நம்மையெல்லாம் யார் சீண்ட போகிறார்கள் என்ற நினைப்பில் தான் நமது வலைதளத்தின் டொமைன் நேம் காலாவதியாகும் நேரத்தில் ஒரு அலுப்பின் காரணமாக விட்டு விட்டேன்.
டொமைன் நேம் டியு டேட் காலாவதி ஆனது தெரிந்து நண்பர் ஸ்கூல்பையன் தன்னுடைய கார்டை பயன்படுத்தி ரினீவல் செய்து கொள்ளும்படி சொன்னார்.
ஆனால் அதனைப் பற்றிய டெக்னிக்கல் அறிவு நமக்கு குறைவாக இருந்ததால் அதற்குரிய ஆட்களை பிடித்து பணம் கட்டுவதற்குள் நமக்கு ஆகாத குரூப்பைச் சேர்ந்த ஒருவரோ அல்லது என்கூடவே இருந்து சிரித்துக் கொண்டு இருக்கும் ஒரு நல்லவரோ தான் இப்படி குறுக்குசால் ஓட்டி அந்த டொமைன்நேம்மை வாங்கி விட்டார்.
இந்த நேரத்தில் தான் நமது வலைத்தளத்தை ரெகுலராக படித்து வரும் வாசக நண்பர்கள் நிறைய பேர் விவரம் விசாரித்தனர். அப்போது தான் எனக்கே நமது வலைதளத்தை முகம் தெரியாத இத்தனை பேர் படிக்கின்றனர் என்றும் அவர்கள் சும்மா படித்து விட்டு செல்லவில்லை தொடர்ந்து நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றும் தெரியும்.
என் வெப்சைட் முகவரி நம்மை விட்டு கைத்தவறி போனதால் பேஸ்புக்கில் பொங்கல் வைத்த நண்பர்கள் ஏராளம். இதனை சரக்கடித்து பார்ட்டி கொண்டாடியவர்களும் உண்டு.
என்ன நடந்தாலும் அதைப் பற்றி கலங்குகிற ஆளா நாம், இடியே விழுந்தாலும் அசர மாட்டோம், இது வெறும் லக்ஷ்மி வெடி.
இந்த நேரத்தில் நான் கேட்டதும் உடனடியாக அதற்கு மாற்று டொமைன் நேம் வாங்கித் தந்த தோழர் நாமக்கல் சிபி அவர்களுக்கு நன்றி.
ஆக நண்ப்ர்களே நமது தோத்தவண்டா வலைத்தளத்தின் டொமைன் நேம் www.amsenthil.com/ என்பதில் இருந்து www.amsenthil.in/ என்று மாறுகிறது. இன்று அதற்கான வேலை நடப்பதால் பழைய பெயரிலேயே இருக்கும்.
இரண்டு நாட்களுக்குள் www.amsenthil.in/ என்ற முகவரிக்குள் வந்தால் தோத்தவண்டா வலைத்தளம் எப்போதும் போல் அனைத்து பதிவுகளுடனும் இருக்கும்.
விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும், உதவிய நல்ல உள்ளங்களுக்கும், நலம் விசாரித்த முகம் தெரியா வாசக நண்பர்களுக்கும், கும்மியடித்த நல்லவங்களுக்கும், தொல்லை ஒழிஞ்சதுடா என்று சந்தோஷப்பட்ட வேண்டப்பட்டவர்களுக்கும், கிரிமினல்த்தனமாக டொமைன்நேம் லவட்டிய அந்த நல் உள்ளம் கொண்ட மகாத்மாவுக்கும் நன்றி நன்றி நன்றி.
ஆரூர் மூனா
நடப்பவை யாவும் நன்மைக்கே! விலாசம்தானே மாறி இருக்கு!? வீட்டில் இருப்பவர்களும், அவர் குணங்களும் மாறலியே!? அத்னால வரும் விருந்தாளிகள் நாங்க எங்க இருந்தாலும் வருவோம். விருந்து படைக்க ரெடியாய் இருங்க தம்பியோவ்!
ReplyDeleteகண்டிப்பாக நன்றி அக்கா.
