சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Thursday, January 31, 2013

சிக்கன் ப்ரையில் நடக்கும் முறைகேடுகள்

காக்கா பிரியாணி துன்னா காக்கா குரல்வராம உன்னிக்கிருஷ்ணன் கொரலா வரும்? என்பது ரன் படத்தில் விவேக் நடிக்கும் ஒரு நகைச்சுவை காட்சி, அதே போன்ற ஆனால் உண்மையான அதிர்ச்சியான தகவல்கள் தான் இது, நீங்கள் சாப்பிடுவது கெட்டுப்போன கோழியாக கூட இருக்கலாம்.

அடிக்கடி ஒரு செய்தி சென்னை பத்திரிக்கைகளில் வருகிறது, நாம் திரைப்பட பகுதி மற்றும் சோசியத்தை\ஆண்மீகத்தை தவிர வேறு எதிலும் கவனம் செலுத்தாத காரணத்தால் இந்த செய்தி நமது கண்களில் படுவதில்லை, அது “கெட்டுப்போன மாமிசம் எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பாற்றப்பட்டது,


 மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை”, பிறகு மீண்டும் சில நாள் கழித்து மற்றோரு செய்தி வரும் இது தொடர்கதை, ரெயிலில் ஏற்றும் போது என்ன செய்தார்கள் பதில் இல்லை? கெட்டுப்போன மாமிசம் என்று தகவல் சொன்னவர்கள் யார் தகவல் இல்லை, ரெயில்வே நிர்வாகம் என்ன செய்கிறது தகவல் இல்லை, சுமார் 70 சதவீத மக்கள் உணவாக பயன்படுத்தும் மாமிசத்தின் மீதான அக்கரை இது கப்பம் சரியாக வராத நேரத்தில் பிலிம் காட்ட இது போன்ற ரெய்டுகள் அதாவது ஜஸ்ட் வார்னிங் அடுத்த முறை ஒழுங்கா கட்டிடு.

1- மாட்டு மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று நடிப்பவர்களும் தங்களை அறியாமலேயே மாட்டு மாமிசம் உண்கின்றனர். “முக்கியமாக பள்ளிக்கூட மற்றும் மருந்து கடைகளை விட அதிகம் இருக்கும் சாராய கடைகளின் முன்பு”,

2. கடைகாரர்கள் ஒரு கோழி என்ன விலைக்கு வாங்குகிறார்கள் என்று பார்த்தால் 5 ரூ முதல் 8 ரூ வரை தான் ஆம் கோழிப்பன்னைகளில் நெரிசலில் சிக்கி இறந்து போன கோழிகள், வண்டி வரும் வழியில் இறந்த கோழிகள், நோய்வாய்ப்பட்டு இறந்த கோழிகள், நாய், இதர உயிரினம் (பாம்பை தவிர) கடித்து செத்துப்போன கோழிகள், மற்றும் சில வித்தியசமான நோய்கள் வந்து உடல் வீங்கி நிலையில் உள்ள கோழிகள் போன்றவைகளுக்கு தமிழ் நாட்டில் கிராக்கி அதிகம் ஆம் டாஸ்மார்க் என்னும் கடை வந்த காரணத்தால் எங்கும் அசைவ கடைகள் பெட்டிக்கடைகளை விட அதிகம் திறந்து விட்டன.

இந்த கடைகளை நடத்துபவர்கள் ஒருநாளைக்கு சிறப்பு கவனிப்பாக ரூ 500 முதல் 1000 வரை கொடுக்க வேண்டியுள்ளது, அதன் பிறகு பொருட்கள் வாங்க, வீட்டு செலவு தண்ணீர் :0 என பார்த்தால் 3000 சம்பாதித்தால் தான் அடுத்த நாள் கடை திறக்க முடியும் ஒரு கிலோ சிக்கன் அதிக பட்சம் 100 கொடுத்து வாங்கினால் அடுத்த வாரம் ஊருக்கு போய் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு மண் சட்டி சுமக்கவேண்டியதுதான், 

இதை சமாளிக்க ஒரே வழி எதை எதை குறைந்த விலைக்கு வாங்க முடியுமோ அதை வாங்குவது, அரிசி இலவச அரிசி வாங்கி குறைந்த விலைக்கு விற்பவர்களுக்கு பஞ்சமில்லை, காய்கறி கொயம்பேட்டில் கழிவுகழுக்கு பஞ்சமில்லை, அதைக்கூட கூறு போட்டு விற்பார்கள், அதை வாங்க நடைபாதை வியாபாரக்கூட்டம் பெருகும், அடுத்து முக்கிய லாபம் தரும் இறைச்சி(கோழி பொரித்தது) அதாவது 4 துண்டு 70 ரூ 3 கோழி துண்டு 1 பெயர் தெரியாத விலங்கு கறிதுண்டு (சோடா போட்டு ஊறவைத்து சில கோழி எலும்புகளை முக்கியமாக இறகு போன்ற பாகங்களை வெட்டி எறியும் போது அதை பொறுக்கி அதில் உள்ள சின்ன எலும்புகள் சேகரித்து இந்த கறித்துண்டங்களில் சொறுகப்படும். 

குடிகாரர்களுக்கும் சரி மற்றவகளுக்கும் சரி கறி என்ன வென்று இருந்தாலும் பரவாயில்லை கோழி எலும்பு போன்று ஏதாவது இருக்கவேண்டும், சில மரக்குச்சிகள் கூட பயன்படுத்து கின்றன(இங்கு இருப்பதாக தெரியவில்லை ஆனால் டில்லி போன்ற நகரங்களில் உள்ள நடைபாதை உணவகங்களில் கரியின் ஊடாக ஒருவகை மரக்குச்சிகள் சொறுகி விடுகிறார்கள், எலும்பு போல இருக்கும் முக்கியமான பொறிக்கும் வகை கறிகளில் இவை இருக்கும் ஏனென்றால் மேலும் இறுகி உண்மையான எலும்பு போல் ஆகிவிடும்)(சென்னையில் இது இருப்பது போல் தெரியவில்லை)

அடுத்து கெட்டுப்போன கோழிகளின் உடல் கொழகொழப்பு தெரியாமல் இருக்க படிகார கரைசல் தெளிப்பு ஆமாம் எந்த அளவு கொழகொழப்பான மாமிசமாக இருந்தாலும் 5ரூ படிகார கட்டி வாங்கி தண்ணீரில் கரைத்து தெளித்து பாருங்கள் சில நிமிடங்களில் பிரஸ் சிக்கன் ரெடி, இவை வேகுவதிலும் அதிக நேரம் பிடிப்பதில்லை சாப்பிடும் போது பஞ்சுமிட்டாய் போல் கரைந்துவிடுகிறது, ஆகையால் கூட்டம் ஆடிக்கழிவு போல் கடைகளில் அடித்து பிடித்து சாப்பிடுவார்கள்.

இன்னும் பல எழுதமுடியும் மற்றொன்று முக்கிய செய்தி இது அனைவருக்கும் தெரியும், ஆனால் ஏன் வெளியெ சொல்வதில்லை அதுதான் தமிழரின் அற்புத குணங்களில் ஒன்று முகநூலிலும் இதர இணையத்திலும் தமிழனின் பெருமையை பார் என்று பொய்களை அள்ளி அள்ளி வீசுவான், அந்த பொய்யை இரசிக்க ஆயிரம் சேர்களும் லைக்குகளும், 

ஆனால் உண்மையை பகிரமாட்டான் ஏன் தெரியுமா. அடுத்தவன் எக்கேடு கெட்டுப்போகட்டும் நான் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் (பேருந்தில் நிற்க முடியாத நிலையில் ஒரு முதியவர் இருக்கும் போது இரண்டு வயது குழந்தையை சீட்டில் உட்கார வைத்து இடம் கொடுக்க கூறினால் குழந்தைக்கு காய்ச்சலுங்க பெரியவர் என்ன அவசர வேலையாகவா போகிறார்) காலியாக வரும் பஸ்ஸில் ஏறவேன்டியது தானே என்று சொல்லும்............................

இதை(கெட்டுப்போன மாமிசம்) அரசு எந்த அளவிற்கு தடுக்க முடியும் என்றால் முடியாத காரியம் தான் ஊறிப்போன லஞ்ச பரிமாற்றம். அரசு திட்டமிட்டால் கீழே வர வர காணாமல் போகும். ஒரு நாள் நடவடிக்கை எடுத்தால் இரண்டு நாள் கழித்து மீண்டும் வந்து விடும் நாம் தான் இதை தடுத்து நிறுத்த முடியும் எப்படி உண்மையை எடுத்துக்கூறுங்கள் பலருக்கு தெரிவியுங்கள் கூட்டம் குறையும் போது தன்னாலேயே நல்ல பொருளை வாங்கி விற்க ஆரம்பிப்பார்கள், அப்போதுஅவர்களுக்கு துணிவு வரும் லஞ்சம் வாங்க வருபவர்களுக்கு பயப்பட தேவையில்லாமல் போகும் நல்ல மாற்றம் வரும்

நன்றி -செந்தமிழ் நாடெனும்

டிஸ்கி : நெட்டில் படித்தேன் பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஒரு வரி கூட நான் டைப்பவில்லை.
 

Wednesday, January 30, 2013

முதிர்கண்ணன்கள்

சென்னையின் பேச்சிலர் தங்கும் இடங்களில் நாம் விதவிதமான மனிதர்களை சந்திக்க நேரிடும். புதிதாக சென்னைக்கு வந்து வேலை தேடும் பட்டதாரிகள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், திரைப்பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டு இருக்கும் விருச்சிககாந்த்கள், குடும்ப சூழ்நிலை காரணமாக தன்கையே தனக்குதவி என 40 வயதிலும் திருமணமாகாமல் வேலைக்கு சென்று கொண்டிருக்கும் முதிர்கண்ணன்கள் என வெரைட்டி, வெரைட்டி கதாபாத்திரங்கள் நிறைந்த வாழ்க்கை அது.


இன்றைய கட்டுரையில் நாம் பார்க்கப் போவது இந்த முதிர்கண்ணன்கள் பற்றி தான். எந்த ஹீரோயிசமும் பண்ணாத வாழ்வின் நிஜ ஹீரோக்கள் அவர்கள் தான். சிறுவயதிலேயே அப்பன் காசில் பைக் வாங்கி ரவுசு விட்டு ஹீரோயிசம் காட்டும் அரைவேக்காடுகள் வாழும் இந்த சென்னையில் கண்ணுக்கு தெரியாத தியாக உருவங்கள் முதிர்கண்ணன்கள் தான்.

முதலில் ஆளாக நாம் பார்க்கப் போவது சுந்தரேசனைப் பற்றி. அவரது ஊர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல். என்னுடன் 2001 காலகட்டத்தில் ரூம்மேட்டாக தங்கியிருந்தவர். அப்பொழுது அவருக்கு 35 வயதிருக்கும். குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.

ஐடிஐ முடித்தவர் என்பதால் சம்பளம் குறைவு தான். ஆனாலும் கிடைத்த சம்பளத்தை பெருமளவு ஊருக்கு அனுப்பி வைத்து விட்டு சொற்ப காசில் தான் சென்னையில் காலம் தள்ளுவார். காலை 10 மணி வேலைக்கு 7 மணிக்கே கிளம்ப வேண்டும். இரவு 10 மணிக்கு தான் திரும்ப வருவார். நாங்கள் எல்லாம் துணி துவைக்க ஆள் வைத்திருந்த போதும் அந்த காசையும் மிச்சப்படுத்த வேண்டி சொந்தமாகவே துவைத்துக் கொள்வார்.


ஊரில் நிறைய பேர் 100பவுன் நகையுடன் பொண்ணு தர காத்திருந்தும் வீட்டோடு மாப்பிள்ளையாக விருப்பமில்லாமல் குடும்பத்தின் நலன் வேண்டி எல்லாத்தையும் புறக்கணித்தவர். சனி இரவு நடக்கும் பார்ட்டியில் குடித்து விட்டு புலம்பும் போது தான் ஒரு வயது வந்த ஆண், பெண் துணையின்றி வாழ்வது சிரமம் என்பது புரியும்.

பிறகு நான் அந்த அறையிலிருந்து வெளியே வந்து விட்டேன். பத்து வருடம் கழித்து சென்ட்ரலில் அவரை சந்தித்தேன். ஆளே மாறியிருந்தார். முன்வழுக்கை விழுந்து கொஞ்சம் தொப்பை வேறு போட்டிருந்தார். பக்கத்தில் இருந்த பாரில் அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டு இருந்தோம்.

துபாயில் வேலை செய்வதாகவும் இரண்டு தங்கைகளுக்கு திருமணமாகி விட்டது எனவும் கடைசி தங்கையின் திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்க வேண்டி சென்னை வந்ததாகவும் கூறினார். அடுத்த வருடத்தில் கண்டிப்பாக தனக்கு திருமணம் என்றும் கூறினார்.

எனக்கு பெருமையாக இருந்தது. எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் சற்றுகூட சலனப்படாமல் தங்கைகளுக்கு திருமணம் செய்து கொண்ட பின்பே தனக்கு திருமணம் என உறுதியாக இருந்த அவர் எனக்கு ஹீரோவாகவே தெரிந்தார்.

அடுத்தவர் நான் பணிபுரிந்த கம்பெனியில் சமையற்காரராக கேரளாவில் என்னுடன் பணிபுரிந்த தமிழர். மதுரைக்காரர். மலேசியாவில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து குடும்பத்தை கறையேற்றியவர். ஆனால் தனது இளமையை தொலைத்தவர். ஊரில் சொந்த வீடு கூட இருந்தது.

