சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, March 24, 2011

பாவம்யா இந்த வேட்பாளருங்க


ஆரூர் முனா செந்திலு

Wednesday, March 23, 2011

சபலப்பட்ட நாட்கள் - அம்பிகாவை . . .

முத்தம்மாவை செய்த கணக்கு
அது புதுகோட்டை மாவட்டம் கறம்பக்குடி எனது பெரியம்மா வீடு. நான் கோடை விடுமுறைக்காக செல்லும் வீடு. அங்கு என்னுடன் வயதையொத்த என் பெரியம்மா வீட்டின் பக்கத்து வீட்டு பையன் முத்துவீறு. நான் எப்பொழுதும் கறம்பக்குடி சென்றால் முத்துவீறுவுடன் தான் பொழுதைக்கழிப்பேன். அங்குள்ள கருப்பையா சுவாமி கோயில் திருவிழா மிகப்பிரசித்தம். சிறு வயதில் அங்கு கலர்கலராக கோபுரம் போல் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இனிப்பு வகைகள் பார்க்கவே மிகப்பிரமாதமாக இருக்கும். அதை இரண்டு ரூபாய்க்கு வாங்கி இரவு முழுவதும் வள்ளித்திருமணம் நாடகத்தை பார்த்துக்கொண்டே தின்போம். பிறகு அங்கிருக்கும் குளத்தில் குளிப்பது. வயலில் ஓணான் பிடித்து அதன் வாயிலில் நாராயணன் கடையில் வாங்கிய சுருட்டை பற்ற வைத்து அதன் வாயில் சொருகி அதை மயக்கமுற செய்வது என அங்கிருக்கும் நாட்களில் நாங்கள் செய்த சேட்டைகள் ஏராளம். அப்பொழுது எனக்கு வயது 19. அவனுக்கும் தான். நாங்கள் அருகில் இருக்கும் கிராமத்தில் கரகாட்டம் நடைபெறுவதால் அங்கு செல்லலாம் என்று முடிவு செய்து என் பெரியம்மாவிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொண்டு அந்த ஊருக்கு சென்ற மாட்டு வண்டியில் தொற்றிக் கொண்டோம்..
அந்த பக்கம் நடைபெறும் கரகாட்டத்தில் கவர்ச்சி மிகத்தாராளமாக வே இருக்கும். அப்பொழுது தான் விடலைப்பருவம் என்பதால் அதைப் போன்ற கரகாட்டகங்ககளை கான்பதர்ர்காகவே செல்வோம்..
அந்த சிற்றூரில் திருவிழா நாங்கள் கரகாட்டத்தை கண்டு ரசித்துக் கொண்டிருந்தோம். அங்கு என் கண்ணில் எதச்சையாக அவள் பட்டாள். பார்க்கவே நமக்கு தலையில் மயிர் நட்டுக்கொண்டது. சரி அவளை உக்ஷார்பத்தினி ரெய்டு (அது சென்னையில் எங்கள் பகுதியில் உள்ள சகேகத வார்த்தை) செய்யலாம் என்று பார்த்து அவளை சரி செய்யலாம் என்று அங்ககிருந்து சிக்னல் பாஸ் செய்தால் அந்த பக்கம் இருந்தும் வந்தது. சரி என்று அருகில் சென்று தயங்கி கொண்டே மிக மெல்லிய குரலில் உன் பெயர் என்ன என்று கேட்டேன். அவள் அம்பிகா என்று கூறினாள். முத்துவீறுவுக்கு இந்த செயல்களை எல்லாம் பார்த்தவுடன் நடுக்கம் ஏற்பட்டது. என்னிடம் வந்து வாடா நாம் வீட்டிற்கு செல்வோம் என்று கூறினான். நான் அவனை சமாதானப்படுத்தினேன். இருடா நாம் அவளை கொஞ்சம் தயார் செய்து இருட்டில் வயல்காட்டிற்கு கொண்டு சென்றால் முதலில் நான், பிறகு நீ என்றேன். முத்துவீறு சபலப்பட்டான் கூடவே பயமும் அவனுக்கு ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக அவனை சமாதானம் செய்து கரகாட்டத்தின் இடையே அவ்வப்பொழுது யாருக்கும் தெரியாமல் அம்பிகாவுக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பது கையால் சைகை செய்வது இடையில் கரகாட்டத்தையும் ரசிப்பது என நள்ளிரவு வரை காத்திருந்தோம்.
கரகாட்டம் முடிந்து அடுத்தது கிளப் டான்ஸ் குழுவின் ஆட்டம் ஆரம்பித்தது. அந்த சமயம் தான் சரி யென்று அம்பிகாவிடம் கிளம்பலாம் என்று சைகை செய்தேன். முத்துவீறுவுக்கு வியர்க்க ஆரம்பித்தது.
அம்பிகா அவளது வீட்டிலிருந்து வந்திருந்தவர்களிடம் தான் ஒதுக்குப்புறம் போய்விட்டு வருவதாக கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளிஏறினாள்.. முத்துவீறுவுக்கு கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அவனை கூட்டிக்கொண்டு நானும் கூட்டத்திலிருந்து வெளியேறினேன். வெளிச்சமெல்லாம் குறைந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு வந்தோம். அவளிடம் வயல்காட்டிற்குள் செல்லலாம் என்று கூறினன். அவள் நன்கு விளைந்திருந்த நெல்வயல்காட்டிற்குள் சுற்றும் முற்றும் பார்த்தபடி நுழைந்தாள். அவளை பின் தொடர்ந்தன். முத்துவீறு என்னை பின்தொடர்ந்தான். அந்த இடத்தில என்னைப்பற்றியும் முத்துவீறுவைப்பற்றியும் கூறிவிட்டு நடுக்கத்துடன் அவளை முத்தமிட்டன். அவளும் என்னை . . . . . . . பிறகு அவளது இடுப்பில் கை வைத்தன்.
ரோட்டில் இருந்து அம்பிகா என்று குரல் வந்தது. நாங்கள் மூவரும் அலறி அடித்துக் கொண்டு ஆளுக்கொரு திசைக்கு ஓடினோம் . அவளது அம்மா அவளை காணும் என்று தேடி வந்திருந்தார்கள். அவள் கரையறினாள். அந்த சமயம் பார்த்து ஆவென்று முத்துவீறு அலறினான். அம்பிகாவின் தாயார் சட்டென்று உக்ஷராகி அவர்களது உறவினர்களை அழைக்க ஆரம்பித்தார். நான் முத்துவீறு குரல் வந்த டேம் நோக்கி நகர்ந்தன். அவன் ஒரு பாம்பை மிதித்து விட்டு அது சீறியதால் அலறியதாக கூறினான். அதற்குள் ரோட்டில் கூட்டம் கூட ஆரம்பித்தது. அந்த அம்மா அம்பிகாவிடம் என்வென்று அடித்து கேட்டார்கள். அவள் நாங்கள் கணக்கு செய்ய துவங்கியதிலிருந்து வயல்காட்டிற்குள் உள்ளதுவரை அழுது கொண்டே கூறினாள். முத்துவீறுவைப்போல் எனக்கும் நடுங்க ஆரம்பித்தது.
அவர்கள் எல்லாம் ரோட்டில் இருந்து டார்ச் லைட் அடித்து தேட ஆரம்பித்தார்கள். நாங்கள் நெல் கதிருக்குள் மண்டியிட்டு அமர்ந்திருந்தோம். நேரம் ஆக ஆக அவர்களும் ரோட்டை விட்டு நகர்வது போல் தெரியவில்லை. நாங்கள் வேறு வழியில்லாமல் நெல் கதிருக்குல்லேயே மண்டி போட்டு செல்ல ஆரம்பித்தோம் . விடியற்காலை வரை நகர்ந்ததில் நாங்கள் கறம்பக்குடி செல்லும் பாதை வரை வந்திருந்தோம் . பிறகு அங்கிருந்து நடந்து வீட்டிற்கு சென்றோம் . இருவருக்கும் கால் முட்டி பாளம் பாளமாக வெடித்திருந்தது. இருவரது வீட்டிலும் என்னவென்று கேட்டார்கள். நாங்கள் ஏற்கனவே பேசி வைத்தது போல் மாட்டு வண்டி குடை சாய்ந்து விட்டதால் அடிபட்டதாக கூறினோம். விடுமுறை முடிந்து நான் எனது ஊரான திருவாரூருக்கு வந்து விட்டேன் .
அடுத்த வருடம், அதேபோல் விடுமுறை, அதே முத்துவீர்று, அதேபோல் திருவிழா ஆனால் வேறொரு சிற்றூர், அதே போல் ஒரு பெண் அவளிடம் சைகைலேயே பெயர் என்னவென்று கேட்டேன் . அவள் முத்தம்மா என்றாள். ‘என்னடா முத்துவீறு ரெடியா’ என்று கேட்டு திரும்பிப் பார்த்தன். அவன் தலைதெறிக்க கறம்பக்குடி நோக்கி ஓடிக்கொண்டிருந்தான்.


