சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, July 31, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - முக்கிய அறிவிப்பு

tamilbloggers.info வலைத்தளம் தமிழ்மணம் மற்றும் தமிழ்வெளி போன்ற திரட்டிகளில் பதிவு செய்யப்பட்டும் இன்னும் இணைக்கப்படவில்லை. அதனால் இந்த செய்திகள் பெரும்பாலான பதிவர்களை போய்ச் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தளத்திலிருந்து பகிரப்படுகிறது.


பதிவுலகத் தோழமைகளுக்கு வணக்கம்.. கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26 ம் நாள் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர்  சந்திப்பை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.பதிவுலக வரலாற்றில் நடந்த மிக முக்கியமான சந்திப்பாக அது அமைந்தது.அந்த நினைவுகளில் இருந்து இன்னும் பல பதிவர்கள் மீளவில்லை.அதற்குள் இந்த வருட பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன.

சென்ற ஆண்டு இந்த மாபெரும் சந்திப்பை முன் நின்று நடத்திய அதே குழுதான் இந்த சந்திப்பையும் நடத்த முன் வந்துள்ளது.சென்ற ஆண்டைப் போலவே முகவும் சிறப்பாகவும், பதிவர்களுக்கு பயன் தரக்கூடிய வகையில் இந்த சந்திப்பு அமைய குழு நண்பர்கள் வார வாரம் சந்தித்து ஆலோசனை செய்து திட்டங்களை வகுத்து அதன் பேரில் செயல்படுத்தி வருகிறோம்.இதற்காக பல குழுக்கள் அமைக்கப்பெற்று வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.இந்த சந்திப்பிற்கு ஏற்படுத்தப் பட்ட குழு விபரங்களை
இங்கே காணலாம்.

சென்ற ஆண்டு சந்திப்பின் போது பதிவர்களின் அறிமுகம், மூத்த பதிவர்களுக்கு பாராட்டு , பதிவர்களின் கவியரங்கம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என பதிவர்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்தததைப் போலவே இவ்வருடமும் திட்டமிடப்பட்டு வருகிறது.

இந்த வருடம்  பதிவர்களின் அறிமுகம், கவிதை நூல் வெளியீட்டு விழா , சிறப்பு அழைப்பாளரின் பேச்சு என அடிப்படை நிகழ்வுகளோடு பதிவர்களின் தனிப்பட்ட திறமையை வெளிக்காட்டும் ஒரு நிகழ்வுதனை வைக்கலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க தமிழ்பிளாக்கர்ஸ் இன்ஃபோ என்ற வலைத்தளத்திற்கு செல்லவும்.

நன்றி

ஆரூர் மூனா செந்தில்
வரவேற்புக்குழு


Monday, July 29, 2013

பதிவர் சந்திப்பு வரவேற்பு குழு, உணவு ஏற்பாட்டுக் குழு விவரங்கள்

வரவேற்பு குழு

சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சிறப்பான முறையில் பதிவர் சந்திப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. எந்த விஷயத்திலும் சிறு குறை கூட வந்து விடக் கூடாது என்று பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.

எல்லாப் பொறுப்புகளையும் ஒருவரே செய்து சிரமப்படாமல் இருக்க பொறுப்புகள் பகிர்ந்து கொடுக்கப்பட்டு இருக்கின்றன. வரவேற்புக் குழுவில் பகுதி வாரியாக வரவேற்புக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள்

1. பெண் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை அண்ணன் பாலகணேஷூம், தோழி. சசிகலாவும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.


2. கோவை, ஈரோடு பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். சதீஷ் சங்கவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

3. திருப்பூர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். வீடு சுரேஷ் குமார் ஏற்றுக் கொண்டுள்ளார்.


4. மதுரை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். தமிழ்வாசி பிரகாஷ் ஏற்றுக் கொண்டுள்ளார்.

5. பாண்டிச்சேரி பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். கோகுல் மனதில் கோகுல்  ஏற்றுக் கொண்டுள்ளார்.

5. வெளிமாநிலம் மற்றும் இதர பகுதிகளில் உள்ள பதிவர்களுக்கு அழைப்பிதழை மின்னஞ்சலில் அனுப்புவது, வருவதாக உறுதியளித்த உறுப்பினர்களின் பட்டியலை குழுவிற்கு அளிப்பது, தங்கும் வசதி தேவைப்படும் உறுப்பினர்களின் விவரத்தை கேட்டுப் பெற்றுக் கொண்டு அதற்கான ஏற்பாடுகளை செய்வது போன்றவற்றை நண்பர். திண்டுக்கல் தனபாலன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

இந்த மொத்த பொறுப்புகளையும் ஒன்றிணைத்து அவர்களுக்கான ஏற்பாடுகள், தங்கும் வசதி, தேவைப்படின் வாகன வசதி போன்றவற்றை செய்யும் பொறுப்பை அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன், ஆரூர் மூனா செந்தில் அடங்கிய குழு ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

நேரடியாக வருகையை உறுதிபடுத்த விரும்பும் பதிவர்கள்

    சிவக்குமார் – madrasminnal@gmail.com
    ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
    அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com

என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் தகவலை அனுப்பி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

-------------------------------

உணவு ஏற்பாட்டுக் குழு

பதிவர் சந்திப்புக்கு வருகை தரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உறுதி செய்து அதில் அசைவம் சைவம் எத்தனைப் பேர் என்ற கணக்கெடுத்து அவர்களுக்கு உரிய சிறப்பான உணவு வகைகளை சிறந்த கேட்டரிங் குழுவிடம் ஆர்டர் கொடுத்து உணவுகளை பெறுவது, பந்தியில் பறிமாறுவது, விழா நடைபெறும் மண்டபத்தில் குடிதண்ணீர் ஏற்பாடு செய்தல், காலை இடைவேளையில் குளிர்பானம் தருதல், மாலை இடைவேளையில் சிற்றுண்டியும் காபியும் தருதல் போன்ற ஏற்பாடுகளை செய்ய

காணாமல் போன கனவுகள் ராஜி
கேஆர்பி செந்தில்
கேபிள் சங்கர்
சிராஜூதீன்
ரஹீம் கஸாலி
அஞ்சாசிங்கம் செல்வின்
மெட்ராஸ் பவன் சிவக்குமார்
பிலாசபி பிரபாகரன்
ஆரூர் மூனா செந்தில்

ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறார்கள். மெனு மட்டும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மெனு முடிவானதும் அறிவிக்கப்படும்.


ஆரூர் மூனா செந்தில்

Saturday, July 27, 2013

யாருமே அழைக்காத நானும் என் கணினியும் தொடர்பதிவு


நானும் ஒரு வாரமா பாக்குறேன் ஒரு பய நமக்கு அழைப்பு விட மாட்டேங்குறான். பிரபல பதிவர்களில் ஆரம்பிச்சு போன வாரம் வந்த பதிவர்கள் வரை ஒருத்தரை மாத்தி ஒருத்தர் அழைப்பு விடுத்துகிறாங்க. நம்மளை ஒருத்தனும் கண்டுகிட மாட்டேங்கிறாய்ங்க. சரி யாரும் நம்மளை மனுசனாகவே மதிக்கலை போல. நாமளும் யாரிடமும் ஓழுங்கா பழகியது இல்லையே. எங்க பார்த்தாலும் சண்டையும் சச்சரவுமாத்தேன் போய்க்கிட்டு இருக்கு.


சரி நாமளே வாண்டட்டா வண்டியில ஏறினாத்தான் நாமளும் ரவுடின்னு முடிவு பண்ணுவாங்கன்னு முடிவு பண்ணி என்னை நானே நானும் என் முதல் கணினி அனுபவமும் தொடரை எழுத அழைப்பு விடுத்துக்கிறேன். (கொஞ்சம் மரியாதை குறைவா தெரிஞ்சா கண்டுக்கிட வேண்டாம், நண்பர்களுக்குள் என்ன எழவு மரியாதை வேண்டிக்கிடக்கிறது)

என்னை நானும் என் முதல் கணினி அனுபவமும் என்ற தொடர் பதிவை எழுதும் படி என்னிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று அந்த அனுபவத்தை நான் உங்களுடன் பகிர்ந்திக்கிறேன்.


இருபது வயது வரை நான் கணினியை அருகில் இருந்து பார்த்தது இல்லை. படத்தில் பார்த்தது கூட காதலர் தினம் படத்தில் தான். அதிலும் கவுண்டமணி கைமுட்டியால் அடிப்பதையெல்லாம் நிஜம் என்று நம்பிக் கொண்டு இருந்த அப்பாவி(நீயாடா, வெளங்கிடும்) நான்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இடங்களில் கம்ப்யூட்டரை பின்பக்கமாக பார்த்து ரசித்து இருக்கிறேன். வங்கிக்கணக்கு கூட இல்லாததால் பேங்க்கு பக்கம் கூட அதுவரை சென்றதில்லை. அதனால் வங்கியில் கணினியை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.


சென்னையில் படிப்பை முடித்து திருவாரூருக்கு திரும்பிய பிறகு திருவாரூரில் புதிதாக பிரவுசிங் சென்ட்டர்கள் முளைக்கத் தொடங்கியிருந்தன. மணிநேரத்திற்கு 60 ரூபாய். ஆனாலும் முன்ன பின்ன கணினி பற்றி தெரிந்திருந்தால் தானே அங்கு சென்று கணினியை (உற்றுப் பார்க்கவும் not கன்னி only கணினி) நோண்ட முடியும்.

அப்பொழுது என்னுடன் பள்ளியில் படித்து கீழக்கரையில் உள்ள பொறியியல் கல்லூரியில் சிவில் இஞ்சினியரிங் முடித்த நண்பன் ஊருக்கு திரும்பியிருந்தான். பார்க்கும் நண்பர்களிடம் எல்லாம் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்ததற்கான சர்ட்டிபிகேட்டை காண்பித்து பந்தா செய்து கொண்டிருந்தான்.


நான் கூட மிரண்டு இருந்தேன். இஞ்சினியரிங் படித்து இருக்கிறான். கம்ப்யூட்டர் கோர்ஸ் எல்லாம் முடித்து இருக்கிறான். பெரிய அப்பாடக்கர் ஆகிட்டான் போல என்று. ரொம்ப நாள் கழித்து தான் தெரியும் அவன் முடித்தது எம்எஸ் ஆபிஸ் கோர்ஸ் என்று.

அப்பவே ஐநூறு ரூவா கொடுத்து பத்து நாள் வகுப்புக்கு சென்று வேர்ட்டில் எப்படி தட்டச்சு செய்வது என்றும், எக்செல் சீட்டை எப்படி சேவ் செய்வது என்றும் மட்டுமே தெரிந்து வைத்து இருக்கிறான் பயபுள்ள.

ஒருநாள் எங்கள் பகுதியில் இரவு முழுவதும் பார்க்கில் உக்கார்ந்து பேசிக் கொண்டு இருக்கும் போது தான் தெரிய வந்தது கம்ப்யூட்டரில் பிட்டு படங்கள் பார்க்க முடியுமென்று. வெறும் எண்கள் மட்டுமே திரையில் தெரிய வரும் என்று நினைத்துக் கொண்டிருந்த நான் கணினியின் மகிமையை எண்ணி வியந்து போனேன்.

உடனே ஒரு பிரவுசிங் சென்ட்டருக்கு சென்று பிட்டு படங்கள் பார்க்க திட்டம் போட்டோம். இருவரும் பணத்தை தேத்திக் கொண்டு பிரவுசிங் சென்ட்டருக்கு சென்று அமர்ந்த பிறகு தான் தெரிய வந்தது. பிட்டு படம் வரும், ஆனால் எந்த வெப்சைட்டில் எப்படி ஓப்பன் செய்து பார்க்க வேண்டும் என என் நண்பனுக்கு கூட தெரியாது என்று.

நமக்கு அதுவரை வெப்சைட்டு என்றால் கூடத்தான் என்னவென்று தெரியாது. அதுக்காக கவலைப்படும் ஆளா நாம். ஆனால் அந்த கடை நடத்தும் பெரியவரிடம் பிட்டு படம் எப்படி பார்ப்பது என்று கேட்கவும் பயம்.

வந்ததற்கு கணினியை ரசித்து விட்டு என் விரல்களால் கீபோர்டை தொட்டு தடவிப் பார்த்து நண்பனின் உதவியால் செந்தில் என்ற பெயரில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஸ்க்ரீன் சேவரின் ஸ்க்ராலிங்கில் ஒட விட்டு கம்ப்யூட்டரை இயக்கி விட்டோம் என்ற பெருமிதத்துடன் 60 ரூவாயை கொடுத்து விட்டு வந்தோம்.

எப்படி பிட்டு படம் பார்ப்பது என தெரியாததால் என் நண்பன் அவனுடன் கல்லூரியில் படித்த மற்றோரு நண்பனுக்கு படம் பார்க்கும் வழிமுறைகளை விரிவாக எழுதி அனுப்பி வைக்கும்படி கடிதம் போஸ்ட்டில் அனுப்பினான்.