தம்பியை படிக்க வைத்து தங்கைக்கு திருமணம் செய்து வைத்து வீடு கட்டி முடித்ததும் வயது தாண்டியிருந்தது. இனிமேல் எங்க திருமணம் செய்வது என யோசித்து அந்த எண்ணத்தையே கைவிட்டவர். இரவானால் எங்களோடு தான் குடிப்பார். குழந்தை மனசுக்காரரான அவர் குடித்ததும் செய்யும் காரியங்கள் சிரிப்பை வரவழைக்கும். தனக்கு திருமணமாகவில்லையே என்ற வருத்தம் சிறிதும் இல்லாத நல்ல மனசுக்காரர்.

உண்மையில் நாம் நினைத்துக்கொண்டிருப்பது பெண்கள் தான் உணர்ச்சி மயமானவர்கள், குடும்ப பொறுப்பு உள்ளவர்கள், ஆண்கள் எல்லாம் வாழ்க்கையை அனுபவிப்பவர்கள். பொறுப்பற்றவர்கள். ஆனால் எத்தனை ஆண்கள் சென்னையில் கிடைக்கும் சிறு சம்பளத்திற்காகவும் வாய்ப்புக்காகவும் குடும்ப நிலையை கருத்தில் கொண்டு அவர்களது ஆசாபாசங்களை தியாகம் செய்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.

அவர்கள் போற்றப்பட தக்கவர்கள். ஆனால் அவர்கள் மீது வைக்கப்படும் பொதுவான குற்றசாட்டு அவர்கள் குடிகாரர்கள். சிகரெட் பிடிப்பவர்கள். இவை இரண்டும் தான் ஒருவரின் ஒழுக்கத்தின் அளவீடா. குடித்து விட்டு வம்பு வளர்க்கிற ஆளை விட்டு விடுங்கள். இவ்வளவு ஏக்கத்தையும் வருத்தத்தையும் மனதில் வைத்துக் கொண்டு சற்று நேர ரிலாக்சுக்காக குடித்து விட்டு வருபவர்களை எவனும் மனிதனாகவே மதிப்பதில்லை.

ஆனால் எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் எல்லா துர்குணங்களும் உள்ள ஒருவனை கொண்டாடும் சமூகம் இது. உதாரணம் வேண்டுமா? காஞ்சியில் விக்ரகத்தின் முன் பெண்களை புணர்ந்த அர்ச்சகர் குடிக்கும் பழக்கம் சிகரட் பழக்கம் இல்லாதவர். நித்யானந்தா காபி டீ கூட குடிக்கும் பழக்கம் இல்லாதவர். ஆனால் அந்த புண்ணியவான்கள் செய்த காரியம் என்ன .

இது போல் குடும்பத்திற்காக இளமையை அழித்துக் கொண்டு கடமையில் கண்ணாக இருக்கும் இவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. கும்பிடப் படவேண்டியவர்கள்.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, January 29, 2013

சிவில் முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

BE (Civil) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

இரண்டே நாளில் விசா.

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1700 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

--------------------------------------------------

B.Sc (Catering) 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

இரண்டே நாளில் விசா.

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1700 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.


விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Monday, January 28, 2013

இந்து முஸ்லீம் இடையே பிளவை ஏற்படுத்த நினைக்கும் பதிவர்

ஒரு இசுலாமிய பதிவர் இந்த மாதிரி ஒரு பதிவு போட்டிருக்கிறார். முதலில் பதிவை படியுங்கள். பிறகு என் கருத்தை கூறுகிறேன்.


அமீரின் ஆதிபகவனுக்கு சிக்கல்.. இப்போது ஆட்சேபணை இந்துக்களிடமிருந்து...!
>> Monday, January 28, 2013

அமீர் இயக்கத்தில் உருவாகி விரைவில் வெளியாகவிருக்கும் ஆதிபகவன் படம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

இந்தப் படம் இந்துக்களை புண்படுத்துவதாக உள்ளதாகக் கூறி வெளியிடும் முன் படத்தைத் திரையிட்டுக் காட்டக் கோரியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தில் வக்கீல்களாக உள்ள கிருஷ்ணமூர்த்தி, துரைசெல்வன் ஆகியோர் இன்று போலீஸ் கமிஷனரிடம் ‘ஜெயம்' ரவி நடித்த ‘ஆதிபகவன்' படத்துக்கு எதிராக புகார் மனு அளித்தனர்.

அதில், "இயக்குனர் அமீர் ஏற்கனவே ‘ராம்' என்ற படத்தை எடுத்தார். அதில் கதாநாயகனை சைக்கோவாக காட்டினார்.  தற்போது ‘ஆதிபகவன்' என்ற படத்தை எடுக்கிறார்.

‘ஆதிபகவன்' என்பது இந்துக்கள் கடவுளான விநாயகர், சிவபெருமானை குறிக்கும்.  ‘ஆதிபகவன்' படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம்.

எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும்.

‘ஆதிபகவன்‘ தலைப்பையும் நீக்க வேண்டும்," என்று கோரியுள்ளார்.

SOURCE:http://tamil.oneindia.in/movies/news/2013/01/ameer-s-aadhi-bhagavan-trouble-now-168751.html


( இந்த அறிவு ஜீவி லேபிள்ல என்ன போட்டிருக்கு பாருங்க.)

படித்து முடிச்சாச்சா, இதை எழுதிய பெரிய மனுசன் தலைப்புல எல்லா இந்துக்களும் ஆட்சேபணை தெரிவிப்பது மாதிரி போட்டிருக்கிறார்.  ஏன்யா கொஞ்சமாவது புத்தி இருக்காதா, இந்த ஆட்சேபணை எடுத்து ஒரு மிகச்சில நபர்கள் உள்ள ஒரு அமைப்பு, அவனுங்க தான் கொஞ்சம் கூட நாகரிகமில்லாம தெண்டத்துக்கு ஒரு மனுவை கொடுத்திருந்தாங்கனாக்கா, நீங்க எப்படியா அது ஒட்டு மொத்த இந்துக்களின் கருத்தாக எடுத்துக்குவீங்க.

உனக்கு என்ன புத்தி தெரியுமா, எப்பொழுதும் இந்துவும் இசுலாமியனும் அடிச்சிக்கனும். பரபரப்பா நீங்க அரசியல் பண்ணனும், உங்க சமூகத்துல தான் தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் வேறு வழியில்லாமல் இசுலாமிய அமைப்புகளை ஆதரிக்கனும், இல்லையென்றால் புதுகை அப்துல்லா அண்ணன் இன்னும் சில இசுலாமிய நண்பர்கள் மேல் சேற்றை வாரி இறைத்த மாதிரி இறைப்பீர்கள்.

இந்துக்களுக்கு அப்படி கிடையாது. எண்ணிப் பார்த்தால் மிகச்சில அறிவில்லா உணர்ச்சி வசப்படக்கூடிய நபர்கள் மட்டுமே ஆதிபகவன் படத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அவர்களுக்கு பெரும்பான்மையான இந்துக்களிடமிருந்தே ஆதரவு கிடைக்காது என்று தெரியும்.

அவர்களது அமைப்பு இந்துக்கள் மத்தியில் பிரபலமானால் போதும், அதற்கு இது ஒரு வாய்ப்பு. இது அவர்களுக்கும் தெரியும்.

ஆனால் நீங்கள் ஒரு சகுனி, கூனி, நாரதர். இரு மதத்தினர் ஒன்றாக இருந்தால் பொறுக்காது.எப்பொழுதும் அடுத்தவர் சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். வெளங்கிடும் ராசாக்களா.

உனக்கு உன் மதம் பெரிது. எனக்கு என் மதம் பெரிது. கரெக்டா, உன் பெருமையை உன்னுடன் வச்சிக்கோ, என் பெருமையை என்னுடன் வச்சிக்கிறேன். நீயும் நானும் சந்திக்கும் போது மனிதத்துவம் தெரிந்தால் போதும். எப்ப தான் தங்கங்களா உங்களுக்கு புரியப்போகுது.

-----------------------------

http://vimeo.com/58302985
என்ற ஒரு வீடியோவில் ஒரு இசுலாமியர் என்று கூறிக் கொள்ளும் ஒரு வெளங்காவெட்டி பேசியிருக்கிற பேச்சப்பாருங்கள். இசுலாமியர்கள் மேல் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையும் சுத்தமாக விட்டுப் போகும். எங்கிருந்து வந்தது இந்தளவுக்கு உங்களுக்கு இந்துக்கள் மேல் காழ்ப்புணர்ச்சி.

நிறைய நண்பர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். இது போல் பேசும் நபர்கள் சவுதியிலிருந்து இயக்கபடுகிறார்கள் என்று. எனக்கு நம்பிக்கையில்லாமல் இருந்தது, என்ன தான் மதம் ஒன்றாக இருந்தாலும் இனத்தால் தமிழன் என்பதையே முன்னெடுத்து இது போன்ற விஷமப் பிரச்சாரங்களில் ஈடுபட மாட்டார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அத்தனையும் பொய் என்று இப்பொழுது கண்டு கொண்டேன்.

தந்தையையும் மகளையும் சேர்த்து வைத்து வைத்து கொச்சைப்படுத்தி பேசும் உனக்கு என்ன மயித்துக்கு மரியாதை தரனும். நூறு பேரை கூட்டி வச்சி ஒரு அரங்கினுள் இது போல் வெக்கம்கெட்டு பேசினால் நீ வீரனா. மானம்கெட்டவனே.

உன் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் பெண்கள், எங்கள் வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் ஜடங்கள் என்ற நினைப்பா. நான் எந்த இடத்தில் உன்னை நேரில் பார்த்தாலும் காறித் துப்புவேனே தவிர உன்னை மனித ஜென்மமாகவே நினைக்க மாட்டேன்.

எந்த ஒரு இசுலாமிய பதிவர் இந்த பயல் பேச்சுக்கு ஒத்து ஊதினாலும் அவருக்கும் இனி எங்குமே மரியாதை கிடையாது. இனி எந்த இடத்திலும் நீங்களும் நாங்களும் ஒன்றாக இருக்க முடியாது என்ற நிலையை எடுக்க வைத்து விடாதீர்கள்.

ஆரூர் மூனா செந்தில்


டபுள் ஹீரோ சப்ஜெக்ட்

பொதுவாக இந்திய சினிமாவில் இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் பழிவாங்கும் கதையாகவே அமைந்து விடுவதன் மர்மம் தான் எனக்கு புரியவில்லை. மற்றமொழிகளில் இரண்டு நாயகர்கள் நடிக்கும் பழிவாங்கும் கதைகளில் இரட்டை வேடத்தில் நடித்து அசத்துபவர்கள் நமது தமிழ் நாயகர்கள் தான்.


நாயகர்களின் அப்பா துணிச்சலான கோழையாக இருப்பார். வில்லன் செய்யும் கொலையை பார்த்து விடுவார். நீதிமன்றத்தில் சாட்சி சொல்லும் ஹீரோக்களின் அப்பாவை சொல்லாதே என்று நீதிபதியின் முன்னாலேயே எச்சரிப்பார். அதனை பொருட்படுத்தாத அப்பா சாட்சி சொல்லி தண்டனை வாங்கி கொடுப்பார்.

தண்டனை பெற்ற வில்லன் ஜெயிலில் இருந்து தப்பித்து ஹீரோக்களின் அம்மா கண் முன்னாலேயே அப்பாவை கொன்று விடுவார். அந்த இடத்தில் வில்லன் சென்றதும் மகன்களை வைத்து சபதம் எடுக்கும் அம்மா ஒரு மகனை பொது இடத்தில் தொலைத்து விடுவார்.


இரண்டு மகன்களும் வளர்ந்து ஃபிகர்களை டாவடித்து பிறகு பாட்டுப்பாடி காதலித்து ஒரு சந்தர்ப்பத்தில் குடும்பப் பாட்டு பாடி ஒன்று சேர்வர். இருவரும் ஒன்று சேர்ந்து க்ளைமாக்ஸில் வில்லனை கதற கதற கொன்று வில்லனின் உடலை அம்மாவின் காலடியில் சமர்ப்பிப்பர்.

இந்திய சினிமாவில் வந்துள்ள 95 சதவீத படங்களில் இது தான் கதையாக இருக்கும். கொஞ்சம் அக்கா, தங்கச்சி கேரக்டர்கள் கூட சேர்ந்து சிறுசிறு மாற்றங்கள் அமைத்து ஒரு கற்பழிப்பு காட்சியை சேர்த்து வரும் படங்கள் கூட வெற்றி பெற்றதுண்டு.


இந்த இலக்கணத்தை உடைத்த படங்கள் வெகு சொற்பமே. இந்தியில் மாற்றி அமைத்த படம் கபி குஷி கபி கம். மூன்று பெரிய நாயகர்கள் நடித்தும் ஒரு ஆக்சன் காட்சி கூட அமைக்காமல் சென்டிமெண்ட் காட்சிகளாக  அமைத்து சூப்பர் ஹிட்டான படம் அது தான்.

அந்த படம் வந்த காலத்தில் எனக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது. என்னுடன் படம் பார்த்த சென்னை நண்பன் சந்தோஷ் வாரம் இரண்டு ஹிந்தி படங்களை பார்க்கும் வழக்கமுள்ளவன்.


ஒவ்வொரு படத்தையும் பார்த்து விட்டு வந்து ஆக்சன் சீன்வன்சுடன் படத்தின் கதையை விவரித்து சொல்லுவான். சந்தோஷ் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் பல மொழிகள் தெரிந்திருக்கிறது, நாம் கூட இங்கேயே வளர்ந்திருக்கலாம் என்று பொறாமைப்பட்ட காலங்கள் உண்டு.

