சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, June 27, 2012

தகுதியில்லாத பட்டதாரிகள்

இன்றைய காலக்கட்டத்தில் பட்டதாரிகள் ஏகப்பட்ட பேர் உருவாகி வருகிறார்கள். ஆனால் இது ஆரோக்கியமான வளர்ச்சியா என்று பார்த்தால் ப்ச்ச் ஒன்றுமேயில்லை. ஆட்டு மந்தைகளாகத்தான் உருவாகி வருகிறார்கள். சென்னையில் இருப்பவர்கள் பரவாயில்லை, பள்ளியில் படிக்கும் போதே தான் என்னவாகப் போகிறேன் என்ற முடிவு செய்து தன் மேற்படிப்பையும் அதற்கேற்றாற் போல் வடிவமைத்துக் கொள்கிறார்கள்.

ஆனால் சிறு நகரங்களிலும் கிராமங்களிலும் தன் எதிர்காலத்தைப் பற்றிய எந்த எதிர்ப்பார்ப்பும் கனவுமில்லாமல் ஏதோ பள்ளிப்படிப்பை முடித்தோம். அதன் பிறகு கிடைத்த பட்டப்படிப்பை படித்தோம் என்று இருக்கிறார்கள். ஆனால் படித்து முடித்த இவர்கள் சமுதாயத்திற்கு பயன்பட போகிறார்கள் என்றால் சந்தேகமே.

நான் சில ஆண்டுகள் திருவாரூரிலிருந் போது அரசுப் பணிகளுக்காக ஆன்லைனில் விண்ணப்பித்து கொடுத்துக் கொண்டிருந்தேன். அதில் வங்கிப் பணியாளர் தேர்வுக்காக விண்ணப்பிக்க வரும் M. Com வரை படித்த மாணவர்கள் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வருவார்கள்.

அவர்களிடம் வங்கிக்கு சென்று நுழைவுத்தேர்வு கட்டணத்திற்காக வங்கி வரைவோலை (DD) எடுத்து வாருங்கள் என்று சொன்னால் அவர்களுக்கு அந்த வரைவோலை விண்ணப்பத்தை கூட நிரப்பத் தெரியாது. விண்ணப்பத்தை எடுத்துக் கொண்டு என்று கடைக்கு வந்து என்னை நிரப்பச் சொல்லி கேட்பார்கள்.

அது போல் B.A (History), B.A (Tamil Lit) போன்ற படிப்புகளை படித்தவர்கள் தான் அதிகமாகத்தான் இருப்பார்கள். பட்டப்படிப்பு முடித்து ஒரு ஆண்டு கழித்துப் பார்த்தால் திருவாரூரில் உள்ள ஏதோ துணிக்கடையில் மாதம் ரூ.2000./ சம்பளத்திற்கு பனியன் ஜட்டி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

நான் ஏதோ பட்டப்படிப்பு முடித்தவர்கள் அனைவரும் அப்படித்தான் என்று சொல்ல வரவில்லை. பெரும்பாலான சிறுநகரத்து மற்றும் கிராமத்து மாணவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இவர்களின் அறியாமையை பார்த்து தான் எனக்கு வருத்தம்.

இதில் என்னக் கொடுமை என்றால் இந்த படிப்புகளின் வரிசையில் தற்போது BEயும் சேர்ந்து கொண்டிருப்பது தான். நான் பள்ளி இறுதியாண்டு படிக்கும் காலத்தில் திருவாரூரில் BE நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு கூட கிடையாது. அதனை படிக்க அருகில் உள்ள தஞ்சாவூருக்குத்தான் செல்ல வேண்டும். இன்று கிராமங்களில் கூட பொறியியல் கல்லூரிகள் தோன்றிய பின் அதற்கான மவுசும் குறைந்து விட்டது.

படித்தவனுக்கு வேலையில்லை என்று புலம்பிக் கொண்டிப்பது எல்லாம் வெட்டிப்பயலின் செயலாகி விட்டது. உண்மையில் தான் படித்த படிப்புக்கு தகுதியில்லாத பட்டதாரிகள் தான் தமிழகத்தில் நிறைந்து கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தில் அதுவும் ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு எவ்வளவு அருமையான வேலை கொடுக்கிறார்கள் தெரியுமா? மாதம் ரூ.20000./ சம்பளம், ட்ரெயின் பாஸ், ரயில்வே குவாட்டர்ஸ், இலவச ரயில்வே ஆஸ்பத்திரி. ஆனால் நடப்பது என்ன தெரியுமா இவற்றில் தேர்ச்சி பெறும் தமிழக மாணவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாக இருப்பது தான்.

நான் எழுதிய ரயில்வே தேர்வு சமயத்தில் என்னுடன் சேர்ந்து பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ்ஸில் பணிபுரிய தேர்ச்சி பெற்றவர்கள் 100 பேர். அதில் தமிழர்கள் 8 பேர் மட்டுமே. மீதமுள்ளவர்கள் வடநாட்டிலிருந்து வந்துள்ளார்கள். தமிழர்களுக்கு வேலை கொடுப்பதில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. அவன் ஐடிஐ படித்துள்ளான் சரியான தேர்வை எழுதுகிறான், தேர்ச்சி பெறுகிறான்.

ஆண்டுக்கு 15000 காலிப்பணியிடங்கள் தமிழ்நாட்டில் ரயில்வேயினால் நிரப்பப்படுகிறன்றன. ஆனால் அவற்றில் மிகப்பெரும்பான்மையாக தமிழர் இல்லை என்பது தான் வருத்தம். இந்த ஆண்டு கூட 12000 பணியிடங்களுக்கான தேர்வுகள் ரயில்வே தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்றன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஐடிஐ படித்தவர்கள் அம்பத்தூரிலும், கோயம்புத்தூரிலும், திருப்பூரிலும் ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் கிடைக்கும் 5000 அல்லது 6000 சம்பளத்தில் பணிபுரிந்தவர்கள் அதிலிருந்து வெளியே வந்து இது போன்ற தேர்வுகளுக்கு முயற்சிப்பதில்லை என்பது மட்டும் கசப்பான உண்மை.

ஐடிஐ மட்டுமல்ல டிப்ளமோ படித்தவர்களுக்கும் இதே நிலமை தான். மிக மிக சொற்பமானவர்களே இந்த சக்கரத்தில் சிக்காமல் தப்பித்து வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு தங்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கி கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் BE சிவில் முடித்தவர்கள் எவ்வளவு பேர் ஊரி்ல் உள்ள சிறு காண்ட்ராக்டர்களிடம் 5000 சம்பளத்தில் வேலை செய்து சிரமப்பட்டு கொண்டிருக்கிறார்கள் தெரியுமா. ஆனால் இவர்களுக்கு பெரிய தனியார் நிறுவனங்களில் ஆரம்ப சம்பளமே 10000க்கு மேல் கொடுத்து வேலை நிரந்தரமும் தருகிறார்கள். ஆண்டுக்கு குறைந்த பட்சம் 2000 வரை சம்பள உயர்வும் கொடுக்கிறார்கள். ஆனால் இவர்கள் அந்த கம்பெனிக்காக வெளிமாநிலங்களுக்கு கூட சென்று வேலை செய்ய தயாராக இருக்க வேண்டும் என்பது தான்.

வாய்ப்புகள் இருந்தும் பயன்படுத்திக் கொள்ளாத மாணவர்கள் ஒருபுறம் தகுதியிருந்தும் அதற்கு ஏற்ற வாய்ப்புகள் இல்லாத மாணவர்கள் ஒருபுறம் இருந்தாலும் எதிலுமே சேர்த்தியில்லாது டிகிரியை மட்டும் கையில் வைத்துக் கொண்டு அதற்கேற்ற திறமையும் வாய்ப்பும் இல்லாது தவிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் தயாராகி கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, June 26, 2012

ரயில்வேயில் ஐடிஐ படித்தவர்களுக்கு டெக்னீசியன் வேலை

நண்பர்களே, ரயில்வேயில் அகில இந்திய அளவில் B.Sc (Physics) மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு ரயில்வேயில் மொத்தம் 12000 டெக்னீசியன்கள் தேர்வு செய்கிறார்கள். நோட்டீஸ் மற்றும் விண்ணப்பங்கள் www.rrbchennai.net என்ற வலைத்தளத்தில் கிடைக்கிறது. சற்று முயற்சி செய்து படித்தால் என்னைப் போல் நீங்களும் ரயில்வேயில் டெக்னீசியன் வேலைக்கு சேரலாம்.

மேலும் விவரங்கள் அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் உதவி செய்கிறேன். ஒரே தேர்வு, தேர்ச்சிப் பெற்றால் மத்திய அரசுப் பணி. தமிழர்களில் இந்த வேலைக்குரிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதனால் தான் வடநாட்டிலிருந்து ஏகப்பட்ட பேர் தேர்ச்சி பெற்று வேலையில் சேருகிறார்கள். தேர்வுக்கு படிக்க சென்னையில் பல இடங்களில் பயிற்சி வகுப்புகளும் நடக்கின்றன. எப்படியாவது தேர்வில் தேர்ச்சிப் பெற முயற்சி செய்யுங்கள், வெற்றிப் பெற வாழ்த்துக்கள்.

என் மெயில் ஐடி senthilkkum@gmail.com

ஆரூர் மூனா செந்தில்


Friday, June 22, 2012

சகுனி - செம மங்குனி

காலையிலேயே சினிமாவுக்கு போகணும்னு முடிவு பண்ணி வில்லிவாக்கம் நாதமுனில டிக்கெட் எல்லாம் நேத்தே எடுத்தாச்சு. ஆனா பாருங்க எப்போதும் காலையில் 10 மணிக்கெல்லாம் முடியற நம்ம வேலை இன்னைக்குன்னு 12 மணி வரை இழுத்துடுச்சு. என்னடா பண்ணுறதுன்னு ஆன்லைன்ல தம்பி சீனுகிட்ட அடுத்த ஷோ எங்கேன்னு பாக்க சொல்லி போன் போட்டேன்.

அவன் AGS ல டிக்கெட் புல்லு கோயம்பேடு ரோகிணில கிடைக்கும்ணே முயற்சித்துப் பாருங்கள்னு சொல்லவே நான் கோயம்பேடு நோக்கி சக நண்பன் அசோக்குடன் பைக்கில் கிளம்பினேன். எப்படியும் AGS வழியாத்தான் போகணும் முயற்சித்துப் பார்த்தால் என்ன என்று தோணவே தியேட்டரில் இறங்கி கேட்டால் 12.30 காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது. காலையில் கடுமையான வேலை லன்ச் சாப்பிடவில்லை.

டிக்கெட் எடுத்து உள்ளே செல்லும் போது உள்ளே காஸ்ட்லியாகத்தான் இருக்கும் தண்ணி குடிச்சாவது படம் முடியும் வரை பசியைத் தள்ளி போடுவோம் என்று நினைத்து தண்ணீர் பாட்டில் எவ்வளவு என்று கேட்டால் 20 ரூபாய் என்று சொன்னாள் ஒரு பணிப்பெண். ஆகா சீப்பா இருக்கிறதே என்று பாட்டில் வாங்கினால் அது அரை லிட்டர் பாட்டில். அடப்பாவிகளா இப்படியா ஏமாத்துவானுங்க. படம் வேற போட்டுட்டானுங்க. சண்டைய பிறகு வச்சிக்கலாம் என்று திட்டிக் கொண்டே உள் சென்றேன்.

தியேட்டரும் ஹவுஸ்புல். இவ்வளவு எதிர்ப்பார்ப்பையும் படம் நிறைவேற்றியதா என்றால் ஆம் என்றும் சொல்லலாம் இல்லை என்றும் சொல்லலாம். என்னடா குழப்புகிறேன் என்று நினைக்கிறீர்களா படம் பார்த்த குழப்பம் எனக்கே தெளியவில்லை. பிறகெங்கே நான் உங்களுக்கு விளக்க.