ஆரூர் முனா செந்திலு

Tuesday, March 22, 2011

இட்லி வடை சட்னி டிவி எல்லாம் சும்மா தராங்கடோய்

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

நன்றி : தினமணி
ஆரூர் முனா செந்திலு

Saturday, March 19, 2011

நின்று கொண்டே கிரிக்கெட் பார்த்தல்

தொலைக்காட்சிகளின் ஆரம்ப காலங்கள் அவைகள். இராமாயணமும், கிரிக்கெட்டும் தான் தொலைக்காட்சிகள் பெருகி, ஆடம்பர, ஆரம்ப நிலையிலிருந்த தொலைக்காட்சியை பெரும் சந்தைகளுக்கு (mass market )முன்னேற முக்கிய காரணமாய் இருந்தன, என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இது இந்தியாவிற்கு மட்டும் உரித்தானது அல்ல. மேலாண்மை தத்துவத்தின் படி, ஒரு பரப்பின் விளையாட்டு நிகழ்வோ, பெரும் கேளிக்கை நிகழ்வோ அந்தப் பரப்பின் வாங்கும் தன்மையை (buying pattern) பெருமளவு பாதிக்கிற குணத்தை உட்கொண்டிருக்கிறது.அவ்வாறான மாற்றத்தில் உங்களது நிறுவனம் ’அடிக்கிற காற்றில் எவ்வளவு அள்ளிக் கொள்ள முடியுமோ’ அவ்வளவு அள்ளிக் கொள்ளலாம். அது உங்கள் சமர்த்து.
இந்திய தொலைக்காட்சி விற்பனையில் 30%க்கு மேலே தனது ஆதிக்கத்தை செலுத்திக்கொண்டிருக்கும் ஒரு தனியார் தொலைக்காட்சி பெட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் மேலாண்மை குழுவிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, மேலே சொன்ன கருத்து இன்றைய கால கட்டத்திலும் மாறவில்லை என தெரிகிறது.
”கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவிற்கு வருதோ இல்லையோ நம்ம கல்லா பெட்டில காசு பாருப்பா “ ’ ஏதாவது செய். எதுவேணாலும் செய்.. விற்பனை உயர்த்து மவனே’ என்கிற கார்ப்பரேட் உள் அறை கூவலோடு பல நிறுவனங்கள் இதற்காகவே கடந்து இரு வருடங்களுக்கு மேலாக மண்டையை பிய்த்து விற்பனை திட்டம் தீட்டிக் கொண்டிருந்திருக்கிறார்கள். நிறைய கருத்துக் கணிப்பு, சந்தை ஆராய்ச்சி. பிரேசில், இத்தாலியின் புட்பால் விளையாட்டிற்கு பயன்படுத்தப்பட்ட சந்தை சூத்திரங்களை (market strategy) மீள் ஆய்வு செய்து இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஸ் சந்தைக்காக சில உல்டா செய்து நமது சந்தைக்கேற்ப மாறுதலுக்குட்படுத்தியிருக்கிறார்கள்.
அந்த ஆராய்ச்சியில் ஓன்று - கிரிக்கெட் பார்க்கும்போது பார்வையாளரின் பழக்க வழக்கங்களை, உப செயல்களை, உற்று நோக்கல். வீட்டில் உட்கார்ந்து பார்ப்பது, அலுவலக்த்தில் இணைய வழி பார்ப்பது, பயண நேரத்தில் ஸ்கோர் கேட்பது, அடுத்த நாள் மறுபடியும் பார்த்த மேட்சை பற்றிய பத்திகளை மறுபடி மேய்ந்து அசை போடுவது - இப்படி நிறைய விசயங்கள் விவாதிக்கப்படுகிறது.
அந்த ஆய்வு கொடுக்கிற முடிவுகளை சார்ந்து நிறைய விளம்பரங்களையும், துணை சந்தை நடவடிக்கைகளையும் ( sub market activity) மற்ற நிறுவனத்தோடு சில ஓப்பந்தங்களையும், நிறைய பரிசுப் போட்டிகளையும் அறிவித்திருக்கின்றனர் அந்த தொலைக்காட்சி பெட்டி தயாரிப்பாளர்கள்.
அப்படி செய்வதில் எல்லா துணை நடவடிக்கைகளோடும் தொலைக்காட்சி பெயரும் இணைவதில் ”பிராண்ட் ரீகால் “ அதிகமாகி, அதனால் தங்களது தொலைக்காட்சி அதிகமாக வாங்கப்படும் என்பது விற்பனை திட்டம்.
தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் வெண்ணெய், சிப்ஸ், படுக்கை நிறுவனத்திற்கும் என்ன இழவு சம்பந்தம் இருக்க முடியும். ? ஆனால் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்.
எல்லா மூலை முடுக்குகளையும் அலசி ஆராய்ந்த மேலாண்மை மேதாவிகள் ஒரு சின்ன குழுவை மட்டும் மெல்லிதாய் மறந்து விட்டார்கள். அதை சொன்னவுடன் அதிசியத்தார் அந்த நிறுவனர். ஆனால் கார்ப்பரேட்கள் வாங்கும் திறன் உள்ள வாடிக்கையாளனை மட்டும்தான் மனிதர்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளும். மற்றவர்கள் எல்லாரும் வெறும் எண்ணிக்கை தான். அந்த குழு அவர்களின் தொலைக்காட்சி விற்பனையை எந்த விதத்திலும் பாதிக்காது என்பதால் அதைப்பற்றி அவ்வளவாய் கணக்கில் எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் சமாதானம் கூறிக் கொண்டார்.