கபி குஷி கபி கம் படம் பார்க்கும் போது அவனிடம் வரிக்கு வரி அர்த்தம் கேட்க சில நிமிடங்கள் சொல்லி வந்தவன் பிறகு கடுப்பாகி படத்தை பாரு என்று சொல்லி விட்டு அமைதியாகி விட்டான். நான் பாஷை தெரியாமலேயே பார்த்து ரசித்தேன்.

நான் பல மாநிலங்களில் சுற்றித் திரிந்து ஹிந்தியை கற்றுக் கொண்டு பல வருடங்களுக்கு பிறகு சென்னை வந்து செட்டிலானேன். ரங்க் தே பசந்தி படம் வெளியான சமயம் அவனை கூட்டிக் கொண்டு சத்யம் திரையரங்கிற்கு சினிமாவுக்கு போனேன்.

படம் ஆரம்பித்து நான் வசனங்கள் புரிந்து படி இடங்களில் சிரிக்கவே அவன் என்னிடம் வார்த்தைகளுக்கு அர்த்தம் கேட்டான். பிறகு தான் தெரிந்தது. அந்த நாதாரிக்கு ஒரு வார்த்தை கூட ஹிந்தி தெரியாது என்று. மற்றவர்கள் முன் பந்தா காட்ட வேண்டுமென்பதற்காகவே அந்த மாதிரி நடித்தான் என்று தெரிய வந்தது.

மறுநாள் இரவு நண்பர்கள் பலருக்கு போன் போட்டு பார்ட்டிக்கு கூப்பிட்டு சந்தோஷ் ஹிந்தி மேட்டரில் இத்தனை வருடங்களாக ஏமாற்றியதை போட்டுக் கொடுக்க அவனவன் சந்தோஷை போட்டு சாத்தினார்கள்.

அது போல தெலுகுக்கு வந்துள்ள டபுள் ஹீரோ டிரெண்ட் செட்டர் படம் சீதம்மா வகிட்லோ செருமல்லி செட்டு. தெலுகின் முன்னணி நாயகர்கள் வெங்கடேஷ் மற்றும் மகேஷ் பாபு நடித்து வந்துள்ள இந்த படத்தில் மருந்துக்கு கூட ஹீரோயிசம் இல்லை. சட்டை பட்டனை கழற்றி விட்டு திரியும் வெட்டி பந்தா இல்லை. கலர் பொடி வெடிக்கும் குத்து பாடல்கள் இல்லை.

படம் வரலாறு காணாத அல்லோலகல்லோல ஹிட். தெலுகு சினிமா கூட திருந்தத் தொடங்கியிருக்கிறது. ஆனால் அவர்களை விட சற்று உயர்ந்த ரசனையில் இருக்கும் தமிழ் சினிமா என்று பீற்றிக் கொண்டு இருக்கும் நாம் தான் அலெக்ஸ் பாண்டியனை இன்னும் திரையரங்குளில் ஒட விட்டுக் கொண்டு இருக்கிறோம்.




ஆரூர் மூனா செந்தில்

Saturday, January 26, 2013

டிப்ளமோ முடித்தவர்களுக்கு சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்கள் உதவியாளர் வேலைக்குத் தேவை.

5 நாட்களில் விசா

டிப்ளமோவின் மெக்கானிக்கல், சிவில், ECE, எலக்ட்ரிக்கல் முடித்தவர்கள்

குறைந்தபட்சம் ஒரு வருடம் முன்அனுபவம் தேவை.

சம்பளம் : 650 சிங்கப்பூர் டாலர்

OT per Hour : 5 சிங்கப்பூர் டாலர்

ஒரு நாளைக்கு : 4 மணிநேர  OT கட்டாயம்

தங்குமிடம் இலவசம்

----------------------

பட்டப்படிப்பு முடித்தவர்கள் அலுவலக உதவியாளர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1600 சிங்கப்பூர் டாலர்

தங்குமிடம் இலவசம்

----------------------


பட்டப்படிப்பு முடித்தவர்கள் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் வேலைக்குத் தேவை.

சம்பளம் : 1400 சிங்கப்பூர் டாலர்

தங்குமிடம் இலவசம்

----------------------

விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, January 25, 2013

பிளாக் ஹாக் டவுன் (Black Hack Down)



நேற்று ஆங்கிலப்படம் ஒன்று நண்பனின் வீட்டில் டிவிடியில் பார்க்க நேர்ந்தது. துவங்கிய சில நிமிடங்களிலேயே படத்துடன் நான் ஒன்றி விட்டேன். ஒரு போரின் உண்மை சம்பவம். இந்தப்படம் 2001ல் வந்தது. பிலடெல்பியா என்கொயரர் கட்டுரைகள் மற்றும் மார்க் பெளடன் எழுதிய புத்தகத்தின் ஒரு தொடரை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஒரு அமெரி்க்க ராணுவ நடவடிக்கையின் உண்மை சம்பவம் பற்றிய படம் இது.

சோமாலியா நாட்டில் நடந்த உள்நாட்டுப்போரை கட்டுப்படுத்த சென்ற ஐநா அமைதிகுழுவில் அமெரிக்க ராணுவம் ஒரு ஆபரேஷனை அக்டோபர் 3, 1993 அன்று 100க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர், ராணுவ வண்டிகள் ஆகியவற்றுடன் செய்ய திட்டமிடுகிறது. அதாவது தீவிரவாத குழுவின் இரண்டு அரசியல் தலைவர்கள் ஒரிடத்தில் சந்திக்க வருகிறார்கள் என்ற தகவல் ரகசியமாக கிடைக்கிறது. அவர்கள் இருவரையும் பிடிக்க ராணுவ தலைவர் மற்ற நாட்டு படையினருக்கு தெரியாமல் திட்டமிடுகிறார்.

சரியான நேரத்தில் படைகள் கிளம்புகின்றன. ஆனால் அவர்கள் நகரை வந்தடையும் முன் சோமாலிய போராளிகளுக்கு தகவல் சென்று சேர்ந்து விடுகிறது. எனவே அவர்களும் ஊர் முழுவதும் படையை திரட்டி அமெரிக்க ராணுவதத்தினரை எதிர்க்க ஆயத்தமாகின்றார்கள். அமெரிக்கப்படை இலக்கிற்கு வந்து சேர்ந்தவுடன் சண்டை துவங்குகிறது. அரசியல் கைதிகளை ஏற்றிய வண்டி தப்பித்து நகரைத் தாண்டி அமெரிக்கன் கேம்ப்புக்கு வந்து சேர்ந்து விடுகிறது.

சண்டை தீவிரமடையும் போது அமெரிக்காவின் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் சோமாலிய போராளிகளால் சுட்டு வீழ்த்தப்படுகிறது. சண்டை இரவு வரை நீடிக்கிறது. அமெரிக்க ராணுவத்தினர் பலர் கொல்லப்படுகின்றனர். அமெரிக்க ராணுவம் வேறு வழியில்லாமல் பக்கத்தில் இருக்கும் பாகிஸ்தான் ராணுவ படைகளிடம் உதவி கேட்கிறது. அவர்கள் வந்து மீதமுள்ள அமெரிக்க ராணுவத்தினரை காப்பாற்றி செல்வதே கதை. படத்தின் முடிவில் இந்த போரின் இறுதியாக 1000 சோமாலியர்களும் 19 அமெரிக்க ராணுவத்தினரும் இறந்ததாக சொல்லப்படுகிறது. மனதை கனக்க வைக்கிற போர் இது.

இது போல் நடக்கக்கூடாது என்று என் மனமும் நினைவும் சொல்கிறது. கண்டிப்பாக இது வரை யாரும் பார்க்காமல் இருந்தால் பார்க்க வேண்டிய படம் இது.

அந்த போர்க்காட்சி இப்பொழுது வரை என் நினைவில் நிற்கிறது. முதல் உலங்கு வானூர்தி வீழ்த்தப்படும் போது மனது பதபதைப்பாகிறது. இரண்டாவது உலங்கு வானூர்தி வீழ்த்தப்பட்டதும் இன்னும் கனக்கிறது. நாம் இந்தியன் என்ற போதிலும் படத்தில் கொத்து கொத்தாய் செத்து மடியும் எதிரிகள் சோமாலியர்கள் என்றாலும் செத்து விழும் ஒவ்வொரு அமெரிக்க ராணுவ வீரர்களை பார்க்கும் போதும் கனக்கிறது.

இப்படித்தானே சோமாலியர்களைப் போல ஒவ்வொரு ஈழத்தமிழர்களும் வீழ்ந்திருப்பார்கள். கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். உங்களுக்கும் வலிக்கும். படம் அமெரிக்கனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. அதுதான் வருத்தம்.

இதுபோல் தமிழீழப்போரை படமாக எடுத்தால் தான் ஈழப்போரின் வலி நமக்கு புரியும் என்று நினைக்கிறேன். இந்தப்படத்தைப் பாருங்கள். தம் நிலத்தை வீழ்த்தக்கூடாது என்ற சோமாலியர்களின் பதபதைப்பு புரியும்.

ஆரூர் முனா செந்தில்


டிஸ்கி : நண்பர்களே இது ஒரு மீள் பதிவு

Thursday, January 24, 2013

ஐ சப்போர்ட் கமல்ஹாசன்

சின்ன வயதிலிருந்தே எனக்கு கமல்ஹாசனை பிடிக்காது. எந்த ஒரு குழுவிலும் ரஜினி ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் என இரு பிரிவு இருக்கும். நான் ரஜினி ரசிகர் குழுவில் இருந்தேன். அந்த வயதில் எந்த காரணமும் இல்லாமல் ரஜினியை பிடித்ததனால் கமலை பிடிக்காது.


தளபதியும் குணாவும் ஒரே நாளில் வெளியான போது குணாவை மொக்கை என்று கிண்டல் செய்து எங்கள் தெருவில் போஸ்டர் எல்லாம் ஒட்டினோம். போஸ்டர் என்றால் காசு கொடுத்தா அடிக்க முடியும். நோட்டு புத்தகத்தில் இருந்து பேப்பரை கிழித்து அதில் எழுதி சோற்றுப்பருக்கைகளை கொண்டு ஒட்டுவோம்.

அதே போல் பாண்டியனும் தேவர் மகனும் ஒரே நாளில் வெளியான போது கமல் ரசிகர்களிடம் இருந்து அதே போன்றதொரு அவமானத்தை நாங்கள் திரும்ப வாங்கிக் கொண்டோம். எனக்கு கூட தேவர்மகன் அளவுக்கு பாண்டியன் சூப்பர் ஹிட்டாக அமையவில்லையே என்று அழுகையாக வந்தது.

பிறகு வயது ஏற ஏற மெச்சூரிட்டி வந்து எந்த படத்தை நாங்கள் மொக்கை என்று காலி செய்து கழுவி ஊத்தினோமோ அதே குணா எனது சிறந்த படங்கள் பட்டியலில் இடம் பிடித்தது. படத்தில் கமலின் உழைப்பு அசர வைத்தது.


அன்றும் இன்றும் என்றும் எனது பேவரைட் படம் அன்பே சிவம் தான். ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த படம் தான். ஆனால் அந்த படம் கூட சரியாக ஒடவில்லை. இன்று நமக்கு சரியான மொக்கை என்று நாம் நினைக்கும் கமல் படம் சில வருடம் கழித்து மறக்க முடியாத படமாக அமைகிறது.

இப்பொழுது விஸ்வரூபம் படத்திற்கு வருவோம். சாதாரணமாக எனக்கு இந்த படத்தில் எந்தவித எதிர்பார்ப்புமில்லை. எப்பொழுதும் படங்களை முதல்நாள் முதல் காட்சி பார்க்கும் நான் இந்த படத்திற்கு முன்பதிவே செய்யவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையில் நான் கமலை ஆதரிக்காவிட்டால் மனிதநேயமிக்கவனாக இருக்கமாட்டேன் என்று தோன்றியது.

அதற்காகத்தான் இந்த பதிவை எழுதுகிறேன். ஒரு படம் எடுத்து வெளியில் வந்து நல்லாயில்லா விட்டால் அதுவே ஆட்டோமெட்டிக்காக பெட்டிக்குள் போகப் போகிறது. அதுவும் கமலின் படங்களுக்கு இரண்டே நிலை தான். சூப்பர் ஹிட்டு அல்லது சூரமொக்கை. சீண்டாமல் விட்டிருந்தாலே அது பாட்டுக்கு வந்து போய் இருக்கப் போகிறது.


படத்தில் ஒரு சமூகத்தை சேர்ந்தவனை வில்லன் போல் காண்பித்தால் அந்த சமூகத்தை அவமானப்படுத்துவதாகும் என்று நீங்கள் நினைப்பது நகைப்புக்குரிய விஷயமாக இருக்கிறது. இதே கமல் தான் ஹேராம் படத்தில் ஒரு இஸ்லாமியனான ஷாருக்கானை நல்லவனாகவும் தீவிர இந்துத்வாவான கமலை கெட்டவனாகவும் சித்திரித்திருந்தார். அதற்காக இங்குள்ள இந்துக்கள் எல்லாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனாரா என்ன.

இத்தனைக்கும் படம் அட்டர் பிளாப். படம் பார்க்க போனவன் எல்லாம் இன்டர்வெல்லுடன் வெளியில் தெறிச்சி ஓடி வந்தான். சீண்டப்படாமல் போனதாலேயே அது புறக்கணிப்பட்டது. அது போல் இந்த படத்தையும் கண்டுகொள்ளாமல் இருந்தால் அதுவும் மொக்கையாக இருந்திருந்தால் படம் தோல்வியடைந்திருக்கும்.


இப்பொழுது வீணான பிரச்சனையை கிளப்பி படத்திற்கு ஏகப்பட்ட பப்ளிசிட்டியை கிளப்பி விட்டீர்கள். இது தேவையற்ற பிரச்சனை என்று நான் நினைப்பதால் கமல்ஹாசன் பக்கம் நான் நிற்கிறேன்.