படத்தின் கதை என்ன? காரைக்குடியில் தன் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் லெவல் கிராசிங்கில் அரசாங்கம் பாலம் கட்ட முடிவெடுத்து அதற்காக கார்த்தியின் வீட்டை எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறது. அதனை தடுக்க வேண்டி சென்னைக்கு வரும் கார்த்தி முதல்வரான பிரகாஷ்ராஜை சந்தித்து முறையிட அவர் கார்த்தியை திட்டி அனுப்ப கோவம் கொள்ளும் கார்த்தி சகுனி வேலை செய்து பிரகாஷ்ராஜை பதவியிலிருந்து இறக்கி தன் வீட்டை காப்பாற்றிக் கொள்கிறார் என்பதை இரண்டரை மணிநேரம் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார்கள்.

கார்த்தி ஒரு எனர்ஜி ஹீரோ. அவரின் காட்சிகள் நமக்கும் அவருடன் கதையில் ஒன்ற வைக்கிறது. நன்றாக நடிக்கிறார். நடனத்தில் அசத்துகிறார். ஆக்ஷனும் இயல்பாக வருகிறது. எல்லாவற்றையும் விட காமெடி தான் அவருக்கு கைவந்த கலையாகிறது. தலைநகரில் மிக முக்கிய கதாநாயகர்களுக்கு மட்டுமே நடக்கும் காலை எட்டு மணி காட்சி அனைத்து தியேட்டரிலும் செல்வதிலேயே அவருக்கு இருக்கும் மவுசை தெரிந்து கொள்ளலாம்.

ப்ரணிதா பாடல்களுக்கு நடனமாடி விட்டு கிளைமாக்ஸில் ஹீரோவுடன் சேர்ந்து கொள்ளும் தமிழின் வழமையான கதாநாயகி. பார்ப்பதற்கும் சிறப்பான முகத்தோற்றம் இல்லையென்பது என்னுடைய கருத்து. நடிக்கவும் வரவில்லை.

பிரகாஷ்ராஜ் எல்லாப் படங்களிலும் வரும் அதே போன்ற வில்லத்தனமான கேரக்டர். அவருக்கு பெரியமேட்டில் பிரியாணி சாப்பிடுவது மாதிரி. டபுள் பிளேட்டாக சாப்பிடுகிறார்.

அனுஷ்காவுக்கு 10 நிமிடம் வரும் ஒரு மலையாள சேச்சி கேரக்டர். கதாநாயகியை விட இவருக்கே அதிக விசில் பறக்கிறது. எதுக்கென்றே தெரியாமல் ஒரு கிளப் டான்ஸ் காட்சியில் ஆண்ட்ரியா. ரோஜாவும் ஸ்டார் காஸ்ட் வேண்டுமென்று சேர்க்கப்பட்டிருக்கிறார்.

எல்லாரையும் முக்கியமாக கதாநாயகனையும் சேர்த்து சாப்பிடும் கேரக்டரில் சந்தானம். கேரக்டரை அலேக்காக தூக்கி சாப்பிடுகிறார். குடிகாரர்களை பற்றி இவர் அடிக்கும் லெக்சருக்கு தியேட்டரே எழுந்து விசில் அடித்து ஆதரவு தெரிவிக்கிறது. கார்த்தியின் ஒவ்வொரு பிளாஷ்பேக் காட்சிக்கும் அவர் அடிக்கும் கவுன்ட்டருக்கு தியேட்டரில் ஆனந்த கரகோஷம் தான்.

எல்லாம் நன்றாக இருப்பது போல் இருக்கிறது அல்லவா. ஆனால் எதுவுமே நன்றாக இல்லை என்பது தான் உண்மை.

இவர் ஆலோசனை சொன்னதும் அதைக் கேட்டு நடந்து ராதிகா கவுன்சிலரார். பிரகாஷ்ராஜ் கூப்பிட்டு திட்டியதும் கோவப்பட்டு ராதிகாவை ஜடியா பண்ணி மேயராக்குகிறார். ரோட்டு சாமியாராக இருந்த நாசர் இவரின் ஆலோசனைகளை பின்பற்றியவுடன் புட்டபர்த்தி சாயிபாபா லெவலுக்கு உயர்கிறார். ஐந்து தலைவர்களை மட்டுமே கொண்ட கட்சி நடத்திக் கொண்டிருக்கும் கோட்டா சீனிவாசராவை இவர் ஆலோசனையை கேட்டு முதல்வராகிறார் என நம் காதில் பூ அல்ல பூந்தோட்டத்தையே சுற்றுகிறார்கள்.

லாஜிக் இல்லாத காட்சியமைப்பு நம்பகத்தன்மையில்லாத திரைக்கதை, தேவையில்லாத இடங்களில் பாடல் காட்சி என எல்லாமே ஒரு தோல்விப்படத்திற்கு உள்ள அம்சங்களாகவே உள்ளது. ஆனாலும் ரஜினி கமல் என்ற கேரக்டர்களில் வரும் கார்த்தியும் சந்தானமும் ஒட்டு மொத்த படத்தையும் தூக்கிச் சென்று விடுகிறார்கள்.

ஏன் ஒடியது என்று தெரியாமலே ஒடிய கலகலப்பைப் போல் இதுவும் ஒடிவிடும்.

சகுனி - செம மங்குனி

ஆரூர் மூனா செந்தில்

Thursday, June 21, 2012

தடையறத் தாக்க - உருமி

ஒரு படம் உண்மையிலேயே வெற்றிப்படம் என்பதை எப்படித் தெரிந்துக் கொள்வது. வார நாட்களில் திரையரங்கு பாதியாவது நிறைந்திருந்தால் வெற்றிப்படம் தான் ஆனால் நேற்று ராக்கி தியேட்டரில் தடையறத்தாக்க படம் ஹவுஸ்புல். படம் உண்மையிலேயே சூப்பர் ஹிட் தான். நேற்று தான் படத்தை பார்க்க முடிந்தது. அருமையான படம். படத்தில் காமெடி காட்சிகள் இல்லையென்றாலும் அது ஒரு குறையாகத் தெரியவில்லை.

சிறுவயதில் சென்னைக்கு ஒடிவந்து சிறுசிறு வேலைகளை பார்த்து சொந்தமாக இரண்டு கார்களை வைத்து டிராவல்ஸ்சை நடத்தி வரும் ஹீரோ. ஹீரோயினை காதலித்து அவரது வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள இருக்கிறான். அந்த சமயத்தில் தன் தோழிக்கு உதவப் போக அதனால் உள்ளூர் ரவுடிகளிடம் உரசல் ஏற்படுகிறது. இந்நிலையில் பெரிய ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட கொலைப்பழி ஹீரோ மீது விழுகிறது. அவருக்கும் அவரது தொழிலுக்கும், அவரது காதலிக்கும் ஆபத்து என்ற நிலையில் என்ன முடிவு எடுக்கிறான் என்பதே கதை.

அருண் விஜய்க்கு இது தான் வந்த படங்களிலேயே தரமான ஹிட் படம் இது தான். ஈக்காட்டுத்தாங்கலில் அருண்விஜய் வீட்டிற்கு அருகில் தான் பேச்சிலர் ரூமில் குடியிருந்தேன். அதனால் அவரை அடிக்கடி பார்க்கும் வாய்ப்பு உண்டு. அந்த வீடு எதுவென்றால் ஆறு படத்தில் வில்லன் ஆசிஷ் வித்தியார்த்தியின் வீடாக வருமே அதுதான்.

நாங்கள் ரோட்டில் கிரிக்கெட் விளையாடும் போது எங்களுடன் வந்து ஒரு சில பந்துகள் விளையாடி விட்டு செல்வார். அந்த சமயத்திலேயே இவருக்கு ஒரு ஹிட் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் இருப்பதுண்டு. இந்தப்படம் அந்தக்குறையை நீக்கி விட்டது. இடது கைப்பழக்கம் இயல்பாக இல்லையென்றாலும் அதெல்லாம் ஒரு குறையே இல்லை.

அருண்விஜய்யின் நண்பர்களின் விதவிதமான மெட்ராஸ் பாஷை இயல்பாக இருக்கிறது. அவர்கள் வரும் அந்த இரண்டு சீன்கள் காமெடி நன்றாக உள்ளது. மம்தா சில காட்சிகளில் நன்றாக உள்ளார். வில்லன்கள் அவர்களின் கொடூர சித்ரவதை அப்பப்பா பயங்கரம். படத்தில் இரண்டே பாடல்கள், இரண்டும் அருமை.

தடையறத் தாக்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.

--------------------------------------------------------

சென்ற வாரம் மனைவியின் நச்சரிப்பால் உருமி பார்க்க நேர்ந்தது. படம் நிகழ்கால உண்மையை அடித்து சொல்கிறது. மூதாதையர்கள் எவ்வளவு தான் நேர்மையான குணாதிசயத்துடன் இருந்தாலும் அவர்கள் வம்சாவளிக்கும் அதே அளவு நேர்மை இருக்க வேண்டிய அவசியமில்லை.

நகரத்தில் ஊதாரித்தனமாக சுற்றிக் கொண்டிருக்கும் பிரித்வியும் பிரபுதேவாவும் சொந்த ஊரில் உள்ள நிலத்தை அயல்நாட்டு நிறுவனத்திற்கு விற்க முடிவு செய்து ஊருக்கு வருகின்றனர். அங்கு வந்ததும் காட்டுவாசிகளிடம் சிக்கிக் கொண்டு தங்கள் மூதாதையர்களின் கதை என்னவென்பதை அறிகின்றனர்.

வாஸ்கோடகாமா முதல்முறை இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் மதிப்பு மிக்க கருமிளகை வாங்கிச் செல்கிறார். செல்லும் போது சில வீரர்களை இந்தியாவில் விட்டு செல்கிறார். அவர்கள் அடிமைப் படுத்தும் குணம் இந்தியர்களிடம் கோவத்தை உண்டாக்க அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.

முதல் முறை வந்ததும் இந்தியர்களிடம் வெறும் கத்தியும் வாளுமே ஆயுதம் என்பதை அறிந்த வாஸ்கோடகாமா அடுத்த முறை பீரங்கி மற்றும் துப்பாக்கிகளுடன் வந்து இந்தியாவில் சில பகுதிகளை சிறைப்பிடிக்கிறார். அவரை எதிர்த்து போர் செய்ய முயன்று தோற்று செத்துப் போகின்றனர் பிரித்வி மற்றும் பிரபுதேவாவின் மூதாதையர்களான மற்றுமொரு பிரித்வியும் பிரபுதேவாவும்.

பிளாஷ்பேக் அறிந்த பிரித்வி என்ன செய்கிறார் என்பதே கதை.

படத்தின் கருவைத் தவிர எனக்கு படத்தில் பெரிய ஈர்ப்பு இல்லை. படத்திலேயே பிரமாதமான கதாப்பாத்திரம் ஜெனிலியாவுக்குத்தான். மிரட்டுகிறார். கவர்ச்சியில்லாமலேயே என்னை வசீகரிக்கிறார். ஜொள்ளு விட வைக்க நித்யா மேனன் இருக்கிறார். படத்தில் ஏன் இருக்கிறோம் என்று தெரியாமலேயே பல ஸ்டார்கள் உள்ளனர்.

படத்தில் நெகடிவ் கதாபாத்திரத்தில் ஜெகதிஸ்ரீ குமார் அசத்தியுள்ளார். பெண்மை கலந்த தன்மையுடன் ராஜாவின் மகனை வசீகரப்படுத்தி ராஜாவுக்கு எதிராக செயல்பட வைப்பதில் அசத்துகிறார்.