அந்த குழு - தெருவில் நின்று ஓசியில் டீவி பார்க்கும் குழு. (தெ.நி.ஓ.டீ)
இப்போதும் கிரிக்கெட் பார்வையாளனாய் எனக்கு பிடித்தது அந்த குழு தான். அதன் அங்கத்தினன் நான் என்பதில் மகிழ்ச்சி தான். சிலருக்கு - தோடி ராகம், பில்டர் காப்பி, வடா பாவு, அதரங் சாயி, பையா ஜிலேபி. அதுபோல தெருவில் நின்று டீவி பார்ப்பது.
தெருவில் நின்று ஓசியில் டீவி (தெ.நி.ஒ.டீ) பார்க்கும் குழுவில் நிறைய வர்ணம், வர்க்கம், வயது எல்லாம் கலந்திருக்கும். புதிதாய் வந்து சேர்பவர்களுக்கு ஸ்கோர் சொல்வது ஒரு கர்ம ஞானம் போல நடக்கும். சில சந்தோசங்கள், கெட்ட வார்த்தைகள், அநுமானங்கள், மெல்லியதான எதிர்ப்பார்ப்பு, கடைசியில் ஏதாவது நடந்து எல்லாம் நல்லபடியாகும் என்கிற ஆறுதல் வார்த்தைகள், அறிவுத் தெளிப்பு, நாயக ஆராதனைகள் - எல்லாம் கூட்டுக் கலவையாய் ஈஸ்ட் மென் கலரில் மானுட மனதில் குறுக்கு வெட்டு தோற்றம்.
இரண்டு உலக கோப்பைகள், நிறைய ஸார்ஸா மேட்சுகள், அப்படித்தான் பார்த்தது. தெருவில், கடை வெளியில் நின்று கொண்டே பார்த்தது. வலி மறந்து பார்த்த கணங்கள்.
ஹிரி அண்ணா கடையில் பைனல் மேட்சுகள் பார்க்கக் கூடாது. அது ராசியில்லை. ராவ் ஹோட்டலில் பைனல் எப்போதும் ராசி. டெஸ்ட் மேட்ச் என்றால் கண்டிப்பாய் தோற்காது. என்ன, சர்வர் குமார் எங்களை போல கொஞ்சம் வளர்ந்த குழந்தைகளுக்கு வடை கொடுத்துவிட்டு கொஞ்சம் தொடை எடுத்துப்பான். [ ‘என்னடா ராம சேச, ஓழிஞ்சு போறாண்டா.. கடைசி அஞ்சு ஓவர்ரா.. வெயிட் பண்றா. நீ போனா.. டீவியை ஆப் பண்ணிருவாண்டா.. மியாந் தத்து வேறா.. கம்மாநாட்டி.. அவுட்டாகல..
ப்ளிஸ்ரா. “ நாங்கள்லாம் அவனிடம் கெஞ்சுவோம் ].
நாயர் ஹோட்டலில் அவனால் எந்த தொந்திரவு இல்லையென்றாலும் சாக்கடை நாத்தம் குடலை புடுங்கும். அது ஒன்றும் பெரிய விசயமில்லை. நல்ல ஜெயிக்க வேண்டிய மேட்சுகளெல்லாம் நாயரின் இரண்டாவது பெண்டாட்டி போல கை கழுவி போகும். இந்தியாவின் வெற்றியை முன்னிட்டு அவன் கடைப் பக்கமே போவதில்லை. பாகிஸ்தான், இங்கிலாந்து மேட்சுகளை மட்டும் அவன் கடையில் பார்ப்பதுண்டு. பெரும்பாலும் அந்த மேட்சுகளில் பாகிஸ்தான் தோற்றுப் போவதுண்டு.
பெங்களூர் டெஸ்ட் மேட்சு. ஆடுதளம் கண்ட மேனிக்கு ஆடுகிறது. பாட்டி ஸ்பின் போட்டால் கூட விக்கெட் விழும் போல. ஐந்து நாள் மேட்சு மூணரை நாளில் முடிந்து விடும் போலயிருந்து. ஆனால் பள்ளியில் தேர்வு. இரண்டு மணிக்கு மணி அடித்து கேள்வித் தாள்கள் கொடுக்கப்பட்டன. வாங்கியபின் ஓன்னுக்கு போக அநுமதி கேட்டு சுவர் ஏறி கூதித்து கேபியார் கடையில் ஸ்கோர் கேட்க போவதற்குள் சிவலால் யாதவ் பிரமாதமாய் ஆப் ஸ்பின்னில் கலக்கிக் கொண்டிருந்தார். இந்தியா ஜெயிப்பதற்கான எல்லா நட்சத்திரங்களும் மின்னிட்டன. அதற்குள் பாதர் ஜெபமாணிக்கம் பார்த்து,என் காதை பிடித்து திருகி பளார் என்று அறை விட்டதை அங்கு நின்ற கூட்டம் கண்டு கொள்ளவேயில்லை. ஆனால் இந்தியா எப்படியோ தோற்றுபோனது. வலித்தது. நான் பார்த்திருந்தால் அன்று இந்தியா கண்டிப்பாய் ஜெயித்திருக்கும்.
நிறைய முக்கியமான மேட்சுகளை கால் வலிக்க தெருவில் நின்று கொண்டு ஏதாவது ஒரு ஓசி டீவியில் பார்த்தது எனது மகிழ்ச்சிகாக மட்டுமல்ல. இந்தியாவின் வெற்றிக்காகவும் தான். வான்கேடே ஸ்டேடியத்தையும், பாந்திரா விளையாட்டரங்கையும் ஓவ்வொரு முறையும் மின்சார வண்டி கடக்கிற கணங்களில் எழுந்து நின்று பார்க்க தூண்டும் என் உள்ளே ஏதோ ஓன்று. இந்த முறை இந்தியா பைனல் வந்தால் என் அலுவலகத்திற்கு பின்னே உள்ள ஒரு கடையை பார்த்து வைத்திருக்கிறேன்.
பார்க்கலாம். என்னவாகிறதென்று