Deleteபெயரில் இல்லை நீ... எழுதி சாதிப்பதே நீ... (ஜாக்கிசேகர் பார்த்தா சாத்திடுவாரு என்னை,,, ஹி,... ஹி...) பேரைப்பத்தின கவலையை விட்டுட்டு வழக்கம் போல எழுதுங்க தம்பி. என் தளத்தை எத்தனை பேர் படிக்கறாங்கன்றது எனக்குக் கூடத் தெரியலை. தெரிஞ்சுக்க எதும் வழி இருக்கான்னு டெக்னிகல் கில்லிகள்ட்ட விசாரிக்கணும்.
ReplyDeleteசரிண்ணா, விசாரிச்சி தெரிஞ்சி வச்சிப்போம்.
Deleteபெயரில் என்ன இருக்கிறது/ரோசாவை வேறு பெயரில் அழைத்தால் மணம் போய் விடுமா என்ன?!:)
ReplyDeleteஅதானே, நன்றி சென்னை பித்தன் அய்யா.
Deleteஉங்கள் பதிவு என்னை போன்றவர்களுக்கு எச்சரிக்கை !நன்றி !
ReplyDeleteத ம +3
நன்றி பகவான்ஜி.
DeleteGo ahead.We support your efforts and writings.http://bullsstreetdotcom.blogspot.in
ReplyDeleteநன்றி நண்பா.
Deleteஅது எப்படி வாங்க முடியும் என்று தெரியவில்லை... சிறிது விளக்கினால் நல்லது... (dindiguldhanabalan@yahoo.com)
ReplyDeleteஆனாலும் வருத்தமாக இருக்கிறது... எதற்கும் கீழ் உள்ள இணைப்பு இனி மேலாவது உதவக்கூடும்...
http://www.bloggernanban.com/2013/11/renew-blogger-domain.html
நன்றி தனபாலன்
Deleteம்ம்ம்ம்ம், ஒரு நாள் லேட்டானதால இப்படி ஆகிப்போச்சே... அது சரி, டாட் இன்நு முடியற தளங்களை நிறைய வெளி நாடுகள்ல படிக்க முடியாதாமே..
ReplyDeleteதெரியலையே, அதிலும் வில்லங்கம் இருக்கா.
Deleteஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை,
DeleteDear Sorry to hear this :(, Don't worry, We are there with you, we don't mind about change in domain, name etc., :)
ReplyDeleteநன்றி ராஜா.
Deleteபெயரில் என்ன இருக்கின்றது...
ReplyDeleteவாழ்த்துகள் செந்தில்
பதிவுலகத்துல குறுக்கு சால் ஓட்டறவன்.... நம்ம கூடவே சுற்றும் செவ்வாழைகள்தான்... அதனாலதான் அரம்பத்துல இருந்தே உஷாரா இருக்கேன். நீயும் பாலோ பண்ணிக்கோ...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
நன்றி ஜாக்கி அண்ணே
Deleteஅடடா...இப்படி ஏமாந்துட்டீங்களே சார்...! இதை ஒரு தொழிலாகவே செய்கிற களவாணிப் பயலுகளும் இருக்காங்க... டொமைன் கொடுத்த நிறுவனங்கள் கூட இப்படி செய்யுது..
ReplyDeleteஇதுபோல நிறைய பேர் அவங்களோட டொமைன் பெயரை புதுப்பிக்காமல் தவற விட்டுடறாங்க.. அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்னு சொல்றதுக்காகவே ஒரு பதிவே எழுதிட்டேன்.
விபரமா தெரிஞ்சுக்க பதிவோட இணைப்பு கீழே :
உங்களோட டொமைன் எக்ஸ்பயர் ஆகுதா? உடனே ரெனிவல் செய்யுங்க..
நன்றி தங்கம் பழனி
Deleteஇத்தனை பேர் விசாரிசாங்கனா அப்போ நீங்க ஜெயிச்சவண்டா...
ReplyDeleteநன்றி அரன்
Deleteஎவனோ எங்க சிங்கத்தை சீண்டிப் பாக்கறான்..
ReplyDeleteவிட்டா சொறிஞ்சும் பாப்பீங்க.
Deleteநண்பரே யாணைக்கும் அடி சறுக்கும்தானே!
ReplyDeleteவிடுங்கள் நடப்பவை நன்மைக்கே.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
Yenga ponalum vidamatom. Thaedi pidichu padipom la. Neenga kalakunga boss.
ReplyDeleteEVEN NOW WE ARE NOT GETTING AMSENTHIL.IN
ReplyDeleteAmsenthil is not avaiable eve now. After searching for the past 2/3 weeks ,i found you in google+ and got the link to your blog finally.
ReplyDelete