சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Monday, September 30, 2013

நான் விரும்பிய கிராமத்து வாழ்க்கை

தூறல் நின்னு போச்சு படம் நேற்று ஆதித்யாவில் பார்த்தேன். இந்த படத்தை எத்தனை முறை பார்த்துள்ளேன் என்று எனக்கே தெரியவில்லை. எனக்கு மிக மிக பிடித்த படம் நான் விரும்பும் வாழ்க்கை இது போன்ற கிராமத்தில் தான் இருக்கிறது.


வெள்ளந்தியான கிராமத்து மனிதர்கள் இயல்பாக காட்டப்பட்ட மிகச் சிறந்த படங்களுள் இதுவும் ஒன்று. நம்பியார், செந்தாமரை, செந்தில், சூர்யகாந்த் போன்ற கதாபாத்திரங்கள் எனது பூர்விக கிராமத்தில் அச்சு அசலாக இருந்தனர்.

பெண்பார்க்கும் படலம் கூட அச்சு அசல் அப்படியேத்தான் இருக்கும். என் அத்தையை பெண் பார்க்க வந்த போது நடந்த சம்பவங்கள் இப்படித்தான் இருந்தது. அதுவும் மாப்பிள்ளை 4 வருசமா பியுசி படித்தவர் என்ற வசனம் இதுபோன்ற பெண்பார்க்கும் படலங்களில் சகஜமாக புழங்கப்பட்ட ஒன்று.

இன்று கிராமங்கள் அதற்கான அடையாளத்தை இழந்து விட்டன. அதுவும் முக்கியமாக என் தாய்வழி கிராமமான ஆதனூர் நகரத்தின் சாயலை தன்னையறியாமலே அடைந்து விட்டன.


வெள்ளந்தி கிராம பெண்கள் தாவணியை கைவிட்டு நைட்டிக்குள் அடைக்கலமாகி விட்டனர். சைக்கிள்களில் மாலைப் பொழுதுகளில் நீடாமங்கலத்திற்கு போய் பொழுதை கழித்து வரும் பழக்கம் பரணுக்குள் போய் விட்டது.

பம்புசெட்டில் அரைமணி நேரம் வரை குளிக்கும் பழக்கம் அந்த ஊர்க்காரனுக்கு கூட மறந்து போய் விட்டது. கிராமத்து துவக்கப்பள்ளிகளில் படித்த குழந்தைகள் போட்டோக்களில் மட்டும் தான் நிற்கின்றனர்.

துவக்கப்பள்ளிக்கு நீடாமங்கலமும் மேல்நிலைப்பள்ளிக்கு மன்னார்குடியும் தஞ்சாவூரும் ஆதனூருக்கு புறக்கால் கம்பளம் விரித்து காத்திருக்கிறது. பள்ளிப்பேருந்துகள் மணிக்கொரு தரம் புறப்படுகின்றன.
 

ஆண்டுக்கு இரண்டு மூட்டை நெல் வாங்கி வீட்டிற்கே வந்து முடி வெட்டிய மருத்துவர்கள் சென்னைகளில் மேன்சன்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். சைக்கிளில் ஆட்டுக்கறி கொண்டு வந்து வீட்டுக்கு வீடு எடை பார்த்து வெட்டிக் கொடுத்த கரீம்பாய் காலமாகிவிட அவரது வாரிசுகள் அரபுநாடுகளில் வேலைபார்க்கின்றனர்.

பண்ணையாட்களாக வேலை பார்த்து வந்து ராசு, மருதன், வேலாயி, அளப்பி போன்றோர் 100 நாட்கள் வேலைநாள் திட்டத்துடனும் ரேசன்கடை இலவச அரிசியுடனும் வீடுகளிலேயே சன்டிவியின் மதிய நாடகங்களை துணைக்கு வைத்துக் கொண்டு தேங்கி விட்டனர்.


பத்தாண்டுகளுக்கு முன்பு முப்போகம் விளைந்த தாத்தாவின் தெற்கே உள்ள நிலம் தரிசாகி கிடக்கிறது. மேற்கே உள்ள நிலம் தென்னந்தோப்பாகி விட்டது. தாத்தா காலத்து விவசாயிகள் சுடுகாட்டில் எரிக்கப்பட்டு விட்டனர்.

இப்பொழுது எனக்கு கோவம் கோவமாக வருகிறது எதற்கு என் அப்பாவுக்கு அரசு வேலை கிடைத்தது, எதற்காக அவர் கிராமத்தை விட்டு நகரத்திற்கு வந்தார். நான் ஏன் நகரத்தில் படித்தேன், ஏன் பிழைப்புத் தேடி பெருநகரத்திற்கு வந்தேன், ஓய்வு பெறும் காலம் வரை ஏன் இங்கேயே வாழ வேண்டியிருக்கிறது என்று யோசித்துப் பார்த்தால் மிஞ்சி நிற்பது யோசனை மட்டும் தான். அதற்கான காரணங்கள் மட்டும் கிடைக்கவே இல்லை.

நான் ராமராஜனை ஆதர்ச நாயகனாக ஏற்றுக் கொண்டதற்கு காரணம் கூட என் கிராமத்து பாசம் தான் என்று எண்ணுகிறேன். அரண்மனைக் கிளியை கொண்டாடுகிறேன். புதுநெல்லு புதுநாத்து பாடல்களை அனிச்சையாக என் வாய் முணுமுணுக்கிறது.

விரும்பிய கிராமத்து வாழ்க்கையும் கிடைக்காமல், கிடைத்த பெருநகர வாழ்க்கைக்குள்ளும் கவனத்தை திசை திருப்ப முடியாமல் இருதலைக் கொள்ளியாக தவிக்கிறேன்.

நான் பணியிலிருந்து ஒய்வு பெற்று ஒரு கிராமத்தில் தான் வாழ உச்தேசித்தேன். ஆனால் அந்த காலக்கட்டங்களுள் அந்த கிராமம் கூட சென்னைக்கு நிகராக வளர்ந்து விடுமோ என்ற அச்சம் தான் எனக்குள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஆரூர் மூனா செந்தில்

Sunday, September 29, 2013

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் பின்னே நானும்

மனதிற்கு பார்ப்பவை அறிவிற்குப் பார்ப்பவை என திரைப்படங்கள் இருவகைப்படும். நாயகனின் அறிமுகக் காட்சியில் விசிலடிச்சி, பஞ்ச் டயலாக்கில் மெய்சிலிர்த்து, நாயகனின் தங்கை கற்பழிக்கப்படும் போது கண்கலங்குவது என எந்த இடத்திலும் மூளைக்கு வேலை கொடுக்காமல் ரசித்து வருவது ஒரு ரகம்.


இன்னொன்று முதல் காட்சிக்கும் மறுகாட்சிக்கும் உள்ள இணைப்பை குறீயிடுகள் மூலம் கொடுத்து நம்ம அறிவுக்கு வேலை கொடுத்து கண்டுபிடிக்கச் செய்வது இரண்டாவது ரகம். ஓநாயும் ஆட்டுக்குட்டியும் இந்த ரகம்.

எல்லோருக்கும் பிடிக்காமல் போன முகமூடி கூட எனக்கு முதல் பாதி மிகவும் பிடித்திருந்தது. முதல்பாதியில் மிகச்சரியாக முடிச்சுகளை போட்டு இரண்டாம் பாதியில் அதனை அவிழ்க்கும் இடத்தில் தான் சரியில்லாமல் போனது. மிஷ்கினின் படங்களை அணு அணுவாக ரசிக்கும் எனக்கு அது ஏமாற்றமே.

முந்தைய படத்தில் தவறு நடந்தாலும் அடுத்த படத்தில் நமக்கு நல்ல தீனி போட்டு படைப்பாளி மிஷ்கின் சிங்கம் தான் என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார். தலைவணங்குகிறேன் மிஷ்கின்.


படத்தில் எப்பொழுது நுழைந்தேன் என்று எனக்கே நினைவில்லை. படம் போட்டு தான் அரங்கினுள் நுழைந்தோம். அமர்ந்த சில நிமிடங்களில் என்னை மறந்து படத்தில் பயணித்துக் கொண்டு இருந்தேன்.

ஸ்ரீ படத்தில் மிகத்திறமையாக நடித்து இருந்தார் இல்லை இல்லை நடிக்க வைக்கப்பட்டு இருந்தார். அவரின் கண்கள் கூட பரபரக்கிறது. சொல்ல வேண்டியதை வசனங்கள் மூலம் சொல்லாமல் உடல்மொழியில் சொல்லுகிறார்.

அதற்கு நேர்மாறாக அந்த கண் தெரியாத பெண்மணி எந்த முகபாவங்களும் காட்டாமல் அழக்கூட செய்யாமல் அவரது சோகங்களை நமக்கு கடத்தி விட்டு செல்கிறார். அந்த முகத்தில் உள்ள சாந்தம் மிரமிக்க வைக்கிறது. மண்டிப் போட்டு ஸ்ரீயிடம் கதறும் காட்சியில் விஸ்வரூபமெடுக்கிறார்.


சிபிசிஐடியாக வரும் ஷாஜியின் மலையாள வாடையிலான வசன உச்சரிப்பும் அவரது உடல்மொழியும் உயரதிகாரியின் முன்னால் அவரது மருத்துவ நண்பரை மிரட்டும் காட்சியும் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.

உ.த அண்ணனின் விமர்சனத்தை படித்த பிறகு அந்த குழந்தைக்கு மிஷ்கின் கதை சொல்லும் காட்சியை உன்னிப்பாக கவனித்தேன். அவர் கிட்டத்தட்ட நான்கு நிமிடங்களுக்கு மேல் கண்ணை சிமிட்டாமல் கதை சொல்லுவார். நானும் முயற்சித்துப் பார்த்தேன். இருபது வினாடிகளுக்கு மேல் முடியவில்லை. கண்ணில் நீர் வருகிறது.

அந்த சின்னப் பெண்ணின் முகபாவம் பார்த்து பிரமித்துப் போய் இருக்கிறேன். க்ளைமாக்ஸில் சாமுராய் சண்டை போடும் போது மிஷ்கினின் பின்னால் நின்று காட்டும் அவளின் ரியாக்சன்கள் பிரமாதம். படம் சீக்கிரம் முடிந்ததே என்று வருத்தமாக இருந்தது.


படத்தின் குறைகள் என்று சொன்னால் ஓவர் ஆக்ட் செய்த வில்லன்கள் மட்டும் தான். மற்ற பாத்திரங்கள் இயல்பாக நேச்சுரலாக இருக்கும் போது இவர்களின் நடிப்பும் பாவங்களும் எரிச்சலையூட்டுகின்றன. மற்ற அற்புதங்களுக்காக இவற்றை பெரிதுபடுத்த வேண்டாம்.