Friday, March 18, 2011

சட்டசபை செயல்படும் விதம் - ஒரு அலசல்

தமிழக் சட்டசபை எப்படி செயல்படுகிறது. புதிய அவை எப்படி தோற்றுவிக்கப்படுகிறது. உறுப்பினர்களின் கடமைகள் என்ன? அவையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்று சட்டசபையின் அத்ததனை சங்கதிகளையும் இங்கே அலசுவோம்.

இதுதான் சட்டசபை...!

சட்டசபை என்பது அந்த அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளைக் கொண்ட அவை. மாநிலங்களுக்கான சட்டங்கள் உருவாக்கும் அதிகாரம் கொண்டது. இந்த அவைக்கு கட்டுப்பட்டதாக அமைச்சரவை இருக்கிறது. மாநிலத்தின் பட்ஜெட், அரசின் கொள்கைகள், துறைவாரியான திட்டங்கள் ஆகியவற்றை ஜனநாயக ரீதியாக விவாதித்து நடைமுறைபடுத்தும் பணிகளை சட்டசபை மேற்கொள்கிறது.

எத்தனை உறுப்பினர்கள்!

தமிழகத்தை பொறுத்தவரையில், சட்டசபை என்பது 234 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு. 234 தொகுதிகளில் தலித்துகளுக்கு 42 தொகுதிகளும் பழங்குடியினருக்கு 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆங்கிலோ இந்திய சமூகத்தில் இருந்து யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், அச்சமூகத்தில் இருந்து ஒருவரை கவர்னர் நியமிப்பார்.

ஐந்து ஆண்டுகள்தான் ஆயுள்!

பொதுவாக சட்டசபையின் ஆயுட்காலம் ஐந்து ஆண்டுகள்தான். தேர்தல் முடிந்ததும் நடக்கும் சட்டசபையின் முதல் நாள் கூட்டத்தில் இருந்து அதன் ஆயுள் தொடங்கும். என்றாலும் சில சமயங்களில் பல காரணங்களால் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே சட்டசபையை கலைக்க முடியும்.

யார் முதல்வர் ?

பொதுத்தேர்தல் முடிந்ததும் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார். பெரும்பான்மை கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தங்கள் தலைவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் முதல்வர் ஆவார். முதல்வரின் அறிவுரைப்படி மற்ற அமைச்சர்களுக்கு, கவர்னர் பதவிப்பிரமாணம் செய்துவைப்பார். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையெனில், மெஜாரிட்டி உறுப்பினர்களின் ஆதரவை யார் பெற முடியும் என்று கவர்னர் நினைக்கிறாரோ அவரை ஆட்சி அமைக்க அழைப்பார். அவர் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும். அப்படி அழைக்கப்படுபவர் சட்டசபை உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி முதல்வர் ஆகிறவர், ஆறு மாதத்துக்குள் சட்டசபையில் உறுப்பினராக வேண்டும்.

தற்காலிக சபாநாயகர்!

சட்டசபை உறுப்பினர்களில் அமைச்சர்களாக இருந்தவர்கள் தவிர சட்டசபையில் நீண்ட காலம் உறுப்பினராக பதவி வகித்த மூத்த உறுப்பினர் தற்காலிக சபாநாயகராக சட்டசபை தொடங்கும் முன்பு கவர்னரால் நியமிக்கப்படுவார். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டவர் சட்டசபைக்கு முதல் நாள் கவர்னர் முன்னிலையில் சட்டசபை உறுப்பினருக்கான பதவி பிரமாணம் எடுத்துக்கொள்வார். பின்னர் சட்டசபையில் மற்ற உறுப்பினர்களுக்கு அவர் பதவிபிரமாணம் செய்து வைப்பார்.

பதவி ஏற்பு!

சட்டசபையில் தற்காலிக சபாநாயகர் உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். 'உறுப்பினர் பிரமாணம்' அல்லது 'உறுதிமொழி' கூறி பிரமாண பத்திரத்தில் கையொப்பம் இடவேண்டும்.

பிரமாண வரிசை முறை!

சட்டசபையில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்பவர்கள் முதல்வர், அமைச்சர்கள், கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் சபாநாயகர்கள், முன்னாள் அமைச்சர்கள், அரசுக் கொறடா, என்கிற வரிசைப்படி பதவி ஏற்பார்கள். மற்ற உறுப்பினர்கள் அகர வரிசைப்படி அழைக்கப்படுவார்கள்.

பதவி ஏற்கும் முறை!

