாத்தாவுடன் வசிக்கும் ஒரு மிட்டாய்க்கடை அதிபர் (ஹல்வாயி பெயர்க்காரணம்) ஷாருக்கான்.

தாத்தா இறந்தவுடன் அவரது கடைசி ஆசைப்படி அவரது அஸ்தியை கரைக்க ராமேஸ்வரம் புறப்படுகிறார். அவர் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்ஸில் தீபிகா படுகோன் பயணிக்கிறார். அவருடன் நான்கு தமிழ் அடியாள்கள் வருகின்றனர்.


ஊரில் பெரிய தாதா அப்பாவான சத்யராஜ் தீபிகாவுக்கு திருமணம் செய்து வைக்க பார்த்திருக்கும் மாப்பிள்ளையை பிடிக்காமல் தப்பித்து வந்த அவரை திரும்பவும் வீட்டுக்கு அழைத்து செல்கின்றனர். தான் தப்பிக்க ஷாருக்கை தன் காதலர் என தந்தையிடம் பொய் சொல்கிறார்.

மொழி தெரியாத ஷாருக்கும் மண்டையை ஆட்ட ஊருக்குள் பிரச்சனை, ஆறரை அடிக்கும் மேல் உயரமான தீபிகாவுக்கு பார்த்து வைத்த மாப்பிள்ளையை அடித்து வீழ்த்தி தான் திருமணம் செய்ய முடியும் என்ற நிலை வருகிறது.

இந்த நிலையில் தான் கில்லி ஸ்டைலில் தப்பித்துச் செல்கின்றனர். பிறகு இருவருக்கும் காதல் வருகிறது. தாத்தாவின் அஸ்தியை ராமேஸ்வரத்தில் கரைத்த பின்னர் தீபிகாவின் ஊருக்கே வந்து வில்லனிடம் சவால் விடுகிறார் ஷாருக்.


அந்த வில்லனை வீழ்த்தி தீபிகாவை திருமணம் செய்தாரா என்பதே கதை. அப்பாடா முழுக்கதையையும் சொல்லாமல் சொல்லி கடையில் ஒரு மொக்க ட்விஸ்ட்டை வச்சாச்சி.

ரொம்ப நாளைக்கு அப்புறம் திரையரங்கில் மக்களுடன் சிரித்து ரசித்துப் பார்த்த ஹிந்திப்படம், இதற்கு முன்பு ஓம் சாந்தி ஓம். அதன் பிறகு எவ்வளவோ படம் முக்கியமாக இதே படத்தின் இயக்குனர் ரோஹித் ஷெட்டி இயக்கிய கோல்மால் ரிட்டன்ஸ், கோல்மால் 3 அப்புறம் நம்ம தில்லுமுல்லுவின் தற்போதைய ரீமேக்கான போல்பச்சன் எல்லாம் பார்த்து கடியாகி வந்தவன் நான்.

ஆனால் இந்த படம் நல்லாயிருக்கிறது. கண்டிப்பாக ஹிட்டோ ஹிட் சூப்பர் ஹிட் இந்த படம். இதைப் பார்த்து இன்னும் எத்தனைப் படங்கள் தென்னிந்தியாவை கதைக்களமாக வைத்து எடுக்கப் போறார்களோ தெரியலையே.

ஷாருக்கை இது வரை நடித்த படங்களில் ரசித்த பிறகு இந்தப் படத்தில் நல்லா நடித்து இருக்கிறார் என்று சொன்னால் எங்க ஊரு ராகுகால துர்க்கை கூட சூலாயுதத்தால் குத்த வரும். ஆனால் காமெடி மற்ற படங்களை விட படு சூப்பராக வந்திருக்கிறது. ரயிலின் முதல் சண்டைக் காட்சியில் கத்தியைக் காட்டி மிரட்டும் காட்சியில் சிரிக்க வைத்தவர் படம் முழுக்க அதே டெம்ப்போவை மெயிண்டெயின் செய்திருக்கிறார்.

தீபிகா படுகோன் அடடா(இந்த இடத்தில் ஜொள் வடிகிறது என்று அர்த்தம்) சினிமாவுக்கு வருவதற்கு முன்பே ஒரு பற்பசை விளம்பரத்தில் கவர்ந்தவர். ஓம் சாந்தி ஓம்மில் கவர்ந்தவர் பிறகு சில காலம் என் கவனத்திற்கு வராமலே போனார். அதன் பிறகு இந்த படத்தில் தமிழ்ப்பெண் ஹிந்தி பேசுவது போல வாயை சுழித்து சுழித்து ப்ரைமரி லெவல் ஹிந்தி பேசும் போது சுண்டியிழுக்கிறார்.