இது நியாயமற்றது. ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு தங்களது சமூகத்தை அவமானப்படுத்துகிறது என்று நினைத்தால் அது எப்படி சரியான கருத்தாக இருக்க முடியும். மற்றவர்களும் பார்த்து சொல்வது தானே நியாயமாக இருக்கும். ஒரு படத்திற்கு சென்சார் போர்டு சர்டிபிகேட் கொடுத்த பிறகு ஒரு மதத்தினை சார்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் செய்து படத்தினை வெளியிட விடாமல் தடுக்க முடியுமென்றால் எதற்கு அரசாங்கம். நிர்வகிக்க மக்கள் பிரதிநிதிகள் எதற்கு.

இடையில் ஒருவர் ப்ளஸ் விட்டு பொங்குகிறார். கமல்ஹாசன் முத்தக்காட்சியை வைத்து சமூகத்தை அவமானப்படுத்துகிறார் என்று. ஏனப்பா இவ்வளவு கட்டுப்பாடும் சம்பிரதாயங்களும் கொண்ட உன் சமூகத்தில் இருந்தே ஆர்யா படங்களில் முத்தக்காட்சியை வைக்கிறார். நீங்களும் தான் ரசிக்கிறீர்கள். சுத்தப்படுத்துவதை தங்களது இடத்தில் இருந்தே துவங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். முதலில் ஆர்யாவை மன்னிப்பு கேட்க வைத்து பிறகு கமல்ஹாசனிடம் பொங்கலை வைத்துக் கொள்ளவும்.

ஒரு மதத்தினை பின்பற்றும் நீங்கள் உங்கள் சமூகத்தை சேர்ந்த ஒரு சிலர் படத்தை பார்த்து விட்டு வந்து இது உங்கள் சமூகத்தை இழிவுபடுத்துகிறது என்று சொன்னால் அதை கேட்டு இணையத்தில் கண்டனம் தெரிவித்து இஷ்டத்திற்கு எழுதித் தள்ளுவது நியாயம் என்றால் ஒரு பகுத்தறிவுவாதியான நான் மற்றொரு பகுத்தறிவுவாதியான கமல்ஹாசன் ஒரு சமூகத்தை இழிவுபடுத்துவது மாதிரியான காட்சிகளை வைக்கமாட்டார் என்று நான் நம்பி அவரை ஆதரித்து பதிவு எழுதுவதும் நியாயம் தான்.

தமிழ்நாட்டுல மட்டும் தானே நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். நான் ஆந்திராவுக்கு சென்று படம் பார்த்து விட்டு வந்தால் என்ன செய்ய முடியும். என்னைப் போல் பலர் காலைக் காட்சி பார்க்க ஆந்திரா கிளம்புகின்றனர். நகரியிலோ அல்லது புத்தூரிலோ பார்த்து விட்டு ஒரு மணிநேரத்தில் சென்னைக்கு திரும்பி விட முடியும். அநியாயமா ரஜினி ரசிகனான என்னை கமலுக்கு ஆதரவாக பதிவு போட வச்சிட்டீங்களே.

28ம்தேதி தடையை நீக்கினால் மறுபடியும் இரண்டாம் முறை பார்க்கப்போகிறேன். அவ்வளவு தான்.

படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கும் சினிமா ரசிகர்களில் ஒருவனான


ஆரூர் மூனா செந்தில்




டிஸ்கி : நண்பர்களே மிக முக்கிய செய்தி சென்னையை அடுத்த ஆந்திராவின் எல்லையோர நகரான கூடூரில் படம் திரையிடப்பட்டு உள்ளது. அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. சென்ட்ரலில் இருந்து ஒரு ரயிலில் ஏறினால் இரண்டு மணிநேரத்தில் கூடூர் வந்துவிடும். அங்கு 40 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்த்து விட்டு ஹாயாக திரும்ப வந்து விடலாம்.



Wednesday, January 23, 2013

பெரியமேடு பிரியாணியில் தில்லுமுல்லு நடக்கிறதா?

ரொம்ப வருடங்களாக அதாவது கிட்டத்தட்ட 15 வருடங்களாக சென்னையில் பிரியாணி என்றால் என் முதல் சாய்ஸ் பெரியமேடு பிரியாணி தான். அதன் சுவையை அடிச்சிக்கவே முடியாது. இன்றும் கூட வெறும் 90 ரூபாய்க்கு நான்கு பெரிய பீஸ் மட்டனுடன் பிரியாணி கொடுக்கிறார்கள்.



எப்பொழுது சென்ட்ரல் பக்கம் வந்தாலும் வேலை முடிந்ததும் நடந்து வந்தாவது பெரியமேட்டில் பிரியாணி தின்று விட்டு பிறகு நடந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடைந்து ரயிலில் செல்வது வழக்கமாக வைத்திருந்தேன்.

நண்பர்கள் ஒன்று கூடி கெட்டூகெதர் பார்ட்டி குடும்பத்துடன் கொண்டாடினால் கூட விருந்துக்கு கிலோக்கணக்கில் இங்கிருந்து பிரியாணி வாங்கி கொண்டு போய் விழாவை சிறப்பிப்பது வழக்கம்.

நமது பதிவுலக நண்பர்கள் பலபேர் கூட பெரியமேடு பிரியாணி கடையின் வழக்கமான கஸ்டமர்களே. எந்தவித சர்ச்சையும் இன்றி இத்தனை நாட்கள் சென்று கொண்டிருந்த இந்த விஷயம் இரண்டு நாட்களாக போட்டு மனதை வருத்தப்பட வைத்துக் கொண்டு இருக்கிறது.



என்னுடைய நண்பனின் மாமா ஒருவர் விஜயவாடாவில் பிரியாணி கடை வைத்து நடத்தி வருகின்றார். திங்களன்று நண்பன் வீட்டில் அவரை பார்த்து அளவளாவிக் கொண்டு இருந்தேன். பேச்சு பல இடங்களில் சுற்றித் திரிந்து பிரியாணிக்கு வந்தது.

நான் பெரியமேடு பிரியாணியைப் பற்றி அவரிடம் பெருமையாக கூற அவரோ 90 ரூபாய்க்கு நான்கு துண்டு மட்டனுடன் பிரியாணி வாய்ப்பே இல்லையென்றும் நான் வேண்டுமானால் சாப்பிட்டுப் பார்த்து சொல்வதாக கூறினார்.

அவரை அழைத்துக் கொண்டு நான் வழக்கமாக பிரியாணி சாப்பிடும் கடைக்கு அழைத்துச் சென்றேன். அந்தக் கடை பெரியமேடு மசூதியின் எதிர்ப்புறம் உள்ள சந்தில் முதல்மாடியில் உள்ளது. தரைத்தளத்தில் லாட்ஜ் மற்றும் பார்சல் கட்டித்தருவது உண்டு.

எப்பொழுதும் கூட்டம் நிறைந்து காணப்படும் அந்த இடத்திற்கு நாங்கள் சென்று சாப்பிட அமர்ந்தோம். பிரியாணி இலையில் பறிமாறப்பட்டது. மட்டன் துண்டுகளை கையால் சோதித்தும் சாப்பிட்டும் பார்த்தவர் இது மட்டனே கிடையாது வீல் என்று கூறினார்.

வீல் என்ற வார்த்தைக்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. பிறகு விளக்கம் வெளியில் வந்து கேட்ட பிறகு தான் சொன்னார். மாட்டுக் கன்றுக்குட்டி கறி தான் ஆங்கிலத்தில் வீல் என்று கூறினார்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இது வழக்கமாக விஜயவாடாவில் நடைபெறும் ஒன்று தான் என்று சொன்னார். எலும்புத்துண்டுகள் மட்டும் மட்டனுடையது என்றும் கறித்துண்டுகள் எல்லாம் வீல் என்றும் அவை தெரியா வண்ணம் கலக்கப்படும் என்றும் சொன்னார்.

சரி இன்றும் மற்றொரு கடையில் சோதித்து பார்த்து விடலாம் என்று அதே சந்தில் முன்சொன்ன கடைக்கு முன்பு உள்ள மற்றொரு கடையில் இன்று சாப்பிட்டோம். அதையும் சாப்பிட்டுப் பார்த்து வீல் கறி என்றே சொன்னார்.

சொன்னவர் தனது வேலையை முடித்து விட்டு சத்தமில்லாமல் விஜயவாடாவுக்கு ரயிலேறி போய் விட்டார். கேள்விப்பட்ட நாங்கள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு உள்ளோம். காலம்காலமாக சாப்பிட்டு வந்த கடையில் இந்தளவுக்கு டகால்டி நடக்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வேளை அவர் சொன்னது பொய்யாகக் கூட இருக்கலாம் ஆனால் உண்மையாக இருந்தால் இது ஏமாற்று வேலையல்லவா. நண்பர்களே தங்களுக்கு இந்த அனுபவம் இருந்தால் பகிருங்கள். நான் சொன்னதில் தவறு இருப்பினும் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

எது உண்மை என்று புரியாமல் மண்டை குழம்பி கிடக்கும்


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, January 22, 2013

பயன்பாட்டில் இருந்த இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் இன்ஜின்

இந்தியா முழுவதும் உள்ள மீட்டர்கேஜ் ரயில்பாதைகள் ப்ராட்கேஜாக மாற்றப்பட்டு வருகின்றன. கிட்டத்த அனைத்து பாதைகளும் மாற்றப்பட்டு விட்ட நிலையில் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு இந்தியாவின் கடைசி மீட்டர்கேஜ் ரயில்கள் சென்று கொண்டிருந்தன.

கடந்த மாதம் அவையும் நிறுத்தப்பட்டு ப்ராட்கேஜாக மாற்ற வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. இதுநாள் வரை ஒடிக் கொண்டு இருந்த ரயில் பெட்டிகள் மற்றும் இன்ஜின்கள் மற்றொரு ரயிலில் ஏற்றப்பட்டு திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. 


இந்தியாவின் கட்டேக்கடேசியான உபயோகத்தில் இருந்த மீட்டர்கேஜ் இன்ஜின்கள் இவை தான். திருவாரூரில் இருந்த தம்பி தியாகேசன் செல்லும் வழியில் நின்று கொண்டிருந்த இன்ஜின்களை போட்டோ எடுத்து அனுப்பினார். அனுப்பிய தியாகேசனுக்கு நன்றிகள் பல. 


---

 
நீங்களும் பார்த்து வழியனுப்பி வையுங்கள். இனி மீட்டர்கேஜ் இன்ஜினை எங்கும் பார்க்க முடியாது.

நன்றி : தியாகேசன்


ஆரூர் மூனா செந்தில்

Monday, January 21, 2013

புத்தக கண்காட்சி - அறியாத தகவல்கள் - அரிய புகைப்படங்கள்

இந்துவா பொறந்தவன் கோயிலுக்கு போகலைனா தெய்வகுத்தம்னு சொல்றது போல பதிவெழுதுறவங்கன்னா புத்தக கண்காட்சிக்கு போயிட்டு வந்து பதிவா போடனும். கூடவே வாங்கின புத்தகங்களின் லிஸ்ட்டையும் விலையுடன் பகிரனும். இல்லைனா பிரபல(?) பதிவர்னு ஒத்துக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.


ஆனா எல்லாப் பதிவர்களின் புத்தக கண்காட்சி பதிவையும் படித்துப் பார்த்தால் ஒரே டெம்ப்ளேட் தான். நானும் அதே போல் எழுவில்லையென்றால் ஆடையில்லாதவன் ஊர்ல கோவணம் கட்டுனவன் பைத்தியக்காரன்கிற மாதிரி என்னையும் ஒதுக்கிடுவாங்களோன்னு பயத்துல தான் இந்த பதிவு.

என்னடா தலைப்புல என்னன்னவோ விஷயங்கள் இருக்கிற மாதிரி இருக்கு, ஆனா பதிவுக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமுமில்லையேன்னு நினைக்கிறவங்க புத்திசாலிகள், வருங்காலத்தில் பிலாசபி பிரபாகரன் அளவுக்கு வம்பு வளர்க்கும் பதிவரா வளர வாய்ப்பிருக்கிறது. இப்பதிவின் தலைப்பு உங்களுக்கு வீடுதிரும்பல் ப்ளாக்கை நினைவுபடுத்தினால் நிர்வாகம் பொறுப்பல்ல.


தமிழ் டைப்பிங், பதிவை படிக்கிறது, பதிவை சுவைபட எழுதுவது போன்ற விஷயமெல்லாம் இரண்டு வருடத்திற்குள் தெரிந்த விஷயம். ஆனால் எனக்கு படிப்பது என்பது சிறுவயதில் இருந்தே ஊறிய விஷயம். எனக்கு தெரிந்து 2002ம் ஆண்டிலிருந்தே புத்தக கண்காட்சிக்கு வந்து கொண்டு இருக்கிறேன். அப்பொழுது காயிதே மில்லத் கல்லூரியில் நடந்து கொண்டு இருந்தது.

அப்பொதெல்லாம் எனக்கு கண்காட்சிக்கு வருபவர்களில் நிறைய பேரை தெரியாது. ஆனால் இன்றோ ஒரு வரிசைக்கு ஒருவர் தெரிந்தவராக மாட்டுகிறார்கள். அதிலும் முக்கால்வாசி பேர் பதிவர்களாக இருப்பது கொடுமையிலும் கொடுமை.


இதற்கு முன்பு நடந்த கண்காட்சிகளில் எல்லாம் என்னுடைய அக்காமார்கள், மற்றும் தமிழாசிரியர்கள் எனக்கு நல்ல புத்தகம் என்று அறிமுகப்படுத்திய புத்தகங்களையெல்லாம் வாங்கி விட்டேன், பிறகு சிறந்த நாவலாசிரியர்கள் என்று நான் நினைக்கும் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் வாங்கியாகி விட்டது.

