சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Monday, April 29, 2013

உள்ளூர் அரசியல்வாதிகள்

இது மாநிலத் தலைவர்களையோ மாவட்ட செயலாளர்களையோ பற்றிய பதிவல்ல. என்றாவது அரசியலில் பெரிய ஆளாகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலில் முடிந்த வரை அந்த அளவுக்கு நேர்மையாக இருந்து இன்று வரை போராடி வரும் நான் அறிந்த அரசியல்வாதிகளின் அறிமுகம்.


முதல் அரசியல்வாதி சம்பந்தம் மாமா. அவர்கள் வீட்டில் நாங்கள் வெகுநாட்கள் குடியிருந்ததால் நான் இவரை மாமா என்றே கூப்பிடுவேன். இன்று வரை எங்கள் வீட்டில் எந்த விஷேசம் என்றாலும் முடிவு வரை இருந்து எல்லாத்தையும் முன்னின்று செய்பவர் இவர் தான்.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் எனக்கு கை சின்னத்தை சட்டையில் குத்தி பிரச்சாரத்திற்கு அனுப்பி விட்டவர். 87களில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அவர் 13வது வார்டு வேட்பாளர். அப்பொழுது பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டார்.


எனக்கு எட்டு வயதில் பம்பரம் சின்னம் ஸ்டென்சிலையும் நீலக்கலர் சுண்ணாம்பு டப்பாவையும் கையில் எடுத்துக் கொண்டு வடக்கு வீதியில் அனைவரின் வீட்டு வாசலிலும் பம்பரம் சின்னத்தை வரைவது என் வேலை. அந்த தேர்தலில் வெற்றியும் பெற்றார். பிறகு காங்கிரஸில் இருந்து வாழப்பாடி காங்கிரஸை விட்டு பிரிந்து சென்ற போது இவரும் பிரிந்து சென்று மீண்டும் வந்து இன்று திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர்.

ஆனால் காங்கிரஸில் மட்டும் தான் நகர செயலாளருக்கு இருக்கும் மதிப்பு மா.செவுக்கு கிடையாது. என்னா கணக்கோ தெரியவில்லை. எனக்கு தெரிந்து கோஷ்டி அரசியல் செய்யாமல் யாரையும் ஏமாற்றாமல் 25 வருடங்களாக வளரும் அரசியல்வாதி.


அடுத்தவர் மற்றொரு மாமா A.D.மூர்த்தி. சிவாஜியின் வெறித்தனமான ரசிகரான இவர் அவர் கட்சி ஆரம்பித்த போது கடும் செலவு செய்து 1989 தேர்தலில் தமிழக முன்னேற்ற முன்னணி வெற்றி பெற உழைத்தார்.

எல்லாம் வீணாகப் போனது. ஆனாலும் அடங்காமல் சிவாஜி ஜனதா தளத்திற்கு போன பிறகு இவரும் போனார். நகை வேலை செய்யும் அவர் கட்சிக்காக நல்ல வருமானம் வந்த கடையை இழந்தார். சிவாஜி அரசியலை விட்டு ஒதுங்கியதும் இவரும் சில காலம் ஒதுங்கியிருந்து விட்டு வை.கோவின் மேல் நம்பிக்கை வைத்து மதிமுகவில் சேர்ந்தார்.

இன்று மதிமுகவின் மாவட்ட பிரதிநிதி. கட்சியும் வளரவில்லை. இவரும் வளரவில்லை. எப்படியாவது வைகோ முதல்வராகி விடுவார் என்று நம்பும் அப்பாவி அரசியல்வாதி.


அடுத்ததாக என் நண்பனின் அப்பா, நீடாமங்கலத்திற்கு அடுத்த கிராமமான சித்தமல்லி தான் அவர்களது ஊர். அந்த ஊரின் அரசியல் களம் அவரது சைக்கிள் கம்பெனி தான். அரசியல் பேசுவதற்கென்றே அங்கீகாரம் பெற்ற இடம்.

கம்யூனிஸ்ட்டை சேர்ந்த அவர் உலகப் பொருளாதாரம் வரை பிரித்து பேசுவார். நமக்கு தான் ஒன்னும் புரியாது. நான் முதன் முதலில் மூலதனம் புத்தகத்தை அவரது கடையில் தான் பார்த்தேன். கேரள அரசியலை தஞ்சை பக்கமுள்ள குக்கிராமத்தில் அமர்ந்து அலசி எடுப்பார்.