சத்யராஜ் படத்தில் கம்பீரமாக வந்து கம்பீரமாக செல்கிறார். அவருக்கு கதைப்படி தமிழ்டான் கேரக்டர். அதனால் ஹிந்தி வசனமும் பேச முடியாது. தமிழில் வைத்தால் பெரும்பாலானவர்களுக்கு புரியாது. எனவே முறைப்பாகவே இருந்து விடுகிறார்.

இன்னும் பல தமிழ்நடிகர்கள் வந்து முகத்தை காட்டிச் செல்கின்றனர். ரஜினி போஸ்டர் வைத்து ஒரு பாடலை யூடியுப்பில் பார்த்தேன். படத்தில் வரும் வரும் என்று காத்திருந்து கடைசி வரை வரவில்லை. கடைசியில் படம் முடிந்ததும் போட்டு அனைவரையும் இன்னும் ஐந்து நிமிடம் உக்கார வைக்கின்றனர். அவ்வளவே.

பெரும்பாலான வசனங்கள் தமிழில் இருப்பதால் தமிழர்கள் மொழி தடையின்றி பார்த்து ரசி்க்கலாம். ரசித்து சிரித்து பார்க்க சிறந்த படம், பார்த்து சிரித்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்
 

Wednesday, August 7, 2013

பஞ்சேந்திரியா - பரிதாப கதாநாயகியும் அயனாவர விபத்துகளும்

சினிமா கதாபாத்திரங்கள் கஷ்டப்படும் போது பார்க்கிற எனக்கு இது போன்ற கேரக்டர்களுக்கு உதவி செய்யணும்னு மனசுல ஒரு நினைப்பு எப்போதுமே உண்டு. ஆனா பாருங்க இது முழுக்க பொம்பளப்புள்ளைக மேல தான் இந்த பரிவு வருது. ஒரு பையன் சிரமப்படுவது போல் காட்சிகள் இருந்தால் நல்லா அனுபவிக்கட்டும் என்றே தோன்றுகிறது. என்ன கெரகமோ.

அங்காடி தெரு படத்துல அஞ்சலி சிரமப்படும் கதாபாத்திரத்தை பார்த்த பிறகு இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணிச்சி. போராளி படத்துல ஸ்வாதி அனாதையா அழுவும் போது உடனே கட்டிக்கிடனும் தோணிச்சி. இரண்டு படம் வந்தப்பவும் எனக்கு தோணியதை வீட்டம்மாக்கிட்ட சொல்லி தோசைத் திருப்பியால கன்னத்துல ரெண்டு வாங்கினது தான் மிச்சம்.

# ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

----------------------------------------------------

நக்கீரன் வீட்டு காம்பவுண்டு சுவரு


------------------------------------------------------

பெரம்பூர் முரசொலி மாறன் பாலத்திலிருந்து அயனாவரத்திற்கு ரயில்வே குவார்ட்டர்ஸ் பில்கிங்டன் ரோடு வழியாகவும் செல்லலாம். பெயர் தான் ரோடே தவிர அது குறுகலான சந்து. இன்று இந்தத் தெருவில் இரண்டு விபத்துகளை நேரடியாகப் பார்த்தேன். காலையில் அயனாவரம் செல்லும் போது ஒரு பள்ளி மாணவன் ஸ்கூட்டியில் காதல் படத்தில் பரத் வருவது போல் ஒரு சைடாக உக்கார்ந்து படுவேகமாக வந்து கொண்டு இருந்தான். ஒரு ட்ரெயினேஜ் மேன் ஹோல் பள்ளத்தில் வண்டியை விட்டு எகிறிப் போய் விழுந்து முட்டி எல்லாம் தேய்ந்து போய் இருந்தது. பார்க்கிறவன் எல்லாம் அவனை கண்டபடி திட்டு விட்டுப் போனார்கள்.