பதவி ஏற்கும் உறுப்பினர்கள் இருவர் இருவராக சட்டசபை செயலாளர் அழைப்பார். தாங்கள் வெற்றி பெற்றதற்கு ஆதாரமாக தேர்தல் கமிஷனால் தரப்பட்ட சான்றிதழை சட்டசபை செயலாளரிடம் உறுப்பினர்கள் வழங்குவார்கள். பதவிபிரமாண வாசகம் அடங்கிய தாளை உறுப்பினர்களுக்கு செயலாளர் வழங்குவார். பிரமாண வாசகத்தை தமிழிலோ ஆங்கிலத்திலோ உறுப்பினர்கள் உரக்க படித்து கையொப்பம் இட்டு செயலாளரிடம் தரவேண்டும். படிக்க இயலாதவர்கள் செயலாளர் படிக்க அதை திருப்பிச் சொல்ல வேண்டும். 'கடவுள் மீது சூளுரைத்து' உறுப்பினர்கள் உறுதி கூறலாம் அல்லது 'உளமாற' என்று கூறியும் உறுதி ஏற்கலாம். பதவி ஏற்காமல் யாரும் அவையில் உட்காரக் கூடாது என்பது விதி. பதவி ஏற்காமல் அவையில் உட்கார்ந்து இருந்தால் நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் அபராதம் வசூலிக்கப்படும்.

சபாநாயகர் தேர்தல்!

கவர்னர் குறிப்பிடும் நாளில் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். இந்த தேர்தலை தற்காலிக சபாநாயகர் நடத்துவார். சபாநாயகர் வகுக்கும் வரிசைப்படி உறுப்பினர்கள் இருக்கையில் அமர வேண்டும்.

சட்டசபை கூட்ட அழைப்பு!

சட்டசபை கூடும் நாள், நேரம் ஆகியவை குறித்த தகவல், உறுப்பினர்களுக்கு அவர்களது முகவரிக்கே அனுப்பப்படும். சபை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 வரையில் நடைபெறும். தேவைபட்டால் இந்த நேரத்தை நீட்டிக்க சபாநாயகருக்கு அதிகாரம் இருக்கிறது. சில சமயங்களில் மாலையில் கூட சபை நடக்க வாய்ப்பு உண்டு. சட்டசபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் வருகை பதிவேட்டில் கையொப்பம் இட வேண்டும். சபையின் அனுமதியை பெறாமல் தொடர்ந்து 60 நாட்களுக்கு அவைக்கு வராத உறுப்பினரின் பதவிக்காலம் காலியாகி விட்டதாக முடிவு செய்யப்படும்.

கோரம்!

சட்டசபை நடைபெற சபாநாயகர் அல்லது அவைக்கு தலைமை வகிப்பவர் உட்பட 24 உறுப்பினர்களாவது இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை குறைந்தால் கோரம் மணி ஒலிக்கப்படும். மணி ஓசை கேட்டு வெளியே இருக்கும் உறுப்பினர்கள் அவைக்குள் வருவார்கள். மணி ஒலித்து 15 நிமிடங்கள் ஆகியும் குறைந்தபட்ச எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இல்லாவிட்டால் அவை ஒத்திவைக்கப்படும்.

கட்சி அங்கீகாரம்!

ஆளும் கட்சிக்கு அடுத்தபடியாக அதிக உறுப்பினர்களைக் கொண்ட கட்சி பிரதான எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படும். அந்த கட்சியின் தலைவர் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பார். 24 உறுப்பினர்களுக்கு மேல் உள்ள கட்சிகள் சட்டசபை கட்சிகளாக அங்கீகரிக்கப்படும். 8 பேருக்கு குறையாத உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளும், பொதுத்தேர்தலில் 4 சதவீதத்துக்கும் குறையாத வாக்குகளை பெற்ற கட்சிகளும் சட்டமன்ற அணி என அங்கீகரிக்கப்படும். இவ்விரண்டிலும் இடம் பெறாதவர்கள் சுயேட்சைகள் என ஏற்கப்படுவார்கள்.

சட்டசபைக் கூட்டம்

அமைச்சரவையின் அறிவுரைப்படி சட்டசபை கூடும் நாளை கவர்னர் அறிவிப்பார். சட்டசபை கடைசியாக கூடிய நாளுக்கும் அடுத்த கூட்டத்தொடரின் முதல் நாளுக்கும் இடையில் ஆறு மாதங்கள் இடைவெளி இருக்கக் கூடாது. பொதுத்தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் கூட்டத்திலும் ஒவ்வொரு ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் தொடக்கத்திலும் கவர்னர், சட்டசபையில் உரை நிகழ்த்துவார். அரசின் சாதனைகள், திட்டங்கள், கொள்கைகள் கவர்னர் உரையில் இடம் பெறும்.

சபாநாயகருக்கு மரியாதை!

சட்டசபை கூட்டம் நடக்கும் போது சபாநாயகரோ அல்லது அவைக்கு தலைமை வகிப்பவரோ அவைக்குள் நுழையும் போது உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவிக்க வேண்டும். சபாநாயகர் உரையாற்றும் போதும் உறுப்பினர்கள் எழுந்து நிற்கவோ அல்லது வெளியேறவோ கூடாது. அவையை விட்டு வெளியேறும் போதும் அல்லது அவைக்குள் இருக்கையில் அமரும் போதும் சபாநாயகருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.

செய்ய கூடாதவை!

சபாநாயகரின் இருக்கைக்கும், பேசும் உறுப்பினரின் இருக்கைக்கும் இடையே பிற உறுப்பினர்கள் குறுக்கே செல்லக்கூடாது. அவையில் அமைதி காக்க வேண்டும். தவிர்க்க முடியாத நிலையில் அவை நடவடிக்கைக்கு இடையூறு இல்லாமல் மற்ற உறுப்பினர்களுடன் பேசலாம்.

கன்னிப் பேச்சு!

சட்டசபையில் முதன்முறையாக உரையாற்றும் உறுப்பினர்களின் பேச்சை கன்னிப்பேச்சு என்பார்கள். கன்னிப்பேச்சை பேசுபவர்கள் எழுதிக்கொண்டு வந்து படிக்கலாம். சபாநாயகரின் முன் அனுமதி இல்லாமல் எழுதிக்கொண்டு வந்த உரையை மற்றவர்கள் படிக்கக்கூடாது. தேவைப்படும் குறிப்புகளைக் கையில் வைத்துக்கொண்டு உரையாற்றலாம். தங்கள் வாதத்துக்கு ஆதாரமாகக் கூறும் ஆதாரங்களை சபாநாயகரிடம் முன்கூட்டியே காட்ட வேண்டும். ஆதாரங்களின் நகல்களை தரவேண்டும்.