இந்த வருடம் வாங்குவதற்கு எந்த எதிர்ப்பார்ப்புமில்லை. விமலாதித்த மாமல்லன் எழுதிய சின்மயி விவகாரம் மற்றும் நண்பர் பாலகணேஷின் சரிதாயணம் மட்டும் வாங்கினால் போதும் பர்சை அவிழ்க்கவே கூடாது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் கண்காட்சி உள்ளே நுழைந்ததும் காஞ்சமாடு கம்புல புகுந்தது போல நிறையவே புத்தகங்களை வாங்கி விட்டேன். எல்லாவற்றிற்கும் காரணம் கவர்ச்சிகரமான தலைப்பு மட்டுமே.


கூடுதலாக இரண்டு சாப்ட்வேர் தமிழ்வழிக் கல்வி சிடிக்களை வாங்கினேன். போட்டோஷாப் மற்றும் வெப்டிசைனிங் தான் அவை. நேற்று போட்டோஷாப் சிடியை போட்டுப் பார்த்தேன், ஓரளவுக்கு புரிந்தது. இதை வைத்து இரண்டிலும் புகுந்து பார்த்து விட வேண்டியது தான்.

படித்து பார்த்தால் தான் இந்த புத்தகங்களின் தரம் புரியும். மீனாட்சி புத்தக நிலையத்தில் புகுந்து சுஜாதாவின் புத்தகங்களை கன்னாபின்னாவென்று வாங்கி விட்டேன், வீட்டிற்கு வந்து புரட்டிப் பார்த்தால் தான் தெரிகறது. ஏற்கனவே என்னிடம் இருந்த பல சுஜாதாவின் தொகுப்புகளில் இந்த நாவல்கள் இருக்கிறது என்று. எல்லாம் படித்த நாவல்கள்.

ராஜூ முருகனின் வட்டியும் முதலும் எனக்கு மிகவும் பிடித்த தொடராக இருந்தாலும் ஏற்கனவே எல்லா பகுதியையும் படித்து விட்டதால் வாங்க ஆர்வம் காட்டவில்லை. அடுத்த முறை கண்காட்சிக்கு செல்லும் போது படித்ததெல்லாம் மறந்திருக்கும், அப்பொழுது வாங்கி கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு நாட்கள் பதிவுலக நண்பர்களோடு அளவளாவி கூத்தடித்தது நல்ல அனுபவம். நட்புகளை மேலும் நெருக்கமாக்கியது. நேற்று நானும் மெட்ராஸ் பவன் சிவாவும் சென்று பார்த்தால் ஒரு பதிவரையும் காணவில்லை. போரடிக்கவே அங்கிருந்து காமராஜர் அரங்கிற்கு கிரேசி மோகனின் கிரேசி கிஷ்கிந்தா நாடகத்திற்கு ஜூட் விட்டோம்.

பைக்கை எடுத்து வெளியில் வருவதே பெரும்பாடாகி விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் போக்குவரத்து காவலர்கள் கார்களை உள்ளே விட மறுத்து திருப்பி அனுப்பி விட்டனர். எப்படியும் ஆயிரம் கார்களுக்கு மேல் உள்ளே வரமுடியாமல் திரும்பி விட்டனர்.

நிர்வாகத்தினர் அடுத்த முறையாவது ஒழுங்கான இடத்தை தேர்வு செய்தால் வரும் மக்கள் நிம்மதியாக வந்து புத்தகங்களை பார்த்து வாங்கிச் செல்ல வசதியாக இருக்கும். போதும் ரொம்பவே பேசியாச்சு.

இனி பதிவர் மரபுப்படி நான் வாங்கிய புத்தகங்களின் லிஸ்ட்டை கொடுக்கிறேன். அதில் சிறந்த புத்தங்களாக நான் நினைப்பதின் விமர்சனங்களை பகிர்கிறேன்.

தூக்கு கயிற்றில் நிஜம் - திருச்சி வேலுச்சாமி - விலை ரூ.200/-

மரப்பசு - தி.ஜானகிராமன் - விலை ரூ.100/-

வீடு கனவு இல்லத்துக்கான கைடு - தாஸ் - விலை ரூ.125/-

சின்மயி விவகாரம் மறுபக்கத்தின் குரல் - விமலாதித்த மாமல்லன் - விலை ரூ.120/-

9/11 மாபெரும் சதியின் பின்னணி - பா.ராகவன் - விலை ரூ.150/-

தமிழர் உணவு - பக்தவத்சல பாரதி - விலை ரூ.250/-

வெளிச்சத்தின் நிறம் கருப்பு  மர்மங்களின் சரித்திரம் - முகில் - விலை ரூ.200/-

மோஸாட் இஸ்ரேலிய உளவுத்துறை - என்.சொக்கன் - விலை ரூ.110/-

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் - எஸ்.ராமக்கிருஷ்ணன் - விலை ரூ.225/-

அரவாணிகள் - மகாராசன் - விலை ரூ.210/-

சம்பிரதாயங்கள் சரியா - மஞ்சை.வசந்தன் - விலை ரூ.40/-

உடலினை உறுதி செய் - சி.சைலேந்திரபாபு - விலை ரூ.120/-

தோல் - டி.செல்வராஜ் - விலை ரூ.400/-

பாகிஸ்தான் அரசியல் வரலாறு - பா.ராகவன் - விலை ரூ.110/-

அமெரிக்க உளவுத்துறை FBI ரகசியங்கள் - என்.சொக்கன் - விலை ரூ.110/-

ISI நிழல் அரசின் நிஜ முகம் - பா.ராகவன் - விலை ரூ.120/-

கொலம்பிய போதை மாபியா - பா.ராகவன் - விலை ரூ.140/-

கிழக்கிந்திய கம்பெனி ஒரு வரலாறு - ராமன் ராஜா - விலை ரூ.220/-

தரணிகண்ட தனிப்பிறவி எம்.ஜி.ஆர் - எ.சங்கர்ராவ் - விலை ரூ.150/-

பாட்ஷாவும் நானும் சுரேஷ்கிருஷ்ணா - விலை - ரூ.125/-

போட்டோஷாப் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

வெப்டிசைனிங் தமிழ்வழி சாப்ட்வேர் கல்வி - விலை ரூ.200/-

21ம் விளிம்பு - சுஜாதா - விலை ரூ.43/-

உயிராசை - சுஜாதா - விலை ரூ.22/-

24ரூபாய் தீவு - சுஜாதா - விலை ரூ.24/-

60 அமெரிக்க நாட்கள் - சுஜாதா - விலை ரூ.24/-

கமிஷனருக்கு கடிதம் - சுஜாதா - விலை ரூ.19/-

வடிவங்கள் - சுஜாதா - விலை ரூ.22/-

விபரீதக் கோட்பாடு - சுஜாதா - விலை ரூ.20/-

நீர்க்குமிழிகள் - சுஜாதா - விலை ரூ.11/-

ஓடாதே சுஜாதா - விலை - ரூ.24/-

சரிதாயணம் - பாலகணேஷ் - விலை ரூ.60/-

நோயினை கொண்டாடுவோம் - நம்மாழ்வார் - விலை ரூ.15/-

கடவுளும் மனிதனும் - தந்தை பெரியார் - விலை ரூ.10/-

இது தான் மகாமகம் - தந்தை பெரியார் - விலை ரூ.3/-

புரோகிதர் ஆட்சி - கந்தையா பிள்ளை - விலை ரூ.12/-

யார் இந்த இராமன்? - அறிவரசன் - விலை ரூ.12/-

அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள் - திக வெளியீடு - விலை ரூ.12/-

சிலப்பதிகாரமும் ஆரியக் கற்பனையும் - வெ.சு.சுப்பிரமணியாச்சாரியார் - விலை ரூ.15/-

காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு - திக வெளியீடு - விலை ரூ.10/-

சோதிட ஆராய்ச்சி - தந்தை பெரியார் - விலை ரூ.15/-

கடவளர் கதைகள் - சாமி - விலை ரூ.12/-

செயின்ட் கிட்ஸ் வழக்கும் பொது வாழ்க்கையும் - கி.வீரமணி - விலை ரூ.10/-

பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி -விலை ரூ.8/-

திராவிடர் ஆரியர் உண்மை - தந்தை பெரியார் - விலை ரூ.5/-

ஆர்.எஸ்.எஸ் பற்றி - கி.வீரமணி - விலை ரூ.8/-

பேய் பூதம் பிசாசு அல்லது ஆவிகள் - திக வெளியீடு - விலை ரூ.20/-

திருக்குர்ஆன் - திருக்குர்ஆன் அறக்கட்டளை - இலவசம்

அம்மா நீ வருவாயா - கவியாழி கண்ணதாசன் - இலவசம்


----------------------------

ஆரூர் மூனா செந்தில்




Sunday, January 20, 2013

தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் பறிமாறும் முறை



1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்:

பழந்தமிழரின் உணவு உட்கொள்ளும் 12 வகைகள்

1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.
2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.
3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.
4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.
5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.
6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.
7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.
8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.
9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.
10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.
11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.
12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.

முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..

தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம். வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.

நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.

வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .

தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

டிஸ்கி : நெட்டில் படித்தேன் பிடித்திருந்தது. பகிர்ந்து கொள்கிறேன். இதில் ஒரு வரி கூட நான் டைப்பவில்லை.

நன்றி : கானாடுகாத்தான் கிழவி, தமிழ்க்குடில்

Thursday, January 17, 2013

பஞ்சேந்திரியா - கண்ணா லட்டு தின்ன ஆசையா பார்க்க அலைமோதும் கூட்டம்

மாட்டுப் பொங்கல் அன்னைக்கு மறுபடியும் கண்ணா லட்டு தின்ன ஆசையா இரண்டாவது முறையாக இரவுக் காட்சிக்கு சென்றேன். தியேட்டரில் எதிர்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான கூட்டம் அலைமோதியது. இன்னும் சொல்லப் போனால் ஹவுஸ்புல்.

கடந்த பதினைந்து வருடங்களாக திருவாரூர் தைலம்மை திரையரங்கம் அரங்கு நிறைந்து நான் பார்த்ததே இல்லை. ரஜினி, கமல் படங்கள் கூட முதல் இரண்டு வரிசை காலியாகத்தான் இருக்கும். ஆனால் இந்தப் படத்திற்கு அமர நாற்காலியின்றி நின்று பார்த்தவர்கள் பலர்.

எனக்கு தெரிந்து தைலம்மையில் தேவர் மகன் படத்திற்கு தான் அரங்கு நிறைந்த காட்சி என்று போர்டு மாட்டப்பட்டிருந்ததை கடைசியாக கண்டேன். சோழாவில் படையப்பா. அதன் பிறகு எந்த படத்திற்கும் கூட்டம் என்பதே இல்லாமல் போயிருந்தது. இருந்த திரையரங்கங்களும் ஒவ்வொன்ற மூடும் நிலைக்கு சென்று விட்டிருந்தன. செங்கம், பேபி, கருணாநிதி ஆகிய திரையரங்கள் மூடப்பட்டு விட்டன.

எல்லாவற்றையும் மாற்றிப் போட்டு விட்டது கண்ணா லட்டு தின்ன ஆசையா. மக்கள் குடும்பம் குடும்பமாக படத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர். ஆனால் படத்தில் விழுந்து விழுந்து சிரித்து பார்த்து விட்டு வீட்டிற்கு வந்த பிறகு ஏன் சிரித்தோம் என்று யோசிக்கிறோம் என்பது வேறு.

கண்ணா லட்டு தின்ன ஆசையா - தமிழக மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குளில் கொண்டாடுகிறார்கள்.

------------------------------------------

அறிவாளி பெத்த மவனே


------------------------------------------

இந்த பொங்கல் விடுமுறைக்கு ஊரிலிருந்து கிளம்பும் தேதியை முடிவு செய்யவில்லை அதனால் முன்னெற்பாடாக முன்பதிவு செய்யாமல் கடைசி தினத்தன்று டிக்கெட் எடுக்க சென்றால் எல்லா ஆம்னி பேருந்துகளும் புல்லாகி விட்டது.

அரசுப் பேருந்தில் ஏசி, டீலக்ஸ் எல்லாம் இருக்கை நிறைந்து விட்டதால் சாதாரண பேருந்தில் பயணித்தேன். பேருந்து புல் ஸ்டாண்டிங், காலுக்கருகில் ஓருவன் அமர்ந்து வந்தான். காலை அசைக்க முடியவில்லை. சுத்தமாக தூக்கமும் இல்லை.

அதிகாலையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக பேருந்துகள் வந்ததால் மற்ற பேருந்துகளை மதுரவாயிலிலேயே நிப்பாட்டி விட்டார்கள். ஒரு கிலோமீட்டர் நடந்து பேருந்து நிறுத்தத்திற்கு வந்தால் மாநகரபேருந்தும் டிராபிக் ஜாம்மில் மாட்டிவிட்டது.

பிறகு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வர 8 மணியாகி விட்டது. தூக்கமுமில்லாமல் வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு நேரே தொழிற்சாலைக்கு கிளம்பினேன். இப்ப கண்ணெல்லாம் எரியுது. ஆனால் ஒரு சந்தோசம் என்னவென்றால் இதுபோல் சிரமப்பட்டு ஊருக்கு போய் ரொம்ப நாள் ஆனது. வேலைக்கு வந்த பிறகு காரிலோ அல்லது ரயிலிலோ பயணிப்பதே வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும் போது அரசுப்பேருந்தில் செல்வதே வழக்கம். அது போல் இன்று வந்தது பழைய நினைவுகளை கிளறி விட்டது.