பிரித்வி இந்தப்படத்திற்காகவே உடம்பை ஏற்றியிருப்பார் என நினைக்கிறேன். இரும்பு போல் முறுக்கேற்றி வைத்துள்ளார். பிரபுதேவா நித்யாவை கவர செய்யும் காட்சிகளில் சில மட்டுமே புன்முறுவலை வரவைக்கின்றன. மற்றவையெல்லாம் ஹூம்.

ரொம்ப போரடித்தால் மட்டுமே பார்க்கலாம்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, June 19, 2012

வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்



நான் படித்த பள்ளி வடபாதிமங்கலம் சோமசுந்தரம் ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.எனது போதி மரம். ஆறாம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கு தான் படித்தேன். கல்வியாண்டு 1990 - 1997 வரை. திருவாரூரில் கமலாலயம் தென்கரையில் இந்த பள்ளி அமைந்துள்ளது. பள்ளியின் ஆண்டுகாலம் நூறாண்டுக்கும் மேல். பள்ளி துவங்கிய போது பள்ளியின் பெயர் போர்டு ஹை ஸ்கூல். எனது பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கலைஞர் மு. கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், முரசொலி மாறன், எழுத்தாளர் சின்னக்குத்தூசி, தோழர் தியாகு ஆகியோர். மற்றபடி சொல்லிக்கொள்வது போல் நான் தான் (போதும்டா உன் சுயபுராணம், ஸ்கூலைப் பத்தி மட்டும் சொல்லு).

எனக்கு வீடு வடக்கு வீதியில் இருந்தது. அங்கிருந்து வெட்டவாசப்படி வழியாக பெரிய கோயிலின் உள் நுழைந்து கமலாம்பாள் சன்னதி வழியாக மேலவீதி நுழைவாயிலின் வழியாக வெளி வந்து கமலாலய படிக்கட்டின் வழியாக நடந்து சென்று முராசன்ஸ் பிள்ளையார் சன்னதியில் மேல் ஏறி பள்ளிக்கு செல்வோம். ஆறு மற்றும் ஏழாம் வகுப்புகளில் இது நடந்தது. எட்டாம் வகுப்பு தொடங்கியதும் என் அப்பா எனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தார். அதன் பள்ளி இறுதி வகுப்பு முடியும் வரை சைக்கிள் பயணம் தான்.

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்பாசிரியர் திரு. மகாதேவன் அவர்கள். அவருக்கு ஒரு பட்டப் பெயர் உண்டு அது மணியடிக்கும் முன் வரும் மகாதேவன். அதாவது பள்ளி துவங்கும் நேரம் காலை மணி 10, ஆனால் அவர் 9.30 மணிக்கே வகுப்புக்கு வந்து பாடம் எடுப்பார். பள்ளி மைதானத்தில் பே பே, கிரிக்கெட் மட்டும் தான் விளையாட முடியும். மற்ற பள்ளிகளுக்குரிய எந்த விளையாட்டுகளும் அதாவது வாலிபால், பேஸ்கட் பால் மற்றும் எந்த விளையாட்டுகளும் எங்களுக்கு கி்டையாது. பெரிய கோயிலின் வெளி பிரகாரத்தில் தான் பள்ளி இல்லாத நாட்களில் கிரிக்கெட் விளையாடுவோம். அந்த வயதிற்குரிய குறும்பு அவ்வளவே.

ஒன்பதாவது மற்றும் பத்தாவது வகுப்புகளில் எனக்கு வகுப்பாசிரியராக இருந்தவர் P.G. சுப்பிரமணியன், அந்த காலக்கட்டம் தான் பெண்கள் பற்றிய ஈர்ப்புகளும் அவர்களைப் பற்றிய ரகசிய பேச்சுகளும் துவங்கிய காலம், சைட் அடிப்பதில் துவங்கி பலான புத்தகம் படிப்பது வரை அறிந்து கொண்ட காலம். அப்பொழுது செங்கம் தியேட்டரில் ஜாக்கிசானின் ஆபரேசன் காண்டர் என்றொரு படம் வந்தது. அந்தப்படத்தில் ஒரு நொடிக்காட்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் காண்பிக்கிறார்கள் என்று முதல் நாள் தனது அண்ணனுடன் சென்று பார்த்து வந்த சேத்தமடையான் சொன்னான். பிறகென்ன வகுப்பில் இருந்த தினேஷ், பிரகாஷ் மற்றும் நான் ஆகியோர் ஒரு திட்டமிட்டோம்.

முதல் முறையாக ஒரு பெண்ணின் பின்புறத்தை துணியில்லாமல் திரையில் பார்க்க ஆசைப்பட்டதால் வந்த வினை இது. அப்பொழுது 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடந்து கொண்டிருந்ததால் காலையில் பள்ளி விடுமுறை, மதியம் மட்டுமே பள்ளி உண்டு. மறுநாள் வீட்டில் காலை எங்கள் டியூசன் ஆசிரியரின் வீட்டில் ஆண்டு விழாவுக்காக பெஞ்சு நகர்த்த வேண்டியிருக்கிறது. அதனால் நான் டியூசன் சென்று அதனை முடித்து விட்டு 1மணிக்கு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு செல்கிறேன் என்று என் அம்மாவிடம் கூறி விட்டு நாங்கள் மூவரும் சினிமாவுக்கு 11மணி காட்சிக்கு சென்று விட்டோம். படம் துவங்கியவுடன் கரண்ட் போய் விட்டது.

அந்த தியேட்டரில் ஜெனரேட்டர் கிடையாது. வேறு வழி அந்த சீனை பார்த்தே ஆக வேண்டுமென்று தியேட்டரிலேயே அமர்ந்திருந்தோம். 12.30 க்கு தான் கரண்ட் வந்தது. அந்த சீன் வரும் வரை போக கூடாது என்று முடிவு செய்து அமர்ந்து விட்டோம். படம் முடியும் போது மணி 2. வீட்டிற்கு வந்தால் அம்மா மட்டும் தான் இருந்தார். உள்ளே சென்றதும் முதல் பளார் விழுந்தது, எங்க பொறுக்கிட்டு வந்த என்றார். என்னம்மா ஆச்சு என்றேன். இரண்டாவது பளார். ரைட்டு எஸ்கேப்பாகனும் என்று நினைத்து பள்ளிக்கு நேரமாகி விட்டது கிளம்பனும் என்று கிளம்பி விட்டேன்.

பள்ளிக்கு சென்றால் என் வகுப்பாசிரியர் வகுப்பில் அழுது கொண்டிருந்தார். நான் உள்ளே சென்றதும் நான் உன்னை என் வீட்டிற்கு வர சொன்னேனா என்றார். இல்லை என்று சொல்வதற்கு முன் அவரிமிருந்து பளார் விழுந்தது. அவ்வளவு தான் அரைமணிநேரத்திற்கு என்னை சாத்திவிட்டார். எனது பெஞ்ச்சை பார்த்தேன் என்னுடன் படம் பார்த்த தினேஷூம் பிரகாஷூம் சிரித்து கொண்டிருந்தனர். அன்று முழுவதும் என்னை முட்டி போட சொல்லி விட்டார். எனக்கு ஒன்று மட்டும் புரியவேயில்லை. என் அம்மா எதற்கு அடித்தார். வகுப்பாசிரியர் எதற்கு அடித்தார். என்னுடன் படம் பார்தத இருவரும் எப்படி தப்பித்தனர்.

மாலை வரை முட்டி போட்டு அமர்ந்திருந்தேன். மண்டைக்குள் குடைந்தது காரணம் என்ன என்று. பள்ளி முடிந்ததும் வெளியில் வந்து வகுப்பாசிரியரின் பக்கத்து வீட்டுக்காரனும் என் வகுப்பு தோழனுமான ராமலிங்கத்திடம் கேட்டேன். அப்பொழுது தான் எனக்கு புரிந்தது. நான் அம்மாவிடம் 1மணிக்கு வருகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் தியேட்டரில் அமர்ந்திருந்ததால் போகவில்லை.

01.30 மணிக்கு அலுவலகத்திலிருந்து சாப்பிட வந்த என் அப்பாவிடம் அம்மா என்னைக் காணும் என்று சொல்லி அழ அப்பா என் ஆசிரியரின் வீட்டிற்கு 10 பேருடன் சென்று என் செய்தாய் என் மகனை என்று மிரட்டியிருக்கிறார். பயந்து போன ஆசிரியர் தான் அழைக்கவேயில்லை என்பதை சொல்லியிருக்கிறார். அத்துடன் என் அப்பா அலுவலகம் சென்று விட்டிருக்கிறார். இதுவரை இருவரிடம் வாங்கியாகிவிட்டது. அடுத்தது அப்பா தான். ஆனால் அவர் காட்டுத்தனமாக அடிப்பாரே என்று பயம் வேறு. சாயந்திரம் முழுவதும் பயந்து கொண்டே வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்திருந்தேன். என் அப்பா வந்தார்...

எங்கள் வீ்ட்டில் ஒரு மரக்கட்டில் உண்டு. வீட்டின் கூடத்தின் மூலையில் அது இருக்கும். என்னை தரதரவென்று இழுத்து கட்டிலின் கீழ் தள்ளி விட்டார். அவர் கையில் கிரிக்கெட் பேட். கட்டிலின் கீழிருந்து வெளியேற அனைத்து பக்கமும் அடைபட்டிருந்தது. கட்டிலின் கீழ் என்னை குறி வைக்காமல் அவர் பாட்டுக்கு பேட்டை வீசுகிறார். நான் எந்த பக்கம் சென்றாலும் அடி விழுகிறது. அரைமணிநேரம் அடித்து நொறுக்கி விட்டு சென்று விட்டார். பாவம் அவருக்கு கை வலித்திருக்கும் போல.

உடம்பு முழுக்க காயம் வீட்டிலும் யாரும் மருந்து போடக்கூட தயாரில்லை. இரவெல்லாம் அழுது கொண்டே யோசித்தேன். எப்படிடா அப்பாவுக்கு கட்டிலின் அடியில் விட்டு விளாச யோசனை வந்தது. நாமோ அவர் எப்படி அடித்தாலும் இரண்டாவது அடிக்குள் வீட்டை விட்டு வெளியில் ஒடி விடலாம் யோசித்து வைத்திருந்தோமே. கரெக்டாக கட்டிலின் கீழ் லாக் ஆகி விட்டோமே என்று. வீட்டில் அனைவரும் என்னுடன் சரியாக பேச 15 நாட்கள் ஆனது.

ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்புகளில் நான் தான் வகுப்புத் தலைவன். அது வரை எங்கள் பள்ளியில் Sports Activities என்பதே இல்லாமல் இருந்தது. திரு. இளங்கோவன் அவர்கள் பள்ளிக்கு உடற்கல்வி ஆசிரியராக வந்து சேர்ந்தார். அதன் பிறகு தான் முதல்முறையாக பள்ளிக்கென ஹாக்கி டீம் உருவாக்கப்பட்டது. நான் தான் ஜூனியர், சீனீயர் இரண்டு டீம்களிலும் கோல் கீப்பர். ஏனென்றால் வயது இரண்டுக்கும் சரியாக இருந்தது, உருவமும் கடாமுடாவாக இருந்தது. அது வரை ஹாக்கியை டிவியில் மட்டுமே பார்த்திருந்த நாங்கள் பயிற்சி செய்ய ஆரம்பித்தோம்.

டீமில் இருந்த அனைவரும் புதியவர்கள். அதுவரை விடிந்தே எழுந்த நான் ஆசிரியரின் கண்டிப்பால் காலை 4 மணிக்கே எழுந்து திருவாரூர் தெப்பக்குளமான கமலாலயத்தை சுற்றி ஒட ஆரம்பித்தேன். குழுவில் இருந்த அனைவரும் தான். ஒரு முறை சுற்றவே 1.5 கி.மீ வரும். ஆறு ரவுண்டு கண்டிப்பாக ஒடவேண்டும். அதன் பிறகு அங்கிருந்து நேராக திரு.வி.க கலைக்கல்லூரி மைதானத்திற்கு சென்று பயிற்சி. 11 மணி வரை விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தால் சராசரியாக நான் முப்பது இட்லி தின்பேன். இப்பொழுதெல்லாம் நாலுக்கு மேல் சாப்பிட முடியவில்லை. எல்லாம் காலம்.