தனித் தீர்மானம்!

சட்டசபையில் தனித்தீர்மானம் கொண்டுவர விரும்புபவர்கள் 15 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு தரவேண்டும். அத்தீர்மானங்களுக்கான அனுமதியையும் வரிசைக்கிரமத்தையும் சபாநாயகர் நிர்ணயிப்பார்.

தினம் ஒரு திருக்குறள்!

ஒவ்வொரு நாளும் சட்டசபை தொடங்கும் முன்பு சபாநாயகர் ஒரு திருக்குறள் படித்து அதற்கு பொருளையும் சொல்வார். சி.பா. ஆதித்தனார் சபாநாயகராக இருந்த போதுதான் இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை!

இந்திய அரசியலமைப்பின் படி சட்டமன்றத்தின் அதிகப்பட்ச உறுப்பினர்களாக 500 பேர்களுக்கு மிகாமலும், குறைந்த பட்ச உறுப்பினர்காளாக 60 பேர்களுக்கு குறையாமல் அமைய வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாடாளுமன்றத்தில் ஏற்படுத்தப்பெற்ற சிறப்பு விதியின் கீழ் கோவா, சிக்கிம் மற்றும் மிசோரம் மாநிலங்கள் 60 உறுப்பினர்களுக்கு குறைந்தும் செயல்படுகின்றன.

நியமன உறுப்பினர்!

ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பெற்ற ஆங்கிலோ இந்திய சமுதாயத்திலிருந்து ஒரு நியமன உறுப்பினர் நியமிக்கப்படுவார். இந்த நியமன உறுப்பினர் விவாதங்களிலோ ஓட்டெடுப்பிலோ பங்குபெறுவதில்லை.

காலவரை!

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகள் சட்டமன்ற பணியாற்ற கடமைப்பட்டவர்கள். ஐந்து ஆண்டுகள் முடிந்த பின்னர் உறுப்பினர்களின் இருக்கைகள் காலியாகப்பட்டு மீண்டும் பொதுத் தேர்தல் நடைபெறும். உறுப்பினர்களில் அதிகப் பெரும்பான்மை உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியே மாநில ஆட்சிப் பொறுப்பை ஏற்கும்.

சட்டசபை கலைப்பு!

அவசரகாலப் பிரகடன காலங்களில் சட்டசபை உறுப்பினர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேலும் பதவி வகிக்க அனுமதிக்கப்படுவர் அல்லது சட்டசபை கலைக்கப்படலாம். ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அரசுக்கெதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரும் சமயத்தில் அதில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கும் பட்சத்தில் சட்டசபை கலைக்கப்படும்.

தமிழ்த்தாய் வாழ்த்து!

1991& ல்தான் முதன் முறையாக கவர்னர் உரை துவங்கும் முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதுபோல் அவர் உரையாற்றி முடித்து தமிழாக்கம் சபாநாயகரால் படிக்கப்பட்ட பின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற வரலாறு

தமிழக சட்டமன்றத்தின் வரலாறு 18-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் துவங்குகிறது. தற்போதைய தமிழ்நாடு மற்றும் ஒரிசா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள், முந்தைய நிஜாம் மாநிலம் நீங்கலான தற்போதைய ஆந்திரப்பிரதேசம் ஆகியவை உள்ளடக்கியதாக இருந்தது 'சென்னை மாகாணம்'.

சென்னையை போலவே பம்பாய், கல்கத்தா ஆகிய மாகாணங்களும் அப்போது
நடைமுறையில் இருந்தன. இந்த மாகாணங்களுக்கு பொறுப்பாக தனித்தனி ஆளுநர்கள் செயல்பட்டு வந்தனர். 1773-ம் ஆண்டின் முறைப்படுத்தும் சட்டத்தின்கீழ் வங்காள ஆளுநர் அனைத்து மாகாணங்களின் தலைமை ஆளுநராக (கவர்னர் ஜெனரல்) நியமிக்கப்பட்டார்.

1833 மற்றும் 1853 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட ஒப்பந்த சட்டங்களின்படி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கின. 1861 மற்றும் 1892 ஆகிய ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட 'இந்திய கவுன்சில்கள் சட்டஒத்தின்கீழ் சட்டம் இயற்றும் மன்றங்கள் உருப்பெற்றன.

சென்னை மாகாணத்திற்கான நிர்வாகக் குழுவில் ஆறுக்கு குறைவில்லாத 12-க்கு மேற்படாத எண்ணிக்கையிலான அதிகாரிகள் அல்லாத கூடுதல் உறுப்பினர்களை நியமிக்க 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் வகைசெய்யப்பட்டது. அமைதி மற்றும் நல்லாட்சியை வழங்கும் வகையில் சட்டம் இயற்ற இந்த சட்டமன்றத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1892-ம் ஆண்டின் இந்திய கவுன்சில்கள் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 20-ஆக அதிகரிக்கப்பட்டது. அதிகாரிகள் அல்லாத இந்த உறுப்பினர்களை மாவட்ட நிர்வாக குழுக்களும் (ஜில்லா போர்டுகள்), பல்கலைக் கழகங்களும், நகராட்சிகளும் பரிந்துரை செய்தன.

மிண்டடோ மார்லி சீர்திருத்தங்கள் என அழைக்கப்படும் 1861-ம் ஆண்டு சட்டத்தின்கீழ் முதல் முறையாக சட்டமன்றங்களுக்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. எனினும் நேரடித் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இந்த சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்தில் நியமிக்கப்படும் கூடுதல் உறுப்பினர்களின் அதிகபட்ச எண்ணிக்கை 50-ஆக உயர்த்தப்பட்டது. 1919-ம் ஆண்டு மாண்டேகு -செம்ஸ்போர்டு சீர்திருத்தங்களின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசு சட்டத்தின்கீழ் மத்திய, மாகாண அரசுகளுக்கு இடையே சட்டம் இயற்றும் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன. இச்சட்டத்தின்கீழ் மாகாண சட்டமன்றத்தின் உறுப்பினர் அல்லாத ஆளுநர் அந்த சட்டமன்ற கூட்டத்தில் உரையாற்றும் அதிகாரத்தை பெற்றார்.