பேசிப் பேசி கடைசியில் கடை தான் இல்லாமல் போனது. நல்லக்கண்ணு வரை 20 வருடங்களுக்கு முன்பு இருந்த பெரிய கம்யூனிஸ்ட்காரர்கள் வந்து போன இடம் கடைசியில் சைக்கிள் கடை நசிந்து போய் இன்று கூலி வேலைக்கு போய்க் கொண்டு இருக்கிறார்.

எப்பொழுதாவது ஒரு மேடையை கண்ட சந்தோஷத்துடன் ரஷ்ய அரசியலையும் மேற்கு வங்காளம் அரசியலையும் பேசுவார். அவர் சந்தோஷப்பட வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் காது கொடுத்து கேட்பேன். ஏன் அரசியலில் வளராமலே போனார் என்று தான் புரியவில்லை.

அடுத்தது என் நண்பன் குடவாசலை சேர்ந்த கணேசன். மேடையைக் கண்டால் எனக்கு சிறுவயதில் இருந்தே உதறும். பேச்சுப் போட்டியில் மேடைக்கு போய் படித்ததை மறந்து ஓ என்று அழுதது கூட உண்டு. அவனோ மேடையை பார்த்ததும் காஜலை கண்ட பிலாசபி பிரபாகரனைப் போல் குஷியாகி விடுவான்.

பாரபட்சமில்லாமல் எல்லாக் கட்சி மேடையிலும் குக்கிராமங்களில் பேசுவது அவன் வழக்கம். கட்சித் தலைவர்கள் வரும் வரை மேடையை கட்டிப் போடும் பேச்சு அவனது. என்ன ஒரு கட்சிக்கும் விசுவாசமில்லாமல் போனதால் கடைசி வரை அங்கீகாரம் கிடைக்காமல் போய் குடும்ப சூழ்நிலைக்காக திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

கடைசியாக என் மச்சான் சதீஸ் குமார். ஹோட்டல் தொழிலில் வெற்றிக் கொடி நாட்டிய பிறகு அரசியல் ஆசை வந்து போன முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மேலவாசல் கிராமத்தில் நடந்த கவுன்சிலர் தேர்தலில் அதுவும் குடியிருக்கும் தெருவில் தோற்றுப் போய் கொஞ்ச நாள் அரசியல் துறவறம் பூண்டிருந்தான்.

பிறகு இந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் முன்னரே உள்ளூரில் ஆட்களை திரட்டி தன்வசப்படுத்தி ஒரு வழியாக ஜெயித்து விட்டான். பிறகு மற்றொரு அரசியலை நடத்தி மேலவாசல் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவர். அது மட்டுமில்லாமல் அதிமுகவில் ஏதோ ஒரு பதவியில் இருக்கிறான்.

எப்படியும் வளர்ந்து இன்னும் பத்து வருடத்தில் அதிமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு சமஉ ஆகும் ரகசிய ஆசையில் இருக்கும் என் மச்சான் ஜெயிப்பானா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

சதீஸூக்கு மட்டும் : டேய் மச்சான் இதைப் படித்து என்னை வெளுக்கும் எண்ணம் வந்தால் நான் ஊருக்கு வரும் வரை காத்திருக்கவும். சபையில் காறித்துப்பி மானத்தை வாங்க வேண்டாம். மீ பாவம் மச்சான்.

ஆரூர் மூனா செந்தில்


Saturday, April 27, 2013

தொழிற்சங்க தேர்தல் அன்று நடந்த கலாட்டாக்கள்

கடந்த வியாழன் அன்று வேலைக்கு செல்லும் நேரத்திற்கு வழக்கம் போல் கிளம்பிச் சென்றேன். நான் வேலைக்குச் சேர்ந்து முதல் தொழிற்சங்க தேர்தல் அல்லவா. அதனால் விவரம் சற்று குறைவாகவே தெரிந்திருந்தது.


லோகோ ஸ்டேசன் தாண்டியதும் பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ் வாசலில் ஒரு யூனியன் ஆளை மற்றொரு யூனியனை சேர்ந்தவர்கள் வெளுத்துக் கொண்டு இருந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட அவர் எழுந்து ஓடினார். காவலுக்கு வந்தவர்கள் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தனர். லேசாக கலக்க ஆரம்பித்தது.