நான்கு நாட்கள் கழித்து நண்பன் கடிதம் வந்து விட்டதாக கூறி பிரவுசிங் சென்ட்டருக்கு அழைத்தான். மறுபடியும் சிரமப்பட்டு 60 ரூவாய் சேகரித்து மீண்டும் பிரவுசிங் சென்ட்டருக்கு சென்றோம். நாங்கள் அமர்ந்த கணினியின் ஸ்கிரீன் சேவரில் நடராஜ் பிரவுசிங் சென்ட்டர் என்று ஸ்க்ராலிங் போய்க் கொண்டு இருந்தது.

எனக்கு பொறுக்கவில்லை. எனக்குத்தான் என் பெயரை எப்படி வரவழைப்பது என்று தெரியுமே உடனே மாற்றி பார்த்து பெருமிதப்பட்டுக் கொண்டேன். நண்பனோ வந்த வேலையை விட்டு உனக்கு எதுக்குடா இந்த வேலை என்று திட்டினான்.

சரி என்று அந்த கடிதத்தை வைத்து நான் மெல்ல படிக்க அவன் அது மாதிரி ஓப்பன் பண்ணினான். இரண்டு நிமிட காத்திருந்த பிறகு படங்கள் திரையில் விரிவதை கண்டேன். கண்டேன், மெய்மறந்து கண்டேன். அது இந்த கட்டுரைக்கு முக்கியமில்லாததால் இத்துடன் போதும்.

என்னையே யாரும் கூப்பிடலை, பின்ன என்ன இதுக்கு நான் இன்னும் ஐந்து பேரை கூப்பிடனும். அதுனால இது ஒரு தொடராத தொடர் பதிவு. படிங்க, பிடிச்சிருந்தா.... அய்யய்யோ ஒட்டுலாம் போட சொல்ல மாட்டேன். பயப்படாதீங்க. அதுக்கு நாங்க வேற டிப்பார்ட்மெண்ட் வச்சிருக்கோம்.

அதுனால படிங்க, பிடிச்சிருந்தா....... மறுபடியும் படிச்சு ரசிங்க.

ஆரூர் மூனா செந்தில்

Friday, July 26, 2013

பட்டத்து யானை - சினிமா விமர்சனம்

எப்போதுமே பூபதி பாண்டியனுக்கு ஒரு இடத்தில் தவறு நடக்கும். தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாட்டை வைத்து கடுப்பேத்துவார். இந்த படத்திலும் சரியாக அதே விஷயத்தை செய்திருக்கிறார். தம்மு விக்கிறவன் நல்லா கல்லா கட்டுறான்.


அது மாதிரி ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மயில்சாமி வந்து விடுவார். அந்த காமெடியும் வாய்விட்டு சிரிப்பது போல் இருக்கும். இன்னும் சில காட்சிகள் மயில்சாமி வரமாட்டாரா என ஏங்க வைக்கும், இதிலும் அதே நடந்திருக்கிறது.

மலைக்கோட்டை படத்தில் ஒரு மெடிக்கல் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். வெளியூரில் இருந்து திருச்சிக்கு வரும் விஷால் காப்பாற்றி பரிட்சை எழுத வைப்பார். இந்த படத்தில் மெடிக்கல் படிக்க ஆசைப்படும் பள்ளியில் படிக்கும் திருச்சி மாணவிக்கு ரவுடியால் பிரச்சனை வரும். அதே போல் வெளியூரில் இருந்து வரும் விஷால் பள்ளி இறுதி பரிட்சையை எழுத வைத்து டாக்டராக்குகிறார்.


மத்தபடி இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஒரே மாதிரியான கதை தான். சில இடங்களில் திரைக்கதையை பட்டி டிங்கரிங் பார்த்து மாத்தியிருக்கிறார்கள். மலைக்கோட்டை பிடித்திருந்தால் பட்டத்து யானையும் உங்களுக்கு பிடிக்கும்.

சந்தானம் தான் படத்தின் வசூலுக்கு காரணமாக இருப்பார். படம் பாதி வரை எடுத்த பிறகு யார் கதாநாயகன் என்ற சந்தேகம் வந்திருக்கும் போல. இடைவேளைக்கு அரைமணி நேரம் முன்பும் அரைமணிநேரம் பின்பும் காணாமல் போகிறார். அந்த இடங்கள் தான் போரடிக்கிறது.


படத்தின் கதைனு சொல்லனும்னாக்கா மூணு கொலை சரவணன் சந்தானத்துக்கிட்ட சமையற்காரராக தன் நண்பர்கள் நால்வருடன் சேர்கிறார். வந்த இடத்தில் பிரச்சனை ஏற்பட திருச்சி இடம் பெயர்கிறார்கள். வந்த இடத்தில் ஹீரோயினுடன் காதல் ஏற்படுகிறது.

வில்லன் ஒருவன் ஹீரோயினை அடைய முயற்சிக்க ஏகப்பட்ட அடிதடிகள் கொஞ்சம் காமெடி சேர்த்து வில்லன்களை வீழ்த்தி விட்டு காதலியை கைப்பிடிக்கிறாரா என்பதை சந்தானத்தின் உதவியுடன் கொஞ்சமே கொஞ்சம் பார்க்க முடியுமாறு சொல்லியிருக்கிறார்கள்.


மலைக்கோட்டைக்கு பிறகு சுமாரான வெற்றி கூட விஷாலுக்கு வரவில்லை. அந்த ரெக்கார்டை இந்த படம் தட்டி உடைக்கப் பார்த்து இருக்கிறது.விஷாலும் விஜய் மாதிரி நடனமாடுகிறார். சந்தானத்துடன் சேர்ந்து கிச்சு கிச்சு மூட்ட முயற்சிக்கிறார். ஆனால் பத்தவில்லை.

இந்த படத்திற்கு இந்த பொண்ணு எதற்கு என்று தான் தெரியவில்லை. முகத்தில் களையில்லை. கடாமுடான்னு முகத்தின் அமைப்புகள் இருக்கின்றன. மிகவும் ஒல்லியாக வேறு இருக்கிறார். தமிழனுங்களுக்கு கொஞ்சம் கொழுக் மொழுக்குன்னு இருந்தாத்தான் பிடிக்கும், இனி தேறாது.

ரொம்ப புகழ்ந்தாலும் வேற வழியில்லாமல் சந்தானம் தான் படத்தை சந்தோஷமாக துவக்கி வைத்து முடித்தும் வைக்கிறார். ஆனால் சில காமெடிகள் கடுப்பேத்துகிறது. குரூப் டிஸ்கசனில் கவனம் செலுத்துங்க சந்தானம் சாரே.

பாடல்கள் இரண்டு முன்பே கேட்டிருந்ததால் பார்க்க வைக்கிறது. மற்றபடி இசை சொல்லிக் கொள்வது போல் ஏதும் இல்லை. நடனமும் அப்படித்தான்.

படத்தில் கார்த்திக் சபேஷூக்கு காமெடி நன்றாக வருகிறது. வாய்ப்புகள் சரியாக அமைந்தால் தனியாவர்த்தனம் செய்து நல்ல காமெடியனாக வருவார் என்று தோன்றுகிறது. நண்டு ஜெகனை வீணடித்து இருக்கிறார்கள்.

படம் ஆவரேஜ் ஹிட் தான். டிரெய்லரில் ஏற்படுத்தியிருந்த எதிர்பார்ப்பினை படம் பூர்த்தி செய்யவில்லை.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, July 23, 2013

ஆட்டோகிராப்பும் எனக்கு நானே வைத்துக் கொண்ட ஆப்பும்

2003-04ல் சென்னையின் குடிநீர்த் தேவைக்கான வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கியிருந்தது. அதற்கான பணிஆணை 5 பிரிவுகளாக பிரித்து வழங்கப்பட்டு இருந்தது. வீராணம் ஏரியில் தொடங்கும் குழாய் பதிக்கும் பணி போரூர் ஏரியில் அந்த நீரை சுத்திகரித்து வழங்குவதில் முடியவடையும்.


இதில் நான் வேலை பார்த்த நிறுவனம் மேல்மருவத்தூரில் இருந்து போரூர் சுத்திகரிப்பு நிலையம் வரை குழாய் பதிக்கும் பணிஆணையை பெற்றிருந்தது. இதில் வண்டலூர் முதல் போரூர் வரை உள்ள இடத்தில் குழாய்களை தொழிற்சாலையில் இருந்து கொண்டு வந்து இறக்கும் பொறுப்பு என்னுடையது.

எனக்கு உதவியாக ஆறு பேர், 25 கண்டெய்னர் லாரிகள் மற்றும் ஒரு டவர் கிரேன். இந்த பணிக்காக எனக்கு ஒதுக்கப்பட்டு இருந்தன. வண்டலூரில் இருந்து தாம்பரம் மதுரவாயல் புறவழிச்சாலை வரை மண்ணுக்குள் வரும் குழாய் புறவழிச்சாலை தொடங்கியதும் சிறுபில்லர் அமைக்கப்பட்டு மண்ணுக்கு மேலேயே பயணிக்கும்.

பில்லர் போடுவது, குழாயை வெல்டிங் அடிப்பது இடையில் பட்டர்ப்ளை வால்வுகள் பொருத்துவது, இடையில் வரும் சாலைகளை கடக்க சுரங்கம் அமைப்பது, அனகாபுத்தூரில் உயர்மட்ட பாலம் அமைப்பது போன்ற இன்ன பிற பொறியாளர்களிடமும் அலுவலர்களிடமும் கொடுக்கப்பட்டு இருந்தன.


10 டன் எடையுள்ள மாபெரும் குழாய்கள் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள ஒரு தொழிற்சாலையில் இருந்து கண்டெய்னர்களில் கொண்டு வரப்பட்டு புறவழிச்சாலையில் இருந்து டவர் கிரேன் மூலம் கீழே இறக்கி வைக்க வேண்டும்.

இப்பொழுது உள்ளது போல் நடுவில் சென்டர் மீடியன் உள்ள நான்கு வழிச்சாலை அப்போது கிடையாது. இருவழிச்சாலை மட்டும் தான். நடுவில் தடுப்பு கூட கிடையாது. எந்நேரமும் 100 கிமீக்கும் அதிகமான வேகத்தில் வரும் வாகனங்களை வேகம் குறைக்க வைத்து அனுப்ப வேண்டும்.

ஏனென்றால் டவர் கிரேன் சாலையின் முக்கால் பகுதி இடத்தை அடைத்துக் கொள்ளும். மீதியுள்ள சாலையை இருபக்க வாகனங்களும் கடக்க வேண்டும். தொழிற்சாலையில் குழாயை எடுப்பதில் தொடங்கி இவ்வளவு சிக்கல்களையும் கடந்து குழாயை புறவழிச்சாலையின் பக்கவாட்டில் அடுக்க வேண்டும்.


எங்கள் குழு குழாயை வைத்து முடித்ததும் அடுத்த குழு பில்லரில் குழாயை வைத்து வெல்டிங்கை துவக்கும். இது ஒரு செயின் லிங்க் ஒர்க். பல்லாயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இருள் தொடங்கியதும் புறவழிச்சாலையில் குழாய்கள் வைக்கும் பணி நிறுத்தப்பட வேண்டும்.

கடைசி நேரத்தில் மேலிடத்தின் அழுத்தத்தினால் வேலை அசுர வேகத்தில் நடைபெற தொடங்கின. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. 24 மணிநேரமும் புறவழிச்சாலையில் தான் இருக்க வேண்டும்.

இருக்கும் 25 கண்டெய்னர் லாரிகளை வைத்து இடைவெளி விடாமல் குழாய்களை இறக்கிக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேரம் முழுவதும் மொத்த வண்டிகளையும் தொழிற்சாலைக்கு அனுப்பி குழாய்களை ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

காலை ஆறு மணிக்கு குழாய்களை இறக்கத் தொடங்க வேண்டும். இந்த திட்டத்திற்கு எங்கள் நிறுவனத்தின் இணைப் பொது மேலாளர் தலைவராக இருந்தார். எனக்கு அவர் குரு மாதிரி. மிகச்சாதாரண ஆளாக இருந்த என்னை வளர்த்து நல்ல பொறுப்பில் வைத்திருந்தார்.

அவருக்கு மேல்மருத்தூர் முதல் போரூர் வரை வேலையிருக்கும். எங்கள் பகுதிக்கு அவர் வரும் போது நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் கடுமையாக சத்தம் போடுவார். அவரது பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது, மொத்த குழுவும் அவரைப் பார்த்து நடுங்குவர்.

நிற்க. தலைப்புக்கும் இதுவரை சொல்லிய கதைக்கும் சம்பந்தமில்லை என்று நினைக்கிறீர்களா, கதையை சொல்வதற்கு முன்பு கால சூழ்நிலையை உங்களிடம் சேர்த்தால் தான் சம்பவத்தின் வீரியம் உங்களுக்கு புரியும்.

இவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும் கிடைக்கும் கேப்பில் எஸ்கேப்பாகி சினிமாக்களை முடிந்த வரை முதல் காட்சி பார்த்து விடுவேன். சரக்கும் எப்படியாவது அடித்து விடுவேன். என் தலைவர் வரும் நேரம் கொஞ்சம் வெடவெடவென்று நடுக்கமாக இருக்கும்.

ஒரு கணக்கு உண்டு, அவர் எங்கள் பகுதியை சுற்றிப் பார்த்து விட்டு கிளம்பி விட்டால் மறுபடியும் அதே இடத்திற்கு வர குறைந்தது 8 மணிநேரம் ஆகும். மேல்மருவத்தூர் வரை சென்று வழியில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து விட்டு திரும்ப வர வேண்டுமே.

ஆட்டோகிராப் படம் வெளியான அன்று முதல் காட்சியே பார்க்க வேண்டும் என்று தீர்மானித்து விட்டேன். காலையில் முதல் லோடு குழாய்களை இறக்கி வைத்து விட்டு லாரிகளை அனுப்பி படம் பார்த்து வருவதற்குள் குரோம்பேட்டை வெற்றியில் படம் பார்த்து விட்டு வந்து விடலாம் என திட்டம் போட்டேன்.

லாரிகளை அனுப்பி வைத்து விட்டு தொழிற்சாலையில் உள்ள என் நண்பனிடம் "ஏதாவது காரணம் சொல்லி ஒரு இரண்டு மணிநேரம் இடைவெளி விட்டு குழாய்களை லாரியில் ஏற்று" என்று சொல்லி விட்டு தியேட்டருக்கு வந்து விட்டேன்.

நான் திரையங்கிற்கு போன சமயம் எங்கள் தலைவர் தொழிற்சாலைக்கு சென்றிருக்கிறார். லாரிகள் லோடு ஏற்றாமல் நிற்கவே அவனை கூப்பிட்டு சத்தம் போட்டு "இன்னும் பதினைந்து நிமிடத்திற்குள் லாரிகள் கிளம்ப வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்.

அவன் பதற்றத்தில் எனக்கு சொல்லாமல் ஏற்றி அனுப்பி வைத்து விட்டான். லாரிகள் ஊரப்பாக்கம் பக்கம் ரோட்டில் நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்த தலைவர் லாரிகள் நிற்பதை பார்த்து எனக்கு போன் போட்டிருக்கிறார்.

அவரது போனிலிருந்து எனக்கு கிடைக்காமல் போகவே பக்கத்தில் இருந்த டெலிபோன் பூத்தில் இருந்து போன் அடித்தார். நான் படம் துவங்கி அரைமணிநேரம் வரை ஜாலியாக படம் பார்த்துக் கொண்டு இருக்க லோக்கல் நம்பரில் இருந்து போன் வரவும் மிகவும் அசால்ட்டாக போனை எடுத்து "யாரு" என்று நக்கலாக தியேட்டரின் உள்ளேயே அமர்ந்து பேசினேன்.

சில நொடிகளில் நான் தியேட்டரில் இருப்பதை கண்டுபிடித்து விட்டார். கடுமையாக சத்தம் போட்டு "இன்னும் அரைமணிநேரத்திற்குள் லாரிகளில் உள்ள குழாய்கள் இறக்கப்பட்டு தொழிற்சாலைக்கு திரும்பாவிட்டால் நீ வேலையை விட்டு அனுப்பப்படுவாய்" என்றதும் எனக்கு சர்வமும் நடுங்கி விட்டது.

தியேட்டரை விட்டு வெளியே வந்தால் தியேட்டர்காரன் பைக்கை எடுக்க விட மாட்டேங்கிறான். படம் முடியாமல் எடுக்க முடியாது. கதவையும் திறக்க முடியாது என்று சத்தம் போடவே வெற்றி தியேட்டரின் பெரிய கதவை ஏறி குதித்து வெளியில் வந்து ஒரு ஆட்டோவை பிடித்து ஊரப்பாக்கம் வந்தேன்.

லாரிகளை எடுத்துக் கொண்டு புறவழிச்சாலைக்கு வந்து அவசர அவசரமாக குழாய்களை இறக்கி லாரிகளை அனுப்பி வைத்ததும் தான் நிம்மதி வந்தது. படம் முடியும் நேரம் தியேட்டருக்கு போய் பைக்கை எடுத்து வந்தேன். மறுநாள் காலை திட்ட அலுவலர்கள், பொறியாளர்களுக்காக ஆலோசனை கூட்டம் நடந்தது.

என்ன சொல்லப் போகிறாரோ என்று பயந்து கொண்டே உள்ளே அமர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் கலையும் போது ஒரு நிமிடம் என்று எல்லோரையும் அமர வைத்த தலைவர் என் கதையை சொல்லி "இப்படிப்பட்ட பொறுக்கிகளையும் வைத்து தான் இந்த திட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது" என்று முடித்தார்.

நல்ல வேளை பிரச்சனை அத்துடன் முடிந்ததே என்ற திருப்தி எனக்கு. அதற்காக அடுத்த வாரம் சினிமாவுக்கு போகாமல் இருந்திருப்பேன் என்றா நினைக்கிறீர்கள், ஹி ஹி.

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 22, 2013

பஞ்சேந்திரியா - சென்னையில் டப்பாவாலாக்கள், எ மா ச வாழ்கிறோம்

கரடு முரடான உருவமும் முரட்டுத்தனமான தோற்றமும் எனக்கு எதற்கு உதவுகிறதோ இல்லையோ சாலையில் நடக்கும் தகராறுகளுக்கு மற்றவர்களை யோசிக்காமல் ஒரடி பின்வாங்கச் செய்கிறது.

இரண்டு வருடத்திற்கு முன்பு திருவாரூரில் இரண்டு பேருந்துகள் ஒரே நிறுத்தத்தில் நிற்கையில் பின்வரும் வாகனங்கள் செல்ல வழியில்லை. இருந்த கேப்பில் நான் புகுந்து செல்ல முற்பட எதிரில் வந்த ஆட்டோக்காரன் "டேய் மயிராண்டி" என்று சவுண்டு விட்டான். அப்படியே நின்று வண்டியை கீழே போட்டு திரும்பினேன். சற்றும் யோசிக்காமல் "அண்ணே நீங்க போங்கண்ணே, நான் ஆளை மாத்தி கூப்பிட்டேன் ஸாரிண்ணே" என்றான். சிரித்துக் கொண்டே வந்து விட்டேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பு அயனாவரத்தில் உள்ள ஒரு நாற்சந்திப்பில் நான் கடக்கும் போது குறுக்கே மோதுவது போல் வந்த ஆட்டோவின் பின்னே அமர்ந்திருந்தவன் பயத்தில் என்னைப் பார்த்து "அடப்பாவி" என கத்தினான். சைடு ஸ்டாண்டு போட்டு இறங்கி "என்ன" என்றேன். "சார் நான் டிரைவரை திட்டினேன் நீங்க போங்க" என்றான்.

# வில்லன் பொன்னம்பலம் மாதிரி ஆகிட்டேன் போல. கண்ணாடியில் எப்படிப் பார்த்தாலும் ரொமாண்டிக் லுக் வர மாட்டேங்குதே - கவுண்டமணிகிட்ட கிளாஸூக்கு போகனும் போல # ஏ அக்கா மகளே இந்து.

----------------------------------------

Factu Factu Factu



-----------------------------------------------

என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் தலைப்பில் முகநூலில் பகிர்ந்தவை

என் நண்பன் வெளிநாடு செல்வதற்காக சென்னை வந்தான் அவனுடன் இன்று முழுக்க சுற்றி இரவு அவனை வழியனுப்பி வந்து முகநூலை பார்த்தால் எல்லோரும் ஸ்டாம்ப் அடித்து உலவ விட்டு இருக்கின்றனர். நான் தான் லேட்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நைட்டு ஓவர் மப்பு, காலைல எழுந்ததில் இருந்து தலைய வலிக்குது. கட்டிங் அடிச்சா சரியாப் போயிடும்னு சொல்றான் ப்ரெண்டு # ச்சே என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

நக்கீரன் இன்னைக்கி 400 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்திருக்காராம். எவன் எவன்லாம் சிக்கி சின்னாபின்னமாகப் போறானோ, எது எதற்கெல்லாம் பயப்பட வேண்டியிருக்கிறது # என்ன மாதிரியாக சமூகத்தில் வாழ்கிறோம்

5000 கிலோமீட்டருக்கு அப்பால் சென்று தாக்கும் ஏவுகணையை கூட கண்டுபிடித்து விட்டான். ஆனால் இன்னும் ஆப்பாயிலை பார்சல் செய்யும் முறையை எந்த விஞ்ஞானியாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

கையேந்திபவனில் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மூன்றாம் முறையாக சாம்பார் கேட்டால் தரமாட்டேங்கிறேன் # என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்

-----------------------------------------------

எங்க குலசாமி


-----------------------------------------------

மும்பையில் உலகப் புகழ்ப்பெற்ற டப்பாவாலாக்கள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அது போல் சென்னையில் கூட பல வருடங்களுக்கு முன்பு டப்பாவாலாக்கள் இருந்திருக்கிறார்கள் என்பது யாருக்காவது தெரியுமா.

டப்பாவாலாக்கள் சரியான நேரத்தில் டிபன்பாக்ஸ் எடுத்து வருவதற்காக அரக்கோணத்தில் இருந்தும் கும்மிடிப்பூண்டியில் இருந்தும் மின்சார ரயில்கள் கிளம்பி சரியாக 11.30 மணிக்கு பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸ் ரயில் நிலையத்திற்கு வந்திருக்கின்றன. அப்படி வந்த உணவை சாப்பிடுவதற்காக மூன்று வகையான டிபன் ஷெட்டுகள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ளன.

ஒன்று இந்தியர்களுக்கு சற்று வசதிக் குறைவானது. இரண்டாவது ஆங்கிலோ இந்தியர்களுக்கானது சற்று வசதியானது. மூன்றாவது வெள்ளைக்காரர் களுக்கான டிபன் ஷெட், இதில் வசதி சற்று கூடுதலானது.

காலப்போக்கில் டப்பாவாலாக்கள் மதிய உணவு எடுத்து வருவது நின்று போனாலும் அதற்கு சாட்சியாக இன்றும் அந்த ரயில்வே ஸ்டேசன் அருகில் மூன்று ஷெட்டுகளும் இருக்கின்றன. ஒன்று பாழடைந்து கிடக்கிறது. மற்ற இரண்டும் யூனியன் ஆபீஸ்கள் ஆகி விட்டன. மேலும் விவரங்கள் மற்றும் புகைப்படங்கள் விரைவில்.


ஆரூர் மூனா செந்தில்

Friday, July 19, 2013

அலைந்து திரிந்து மரியான் பார்த்த கதை

எப்பொழுதும் ஒரு நாள் நன்றாக இருந்தால் ஒரு நாள் கவிழ்த்து விடும். இன்றைய நாள் சரியில்லை என்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது போல. எப்பொழுதும் AGSல் படம் பார்க்கும் நேற்று காலை மரியான் படம் பார்க்க முன்பதிவு செய்ய இணையத்திற்கு வந்த போது முதல் காட்சி 10.30 தான் என போட்டிருந்தது.


ஆனால் அம்பத்தூரில் 9 மணிக் காட்சிக்கான முன்பதிவுகள் தொடங்கியிருந்தன. காலையிலேயே படத்தினை பார்த்து முடித்து விட்டால் இன்று சில வேலைகளை கூடுதலாக பார்க்கலாம் என்று முடிவு செய்ததால் நண்பனிடம் கூறி அம்பத்தூர் முருகன் திரையரங்கில் டிக்கெட்டை எடுக்கச் சொல்லியிருந்தேன்.

அவனும் டிக்கெட்டை எடுத்து விட்டான். மாலை 6 மணிக்கு AGS வெப்சைட்டுக்கு போனால் 9 மணிக்காட்சிக்கு முன்பதிவு இருந்தது. அடடா தேவையில்லாமல் நண்பனை வேறு சொறிந்து விட்டோமே என்று யோசனையாக இருந்தது.

அவனிடம் சொல்லி டிக்கெட்டும் எடுத்தாகி விட்டது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். கேன்சல் செய்யச் சொன்னால் அவன் திட்டுவான். ஒரு படம் பார்க்க பெரம்பூரிலிருந்து அம்பத்தூர் போக வேண்டுமா எனவும் யோசனை.

சொல்லியாகி விட்டது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆகவேண்டுமென்று காலையில் இங்கிருந்து 8 மணிக்கு கிளம்பினேன். எப்படியும் AGS வழியாகத்தான் போக வேண்டும். பார்த்தால் திரையரங்கு காலியாக இருந்தது. எரிச்சலும் கடுப்புமாக கிளம்பினேன். நாதமுனி தாண்டியதும் மழை தொடங்கியது.