1919-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் 'சென்னை மாகாண சட்டமன்றம்' 1921-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதன் ஆயுட்காலம் மூன்றாண்டுகளாகும். ஆளுநரால் நியமிக்கப்பட்ட 34 உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 132 உறுப்பினர்களை கொண்டதாக இது இருந்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ம் நாள் சென்னை சட்டமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆளுநராக இருந்த வெலிங்டன் பிரபுவின் வேண்டுகோளின் பேரில் கன்னாட் கோமகன் சென்னை மாகாண சட்டமன்றத்தை ஜனவரி 12-ம் நாள் துவக்கி வைத்தார். இதில் முதல்முறையாக மாகாண ஆளுநர் பிப்ரவரி 14-ம் நாள் உரையாற்றினார்.

1923 மற்றும் 1926 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் சென்னை மாகாணத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது சட்டமன்றங்கள் அமைந்தன. 1930-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட நான்காவது சட்டமன்றத்தின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டு, 1935-ம் ஆண்டின் இந்திய அரசு சட்டத்தின்கீழ் மாகாண தன்னாட்சி 1937-ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் வரை செயல்பட்டது.

சட்ட மேலவை:
1935-ம் ஆண்டின் சட்டத்தின்கீழ் சென்னை மாகாண சட்டமன்றத்திற்கு 'மேல் அவை', 'கீழ் அவை' என இரு அவைகள் உருவாக்கப்பட்டன. இந்த இரு அவைகளும், ஆளுநரும் சேர்ந்து மாகாண சட்டமன்றம் என அழைக்கப்பட்டது. இந்த சட்டமன்றத்தில் கலைக்கப்பட இயலாத நிரந்தர அவையாக 'சட்ட மேலவை' செயல்பட்டது. ஒவ்வொரு மூன்றாண்டின் நிறைவிலும் அதன் மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் ஓய்வுபெற வகை செய்யப்பட்டிருந்தது. இதன் உறுப்பினர் எண்ணிக்கை குறைந்தபட்சம் 54-ஆகவும் அதிகபட்சம் 56-ஆகவும் இருந்தது. சட்ட மேலவையில் 35 பொது உறுப்பினர்களும், ஏழு இஸ்லாமிய உறுப்பினர்களும், ஒரு ஐரோப்பிய உறுப்பினரும், மூன்று இந்திய கிறிஸ்துவ உறுப்பினர்களும் இருந்தனர். எட்டுக்கு குறையாமலும் பத்துக்கு மேற்படாமலும் நியமன உறுப்பினர்களை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

சட்டப்பேரவை:
சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 215-ஆக இருந்தது. இதில் 146 இடங்களுக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றில் கீழ்கண்டவாறு இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது:

தாழ்த்தப்பட்ட வகுப்பினர் - 30
பிற்படுத்தப்பட்ட பகுதிகளை சேர்ந்தோர் மற்றும் பழங்குடியினர் - 1
இஸ்லாமியர்கள்-28
ஆங்கிலோ இந்தியர்கள் - 2
ஐரோப்பியர்கள் - 3
இந்திய கிறிஸ்தவர்கள் -8
தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதிகள் - 6
நிலச்சுவான்தார்கள் - 6
பல்கலைக்கழகம் - 1
தொழிலாளர் பிரதிநிதிகள் - 6
பெண்கள் - 8

1935-ம் ஆண்டு இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டாலும் மாகாணங்களை பொறுத்தவரை 1937-ம் ஆண்டுதான் நடைமுறைக்கு வந்தது. இதன் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட்டு சென்னை மாகாணத்தின் முதலாவது சட்டமன்றம் 1937-ம் ஆண்டு ஜுலை மாதம் அமைக்கப்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரை ஒட்டி அவசரகால பிரகடனம் அறிவிக்கப்பட்டதால் 1939-ம் ஆண்டு அக்டடோ பர் மாதம் அமைச்சரவை பதவி விலகியது. இதனை தொடர்ந்து இந்த சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

போர் முடிந்ததும் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மே மாதம் இரண்டாவது சட்டமன்றம் அமைக்கப்பட்டது.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1952ல் குடியரசு ஆனது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாவது பொதுத்தேர்தல் நடைபெற்றது. வயது வந்தோருக்கான வாக்குரிமையின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தலை தொடர்ந்து சென்னை மாநிலத்தின் முதலாவது சட்டமன்றம் 1952-ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி அமைக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சென்னை மாநில சட்டப்பேரவையில் 375 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இவற்றில் 243 'ஒரு உறுப்பினர் தொகுதி'களும் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களும் இடம் பெற்றிருந்தன. இதில் 62 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் நான்கு 'இரட்டை உறுப்பினர் தொகுதி'களில் தலா ஒரு இடம் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. இவை தவிர ஆங்கிலோ இந்திய வகுப்பினரைச் சேர்ந்த ஒரு உறுப்பினரை ஆளுநர் நியமனம் செய்தார்.

ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் தெலுங்கு பேசப்பட்ட பகுதிகளை தனி ஆந்திர மாநிலமாக அறிவித்தும், பெல்லாரி மாவட்டத்தின் கன்னடம் பேசப்பட்ட பகுதிகளை அன்றைய மைசூர் மாநிலத்துடன் இணைத்தும் 1953-ம் ஆண்டு அக்டோ பர் 1ம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 231-ஆக குறைந்தது. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் நாளிலிருந்து 'மாநிலங்கள் சீரமைப்புச் சட்டம்' நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து மலபார் மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகள் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இதன் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 190-ஆக குறைந்தது. அன்றைய கேரள மாநிலத்தில் இருந்த தமிழ் பேசும் பகுதிகளான தற்போதைய கன்னியாகுமரி மாவட்டமும், செங்கோட்டை வட்டமும் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டன.

பின்னர் 1956-ஆம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை மாநில சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்தது. மொத்தம் 167 தொகுதிகளில் 38 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் இடம் பெற்றிருந்தன.

1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தல்களைத் தொடர்ந்து இரண்டாவது சட்டப்பேரவை ஏப்ரல் 1ம் தேதி அமைக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட 205 உறுப்பினர்களுடன் ஒரு நியமன உறுப்பினரும் இதில் இடம் பெற்றிருந்தார்.

1959ம் ஆண்டு சென்னை மாநிலத்திற்கும் ஆந்திர மாநிலத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட எல்லை சீர்திருத்தத்தின் விளைவாக ஆந்திர மாநில சட்டப்பேரவையின் ஒரு உறுப்பினர் இடம் சென்னை சட்டப்பேரவைக்கு மாற்றப்பட்டது. இதன் விளைவாக மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 206-ஆக உயர்ந்தது.