படத்தின் மிகப்பெரிய ஆகச்சிறந்த தவிர்க்கவே முடியாத பலம் இளையராஜா இளையராஜா இளையராஜா. எங்கு நிசப்தம் தேவையோ அங்கு எதிர்பாராத இனிய பின்னிசையை கொடுத்தும் பின்னிசை வரும் என்று எதிர்பார்க்கும் இடத்தில் நிசப்தத்தை கொடுத்தும் அசத்தியிருக்கிறார்.

மக்களே மிஷ்கின் மற்றும் இளையராஜாவின் பேரற்புதங்களை தவற விடாதீர்கள். லாபங்களுக்காக படமெடுப்பவர்களுக்கு மத்தியில் அறிவுக்கு வேலை கொடுக்கும் இது போன்ற படங்களை நாம் தான் வரவேற்று வெற்றிப் பெற செய்ய வேண்டும்.

நேற்று S2 சினிமாஸில் பவன்கல்யாணின் தெலுகு படம் ஹவுஸ்புல், இந்த படத்திற்கு ஐந்து வரிசை மட்டும் நிறைந்திருந்தது கவனிக்க வேண்டிய கவலைப்பட வேண்டிய விசயம்.

இன்னும் இருக்கு, ஆனால் எனக்கு புரியவைக்கப்பட்ட விசயத்தையும் நான் புரிந்து கொண்ட விசயமும் வேறாக இருக்கும். உங்களுக்கு வேறு மாதிரியாக இருக்கும். உங்கள் அனுபவத்தை நீங்கள் தான் பார்த்து புரிந்து கொள்ள வேண்டும். முயற்சியுங்கள். என்ஜாய் செய்யுங்கள்.

இன்று எனக்கு பதிவு போடும் எண்ணமே இல்லை. உத்திர பிரதேசம் வாரணாசி ராணுவ படையில் பணிபுரியும் வாசக நண்பர் ராஜீவ் நிசாந்த் "இன்னிக்கி ரெஸ்ட்டு படிப்பதற்கு எதுனா பதிவை வெளியிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டதால் இன்று மற்ற வேலைகளை புறந்தள்ளி விட்டு பதிவிட்டு உள்ளேன்.

படத்திற்கு ஓசியில் அழைத்துச் சென்ற மெட்ராஸ் பவன் சிவாவுக்கு நன்றி.

ஆரூர் மூனா

Friday, September 27, 2013

வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு

Opening for Graduates who have minimum 2 years of experience in IT industry at Korea.


If you are exactly eligible and interested, kindly forward the below mentioned details of yours. 


Company Name                  :- SAMSUNG, Korea
Education                            :- B.Sc. IT or Higher 
Salary                                  :- Singapore dollar $3000
Visa Type                           :- Employment Visa
Accommodation                :- Free
Food                                    :- "No"

Category 1:
Department:- System Solution - S/W Lab
Areas of Expertise:- Windows Application Development (more than 5 years experience), GUI Development - C++, MFC, WinAPI
Expectation:- English Proficiency: Upper Intermediate (Speaking & Writing)

Category 2:
Department:- Printing Solution Divsion - S/W Platform Lab
Areas of Expertise:- Security Engineering - C and Java Programming

Category 3:
Department:- Printing Solution Division - S/W Platform Lab
Areas of Expertise:- Network Protocol Development (more than 5 years of experience); Embedded System - C/C++, Java; Analyzing & processing of Ethernet or 802.11 packet
Other:- Security Background - SSL & Crypto

Category 4:
Department:- Printing Solution Division, S/W - Copier Dev. Part
Areas of Expertise:- Linux, Java, WEB & Android experience
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)

Category 5:
Department:- Printing Solution Division, S/W - ABAT (Auto Build Auto Test)
Areas of Expertise:- Design Test Script & Development in JAVA, WEB, ANDROID or C-Environment
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)
-------------------------------------
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு

MBA முடித்தவர்கள் சூப்பர் மார்க்கெட் மேனேஜர் வேலைக்குத் ததேவை

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

தினம் இருவேளை உணவு இலவசம்

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் டிஷ் வாசர் வேலைக்குத் தேவை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

தங்குமிடம் இலவசம்

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் சூப்பர்வைசர் வேலைக்குத் ததேவை

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

வேலை நேரம் 12 மணிநேரம்

உணவு இலவசம்

-------------------------------------------------

BE (Civil) முடித்தவர்கள் Engineer (Civil) வேலைக்கு தேவை.

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

MBA Accounts முடித்தவர்கள் அக்கவுண்ட்டன்ட் வேலைக்கு தேவை

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Food Packing வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1200 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1400 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.
Country, Company Name
Singapore,  HSL Constructor Pte Ltd
Trade
Carpenter - 2 yrs minimum experience
General Worker ( Construction ) - freshers (Young age only)
Salary
         Carpenter-S$ 22
         General Workers – S$ 20 ( Construction Only)
         
             NO DEDUCTION
Permit Type
PCM - 1year  (If performance good, candidates can extend their period of work)


Wanted For Bahrain
Work
Salary
Members
Industrials Electrician
150  - 180 B.D
(8) Members
B.E Diploma Civil AutoCAD
220  - 240
(4) Members
Accountancy Department (Female)
180 to 200 B.D
(2) Members
Co-ordinator (Female)
150  to 180 B.D
(2) Members
Must : Hindi, English
Duty Time :    9.30 to 6.30 (Break Time hrs) Free  Accommodation
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

ராஜா ராணி சினிமா விமர்சனம்

ஆர்யாவும் நயன்தாராவும் ஒருவருக்கு ஒருவர் பிடிக்காமல் பெற்றோர்களின் கட்டாயத்தினால் திருமணம் செய்து கொள்வார்கள். திருமணத்திற்கு முன்பாக ஆர்யா நஸ்ரியாவை காதலிப்பார். நயன்தாரா ஜெய்யை காதலிப்பார்.


ஆனால் நஸ்ரியாவும் ஜெய்யும் செத்துப் போயிருப்பார்கள் அல்லது காணாமல் போயிருப்பார்கள். பிடித்துக் கொள்ளாமலே வாழும் நயனும் ஆர்யாவும் நாளாக நாளாக ஒருவருக்கு ஒருவர் பிடிக்கத் தொடங்கி மனசுக்குள் காதலிக்க ஆரம்பித்து இருப்பர்.

ஒரு சமயத்தில் நயனுக்கு நிரந்தரமாக வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல வேண்டிய தேவை இருக்கும். ரயில் நிலையத்திற்கோ அல்லது விமான நிலையத்திற்கோ ஆர்யா நயன்தாராவை விடச் செல்லுவார்.

அங்கு நயன்தாரா பிரிந்து சென்ற பின் அவரின் அருமை தெரிய வந்து ரயிலையோ விமானத்தையோ நிப்பாட்டி பிளாட்பாரத்தில் விழுந்து புரண்டு எழுந்து சென்று நயன்தாராவை கைப்பிடித்து படத்தை முடித்து வைப்பார்.


இது படத்தின் கதை அல்ல. டிரைலர் பார்த்ததும் நானே எனக்குள் கற்பனையாய் முடிவு செய்து வைத்திருந்த கதை. கடைசியில் பாருங்கள் இது தான் படத்தின் கதையாய் இருக்கிறது அங்கங்கே சிற்சில மாற்றங்களுடன்.

எனக்கு படத்தில் மிகவும் பிடித்து பெர்பார்மன்ஸில் அடித்து நகர்த்தியிருப்பவர் சந்தேகமேயில்லாமல் ஜெய்தான். என்ன ஒரு இன்னொசன்ட் நடிப்பு. ஜெய் உனக்கு ஒரு பர்பெக்ட்டான பிரமாதமான எதிர்காலம் காத்திருக்கிறது.

கால்சென்டரில் போனின் எதிர்ப்புறத்தில் பெண்களிடம் இருந்து வரும் கமெண்ட்டிற்கும் கலாய்ப்பிற்கும் ஏற்ப மாறும் முகபாவங்களும் எதற்கெடுத்தாலும் அழுவதும் க்ளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட்டும் என அசத்தியிருக்கிறார். கைவலிக்க கைத்தட்டுகிறேன். கண்ணு வேர்க்குது டயலாக்குக்கு தியேட்டரை அதிர்ந்து கைதட்டுகிறது.

ஆர்யா, என்ன ஒரு மேன்லி, வாவ். எனக்கு இது போன்ற மேன்லியாய் இருப்பது தெலுகின் பிரபாஸ் மட்டும் தான் என நினைத்திருந்தேன். அதற்கு நிகராக ஆர்யா என்ன உடற்கட்டு, ஹூம் நானெல்லாம் பெருமூச்சு தான் விடமுடியும்.
 

முதல் பாதியில் தண்ணியடித்து விட்டு அப்பார்ட்மெண்ட்டில் குடியிருப்பவர்களை கலாய்ப்பதும் நயன்தாராவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதும், நயன்தாராவின் காதல் பற்றி தெரிந்ததும் கண்ணீருடன் மாறும் முகபாவமும் சூப்பர் ஆர்யா.

நயன்தாராவுக்கு வெயிட்டான கேரக்டர். நடிப்பில் ஊதித் தள்ளியருக்கிறார். என்ன முகம் தான் முத்தலாய் உறுத்துகிறது. வயசாகிடுச்சில்ல. ஆனாலும் மேக்கப்பில்லாமல் சத்யராஜிடம் திருமணத்திற்கு சம்மதம் சொல்லுமிடத்தில் அழகாய் இருக்கிறார். ஜெய்யை கலாய்க்கும் போது பெண்கள் எல்லாம் விசிலடிக்கின்றனர்.

படுப்ரெஷ்ஷாய் நஸ்ரியா. கண்கள் பேசுகின்றன. ரிங்க ரிங்கா பாட்டுக்கு நைட்டியை மடித்துக் கட்டி வாயில் ப்ரெஷ்ஷூடன் ஆடிக் கொண்டே அறிமுகமாகும் போது ஜொள்ளு விட ஆரம்பித்த நான் அவரது போர்ஷன் முடியும் வரை நிறுத்தவேயில்லை. யம்மா நஸ்ஸூ தெலுகு பக்கம் போயிடாத உன் ப்ரெஷ்னஸை உறிஞ்சி எடுத்துடுவானுங்க கயவாலிப் பசங்க.

சந்தானம் கவுண்ட்டர் காமெடியில் அங்கங்கே கிச்சுகிச்சு மூட்டுகிறார். பல டயலாக்குகளில் விழுந்து விழுந்து சிரித்த நான் இப்பொழுது தட்டச்சு செய்யும் போது யோசிக்கிறேன் ஒன்றும் நினைவில் இல்லை.

பெரிய ஆக்சன், ரீலுக்கு ரீலுக்கு ட்விஸ்ட் என எதுவுமில்லாமல் மிக இயல்பான புன்முறுவலுடன் கூடிய நகைச்சுவையுடன் கூடிய நீரோடையாய் படம் சிறந்த குடும்பச்சித்திரம்.