நாங்கள் விளையாட்டு குழுவில் இருந்ததால் பள்ளிக்கு மதியம் அரை நாள் சென்றால் போதும். மூன்று மாதம் பயிற்சிக்கு பிறகு டிவிசனல் லெவல் போட்டிகள் துவங்கியது. ஜூனியர் அணிக்கான போட்டி எங்கள் பள்ளி அணிக்கு எதிராக மன்னார்குடி பின்லே பள்ளி அணி களமிறங்கியது. 0-1 என்று தோல்வி. சில நாட்களுக்கு பிறகு சீனியர் அணிக்கான போட்டி எதிரணி மன்னார்குடி நேஷனல் பள்ளி அணி. அதில் குறிப்பிட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் பெனால்டி ஷூட்டில் எனக்கு அடிபட்டதால் எனக்கு பதில் கணேஷ் என்ற நண்பன் கோல் கீப்பராக இருந்தான். அதிலும் 0-1 என்ற கணக்கில் தோல்வி. அத்துடன் பள்ளி விளையாட்டு முடிவுக்கு வந்தது.

அதிலும் ஒரு கலாட்டா நடந்தது. எங்கள் பள்ளிக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் ஒரே மேனேஜ்மென்ட் தான். அந்த பள்ளியில் உள்ள ஹாக்கி டீம் தமிழ்நாடு லெவலில் சாம்பியன். நாங்களோ முதல் முதலாக விளையாடுபவர்கள். எங்கள் பள்ளியின் தாளாளர் ஒரு யோசனை சொன்னார். இந்த பசங்களுக்கு பெண்கள் அணியுடன் விளையாட வைத்தால் நல்ல பயிற்சி கிடைக்கும் என்று. பசங்களுக்கோ ஒரு பக்கம் பெண்களுடன் விளையாடுவதனால் கடுப்பும் அதே சமயம் கிளுகிளுப்புமாக இருந்தது. போட்டி கல்லூரி மைதானத்தில் துவங்கியது. அந்த சமயத்தில் நான் எனது டீம் புல்பேக் போசிசனில் இருந்த சிவக்குமாரிடம் சத்தமாக ஒரு பெண்ணை பற்றி வில்லங்க கமெண்ட் அடிக்க அது பெண்கள் அணியின் ஆண் கோச்சுக்கு கேட்டு விட்டது. என்னை நோக்கி கோபத்துடன் நடந்து வந்தார்.

நேரே என்னிடம் வந்த கோச் எப்படி நீ இவ்வாறு பேசலாம் என்று கேட்டார் அவ்வளவு தான். அவருக்கு தபதப வென அடி விழுந்தது. அவர் என்னை நோக்கி வந்ததும் ஆட்டக்களத்தில் இருந்த மற்ற நண்பர்கள் எப்படி அந்த கோச் என்னிடம் வந்து பேசலாம் என்று கோபப்பட்டு என்ன ஏதுவென்று விசாரிக்காமல் அவரை பின்பக்கத்திலிருந்து அடி வெளுத்து விட்டார்கள். பிறகு பள்ளித் தாளாளர் வரை பிரச்சனை சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்த பிறகே பிரச்சனை முடிந்தது.

பத்தாவது தான், நான் என் நண்பர்களுடன் பிட்டு படங்களுக்கு செல்ல ஆரம்பித்தக் காலம். திருவாரூரில் செங்கம் மற்றும் பேபி ஆகிய தியேட்டர்களில் பிட்டு படங்கள் போடுவார்கள். டிக்கெட் 4 ரூபாய் தான் இருக்கும். முக்கால்வாசி மதிய நேரங்களில் தியேட்டரில் தான் இருப்போம். சில நாட்களில் எங்கள் பள்ளியின் உதவி தலைமையாசிரியாராக இருந்த ராஜமாணிக்கம் வாத்தியாரும் தியேட்டருக்கு படம் பார்க்க வந்து விடுவார். அவரைப் பார்த்தவுடன் மறைவாக போய் பால்கனியில் அமர்ந்தெல்லாம் படம் பார்த்திருக்கிறோம். இப்பொழுது அந்த இரண்டு தியேட்டர்களும் மூடப்பட்டு விட்டன.

அப்பொழுது தான் சிராக்கோ என்ற உலகப்புகழ் பெற்ற ஆங்கில பிட்டுப் படம் வந்தது. திருவாரூரிலேயே 80 நாட்களுக்கு மேலாக ஓடிய படம் அது. கிட்டத்தட்ட அந்தப்படத்தை 40 முறைக்கு மேல் பார்த்திருப்பேன். போதும், இதற்கு மேல் அசைவமாக வேண்டாம்.

அதே போல் பெண் பிள்ளைகளை சைட் அடிக்க ஆரம்பித்த நேரமும் இது தான். முதல் பெண்ணின் பெயர் புவனி*. திருவாரூரில் புதுத்தெருவில் இருந்த எங்கள் வீட்டுக்கு எதிர்ப்புறம் அவர்கள் வீடு இருந்தது. அவள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கோகோ விளையாட்டில் வீராங்கனையாக இருந்தாள். அவர்கள் தினமும் பயிற்சி செய்யும் வேலுடையார் மேல்நிலைப்பள்ளிக்கு நானும் என் நண்பன் கணேசும் சைக்கிளில் செல்வோம். அங்கு அவள் பயிற்சி முடியும் வரை காத்திருந்து அவளுக்கு பின்னாலேயே வீடு வரை வருவோம். ஏன் அவனுடன் என்றால் அவனும் அவளை சைட் அடித்தான். எங்களுக்குள் ஜென்டில்மேன் அக்ரிமென்ட் இருந்தது. அவள் யாரை நோக்குகிறாளோ மற்றவர் விலகி விடுவது என்று. ஆனால் நடந்ததே வேறு. அவள் வேறு ஒருவனை காதலித்து அந்த வயதிலேயே வீட்டை விட்டு ஒடி விட்டாள்.

சில நாட்கள் நாங்கள் விரக்தியுடன் திரிந்தோம். இந்த பெண் பிள்ளைகளை புரிந்து கொள்ளவே முடியவில்லையே. என்று முழுதாக முளைக்காத தாடியை வைத்துக் கொண்டு சோகமாக திரிந்தோம். பிறகு ஒரு நாள் மடப்புரம் தெட்சணாமூர்த்தி மடத்தில் புவனி1*ஐப் பார்த்தோம். பிறகென்ன மீண்டும் ஷேவிங் செய்து கொண்டு மனதில் கனவுகளுடன் வியாழக்கிழமை தோறும் மடத்திற்கு சென்றோம் அவளுக்காக. இந்த கணேஷ் பயலும் என்னுடனே சேர்ந்து அவளுக்காக மடத்திற்கு வந்தான். பிறகு அந்த பிகரும் ஊத்திக் கொண்டது வேறு ஒரு சோகக்கதை.

பத்தாம் வகுப்பில் ஒரு வழியாக முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று பதினொன்றாம் வகுப்பு அதே பள்ளியில் முதல் குரூப்பில் சேர்ந்தேன். ஏற்கனவே இருந்த நண்பர்கள் குழாம் பிரிந்து புதிய நண்பர்கள் குழாம் அமைக்கப்பட்டது. தினேஷூம் மஞ்ச ரொட்டி விஜயனும் என்னுடன் நெருங்கிய சினேகிதர்களானார்கள். தியேட்டரில் பிட்டு படம் பார்த்த காலம் முடிந்து எவன் வீட்டில் உறவினர்களெல்லாம் ஊருக்கு போகிறார்களோ அடுத்த சிலமணிநேரத்திலேயே விசிஆர் வாடகைக்கு எடுத்துக் கொண்டு அந்த இரவு முழுவதும் பிட்டு படம் பார்க்க ஆரம்பித்தோம். ஒரு நாள் அதிலும் எசகு பிசகாக மாட்டிக் கொள்ள இருந்ததை தனி பதிவாக ஏற்கனவே போட்டிருக்கிறேன்.

பதினொன்றாம் வகுப்பில் எங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறைக்கு ஒரு சிறப்பு இருந்தது. ஆமாம் அந்த வகுப்பறையில் கடைசி பெஞ்ச்சில் தான் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தாராம். நாங்கள் கூட அதே கடைசி பெஞ்ச்சில் தான் அமர்ந்திருப்போம். பதினொன்றாம் வகுப்பில் காலாண்டுக்கு பிறகு சுத்தமாக மதியம் வகுப்புக்கு வருவதை நிறுத்தி விட்டு ஊர் முழுவதும் சுற்ற ஆரம்பித்து வீணாய் போக ஆரம்பித்தேன்.

பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது நண்பர்கள் குழு புதியதாக தோன்றியது. அதுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் குரூப் மாறி வேறு வகுப்புகளுக்கு சென்றார்கள். நான் படித்த பயாலஜி தமிழ் வகுப்புக்கு அது வரை சற்று தூரத்தில் இருந்த நண்பர்கள் நெருக்கமானார்கள். கிரிக்கெட் வெறித்தனமாக மாறியது. புதுப்புது பெண்களை சைட் அடிக்க முயற்சிகள் துவங்கின.

அந்த நண்பர்கள் குழுவை நான் என்றுமே மறக்க மாட்டேன். அவர்களில் சிலரை குறிப்பிடுகிறேன். இதனை நண்பர்களில் யாராவது படித்தால் உடன் என்னை தொடர்பு கொள்ளுங்கள். தினேஷ் தற்போது சீனாவில் பிஸினஸ் செய்கிறான். மஞ்ச ரொட்டி விஜயன் திருவாரூரிலேயே ஸ்டீல் ஆர்டர்கள் எடுத்து செய்து கொண்டுள்ளான். சீனிவாசலு இன்று வரை நெருக்கமாக என்னுடன் தொடர்பில் இருப்பவன். சிங்கப்பூருக்கு செல்ல ஆட்கள் ஏற்பாடு செய்து அனுப்பிக் கொண்டுள்ளான். தொளுத்தி அந்தோணிராஜ் திருவாரூரிலேயே ஒரு சிறு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டுள்ளான். காட்டான் அருண் சிங்கப்பூரில் பெரிய பணியில் இருக்கிறான்.

பாக்கியுள்ள பச்ச மொளகா நாகேஸ்வரன், தொப்பை ரமேஷ், அப்துல் மாலிக், பாரதிராஜா, முருகானந்த ராஜா அம்மையப்பன் பாலாஜி, மாட்டு பாலாஜி, ஸ்ரீதர், அமாவாசை சரவணன் மற்றும் பலர். இவர்கள் என்னுடன் தொடர்பில் இல்லை. என் மிகச்சிறந்த நண்பனாக இருந்த சுதாகர்ராஜ் திருவாரூரில் சிவில் இஞ்சினியராக இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டான். அப்புறம் இப்பொழுதும் தொடர்பில் உள்ள ராஜேஷ், அருண் பி.எஸ் (வாத்துன்னு சொன்னா அடிப்பான்), நரேந்திரன், சுரேன் ஆகியோர் படிக்கும் போது சரியான செட்டாக இருந்தது.

அப்பொழுதெல்லாம் மதிய வேளைகளில் கட் அடித்து விட்டு சிங்களாஞ்சேரி கேட் அருகில் உள்ள ஒரு கால்வாய் மதகுக்கு குளிக்க சென்று விடுவோம். 5 மணி வரை குளித்து விட்டு பிறகு கிரவுண்டிற்கு வந்து இருட்டும் வரை கிரிக்கெட் விளையாடி விட்டு தான் வீட்டிற்கு செல்வோம். இது வழக்கமான செயல். வாரத்தில் மூன்று நாட்கள் கண்டிப்பாக சினிமா. ஒரு சமயம் செங்கம் தியேட்டரில் டிக்கெட்டுக்கு கொடுக்க பணம் பத்தாமல் சிலர் மட்டும் காம்பவுண்டு ஏறிக்குதித்தெல்லாம் சினிமாவுக்கு சென்றதுண்டு.