1961-ஆம் ஆண்டில் 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் முறை நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக 38 கூடுதல் 'ஒரு உறுப்பினர்' தொகுதிகள் உருவாக்கப்பட்டன. இவற்றில் 37 தொகுதிகள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் ஒரு தொகுதி பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டன. 1962ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தல்களை தொடர்ந்து மார்ச் 3-ம் தேதி மூன்றாவது சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1965ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினர் எண்ணிக்கை 234-ஆக உயர்த்தப்பட்டன. இவற்றில் 42 இடங்கள் தாழ்த்தப்பட்டோ ருக்கும் இரண்டு இடங்கள் பழங்குடியினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூடுதலாக ஒரு இடத்திற்கு ஆங்கிலோ இந்திய உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டார்.

1967ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்தல்களின் விளைவாக மார்ச் முதல் தேதி சென்னை மாநிலத்தின் நான்காவது சட்டப்பேரவை அமைந்தது. இந்த சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டு 1969-ம் ஆண்டு ஜனவரி 14-ஆம் நாள் 'சென்னை மாநிலம்' 'தமிழ்நாடு' மாநிலமாக பெயர் மாறியது. 1971ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி அமைக்கப்பட்ட ஐந்தாவது சட்டப்பேரவை 1976ம் ஆண்டு ஜனவரி 31-ம் நாள் கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

1977-ம் ஆண்டு ஜுன் 30-ம் தேதி ஆறாவது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 1975ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக மாற்றியமைக்கப்பட்ட 234 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த சட்டப்பேரவையும் 1980-ஆம் ஆண்டு கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. இதற்கிடையே 1979-ம் ஆண்டு உப்பிலியாபுரம் பொது தொகுதி பழங்குடியினருக்கான தனித்தொகுதியாக மாற்றம் செய்யப்பட்டது. 1980ம் ஆண்டு ஜுன் 9-ம் தேதி ஏழாவது சட்டப்பேரவையும் 1985-ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி எட்டாவது சட்டப்பேரவையும் அமைக்கப்பட்டன. எட்டாவது சட்டப்பேரவை 1988-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி பிரகடனப்படுத்தப்பட்டது.

எட்டாவது சட்டப்பேரவையில் தமிழக 'சட்ட மேலவை'யை நீக்குவதற்கான தீர்மானம் 1986ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் பெறப்பட்டது. இதனை தொடர்ந்து அதே ஆண்டின் நவம்பர் 1ம் தேதி தமிழக 'சட்ட மேலவை' கலைக்கப்பட்டது. 1937-ஆம் ஆண்டு இரு அவைகளாக உருவாக்கப்பட்ட தமிழக சட்டமன்றம் 1986ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஒரே அவையைக் கொண்ட சட்டமன்றமாக உருவெடுத்தது.

1989-ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி அமைந்த 9-வது சட்டப்பேரவை 1991-ம் ஆண்டு ஜனவரி 30-ம் நாள் கலைக்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. ஏற்கனவே கலைக்கப்பட்ட 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்க இந்த சட்டப்பேரவையில் 1989ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 10-வது சட்டப்பேரவை 1991ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி அமைக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் 'சட்ட மேலவை'யை மீண்டும் உருவாக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதற்கான தீர்மானம் 1991ம் ஆண்டு அக்டோ பர் 4-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. 1996ம் ஆண்டு மே 13ம் தேதி 11-வது தமிழக சட்டப்பேரவை உருவாக்கப்பட்டது. இந்த சட்டப்பேரவையில் ஜுலை 26-ம் தேதி மீண்டும் தமிழக 'சட்ட மேலவை'யை உருவாக்கக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2001ம் ஆண்டு மே 10ம் தேதி நடைபெற்ற தேர்தலை தொடர்ந்து மே 14ம் தேதி 12-வது தமிழக சட்டப்பேரவை அமைக்கப்பட்டது. 13-வது தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் 2006 மே 8ம் தேதி நடைபெற்றது.

தொகுதி மறுசீறுமைப்பு:
இந்தியா குடியரசு ஆனதற்கு பின் தமிழக சட்டசபைக்கான முதல் பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் 1951-ம் ஆண்டு இறுதியில் துவங்கி 1952-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 66 'இரட்டை உறுப்பினர் தொகுதி'கள் உட்பட மொத்தம் 309 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 1957-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது தேர்தலில் மாநிலங்கள் சீரமைப்பின் விளைவாக தமிழக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கை 205-ஆக குறைந்தது. 1965-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் விளைவாக சட்டசபை உறுப்பினர்கள் எண்ணிக்கை 234-ஆக உயர்ந்தது.

1975-ம் ஆண்டின் 'தொகுதி சீரமைப்பு' நடவடிக்கைகளின் அடிப்படையில்தான் 1977-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. 234 தொகுதிகளில் அப்போது தேர்தல் நடந்தன. 1977-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரையில் தமிழக சட்டப்பேரவை தேர்தல்கள் 1975-ம் ஆண்டு சீரமைக்கப்பட்ட தொகுதிகளின் அடிப்படையில் நடைபெற்று வந்தன. 2007ம் ஆண்டு நடைபெற்ற 'தொகுதி சீரமைப்'பின்படி தொகுதிகள் சில மாற்றி அமைக்கப்பட்ட போதும் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Saturday, March 12, 2011

ஆண்களெல்லாம் பாவம்


உண்மையில் நாம் நினைதுக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளதிற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள்.


ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். எவை இரண்டும் தான் ஒரு வரின் ஒழுக்கத்தின் அளவீடா.

இல்லை

உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர்.

நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

எனவே மக்களே ஆண்களை எந்த ஏறி பழக்கம் மட்டுமே ஒரு ஆணின் நன்னடத்தைக்கு அளவீடாக வைக்காதீர்கள்.

(அப்பாடா ஆண்களுக்கு சப்போர்ட்டா ஒரு ப்ளாக் எழுதியாச்சு )

எந்த பழக்கம் இருந்தாலும் நன்னடத்தை மாறாத ஒரு தமிழ் ஆண்மகன்



செந்தில்



சிகரட் பிடித்தாலும், குடித்தாலும் நன்னடத்தை மாறாத ஆண்களே உங்களை நம்பி தான் இந்த ப்ளாக் வோட் போடுங்கப்பா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...