படத்தின் இயக்குனர் அட்லிக்கு முதல் படமே வெற்றிப்படம். மேக்கிங்கில் ஒரு ஸ்டைல் தெரிகிறது. பாடல்கள் மட்டும் தான் சற்று யோசிக்க வைக்கிறது.

சில குறைகள் இருப்பினும் அதனை பெரிதுபடுத்த தேவையில்லை. காதலிக்கிறவங்களையெல்லாம் கல்யாணம் பண்ணிக்கனும்கிற அவசியமில்லை. ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களை காதலியுங்கள். இது படத்தில் வரும் டயலாக், ஆனால் இதுதான் இந்த படத்தின் தீம்.

ராஜா ராணி - மெளனராகம் வெர்ஷன் 2.

ஆரூர் மூனா

Friday, September 20, 2013

பெருங்கவி கவிக்கோ நக்கீரனின் மொக்கக் கவிதைகள்

கொஞ்ச நாட்களுக்கு முன்பு சமந்தாவின் புகைப்படத்தை போட்டு அனைவரும் கவிதை வாசித்து செல்லவும் என்று மயிலன் ஸ்டேட்டஸ் போட்டு விட்டுப் போக சில பல வளரும் கவிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு இருப்பவர்கள் வந்து ஆளுக்கொரு கவிதையை போட்டு விட்டுச் சென்றனர்.


எல்லாம் சரியாகத்தான் நடந்துக் கொண்டு இருந்தது மதியம் வந்து அந்த மகான் காலடி எடுத்து வைக்கும் வரை.

நக்கீரன் வந்து முதல் கவிதையை பிரசுரித்த பிறகு மற்றவர்கள் எல்லாம் தெரித்து ஓடி விட்டார்கள். அதன் பிறகு வந்தவர்கள் எல்லாம் கத்தி, அரிவாளுடன் வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டியும் மனுசன் அசரவில்லை.

அன்றிலிருந்து எல்லோருக்கும் பிடித்த கவிஞரான மயிலன் கவிதை எழுதவேயில்லை. ஏன் என் இனிய நண்பர் கொங்கு நாட்டு சிங்கக் கவிஞர் சங்கவி கூட மரபுக் கவிதை எழுதுவதை விட்டு விட்டார்.


அந்த வரலாற்று சிறப்பு மிக்க கவிதை(த்தூ)களின் தொகுப்பு உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. படித்து விட்டு வண்டை வண்டையாக திட்ட வேண்டும் என்று நினைப்பவர்கள் வரிசையில் வந்து திட்டி விட்டுப் போகவும் என்னை அல்ல மகான் கவிஞர் நக்கீரனை.

---------------------------------------

அந்த வாசத்துக்கே...
வாசம்...
கொடுத்தவள்....

நீ.....

அன்பே....

அந்த வாசத்துக்கே...
வாசம்...
கொடுத்தவள்....

நீ.....

உன் வாசம்...
கண்டு..கழுகுகள்...
உன்னை வட்டம் இடுகின்றன...

உன் வாசம்...
கண்டு..கழுகுகள்...
உன்னை வட்டம் இடுகின்றன...

அன்பே....
உன் காந்த...
க(ன்)ண்ணால்...
இவர்களை...
சுட்டு(விளக்கி)....
விடு....

அன்பே....
உன் காந்த...
க(ன்)ண்ணால்...
இவர்களை...
சுட்டு(விளக்கி)....
விடு....

-----------------------------------------

அன்பே...
உள்ளே போய்...
உன்னை நீயே...
பூட்டிக்கோள்.....

மொத்த...
சந்தனமும்...
இங்கே தான்....
இருக்கிறது என்று...

அனைவரும்...
உன்னை ...
உராசப்போகிறார்கள்....

அனைவருக்கும்...
சொறி...சொறி...
வந்துடப்போகுது....!!!!

-----------------------------------------

அன்பே...
நீ..முன்னே...
நடக்கிறாய்...

அன்பே...
நீ..முன்னே...
நடக்கிறாய்...

நான்...
உனக்கு முன்....
பின்னாலே...
நடக்கிறேன்...

நான்...
உனக்கு முன்....
பின்னாலே...
நடக்கிறேன்...

உன்....
காலனி...
அழகை....
ரசிப்பதற்காக....

-----------------------------------------

அன்பே....
இனி....உன்னுடன்...
இரவில்..வெளியில் ..
செல்ல...எனக்கு....

பயம்...இல்லை....

அன்பே....
இனி....உன்னுடன்...
இரவில்..வெளியில் ..
செல்ல...எனக்கு....

பயம்...இல்லை....

நீ...இருக்கையையும்...
தூக்கினாலே....
போதும்.....

நீ...இருக்கையையும்...
தூக்கினாலே....
போதும்.....

தெரு நாய்கள்...
ஓடிவிடும்...
உன் வாசம் கண்டு....

--------------------------------------------

அன்பே,,,
எந்த...வாத்தியார்...
உனக்கு...இப்படி...
ஒரு..தண்டனை ....
கொடுத்தது....????

இனி ...நம் இருவரும்.....
வீட்டுபாடம்...
ஒழுங்காக ...
"செய்வோம்"...

என்று ...
சொல்லிவிடு...

அன்பே....
உன்...
அழகில்....
நீ..கட்டி இருக்கும்...
சேலை....

போட்டிருக்கும்....
அழுகுசாதன...
பொருட்கள்....

அனைத்தும்....
உன்னிடம்...
தோல்வி அடைந்து...
தற்கொலை...
செய்துகொண்டன...

------------------------------------------

அன்பே....
இந்த பூமியை...
சுற்றிக்கொண்டிருக்கும்....
நிலா,....
மற்றும்..அனைத்து...
நட்சத்திரங்களும்...

இந்த பூமியில் உள்ள...
உலக அதிசயங்களும்....
இன்ன பிறவும்....

வேற்று கிரகத்திற்க்கு....
இடம்..பெயர்ந்துவிட்டன....

உன்.....
அழகால்....

------------------------------------------------

அனைத்து...
அளவுகொளுக்கும்......
அலகு....

உண்டு....

ஆனால்....
உன்.....

அழகுக்கு....?????

-----------------------------------------------

இனி....
இலவம் பஞ்சு...
தென்றல்...
சுகந்தம்...
மலர்கள்...
மற்றும்...
பலவற்றிற்கு...

உன்....
பேர்....
மட்டுமே...
சூட்டப்படும்...

----------------------------------------------

இந்த...
உலகத்தில்...
உள்ள....

அனைத்து...
சூப்பர்....
கம்ப்யுட்டர்களும்....

தீயிந்து...
கருகி...
போயின....

எந்த...
முட்டாளோ...
ஆணை....
கொடுத்துள்ளான்...

உன்...

கலரை...
கண்டுபிடிக்க....!!!

------------------------------------------

இதனை படித்து விட்டு உங்களுக்கு எற்படும் உணர்வுகளுக்கும் வெறிகளுக்கும் நிர்வாகம் பொறுப்பல்ல. கவிஞர் மட்டுமே பொறுப்பாவார்.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, September 19, 2013

கொரியாவில் சாப்ட்வேர் துறையில் வேலை வாய்ப்பு

Opening for Graduates who have minimum 2 years of experience in IT industry at Korea.

If you are exactly eligible and interested, kindly forward the below mentioned details of yours. 


Company Name                  :- SAMSUNG, Korea
Education                            :- B.Sc. IT or Higher 
Salary                                  :- Singapore dollar $3000
Visa Type                           :- Employment Visa
Accommodation                :- Free
Food                                    :- "No"

Category 1:
Department:- System Solution - S/W Lab
Areas of Expertise:- Windows Application Development (more than 5 years experience), GUI Development - C++, MFC, WinAPI
Expectation:- English Proficiency: Upper Intermediate (Speaking & Writing)

Category 2:
Department:- Printing Solution Divsion - S/W Platform Lab
Areas of Expertise:- Security Engineering - C and Java Programming

Category 3:
Department:- Printing Solution Division - S/W Platform Lab
Areas of Expertise:- Network Protocol Development (more than 5 years of experience); Embedded System - C/C++, Java; Analyzing & processing of Ethernet or 802.11 packet
Other:- Security Background - SSL & Crypto

Category 4:
Department:- Printing Solution Division, S/W - Copier Dev. Part
Areas of Expertise:- Linux, Java, WEB & Android experience
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)

Category 5:
Department:- Printing Solution Division, S/W - ABAT (Auto Build Auto Test)
Areas of Expertise:- Design Test Script & Development in JAVA, WEB, ANDROID or C-Environment
Expectation:- English Proficiency: Advanced (Speaking & Writing)
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Monday, September 16, 2013

திருவாரூர் பயணக் கட்டுரை - தகராறு தகவல்கள்

என்ன ஒரு ஆச்சரியம், திருவாரூரில் ஆறுமாதத்திற்குள் பெரிய மாற்றங்கள் நடந்திருக்கிறது. கமலாலய மேல்கரையில் புதிதாக காலனி ஒன்று கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. துர்காலயா ரோட்டில் இரண்டு காலனிகள் முளைத்துள்ளன. இவ்வளவு காலனிகளிலும் தங்குவதற்கு ஆட்கள் திருவாரூரில் இருக்கிறார்களா என்று தான் தெரியவில்லை.


சனியன்று வீட்டுக்கு போனதுமே மகாதியானத்திற்கு இரவு எங்களுடன் தான் வரவேண்டும் என்று ஒரு குழு முன்பதிவு செய்துவிட்டது. அதனால் மற்ற குழுக்களை வெறுமனே சந்தித்து விட்டு வீட்டுக்குள் அடைக்கலமாகி விட்டேன். மாலை மங்கியதும் நான், என் தம்பி, மணி, நாராயணன் ஆகியோர் அடங்கிய குழு மகாதியானத்தை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தியான மண்டபத்தில் தொடங்கினோம்.

பொதுவாக திருவாரூரில் உள்ள எந்த தியானமண்டபத்திற்கு சென்றாலும் அங்கு ஏற்கனவே பழக்கமான ஒரு குழு அமர்ந்திருக்கும். பிறகு மகாதியானம் பேரளவுதியானமாக மாறி பஞ்சாயத்தில் முடியும். இந்த ஒரு தியானமண்டபத்திற்கு மட்டும் அவ்வளவாக தெரிந்த முகங்கள் வராது.


எங்களது திட்டம் மகாதியானத்தை முடித்து விட்டு மூடர்கூடம் செல்வதுதான். அதன்படி ஆளுக்கு அரை மண்டகப்படி சாத்தி விட்டு முழு மண்டகப்படியை கமண்டலத்தில் எடுத்துக் கொண்டு தியானமண்டபத்தை விட்டு கிளம்பினோம்.