ஒரு சம்பவம் சரியாக 1995 டிசம்பர் 31 புத்தாண்டு கொண்டாட்டம், அது வரை எந்த பகுதியிலும் போலீஸ் காவல் குறைவாக இருந்த காலக்கட்டம். ஏனென்றால் 1996 ஜனவரி 1லிருந்து தான் திருவாரூர் தனி மாவட்டமாகிறது. இரவு முழுவதும் நண்பர்கள் குடித்து விட்டு விளமல் தியாகராஜ நகர் பேருந்து நிறுத்தத்தில் கூத்தடித்துக் கொண்டு அந்த வழியாக வந்து போகும் வண்டியையெல்லாம் நிறுத்தி ஹாப்பி நியூ இயர் என்று கத்தி கலாட்டா செய்வதுமாக இருந்தோம். எங்களில் அருண் என்ற நண்பன் சரக்கடித்து மட்டையாகி அங்கு படுத்திருந்தான். நாங்கள் இருபது பேர் ரோட்டில் கத்திக் கொண்டு இருந்தோம். ஒரு கார் வந்தது. நாங்கள் நிறுத்தச் சொல்லி கூச்சலிட வண்டி நிற்கவில்லை. நண்பர்கள் கல்லெடுத்து எறிந்து சத்தம் போடவே வண்டி சரக்கென்று நின்றது. ரிவர்ஸில் வந்தது. சற்று வெளிச்சத்துக்கு வந்ததும் தான் தெரிந்தது. அது புதிய எஸ்பியின் கார்.

டேய் போலீஸ் என்று சத்தம் மட்டும் தான் கேட்டது. கார் வந்து நிற்பதற்குள் அந்த இடத்தில் ஒருத்தனையும் காணும் என்னையும் சேர்த்து. காரிலிருந்து எஸ்பி உட்பட நான்கு பேர் இறங்கி இடத்தை சல்லடை போட்டு தேடுகிறார்கள். ஒருவனும் சிக்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து கார் சென்றது. அதன் பிறகு ஒருத்தன் ஒருத்தனாக தலையை வெளிக்காட்டுகின்றனர். அது மிகப்புதிதாக வளர்ந்து வரும் புறநகர் பகுதி. இருவர் ஒரு வீட்டின் மாடியிலிருந்து இறங்கி வருகின்றனர். ஒரு வேலிப்பகுதியிலிருந்து இருவர் வருகின்றனர். எதிர்பக்கம் இருந்த வயல் முழுவதும் மழைத்தண்ணீர் நிரம்பியிருந்தது. அதில் மூழ்கிப்படுத்திருந்த பலர் எழுந்து வந்தனர். நான் எங்கிருந்தேன் என்று கேட்கிறீர்களா, அதற்கடுத்த பிளாட்டில் கட்டுவதற்காக மணல் கொட்டியிருந்தது. அதனுள் நுழைந்து கொண்டிருந்தேன். எல்லோருக்கும் வந்தபின்பு ஒருவனை பற்றி சந்தேகம் இருந்தது.

மட்டையாகி படுத்திருந்த அருண் எங்கே அவன் சைக்கிள் எங்கே என்று. பிறகு கேசவன் தான் சொன்னான், அவன் ஒடும் முன்பு அருணையும் அவன் சைக்கிளையும் பேருந்து நிறுத்தத்தின் மேலே ரூப்பில் தூக்கி போட்டு விட்டு சென்றாக. இன்று வரை எத்தனையோ புத்தாண்டு கொண்டாட்டத்தை பாரத்து விட்டேன். அது போல ஒரு திரில் கிடைக்கவேயில்லை. அன்று யாராவது ஒருவர் மாட்டியிருந்தால் போதும் அத்தனை பேரின் ஜாதகமும் போலீஸ் கையில் போயிருக்கும்.

அதன்பிறகு பள்ளிப்படிப்பை முடிப்பேனா என்ற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, என் பெற்றோர்களுக்கும் வந்து விட்டது. எனவே பள்ளிப்படிப்புடன் திருவாரூரில் இருந்தால் உருப்பட மாட்டேன் என்று சென்னைக்கு மூட்டை கட்டி விட்டார்கள். அதன் பிறகு சென்னை வந்து ஐசிஎப்பில் படித்து இன்று வேலைக்கு செல்வது வரை அதிசய வரலாறு தான்.

ஆரூர் மூனா செந்தில்

Saturday, June 16, 2012

நேர்மையில்லாத மலையாளிகள்


இந்த மலையாளத்தானுங்க இருக்கானுங்களே, என்னடா மரியாதையில்லாமல் பேசுகிறானே என்று நினைக்க வேண்டாம். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மட்டுமல்ல எப்பொழுதுமே இவனுங்க நேர்மையில்லாதவனுங்க தலைவா. நான் ஒரு வருடம் திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய கட்டுமான நிறுவனத்தின் புராஜெக்ட்டில் நிர்வாக அதிகாரியாக (Administration Officer) பணிபுரிந்திருக்கிறேன். அதாவது அங்கு புதிதாக வேலை கிடைத்து அதற்காக செல்லவில்லை.

நான் பணிபுரிந்தது அதே நிறுவனத்தின் சென்னை மண்டல அலுவலகத்தில் தான். புதிய புராஜெக்ட் திருவனந்தபுரத்தில் கிடைத்தும் தொழிலாளர் பிரச்சனை காரணமாக பணி துவங்காமல் இருந்தது. எனது பொது மேலாளர் இந்த பிரச்சனையை தீர்க்க நான் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து என்னை அழைத்து பணம் பிரச்சனையில்லை, இந்த வேலை நமக்கு தடையில்லாமல் நடக்க வேண்டும். நீ சென்று தொழிலாளர் பிரச்சனையை தீர்த்து வை என்றார். அஙகு ஏற்கனவே கட்டுமான வேலைக்கென திட்ட மேலாளர் மற்றும் 15 பொறியாளர்கள் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரும் தமிழர்கள்.

நான் தொழிலாளர் நல அதிகாரியாக பொறுப்பேற்று அத்திட்டம் முடியும் வரை அங்கு பணிபுரிந்தேன். பிறகு சென்னை வந்து விட்டேன். அந்த ஒரு வருட காலத்தில் எனக்கு மலையாளிகளுடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன்.
கேரள எல்லைக்குள் எந்த கட்டுமான வேலை நடந்தாலும் தொழிலாளர் உள்ளூரில் இருந்தே எடுக்க வேண்டும் என்பது அங்கு நடைமுறை. ஆனால் இவர்கள் ஒழுங்காக வேலை செய்வார்களா என்றால் மாட்டார்கள். ஒரு உதாரணம் வேண்டுமென்றால் தொழிலாளர்களுக்கென தற்காலிக குடியிருப்பு போடுவதற்காக சவுக்கு வாங்க கடைக்கு செல்வேன். என்னுடன் எங்களுடைய TATA 709 வண்டியும் வரும்.

அதில் எங்களுடைய ஒரிசா லேபர் இருவர் வருவர். ஆனால் கேரளாக்காரர்கள் நடைமுறைப்படி அவர்கள் தான் லோடு ஏற்ற வேண்டும். ஆனால் அவர்களுடைய இடத்தில் அவர்கள் இருக்கமாட்டார்கள். நமக்கு நேரமாகும். எனவே என்னுடன் வந்த லேபர்களை வைத்து லோடு ஏற்றும் வரை ஒருவனும் வரமாட்டான். ஏற்றி முடித்ததும் 1 சவுக்குக்கு ரூ2/- வீதம் 100 சவுக்குக்கு ரூ200/- வாங்கிக் கொண்டு போய் கொண்டே இருப்பான். இது தான் அவர்களின் லட்சணம்.
எங்களது புராஜெக்ட் திருவனந்தபுரத்தின் புறநகர்ப்பகுதியான கழக்கூட்டம் என்ற இடத்தில் நடந்தது. அங்கு மொத்தம் 7 யூனியன்கள் இருந்தன. வேலை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் மாதாமாதம் பெனால்டி கட்ட வேண்டியிருக்கும். யூனியன் லேபர்கள் வேலை நேரமான எட்டு மணிநேரத்தில் ஐந்து மணிநேரம் மட்டுமே வேலைப்பார்ப்பார்கள். மற்ற நேரம் பீடி பிடித்துக் கொண்டும் கதையடித்துக் கொண்டும் இருப்பார்கள்.

தவறாமல் இவர்களுக்கு நேரத்திற்கு டீயும் பஜ்ஜியும் வரவில்லை என்றால் வேலையை நிறுத்தி விடுவார்கள். டீ வந்தால் தான் வேலை தொடங்கும். மலையாள தொழிலாளிகள் வேலை பார்க்கவில்லை எனில் என்னைத் தவிர வேறு பொறியாளர் யாராவது கடிந்து கொண்டால் வெளியில் கடைக்கு வரும் நேரம் பார்த்து வேறு ஏதாவது காரணம் ஏற்படுத்தி அடித்து விடுவார்கள். என்னை மட்டும் எதற்கு விடுகிறார்கள் என்றால் சம்பளம் கொடுப்பது நான் தான்.

இந்த கேரளாக்காரர்களை வைத்துத் கொண்டு வேலையை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது என்பதால் யூனியன் தலைவர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். 30 சதவீதம் லேபர்கள் எங்களு்டைய ஆட்கள். 70 சதவீதம் மலையாளிகளுக்கு என்றும் யூனியனுக்கு 10 சதவீதம் என்று முடிவு செய்தும், இதை ஒப்புக் கொண்டதால் அவர்களுக்கு தனியாக மூன்று வேலையாட்களுக்குரிய சம்பளக்காசை தினம் கொடுக்க வேண்டும் என்றும் முடிவு செய்து புராஜெக்ட் முடியும் வரை என்து பொது மேலாளரின் அனுமதியுடன் கொடுத்தேன். இது தான் இவர்களின் லட்சணம்.

ஒரு முறை திருச்சூரிலிருந்து லோடு ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரம் வந்த எங்கள் கம்பெனி வண்டி கொச்சியில் டாடா இன்டிகா வண்டியில் மோதி விபத்து ஏற்பட்டு விட்டது. வண்டி தமிழ்நாடு பதிவு எண் என்பதால் மலையாளிகள் நிறைய பேர் சூழ்ந்து கொண்டு டிரைவரை தாக்குவதாக டிரைவர் போன் செய்ததால் என்னை பிரச்சனையை தீர்த்து, வண்டியை மீட்டு வரும்படி என்து மேலாளர் கூறினார். நான் அங்கு சென்றதும் நிலைமை படுமோசமாக இருந்தது. 10 பேர் எங்கள் நிறுவன டிரைவரை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதில் ஒருவன் என்னிடம் வண்டியை இப்பொழுதே கொளுத்தப் போவதாக கூறினான். இன்னொருவன் நாங்களெல்லாம் பாண்டி நாய்கள் என்றும் எங்களையும் சேர்த்து கொளுத்துவதாகவும் கூறினான். மற்றொருவன் நீ என்ன பெரிய ஆளா நான் சென்னையில் வந்து உன்னை அடிப்பேன் என்று கூறினான். என்னை சுற்றி 10க்கும் மேற்பட்ட மலையாளிகள். நாங்கள் இருவரும் தான் தமிழர்கள்.