மதியம் திரும்பி வரும் போது ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண் 25 வயதிருக்கலாம். ஸ்கூட்டியில் வந்து கொண்டு இருந்தவர் தானே நிலை தடுமாறி குப்புற விழுந்தார். ஹெல்மெட் போட்டிருந்ததால் தலை தப்பியது. ஆனால் நெற்றியில் கல் குத்தி ரத்தம் வழிகிறது. பக்கத்து தெருவில் இருக்கிறவன் எல்லாம் கிளம்பி வந்து முதலுதவி அளித்துக் கொண்டு இருந்தான். இந்த முறை திட்டு வாங்கியது அரசாங்கமும் சாலைப் பணியாளர்களும் தான். முதல் விபத்தில் சிக்கியவன் கூட தாவணியில் வந்து விழுந்து இருக்கலாம்.

----------------------------------------------------

அறிவாளி குடும்பம்யா


-----------------------------------------------------

வியாழன் மாலை 7 மணிக்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ், வெள்ளி காலை 6 மணிக்காட்சி தலைவா, ரெண்டுமே வில்லிவாக்கம் ஏஜிஎஸ்ல.

தமிழனை எப்படி கலாய்க்கிறானுங்க என்று சென்னை எக்ஸ்பிரஸ் பார்க்கனும். தலைவாவுக்கு எதிர்பார்ப்பு நடுநிலையாத்தான் இருக்கு. நல்லாயிருந்தா சூப்பர் ஹிட்டு. போரடிச்சா பிளாப்பு தான். என்ன நடக்குதுன்னு பார்ப்போம்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, August 2, 2013

பதிவர் சந்திப்பில் பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம்

பதிவர்களின் தனித்திறமையை காட்டும் ஒரு நிகழ்ச்சி என்று ஒரு பகுதி இந்த ஆண்டு பதிவர் சந்திப்பில் இடம்பெற இருக்கிறது.(அதாவது பாடும் திறமை, நடிக்கும் திறமை, நடனம் ஆடும் திறமை, பல குரலில் பேசி அசத்தும் திறமை, பதிவர்கள் ஒரு குழுவாக சிறு நாடகம் அமைப்பது என பதிவர்கள், தங்களின் பல்வேறு திறமைகளை வெளிக்கொணரும் வகையில் இருத்தல் நலம்.)


உதாரணத்திற்கு நாங்கள் ஒரு 15 நிமிடம் மட்டுமே இடம்பெறும் ஒரு நாடகத்தை அரங்கேற்ற யோசித்து வருகிறோம். நாங்கள் என்பது நான், செல்வின், சிவக்குமார், பிரபாகரன், நக்கீரன், வீடுசுரேஷ், நா.மணிவண்ணன், கோகுல்.

பதிவர்களை கலாய்த்து ஒரு நாடகம். ஐடியாவை கொடுத்து தொடங்கி வைத்தது செல்வின். இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கும் ஒரு பிரபல சாப்பாட்டுக்கடை பதிவர் படத்தின் டிஸ்கசனில் இருக்கிறார். அதில் நடக்கும் சம்பவங்களே நாடகத்தின் மூலம்.


பாடல் எழுத ஒரு பதிவரை அணுகுகிறார் இயக்குனர். அம்மா வெளியூரில் இருக்கிறார். அம்மாவை நினைத்து நாயகன் பாட வேண்டும் இது சிச்சுவேஷன். பிரபல கவிதை எழுதும் பதிவர் எழுதுகிறார். அம்மா இங்கே வா வா, ஆசை முத்தம் தா தா. இயக்குனர் அலறி அடித்து வெளியேறுகிறார்.

மற்ற நடிகர்களின் கால்ஷீட்டுகளை பெற புரொடக்ஷன் மேனேஜர் நக்கீரனுக்கு 2000 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படுகிறது. பத்து நிமிடத்தில் இயக்குனர் எந்த எந்த கதாபாத்திரத்திற்கு யாரை யோசித்து வைத்தாரோ அனைவரும் வாழ்க்கையை துறந்து அமைதியை தேடி இமயமலைக்கு பயணமாக போவதாக தகவல் வருகிறது. இயக்குனர் மயங்கி விழுகிறார்.


படத்தில் நாயகியின் அம்மா வேடத்திற்கு ஒரு தெலுகு ஆண்ட்டியை புக் செய்கிறார்கள். ஆனால் படப்பிடிப்பு நேரத்தில் அந்த ஆண்ட்டியை காணும், எங்கேவென்று தேடினால் பட்டிக்ஸ் அவர்களிடம் பேசி சரிகட்டி பணியாரம் சுட அழைத்து சென்று விடுகிறார். அந்த ஆண்ட்டி பணியாரம் சுட்டுப் போட்டுக் கொண்டே இருக்க பட்டிக்ஸ் சொதப்பல் தெலுகில் பேசிக் கொண்டே பணியாரம் தின்று கொண்டு இருக்கிறார்.