திடஆகாரம் வேண்டி ராஜாராணி இட்லிக்கடையில் தஞ்சமடைந்தோம். புதிதாக திருமணமான மணி கண்டிப்பாக வீட்டுக்குப் போய் தான் சாப்பிட வேண்டும். நீங்கள் அனைவரும் கடையில் சாப்பிடுங்கள். நான் வீட்டுக்குப் போய் வருகிறேன் என்று ஜிஆர்டி கார்டன் நோக்கி பேட்டரி பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பினான். நாங்கள் போகவேண்டாம் என்று எவ்வளவு தடுத்தும் கேட்கவில்லை.
 


நாங்கள் முடித்து விட்டு சாம்பிராணியை புகைய விட்டுக் கொண்டே தியேட்டரில் வாசலில் காத்திருந்தோம். பத்தரை மணியாகியும் மணியை காணவில்லை. போன் அடித்தால் பேசியது ஒரு போலீஸ்காரர். அது பேட்டரி வண்டி லைசன்சும் தேவையில்லை. வண்டி பேப்பரும் தேவையில்லை.

காரணமில்லாமல் புடித்துக் கொண்டிருக்கிறார்களே என்று கடுப்பு வேறு. நாங்கள் அங்கு போனால் ஏழரையாகிப் போகும் என்று அப்போது தான் வந்திருந்த கார்த்தியை அனுப்பி வைத்தோம். போய் அழைத்துக் கொண்டு வரும் போது மணி பதினொன்று.


கோவமாக வந்த கார்த்தி தலையில் அடித்துக் கொண்டான். போலீஸெல்லாம் மணியை பிடிக்கவேயில்லையாம். இவனாக வீட்டுக்கு போய் திரும்பிக் கொண்டு இருந்தவன், வண்டிகளை சோதனை செய்து கொண்டிருந்தவர்களிடம் போய் "என்ன சார் என் வண்டியை சோதனை போட மாட்டீர்களா" என்று கேட்டிருக்கான்.

அவர்களோ "டேய் தம்பி மகாதியானத்தில் இருக்க சலம்பாத போயிடு" என்று எச்சரித்து இருக்கிறார்கள். மறுபடியும் அவர்களிடம் போய் "வண்டி பேப்பரை என்னிடம் கேளுங்கள்" என்று சலம்பியிருக்கான். வண்டியை பிடித்து வைத்துக் கொண்டு யாரையாவது வந்து உன்னை அழைத்துப் போகச் சொல் என்று சொல்லவே அதன் பிறகு தான் எங்களுக்கு போன் வந்தது.

வந்தவனை மொத்தி விட்டு படம் பார்க்க முடியாது என்பதால் மண்டகப்படியை நிறைவு செய்ய எங்களது கடையின் வாசலில் அமர்ந்து மகாதியானத்தை துவக்கினோம். ஐந்து நிமிடம் தான் எங்கிருந்தோ வந்த காவலர்கள் எங்களைப் பார்த்து விட்டனர்.

மறுபடியும் பஞ்சாயத்தா என்று யோசித்துக் கொண்டு இருக்க அந்த வழியாக எனக்கு நன்கு தெரிந்த எஸ்ஐ வந்தார். அரைமணி நேரம் பேசி முடித்து பைசல் செய்து அனுப்பி விட்டு என்னடா இது திருவாரூருக்கு என்னால் வந்த சோதனை என்று புலம்பிக் கொண்டே மகாதியானத்தை அங்கேயே முடித்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பி வருவதற்கு இரவு 1 மணி ஆகிவிட்டது.

எங்கு நின்றாலும் நம்மை ஏன் என்று கேட்காத சுதந்திரம் இருந்த பதினைந்து வருடங்களுக்கு முன்பான திருவாரூர் எங்கே. எங்கு நின்றாலும் சந்தேகத்துடனே நம்மை அணுகும் பாதுகாப்பு முறைகளால் சூழப்பட்ட இன்றைய திருவாரூர் எங்கே.

நகரமயமாக்கலில் எல்லாவற்றையும் இழந்து வருகிறோம்.

அரே ஓ சாம்பா

ஆரூர் மூனா செந்தில்

Friday, September 13, 2013

வாசனை பலவிதம் அதன் அனுபவங்களும் விதவிதம்


வாசனை என்று பொதுவாக சொல்லிஅடையாளப்படுத்துவதை விட அதனை நுகர்வதால் ஏற்படும் கிளர்ச்சியை பகிர்ந்திருக்கிறேன். பிறந்ததிலிருந்து நமக்கு ஏதாவது ஒரு வாசனையுடன் ஒன்றியே வாழ்கிறோம். அது அம்மாவின் மடியிலிருந்து துவங்குகிறது.


எனக்கு கற்பூரத்தின் வாசனை மிகவும் பிடிக்கும். சிறுவயதில் இருந்தே கோயில்களில் கற்பூரம் ஏற்றி பக்தர்களுக்கு தரப்படும் ஆரத்தி தட்டில் இருந்து அனைவரும் கண்ணில் ஒற்றிக் கொள்வார்கள். நான் அப்படியே கையில் தீபத்தை ஒற்றி எடுத்து மூக்கில் வைத்து முகர்ந்து கொள்வேன்.

அந்த வாசனை சில நிமிடங்களுக்கு எனக்குள் கிளர்ச்சியை ஏற்படுத்தும். அதனை வார்த்தைகளில் வெளிப்படுத்துவது சாதாரண விஷயமல்ல. எந்த வயதில் இருந்து ஆரம்பித்தது என்றே தெரியவில்லை. ஆனால் இந்த பழக்கம் இன்றும் தொடர்கிறது.


ஆரம்ப பள்ளியில் படித்த காலத்தில் ஜாமெண்ட்ரி பாக்ஸில் ஒரு கற்பூரத்தை நசுக்கி போட்டுக் கொள்வேன். அவ்வப்போது எடுத்து முகர்ந்து பார்க்கும் போது ஒரு கல்ப் அடித்த புத்துணர்வு ஏற்படும்.

அதன் பிறகு ரொம்ப நாட்களுக்கு ஒரு கற்பூரம் டப்பாவை வாங்கி எனது செல்ஃப்பில் வைத்திருந்தேன். அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் ஒரு முறை முகர்ந்து விடுவது வழக்கம். பிறகு இந்த பழக்கத்தை விட்டு விட்டாலும் கூட நண்பர்களின் கடைக்கு செல்லும் போது அவர்களில் பூஜை செல்ஃப்பில் கற்பூரம் டப்பாவை பார்த்து விட்டால் எடுத்து முகர்ந்து பார்த்துக் கொள்வேன்.

இன்று கூட என் தொழிற்சாலை பிரிவில் வெள்ளிக்கிழமை பூஜை முடிந்து வைக்கப்படும் ஆரத்தி தட்டில் முழுவதும் கற்பூரம் எரிந்த பின் மிச்சமிருக்கும் எரிந்த பகுதியில் விரல் வைத்து தேய்த்து முகர்ந்து பார்த்தால் வாசனை என்னை கவர்ந்திருந்து இழுத்திருக்கும்.


என்னைப் போலவே என் நண்பன் ஒருவன் இருந்தான், அவன் பெட்ரோலின் வாசத்திற்கு அடிமையானவன். பள்ளி படிக்கும் காலத்தில் அவர்கள் வீட்டிற்கு யாராவது பைக்கில் வந்திருந்தால் அவர்களிடம் இருந்த சாவியை வாங்கி டேங்க்கை திறந்து முக்கை விட்டு அதன் வாசத்தை முகர்ந்து கொண்டிருப்பான்.

ரொம்ப நாட்களுக்கு அவர்கள் வீட்டில் தெரியாமல் இருந்து பிறகொரு நாள் தெரிந்து நாலு சாத்து சாத்தி மருத்துவமனையில் அனுமதித்து அவனை அந்த பழக்கத்தில் இருந்து விடுவித்தார்கள். இப்போது கூட அவன் வண்டியில் பெட்ரோல் இருக்கா என்று டேங்க்கை திறந்து பார்க்கும் போது ரகசியமாக முகர்ந்து கொள்வான்.

யோசித்து பார்த்தால் சிறுவயதில் இருந்தே நாம் பார்க்க பிடித்ததும் முகர்ந்து பார்க்க வாசனையாக இருந்ததும் தான் ஈர்ப்புகளுக்கு பழக்கப்படுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.


என் பாட்டி ஒருவர் எப்போதும் பேரப்புள்ளைகளுக்காக தன் மடியில் கடலை மிட்டாயை முடிந்து வைத்திருப்பார். எந்த பேரப்புள்ளையை பார்த்தாலும் தன் மடியில் இருந்து அவிழ்த்து ஒரு கடலை மிட்டாயை கொடுப்பார். எனக்கு அதில் ஒரு உழைத்த பெண்மணியின் வாசம் தான் தெரியும். அதற்காகவே அவரை தினம் சென்று பார்த்து கடலை மிட்டாயை வாங்கி வருவதை பழக்கமாக வைத்திருந்தேன் அவர் இறக்கும் வரை.

பத்து வயதில் என்னுடன் விளையாடும் அபிராமியின் உடையில் முக்கியமாக பாவாடையில் இருந்து ஒரு வாசனை வரும். வியர்வையின் வாசம் அது. நீங்கள் பாட்டுக்கு எதுவும் வில்லங்கமாக கற்பனை பண்ணிக் கொள்ளாதீர்கள். பத்து வயதில் விளையாட்டு மட்டும் நமக்கு தெரியும். ஐஸ்பாய் என்றொரு கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் போது அவள் எங்கு ஒளிந்திருப்பாளோ நானும் அவளுடனே ஒளிவேன், அந்த வாசத்துக்காக.

ஏன் அவள் உடையில் அந்த வாசம் வரும் என்றால் அவள் வீட்டில் எல்லா வேலைகளையும் அவள் தான் செய்வாள். அம்மா கிடையாது, சித்தியின் கொடுமை காரணமாக வீடு கூட்டுவது, பாத்திரம் துலக்குவது என எல்லா வேலைகளையும் அந்த வயதிலேயே செய்வாள். அது உழைத்த வியர்வையின் வாசம். இன்று யோசித்து பார்த்தால் அவள் மீது இருந்தது வாசத்தின் பிரியம் மட்டுமல்ல பப்பி லவ்வும் கூடதான் என்று.

முக்கியமாக சாப்பாட்டின் வாசம் என்பது என்னை பல வீடுகளில் மானத்தை வாங்கியிருக்கிறது. நண்பர்களின் வீட்டிற்கு சென்றிருந்தால் அசைவ குழம்புகளின் வாசத்தை வைத்தே என்ன சமையல் என்று கண்டுபிடித்து விடுவேன். அப்புறம் என்ன ஒரு கட்டு கட்டிவிட்டு தான் நடையை கட்டுவேன்.