மழையில் நனையும் ஆசையில்லை, ஒதுங்கவும் மனமில்லை. நண்பன் வேறு காத்திருப்பானே என நனைந்து கொண்டே கிளம்பினேன். தியேட்டருக்கு சென்று பார்த்தால் எங்களுடன் சேர்த்து மொத்தமே இருவது பேர் தான் திரையரங்கில் இருந்தனர்.

----------------------------------------

மரியான் படத்தில் பார்வதி கதாபாத்திரம் முழுவதும் இயல்பிலிருந்து விலகி வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டின் எந்த கடலோர கிராமங்களிலும் இது போல் உடையணிந்த பெண்ணை நான் பார்த்ததே இல்லை.

இருபது வயதை கடந்த பெண் குட்டை பாவாடை, சட்டை போட்டு எந்த கிராமங்களிலும் வெளியே நடமாட மாட்டார். மிகவும் சாதாரணமாக குனிந்தாலே மார்பு பகுதி தெரியும் அளவுக்கு இறக்கித் தைக்கப்பட்ட சட்டையை அணிந்து கொண்டு கிராமம் முழுக்க நடமாடுகிறார்.

அப்புக்குட்டி முன்னால் குனிந்து குனிந்து பேசுகிறார். குனிந்து கொண்டே லாலிபாப்பை ஒரு மார்க்கமாக சுவைக்கிறார். கவர்ச்சியாக இருக்கிறது, ஜொள்ளு கூட விடுகிறோம் சரி. ஆனால் நீங்கள் கிளாஸ் படம் என்று நினைத்து எடுத்த படத்தில் அல்லவா இந்த காட்சிகள் இருக்கிறது. ரூம் போட்டு யோசிங்கப்பா.

----------------------------------------

படம் முடிந்து வெளியில் வந்ததும் நல்ல வெயில் அடித்தது. சரி வீட்டுக்கு போய் விடலாம் என்று நினைத்த போது நண்பன் ஒரு ஆட்டோகேட் பைலை பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு போ என்றான். அவனுக்காக அவன் வீட்டுக்கு சென்று பைலை கரெக்ட் செய்து ப்ரிண்ட் அவுட் எடுத்துக் கொடுத்து விட்டு மணியாகி விட்டதே என்று அங்கிருந்தே விமர்சனத்தை தட்டச்சு செய்தேன்.

முடித்து விட்டு வெளியில் வந்தால் வெளியில் நல்ல மழை, பயங்கர கடுப்பாகிப் போனது. எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னு திட்டிக்கிட்டே வீட்டுக்குள் போய் விட்டேன். அரைமணிநேரம் வரை காத்திருந்தேன். மழை விடுவது போல் தெரியவில்லை. பாலிதீன் கவர் வாங்கி போனையும் பர்ஸையும் பத்திரப்படுத்திக் கொண்டு மழையில் நனைந்த படியே வீடு வந்து சேர்ந்தேன்.

சிங்கம் 2 படத்திற்கு டிக்கெட் எடுத்தது போல் இந்த படத்திற்கும் அவரசப்படாமல் டிக்கெட் எடுத்திருந்தால் அவ்வளவு தூரம் அலைச்சலும் இருந்திருக்காது. மழையில் நனைந்திருக்கவும் மாட்டேன். உடனடியாக வீடு வந்தும் சேர்ந்திருப்பேன். எல்லாம் என் கெரகம். ஒன்னியும் பண்ண முடியாது.

ஆரூர் மூனா செந்தில்

மரியான் - சினிமா விமர்சனம்

ஆப்ரிக்க கடத்தல்காரர்களிடம் தனுஷூம் ஜெகனும் மாட்டி பசியில் துடித்துக் கொண்டு இருக்கும் போது பனிமலர் ஜெகனுக்கு சோறு போடு அப்படின்னு சொல்லுவார். ஒரு நிமிஷம் பதறிட்டேன் அடடா மயக்கம் என்ன, 3 வரிசையில் அடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் தனுஷூக்கு என்று.


ஆனால் அது கற்பனை காட்சி என்ற போது அப்பாடா என்று இருந்தது. அது போல் டிரெய்லரில் சிறுத்தையிடம் மாட்டிக் கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது. சரியான ஆக்சன் பேக் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் அதுவும் கற்பனை என்னும் போது அடச்சே என்று ஆகிவிட்டது.

இப்படி இரண்டு மனநிலையும் கலந்த விதத்தில் தான் படம் அமைந்துள்ளது. மிகச்சிறப்பான படம் என்று கொண்டாடவும் முடியாது. மொக்கைப்படம் என்று ஒதுக்கி வைக்கவும் முடியாது. கொஞ்சம் மாஸ், நிறைய கிளாஸ் கலந்த படம் இது.


படத்தின் முதல், மிகப்பெரும், ஆகச்சிறந்த பலம் சந்தேகமில்லாமல் ஏ.ஆர்.ரகுமான் தான். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே கேட்டுப் பழகியிருந்ததால் பார்க்கும் போது அதற்கு ஏற்ப கொஞ்சம் கூட குறையில்லாமல் படமாக்கப்பட்டு இருக்கிறது.

தென் மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோர கிராமத்தில் வசிக்கும் மீனவர் மரியான். அவர் அதே கிராமத்தில் வசித்து தன்னுடன் மீன்பிடித்து வரும் சலீம்குமாரின் மகள் பனிமலரை(பார்வதி) காதலிக்கிறார். அதே ஊரில் உள்ள ரவுடியிடம் சலீம் கடன் வாங்கியிருப்பதால் பணத்திற்கு பதில் பனிமலரை திருமணம் செய்து கொடுக்கும்படி ரவுடி கட்டாயப்படுத்துகிறார்.


அவரிடம் சண்டை போடும் தனுஷ் பணத்திற்காக இரண்டு ஆண்டுகள் கான்ட்ராக்ட்டில் ஆப்பிரிக்காவில் உள்ள சூடானுக்கு செல்கிறார். இரண்டு வருடம் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பும் நேரம் அங்குள்ள கொள்ளையர்களால் தனுஷூம் அவருடன் வேலை பார்த்து வரும் ஜெகனும் கடத்தப்படுகிறார்கள்.

தனுஷ் அந்த கொள்ளையர்களிடம் இருந்து தப்பித்தாரா, பார்வதியை கைப்பிடித்தாரா என்பதே மீதிக்கதை.

தனுஷ் நடிப்பில் எங்கோ எங்கோ எங்கெங்கோ போய் விட்டார். இனி அவர் நடிப்புக்கு தீனி கொடுக்க இயக்குனர் ரூம் போட்டு யோசித்து தான் கதாபாத்திரத்தை உருவாக்க வேண்டும் போல. இனிமேல் தனுஷை பாராட்டவெல்லாம் வேண்டாம். வந்தார் சென்றார் என்றாலே அது சிறந்த நடிப்பு என்றே பொருள்படும்.


பனிமலராக பார்வதி, பூ படத்தில் நடித்த சாயலோ வசன உச்சரிப்போ அழுகையோ ஒரு துளி கூட இந்த படத்தில் எட்டிப் பார்க்கவில்லை. எல்லாமே புதுசா இருக்கு. இது போல் நடிப்பில் வித்தியாசம் காட்டும் கதாநாயகிகள் தான் தமிழுக்குத் தேவை. ப்ராம்ப்ட் கொடுத்து நடிக்கும் மைதா மாவுகள் அல்ல.

சலீம் என்ற மகா கலைஞனை சும்மா வெறுமனே டம்மி கதாபாத்திரத்தை கொடுத்து வீணடித்திருக்கிறார்கள். அது போல் அவருக்கு தலைவாசல் விஜய்யின் டப்பிங்கும் பொருந்தவில்லை. ஒருவேளை இதற்கு முன்பு நான் அவரின் சொந்த குரலை கேட்டு கேட்டு பழகியதால் இருக்கலாமோ என்னவோ.

உமா ரியாஸ் மெளனகுரு படத்தில் மிக இயல்பாக நடித்து அசத்தியிருப்பார். ஆனால் இந்த படத்தில் நடிப்பது போல் இன்னும் இரண்டு படங்களில் நடித்தால் காணமல் போயிருப்பார். மேக்கப்பும் வாயை சுழித்துக் கொண்டு தப்புத்தப்பாக நெல்லை ஸ்லாங் பேசுகிறேன் என்று கொன்று எடுக்கிறார்.

படத்தில் காமெடியன்கள் அறியப்படுபவர்கள் அப்புக்குட்டியும் ஜெகனும். ஆனால் இருவருமே படத்தில் சீரியசான கதாபாத்திரத்தில் வந்து செத்துப் போகிறார்கள். அதற்கு அவர்கள் எதற்கு என்று தான் புரியவில்லை. சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் அண்ணாச்சி சொல்லிக் கொள்வது போல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மொத்தத்தில் படம் மிகச்சிறந்த வெற்றியும் பெறாது. படுதோல்வியும் கிடையாது. தனுஷூக்கு இந்த படத்திற்காக சில விருதுகள் உறுதி. ஆவரேஜ் படம். ஒரு முறை பார்க்கலாம்.

ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : எங்கள் ராஜகுரு அறிவுரையின்படி இனி சினிமாவுக்கு போன கதைகள் விமர்சனத்தில் இடம் பெறாது. யார் அந்த ராஜகுருன்னு எல்லாம் கேக்கப்பிடாது. முடிஞ்சா கண்டுபிடிச்சிக்கங்க.
 

Thursday, July 18, 2013

சென்னையில் செப் 1 அன்று இரண்டாம் ஆண்டு பதிவர் சந்திப்பு திருவிழா

பதிவுலக நட்புகளே,

கடந்த வருடம் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா(மாநாடு) சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டது தாங்கள் அறிந்ததே. சுமார் 200க்கும் அதிகமான பதிவர்கள் (பெண்களும் கணிசமான எண்ணிக்கையில்) கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.

கடந்த வருடத்தைப் போலவே இந்த வருடமும் பதிவர் சந்திப்பு திருவிழா சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பதிவர் திருவிழாவிற்கான பணிகள் மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டை போலவே பல்வேறு பதிவர் குழுக்கள் அமைக்கப்பட்டு அடுத்தடுத்த ஏற்பாடுகள் செய்ய முனைந்திருக்கிறார்கள். இந்த பதிவர் சந்திப்பு திருவிழா பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள விரும்பும் விருப்பமுள்ள பதிவர்கள் இணைந்து கொள்ளலாம்.

இந்த மாநாட்டிற்காக ஆகும் செலவுகளை சமாளிக்க விருப்பமுள்ள பதிவர்களிடம் அன்பளிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. ஏதோ ஒரு வகையில் அன்பளிப்பு குடுக்க இயலாமல் இருக்கும் பதிவர்கள், தங்களின் வருகையையே அன்பளிப்பாக தருமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
 
கடந்த வருடம் வருகைதந்த பதிவர்கள் அனைவருக்கும் பண உதவி கேட்டு மின்னஞ்சலாகவும் ஏனைய பதிவர்களுக்கு இந்த மாதிரி வெளிப்படையான பதிவுகளின் மூலமும் அன்பளிப்பு கோர உத்தேசிக்கபட்டுள்ளது. அன்பளிப்பு அளிப்பது என்பது கட்டாயம் அல்ல, என்பதனை இங்கே தெரியபடுத்தப்படுகிறது.
 
விழாவினை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் நடத்த பதிவர்கள் தங்களது ஆலோசனைகளை ஞாயிற்றுக் கிழமை தோரும் கே,கே.நகரில் உள்ள DISCOVERY BOOK PALACE-ல் மாலை 4 மணிக்கு நடக்கும் ஆலோசனைக் கூட்டங்களின் போது தெரியப்படுத்தலாம், விழக்குழுவினர் அனைவரது கருத்துக்களையும் திறந்த மனதோடு கேட்டு, ஒரு நாளில் நடக்கும் நிகழ்ழ்சி நிரலில் சாத்தியப்படும் அனைத்தையும் சேர்க்க முனைவார்கள். யாரேனும் விழாக்குழுவினருடன் இணைந்து பொறுப்புகளை ஏற்று நடத்த முன்வந்தால் அவர்களையும் இனைத்துக்கொண்டு பதிவர் சந்திப்பு விழாவினை நடத்த விழாக்குழுவினர் முன் வந்திருக்கிறார்கள்.
 
இந்த விழாவிற்காக கதை, கட்டுரை, நகைச்சுவை, கவிதை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதல் மூன்று இடங்களை பெறும் பதிவர்களுக்கு விழாவின் போது பரிசுகள் வழங்க தீர்மானிக்கபட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் விழா ஏற்பாட்டு பதிவர்களின் பதிவுகள் மூலம் வெளியிடப்படும்.
 
இந்த சந்திப்பிற்கு வருகைதர விரும்பும் பதிவர்கள் மற்றும் அன்பளிப்பு அளிக்க விரும்பும் பதிவர்கள் கீழ் கண்ட பதிவர்களை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டு தங்கள் பெயர், வலைதளமுகவரி, எந்த ஊரிலிருந்து/நாட்டிலிருந்து வருகிறீர்கள் போன்ற தகவல்களை குடுக்கவும். இந்த தகவல்கள், உணவு மற்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.
 