வழியெங்கும் காவல்துறையினரும் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் நிறைந்திருந்தனர். தொழிற்சாலை உள்ளே நுழையும் முன்னே ஒரு யூனியனைச் சேர்ந்தவர்கள் என்ன ஏது என்று கேட்காமல் அவர்கள் சின்னமிட்ட பூத் சிலிப் கொடுத்து விட்டு என் சட்டையில் அவர்கள் பேட்ஜை குத்தி விட்டு சென்றனர்.


தனியா இருந்தா வம்பு தான் வரும், நமக்கு பலமே நமது செக்சன் ஆட்கள் உடன் இருப்பது தான் என்று முடிவு செய்து எங்கும் நின்று வாக்களிக்கும் பகுதிகளை கவனிக்காமல் வண்டியை நேரே என் செக்சனுக்கு விட்டேன். உள்ளே ஒரு யூனியனின் சார்பாக பட்டுவாடா நடந்து கொண்டு இருந்தது.

என் அருகிலும் வந்தார்கள், உன்னைப் போன்ற அப்ரெண்டிஸ்களுக்கு வேலை வாங்கிக் கொடுத்தது எங்கள் யூனியன் தான் எங்களுக்கே வாக்களிக்க வேண்டும் என்று காதில் கிசுகிசுத்து விட்டு கவரை கையில் திணித்து சென்றார்கள். அன்றைய உ.பா செலவுக்கு பணம் கிடைத்ததால் என் செக்சன் மக்கள் குதூகூலத்துடன் இருந்தார்கள்.


உள்ளே நுழைந்து பார்த்தால் உள்ளே உ.பா ஆறாய் ஓடிக் கொண்டு இருந்தது. பிறகென்ன கும்பலுடன் கோயிந்தா தான். அந்த நாள் வரை வேலைக்கு செல்லும் ஒர்க்சீட்டை எழுதிக் கொடுக்கும் டேபிள் கச்சேரி மேளாவாகி இருந்தது.

வாக்குப்பதிவு நடக்கும் இடம் கூட்டத்தால் அல்லோகலப்பட்டுக் கொண்டு இருந்தது. கூட்டம் குறையும் வரை அங்கு செல்ல வேண்டாம் என்றும் நாங்கள் ஆதரிக்கும் யூனியனைத் தவிர மற்றவர்கள் பட்டுவாடா செய்வதால் போய்க்கேட்டால் சண்டை தான் வரும் என்றும் தாமதமாக செல்வது என்று முடிவு செய்து அதுவரை தாக சாந்தியில் இறங்கினோம்.

ஒரு யூனியன் பட்டுவாடா செய்தது அறிந்ததும் மற்றொரு யூனியனும் பட்டுவாடா செய்ய ஆரம்பித்தனர். அவர்களின் ரகசிய கோரிக்கை என்னவென்றால் நாங்கள் தான் மெஜாரிட்டியினர், எங்களை ஆதரித்தால் சில கோரிக்கைகளை குறிப்பிட்டு செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்து சென்றனர்.


பட்டுவாடாவை மொத்தமாக சேகரித்து மீண்டும் உ.பா வாங்க நானும் கங்காவும் சென்றோம். அதற்குள் செக்சனுக்கு பிரியாணி, அசைவ சாப்பாடு வகையறாக்கள் வந்து சேர்ந்தது.

கச்சேரி களை கட்ட ஆரம்பித்தது. அதற்குள் ஜாதி வகுப்பை பிரதானப்படுத்தி இயங்கும் யூனியன் ஆட்கள் பட்டுவாடா விவரம் அறிந்ததும் குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவர்களிடம் நாம் இந்த வகுப்பை சேர்ந்தவர்கள் நமது ஓட்டு நம்ம யூனியனுக்கு தான் வர வேண்டும்.

காசு வாங்கிக் கொண்டு மற்றவர்களுக்கு ஓட்டு போட வேண்டாம் என்று கேட்டார்கள். ஏற்கனவே இவர்கள் மற்றொரு யூனியனிடம் 10 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டை பிரிப்பதாக வந்த செய்தியால் கடுப்பில் இருந்தார்கள் தொழிலாளிகள். முதல் அடி சாம்பார் பொட்டலத்தில் ஆரம்பித்தது. யூனியன் தலைவனுக்கு பின்னால் இருந்து என் செக்சன் ஆள் சாம்பார் பொட்டலத்தை வீசி எறிந்தான். பிறகென்ன அவர்கள் ஆள் அம்பு படையுடன் வந்து சேர மினிவார் ஆரம்பித்தது.