டிஸ்கசன் நேரத்தில் பார்ட்டி துவங்குகிறது. சிறிது நேரத்தில் பிலாசபியை காணும், எல்லோரும் தேடத் துவங்க சிறிது கூட அலட்டிக் கொள்ளாத செல்வின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் படுத்திருக்கும் பிலாசபியை கூட்டி வருகிறார்.


இப்படி போகிறது கதை. இன்னும் பேசிப்பேசி இதனை ஒரு 15 நிமிட ப்ளேவாக செய்ய முடிவு செய்திருக்கிறோம். இது போல் நம் பதிவர்களில் நிறைய பேருக்கு இது போல் கலாய்த்து நகைச்சுவை நாடகங்கள் போட எண்ணம் இருந்திருக்கும். அதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தருகிறது இந்த மேடை.

பக்கத்து ரூமில் இருந்து மர்மபோன் செய்து பதிவர்களிடம் கிலியூட்டும் கவிதைவீதி செளந்தர், மனுசன் பார்க்க முடியாத படத்திற்கு விமர்சனம் எழுதும் சிபி, புரியாத படத்திற்கு சிலாகித்து விமர்சனம் எழுதும் மெட்ராஸ்பவன், சினிமா விமர்சனம் எழுதுவதை விட சினிமாவுக்கு போன கதையை வெட்டி பந்தாவாக எழுதி மொக்கைப் போடும் நான்,

விளிம்பு நிலை மனிதர்களின் பேட்டியால் பதிவுலகை டரியலாக்கும் வீடு திரும்பல், பின்நவீனத்துவ கவிதை எழுதுகிறேன் என்று படிக்கிறவனை பிதாமகன் விக்ரம் போல் அலைய வைக்கும் கேஆர்பி செந்தில், ஒருவன் ரொம்ப சீரியஸாக ஒரு மணிநேரம் யோசித்து போட்ட பதிவை ஜஸ்ட் லைக் தட் ஒரு பின்னூட்டத்தில் காமெடி பதிவாக்கும் பன்னிக்குட்டி ராமசாமி,

படம் வெளியாவதற்கு முன்பே விமர்சனம் என்ற பெயரில் ஹிட் பார்க்கும் சக்கரகட்டி, மாலை மலரிலிருந்து செய்திகளை எடுத்து பதிவு போடும் ரஹீம்கஸாலி, இணையத்தில் படித்ததை எடுத்து பதிவாக போடும் வேடந்தாங்கல் கருண், அப்பாவியாக போய் ப்ளஸ்ஸில் சீனியர்களிடம் மரணஅடி வாங்கும் பட்டிக்காட்டான்,

ஏன் திட்டுகிறோம் யாரை திட்டுகிறோம் என்றே மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு ஸ்டேட்டஸ் போடும் விக்கி, முதல்நாள் இரவு தெளிவாக ஸ்டேட்டஸ் போட்டு விட்டு காலையில் மன்னிப்பு கேட்கும் நா.மணிவண்ணன், முதல்நாள் முதல் காட்சி சினிமாவுக்கு போக வேண்டும் என்பதற்காக காலை 4 மணிகாட்சிக்கு பல்லு கூட வெளக்காமல் போகும் நானே நான்,

முட்டுக்கடையில இட்லி தின்றாலும் அதனை பத்து படங்களுடன் பதிவாக போடும் கோவை நேரம் ஜீவா, வீட்டிலிருந்து பத்தடியில் இருக்கும் கடைக்கு முட்டை வாங்க சென்றதை 100 படங்களுடன் பயணக் கட்டுரையாக போடும் நாஞ்சில் மனோ, ஷகீலா பற்றி பதிவு போடுவதையே வழக்கமாக கொண்ட வீடுசுரேஷ் இன்னும் இன்னும் நீங்கள் கலாய்ப்பதற்கு பதிவுலகில் ஏராளமானோர் உள்ளனர்.

கலாய்த்து மட்டும் இல்லை, சிறந்த நடிப்புத் திறமை வெளிக்கொணர வைக்கும் எந்த சப்ஜெக்ட்டையும் எடுத்துக் கொண்டு உங்களது எழுத்தாற்றலாலும் நடிப்பாற்றலாலும் திறம்பட மெருகேற்றி மேடையேற்றுங்கள் நண்பர்களே.