என் அம்மா கூட அப்படித்தான். அதனை ஒரு சம்பவம் மூலம் விளக்க நினைக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு அவர் உடல் எடை அதிகரித்து விட்டதை சொல்லி வருத்தப்பட்டார். நான் அவரிடம் ஜெனரல் மோட்டார்ஸ் டயட் சார்ட்டை சொல்லி முயற்சித்தால் ஏழு நாட்களுக்குள் ஏழு கிலோ குறைக்கும் விஷயத்தை சொன்னதும் ஆர்வமாகி அன்றே துவங்கினார்.

மூன்று நாள் தாக்கு பிடித்த அவரால் அதற்கு மேல் அசைவம் இல்லாமல் முடியவில்லை. உடனே வாலை கருவாடு போட்டு குழம்பு வைத்து முட்டை அவித்து அந்த வாசத்தை முகர்ந்த பிறகே பழைய உற்சாகம் வந்தது.

ஒரு முறை கறம்பக்குடியில் என் பெரியம்மாவின் வீட்டில் அமர்ந்து தம்பிகளுடன் விளையாடிக் கொண்டு இருந்தேன். ஒரு வித தீய்ந்த வாசம் வந்து கொண்டே இருந்தது. நேரம் செல்ல செல்ல துணி தீயும் வாசம் உடன் சேர்ந்து வேறு வித கெட்ட வாசம் வந்து கொண்டே இருந்தது. எல்லோரும் சுற்றிச் சுற்றி தேடிப் பார்க்கிறோம். எங்கிருந்து வாசம் வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை.

பக்கத்து வீட்டின் மொட்டை மாடியில் இருந்து வெளிச்சம் வரவே அங்கு சென்று பார்த்தால் பக்கத்து வீட்டு சாரதா அக்கா காதல் தோல்வியின் காரணமாக தனக்குத்தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் சத்தம் போட்டால் அடுத்தவர்கள் வந்து நெருப்பை அணைத்து விடுவார்கள் என்று கடைசி வரை முனகல் கூட இல்லாமல் செத்துப் போனார். ரொம்ப நாட்களுக்கு என் மூக்கில் அந்த கெட்ட வாசம் சுற்றிக் கொண்டே இருந்தது ஏனென்றால் அவரின் காதலுக்கு நான் தான் தூதுவன்.


ஆரூர் மூனா செந்தில்


டிஸ்கி : இன்று வெள்ளிக்கிழமை, சினிமா விமர்சனம் போடவில்லை. கைஅரிக்கிறது. அதனால் ஒரு மீள்பதிவு. ஏற்கனவே படிச்சவங்க மன்னிச்சிக்கங்க. இதுவரை படிக்காதவங்க படிச்சு என்ஜாய் பண்ணுங்க.

Thursday, September 12, 2013

குபீர் பிரபல பதிவர் ஆவது எப்படி


சில அப்பாவி பதிவர்கள் நல்ல திறமையாக எழுதிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் பாருங்கள் அவர்களது பதிவுகளுக்கு ஹிட்ஸ் ரொம்பக் குறைவாகவே கிடைக்கும். அவர்கள் எல்லாம் ஆத்ம திருப்திக்காக பதிவு எழுதுபவர்கள். அவர்களி்ன் ஆர்வத்துக்கு வாரம் இரண்டு பதிவு எழுதினாலும் வாரம் ஒரு பதிவு நான் சொல்வது போல் எழுதினால் போதும்.


கமெண்ட்டுகளும் ஹிட்ஸூகளும் அது பாட்டுக்கு அள்ளும். அதன் பிறகு அவர்களது நல்ல பதிவுகளும் ஹிட்ஸ் ஆகும். உதாரணத்திற்கு ராபர்ட் ஜி என்ற பதிவர் மெல்லியல் என்ற வலைதளத்தில் பதிவுகள் எழுதி வருகிறார். ஆனால் மிக நேர்மையாக தனக்கு தோன்றியதை எழுதி வருகிறார். அவரது எல்லா பதிவுகளும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

ஆனால் பாருங்கள் அவரது வலைதளத்திற்கு வருகை தரும் வாசகர்களுக்கும் என்னைப் போன்ற ஹிட்ஸூக்காக அலையும் பதிவர்கள் வலைதளத்திற்கு வரும் வாசகர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. அதற்காக அவரையும் இது போல் செய்ய சொல்லவில்லை. மற்ற புதிய பதிவர்கள் கவனித்து ஹிட்ஸ்களை அள்ளவேண்டியே இந்த பதிவு.


சினிமா விமர்சனங்கள் எழுதுவது, இதற்காக பெரிய அளவுக்கு சினிமாவின் டெக்னிக்கல் விஷயங்கள் தெரிந்திருக்கவோ திரைக்கதை பற்றிய சூட்சமங்கள் அறிந்திருக்கவோ தேவையில்லை. முதல் காட்சி காலை நாலு மணிக்கு போட்டாலும் சரி. தமிழ்நாட்டில் படம் வெளியாகாமல் ஆந்திராவில் மட்டும் வெளியானாலும் சரி.

அதிகாலையில் எழுந்து பல்லுகூட வெளக்காமல் தலையை மட்டும் சீவிக் கொண்டு திரையரங்கத்திற்கு சென்று விட வேண்டும். டிக்கெட்டு எவ்வளவு விலையானாலும் வாங்கி படத்தை பார்த்துக் கொண்டே அவ்வப்போது படத்தைப் பற்றிய ஸ்டேட்டஸ் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

படம் முடிந்ததும் வேறு எந்த வேலைக்கும் போகாமல் நேரே கம்ப்யூட்டருக்கு வந்து படத்தின் கதையை விலாவரியாக புட்டு புட்டு வைத்து விமர்சனம் எழுதினால் போதும். அதுவாக ஹிட்ஸ்கள் அள்ளிக் கொண்டு போகும்.


கொசுறாக சினிமா பார்க்கப் போனதையே ஒரு பதிவாகப் போட்டு இன்னும் கொஞ்சம் ஹிட்ஸ் தேத்தலாம். முக்கியமாக செல்லும் சாலை, அதில் இருந்த கற்கள், பள்ளங்கள் வரை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்.

முதன் முதல் விமர்சனம் முடிந்து விட்டதா. அடுத்ததாக எதிர்மறை விமர்சனம். இதற்காக முதல் நாளே படம் பார்க்க போக வேண்டிய அவசியமில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து படத்திற்கு சென்று பார்த்து விட்டு நேரம் தங்கள் வசதிப்படி விமர்சனம் எழுதலாம்.

அதற்கு முன்பு அதுவரை வெளிவந்த விமர்சனங்களை எல்லாம் படித்து விட்டு அதற்கு நேர்எதிராக விமர்சனம் எழுத வேண்டும். நல்லாயிருக்கு என்று விமர்சனங்கள் வந்த படத்தை கழுவி கழுவி ஊத்த வேண்டும். பார்க்கவே சகிக்காத படங்களை உலகத்தரத்திற்கொரு தமிழ் சினிமா என்று புகழ வேண்டும்.


இன்னும் கொஞ்சம் உயரம் போய் விடுவீர்கள். இந்த மாதிரி விமர்சனங்களுக்கு திட்டி பின்னூட்டங்கள் வரும். அவற்றிற்கெல்லாம் பதில் சொல்லக் கூடாது. அப்போது தான் நீங்கள் பிரபல பதிவர் என்று உணரப் படுவீர்கள்.

அடுத்ததாக நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது நாத்திகம் மற்றும் சாதி மறுப்பு. உண்மையில் நான் நாத்திகன். கடவுள் நம்பிக்கை கிடையவே கிடையாது எனக்கு விவரம் தெரிந்த வயது முதல். அது போல தான் சாதி நம்பிக்கையும். ஆனால் இங்கு ஏகப்பட்ட போலி நாத்திகர்களும் சாதி மறுப்பாளர்களும் இருப்பதால் அதற்காக மதிப்பே போச்சு.

அதனால் நான் எங்குமே வெளிப்படுத்துவது இல்லை. நாம் பிரபலமாக வேண்டுமானால் சமூக விஷயங்களில் பொங்கி எழுந்து அந்தந்த சமயங்களில் கிடைக்கும் கடவுள்களை போட்டு நொங்கியெடுக்க வேண்டும். சாதி பார்த்து நாம் திருமணம் செய்திருந்தாலும் சாதி ஒழிக என்று தான் பொங்க வேண்டும்.

அடுத்ததாக சேகுவேரா மற்றும் பிரபாகரனின் படங்கள். இவர்களின் கொள்கைகளோ வரலாறுகளோ நமக்கு தெரியாவிட்டாலும் பரவாயில்லை. இவர்களின் படங்களை நமது பதிவில் போட்டு நாம் புரட்சி பதிவர் என்பதை மற்றவர்கள் கவனிக்கும் விதம் தெரியப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அடுத்ததாக மற்ற பதிவர்களை கலாய்த்தல். இதற்கு வகை தொகையே கிடையாது. கிடைத்த பதிவர்களையெல்லாம் கலங்கடிக்க வேண்டும், கதறடிக்க வேண்டும். இதற்கு ஸ்பெசல் கிளாஸ் வேண்டுமென்பவர்கள் பாண்டிச்சேரிக்கு பேருந்து பிடித்து சென்று அங்கு இறங்கி மகாதியான உபவாசப் பொருட்களை வாங்கி சிதம்பரத்திற்கு பேருந்து ஏறுங்கள்.

பாண்டி தாண்டியதும் முகநூல் ஸ்டேட்டஸில் இந்த விஷயத்திற்காகத் தான் வருகிறேன் என்று அறிவித்து விடுதல் நலம். சிதம்பரத்தை நெருங்கியதும் உங்களுக்கு காற்றில் ஜவ்வாது மணம் வீசும். ஆமாம் அங்கு தான் அந்த மகான் வசித்து வருகிறார்.

இறங்கியதும் தங்களை அழைத்துக் கொண்டு மகாதியானவகுப்பு நடக்கும் இடத்திற்கு போவார். இரண்டு நாள் தீட்சை அவரிடம் எடுத்துக் கொண்டால் போதும். நீங்கள் சென்னைக்கு திரும்பும் போது உலகப்புகழ் பெற்ற பதிவராவதற்கான தகுதியை பெற்று விடுவீர்கள்.

அவர் யார் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லை என்றால் நீங்கள் பதிவரே கிடையாது என்றும் உங்களுக்கு பதிவுலகத்தைப் பற்றி அரிச்சுவடி கூட தெரியாது என்று தான் அர்த்தம்.

கிலிபிலி கிலிபிலி ஜெய்போலோநாத். அரே ஓ சாம்பா.