செப்டம்பர் 1ம் தேதி (01-09-2013) ஞாயிற்றுக் கிழமை மாநாட்டு தேதியாக முந்தைய ஆலோசனைக் கூட்டங்களில் முடிவ் செய்யப் பட்டு, சென்னை வடபழனியில் கமலா தியேட்டரை ஒட்டி இடதுபுரத்தில் இருக்கும் “CINE MUSICIAN’S UNION” க்கு சொந்தமான கட்டடம் மாநாட்டுக்காக புக் செய்யபட்டுள்ளது.
 

மாநாடு நடை பெறப்போகும் கட்டிடத்தின் முகத்தோற்றம்.  
(வாசலில் திருஷ்டி பொம்மை போல் நிற்பது பட்டிக்காட்டான் ஜெய்)


கட்டிடத்தின் முன் பகுதியில் போதுமான இடவசதி உள்ளது.


வாயில்பகுதியிலிருந்து எடுத்த படம்.


வாகனங்கள் நிறுத்த போதுமான இடம் உள்ளது.

முதலில் கடந்த வருடத்தைப் போல் ஆகஸ்டு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான ஆகஸ்ட் 25 ல் நடத்தலாமா என்று ஆலோசித்து அன்று பல பதிவர்கள் TNPSC தேர்வு எழுத இருப்பதாக தெரிவித்ததை அடுத்து அந்த தேதி நிராகரிக்கபட்டது. செப். மாத ஞாயிற்றுக்கிழமைகளில், செப்.8 முகூர்த்த தினமென்பதால் பல பதிவர்கள் அந்த தேதிக்கு ஆட்சேபம் தெரிவிக்க அந்த தேதியும் வேண்டாம் என்று, முடிவில் செப். 1 ல் நடத்தலாம் என்று முடிவெடுக்க பட்டுள்ளது.
 
பதிவர் மாநாட்டிற்கான தங்களது வருகையை தெரிவிக்க, தொடர்புகொள்ள வேண்டிய பதிவர்கள் :
  1. மதுமதி kavimadhumathi@gmail.com
  2. பட்டிகாட்டான் ஜெய் pattikattaan@gmail.com
  3. சிவக்குமார் – madrasminnal@gmail.com
  4. ஆரூர் மூனா செந்தில் – senthilkkum@gmail.com
  5. அஞ்சாசிங்கம் செல்வின் – selwin76@gmail.com
  6. பாலகணேஷ் bganesh55@gmail.com
  7. சசிகலா - sasikala2010eni@gmail.com
உங்களது பெயர், உங்கள் வலைதளமுகவரி, ஊர்/நாடு, தொலைபேசி எண்(optinal) தெரிவித்தால், உணவு தயார் செய்ய, வெளியூர் எனில் தங்கும் இட வசதி செய்து குடுக்க மிகவும் உதவியாக இருக்கும்.
 
வரவேற்புக்குழுவில் சென்னையில் தங்குமிடம் ஏற்பாடு செய்தல், வாகன ஏற்பாடு செய்தல், டிக்கெட் முன்பதிவு செய்ய உதவுதல் போன்ற பணிகளை ஆரூர் மூனா செந்தில், அஞ்சாசிங்கம் செல்வின், மெட்ராஸ் பவன் சிவக்குமார், பிலாசபி பிரபாகரன் ஆகியோர் பொறுப்பேற்று செய்கின்றனர்.

சென்னை தவிர ஏனைய பகுதிகளில் உள்ள உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் மின்னஞ்சலில் அனுப்பியும் அலைபேசியில் அழைத்தும் விழாவுக்கு அழைத்து வரும் பொறுப்பை தமிழ்வாசி பிரகாஷ், சதீஷ் சங்கவி, வீடு சுரேஷ், பாண்டிச்சேரி கோகுல், திண்டுக்கல் தனபாலன் ஆகியோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

பெண் பதிவர்களின் வரவேற்பு பொறுப்பை மின்னல் வரிகள் கணேஷ், தென்றல் சசிகலா ஆகியோர் ஏற்கின்றனர்.

மற்ற பதிவர்கள் இவர்களை தொடர்பு கொண்டு தங்களது வருகை, தங்குமிடம், வாகன வசதி பொன்றவற்றை உறுதி செய்து கொள்ளவும்.

 
ஆரூர் மூனா செந்தில் 
 
 பின்குறிப்பு : வலையுலக நட்புகள் இந்த தகவலை தங்கள் வலைதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, July 16, 2013

கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்தா கைப்புள்ளயோட கதி...

 17 வயது வரை என்னைப் பொறுத்த வரை சென்னை என்பது மேற்கு மாம்பலம் மட்டும் தான். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் மெரினா பீச்சும் காந்தி மண்டபமும் தான். புறநகரில் என்றால் வண்டலூர் உயிரியல் பூங்காவும், கோல்டன் பீச்சும் தான். அதைத் தாண்டி வேறு இடங்கள் தெரியாது.


ஒவ்வோரு ஆண்டும் கோடை விடுமுறைக்கு சென்னைக்கு வருவது மேற்கு மாம்பலத்தில் உள்ள மாமா வீட்டுக்கு தான். இந்த காலகட்டங்களில் எனக்கு தெரிந்த திரையரங்குகள் உதயம், காசி, ஜெயராஜ், நூர்ஜகான், ஸ்ரீநிவாசா மட்டும் தான்.

பள்ளிப்படிப்பை முடித்ததும் சென்னைக்கு அனுப்பி விட நினைத்த அப்பா பல இடங்களில் விசாரித்து ரயில்வே அப்ரெண்டிஸ்ஸில் சேர்த்து விட முடிவு செய்தார். அதன்படி விண்ணப்பம் பூர்த்தி செய்து போட்டு நுழைவுத் தேர்வுக்கு அழைப்பு வந்த போது அழுது கொண்டே ரயிலேறினேன்.


எந்த இடம் என்று கூட தெரியாமல் அண்ணாநகர் கிழக்கில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதி விட்டு திருவாரூருக்கு திரும்பி விட்டேன். பிறகு தேர்வானது வந்து சேர்ந்தது எல்லாம் இந்த கட்டுரைக்கு முக்கியமில்லை.

தங்குவதற்காக நான் வந்து சேர்ந்த இடம் பெரம்பூர். அதுவரை சற்று அமைதியான பகுதிகளையே சென்னை என்று நினைத்திருந்த நான் வந்த அன்று கண்முன்னே ஒருவன் வெட்டிக் கொல்லப்படுவதை கண்டேன். ஆட்டோவில் வந்தார்கள் வெல்டிங் கடையில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தவனை வெட்டி சாய்த்து விட்டு போய் விட்டார்கள்.                              


சர்வமும் ஒடுங்கி விட்டது. திருவாரூரில் பிரச்சனையென்றால் கைகளால் அடித்துக் கொண்டு இருந்த நான் என்னை பெரிய முரடன் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஒரு நிமிடத்தில் என் நினைப்பை அடித்து நொறுக்கி மரண பயத்தை காட்டி விட்டார்கள்.

அதன் பிறகு சில மாதம் வரை வகுப்பு நண்பர்களுடன் கலக்காமல் நான் மட்டும் தனியே இருந்தேன். அவர்களுடன் சகஜமாக பழகிய பிறகு தான் பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், வியாசர்பாடி என என்னை சுற்றிய பகுதிகளில் இந்த மாதிரி சம்பவங்கள் சாதாரணம் என்று தெரிய வந்தது.


ஒரு முறை எங்கள் ஏரியாவில் ரோட்டில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தேன். இரண்டு ஆட்டோவில் வந்த வேறு சில நண்பர்கள் என்னுடன் கிரிக்கெட் ஆடிக் கொண்டு இருந்தவர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு இருந்தார்கள். வா மச்சான் அடுத்த ஏரியாவில் போய் கிரிக்கெட் பெட் மேட்ச் ஆடலாம் என்று அழைத்தார்கள்.

சரி என்று ஆட்டோவில் ஏறினேன். நேரே கொளத்தூர் மூகாம்பிகா தியேட்டர் அருகே சென்றது. சரசரவென இறங்கியவர்கள் ஆட்டோவின் பின்புறமிருந்து உருட்டுக் கட்டைகளையும் இரண்டு பட்டாக் கத்திகளையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்த ஜெராக்ஸ் கடைக்கு சென்று அடித்து உடைத்து ஷட்டரை மூடி விட்டு வந்து ஆட்டோவில் ஏறி வாடா மச்சான் நம்ம தெருவுக்கே போகலாம் என்றார்கள்.

ஒரு மாசம் அவனுங்க பக்கமே போகவில்லை. பிறகு தான் புரிந்தது. இது சாதாரண ஏரியா கிடையாது, நம்ம கூட சுத்துறவனும் சாதாரணமானவன் கிடையாது என்று. ஒரு வருடத்தில் இவர்களுடன் சகஜமாகி நானும் சில பல கோதாக்களில் இறங்கி உள்ளேன். ஆனால் எங்காவது நம்ம பக்கம் வலு குறைவாக இருப்பது போல் தெரிந்தால் முதலில் எஸ்ஸாவது நானாகத்தான் இருக்கும்.

ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு கபடிப் போட்டியில் வேறொரு குழுவுடன் மோதும் போது சண்டையாகி எங்கள் நண்பர்களில் ஒருவன் அவர்களின் அணித் தலைவனை அடித்து விட்டான். எங்கே அவனுங்க ஸ்கெட்ச் போட்டுறுவானுங்களோன்னு பயந்து இரண்டு நாள் நாங்கள் எங்கு சென்றாலும் குழுவாகவே சென்று வந்தோம்.

பிறகு ஒரு வாரத்திற்கு பிறகு பிரச்சனை அடங்கி விட்டது என்று நினைத்துக் கொண்டு நான் தனியாக அயனாவரம் பக்கம் போக அவர்கள் துரத்த ஆரம்பித்தனர். ஓடினேன் ஓடினேன் நூர் ஓட்டல் ஸ்டாப்பிங் வரைக்கும் ஓடினேன். வந்த பஸ்ஸில் ஏறி தப்பித்தேன்.

இரண்டு நாள் கழித்து தான் தெரிந்தது. அவர்கள் என்னை துரத்தியது அடிப்பதற்காக அல்ல, எங்கள் குழுவில் உள்ள மற்றவர்கள் அடிப்பார்களோ என்று பயந்து சமாதானத்திற்கு தூது விடத்தான் என்று.

இந்த சம்பவத்திற்கு பிறகு பல நாட்கள் எங்க ஆளுங்க ரன்னர் ரன்னர் என்று கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நான் அந்த சமயத்தி்ல் மாட்டியிருந்தால் கட்டதொரைக்கிட்ட மாட்டியிருந்த கைப்புள்ளயாகியிருப்பேன் என்று என் உள்ளுணர்வு சொன்னதை அவர்களிடம் சொல்ல முடியுமா என்ன.

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 15, 2013

பஞ்சேந்திரியா - ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா

எல்லோரும் ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையை உச்சரிக்கும் போது சிரமம் ஏற்படலாம். ஒரு சிலர் தமிழ் வார்த்தைகளுக்கே ததிங்கிணத்தோம் போடுவர். நானும் இது போல் சிக்கி தடுமாறுபவர்கள் பலரை பார்த்திருக்கிறேன்.

எனக்கு கூட ஒரு வார்த்தையில் தந்தியடிக்கும். அது எக்ஸ்கியூஸ் மீ. தனியாக அமர்ந்து பலமுறை வாய்விட்டு சொல்லிப் பார்த்து இருக்கிறேன். அப்போது எல்லாம் சரியாக வரும் அந்த வார்த்தை பொது இடத்தில் அதுவும் முக்கியமாக ஏதாவது ஒரு பெண்ணைப் பார்த்து சொல்ல வேண்டியிருந்தால் எப்படி முக்கினாலும் எச்சூச் மீ என்று தான் வரும்.

நானும் எத்தனையோ முறை இந்த வார்த்தைக்காக பல்பு வாங்கியிருக்கேன். இன்று கூட ஒரு மருத்துவமனையில் ஒரு பெண்ணைப் பார்த்து சொல்ல முயற்சிக்கும் போது எச்சூச் மீ என்று தான் வந்தது. அடங்கொன்னியா, நமக்கு நாக்குல வசம்ப வச்சித்தான் தேய்க்கணும் போல.

இதற்கு இணையான ஒரு சம்பவம். நான் இதற்கு முன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தேன். அந்த நிறுவனத்தின் சென்னை கிளைக்கு பொது மேலாளராக வந்தவர் ஒரு சட்டம் இயற்றினார். அனைவரும் உடனடியாக ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.

ஒரு மாதத்திற்கு பிறகு அனைவரும் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும். தவறிப் போய் தமிழில் பேசினால் ஐநூறு ரூபாய் அபராதம் என்று. ஹந்திக்காரன் எல்லாம் எங்களை கலாய்த்துக் கொண்டு இருக்க தமிழ் ஆட்கள் எல்லோரும் ரெபிடெக்ஸ் ஹிந்தி ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் வாங்கி நாள் முழுக்க படிக்க ஆரம்பித்தனர்.