இனிமேலாவது இதுபோன்ற பண்டிகை காலங்களில் முன்னேற்பாடாக தோராயமாக இரண்டு மூன்று நாட்களுக்கு ரயிலில் டிக்கெட் போட்டு விடுவது. பிறகு பயண தேதி முடிவானதும் மற்ற டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது என்று முடிவு செய்திருக்கிறேன். பார்ப்போம்.

-----------------------------------------------

ஆயிரம் காலத்து பயிரான கல்யாணம்


--------------------------------------------

நேற்று திருவாரூரில் ஆருரான் பொங்கல் விளையாட்டு போட்டி நடந்தது. கடந்த முப்பது வருடங்களாக திருவாரூரில் நான்கு வீதியை சுற்றுவது போட்டியாக வைத்து ஒட்டப்பந்தயம், சைக்கிள் ரேஸ், ரிக்ஷா ரேஸ், ரேக்ளா ரேஸ், 50cc மொபெட் ரேஸ், கமலாலயத்தில் நீச்சல் போட்டி நடைபெறுவது வழக்கம்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாளில் திருவாரூரினை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து மக்கள் வண்டிக்கட்டி வந்து நான்கு வீதிகளிலும் நின்று விளையாட்டுப் போட்டியை வேடிக்கைப் பார்ப்பார்கள். எங்களுக்கும் மிகவும் சந்தோசத்தை கொடுக்கும் விழா அது.

நான் 2001க்கு பிறகு ஊருக்கு செல்வதை மிகவும் குறைத்துக் கொண்டதால் இந்த போட்டியை தவறவிட்டுக் கொண்டே இருந்தேன். இந்த வருடம் தான் மீண்டும் காண வாய்ப்பு கிடைத்தது. நண்பர்கள் குழாமை சேர்த்துக் கொண்டு தெற்கு வீதி முனையில் நின்றுக் கொண்டு பயங்கர கலாட்டா செய்து கொண்டு போட்டியை ரசித்துக் கொண்டு அவ்வப்போது சைட் அடித்துக் கொண்டு பார்த்தேன்.

முன்னைப் போல் இந்த போட்டிக்கு கூட்டம் வருவது குறைந்திருந்தது நன்றாகவே தெரிந்தது. இது எங்கள் ஊரின் பெருமை. இனிமேல் எல்லா வருடமும் கலந்து கொண்டு போட்டியை என்ஜாய் செய்வேன் என்று முடிவெடுத்து விட்டேன்.

ஆரூர் மூனா செந்தில்


Sunday, January 13, 2013

கண்ணா லட்டு தின்ன ஆசையா - சினிமா விமர்சனம்





முன்பதிவு செய்யாமல் பயணித்து பலத்த சிரமங்களுக்கிடையே நள்ளிரவு 2 மணிக்கு ஊருக்கு வந்து சேர்ந்தேன். அந்த நேரத்திலும் கடமை தவறாமல் நண்பர்களுக்கு போன் போட்டு காலையில் சினிமாவுக்கு வாங்கடா என்று கூப்பிட்டால் அவனவன் கெட்ட வார்த்தையாலேயே திட்டுகிறான். எல்லாத்தையும் உதிர்த்து விட்டு கிடைத்து நண்பனை பிடித்துக் கொண்டு திருவாரூர் தைலம்மை திரையரங்கிற்கு சென்றேன்.

எங்கள் ஊரில் எல்லாம் முன்னணி ஹரோக்கள் படமே காத்து வாங்கும் காலம் இது. இதில் எங்க கூட்டம் இருக்கப் போகிறது என்று யோசித்து சென்றால் கூட்டம் அலைமோதியது. படம் தொடங்கிய பிறகு தான் தெரிகிறது. எல்லாம் பவர் ஸ்டார் ரசிகர்கள் என.

படத்தில் பெயர் போடும் போதே அறிவித்து விட்டார்கள், இது இன்று போய் நாளை வா படத்தின் ரீமேக் என. ஆனால் இத்தனை நாட்களாக என்ன வெங்காயத்துக்கு இதனை மறைத்து வந்தார்கள் என்று தான் புரியவில்லை. பாடல் வெளியீட்டு விழாவில் சந்தானத்தின் பேச்சைக் கேட்டால் கதையே இல்லாமல் காமெடி மட்டுமே உள்ள படம் என்றார். என்ன எழவோ போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.

சேது, சந்தானம், பவர் ஸ்டார் மூவரும் நண்பர்கள். புதிதாக குடிவரும் விசாகாவை மூவரும் காதலிக்கின்றனர். இவர்களில் விசாகா யாரை காதலித்து கரம் பிடிக்கிறார் என்பதை சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கின்றனர்.

எனக்கு கொஞ்சம் கடும் வேலை மற்றும் பணநெருக்கடி. இதன் காரணமாக நான் பயங்கர அப்செட்டில் இருந்தேன். கூடுதலாக நேற்று ஆரம்பிக்க இருந்த ஒரு பிஸினஸ் சற்றே டொய்ங் என நொண்டி போட்டு போனது. கூடுதலாக அலெக்ஸ் பாண்டியன் பார்த்த கடுப்பு. அதனால் இரண்டு நாட்களாக கொஞ்சம் உம் என்றே இருந்தேன்.

ஆனால் படம் ஆரம்பித்து சில நிமிடங்களில் எல்லாம் பறந்து போய் வாய் விட்டு கண்ணில் நீர் வர சிரித்தேன். படம் முடியும் வரை டென்சனெல்லாம் மறந்து போய் விட்டது. கண்டிப்பாக தெரியும் படம் பார்த்து சிரித்து முடித்த பின் ஏண்டா சிரித்தோம் என்று நினைக்கத் தோன்றும் என்று. ஆனால் படம் முடியும் வரை நமது மூளையை கழட்டி வைத்து விட்டு சிரிக்கிறோம் பாருங்கள் அங்கு நிற்கிறது படத்தின் வெற்றி.

படத்தின் பெயர் போடும் போதே சந்தானத்தை விட பவருக்குத்தான் கூடுதல் கைதட்டல் கிடைத்தது. அதனை கடைசி வரை மெயிண்டெயின் செய்திருக்கிறார்கள். பல இடங்களில் சிரிக்க முடியாமல் வயிற்றை வலிக்க ஆரம்பித்தது. ஆல் கிரெடிட்ஸ் கோஸ் டூ பவர் ஸ்டார்.

சந்தானத்தின் கவுண்ட்டர் காமெடிகள் வழக்கம் போல் சிரிக்க வைக்கின்றன. விடிவி கணேஷை சுடுகாட்டில் வைத்து அடிக்கும் காட்சியில் பழைய சந்தானத்தை பார்த்தேன். அலெக்ஸ் பாண்டியனால் ஏற்பட்ட வருத்தம் குறைந்து மீண்டும் சந்தானத்தை பிடிக்க ஆரம்பித்தது.

டல் திவ்யா விசாகா பிடிச்சிருக்கு படத்தில் நடித்த போது நல்ல ஹோம்லி நடிகை என்று பெயரெடுத்தார், அதன் பிறகு வாய்ப்பில்லாததற்கும் அது தான் காரணம் என்று நினைத்தேன். ஆனால் இந்த படத்தில் அதையெல்லாம் பொய்யாக்கும் வண்ணம் பாடலில் உரித்த கோழியாக வந்து செல்கிறார். நல்ல வடிவமைப்பு.

கரகர கணேஷ் பாட முடியாமல் தவித்து பிறகு வாய்ஸ் போனதற்கான காரணம் சொல்லும் போது தியேட்டரில் விசில் பறக்கிறது. அதே போல் டிபிக்கல் கொங்கு பாஷையில் சரளா வழக்கம் போல் அசத்தி செல்கிறார். 

பட்டிமன்றம் ராஜா, வனிதா, சிவசங்கர் ஆகியோர் மிகக் குறைந்த அளவுள்ள கதாபாத்திரத்தில் வந்து செல்கின்றனர். தேவதர்ஷினி ஒட்டாத அய்யர் ஆத்து பாஷையில் பேசி செல்கிறார்.

எல்லாவற்றையும் மீறி எல்லைகளை மீறி இந்த படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கும் ரீபீட்டட் ஆடியன்ஸ்க்கும் காரணம் என்னவாக இருக்குமென நீங்கள் நினைக்கிறீர்கள். சந்தேமில்லாமல் நம்ம பவர் ஸ்டார் தான்.

படம் முழுக்க அவருக்கு பேக்டிராப்பில் ப்ரியா என்ற பெண் அவருக்கு போனில் செய்து காதலை சொல்லிக் கொண்டே இருக்கிறார். ஆனால் கடைசியில் ஹீரோயின் அவருக்கு இல்லை என்று தெரிந்ததும் ப்ரியாவுக்கு காதலை சொல்ல கடைசியில் அந்த ப்ரியா இவருக்கு செய்தது ராங் கால் என தெரிய வர சிரித்து வலி தாங்காமல் வயித்தை பிடித்துக் கொண்டேன்.

சிம்பு மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நட்புக்காக வந்து செல்கின்றனர். சுமாரான இந்த படத்தை பிரம்மாண்டமான வெற்றிக்கு கொண்டு செல்லப்போவது சந்தேகமில்லாமல் அலெக்ஸ் பாண்டியனின் தோல்வி தான் என்பதை ஆணித்தரமாக சொல்லிக் கொள்கிறேன்.

மீண்டும் இந்த படத்தை பார்த்து சிரிப்பேன் என்பதை சந்தேகமில்லாமல் சொல்லும்

ஆரூர் மூனா செந்தில்


Saturday, January 12, 2013

பஞ்சேந்திரியா - வாட்டர் பாட்டில் ஊழலும் மலையாளப்படமும்

அலெக்ஸ் பாண்டியன் என்ற உலக சினிமாவை பார்த்ததனால் பிடித்த பித்து இப்போது தான் தெளிந்தது. மணியாகி விட்டது, இரண்டு மணிக்கு திருவாரூர் செல்ல பேருந்தை கோயம்பேட்டில் இருந்து பிடித்தாக வேண்டும். இது போன்ற பண்டிகைள நாட்களில் எப்பொழுதும் முன்பதிவு செய்தே பயணம் மேற்கொண்டிருந்த நான் இந்த முறை, என்று கிளம்புவது என்று குழப்பத்தினாலும், ரயிலா பேருந்தா என்ற குழப்பத்தினாலும், அலெக்ஸ் பாண்டியன் பார்த்ததால் ஏற்பட்ட குழப்பத்தினாலும் முன்பதிவு செய்யவில்லை.

இன்று இரவு புறப்பட்டால் பேருந்து கிடைக்காமல் கூட போகலாம், அல்லது பேருந்தில் நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கும். அதனால் ஒரு சேப்டிக்கு பகல் பயணமாக கிளம்புகிறேன். மீண்டும் பொங்கலுக்கு பிறகே சந்திப்பேன் என்று எண்ணுகிறேன். ஒருவேளை நாளை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் பார்த்தால் விமர்சனம் எழுதுகிறேன். இல்லையென்றால் அடுத்த வாரம் புதனுக்கு பிறகு சந்திப்போம்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

-----------------------------------------------------------

நக்கீரன் பிச்சாவரம் காட்டில்

-------------------------------------------------------------

சிஐடியு யூனியனில் ஒரு விஷயம் அரசல் புரசலாக தெரியவந்தது. சென்னையில் சென்ட்ரல் மற்றும் எக்மோரில் மட்டும் ஆண்டுக்கு 300 டன் காலி வாட்டர் பாட்டில்கள் குப்பையில் வந்து சேருகின்றனவாம். இதற்கென இரண்டு உயரதிகாரிளை கொண்ட குழு அமைத்து அந்த காலி பாட்டிகளை சேகரிக்கின்றனர்.

அப்படி சேகரித்த பாட்டில்களை ரெட்ஹில்ஸில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு கிலோ ரூ.35/- வுக்கு விற்கின்றனர். இதில் முறைகேடாக ரூ.1,05,00,000/- கடந்த மூன்று வருடத்திற்குள் ஸ்வாகா செய்திருக்கின்றனர்.

கண்ணுக்கு தெரிந்தே இவ்வளவு கொள்ளை. இதை கேட்பதற்கு யாருமில்லை. கம்யூனிஸ்ட்டுகள் பகிரங்கமாக நோட்டீஸ் போட்டு ஒப்பாரி வைத்தும் இதனை கவனிக்கவோ விசாரணை செய்யவோ யாருமில்லை. ஜனநாயக தேசமடா.

----------------------------------------------------------------

இந்த படுக்கைக்கு சொந்தக்காரன் பட்டிக்ஸ் ஜெய்யின் நண்பனாக இருப்பானோ


--------------------------------------------------------------

நீண்ட நாட்களாக தட்டத்தின் மறயத்து படம் பார்க்காமல் இருந்தேன். பர்மா பஜாரில் போய் எப்போது கேட்டாலும் 5.1 டிவிடி வரவில்லை என்றே சொல்லிக் கொண்டு இருந்தார்கள். கடந்த வாரம் போய் கேட்ட போது கிடைத்தது.

படம் பார்த்ததும் நெகிழ்ந்து போய் விட்டேன். என்னா மேக்கிங். என்னா புரொபசனலிசம். கம்யூனிஸ்ட்கள், முஸ்லீம் பெண்ணுடனாக காதல், அதன் எதிர்ப்பு என இந்த படத்தை சீரியஸாக கொண்டு செல்ல வாய்ப்புகள் இருந்தும் கடைசி வரை மெல்லிய நகைச்சுவையுடனே சற்று கூட போரடிக்காமல் கொண்டு சென்றதே மிகப் பெரிய ப்ளஸ்.