உடனடியாக போன் செய்வதாக பாவ்லா காட்டி அங்கிருந்து நழுவி அந்த பகுதி காவல் நிலையத்திற்கு சென்ற நான் ஒரு எஸ்.ஐயிடம் சென்று நான் வந்த விபரத்தை கூறி வண்டியை மீட்டுக் கொடுத்தால் கேட்கும் பணம் கொடுப்பதாக கூறினேன். உடனே அவர் உடன் 2 போலீஸ்காரர்களை அழைத்துக் கொண்டு என்னுடன் வந்து வண்டியை மீட்டு காவல் நிலையம் கொண்டு வந்தார்.

மலையாள கும்பல் எங்களுடன் வந்து காவல் நிலையத்தை சூழ்ந்து கொண்டு எங்களை வெளியில் வரமுடியாதவாறு செய்தனர். என்னுடன் வந்த எஸ்.ஐ நான் பணம் தருவதாக கூறியதால் வண்டியை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்ததாகவும் கேஸ் போடாமல் இருக்க அந்த கும்பலுடன் பேசி சமரசம் செய்தால் மட்டுமே முடியும் என்றார்.

அவர்களுடன் பேசினால் கண்ணாடி உடைந்ததற்கு நஷ்ட ஈடாக ரூ.1 லட்சம் கேட்டான். மறுத்தால் ஒட்டுனரை வெளியில் கத்தியால் குத்திவிடுவேன் என்று மிரட்டினான். காலையில் 11 மணிக்கு துவங்கிய பேச்சுவார்த்தை இரவு வரை தொடர்ந்து பதினைந்தாயிரம் கடைசித் தொகையாக முடிவானது. மலையாளிகள் இந்த பிரச்சனையில் தமிழர்களான எங்களை பேசிய பேச்சு இருக்கிறதே, அதை சொல்லி மாளாது.

ஒரு மலையாள நாதேரி என் இடுப்பு உயரம் தான் இருப்பான், காத்தடிச்சா பறந்து விடுவது போல் இருப்பான். அவன் என்னை என்னை பேச்சுக்கு பேச்சு பாண்டி பட்டி என்று தான் திட்டினான். அதற்கு அர்த்தம் என்னவென்றால் பாண்டி என்பது கேரளாவில் தமிழர்களை குறிப்பிடும் இழிவுச் சொல், பட்டி என்றால் நாய். இது மட்டும் சென்னையில் நடந்திருந்தால் அவன் கை, கால் எல்லாம் தனித்தனியாக பிச்சுப் போட்டிருப்பேன். இந்த சம்பவம் நடந்தது 2004ல் ஆனால் இன்று வரை அவர்கள் அனைவரின் முகமும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. எவனாவது இங்கு மாட்டினால் கைமா தான்.

நான் சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் வைத்து இங்கிருந்து வெளிநாடுகளுக்கு தேங்காய் ஏற்றுமதி செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் நான் வேறோரு தொழிலில் ஏற்பட்ட மிகுந்த நஷ்டம் காரணமாக கடனுக்கு பொருட்களை கொடுக்காமல் Bank Guarantee மூலம் பொருட்களை வெளிநாடுகளுக்கு விற்றுக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு மலையாள நாதேரி ஒருத்தன் துபாயிலிருந்து என்னை தொடர்பு கொண்டான். தான் துபாய் மார்க்கெட்டில் கடை வைத்திருப்பதாகவும் எனக்கு வாரம் ஒரு கண்டெயினர் தேங்காய் அனுப்பினால் அவன் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தான். மூன்று முறை காசுக்கு தேங்காய் என்று அனுப்பினேன்.

நான்காவது முறை அவன் கடனுக்கு கேட்டான். அதாவது நான் அனுப்பிய தேங்காயை அவன் பெற்றுக் கொண்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில். அந்த சமயத்திலாவது அவன் மலையாளி என்று நான் உஷாராகியிருக்க வேண்டும். ஆனால் மூன்று முறை வர்த்தகம் செய்ததால் நம்பி இரண்டு கன்டெயினர் தேங்காய்கள் அனுப்பினேன்.

ஒரு கன்டெயினருக்கு 40,000 தேங்காய் வீதம் 2 லோடு மொத்தம் 80,000 தேங்காய்கள்.ஒரு தேங்காய்க்கு ரூ.13/- வீதம் மொத்தம் ரூ.10,40,000/-. அனுப்பியவுடன் டாக்குமெண்டுகளை அவனது முகவரிக்கு அனுப்பினேன். அதோடு சரி அந்த நாதேரி என் தொடர்பு எல்லைக்குள் இன்றுவரை வரவேயில்லை. நேரடியாக என் தம்பியை துபாய்க்கு அனுப்பினேன். அங்கு அவன் கொடுத்த முகவரியில் அவன் இல்லை. காலி செய்து விட்டானாம்.

ஒரே முறையில் பத்து லட்சம் ரூபாயை இழந்ததால் மேற்கொண்டு என்னால் ஏற்றுமதி தொழிலில் தொடர முடியவில்லை. நான் இந்த ஆர்டருக்கு இன்சூரன்ஸ் செய்திருந்ததால் பணம் சிறிது தாமதமானாலும் எனக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.

இத்தனை சம்பவங்களுக்கு பிறகு எங்காவது மலையாளி யாரேனும் ஒருவன் என்னிடம் ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்று வந்தால் கடுமையாக திட்டி அனுப்பிவிடுவேன். எந்த உதவியும் செய்ய மாட்டேன். இந்த மலையாளி நாய்ங்க இருக்கானுங்களே $#@%$%#$@$ மவனுங்க. இவனுங்க நன்றி கெட்ட பயலுவ பாஸூ. இவனுங்கள பற்றி ஒரு சொலவடை உண்டு. மலையாளி மட்டும் தனக்கு காரியமாகனும்னா பொண்டாட்டிய கூட கூட்டிக் கொடுப்பான் என்று. அதற்கு பொருத்தமான உதாரணம் எனக்கே நடந்தது. பொது இடத்துல சொல்ல முடியாது. அதனால் இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. கடந்த சில நாட்களாக வேலை கடுமையாக இருப்பதனால் மாலை வீட்டுக்கு வந்ததும் தூங்கினால் போதும் என்றிருக்கிறது. இருந்தாலும் மனது எதையாவது எடுத்துப் போட்டு பதிவைத் தேத்து என்கிறது. ஆனால் அறிவுக்கு தெரிகிறது என் பதிவை ஒரளவுக்கு முக்கிய பதிவர்கள் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள். எனவே மீள் பதிவில் கூட ஒரளவுக்கு விஷயம் இருப்பது நல்லது என்று. எனவே எழுதிய சமயத்தில் சரியாக கவனிக்கப்படாமல் போன பதிவை மீள் பதிவு செய்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

Tuesday, June 12, 2012

காதலின் தூதுவர்கள்

சிறுவயதில் அனைவருக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கும். அது என்னவோ தெரியவில்லை. காதலிக்கும் அனைத்து மாமாக்களும், அத்தைகளும், சித்தப்பாக்களும், சித்திகளும் 10 வயதிற்குட்பட்ட பையன்களையே காதல் தூதுவன்களாக தேர்ந்தெடுக்கிறார்கள்.

எனக்கு நினைவு தெரிந்து நான் முதல் காதல் தூது போனது என் தாய்மாமனுக்கு தான். அம்மாவின் தம்பியான அவர் ராணுவத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது அத்தை பெண்ணான வேம்பு மீது காதல், வேம்புவுக்கும் தான். இவர் ராணுவத்திலிருந்து விடுமுறையில் இருந்து வந்ததும் வேம்பு அத்தையின் ஊரான நார்சிங்கம்பேட்டைக்கு என்னையும் அழைத்துக் கொண்டு செல்வார்.

குடவாசலில் நான்கைந்து சாக்லேட்டுகளை வாங்கும் மாமா என்னிடம் கொடுக்காமல் ஊர் வரை அழைத்து செல்வார். மாமா வேம்பு அத்தையின் வயலுக்கு அருகில் உள்ள சாமியார் மடத்தில் இருந்து கொண்டு என் பாக்கெட்டில் சாக்லேட்டை வைத்து வேம்புவிடம் சென்று "பாக்கெட்டில் சாக்லேட் இருக்கிறது என்று சொல். அவர் எடுத்து பிரித்து தருவார்" என்று சொல்வார்.

இது அவர்களுக்குள் கோர்ட்வேர்ட், வேம்பு அத்தையும் அதனைப் புரிந்து கொண்டு சாக்லேட்டை பிரித்து கொடுத்து விட்டு பாட்டியிடம் வயலுக்கு போய் வருகிறேன் என்று சொல்லி விட்டு என்னையும் அழைத்துக் கொண்டு சாமியார் மடத்திற்கு வருவார். அங்கு இருவரும் அமர்ந்து மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பர். நான் அங்குள்ள பசங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பேன்.

திரும்பவும் வீட்டுக்கு செல்லும் போது என்னை அழைத்துக் கொண்டு திருவாரூர் வருவார். ஒவ்வொரு விடுமுறையின் போதும் இந்த சம்பவம் நடக்கும். ஒரு முறை என்னிடம் சாக்லேட்டை கொடுத்து அனுப்பிவிட வீட்டிற்கு சென்றால் வேம்பு அத்தை பக்கத்தில் எங்கோ சென்றிருக்க உடனே சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற ஆசையில் வேம்பு அத்தையின் குஞ்சிதபாதம் தாத்தாவிடம் சென்று பாக்கெட் சாக்லேட் இருக்கிறது என்று நான் கூற அவர் அதை ஏண்டா என்னிடம் சொல்கிறாய் என்று சொல்ல நான் நடந்த அனைத்தையும் அவரிடம் சொல்லி விட பிறகு நடந்த சண்டையை சொல்லவும் வேண்டுமோ. ஆனால் இன்று இருவரும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்கின்றனர்.

அடுத்த தூது நாங்கள் திருவாரூரில் என் சிறுவயதில் குடியிருந்த வீட்டு உரிமையாளரின் பெண்ணான பானுமதி அக்காவுக்கு. பானுமதி அக்கா அப்பொழுது பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். அவர் நடவாகனத்தெருவில் இருந்த தையற்கடையில் பணிபுரிந்த சங்கையாவை காதலித்து வந்தார்.

அவர் பள்ளியில் இருந்து வந்ததும் பள்ளி நோட்டில் இருந்து ஒரு பக்கத்தை கிழித்து அதில் இங்க்கு பேனாவில் தமிழில் தப்பும் தவறுமான எழுத்துப்பிழையுடன் கூடிய ஒரு கடிதத்தை எழுதி ரோட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் என்னிடம் கொடுத்தனுப்புவார். நான் அந்தக் கடித்தை சங்கையா அண்ணனிடம் கொடுத்ததும் அதனை அவர் படித்து விட்டு பதில் கடிதத்தை அந்த கடிதத்தின் பின்பக்கம் எழுதித்தருவார்.

அதனை எடுத்துச் சென்று பானுமதி அக்காவிடம் கொடுத்து விடுவேன். சிலமாதங்களாக நடந்து கொண்டிருந்த இந்தக் காதல் ஓரு அவசரத்தில் மாட்டிக் கொண்டது. ஒரு முறை கடிதத்தை கொடுக்க நான் இல்லாமல் போகவே பானுமதி அக்கா மூக்கொழுவி மகேஷிடம் கொடுக்க அவன் பயந்து போய் கடிதத்தை கொண்டு போய் பானுமதியின் அண்ணனிடம் கொடுத்து விட்டான். அவர் இந்த ஏரியாவின் கவுன்சிலர்.

பிறகென்ன திருவாரூரின் அருகில் உள்ள மாங்குடியில் இருந்து வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த சங்கையா கட்டி வைத்து வெளுக்கப்பட்டு இனி திருவாரூருக்கு திரும்ப வரவே கூடாது என்ற நிபந்தனையுடன் திருப்பி அனுப்பப்பட்டார். உடனடியாக பானுமதி அக்காவுக்கும் திருச்சியில் வரன் பார்த்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.