ஆரூர் மூனா

Monday, September 9, 2013

பஞ்சேந்திரியா - வினாயகர் சதுர்த்தியும், நட்பான பதிவர்களும்

இன்று வினாயகர் சதுர்த்தி. வீட்டில் தனியே உட்கார்ந்து டிவி பார்த்துக் கொண்டு இருக்கேன். ஆனால் என் நினைவுகள் மட்டும் திருவாரூரை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

பத்து வயதில் இருந்தே வடக்கு வீதியில் இருந்த சித்தி வினாயகர் கோயில் கமிட்டியில் நானும் இருந்தேன். வினாயகர் சதுர்த்திக்கு பத்து நாள் முன்பே பாரத் மன்றம் என்ற அமைப்பின் மூலம் வசூல் செய்யும் வேலையை ஆரம்பித்து விடுவோம்.

வடக்கு வீதி, வடக்கு மடவிளாகம், மேட்டுத் தெரு, நடவாகனத் தெரு, பிடாரி கோயில் தெரு, ஆண்டித் தோப்பு, காணியாளர் தெரு வரை சுற்றி 2 ரூபாய் முதல் ரூபாய் வரை வசூல் செய்து கணக்கை ஒப்படைப்போம். சங்கத் தலைவர் கவுன்சிலராக இருந்ததால் பெரிய ஆட்களிடம் போய் அவரே வசூல் செய்து வருவார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு சைக்கிள் ரிக்சாவில் மைக் செட் கட்டி 13வது வார்டு முழுவதும் "திருவிழாவை முன்னிட்டு ஆர்க்கெஸ்ட்ரா இருக்கிறது, வினாயகருக்கு சந்தன காப்பு அலங்காரம் இருக்கிறது. வாரீர் வாரீர்" என்று கூவிக் கொண்டே செல்வோம்.

முதல் நாள் இரவு கோயிலில் பேனர் கட்டுவது, கொடி கட்டுவது போன்ற வேலைகளை பார்ப்போம். நாட்டு மருந்து கடைக்கு போய் தொன்னை வாங்கி வருவது, சமையற்காரருக்கு பொருட்கள் வாங்கித் தருவது போன்ற வேலைகளை செய்து முடித்து விட்டு வீட்டுக்கு செல்வேன்.

மறுநாள் காலை 'ஊர்ல கல்யாணம் மார்ல சந்தனம்' என்ற பழமொழிக்கேற்ப காலையிலேயே பட்டை கொட்டை(உடனே தப்பா நினைக்கிறது, அது உத்திராட்சம்) சகிதம் கோயிலுக்கு வந்து சீர்காழி கோவிந்தராஜனின் பாடல்கள் உச்சஸ்தாயில் கேட்கும் போது அப்படியே சிலிர்ககும். அந்த அனுபவத்தை மட்டும் வார்த்தையால் வடிக்க முடியாது.

மாலையானதும் சந்தன காப்பு அலங்காரத்துடன் வினாயகரை தரிசிக்க கூட்டம் அள்ளும். மக்களை கட்டுப்படுத்தி தொன்னையில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், சுண்டல் வைத்து மக்களுக்கு வினியோகிப்பது போன்ற வேலைகளை செய்வேன்.

வேலைகள் முடிந்ததும் அடடா இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என வருத்தமாக இருக்கும். அடுத்த வருட வினாயகர் சதுர்த்தியை எதிர்பார்த்து காத்திருப்பேன். இன்றோ மற்ற நாளைப் போல் அதுவும் ஒரு நாளாய் கடந்து போகிறது.

--------------------------------------------

இவன் கண்டிப்பா பெரிய மனுசனாயிடுவான்


-------------------------------------

ஒரு மனுசனை கொலையா கொல்றதில் நம்ம நக்கீரனை அடிச்சிக்கிறதுக்கு ஆளே கிடையாது. நான் வேலை பாக்குறதே உலக அதிசயம். சில சமயம் டைட் ஓர்க்காக மாட்டி விட்டால் பெண்டு நிமிர்ந்து விடும். ரயிலின் கடைசியில் மற்றொரு பெட்டியுடன் மோதாமல் இருப்பதற்கு ஒரு புஷ் இருக்கும். அதனை எடை குறைந்தது 100 கிலோவுக்கு மேல் இருக்கும்.

இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு பேர் சிரமப்பட்டு தூக்கி மாட்டிக்கிட்டு இருக்கோம், அப்போது ஒரு போன் வந்தது. நம்ம போன் வேறு பெருசா, எடுக்க யோசிச்சிக்கிட்டு அந்தபுஷ்ஷை மாட்டிக்கிட்டு இருக்கோம். முழுவதும் ரிங் போயி கட்டாயிடுச்சி.

மறுபடியும் போன் வந்தது. ஏதோ அவசரம்னு நினைச்சிக்கிட்டு ஒத்தக்கையில் புஷ்ஷை புடிச்சிக்கிட்டு போனை எடுத்தால் நம்ம நக்கீரன். உனக்கு ஒரு சேதி தெரியுமா. ஒரு பதிவில் நம்ம சந்திப்பை குறை சொல்லி செய்தி போட்டிருக்கு, என்ன பண்ணலாம்னு கேட்டார்.

யோவ் இருய்யா. நான் அவசர வேலையில் இருக்கேன். அப்புறம் பேசுறேன் அப்படின்னு சொன்னேன். வேலையை அப்புறம் பார்க்கலாம். இதுக்கு என்ன பண்ணலாம் அப்படின்னு முடிவு செய்யனும். உடனே ஆன்லைனுக்கு வா. அப்படின்னார். எனக்கு செம கடுப்பு, ஆனாலும் ஐந்து நிமிடம் வரை போனை கட் செய்ய விடவில்லை மனுசன்.

வேலை முடிந்ததும் அப்படியே வீட்டுக்கு வந்தேன். அந்த பதிவுக்கு போய் நாலு கமெண்ட்டு திட்டி போட்டு வந்தேன். மேட்டர் வேற மாதிரி பத்திக்கிட்டு பெரிசாகிப் போச்சு. வாழ்க நக்கீரன்.

ஜெய் போலோநாத். அரே ஓ சாம்பா.

-------------------------------------

நம்ம நக்கீரன் வாரிசா இருக்கும்


------------------------------------------

பதிவர் சந்திப்பு அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் நடந்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இது மிக அவசியமானதே என்று நான் நினைக்கிறேன். இவ்வளவு நாள் முகம் தெரியாமல் சற்று தூரத்தில் இருந்து மரியாதையுடன் பழகிய நட்புகள் அந்த ஒரு நாள் பழக்கத்தில் இன்னும் நெருங்கி மாமா மச்சான் என்று அழைக்கும் அளவுக்கு ஆகியிருப்பதே இதன் பலம்.

நட்பு என்பது வாங்க போங்க என்று சற்று தூரத்தில் நின்று பேசி எனக்கு பழக்கமே இல்லை. பதிவர் சந்திப்பில் நான் நின்று பேசியதே மிகச் சிலருடன் தான், இவர் மண்டை திமிரு புடிச்சவன் என்று கூட சிலர் நினைத்துக் கொண்டிருக்க கூடும். அதற்கு காரணம் அந்த அந்த நேரத்திற்கு உணவுப் பொருட்கள் வந்து சேர வேண்டிய டென்சனில் சுற்றிக் கொண்டு இருந்தேன். அது தான் காரணம்.

பலரை பார்ககும் போதும் வெறும் வணக்கம் மட்டும் சொல்லி விட்டு ஓடி விட்டேன். எல்லோரும் என்னை மன்னிக்கவும். அடுத்த வருடம் வெறும் பார்வையாளனாக மட்டும் கலந்து கொண்டு எல்லோர் கூடவும் போட்டோவாக எடுத்து தள்ள வேண்டும் என்று ஆசை.

நான் மேடையில் கேடயம் வாங்கிய போட்டோவை யாராவது வைத்திருப்பார்கள் என்று தேடிக் கொண்டு இருக்கிறேன். கிடைக்கவேயில்லை. நான் மேடையில் ஏறியதே ஒரு நிமிசம் தான். அதுவும் இதை வாங்கத்தான். எனக்கு இந்த கேடயத்தை கொடுத்தார்கள் என்றால் தங்கமணி நம்ப மாட்டேங்கிறாள். நாச்சியப்பன் பாத்திரக் கடையில் வாங்கியதா என கிண்டல் செய்கிறாள். எல்லாம் நம்மளை புடிச்ச கெரகம்.

இந்த முறை புதிதாக சந்தித்த சிலருடன் இன்னும் நெருக்கமாகி கலாய்த்தல் ஓடிக் கொண்டே இருக்கிறது. அது தான் எனக்கும் வேணும். நம்ம ஆசிரமத்தில் இப்ப ஏகப்பட்ட சாமியார்கள்

அரே ஓ சாம்பா

ஆரூர் மூனா

Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் பார்த்த கதை

 இன்று நான் இவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு போவேன் என்று நினைக்கவேயில்லை. இன்று தங்கமணியை அழைத்துக் கொண்டு 12.30 மணிக்கு அயனாவரத்தில் உள்ள மருத்துவமனைக்கு போக வேண்டும். அதனால் 11.30 மணிக்காட்சிக்கு போக முடியாது. அதனால் இன்று சினிமாவை விட்டு விடலாம் என்று தான் எண்ணினேன்.


காலை 7.30 மணிக்கு எதேட்சையாக ஏஜிஎஸ் வெப்சைட்டை பார்த்ததும் ஆச்சரியத்தில் விசிலடித்தேன். ஏனென்றால் பெரிய மாஸ் ஹீரோக்கள் படங்களுக்கு தான் 9 மணிக்காட்சியோ காலை  மணிக்காட்சியோ போடுவார்கள்.

இந்த படத்திற்கு எதிர்பார்க்கவேயில்லை. இருந்தாலும் எத்தனை இருக்கைகள் நிறைந்து இருக்கிறது என்று பார்க்க வெப்சைட் உள்ளே நுழைந்தால் மூன்று வரிசை இருக்கைகள் முழுவதும் நிறைந்ததாக காட்டியது.

மற்ற இருக்கைகள் காலியாகத்தான் இருக்கிறது, நேரிலேயே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று திரையரங்கிற்கு விரைந்தேன். பைக் ஸ்டாண்டில் பார்த்தால் இரண்டு பைக்குகள் மட்டுமே நின்றிருந்தன. ஆச்சரியத்துடன் பைக்கை விட்டு டிக்கெட்டை எடுத்து அரங்கிற்குள் நுழைந்தால் ஒருவர் மட்டுமே அமர்ந்திருந்தார். யோசித்துக் கொண்டே என் இருக்கையில் அமர்ந்தேன்.


படம் இடைவேளையில் தான் தெரிந்தது என்னுடன் அமர்ந்து படம் பார்த்தவர்கள் 20 பேர் மட்டுமே. அடப்பாவிகளா எப்படியெல்லாம் ஏமாத்துறானுங்க. அதே சமயம் காலை வேளையில் ஏகப்பட்ட போன்கால்கள் வந்து என்னை படத்துடன் ஒன்ற விடாமல் செய்தது. நல்லாயிருங்கடா.