இந்த சுராஜ், பேரரசு, தரணி போன்ற பத்துக்கும் மேற்பட்ட இயக்குனர்களை கேரளாவுக்கு தள்ளி விட்டு இந்த வினித்தை தமிழுக்கு கொண்டு வாங்கப்பா. அப்பவாவது இந்த தமிழ் சினிமா உருப்படுதா பார்ப்போம். விமர்சனத்தை ஊருக்கு போய் விட்டு வந்து எழுதுகிறேன்.

 ஆரூர் மூனா செந்தில்

Friday, January 11, 2013

அலெக்ஸ் பாண்டியன் - சினிமா விமர்சனம்

எப்பொழுதுமே எனக்கு வெள்ளிக்கிழமையானால் ஏதாவது வேலை வந்து சினிமாவுக்கு செல்வதை தாமதப்படுத்தி விடும். ஆனால் இன்று காலை காட்சிக்கு முன்பே வேலையை முடித்து விட்டு கிளம்பி விட்டேன். ஆனால் படம் 08.30 மணி காட்சியே பார்த்து விட்டு இப்பொழுது வரை எனக்கு விமர்சனம் எழுத வேண்டும் என்று தோன்றவில்லை என்றால் எவ்வளவு கடுப்பில் இருந்திருப்பேன் என்று பாருங்கள்.

ஆனாலும் நாளை பொங்கல் தினத்தை கொண்டாட திருவாரூர் செல்கிறேன் எனவே இன்னும் ஒரு வாரத்திற்கு பதிவு போட முடியாது என்பதனால் வேறு வழியின்றி மனசை தேற்றிக் கொண்டு பதிவிடுகிறேன்.

இந்த வெளங்காவெட்டி படத்தின் கதை என்னவென்றால் ஒரு மாநிலத்தின் முதல்வர் மகளான அனுஷ்காவை காசுக்காக கார்த்தி கடத்தி விடுகிறார். கடத்திய பிறகு அனுஷ்காவுக்கு கார்த்தி மட்டுமே ஆண்மகனாக தெரிய காதலித்து தொலைகிறார். எனவே கடத்த சொன்னவர்களிடம் இருந்து கார்த்தி அனுஷ்காவை காப்பாற்றி அவரது அப்பாவிடம் ஒப்படைத்து பிறகு கல்யாணத்தையும் முதல்இரவையும் ஒருசேர அரங்கேற்றுகிறார். அவ்வளவு தான் படத்தின் கதை.

எவ்வளவு தான் மொக்கைப் படமாக இருந்தாலும் நான் அவ்வளவு சீக்கிரம் கழுவி ஊத்த மாட்டேன். ஆனால் இந்த படத்தின் விமர்சனத்தில் சாணி ஊற்றி மொழுக வேண்டும் என்ற அளவுக்கு ஆத்திரம் வந்தது.

நேற்று தான் டிவிடியில் மலையாளத்தில் தட்டத்தின் மறயத்து படம் பார்த்தேன். நெகிழ்ந்து போனேன். இன்று இந்த படத்தை பார்த்ததும் குலைந்து போனேன். இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம். ஒரளவுக்கு பல அபத்தங்களை வெளியேற்றி விட்டு சற்றே தலைநிமிர்ந்த தமிழ்சினிமாவை இரண்டு படி கீழிறக்கியிருக்கிறார்கள்.

ஒரு தயாரிப்பாளர் அதுவும் பணத்தை தண்ணீராக செலவழிக்கும் ஒருவர் கிடைத்து விட்டால் எப்படியெல்லாம் அருமையாக எடுத்து அசத்தலாம். இவர்கள் அவரது சொத்தில் பல கோடிகளை குறைப்பது என்று முடிவெடுத்து விட்டே களத்தில் இறங்கியிருப்பார்கள் போல.

இது வரை எந்த படத்திலும் சந்தானத்தின் காமெடி இந்தளவுக்கு கடுப்பேற்றியது இல்லை. சந்தானம் தனது பாணியை மாற்றிக் கொள்வது நல்லது. இல்லையென்றால் மீண்டும் விஜய்டிவிக்கு வந்து லொள்ளு சபா செய்ய வேண்டியது தான். காமெடிக்காக பயங்கரமாக உழைத்திருக்கறார் ஆனால் நமக்கு தான் சிரிப்பு வந்து தொலைக்க மாட்டேன் என்கிறது.

சிறுத்தை படத்தின் டிரெய்லரை பார்த்த போது எனக்கு இந்த அளவுக்கு மசாலா படம் தெலுகிற்கு தான் சரிப்பட்டு வரும், தமிழில் ஊத்திக் கொள்ளும் என்றே நினைத்தேன். ஆனால் நினைத்ததற்கு மாறாக படம் காமெடியிலும் ஆக்சனிலும் அசத்தியிருந்தது.

அது போலவே இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த போதே மொக்கையாக தெரிந்தது. ஆனாலும் கார்த்தி படங்களை தேர்வு செய்யும் போது கவனமாக செய்வார். நாம் ஏற்கனவே சிறுத்தையில் ஏமாந்து இருக்கிறோம். அதுபோலவே இந்த படத்தையும் அசத்தி விடுவார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் டிரெய்லரை விட பயங்கர மொக்கையாக படம் வந்திருக்கிறது.

தியேட்டரில் உக்கார்ந்திருந்த அனைவரும் இடைவேளையின் போதே கடுப்பாகி திட்டிக் கொண்டு இருந்தார்கள். அதிலும் சிலர் படம் முடியும் முன்பே எழுந்து சென்று விட்டார்கள் என்றால் மேக்கிங்கில் எப்படி கொடுமைப்படுத்தி இருக்கார்கள் தனியாக விம் போட்டு விளக்கவா வேண்டும்.

அனுஷ்காவிற்கு கால்கள் மட்டுமே நடித்திருக்கிறது, அதுவும் வெள்ளை சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு தரையில் அமர்ந்திருக்கும் மனோபாலாவின் பனியனுக்குள் இருந்து கால்களாலேயே செல்போனை எடுப்பார் பாருங்கள். யாருய்யா ரம்பாவை பார்த்து தொடையழகி என்று சொன்னது. இந்த காட்சியை பார்த்து விட்டு முடிவு செய்யுங்கள்.

படத்தில் தேவையில்லாத இடங்களில் எல்லாம் பாடல்கள். பி அண்ட் சி பக்கம் கேண்டீனில் இந்த சமயத்தில் எல்லாம் வியாபாரம் பிச்சிக்கும். இது சென்னை என்பதனால் பாடல்கள் காட்சிகளில் வெளியில் வந்து தம்மடிக்க முடியவில்லை.

ஒரு இயக்குனருக்கு பத்து வருடம் மட்டுமே எண்ணங்கள் சிறப்பாக இருக்கும். அதன் பிறகு என்னதான் முக்கினாலும் செல்ப் எடுக்காது. மிகச்சிலருக்கு மட்டுமே அது கூட பத்து வருடம் இருக்கும். சுராஜூக்கு அவரின் முதல் படமான மூவேந்தர் வந்து பதினைந்து வருடத்திற்கு மேல் ஆகி விட்டது. டிரெண்ட் மாறி விட்டது என்பதை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். அட்லீஸ்ட் உதவி இயக்குனர்களிடம் இருந்தாவது யோசனைகள் பெற்று சீன்கள் அமைத்து இருக்கலாம்.

படத்தின் பயங்கர கொடுமையான அபத்தங்களில் ஒன்று சந்தானத்தின் தங்கச்சிகளிடம் கார்த்தி கடலை போடும் காமெடி தான். எந்த வீட்ல சார் உங்களுக்கு வயசுக்கு வந்த பெண் பச்சக்குதிர தாண்ட குனிஞ்சி பின்பக்கத்த காட்டி நிக்கும். அதிலும் ஜென்டில்மேன் படத்தில் வருவது போல வில்லங்கமான விளையாட்டுகள் ஆடுவதும் அதற்கு கேவலமான பெயர்கள் வைத்திருப்பதும் தான். அந்த வசனத்தையெல்லாம் நான் சொன்னால் இருக்கும் ஒன்றிரண்டு பெண் வாசகர்கள் கூட பிஞ்ச செருப்பை என் வீட்டுக்கு பார்சல் அனுப்புவார்கள்.

ரயில் சேசிங் காட்சி இருக்கே அதன் அபத்தங்களை பட்டியலிட்டோம் என்றால் இன்னும் கொடுமையாக இருக்கும், எந்த ஊரு ரயிலுல ராசா கடைசி பெட்டியில வெஸ்டிபுள் கதவு இருக்கும். அதுவும் திறந்து வேற இருக்கும். நான் வேலை பார்க்கிறது வெஸ்டிபுள் கதவு பழுதுபார்க்கும் பணி தான். நிற்கும் வண்டியில் மற்றொருவர் தூக்கி விட்டாலொழிய நம்மால் வெஸ்டிபுள் பக்கம் ஏற முடியாது. இதில் அனுஷ்கா ஒடும் ரயிலில் வெஸ்டிபுள் பக்கமாக ஏறுகிறார். கொடுமைடா சாமி.

நண்பர்கள் படத்திலிருந்து அந்த காலில் கயிறு கட்டி தூங்கும் காட்சி, கன்னிராசி படத்திலிருந்து சிக்கன் சூப் காட்சி, ஜல்லிகட்டு படத்தில் இருந்து போட்டில் செல்லும் போது பெட்ரோல் தீருவது போன்ற காட்சி ஆகியவைகளை சுடும் அளவுக்கா உங்களுக்கு சிந்தனை பஞ்சம். என்னவோ போங்க சார்.

அலெக்ஸ் பாண்டியன் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அதற்கு பதில் திருத்தணி படத்தின் டிவிடியை போட்டு பார்த்து விட்டு ஆறுதல் அடைந்து கொள்ளவும். திருத்தணியே சூப்பர் படம் என்றால் இந்த படத்தின் நிலையை அறிந்து கொள்ளவும்.


ஆரூர் மூனா செந்தில்


Thursday, January 10, 2013

அய்யா - தமிழ்ப்பையனை டாவடிக்கும் மராத்திய பெண்ணின் கதை

அய்யா இந்தப் படத்தின் டிரெய்லரை பார்த்த போதே படம் வெளியானதும் முதல் காட்சி பார்த்து விட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். ஏனென்றால் கதைப்படி படத்தின் நாயகன் ஒரு தமிழ்ப்பையன். அதனால் தமிழை போற்றியிருப்பார்கள் அதனால் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் படம் வெளியான போது நான் சென்னையில் இல்லாமல் போனதால் பார்க்க முடியவில்லை. பிறகு சிலநாட்கள் கழித்து பர்மா பஜாரில் சிடி வாங்கி பார்த்தேன். சொல்லிக் கொள்ளுமளவுக்கு சிறப்பாக இல்லையென்றாலும் மும்பையில் இருக்கும் தமிழர்களைப் பற்றி இந்தி சினிமாவில் காட்டியிருப்பதை பார்த்து ரசிக்கலாம்.

ஹீரோயினாக ராணி முகர்ஜி, அவருக்கு தான் ஒரு புகழ்பெற்ற கதாநாயகியைப் போல் தன் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கனவு இருக்கிறது. ஆனால் அவர் டேஸ்ட்டுக்கு ஏற்றது போல் ஒரு ஆண்மகன் அமையவில்லை.

அவரது குடும்பமும் அவருக்கு ஏகப்பட்ட மாப்பிள்ளைகளை பார்க்கிறார்கள். ஆனால் ஒரே சமயத்தில் மூன்று சிகரெட்டுகளை பிடிக்கும் செயின் ஸ்மோக்கர் அப்பா, தலைவிரித்துப் போட்டு பேய் போல் வீல்சேரில் வீட்டை சுற்றும் பாட்டி ஆகியோரினால் வரும் மாப்பிள்ளைகள் ராணி முகர்ஜியை நிராகரிக்கின்றனர்.

அவர்கள் வீட்டு வாசலில் தெருவுக்கே உரிய குப்பைத்தொட்டி இருப்பதனால் எந்நேரமும் வீடு நாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் ராணிக்கு வீட்டில் சாப்பிடும் சாப்பாடுகளிலும், உடைகளில் அந்த குப்பை நாற்றம் வீசிக் கொண்டு இருப்பதைப் போல் ஒரு எண்ணம். மாப்பிள்ளை அமையாததால் ஒரு ஓவியக்கல்லூரியில் நூலக உதவியாளராக வேலையில் சேருகிறார்.

அங்கு அவருக்கு சக ஊழியரான மைனாவை சந்திக்கிறார். அவர் சினிமாவில் சேரும் ஆசையினால் ஹிந்தி படத்தில் வரும் கதாநாயகியைப் போல் உடையணிந்து வலம் வரும் தெத்துப் பல்லழகி.

அந்த நூலகத்தில் திடீரென அவருக்கு வித்தியாசமான ஒரு வாசனை தோன்றுகிறது. அது அவருக்கு பிடித்துப் போகவே வாசனையில் நூலைப் பிடித்துப் போகிறார். அந்த வாசனை அந்த கல்லூரியில் படிக்கும் தமிழனான ப்ரித்விராஜிடம் இருந்து வருகிறது என்று தெரிகிறது. அந்த வாசனையின் காரணமாகவே ப்ரித்விராஜை ஒரு தலையாக காதலிக்கிறார்.

ஆனால் ப்ரித்வி முசுடாகவும் எந்நேரமும் தூங்கிக் கொண்டு இருப்பதுமாக இருக்கிறார். மற்றவர்கள் ப்ரித்வி தூங்கிக் கொண்டே இருப்பதற்கும் கண்கள் சிவப்பாக இருப்பதற்கு காரணம் குடிப்பழக்கம் என ராணியிடம் சொல்கிறார்கள்.