மஞ்சக்குடியில் உள்ள சுவாமி தயானந்தா பள்ளியில் படித்துக் கொண்டிருந்த என் சித்தப்பாவும் வேம்பு அத்தையின் தம்பியுமான முருகானந்தம் அவர் நண்பர்களுடன் சேர்ந்து வாய்க்கால் கரையில் பேசிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நான் என் அம்மாவுடன் திருவாரூரிலிருந்து வந்து இறங்க என் சித்தப்பா என் அம்மாவிடம் "செந்தில் என்னுடன் இருக்கட்டும். நான் வரும்போது அழைத்து வருகிறேன்" என்று சொன்னதால் அம்மா மட்டும் வாய்க்கால்கரை தாண்டி நார்சிங்கம்பேட்டை சென்றுவிட்டார்.

அது அபூர்வ சகோதரர்கள் படம் வெளியாகியிருந்த சமயம். எனக்கு 9 வயதிருக்கும். முருகானந்தம் சித்தப்பா என்னை பள்ளி முடிந்து ஊருக்கு செல்வதற்காக காத்திருந்த அவரின் சகவகுப்பு பெண்களிடம் சென்று "என் சித்தப்பாவுடன் திருவாரூருக்கு சென்று அபூர்வ சகோதரர்கள் படம் பார்க்க வருகிறீர்களா" என்று கேட்க சொன்னார்.

நான் சென்று அவ்வாறே கேட்டுத் தொலைய அந்தப் பெண்கள் என்னை கன்னாப் பின்னாவென்று திட்டிவிட்டனர். நான் கடுப்பாகி நேரே தாத்தா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி சத்தம் போட தாத்தா முருகானந்தம் சித்தப்பாவை அடிக்க கிளம்பிப் போய் விட்டார்.

அப்பொழுதும் எனக்கு கோவம் அடங்காமல் முருகானந்தம் சித்தப்பாவுடன் பேசிக் கொண்டிருந்த எல்லா நண்பர்களின் வீட்டுக்கும் போய் அவர்களின் அப்பா, அக்கா மற்றும் கண்ணில் மாட்டியவர்கள் எல்லோரிடமும் சொல்லி விட ஊரே ஒவ்வொரு பையனையும் அடிக்க கட்டை, கம்பு, விளக்கமாறு, அருவாள் சகிதம் கிளம்பி விட்டது.

ஏனென்றால் அப்பொழுதெல்லாம் பெண்களுடன் பையன் பேசுவதும், காதலும் கடுமையான குற்றம் என்று பெரிசுகள் நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த சம்பவத்திற்கு பிறகு சில வருடங்களுக்கு நான் நார்சிங்கம்பேட்டையில் எங்குமே தனியாக செல்வதில்லை. தனியாக சென்று மாட்டினால் என் சித்தப்பாவின் நண்பர்களிடம் நான் அடிவாங்க வேண்டியிருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, June 7, 2012

செம குளியல்

அம்மாவின் பிறந்த ஊரான ஆதனூர் என்பது நீ்டாமங்கலத்தின் அருகில் அமைந்துள்ள சிறு கிராமம். சிறுவயதில் இருந்தே பள்ளி விடுமுறையில் அதிக நாட்களை இக்கிராமத்தில் தான் செலவழிப்போம். அம்மாவின் பிறந்த வீடு மிகப்பெரிய மண் வீடு. 1993ல் தான் அந்த வீட்டை இடித்து விட்டு பெரிய கல்வீடாக கட்டினார்கள்.
(என் அப்பாவுடன் நானும் தம்பிகளும்)

வீட்டில் என் தாய்மாமாக்கள் 4 பேர் அவர்களது குடும்பத்தினர், பெரியம்மா வீட்டினர், எங்கள் வீட்டினர் மற்றும் சித்தி வீட்டினர் அனைவரும் கோடை விடுமுறைக்கு வந்து விடுவோம். வீட்டின் எதிரில் தேவர்குளம் என்றொரு குளம் இருந்தது. நான், என் தம்பி மற்றும் என் சித்தி பசங்க இருவர் தான் ஒரு குழுவாக இருப்போம். காலை நேரக் குளியல் அங்கு தான்.

என் தாத்தா குளத்தில் இறங்கும் போது நாங்களும் இறங்கி விடுவோம். தாத்தா குளித்து விட்டு வயலுக்கு சென்று விடுவார். செல்லும் போது சீக்கிரம் எல்லோரும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என சொல்லி விட்டு வயலுக்கு செல்வார். நாங்கள் 11 மணி வரை சாப்பிடாமல் குளத்தில் இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீச்சலடித்துக் கொண்டு விளையாடிக் கொண்டே இருப்போம்.

வயலில் வேலை செய்பவர்களுக்கு டீ எடுத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வரும் தாத்தாவிடம் வீட்டில் உள்ளோர் நாங்கள் இன்னும் வரவில்லை என்பதை சொல்லிவிட குளத்திற்கு வந்து ரெண்டு சாத்து சாத்தி வீட்டிற்கு அழைத்து செல்வார். சில காலங்களுக்கு பிறகு குளம் மாசடைந்து விட்டதால் பிறகு அந்தக் குளத்தில் குளிப்பதேயில்லை.

திருவாரூரில் மிகப்பிரச்சித்திப் பெற்ற கமலாலயக் குளம் உள்ளது. திருவாரூரில் உள்ள பெரியவர்களில் பெரும்பாலானோர் தினமும் காலையில் அந்தக்குளத்தில் தான் குளிப்பர். இன்றும் கூட மகாலய அமாவாசை அன்று என் அப்பா மற்றும் அவரது நண்பர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதற்காக கமலாலயத்தில் குளித்து சாமி கும்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

எங்கள் வீட்டில் செவிட்டுப் பாட்டி ஒருவர் இருந்தார். அவர் என் அப்பாவுக்கு சொந்த அத்தை. எப்பொழுது திருவாரூருக்கு வந்தாலும் கமலாலயத்தில் தான் குளிப்பார். குளித்து விட்டு ஈரத்துணியுடன் நெற்றியில் பட்டை இட்டுக் கொண்டு முராசன்ஸ் பிள்ளையாரிடம் குடும்பத்தினர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டுமென மனமுருகி வேண்டிக் கொண்ட பிறகு தான் வீடு திரும்புவார். அவருடன் நானும் கமலாலயத்திற்கு செல்வேன்.

கமலாலயத்தில் குளிப்பது புண்ணியம் என்பதையெல்லாம் தாண்டி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சோழர் காலத்தில் வெட்டப்பட்ட குளத்தில் குளிப்பது என்பதே பெருமை தானே. கமலாலயம் எங்கள் ஊரின் பெருமைக்குரிய மற்றுமொரு அடையாளம்.

எங்கள் நிலத்தில் உள்ள பம்புசெட்டில் குளிப்பது என்பது மற்றுமொரு இனிய அனுபவம். கோடை விடுமுறைகளில் மதிய வேளைகளில் நாங்கள் குளிப்பதற்கு தேர்ந்தெடுக்கும் இடம் தெற்கு பம்புசெட் தான். பம்புசெட்டில் விசாலமான தொட்டியிருக்கும். என் அம்மா, பெரியம்மா, சித்தி மற்றும் மாமிகள் அனைவரும் குளிப்பதற்கு கிளம்பும் முன் எனக்கும் என் சகோதரர்களுக்கும் எண்ணெய் தேய்த்து அனுப்பி விடுவர்.

நாங்கள் முன்பே சென்று குளித்துக் கொண்டிருப்போம். ஒரு மணிநேரம் கழித்து வரும் அம்மா சீயக்காயுடன் கரிசலாங்கண்ணியையும் சேர்த்து தேய்த்து விடுவார். என்ன ஒரு பரிபூரணத்துவக் குளியல். வாரம் ஒருமுறை இந்தக்குளியல் உண்டு. குளித்து விட்டு வந்து சாப்பிட்டால் ஏழு மணிக்கெல்லாம் தூக்கம் கண்ணை சொக்கும். இன்று குடும்பங்கள் எல்லாம் பிரிந்து போய் விட்டன. இனியொரு முறை அது போன்ற ஒரு குளியல் கிடைக்குமா என்பது சந்தேகமே.

இவ்வளவு சொல்லி விட்டு தஞ்சாவூர்க்காரன் காவிரியாற்றுக் குளியல் பற்றி சொல்லாவிட்டால் நன்றாக இருக்குமா. திருவாரூரில் காவிரியின் கிளையாறான ஒடம்போக்கியாறு ஒடுகிறது. இதில் ஜூன் முதல் தை மாதம் வரை தான் தண்ணீர் செல்லும் மற்ற நேரங்களில் எல்லாம் இது தான் கிரிக்கெட் கிரவுண்ட். பத்தாவதுக்கு பிறகு வேலைக்கு சேரும்வரை ஒடம்போக்கி ஆற்றில் தான் குளிப்பேன்.

இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது தான் என்னுடன் குளிக்கும் நண்பர்களிடையேயான போட்டி. அப்பொழுது ஸ்டாமினா இருந்ததால் இக்கரையில் இருந்து அக்கரைக்கு செல்வது எல்லாம் சாதாரண விஷயம். இப்பொழுது எல்லாம் ரெண்டு முங்கு முங்கினாலே மூச்சிரைக்கும். எல்லாம் நெப்போலியனின் சாபம்.

பட்டயப்படிப்புக்காக சென்னை வந்த பிறகு பாத்ரூம் குளியல் தான். அதுவும் 1999 காலத்தில் வில்லிவாக்கத்தில் மெட்ரோ வாட்டர் வீட்டு பம்புகளில் வருவது நின்று விட்டது. லாரிகளில் அடித்துப் பிடித்து தண்ணீர் வாங்கி வந்து குளிப்பது தான் அந்தக் காலங்களின் ஸ்டைல். அதிலும் நான் இருந்தது பாச்சிலர் ரூமில்.

நான் இருந்த தெருவுக்குள் மிகுந்த டீசண்ட்டாக அதுவரை நடந்து கொண்டிருந்த நான் தண்ணீர் பிடிக்கும் போட்டியில் எதிர் வீட்டு ஆண்ட்டி, அடுத்த வீட்டு அக்காவையெல்லாம் தலைமுடியைப் பிடித்து இழுத்து சண்டைப் போட்டு அந்த அக்காவின் ஏச்சுப் பேச்சுகளையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு கிடைக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் கழிவறைக்கு கால் பக்கெட், குளிக்க முக்கால் பக்கெட் என இருந்ததெல்லாம் காலத்தின் கோலம்.

ஆரூர் மூனா செந்தில்


Monday, June 4, 2012

நடை பயிலுங்கள் - இல்லைன்னா உங்களுக்கும் டாஷ் டர்ர்ராகிடும்

சாப்பிடும் அளவுக்கு உடல் உழைப்பு இருக்க வேண்டும். இது கொஞ்சம் தவறினால் உடம்பு பெருக்க ஆரம்பித்து விடும். இது எனக்கு புரிவதற்குள் எடை சதத்தை தாண்டி விட்டது. பட்டயப்படிப்பு முடியும் காலம் வரை சைக்கிள் வைத்திருந்ததால் எவ்வளவு சாப்பிட்டு இருந்தாலும் அதுக்கு சமமான அளவுக்கு தினமும் சைக்கிள் ஒட்டுவது இருந்ததால் ஸ்டாமினா குறையாமல் இருந்தது. உடல் எடையும் கட்டுக்குள் இருந்தது.

படிப்பு முடிந்ததும் வேலைக்கு சேர்ந்து பைக்கிற்கு மாறியதால் சகீலா மாதிரி இடுப்பில் மடிப்பு விழ ஆரம்பித்தது. வருடம் செல்லச் செல்ல பேமிலி பேக் வயிற்றில் நிரந்தரமானது. ஸ்டாமினாவும் சுத்தமாக குறைந்து போனது. எப்போதாவது சைக்கிளில் ஏறி 2 கிமீ மிதிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்தது.