--------------------------------------

படத்தில் முதலில் அறிமுகமாவது நாயகியாக இருந்தாலும் சின்னப் பொண்ணாக தெரிந்ததால் யோசித்தேன். அடுத்த காட்சியில் பிந்து மாதவியை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன் இவர் தான் நாயகியோ என.

ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் பிந்துமாதவியை முதல் காட்சியில் பார்த்ததும் பிரச்சோதகம் பீறிக்கிட்டு கிளம்பியது. ஐந்து நிமிடம் என்னை நானே ஆசுவாசப்படுத்தி சமாதானமடந்தேன். இவரிடம் நிறைய விஷயம் இருக்கிறது. சரியாக டியூனானால் சிலுக்கை விட அதிக உயரத்திற்கு போவார்.


நாயகி ஸ்ரீதிவ்யா பேரழகினு எல்லாம் சொல்ல முடியாது. ஆனால் கவனி்க்க வைக்கும் களையான முகம். எல்லோருக்கும் பதின்ம வயதில் வரும் விடலைக் காதல் இவளை அந்த வயதில் நான் பார்த்திருந்தால் எனக்கும் பெரிதாகவே காதல் பூத்திருக்கும். இந்த எருமை மாட்டு வயசில எப்படி வரும்னு நீங்க நினைக்கிறது எனக்கு கேக்குது.

---------------------------------------

எதிர்நீச்சல் பார்த்து முடித்தவுடன் ஏற்பட்ட அந்த சுவாரஸ்யம் இதில் சற்று குறைவு தான். ஆனாலும் சரியாக இரண்டரை மணிநேரமும் பார்த்து சிரித்து மகிழ ஏற்ற படம் இது,

படம் முடிந்து வெளியில் வருகிறேன். தியேட்டரில் பயங்கர கூட்டம், முழுக்க முழுக்க காலேஜ் பசங்க தான். இந்த எதிர்பார்ப்பை சில வருடம் தக்க வைத்துக் கொண்டால் சிவகார்த்திகேயன் முன்னணி நாயகர்களுள் ஒருவராகி விடுவார்.

கரெக்டா சொல்லனும்னா ஜஸ்ட் காமெடி டைம் பாஸ் மூவி.

படம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து அவசர அவசரமாக 20 நிமிடத்தில் விமர்சனத்தை போட்டு விட்டு தங்கமணியுடன் மருத்துவமனைக்கு கிளம்பி போய்விட்டேன்.

ஆரூர் மூனா செந்தில்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - சினிமா விமர்சனம்

முதலிலேயே முடிவு செய்து விட்டு இருக்கிறார்கள். ஒரு இடத்தில் கூட சீரியஸான காட்சிகள் அமைக்கக்கூடாது என, அதே போல் மருந்துக்கு கூட சீரியஸான காட்சிகள் இல்லை. பொண்ணு ஊரை விட்டு ஓடிப்போகும் போதும், காதலி ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளும் போதும் ஜஸ்ட் லைக் தட் எடுத்துக் கொண்டு அடுத்த காட்சிக்கு கடந்து போகிறார்கள்.


படத்தின் கதை இதுதான். ஊரின் பெரிய மனுசன் பொண்ணை வேலையில்லாமல் பொறுக்கிக் கொண்டு இருக்கும் வாலிபன் காதலிக்கிறான். பொண்ணு வீட்டில் எதிர்ப்பு உருவாகி வேறொரு பையனுடன் திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்திற்கு முதல் நாள் நாயகனும் நாயகியும் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள். பிறகு என்னவாகிறது என்பதே கதை.

எனக்கு தெரிந்து இதே கதையம்சத்துடன் இது வரை 9999 படங்கள் வந்துள்ளது என்று நினைக்கிறேன். ஆனாலும் இந்த படம் வெற்றி பெறுவதற்கு காரணம் படத்தின் திரைக்கதை தான். துணிந்தே படத்தை எடுத்துள்ளார்கள்.


படத்தில் கதை நடக்கும் களம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பக்கத்தில் உள்ள சிலுக்குவார்பட்டி. கூடவே குலதெய்வம் பேரும், எல்லோருக்கும் பாண்டி என்று முடியும் படி பெயர் வைத்திருப்பதும் படத்தின் பின்நவீனத்துவம்.

சிவகார்த்திகேயன் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு காலை 9 மணிக்காட்சி திரையிட்டது தான். படத்தில் ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான நகைச்சுவை நாயகனாக வந்து செல்கிறார். இந்த படம் அவரது மார்க்கெட்டை மேலே எல்லாம் தூக்கி விடாது. அதுபோல் கீழேயும் இறக்கி விடாது. வழக்கம் போலவே நன்றாக காமெடி செய்கிறார். நடனமாடுகிறார். சுமாராக நடிப்பும் வருகிறது.


நாயகியாக ஸ்ரீதிவ்யா லதாபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். எனக்கு ஒரு சந்தேகம் எந்த பெண்ணுக்காவது லதாபாண்டி என்று பெயர் வைத்தால் எல்லோரும் கூப்பிடும் போது லதா என்று தான் கூப்பிடுவார்கள். இந்த படத்தில் தான் நாயகியின் அம்மா கூட லதாபாண்டி லதாபாண்டி என்று கூப்பிடுகிறார்.

பள்ளிசெல்லும் நாயகி வேடத்திற்கு நிஜமாக பொருந்துகிறார். நான் பள்ளியில் படிக்கும் போதும் கல்லூரியில் படிக்கும் போதும் இது போன்ற பெண்ணை பார்த்திருந்தால் சைட் அடித்திருக்கலாம் என்று ஏங்க வைத்த இயல்பான அழகு.


சத்யராஜ் படத்தின் ஆகச்சிறந்த(?) பலம். ஊர் பெரிய மனுசனாக படம் முழுக்க மீசையை முறுக்கி விட்டு திரிகிறார். கெளரவமே பெரிது என வாழும் கேரக்டர். க்ளைமாக்ஸில் அசத்தியிருக்கிறார்.

சூரி படத்திற்கு படம் முன்னேறி வருகிறார். படம் முழுக்கவே நாயகனுடன் வரும் பாத்திரம். நன்றாக செய்துள்ளார். பல காட்சிகளில் வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறார்.


படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று பாடல்கள். எல்லாப் பாடல்களும் ஏற்கனவே அதிரிபுதிரி ஹிட்டானால் பார்க்கவும் ரசிக்கவும் வைக்கிறது. சூப்பர் இமான்.

ஹீரோயினுக்கு காதல் வருவது காமெடியாக இருக்கிறது. மைனர் ஹீரோயினின் கல்யாணத்தை போலீஸில் சொல்லி நாயகன் நிறுத்தி விடுகிறாராம். அவளுக்கு நாயகன் மேல் காதல் வந்து விடுகிறதாம்.

பிந்து மாதவி ஒரு காட்சியில் வந்து போகிறார். நாயகியின் அம்மாவுக்கு நாயகனை மகள் காதலிப்பது பிடிக்கவில்லை. ஆனால் அவர்கள் வீட்டு மாடு கிணற்றில் விழுந்தும் நாயகன் காப்பாற்றுகிறார். நாயகியின் அம்மா நாயகனை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்கிறார். அடப்போங்கப்பா. 

எல்லா ஊர்களிலும் அந்த வயதில் ஒரு சங்கம் வைத்துக் கொண்டு இருக்கும் வாலிபப் பசங்களை பார்த்து இருக்கலாம். ஊர் பெரிய மனிதர்களிடம் எப்போதும் முறுக்கிக் கொண்டு திரிவதும் எந்த விழாவானாலும் அதற்கு பந்தாவாக போஸ்டர் அடிப்பதும் இன்றும் தமிழ்நாடு கிராமங்களில் நடந்து வரும் விஷயம் தான். அதனை இயல்பு மீறாமல் காட்டியுள்ளனர்.

பெரிய மனுசனுக்கு நாலு அல்லக்கைகள் இருப்பதும் அவர்கள் எப்போதும் அவரை ஏத்தி விட்டு திரிவதும் அதனால் அவர் விரும்பி கூட பொண்ணுக்கு காதலனுடன் கல்யாணம் பண்ணி வைக்க முடியாமல் போதும் ரசிக்க வைக்கிறது.

எதிர்நீச்சல் அளவுக்கு அதிரிபுதிரி ஹிட்டும் இல்லாமல் மனம்கொத்தி பறவை போல் சுமாரும் இல்லாமல் இரண்டுக்கும் இடையில் ஒரு மீடியம் ஆவரேஜ் ஹிட் படம் இது. லாஜிக்குகளை பார்க்காமல் மனம் விட்டு சிரித்து வரும் படியான ஒரு படம் இது. பார்த்து மகிழுங்கள்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, September 3, 2013

பதிவர் சந்திப்பின் முதல்நாள் ஆன்மீகம் தேடிய பயணம்

இந்த பதிவை நேரடியான அர்த்தத்துடன் எழுதப் போவதில்லை, முழுவதும் பின்நவீனத்துவம் தான். ஆகச்சிறந்த படிப்பாளிகளுக்கு எளிதாக புரியும். படுதிராபையான ஆட்களுக்கு அது கெட்டது போலவே தெரியும். மகாநல்லவர்களுக்கு இது புரியவே புரியாது. நீங்கள் எப்படிப்பட்ட நிலையில் இருக்கிறீர்கள் என்பது நீங்களே முடிவு செய்து கொள்ள வேண்டிய விஷயம்.


நான் பாட்டுக்கு ஒழுங்கா இருந்தேன். நேத்து நம்ம நண்பர் சொறிஞ்சி விட்டதுலேர்ந்து பின்நவீனத்துவமும் மகாதியானமும் நம்மளை போட்டு ஆட்டு ஆட்டுனு ஆட்டிப் படைக்கிது. இந்த தெய்வீகநிலை குறைய ஒருவாரமாவது ஆகும்னு நினைக்கிறேன். அதுவரை என்னால் எழுதப்படுபவை எல்லாம் பின்நவீனத்துவத்துடன் கூடிய அவதானிப்பான பதிவாகத் தான் இருக்கும்.

இனி பதிவுக்கு போவோம்.

பதிவர் சந்திப்புக்கு பதிவர்களை தினமும் அழைத்து அழைத்து சங்கவி, பிரகாஷ், சுரேஷ் இவர்களுடன் தினமும் பதிவர்களை அழைப்பதைப் பற்றி பேசிப்பேசி சிவா, செல்வின், கேஆர்பி இவர்களிடம் உணவு ஏற்பாட்டைப் பற்றி பேசிப் பேசி கடைசி ஒரு வாரம் முழுவதும் கொஞ்சம் ஒளிவட்டத்துடனே சுற்றினேன்.