என்னுடன் அண்ணாதுரை என்றொருவர் வேலை பார்த்து வந்தார். அவருக்கு இந்த விஷயத்தில் உடன்பாடே இல்லை. இருந்தாலும் மற்றவர்கள் பார்க்கும் போது "ஏக் காவுன் மே ஏக் கிஸான் ரஹ தாத்தா" என்று சத்தம் போட்டு படிப்பது போல் பாவ்லா காட்டுவார்.

ஒரு மாதத்திற்கு பிறகு அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தேர்வு நடந்தது. மேலாளர் ஒவ்வொருவராக கூப்பிட்டு இந்தியில் கேள்வி கேட்பார். சரியாக பதில் சொன்னவர்களை பாராட்டி அனுப்பினார்.

சொல்லத் தெரியாமல் திணறியவர்களுக்கு 500 அபராதம் போட்டு அனுப்பினார். கடைசி நிமிடம் வரை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த அண்ணாதுரை ஒரு நொடி டக்கென யோசித்து தெரியாது என்ற வார்த்தைக்கு மாலும் நஹி என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

அவரது முறையும் வந்தது உள்ளே சென்றதும் மேலாளர் கேள்வியை தொடங்கினார், அது

மேலாளர் : தேரா நாம் கியா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : (பேனாவைக் காட்டி) ஏ க்யா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : ஏ ஷெகர்கா நாம் க்யா ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

மேலாளர் : எஹா தேரா மாலிக் கோன் ஹை

அண்ணாதுரை : மாலும் நஹி சாப்

இன்னும் பத்துக்கும் மேற்பட்ட கேள்விகளை மேலாளர் கேட்டார். எல்லாவற்றிற்கும் பதில் மாலும் நஹி சாப் தான்.

ஒரு கட்டத்தில் கடுப்பாகிப் போன மேலாளர் தமிழில் திட்ட ஆரம்பித்து விட்டார். திட்டி முடித்ததும் "நான் தமிழில் பேசி விட்டேன். அதற்காக பைன் இந்தா ஐநூறு ரூபாய்" என்று கொடுத்து அனுப்பி விட்டார்.

அதன் பிறகு அலுவலகத்தில் இருந்து அந்த சட்டமே எடுக்கப்பட்டு விட்டது. தமிழனா கொக்கா

--------------------------------------

பங்காளிகள்


---------------------------------------

நம்மளை விட வயதில் சிறியவர்கள் நம்மை விட பெரிய போஸ்ட்டுக்கு வருவதால் ஏற்படும் இயலாமையை தவிர்க்க முடியவில்லை. எங்கள் தொழிற்சாலைக்கு புதியதாக ஒரு டெபுடி சிஎம்ஈ வந்துள்ளார். வயது முப்பதுக்குள் தான் இருக்கும். ஐஆர்எஸ் பாஸ் பண்ணி இந்த உத்யோகத்திற்கு வந்துள்ளார். ஆறாயிரம் தொழிலாளர்களுக்கும் அவரே உயரதிகாரி. அவரை பார்த்ததிலிருந்து காதில் புகையாக வந்துக் கொண்டுள்ளது

# அதுக்கு முதல்ல ப்ளஸ்டூவை பாஸ் பண்ணியிருக்கனும்டா வெண்ணை - மைண்ட் வாய்ஸ்

---------------------------------------

நம்ம நக்கீரன் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்காரர்


-----------------------------------------

மூன்று நாட்களுக்கு முன்பு ஐசிஐசிஐ வங்கியில் ஒருவருக்கு பணம் கட்ட வேலையின் நடுவே சென்றிருந்தேன். உடனடியாக திரும்ப வேண்டிய சூழ்நிலை. பணம் கட்ட காத்திருந்தவர்கள் நாலுபேர், கவுண்ட்டர்கள் 7 ஆனாலும் அரைமணிநேரம் வரை என் நம்பர் வரவேயில்லை.

உள்ளே எட்டிப் பார்த்தால் கேஷியர் செல்போனில் யாரிடமோ பேசிக் கொண்டு இருந்தார். வேலைநேரத்தில் செல்போன் வேறு வெளங்கிடும் என நினைத்துத் கொண்டேன். ஒரு வழியாக என் நம்பர் வந்ததும் பணம் கட்ட செலானை கொடுத்தேன்.

அந்த இந்திக்கார அம்மிணி என்னிடம் பேங்க் அக்கவுண்ட் ஒப்பன் செய்யச் சொல்லி கவுன்சிலிங் செய்து கொண்டே பணத்தை பெற்றுக் கொண்டு கவுண்ட்டர் செலானை கொடுத்தது.

என் அவசரத்திற்கு வேகவேகமாக வந்து வண்டியை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். தெரு தாண்டுவதற்குள் போன் வந்தது. அழைத்தது அந்த பேங்க் அம்மிணி. தவறு நடந்து விட்டது உடனே வங்கிக்கு வரவும் என்று சொன்னார்.

கடுப்புடன் திரும்பி வங்கிக்கு சென்றால் அந்த அம்மிணி என்னுடன் பேசிக் கொண்டே அக்கவுண்ட் நம்பரை தவறுதலாக அடித்து விட்டு இருக்கிறார். வேறொருவருக்கு பணம் சென்று விட்டது.

மேலாளருக்கு தகவல் தெரிவித்து டெபிட் ஸ்டேட்மெண்ட், கிரெடிட் ஸ்டேட்மெண்ட் எல்லாம் போட்டு அடுத்தவன் அக்கவுண்ட்டிலிருந்து பணத்தை எடுத்து என் நண்பன் அக்கவுண்ட்க்கு கட்டி முடிப்பதற்குள் கூடுதலாக அரைமணிநேரம் கடந்திருந்தது.

# எனக்கு மட்டும் ஏண்டா இந்த மாதிரியே நடக்குது. என்னவோ போடா மாதவா.

ஆரூர் மூனா செந்தில்

Sunday, July 14, 2013

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

சென்னையில் புதிதாக துவங்கியுள்ள ரெடிமேட் ஆடைகள் ஹோல்சேல் விற்பனை நிறுவனத்திற்கு மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் தேவை.

டிகிரி முடித்திருந்து முன்அனுபவம் இல்லாமல் இருந்தாலும் ஆர்வமுள்ளவர்களுக்கு

சம்பளம் : விற்பனையில் இரண்டு சதவீதம்

MBA (Marketing) முடித்து இத்துறையில் முன்அனுபவம் உள்ளவர்களுக்கு

சம்பளம் : விற்பனையில் மூன்று சதவீதம்

----------------------------------------------------

MBA முடித்தவர்கள் சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வேலைக்குத் ததேவை

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

தினம் இருவேளை உணவு இலவசம்

-------------------------------------------------

BE (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


-------------------------------------------------

MBA Accounts முடித்தவர்கள் பெண் அக்கவுண்ட்டன்ட் வேலைக்கு தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------


MBA டிகிரி முடித்தவர்கள் Food Packing வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


------------------------------------------------------


BE Mech or EEE முடித்தவர்கள் Autocadல் அனுபவமுள்ளவர்கள் தேவை

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Tuesday, July 9, 2013

பிலாசபி பிரபாவை காப்பியடிக்கனும் - ஒரு சுய சொறிதல் புராணம்

இன்று பிரபாவின் கஜூரா பதிவைப் படித்தேன். இது வரை நான் படித்த பிரபாவின் பதிவுகளிலேயே மிகப் பிரமாதமான உவமையுடன் கூட எழுத்து நடையை இதில் தான் கண்டேன். என்ன ஒரு வாசிப்பனுபவம் (நன்றி : லக்கி). நான் உன்னிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது பிரபா.

அந்த பதிவின் லிங்க் : ஒரு மழைநேர மாலைப்பொழுதும் சில கஜுராக்களும்


எல்லோரும் ஆசைகள் உண்டு. அதை நோக்கிய பயணம் எப்படி அமைகிறதோ அதற்கேற்றாற் போல் தான் வெற்றியும் அமைவதுண்டு. எனக்கு கட்டுரைகள், கதைகளை படிக்க ஆசை இருந்தாலும் சிறு வயதுகளில் இது போல் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதே இல்லை.

எழுத்து என்பதோ இணையம் என்பதோ எனக்கான துறை இல்லை. நான் பதிவின் பக்கம் வருவதற்கு முன்பு யாரும் என்னிடம் இதைப் பற்றி சொல்லியதுமில்லை, வழிகாட்டியதுமில்லை. ஒரு நாள் தற்செயலாக ஒரு தமிழ்ப் பதிவை படிக்க நேர்ந்து அதன் மூலம் நூல் பிடித்து பல பதிவுகளுக்கு சென்று பிறகு படிப்படியாகத்தான் என் பக்கத்தை துவக்கினேன்.

அப்படியும் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டதும் இல்லை. எதாவது போட்டோ அல்லது அரசியல் கார்டூன்களை போட்டு எனக்கும் ஒரு இணையப் பக்கம் என்று சந்தோஷப் பட்டுக் கொள்வேன். ஆனால் அதை படிக்கச் சொல்ல எனக்கு இணையம் தெரிந்த நண்பர்களே கிடையாது.

இன்று வரை என் கல்லூரி நண்பர்கள் யாருக்குமே இணையம் பக்கம் வரும் பழக்கம் கிடையாது. ரொம்ப சிரமப்பட்டுத்தான் நண்பர்களுக்கு புரியவைக்க வேண்டும். அவ்வளவு சிரமப்பட்டு சொன்னதும் அடப்போடா ஒன்னும் விளங்கலை என்று எழுந்து போய் விடுவார்கள்.

பிறகு ஒரு நாள் பிரபாவின் நட்பு கிடைத்து அதன் மூலம் மற்றவர்கள் நட்பும் கிடைத்தது தான் எனக்கான கதவை திறந்து விட்டது. எப்படி எழுத வேண்டும், எதை செய்யக் கூடாது என்றெல்லாம் கூட அதன் பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

முக்கியமாக மற்றொரு பக்கத்தில் இருந்து கட்டுரைகளை சுட்டு நமது பதிவில் போடக் கூடாது என்பதே அதன் பிறகு தான் புரிந்தது. படிப்படியாக ஒரு பாரா, இரண்டு பாரா என எழுத கற்றுக் கொண்டேன். இன்று சரளமாக ஒரு பக்கத்திற்கும் மேலாக பதிவெழுத முடியும்.

என்னுடைய எழுத்தில் இருக்கும் குறை என நான் நினைப்பது எழுத்து நடை படுராவாக இருக்கும். எழுத்தாளருக்குரிய ஒழுங்கு அதில் இருக்காது. அதை சரி செய்ய முயற்சிக்கலாம் என்று நினைப்பேன், ஆனால் இப்ப வரை அது எனக்கு கை கூடவே இல்லை.

நாவல்கள் கட்டுரைகள் எழுதும் பதிவர்களோ, பத்திரிக்கைத் துறையில் இருக்கும் பதிவர்களோ, சினிமாவில் இருக்கும் பதிவர்களோ இந்த மாதிரி பதிவை எழுதியிருந்தால் படித்து விட்டு எழுத்தாளர்கள் எழுதியது இது என்று பெருமூச்சு விட்டு சென்றிருப்பேன்.

ஆனால் என் நண்பன் மிக இயல்பாக மிகச்சிறந்த எழுத்தாளருக்கு உரிய உவமை நடையுடன் எழுதியிருந்த இந்த கட்டுரை என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. பிரபாவிடமும் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது என புரிந்து கொண்டேன். நானும் காப்பியடிப்பேன். அப்படியே கட்டுரையை அல்ல. இது போன்ற எழுத்து நடையை.

பல மாதங்கள் என்னால் இப்படி எழுதப்படும் கட்டுரைகள் படு மொக்கையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் பழகப் பழக ஒரு நாள் எழுத்தும் வசப்படும் என்று நம்புகிறேன். அதற்கான பயிற்சியை துவங்கவும் போகிறேன். படிக்கிறவங்க தான் பாவம்.

ஒவ்வொரு பதிவரிடம் இருந்தும் கற்றுக் கொள்ள நிறையவே விஷயங்கள் இருக்கின்றன. கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு.

வாழ்த்துக்கள் பிரபா

ஆரூர் மூனா செந்தில்

Monday, July 8, 2013

ஓவராக உணர்ச்சி வசப்படுதல் பொறுப்பானவனுக்கான இலக்கணமா

எந்த ஒரு செயலுக்கும் நம்முடைய ரியாக்சனை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் போல. இல்லாவிட்டால் நாம் அந்த இடத்தில் கோமாளியாகி விடுகிறோம். சினிமாவில் கூட இது போல் ஓவர் ரியாக்சன் கொடுத்தால் தான் மக்கள் மதிக்கிறார்கள்.