ஆர்பிஎப்கள் வந்து கூட்டத்தை விலக்கி சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். அன்று வரை பெரிய மனிதன் தோரணையில் வெள்ளை சட்டை அணிந்து பந்தாவாக வந்த தலைவன் சாம்பார் அபிஷேகம் பெற்று அசிங்கப் பட்டு போனார்.

இன்னும் எக்கச்சக்கமாக ஏத்திக் கொண்டு ஆட்டம், பாட்டம் கச்சேரி என நேரம் சென்று கொண்டிருந்தது. மற்ற செக்சன் ஆட்களை ஓட்டுப் போடும் படி பணித்துக் கொண்டு இருந்த யூனியன் ஆட்கள் எங்கள் செக்சன் பக்கமே வர பயந்து கொண்டு இருந்தனர்.

மதியம் பிரியாணி தின்று விட்டு ஆட்கள் அப்படியே நித்திரையில் சாய ஆரம்பித்தார்கள். நாலு மணிக்கு போதை தணிந்ததும் மொத்த கும்பலும் ஓட்டுப் போட சென்றோம். எல்லா யூனியன் ஆட்களும் முறைத்துக் கொண்டு இருந்தார்கள். செய்த கலாட்டா அப்படியாச்சே.

ஓட்டுப் போட்டு முடிந்ததும் பதவிசாக வெளியே வந்து கலைந்தோம். வெளியே வந்த பிறகு எங்களுக்கு வேண்டிய ஆட்களிடம் இருந்து தகவல் வந்தது. நாங்கள் செய்த கலாட்டாவினால் அந்த குறிப்பிட்ட யூனியன் ஆட்கள் எங்களை வம்பில் மாட்டி விட காத்திருக்கிறார்கள் என்று.

வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி நடக்கிறது. அன்று தான் கச்சேரி இருக்கிறது. எங்கள் செக்சனின் பெரும்பாலான ஆட்கள் நிர்வாகிகளாகவும், உறுப்பினர்களாகவும் இருக்கும் யூனியன் வெற்றி பெற்றால் எந்த பிரச்சனையும் இல்லை. ஒருவேளை அந்த யூனியன் தோற்றால் பெரும் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது மட்டும் உறுதி.

நாங்கள் ஆதரித்த யூனியன் எது, வாக்குப்பதிவு விவரங்கள் போன்றவற்றை 2ம் தேதி தெரிவிக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்


சிங்கப்பூர் வேலை வாய்ப்பு


டிகிரி முடித்தவர்கள் ஹோட்டல் வெயிட்டர் 4 பேர் வேலைக்கு தேவை.

சம்பளம் 1000 சிங்கப்பூர் டாலர்.

உணவு தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

B.Com M.Com with Tally முடித்த பெண் வேலைக்குத் தேவை.

சம்பளம் 1200 + 200 சிங்கப்பூர் டாலர்.

-------------------------------------------------

நல்ல முன் அனுபவமுள்ள டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த Air con Technicianகள் தேவை.

அடிப்படை சம்பளம் 1100 சிங்கப்பூர் டாலர்.

தங்குவதற்காக 200 சிங்கப்பூர் டாலர்.

வாரம் 48 மணிநேரம் அடிப்படை நேர வேலை.

OT 48 மணிநேரம் உண்டு.

-------------------------------------------------

அனுபவமுள்ள கிளாஸ் 4 டிரைவர் தேவை.

சம்பளம் 2500 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

-------------------------------------------------

டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த நர்சுகள் 100 பேர் தேவை

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

டிப்ளமோ அல்லது டிகிரி முடித்த பார்மசிஸ்ட்கள் 50 பேர் தேவை

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

50 Radiographist தேவை.

சம்பளம் $2000 to $3000 சிங்கப்பூர் டாலர்.

10 Doctors தேவை.

சம்பளம் $5000 to $20000 சிங்கப்பூர் டாலர்.

10 Physiotheraphist தேவை.

சம்பளம் $2000 above சிங்கப்பூர் டாலர்.

-------------------------------------------------

டிகிரி முடித்தவர்கள் Admin Asst வேலைக்கு தேவை.