நான் சொன்னது சும்மா காமெடிக்காக ஒரு உதாரணம் மட்டுமே. இதை மனதில் கொண்டு ஆளாளுக்கு பதிவர்களை ஓவராக கலாய்த்து நாடகம் போடுகிறேன் என்று இறங்க வேண்டாம். அதிகம் கலாய்த்தாலும் சலித்து விடும். உங்களுக்கு திறமை உள்ளது. வெளியில் உலகம் உள்ளது. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. உங்களுக்கான கதைக்கருவை வெளியிலிருந்தே எடுங்கள்.


எதையும் முகம் சுளிக்குமளவுக்கு இல்லாமல் நாகரீகமாக 15 நிமிட ப்ளே செய்யுங்கள், பாட்டுப் பாடுங்கள், மிமிக்ரி செய்யுங்கள், நடனமாடுங்கள் வாருங்கள் நண்பர்களே என்ஜாய் செய்வோம்.

இதில் பங்கேற்கும் பதிவர்கள் வரும் 10.08.2013 க்குள் தங்கள் விபரங்களை 9894124021(மதுமதி) என்ற என்ணில் தொடர்புகொள்ளவும். ஏனைய விபரங்களை kavimadhumathi@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்)
 

ஆரூர் மூனா செந்தில்

Thursday, August 1, 2013

மாற்று மொழி படத்துடன் ஒரு பயண அனுபவம்

நேற்று இரவு மா மூவிஸ்ஸில் ஆனந்த் என்ற தெலுகு படத்தை திரும்பவும் பார்த்தேன். தெலுகில் இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைத்த படம். படம் வெளியான போதே பார்த்து இம்ப்ரெஸ் ஆகி அதன் பிறகு கூட டிவிடி வாங்கி வைத்து தோன்றும் போதெல்லாம் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன்.


பொதுவாக தெலுகு படங்களின் இலக்கணங்களையெல்லாம் அடித்து நொறுக்கி எடுக்கப்பட்ட படம் இது. இலக்கணம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன்.

நம்மூரில் வந்த பூவிழி வாசலிலே படம் தெலுகில் ரீமேக்கானது கதாநாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக விஜயசாந்தி. தமிழில் டூயட் பாடலே கிடையாது. அதற்கு தேவையும் கிடையாது. ஆனால் தெலுகி்ல் ஜிகினா ட்ரெஸ் போட்டு பின்னணியில் கலர்பொடிகள் வெடித்து குலுக்கலாய் டான்ஸூடன் ரெண்டு பாடல்கள் உண்டு.

ரமணா படத்தில் க்ளைமாக்ஸில் சண்டை வருவதற்கு தேவையே கிடையாது. ஆனால் தெலுகு பதிப்பில் க்ளைமாக்ஸில் சிறைச்சாலையில் ஒரு மரண சண்டைக்காட்சி உண்டு. மேலே பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டரை நாயகன் கீழிருந்து ஏர்கலப்பையை தூக்கியடித்து வீழ்த்திய கொடூரமும் உண்டு.


இதையெல்லாம் வீழ்த்தி சண்டைக்காட்சிகளோ அதிரடி திருப்பங்களோ இல்லாத படம் தான் ஆனந்த். படத்தின் ப்ரோமோவே அதிகாலையில் டிகிரி காப்பி குடிப்பது போல் ரசனையை தரும் படம் இது என்று தான் செய்தார்கள். அது கொஞ்சம் கூட அதிகம் கிடையாது.

இந்த படத்தில் தான் கொஞ்ச நாட்கள் தமிழ்இளைஞர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட வேட்டையாடு விளையாடு புகழ் கமாலினி முகர்ஜி அறிமுகமானார். படத்தின் இயக்குனர் சேகர் கம்முலா.

அம்மா அப்பாவை விபத்தில் பலிகொடுத்த நாயகிக்கும் அவரது காதலனுக்குமான திருமணம் ஒரு புடவை பிரச்சனையால் நின்று போகிறது. அந்த விபத்திற்கு காரணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான நாயகன் பெரும் கோடீஸ்வரன்.

நாயகன் அந்த திருமணத்தில் கலந்து கொள்ள பார்வையாளராக வந்த போது விவரங்கள் தெரிந்து நாயகி குடியிருக்கும் காலனிக்கு சாதாரண நபர் என்று பொய் சொல்லி தங்குகிறார். கொஞ்சம் கொஞ்சமாக நாயகியின் வாழ்க்கைக்கு வசந்தத்தை ஏற்படுத்தி இறுதியில் நாயகியை திருமணம் செய்து கொள்கிறார்.