வீட்டில் உள்ளவர்களுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் அவர்களை பார்க்க நாம் மருத்துவமனைக்கு போனதும் சென்ற வாகனத்தை அது சைக்கினாக இருந்தாலும் சரி பைக்காக இருந்தாலும் சரி நிறுத்தாமல் அப்படியே கீழே போட்டு விட்டுத்தான் போக வேண்டும்.

நிதானமாக பைக்கை ஸ்டாண்டில் விட்டு சென்றால் பொறுப்பில்லாதவன் என்று சொல்கிறார்கள். நானும் நிஜ வாழ்க்கையில் பார்த்து விட்டேன், யாருமே இது போல் செய்வதே இல்லை. பின்னே ஏன் இப்படி.

ஏதாவது பாத்திரத்தை கையில் வைத்திருக்கும் போது அதிர்ச்சியான விஷயத்தை சொன்னால் உடனடியாக அதனை கீழே போட்டு உடைக்க வேண்டும். என் வீட்டில் பார்த்து விட்டேன், இது போல் நான் சொன்னால் பாத்திரங்கள் என் தலையில் தான் விழுகிறது. தவறிக்கூட கீழே விழ மாட்டேங்கிறது.


நானெல்லாம் பைக்கில் செல்லும் போது விழுந்து பெரும் சிராய்ப்புகள் ஏற்பட்டால் கூட எழுந்து சத்தம் போடாமல் கீழே கிடந்த பைக்கை எடுத்து சென்று விடுவேன். வீட்டம்மாவுக்கு காய்கறி வெட்டும் போது கையில் சிறுகாயம் ஏற்பட்டால் உடனடியாக நான் கடைக்கு சென்று பேண்ட்எய்டு வாங்கி வந்து கையில் போட்டு விட்டு ஆறுதல் சொல்ல வேண்டும்.

கையில் ஏற்பட்டது சிறுகாயம் தான் போல என்று சற்று அசால்ட்டாக கம்ப்யூட்டரில் உட்கார்ந்து இருந்தால் ரெண்டு நாளைக்கு சோறு கிடைக்க மாட்டேங்கிறது. நமக்கு போலியாக வருத்தப்படுவது போல் நடிப்பது வரமாட்டேங்குது என்ன செய்ய.

டிவியில் நண்பர்களுடனோ அல்லது குடும்பத்தினருடனோ அமர்ந்து நகைச்சுவை காட்சிகள் பார்க்கும் போது அந்த காட்சி ஏற்கனவே பார்த்திருந்தால் மறுமுறை பார்க்கும் போது அவ்வளவு சிரிப்பு வராது. அதை கவனித்தவர்கள் நம்மளை பார்த்து உம்மனாம்மூஞ்சி என்கிறார்கள். இதற்காகவே பார்மாலிட்டிக்கு பழைய ஜோக்குக்கெல்லாம் விழுந்து விழுந்து சிரிக்க வேண்டியிருக்கிறது.


சரக்கடிக்கும் போது கூட சலம்பும் பழக்கம் எல்லாம் நமக்கு கிடையாது. எவ்வளவு அடிச்சாலும் நார்மலாகத்தான் பேசிக் கொண்டு இருப்பேன். இதை கவனித்த நண்பர்கள் இவன் மொடாக் குடிகாரன் அதனால் தான் இவ்வளவு குடித்தும் ஏறவில்லை என்று கிண்டல் செய்கிறார்கள். இவர்களுக்காகவே கொஞ்சம் குடித்தவுடனே பார்மாலிட்டிக்கு சலம்புவது போல் நடிக்க வேண்டியிருக்கிறது.

அதற்காக உணர்வே கிடையாது என்று அர்த்தமல்ல. பெரிய காயம் பட்டிருந்தால் உண்மையில் துடிக்கத் தான் செய்வேன். ஒரு ஜோக்கை முதல் முறை பார்த்தால் வாய் விட்டு சிரிக்கத் தான் செய்வேன். அளவுக்கு மீறி குடித்தால் சலம்பவே செய்வேன். ஆனால் அது இயல்பாக நடக்க வேண்டும்.

மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக வராத சிரிப்பை வா வா என்று சொன்னால் அதுவும் என்ன தான் செய்யும். உலகமே ஒரு நாடக மேடை என்று அண்ணா சும்மாவா சொன்னார்.

ப்ளஸ் டூ பரிட்சை ரிசல்ட் வந்த போது எல்லோரும் நம்பரை பார்த்து விட்டு ஓவராக ரியாக்சன் செய்து கொண்டு இருந்தார்கள். நான் பெயில். ரிசல்ட் பார்த்ததும் எதுவும் ரியாக்சன் காட்டாமல் கிரவுண்டுக்கு போய் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தேன்.

தனியாக பேப்பரை வாங்கிப் பார்த்த என் அப்பா நான் வீட்டில் காணவில்லை என்றதும் ஏதோ தவறாக செய்து விடுவேன் என்று நினைத்துக் கொண்டு அம்மா மற்றும் பாட்டியை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் ஊர் முழுக்கச் சுற்றி என்னை சமாதானப்படுத்த தேடிக் கொண்டு இருந்தார்.

சில மணிநேரம் கழித்து கவலையுடன் கிரவுண்டுக்கு வந்து பார்த்தால் நானோ கூலாக கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்ததை பார்த்ததும் கோவம் வந்து ஸ்டம்ப்பை புடுங்கி அடிக்க ஆரம்பித்து விட்டார்.

ரிசல்ட் வந்ததும் பேசாம வீட்டுக்கு போய் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தா வீட்ல இருக்கிறவங்க பயந்து நம்மளை எதுவும் கேக்காம இருந்திருப்பாங்க போல, அட விடுன்னு அசால்ட்டா எடுத்துக்கிட்டு கிரிக்கெட் விளையாடியது எனக்கு பெரிய ஆப்பா அமைஞ்சது.

எங்கப்பா இனி இவன் திருவாரூர்ல இருந்தா வெளங்கமாட்டான்னு சென்னைக்கு பேக் பண்ணிட்டாரு. இல்லைன்னா இந்நேரம் நான் திருவாரூர்ல ஏதாவது அரசியல் கட்சில கவுன்சிலரா இருந்து மக்கள்கிட்ட வசூல் பண்ணிக்கிட்டு இருந்திருப்பேன்.

ஆரூர் மூனா செந்தில்
 

Friday, July 5, 2013

சிங்கம் 2 - சினிமா விமர்சனம்

படத்தின் டிரைலரை பார்க்கும் போதே சற்று வயித்தை கலக்கியது. ஓவர் டோஸாகி பாக்கிறவன்லாம் தெறிச்சி ஓடப்போறான்னு நினைச்சேன். இதுல சூர்யா வேற வாங்கலேன்னு மிரட்டி கூப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.


மற்ற எல்லாத் திரையரங்கங்களிலும் முன்பதிவு ஆரம்பித்து இருக்க நேற்று மாலை 6 மணிவரை ஏஜிஎஸ்ஸில் முன்பதிவு ஆரம்பிக்கவில்லை. படம் போடலையோன்னு நினைச்சேன். 7 மணி வாக்கில தான் முன்பதிவு துவங்கியது. முதல் காட்சி 6 மணிக்கு என்றதும் ஆன்லைனில் முன்பதிவு செய்து விட்டேன். இருந்தாலும் சற்று பயமாகத் தான் இருந்தது.

காலையில் அரக்கப்பரக்க எழுந்து சென்றால் ஏஜிஎஸ்ஸில் உள்ள 5 திரையரங்கங்களிலும் காலை 6 மணிக்காட்சி இருந்ததால் 5.30 மணிக்கெல்லாம் தியேட்டரில் திருவிழாக் கூட்டம் தான்.


படத்திற்கு போவதற்கு முன் நான் என் மனதை ஒரு விஷயத்தில் நிறுத்திக் கொண்டேன். படம் பக்கா மசாலா தான். அதனால் லாஜிக், இப்படியெல்லாம் சாத்தியமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. சி கிளாஸ் ரசிகன் போல் படத்தை பார்த்து ரசித்து கைதட்டி விசிலடித்து என்ஜாய் செய்ய வேண்டும் என முடிவு செய்து தான் இருக்கையில் அமர்ந்தேன்.

படத்தின் கதை என்ன அப்படியே சிங்கம் முதல் பாகத்தின் தொடர்ச்சி தான். துரைசிங்கம் போலீஸ் வேலையை விட்டு தூத்துக்குடிக்கு வருவார் இல்லையா. அப்படி வந்தவர் ஒரு பள்ளியில் என்சிசி ஆபீசராக வேலைக்கு சேர்கிறார்.


அப்படி இருந்தவாறே தூத்துக்குடியில் நடக்கும் கடத்தல்களை கண்காணிக்கிறார். யார் யார் இதில் ஈடுபட்டுள்ளார்கள் என லிஸ்ட் எடுக்கிறார். போலீஸ் வேலையை விட்டதால் கோவமான அப்பா ராதாரவி சூர்யா அனுஷ்கா திருமணத்தை நிறுத்தி விடுகிறார்.

சூர்யா வேலை பார்க்கும் பள்ளியில் ஹன்சிகா படிக்கிறார் (இந்தக் கொடுமையை எங்கப் போய் சொல்றது). பள்ளியில் வந்து சண்டை போடும் ரவுடியை போட்டு சூர்யா பொளப்பதை பார்க்கும் ஹன்சிகாவுக்கு சூர்யா மேல் காதல் வந்து விடுகிறது.

ஒரு கட்டத்தில் டிஎஸ்பியாக பொறுப்பேற்கிறார். ஹன்சிகாவின் சித்தப்பா ரகுமான். அவரின் அடுத்த நிலை குட்டி டானாக முகேஷ் ரிஷி (நம்ம வாசிம்கான் தான்). அவரின் கையாள் சகாயமாக நான் கடவுள் வில்லன் ராஜேந்திரன். இவர்களுக்கு பிரவுன் சுகர் சப்ளை பண்ணும் இன்டர்நேசனல் டான் டேனி.


இவர்களை எதிர்த்து சிங்கம் ஆடும் ஆட்டமே இந்த இரண்டாம் பாகம். இதிலும் கடைசி வரை அனுஷ்காவை திருமணம் செய்யவில்லை. அப்படினா மூன்றாம் பாகம் கூட வர சாத்தியக்கூறுகள் இருக்கு. (நம்ம கெரகம் அப்படி இருந்தா என்ன பண்ண முடியும்)

சூர்யா வழக்கம் போலவே முழு உழைப்பை போட்டு நடித்திருக்கிறார். முதல் ஒரு மணிநேரம் சந்தானத்துடன் காமெடியில் சேர்ந்து கலக்குகிறார். தூத்துக்குடியின் டிஎஸ்பியாக பொறுப்பேற்றதும் பரபரப்பாகும் அவர் நம்மையும் கக்கத்தில் வைத்துக் கொண்டு வில்லன்களை வேட்டையாடுகிறார்.

அனுஷ்காவை விட ஹன்சிகாவுக்கு அதிக நேரம் வரும் வாய்ப்பு. பள்ளி மாணவி என்னும் போதுதான் சற்று ஜெர்க்காகிறது. இவ்வளவு மொழு மொழு பள்ளி மாணவியை நான் பார்த்ததே இல்லை. ஒரு தலையாக காதலித்து பிறகு சூர்யாவுக்கு உதவும் கதாபாத்திரம் ஹன்சிகாவுக்கு.

அனுஷ்கா தான் ஜோடி. இரண்டு பாடல்களுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். சில காட்சிகள் வருகிறார். அவ்வளவு தான். சற்று முத்தி போன மாதிரி தெரிகிறார். பல இடங்களில் சூர்யாவின் உயரத்திற்கு ஈடுகொடுத்து குனிந்து குனிந்து ஆடுகிறார்.

படத்தின் முதல் ஒரு மணிநேரத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அதன் பிறகு பரபரப்பான காட்சிகளின் இறுக்கத்தை குறைக்கும் வேலையையும் செவ்வனே செய்கிறார். சந்தானம் தான் படத்தின் கலகலப்புக்கு ஆதாரம்.

முகேஷ் ரிஷியை பித்தளை குழாய் மூக்கன் என்று கலாய்க்கும் போது தியேட்டர் குலுங்கி சிரிக்கிறது. தப்பு செய்து விட்டு மன்னிப்புக் கேட்கும் ஒவ்வொரு முறையும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே என்று மண்டியிட்டு பேண்ட்டை கழட்டும் போது தியேட்டர் அதிர்கிறது.

கடைசியில் கிரேன் மனோகரைப் பார்த்து டபுள் மீனிங்கில் கப்பல் தரை தட்டிருச்சி என்று கலாய்க்கும் போது அர்த்தம் புரிந்தவர்கள் குலுங்கி குலுங்கி சிரிக்கிறார்கள். அறிமுகமாகும் காட்சியில் எந்திரன் ரஜினியையும் இடைவேளைக்கு பிறகு விஸ்வரூபம் கமலையும் இமிட்டேட் செய்து கலாய்க்கிறார்.