வெள்ளிக்கிழமை இரவு நண்பர்கள் வெளியூரிலிருந்து கிளம்பியதை கன்பார்ம் பண்ணியதில் இருந்து எனக்கு தூக்கமே வரவில்லை. விடியற்காலை வரை முழித்திருந்து அப்புறம் தூங்கி தாமதமாக எழுந்து கிளம்பினேன்.

வெளங்காதவன் வந்து விட்டதாலும் பன்னிக்குட்டி வருவதாக இருந்ததாலும் டம்மிக்கு ஒரு நண்பரை இவர்கள் பெயரில் சபையில் உலாவ ஏற்பாடு செய்து அழைத்துக் கொண்டு கிளம்பினேன். அறைக்கு சென்று நண்பர்களை சந்தித்து அளவளாவினேன்.


வீடுசுரேஷ், இரவுவானம் சுரேஷ், சசிமோகன் அப்புறம் வெளங்காதவன் இவர்களை சந்தித்தது வரை அமைதியாக இருந்த அறை சற்று நேரத்தில் எல்லாம் அலற ஆரம்பித்தது, ஆமாம் நீங்கள் எதிர்பார்த்தது போலவே நக்கீரன் கோகுலுடன் வந்து விட்டார்.

ஏற்பாட்டுக் குழுவில் இருந்து பாலகணேஷ், சீனு, ரூபக்ராம் ஆகியோரும் வந்து விட்டனர். அறையில் இருந்து எழுந்த கூச்சலில் மற்ற அறையில் இருந்தவர்கள் முதல் விடுதி உரிமையாளர்கள் வரை பம்மி பதுங்க ஆரம்பித்தனர்.

வரும்போது மகாதியானத்திற்காக பாண்டிச்சேரியில் இருந்து கமண்டலமும் புலித்தோலும் வாங்கி வந்திருந்தார் நக்கீரன். ஒரு இருக்கையும் ஒரு கமண்டலமும் மட்டும் இருந்ததால் தியானம் கூட செய்ய முடியாது, மகாதியானம் செய்ய வேண்டியிருக்கிறது, எனவே மான்தோல், கூடுதலாக சில கமண்டலங்கள், அர்ச்சனைப் பொருட்கள் வாங்கி வர வடபழனி கோயிலுக்கு செல்வின் விரைந்தார்.


மகாதியானத்தில் ஈடுபட வேண்டுமென்றால் கடும்விரதம் மேற்கொள்ள வேண்டும். அந்த நேரம் பார்த்து அசைவம் சாப்பிட்டு வந்த சீனுவும் ரூபக்ராமும் தியானத்தை தொடர முடியாமல் வெளியேறினர். பேட்பெல்லோஸ்.

தீவிர மகாதியானம் ஆரம்பமாகி உச்சநிலையை அடைந்த போது பதிவர் நண்பர் சைதை அஜீஸ் அவர்கள் வீட்டில் இருந்து பிரியாணி வருவதாக தகவல் வந்தடைந்தது. விரதம் இருக்கும் நேரத்தில் அசைவமா என்று யோசித்தோம்.

அன்புக்கும் ஆன்மீகத்திற்கும் நடந்த போட்டியில் அன்பு தான் ஜெயித்தது. சைதை அஜீஸ் அன்புக்கு கட்டுப்பட்டு பிரியாணி தின்பதென்று முடிவு செய்து மகாதியானம் கைவிடப்பட்டது. எல்லோரும் பிரியாணியை ஒரு கட்டு கட்டி விரதத்தை முடித்துக் கொண்டோம். ஆகா அருமையான பிரியாணி நன்றி அஜீஸ்.

அன்பர் நக்கீரன் அவர்கள் பிரியாணியை அனைவருக்கும் ஊட்டி விட்டு சமத்துவத்தை வலியுறுத்தினார். அந்த நேரம் பார்த்து வந்த தெய்வீக கவிஞர் சங்கவியும் சமத்துவத்தில் பங்கேற்றார். முதல்இடப் பதிவர் மோகன் குமார் அவர்கள் கூட நக்கீரனின் அன்புச் சங்கிலியில் இருந்து விடுபட முடியவில்லை.

மகாதியானம் முடிந்து சமத்துவ தர்மப்படி உண்டு களித்ததால் வந்த களைப்பை நித்திரையில் ஆழ்ந்து முத்தெடுக்க முடிவு செய்து அவர் அவர்களும் அவரவர் அறைக்கு சென்று முத்தெடுக்கத் தொடங்கினோம்.

இருள் கவ்வத் தொடங்கியது. ஆந்தையின் கூக்குரல் கேட்டது. கண் திறந்து பார்த்தால் நான் மட்டுமே முத்தெடுத்து முடித்திருந்தேன். மற்றவர்கள் தொடர்ந்து முத்தெடுத்துக் கொண்டு இருந்தார்கள். ஒரு சிலர் நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டு இருந்தார்கள்.

சாயரட்சை காலத்து தியானமும், நடுநிசி கால மகாதியானமும் தொடர வேண்டியிருந்ததால் அனைவரையும் எழுப்பி தயார்படுத்தினேன். பூஜைப் பொருட்களும் கமண்டல நீரும் மிச்சமிருந்ததால் மறுபடியும் கோயிலுக்கு செல்ல வேண்டிய தேவையில்லாமல் இருந்தது.

தொடங்கி திவ்யமாக தியானம் சென்று கொண்டு இருந்தது. பக்திமணம் அறையெங்கும் கமழ்ந்தது. சற்று கூடுதலாக புகை வந்தது தான் சிரமமாக இருந்தது. இருந்தாலும் சாயரட்சை பூஜையை முடித்து நடுநிசி கால மகாதியானத்திற்கு செல்ல முற்பட்டோம்.

அய்யகோ என்னவொரு கொடுமை. அர்ச்சனை பொருட்களும் கமண்டல நீரும் காலியாகி இருந்தது. மீண்டும் வாங்கி வந்து மகாதியானத்தை துவக்கிய போதுதான் அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நடந்தது.

ஆமாம், பக்தி முத்திய அந்த நேரத்தில் தான் அந்த ஸ்டேட்டஸை அடித்து முகநூலில் அனுப்பினேன். நான் துறவிமானாக மாற என்னை தூண்டிய செய்கையின் மூலக் காரணம் அதுதான். அதன்பிறகு நாங்கள் ஆனந்த அஜபா நடனம் ஆடியது, வீதிஉலா வந்தது எல்லாம் எங்களின் வாழ்க்கை வரலாற்றில் வரும்.

நானும் மேன்மக்களாக முயற்சித்து என்னுடைய இரண்டாவது பக்தி பயணத்தை துவங்கியுள்ளேன். ஜெய் போலோநாத், அன்பே சிவம். ஆத்திரம் ஆன்மீகத்திற்கு சத்ரு. சமாதானம், சன்னிதானம் நோக்கி ஆன்மீக தேடலோடு பயணிக்கும்

ஆரூர் மூனா செந்தில்

Monday, September 2, 2013

மேன்மக்கள் அவர்கள் மட்டும் தான், நான் இல்லை

இரண்டு நாட்களுக்கு முன்பு நான் மகாதியானத்தில் இருந்த போது பொங்கியதற்கு இன்னைக்கு ஒருத்தர் படையல் வச்சிருக்கார். இப்ப என்ன பிரச்சனைனா இதற்கு பதில் என்னிடம் இருந்து எப்படி வரும் என மிகப் பெரும்பாலானோர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


என் நலம் விரும்பிகளும் நலம் விரும்பாதவர்களும் இதில் அடக்கம். ஆனால் எனக்கு உடன்பாடே இல்லை. நான் எனக்குள் ஒரு ஆன்மீக சக்தி அரும்பத் தொடங்கியிருக்கிறது. என் கால்கள் என்னை இமயமலைக்கு வா வா என்று இழுக்கத் தொடங்கியிரு்க்கின்றன.

இந்த நிலையில் நான் இதற்கு பதிலாக பெரிய பதிவாக போட்டு கன்னாபின்னாவென்று திட்டுவது தவறு. கோவம் ஆன்மீகத்திற்கு சத்ரு. அதனால் இதற்கு கோவப்பட வேண்டாம் என்று யாம் முடிவெடுத்திருக்கிறோம்.


எவ்வளவு நாள் தான் இப்படி கோவப்பட்டு கோவப்பட்டு நம்மை நாமே அழித்துக் கொள்வது. உலகில் சமாதானத்தை வேண்டி ஒரு ஆசிரமம் அமைக்கலாம் என்று முடிவெடுத்து இருக்கிறேன். என் குருநாதர் ஆலோசனைப்படி ஆசிரமத்திற்கு கேமரா வைத்த செல்போன் தடை செய்ய இருக்கிறேன்.அதனால் நான் கோவப்பட்டு பொங்கியெழுந்து கன்னாபின்னாவென்று திட்டி பதிவு போடுவேன். நீங்கள் சண்டையை என்ஜாய் செய்யலாம் என்று நினைப்பீர்கள். ஆனால் அது நடக்காது. இனி எங்குமே நோ கோவம். ஒன்லி சமாதானம்.


அது மட்டுமில்லாமல் எனக்கு ஸ்கிரீன் சாட் எல்லாம் எடுத்துப் போட்டு பதிவெழுத மாட்டேன். ஏன்னா அது எனக்கு தெரியாது. இனிமேல் எனக்கு தெரிந்தது எல்லாம் தியானம், மகாதியானம், ஆன்மீகம், சமாதானம் மட்டுமே.

பக்தகோடிகளே இனிமேல் கோவப்படாதீர்கள். மற்றவருக்கு அமைதியையே போதியுங்கள். அதுதான் நமக்கு வேண்டும். மதமாச்சரியங்கள் கடந்து ஒருவர் மீது ஒருவர் அன்பையே செலுத்துங்கள்.

உங்கள் ஊர்களிலும் ஆசிரமங்கள் அமைக்க வேண்டுமா உடனடியாக எனது நேரடி சீடர் நக்கீரனை தொடர்பு கொள்ளுங்கள். அவரும் இரண்டு நாட்களாக என்னுடன் சுற்றி மகாதியானத்தினை கற்று கொண்டு பாதி ஆன்மீகவாதியாகி உள்ளார்.

அதனால் அந்த பதிவிற்கு திருப்பி பதிலளித்து நாம் நம்மை சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். நண்பர்களே அமைதியை விரும்புங்கள். மகாதியானம் கற்றுக் கொள்ளுங்கள். உலகம் சமாதானமாகும்.

அதனால் அவர்களே மேன்மக்களாக இருந்து விட்டு போகட்டும். நாம் கீழ்மக்களாகவே இருந்து விடுவோம். சமாதானத்தை வேண்டி நான் இதற்கு ஓட்டளிக்கமாட்டேன் என்று என் ஆசிரமத்தின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன்.

ஆரூர் மூனா செந்திலானந்தா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...