இதில் எந்த அதிரடி திருப்பங்களோ, வயிறு வலிக்கும் காமெடியோ, அதிரடி சண்டைக்காட்சியோ கிடையாது. படம் கதையின் போக்கிலேயே அமைதியாக செல்லும். நமக்கு தமிழில் இது போன்ற கதையோட்டத்தில் நிறைய படங்கள் பார்த்து இருக்கிறோம். தெலுகிற்கு இது புதுசு.

இந்த படத்தை தமிழில் எடுக்கிறேன் பேர்வழி என்று வைஜெயந்தி மாலாவின் மகனை வைத்து முயற்சித்து பாக்கிறவனை எல்லாம் கொலையாய் கொன்று இருப்பார்கள்.

இதே போல் தான் ஹிந்தியில் வந்த மெய்ன் ஹூ நா படமும். ஃபாரா கானின் இயக்கத்தில் முதல் படம். ஷாருக்கான் ஹீரோ, சுஷ்மிதா சென் ஹீரோயின். 2004ல் இந்த படம் வெளிவந்தது.


அந்த காலகட்டத்தில் நான் ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரகுதாத்தா லெவலுக்கு ஒரு டப்பா ஹிந்தி பேசிக் கொண்டு இருப்பேன். இந்த சமயம் நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மராத்தி பொது மேலாளர் ஒருவர் இருந்தார். அவரை வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக சென்னைக்கு வந்திருந்தார்

அவரது குடும்பத்தினர் கோடை விடுமுறைக்காக சென்னை வந்திருந்தனர். அவருக்கு மூன்று வயது வந்த பெண்கள். அவரது பெண்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுலா சென்று வர அவரை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். அவரால் வேலைப்பளு காரணமாக கிளம்ப முடியவில்லை.


உடனே ஒரு பயணத்தி்ட்டம் தயாரானது. நான் அவரது பெண்கள் மற்றும் மனைவியை இன்னோவா காரில் தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் காட்டி அழைத்து வர வேண்டுமென. நான் என்பதால் தான் அனுப்பி வைத்தார். அந்த அளவுக்கு நல்லவன் நான் (நம்பித்தானே ஆகணும் வேற வழி)

இன்னோவாவில் டிவிடி பிளேயர் இருந்தது. கிளம்பும் முதல் நாள் நான் அந்த பெண்களை அழைத்துக் கொண்டு பர்மா பஜார் வந்து ஓரு லாட் ஹந்தி டிவிடிக்கள் வாங்கி வண்டியில் போட்டுக் கொண்டு பயணத்தை தொடங்கினோம்.

பயணத்தில் பெரும்பாலும் இந்த படம் மட்டுமே ஓடிக் கொண்டு இருந்தது. படத்தை படத்தில் ஷாருக்கான் சைக்கிள் ரி்க்சாவில் போய் வில்லன்கள் போய்க் கொண்டிருக்கும் ஸ்கார்ப்பியோவை முந்தி வீழ்த்துவார். அவர்கள் படத்தை சவுத் பிலிம் போல் இருக்கிறது என்று கலாய்த்துக் கொண்டு இருப்பார்கள்.

கதை தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரியும். எனவே அது வேண்டாம். ஷாருக்கானின் சொந்த தயாரிப்பில் முதல் சூப்பர் டூப்பர் ஹிட் இந்த படம் தான். படம் தொடங்கியதிலிருந்து நம்மை படத்துடனே பயணிக்க வைத்து இருப்பார்கள். எனக்கு ரொம்ப பிடித்த இந்த படத்தை கூட தமிழில் எடுக்கிறேன் என்று அஜித்தின் மார்க்கெட்டை காலி பண்ணியிருப்பார்கள். அந்த படம் ஏகன்.

அந்த பயணத்தில் ஒரு கொசுறு, பயணம் முழுக்க இவர்களால் ஹிந்தி படம் மட்டுமே பார்த்து கடுப்பாகிய நான் சென்னை திரும்பும் போது எங்கள் ஊர் படம் பார்க்கிறீர்களா என்று கேட்டு மதுரையில் மதுர படத்தின் சிடி வாங்கி அவர்களை பார்க்க வைத்து பழிக்கு பழி வாங்கினேன் யாருகிட்ட.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...