முதல் பாகத்தின் கன்டினியுட்டிக்காக விவேக் இந்த படத்திலும் இருக்கிறார். சில காட்சிகளில் அவரும் சிரிக்க வைக்கிறார். பல இடங்களில் முயற்சிக்கிறார். நமக்குத் தான் வரவில்லை.

வில்லன்கள் போடும் திட்டமும் அதனை அறிந்து சாமர்த்தியமாக எதிர் திட்டம் தீட்டி சூர்யா சமாளிப்பதும் தான் படத்தின் விறுவிறுப்புக்கு மூலகாரணம். பெண்ணை கடத்தும் காட்சியில் அதனை சரியாக திட்டமிட்டு சரிப்படுத்தும் காட்சியில் துவங்கும் விறுவிறுப்பு கொஞ்சம் கூட குறையாமல் இறுதி வரை செல்கிறது. அது தான் படத்தின் வெற்றிக்கு காரணமாக இருக்கப் போகிறது.

படம் பார்த்த விமர்சகர்கள், சில பதிவர்கள் படத்தினைப் பற்றி ஆயிரம் குற்றம் குறை சொன்னாலும் அதனைப் பற்றி சினிமா ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். என்னைப் போன்ற சி கிளாஸ் ரசிகர்கள் விசிலடித்து ரசிக்கும் படி செய்திருக்கிறார்கள், அது தான் இந்த படத்தின் பெரு வெற்றிக்கு அடித்தளம்.

லாஜிக் பார்த்து குற்றங்கள் கண்டுபிடிக்கும் மேல்தட்டு ரசிகர்களுக்கான படம் இது இல்லை. மற்றபடி மசாலா சினிமா ரசிகர்களுக்கு இந்த படம் சரியான விருந்து

ஆரூர் மூனா செந்தில்


Thursday, July 4, 2013

சாதியின் பெயரால் இன்னொரு உயிரை இழக்க வேண்டாம்

சாதி வெறிபுடிச்ச திருட்டு தே..... பயலுவளா, அநியாயமா வாழ வேண்டிய ஒரு வாலிபனின் உயிரையும் அவன் காதலையும் பறிச்சிட்டீங்களே. உங்களையெல்லாம் சாணிய கரைச்சி செருப்பால் அடிச்சாலும் தப்பில்லடா.

இனிமே இணையத்துல வன்னியன், தேவன், கவுண்டன், நாடார்னு எவனாவது வந்தான். .....ம்மால உனக்கு முதல் செருப்படி என்னிடமிருந்துதான். சாதி, மதவெறி புடிச்ச மொண்ண நாய்களா ப்ப்பீத்துண்ண போங்கடா.


இளவரசன் மரணம் குறித்த செய்தியைப் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உடனடி உணர்வின் காரணமாக முகநூலில் பகிர்ந்தது இது.

இப்பொழுது விலாவரியாக யோசித்துப் பார்க்கிறேன். இந்த சம்பவங்களுக்கு நாமும் ஒரு வகையில் காரணம். எல்லோருக்கும் ஒரு விதத்தில் சாதிக்காரன் என்ற எண்ணம் ஏதோ ஒரு சமயத்தில் ஏற்படுவதுண்டு. எனக்கு கூட சில சம்பவங்களில் இது போல் ஏற்பட்டு இருக்கிறது.

நான் இதற்கு முன்பு பணிபுரிந்த நிறுவனத்தில் வேலைக்கு வரும் விண்ணப்பங்களில் எனது சாதி இருந்தால் அதற்கு நான் முன்னுரிமை கொடுத்து இருக்கிறேன். வெளி மாநிலங்களில் ஏதாவது ஓரு தமிழரை சந்திக்க நேரும் போது அவரை எந்த மாவட்டத்துக்காரர் என்று விசாரிக்கும் போது அவர் தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம் தேனி என அறிய நேர்ந்தால் நீங்கள் இந்த சாதிக்காரரா என வினவுவதுண்டு.

இன்று அதெல்லாம் யோசித்துப் பார்த்தால் எனக்கே என்னை அசிங்கமாக தெரிகிறது. நல்லவேளை என் சாதிப்பற்று அத்துடன் முடிந்து விட்டது.

நான் காதல் திருமணம் செய்தவன். என் மனைவி என் சாதியோ, என் மொழியோ, என் மாநிலமோ கிடையாது. எந்த சூழ்நிலையிலும் சாதி முன்னுக்கு வரவேயில்லை. என் அப்பாவும் அம்மாவும் கூட எங்கள் காதலை அங்கீகரித்து முன்னின்று பத்துபைசா வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்து வைத்தார்கள்.

என் தம்பி கூட அப்படித்தான் திருமணம் செய்துக் கொண்டான். இதற்கே அவனை நினைத்து எனக்கு பெருமிதம் தான்.

சாதி மறுப்பு வேண்டும் என்று கூறும் நபர்கள் முதலில் தங்களை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எந்த புரட்சியும் முதலில் தன்னிடம் இருந்து தான் துவங்க வேண்டும். இங்கு ஊடகங்களில் முன்னிறுத்தப்படும் சாதி அரசியலில் ஒரு ஆதாயம் மட்டுமே காரணமாக இருக்கிறது.

போதுமடா, இளவரசனின் மரணத்திற்கு பிறகாவது பொதுவில் சாதி அரசியல் பேசப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன் சாதியும் மதமும் மண்டியிட்டு தான் இருக்க வேண்டும்.

சாதி, மதம் சார்ந்த எந்த இயக்கத்திற்கும் கட்சிக்கும் நாம் ஆதரவளிக்கக்கூடாது. எந்த கடவுளும் மனிதனுக்கு மிஞ்சியது கிடையாது. படித்தவர்கள் ஆகிய நாம் தான் பகுத்தறிந்து இது போன்ற விஷக்கிருமிகளை புறக்கணிக்க வேண்டும்.

இவர்கள் கட்சியும் இயக்கமும் நடத்துவது அவர்கள் வளரத்தானே தவிர நமக்கு பிரயோஜனமாக எதுவும் செய்வதற்கு இல்லை. என்றுமே நான் அரசியல் பதிவுகள் எழுதுவது இல்லை. இல்லை ஆனால் இது போன்ற சம்பவங்கள் தான் எழுத தூண்டுகின்றன.

என் சாதியையும் என் மதத்தையும் நான் துறந்து விட்டேன். இனிவரும் காலங்களிலும் என் சந்ததிகள் எந்த சூழ்நிலையிலும் சாதி சார்ந்து இருக்க மாட்டார்கள். நான் துவங்கி விட்டேன். எனக்கு பிறகு என் தம்பியும் கூட.

நீங்கள் எப்போது துவங்கப் போகிறீர்கள் மனிதர்களே.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, July 2, 2013

பஞ்சேந்திரியா - ஸ்டார் ப்ளஸ்ஸில் அசத்தும் தமிழ் மாணவர்கள்

சென்ற வாரம் ஸ்டார் ப்ளஸ்ஸில் இந்தியா டான்சிங் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சி பார்த்தேன். இந்தப் போட்டியில் சென்னையிலிருந்து லயோலா ட்ரீம் டீம் என்ற அணி கலந்து கொண்டு உள்ளது. இருப்பதிலேயே மிகுந்த திறமையை கொண்டுள்ளது இந்த அணி தான்.

தமிழ் பசங்க என்று தெரிந்ததும் யூடியூபில் அவர்களின் பழைய நடனங்களையும் பார்த்தேன். பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் நிகழ்ச்சியோ இந்தியில் நடப்பது, நம்ம ஊர் பசங்க இந்தி தெரியாததால் நடுவர்களிடம் முழு மதிப்பெண் எடுத்தாலும் வாசகர்களிடம் ஓட்டு எடுக்க சிரமப்படுகிறார்கள்.

சுமாராக நடனமாடுபவர்கள் கூட இந்திக்காரர்கள் என்பதால் முதல் இடத்திற்கு சாதாரணமாக வருகிறார்கள். நேற்று நிகழ்ச்சியில் இவர்கள் நாங்கள் சென்னையிலிருந்து வந்திருக்கிறோம். நாங்களும் இந்தியர்களே, எங்களுக்கு ஓட்டு போடுங்க என்று கேட்கும் போது மிகுந்த வருத்தமாக இருந்தது.

தமிழ் நண்பர்களே, ஒரு முறை India Dancing Superstar Loyola Dream Team என்று கூகிளில் தேடி அவர்களின் நடனங்களை பாருங்கள். நான் சொல்வது சரியாக இருந்தால் அவர்களுக்கு ஒட்டுப் போட்டு ஜெயிக்க வையுங்கள். போட்டிக்காக வடக்கே சென்று மொழி தெரியாமல் சிரமப்படும் திறமை உள்ள நம் சகோதரர்களை ஜெயிக்க வையுங்கள்.

---------------------------------------------------

நம்ம மதுரை நா. மணிவண்ணன் தான்


----------------------------------------

நேற்று மாலை நான்கு மணியளவில் ஒரு அவசர தேவையாக பணம் தேவைப்பட்டது. திருவாரூரிலிருந்து பணம் அனுப்பச் சொன்னால் 5 மணி வரை திருவாரூரில் திறந்திருக்கும் ஒரே வங்கி ஐசிஐசிஐ தான்.

என்னிடமோ எஸ்பிஐ, இந்தியன் வங்கி மற்றும் யுபிஐயில் மட்டுமே அக்கவுண்ட் இருந்தது. சென்னையில் யாரிடமாவது அதில் அக்கவுண்ட் இருந்தால் அக்கவுண்ட் நம்பர் கொடு. அனுப்பி வைக்கிறேன் என தம்பி சொன்னான். நானும் பள்ளி நண்பர்கள், கல்லூரி நண்பர்கள், உடன்பணிபுரிபவர்கள், பதிவுலக நண்பர்கள், தெரிந்த வங்கி அதிகாரிகள், ஆடிட்டர்கள் என குறைந்தது 100 பேருக்கு மேல் போன் பண்ணி கேட்டிருப்பேன்.

அவர்கள் எல்லோருமே தன்னிடம் ஐசிஐசிஐயில் அக்கவுண்ட் இல்லையென்றும் அவர்களின் நண்பர்களிடம் கேட்டுச் சொல்வதாகவும் சொன்னார்கள். அவர்கள் பங்குக்கு பலரிடமும் கேட்டுப் பார்த்தார்கள். சொல்லி வைத்தார் போல யாருமே ஐசிஐசிஐயில் அக்கவுண்ட் வைத்திருக்கவில்லை, வைத்திருந்தவர்களும் மூடி விட்டார்களாம். என்ன நடக்குது இங்க.

------------------------------------------------------

ஒன்னும் சொல்றதுக்கு இல்லை


-------------------------------------------

என்னுடன் பணிபுரிந்து கொண்டிருந்தவர்களில் இருவர் ராஜேந்திரன் மற்றும் செல்வராஜ். ராஜேந்திரன் மே மாதம் ஒய்வு பெற இருந்தவர், செல்வராஜ் அடுத்த மாதம். நான் வேலைக்கு சேர்ந்த இந்த இரண்டு வருட காலங்களில் இருவரின் நட்பு கலாட்டாக்கள் பயங்கர சிரிப்பாக இருக்கும்.

இருவரும் 30 வருடங்களுக்கு மேலாக ஒன்றாக வேலை செய்து கொண்டு இருப்பவர்கள். செக்ஸைப் பற்றி பச்சைப் பச்சையாக இருவரும் விமர்சனம் செய்து கொண்டு இருப்பார்கள். பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் இவர்களின் காமெடியினால் சிரித்துக் கொண்டே வேலைப் பார்ப்பார்கள்.

வேலைப்பளுவே தெரியாது. யாருக்காவது உடல்நலம் சரியில்லாமல் போனால் அடிக்கடி நீ எப்படியும் சாகப் போற உன் வேலை உன் புள்ளைக்குத்தான் என்று மாற்றி மாற்றி கிண்டல் செய்து கொள்வார்கள்.

மே மாதம் ராஜேந்திரன் ஒய்வு பெற இருந்ததால் 28ம்தேதி அன்று பிரிவு உபசார விழாவுக்காக பிரியாணி ஏற்பாடு செய்து இருந்தார். சரக்கு கூட வந்து இறங்கி விட்டது. 28ம் தேதி காலை வேலைக்கு வரும் போது சென்ட்ரலில் நடந்த ரயில் விபத்தில் இறந்து விட்டார்.

ராஜேந்திரன் இறந்த நாள் முதல் செல்வராஜ் மிகவும் சோகமடைந்து விட்டார். ஜூன் 22ல் செல்வராஜூம் உடல்நலக் குறைவால் இறந்து விட்டார். ஒரு மாதத்திற்குள் எங்கள் குழுவில் இருவர் மரணமடைந்தது மிகுந்த வருத்தத்திற்குரிய விஷயம்.

அவர்கள் கிண்டல் செய்தது போல் அவர்கள் பிள்ளைகளுக்கு ரயில்வே வேலை கிடைத்து விடும். அதனை பார்க்கத்தான் அவர்கள் இல்லை.

ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...