திருமணத்திற்கு முன்பு வரை என் பாஸ்ஸூம் திருமணத்திற்கு பின்பு இல்லாளும் உடற்பயிற்சி செய்ய வற்புறுத்தியும் சோம்பேறித்தனம் காரணமாக எதுவும் செய்யாமல் தவிர்த்தே வந்தேன். தினமும் ஆப் வேறு அடித்து வந்ததால் எடையும் நிற்காமல் கூடிக் கொண்டே சென்றது. நிற்க. அதுக்காக நிக்கக் கூடாது, உக்கார்ந்தே படிங்க. எல்லா சோம்பேறித்தனத்திற்கும் ஆப்பு வைப்பது போல் ரயில்வே வேலை வந்து சேர்ந்தது.

ரயில்வே பணிக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றும் பணி ஆணை பெற தாமதமாகி வந்து சில வாரங்களுக்கு முன் தான் வேலையில் சேர நேர்ந்தது. இப்போது ஏண்டா சீக்கிரம் சேர்ந்தோம் என்று வெந்து நொந்துக் கொண்டிருக்கிறேன். ஒரு தொழிற்சாலை பெரிதாக இருக்கலாம் அதற்காக இவ்வளவு பெரிதாகவா அமைப்பான் வெள்ளைக்காரன். ஆம் நான் பணிபுரியும் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் தான் இந்தியாவில் முதல் முதலாக ரயில்களை தயாரித்தது. இது தொடங்கப்பட்ட ஆண்டு 1856. நூற்றைம்பது ஆண்டுக்கும் மேலான வரலாறு கொண்டது.

இதில் எனக்கு பிரச்சனை என்பது பணிபுரிவதில் இல்லை. நடப்பதில் தான் உள்ளது. ஒவ்வொரு தேவைக்கும் கிமீ கணக்காக நடக்க வேண்டியுள்ளது. நுழைவாயிலில் இருந்து அட்டன்டென்ஸ் கார்டு அடிக்கும் இடத்திற்கு 2கிமீ தூரம் அங்கிருந்து சாப்பிடும் கேண்டீனுக்கு 1 கிமீ தூரம்.

காலை உணவு சாப்பிட்ட பிறகு எனது கப்போர்டிற்கு வர 1 கிமீ தொழிற்சாலை உடை மாற்றியதும் என் செக்சனுக்கு செல்ல 1 கிமீ, பிறகு எனக்கும் என்னுடன் பணிபுரியும் இருவருக்கும் சேர்த்து பணி ஒதுக்கப்படும். வேலை செய்யும் இடத்திற்கு செல்ல 2 கிமீ.

பணிமுடிந்த பிறகு மீண்டும் செக்சன் சென்று விவரத்தை தெரிவித்து விட்டு 2 கிமீ நடந்து அட்டன்டென்ஸ் கார்டு அடித்து விட்டு மெஸ்ஸிற்கு செல்ல 2 கிமீ, பிறகு வழக்கம் போல் அட்டன்டென்ஸ், செக்சன் என பட்டியல் மலைக்க வைக்கும். அட இவ்வளவு ஏங்க பணிபுரியும் இடத்தில் இருந்து ஒண்ணுக்கு அடிக்க வேண்டும் என்றால் கூட 1 கிமீ நடந்தால் தான் கழிவறையே வரும். குடி தண்ணீருக்கும் இதே கதி தான்.

என்னுடன் பணிபுரியும் மற்றவர்களுக்கு இது ஒரு பிரச்சனையே இல்லை. ஏனென்றால் அனைவரும் நடந்து பழகி விட்டனர். 59 வயதான என்னுடன் பணிபுரியும் சக ஊழியர் சர்வசாதாரணமாக நடக்கிறார். என்னுடன் புதிதாக இணைந்தவர்களுக்கு கூட பஸ் ஸ்டாண்டிலிருந்து நடந்து வர, செல்ல என நடந்து நடந்து பழகிவிட்டவர்கள் தான்.

நான் மட்டும் தான் இதுநாள் வரை வீட்டை விட்டு வெளியில் இறங்கியதும் பைக் எங்கு சென்றாலும் பைக் என காலத்தை கடத்தி விட்டதால் தினமும் 12 கிமீ களுக்கு குறையாமல் நடப்பது டங்குவாரை அறுக்கிறது. "நீ நடப்பது நல்லது தான், தினமும் இது போலவே நட" என்று மூளை சொன்னாலும் சோம்பேறியான மனசு "நீ நடப்பது சிரமம்" என பின்னால் இழுக்கிறது.

ஒன்று மட்டும் புரிந்து விட்டது. இன்னும் 29 வருடத்திற்கு இப்படித்தான் என் வாழ்க்கை முறை இருக்கப் போகிறது. இன்னும் சில வாரங்கள் சிரமமாக இருக்கும். பிறகு நடப்பது பழகி விடும். கொஞ்ச நாட்களில் உடல் எடையும் குறைய ஆரம்பித்து விடும் என்பது மகிழ்ச்சியை தருகிறது. இந்த இரண்டு வாரத்திற்குள்ளேயே மூன்று கிலோ எடை இறங்கி விட்டது.

என்னைப் போல் எதற்கெடுத்தாலும் பைக்கையே நம்பி எதற்கும் நடக்காமல் இருப்பவர்களுக்கு எதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இது போல் நடந்தே ஆக வேண்டும் என வந்தால் சிரமமாக இருக்கும் என அனுபவஸ்தனின் கருத்து. நடை பயிலுங்கப்பா.

ஆரூர் மூனா செந்தில்

Friday, June 1, 2012

மனம் கொத்திப் பறவை - சினிமா விமர்சனம்

காலையிலேயே இந்த சினிமாவுக்கு போகலாம்னு ப்ளான் போட்டேன். முன்பு போல் இல்லையே, இப்போது பணியில் இருக்கிறோமே, அதனால் என் நண்பனிடம் அட்டன்டென்ட்ஸ் கார்டை பார்த்துக்க சொல்லி விட்டு 11 மணிக்கு பேக்டரி டிரெஸ்ஸை மாற்றி விட்டு வெளிப்படும் முன் போன் வந்தது.

சிக் லீவில் சென்றிருந்த எங்கள் SS (Shop Superindent) பணிக்கு வந்து விட்டதால் எங்களை பார்க்க வேண்டும் என்று சொல்லியனுப்பியதாக நண்பன் அழைத்தான். போச்சுடா என்று சினிமா ஆசையை மூட்டை கட்டி வைத்து விட்டு SSஐ பார்க்க சென்றேன். அறிமுகம் எல்லாம் நல்லபடியாக முடிந்ததும் ஷெட்டுக்கு திரும்பி விட்டேன்.

மாலை வீட்டிற்கு வந்தால் கரண்ட் இல்லை. டிரான்ஸ்பார்மரில் ஏதோ பழுதாம், அதனால் இரவு எட்டு மணி வரை கரண்ட் வராது என்று என் இல்லாள் கூறினாள். அது வரை என்ன செய்வது என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு ராக்கி தியேட்டருக்கு சென்றேன். அப்பொழுது தெரியாமல் போய் விட்டது, சனியனை தூக்கி பனியனில் போட்டுக் கொண்டது.

படம் துவங்கிய சிறிது நேரத்திலேயே தெரிந்த விட்டது படம் மொக்கை என்று. எழிலின் இதற்கு முந்தைய படமான தீபாவளி நிறை பேருக்கு பிடிக்காது, ஆனால் எனக்கு பிடிக்கும். அதனால் தான் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சில காட்சிகளிலேயே தெரிந்து விட்டது படம் வேலைக்காகாது என்று.

படத்தின் கதை என்ன? எதிர் வீட்டுப் பெண்ணை காதலிக்கும் நாயகன் அவளின் முரட்டு சொந்தக்காரர்களின் எதிர்ப்புகளை சமாளித்து பின்னர் அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்யும், இதுவரை ஆயிரம் முறை வந்த அரதப்பழசான கதை தான். அதையாவது சுவையாக சொல்லியிருக்கிறார்களா என்றால் அதுக்கும் பெப்பே தான்.

படத்தில் ஏகப்பட்ட படங்களில் இருந்து சுடப்பட்ட காட்சிகளால் நிரப்பியிருக்கிறார்கள். தெரியாது என்று நினைத்தார்களா இல்லை தெரிந்தால் பரவாயில்லை என்று நினைத்தார்களா என்பது அந்த தாமஸ் ஆல்வா எடிசனுக்கே வெளிச்சம்.

சிவகார்த்திகேயன் காமெடியனாக நடிப்பதே அவருக்கும் அவரது எதிர்காலத்திற்கு நல்லது. 3 படத்தில் சில காட்சிகள் வந்தாலும் அதில் பெயரைத் தட்டிச் சென்றவர் அவர். சந்தானத்திற்கு அடுத்த இடத்திற்கு வரக்கூடிய சாத்தியம் இருக்கிறது. தொடர்ந்து கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்றால் கஷ்டம் தான்.

கதாநாயகி ஆத்மியா காதலன் படத்தில் வடிவேல் சொல்வது போல் முகத்தில் ஜக், உருவ அமைப்பில் பச்சக். சம்பளம் கம்மியாக கேட்டதால் நடிக்க வைக்கப்பட்டிருப்பார் போல. அவரது தோற்றமும் நடிப்பும் எனக்கு மட்டுமல்ல, திரையரங்கில் என்னுடன் படம் பார்த்த பெரும்பாலானோரின் கருத்தும் இதுதான்.

சிங்கம்புலி, சூரி, சாம்ஸ், ஸ்ரீநாத் மற்றும் இரண்டு நண்பர்கள் ஆகியோர் சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்கள். நமக்குத்தான் சிரிப்பு வரமாட்டேன் என்கிறது. ரவிமரியா ஒரு பேட்டியில் இந்தப்படத்தில் தான் நகைச்சுவையாக நடித்திருப்பதாக கூறினார். இது தானா உங்க நகைச்சுவை.

யாருப்பா உங்களுக்கு முரட்டு மீசை வைத்தவனெல்லாம் வில்லனாகத்தான் இருப்பான் என்று சொன்னது. எங்க ஊருக்கு வாங்க இதை விட பெரிய மீசை வைத்தவனெல்லாம் எவ்வளவு சாதுவாக இருக்கானுங்கன்னு நான் காட்டுறேன்.

எவனோ ஒருத்தன் ஏதோ ஒரு பதிவில் படத்தின் பாடல்கள் அனைத்தும் நன்றாக இருப்பதாக போட்டிருந்தான். எவன்டா அவன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன். கிடைத்தால் அந்தப் பதிவில் நல்லா நாலு கெட்ட வார்த்தையுடன் கூடிய பின்னூட்டம் இடலாம் என்றிருக்கிறேன்.

படத்தின் ஒரே ஆறுதல் எங்கேயும் தென்படாத கவர்ச்சி தான். குடும்பமாக பார்த்தால் தாவணிக்கனவுகள் படத்தில் பாக்யராஜ் செய்வது போல் காசை கீழேப் போட்டு தேடச் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

யாரோ நண்பர்கள் காசு கொடுக்கிறார்களே என்பதற்காக பார்க்கும் நம்மை இந்த அளவுக்கு சோதிக்க வேண்டுமா? சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள். நமக்குதான் சிரிப்பு வரவில்லை. படம் பார்ப்பவர்களை சிரிக்க வைப்பதற்கு இவ்வளவு சிரமப்பட்டதற்கு பதிலாக தியேட்டருக்கு ஐந்து பேரை சம்பளத்திற்கு அமர்த்தி கிச்சுகிச்சு மூட்டியாவது சிரிக்க வைத்திருக்கலாம்.

ஆரூர் மூனா செந்தில்


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...