அவரைப்பற்றிய எந்த விவரங்களும் கிடைக்காமல் போகவே அந்த கல்லூரியில் ப்ரித்விக்கு பழக்கமான கேண்டீன் சப்ளையராக இருக்கும் தமிழனான பசங்க படத்தில் நடித்த பக்கடாவை சினேகம் பிடிக்கிறார். அவனிடம் ப்ரித்வியைப் பற்றிக் கேட்க அவனோ ப்ரித்வி ஹெராயின் பயன்படுத்துவதால் தான் அந்த வாசனை வருகிறது என்று கூறுகிறான்.

ஆனாலும் நம்பாத ராணி அவரது வீட்டை கண்டுபிடித்து அவரின் அம்மாவிடம் சினேகம் கொள்கிறார். இந்நிலையில் ராணிமுகர்ஜிக்கு மாதவ் என்ற மராத்தியருடன் திருமணம் உறுதியாகிறது. நிச்சயத்திற்கு முன்பு தான் எப்படியாவது ப்ரித்வியிடம் வரும் வாசனையை கண்டுபிடித்து அவரிடம் தன் காதலை சொல்ல முனைகிறார்.

நிச்சய தினத்தன்று விடாமல் ப்ரித்வியை தொடர்ந்து சென்று வாசனையின் மூலகாரணத்தை கண்டு பிடிக்கிறார். தன் காதலையும் சொல்கிறார். ப்ரித்வி ஏற்றுக் கொண்டாரா நிச்சயம் என்னவானது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

இது ஹீரோயின் ஓரியண்டட் படம். ராணி முகர்ஜியை சுற்றியே படம் செல்கிறது. 90களில் குலாம் மற்றும் குச் குச் ஹோத்தா ஹை படங்களில் அவரை பார்த்து வெறி கொண்டு அலைந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.

15 வருடங்களுக்கு பிறகு பார்க்கும் போது சற்று வற்றிப் போய் தான் இருக்கிறார். ஆனாலும் வசீகரம் குறையவில்லை. படத்தினை மொத்தத் தூணாக தாங்கிப் பிடிக்கிறார். ட்ரீமம் வேக்கப்பம் என்ற பாடலுக்கு போடுகிறாரே ஒரு கெட்ட ஆட்டம், யப்பா பார்த்தாலே டென்சனாகிறது நமக்கு.

நாயகனாக ப்ரித்வி, படம் முழுவதும் அதிக நடிப்போ ஆக்சனோ இல்லாமல் அண்டர்பிளே செய்கிறார். இறுதியில் அவர் யாரென்று தெரிய வந்ததும் நமக்கே வியப்பாக இருக்கிறது. தனது அப்பாவின் தொழிலை இரவு முழுவதும் கண்முழித்து செய்து விட்டு தனது ஆசைக்காக பகலில் தூக்கக் கலக்கத்துடன் கல்லூரிக்கு வருகிறார்.

படத்தின் கலகலப்புக்கு முக்கியமாக கதாபாத்திரத்தில் மைனாவாக வரும் அனிதா தாத்தே தான் காரணம். அவர் படத்தில் ஒரு கரடிபொம்மை வாட்டர் பாட்டிலில் தண்ணீர் கொண்டு வந்து யாருக்கும் தராமல் குடிப்பதும் இறுதியில் அவர் குடிப்பது வெறும் தண்ணியல்ல, வோட்கா என்று தெரிய வரும் போது சிரித்து மாளவில்லை.

சந்தர்ப்பம் கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.


ஆரூர் மூனா செந்தில்

Tuesday, January 8, 2013

பஞ்சேந்திரியா - 2013 குடிகாரர்களுக்கு உகந்த ஆண்டல்ல

இந்த ஆண்டு குடிகாரர்களுக்கு எல்லாம் ஆப்பு போல. வழக்கமாக போதையப் போட்டு சலம்பும் ஆண்மக்களே சற்று அடக்கி வாசிக்கவும். மாயன் காலண்டர் முடிந்த பிறகு ஒவ்வொரு குடிகாரனாக போட்டு தள்ளுதுன்னு நினைக்கிறேன்.

மாயனின் விதிவசத்திற்கு முதலில் பலியானது நான் தான். வாங்கிய அடியின் காரணமாக இப்பொழுதெல்லாம் மதுவிற்கு எதிரான பிரச்சாரத்தை நானே துவக்கி விட்டேன், மாட்டியவனுக்கெல்லாம் அட்வைஸ் மழையை பொழிய அவனவன் என்னைக் கண்டதும் மம்மியைக் கண்ட மினிஸ்டர்ஸ் போல வளைந்து குனிந்து விலகிச் செல்கின்றனர்.

என்னுடன் பணிபுரியும் செல்வராஜ் என்பவருக்கு 59 வயதாகிறது, 60,000 ரூபாய் மாத சம்பளம் வாங்குகிறார். தினமும் குடிக்கவில்லை என்றால் அவருக்கு பொழுதே போகாது, அவர் சரியாக புத்தாண்டன்று குடித்து விட்டு கலாட்டா செய்ய அவரது மகனே காலை உடைத்து விட்டான். இப்பொழுது மெடிக்கல் லீவில் இருக்கிறார்.

நேற்று முன்தினம் எங்கள் குடும்ப விழாவில் இது போல் ஒரு நெருங்கிய சொந்தக்காரர் ஒருவர் குடித்து விட்டு என் அப்பாவை கன்னாபின்னாவென்று போதையில் பேசத் தொடங்க என் தம்பி அவரை அடித்து உதைத்து விட்டான். அவருக்கு மற்றவர்கள் முன் மரியாதையும் போய் யாரிடமும் பேசாமல் விலகி விலகி செல்கிறார்.

எனக்கு தெரிந்த இன்னும் சிலருக்கும் அசம்பாவிதங்கள் நடைபெற்று இருக்கின்றன. எனவே நான் மற்றவர்களிடம் குடிப்பதை தவிர்க்கச் சொல்ல இதுக்கு முன்னாடி என்னைப் பார்த்தால் குடிச்சா அலும்பு பண்ணுவானே என்று மற்றவர்கள் விலகிய காலம் போய் இப்பல்லாம் ஓவரா அட்வைஸ் பண்றானேன்னு தெறிச்சி ஒடுறானுவ. குடிச்சாலும் தப்பு, குடிக்காதேன்னு சொன்னாலும் தப்பாடா நடத்துங்க ராசா நடத்துங்க.

----------------------------------------------

மறுபடி மறுபடி தெலுகில் ஹீரோக்களின் சலம்பலை பார்ப்பது எனக்கு விதிக்கப்பட்ட சாபமோ தெரியவில்லை. நேற்று முன்தினம் கூட அப்படி ஒரு கொடுமை என் முன்னாடி ஜிங்கு ஜிக்குனு ஆடுச்சி.

அந்த படத்தின் பெயர் யுத்தபூமி, கதாநாயகன் சிரஞ்சீவி, கதாநாயகி விஜயசாந்தி, வில்லன் மோகன்பாபு. கிளைமாக்ஸ் மட்டும் தான் பார்த்தேன். கடுமையான சண்டையின் கடைசியில் எல்லா வில்லன்களையும் ஹீரோ வீழ்த்திய பிறகு மெயின் வில்லனான மோகன்பாபுவை கொல்லத்துரத்த அவரோ ஹெலிகாப்டரில் ஏறி தப்பிக்கிறார்.

இதனை கண்டு பொறுக்காத ஹீரோ அப்படியே ஓடிச்சென்று யாரோ ஒரு அப்பாவி விவசாயி உழுதுக் கொண்டு இருக்க அவரிடம் இருந்து ஏர்கலப்பையை புடுங்கி சென்று ரெண்டு சுத்து சுத்தி மேலே வீச அது பறந்து கொண்டிருக்கும் ஹெலிகாப்டரில் ரெக்கையின் நடுவில் விழ ஹெலிகாப்டர் வெடித்து சிதறுகிறது.

அதப்பார்த்துக் கொண்டிருந்த நான் அப்படியே ஷாக்காயிட்டேன். நல்ல வேளை இந்த படம்லாம் அந்த காலத்துல தமிழ்ல வரல. நாம அப்பவே பார்த்திருந்தம்னாக்கா தறிகெட்டு திரிஞ்சிருப்போம். நல்லவேளை நம்ம ரசனை உயர்ந்து இருப்பதனால் தப்பித்தோம். இன்னொரு முறை அது போன்ற படம் என் கண்ணுல மாட்டிச்சி கிறுக்கு புடிச்சி திரிய வேண்டியது தான்.

--------------------------------------------------------

மலையாளத்தில் உஸ்தாத் ஹோட்டல், மாயமோகினி, இந்தியில் ஜோக்கர், அய்யா படங்களை சமீபத்தில் பார்த்தேன். ஒவ்வொரு படங்களையும் சிலாகித்து ஒவ்வொரு பதிவெழுதலாம், அவ்வளவு அருமை.

உஸ்தாத் ஹோட்டல் கோழிக்கோடு முஸ்லீம்களின் வாழ்க்கை முறையை பேக்டிராப்பாக வைத்து நடக்கிறது. தாத்தாவுக்கும் பேரனுக்குமான நட்பே படத்தின் மிளகுரசம் ச்சே.. சாராம்சம்.

வாரிசுநடிகர்கள் என்றால் முதல் படத்திலேயே நூறு பேரை அடித்து வீழ்த்தி அறிமுகம் கொடுக்கும் இந்த காலத்தில் எந்தவித ஹீரோயிசமும் இல்லாமல் அசத்தியிருக்கிறார் துல்ஹர் சல்மான். எனக்கு முதலில் அவரின் நடிப்பில் பெரிய ஈர்ப்பில்லாமல் இருந்து நேரம் செல்லச் செல்ல எனக்குள் அட்டகாசமாக சாய்வு நாற்காலி போட்டு அமர்ந்து விடுகிறார். இனி எனக்கு மலையாளத்தில் அபிமான நடிகர் துல்ஹர் தான்.

தமிழகத்தில் இருக்கும் நமக்கு தெரியாத நாரயணன் கிருஷ்ணன் கேரக்டரை ஜெயப்பிரகாஷ் கண்முன்னே நிறுத்துகிறார். அவருக்கு இந்த ரோட்டோரம் இருக்கும் வயதானவர்களுக்கு உணவு கொடுக்க துவங்கிய காரணத்தை சொன்ன போது நான் நெகிழ்ந்து விட்டேன்.

நீங்களும் ஒரு முறை வாய்ப்பு கிடைத்தால் பார்த்து மகிழுங்கள்.

--------------------------------------------------------

மாயமோகினி படம் ஆரம்பித்ததிலிருந்து பாபுராஜூம் பிஜுமேனனும் மட்டுமே வந்து கொண்டிருக்க திலீப் கெஸ்ட் ரோல் மட்டும் தானோ என்று பயந்து விட்டேன், ஆனால் எதிர்பார்க்காத தருணத்தில் எதிர்பார்க்காத கதாபாத்திரமாக அறிமுகமாகும் போது வெடித்து சிரித்தேன்.

ஒரு பெண்ணை வைத்து எந்தெந்த போஸ்களை எடுக்கக்கூடாதோ அத்தனை போஸ்களையும் திலீப்பை வைத்து எடுத்து விட்டனர். ஆனால் ஒன்னு குடும்பம் சகிதம் படம் பார்க்க சிரமம் தான், பல இடங்களில் நெளிய வேண்டியதாகி விட்டது.

அதை தாண்டி சுவாரஸ்மான படம் தான் மாயமோகினி. ஒரு காட்சியில் பாபுராஜுக்கு முத்தம் கொடுப்பார் பாருங்கள். அதிர்ந்து விட்டேன். டேய் இது U சர்டிபிகேட் படம் என்று கூவ வேண்டியதாகி விட்டது.

பிகினி உடையில் ஒரு ஆட்டம், அழகிய லைலா பாடலில் ரம்பா பாவாடை பறக்க ஆட்டம் போடுவாரே அப்படி ஒரு ஆட்டம், புடவை கட்டியிருக்கும் போது அவசரமாக ஒன்னுக்கு வந்து விட மரத்தடி பின்பு ஓதுங்கும் காட்சி என அனைத்துமே காமெடியின் உச்சம். வழக்கம் போல சினிமா கிளைமாக்ஸ் தான். ஆனால் இரண்டு மணிநேரம் பார்த்து ரசிக்க சூப்பர் டைம்பாஸ் படம். மொழி புரியாவிட்டாலும் பார்த்து ரசியுங்கள்.

-------------------------------------------------------

ஜோக்கர் படம் துவங்கி அரைமணிநேரத்திலேயே படம் மொக்கை என்று தெரிந்து விட்டது. சிடி வாங்கி விட்டோமே என்ற காரணத்தினால் பார்க்க வேண்டியதாகி விட்டது. மூன்று மாநில எல்லையில் இருக்கும் ஒரு கிராமத்தை அனைத்து மாநிலங்களும் புறக்கணிக்க அந்த கிராமத்தில் இருந்து படித்து அமெரிக்காவுக்கு வேலைக்கு போன அக்சய் குமார் தனது கிராமத்திற்கு விடிவுகாலம் வர விண்கலங்கள் கிராமத்தில் இறங்குவதாக கதையடித்து ஊரை நம்ப வைக்கிறார்.

அதன் பரபரப்பு காரணமாக உலக மீடியாக்களின் கவனம் அந்த கிராமத்தினுள் விழ மூன்று மாநில அரசுத்துறைகளும் விழுந்தடித்து ஊரை கவனிக்கிறது. அதில் ஒரு இடைஞ்சல் வர அதனை சமாளித்து எப்படி வெற்றி காண்கிறார் என்பதே படத்தின் கதை.

சுமாரான படம் தான்.


ஆரூர் மூனா செந்தில்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...