முன்அனுபவம் தேவையில்லை

சம்பளம் 1500 சிங்கப்பூர் டாலர்.

தங்குமிடம் இலவசம்

உடனடி தேவை.

-------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் சூப்பர்வைசர் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1600 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

------------------------------------------------------

டிகிரி 2008க்கு முன்பு முடித்தவர்கள் தேவை.

குறைந்தபட்சம் நான்கு வருட முன்அனுபவம் உள்ளவர்கள் மட்டும்

தங்குமிடம் இலவசம்.

சம்பளம் 1300 சிங்கப்பூர் டாலர்.

உடனடி தேவை.

--------------------------------------------------

Network Engineer (S$2200 – 3000) (Jurong East)
•Working in a fast-pace environment and working with various networking products, technology and services, such as routers, switches, firewall, load-balancer, Radius servers, Proxy servers, traffic shaper, WAN accelerator, wireless, Domain Name Servers, VPN routers and concentrators to manage and support the officer’s worldwide network. You are also expected to manage projects and work with oversea vendors and counter-parts.
Requirements:
•Candidate must possess at least a Diploma in any field
•2 – 3 years of working experience as a Network Engineer and CCNA Certified
•Good working experience in Cisco network equipment, VPN, Firewall, Load-Balancer, TCP/IP addressing schemes, routing protocols, Domain Name Services, Proxy Services and Radius Services
PHP Web Developer (5 days work week) (Lavender)
  • Gather customers’ requirements
  • Work closely with colleagues and customer to deliver solutions from planning to conceptualizing stage
Requirements:
  • Diploma or Degree in Computer Science, Information System, Information Technology or related discipline
  • Minimum 1 – 2 years of hands-on experience in PHP language
System Analyst cum Web Developer (5 days work week) (Jurong)
  • Gather user requirements
  • Perform feasibility studies and technical design and coding on Microsoft .Net platform.
  • Provide day to day support for existing systems and technical specifications for new system solution
  • Work closely with colleagues and liaise with internal users to deliver solutions with business value.
Requirements:
  • Degree in Computer Science, Information System, Information Technology or related discipline
  • Minimum 3 years of hands-on experience in analysis and implementation of ASP.NET, C# solution
  • Must have hands-on experience in HTML, JavaScript, and SQL
  • Preferably with hands-on experience in ASP.NET MVC and JSON; and experience / knowledge in Oracle PL/SQL, WCF would be an advantage
  • Completed at least one system life cycle
  • Strong analytical, inter-personal and communication skills
German-speaking Contract Customer Service Officer (5 days work week) (Jurong)
  • Based in Singapore, this applicant must be able to provide support to customers from Europe, America and Asia market
  • Candidates need to be customer service-oriented and proficient in English and German languages. Previous experience in a related role, computer literacy and a keen interest in digital and IT products.
Requirements:
  • Candidate must be able to speak good or fluent German.
  • Applicants must be willing to start work immediately or within short notice
  • Applicants must be comfortable with contract, 5 days work week, and working location – Jurong
  • Salary: S$2200 – 2700 per month

Fitter (At Tuas – West area)
  • Install small bore stainless pipework, not more than 2 inch pipes.
  • Install instrument tubing into control panel skids for offshore applications
  • Install controls that regulate piping utilities
Requirements:
  • Extensive experience of instrument pipework
  • Able to understand blueprint
  • Able to travel overseas for offshore work
  • Those with BOSIET certificate will have added advantage
Welders (Max S$2000) (At Tuas)
  • Read, interpret and clarify with leader on engineering drawings, welding symbols, welding procedure specifications (WPS) and job routing.
  • Remove dirt, oil and grease stains found on the parts to be welded using wire brushes, grinder, solvents etc. Dispose of used absorbent materials accordingly.
  • Lay out pieces in place to prepare for welding. Measure the dimensions and ensure that they are in conformance with the required specifications.
  • Set up, adjust, operate and maintain welding equipment.
  • Join and/or overlay material using both manual and/or automated welding processes.
  • Select proper electrodes and holders; regulate electric current and time.
  • Space number of welds in accordance with varying conditions and materials so as to achieve proper fusion, strength and finish.
  • Assist in gouging, oxy fuel flame cutting, grinding, material handling and cleanup where required.
  • Train and direct new welders or low level welders.
  • May perform principal duties off-site as required by customers.
  • Keep equipment and work area clean, orderly and organised at all times; responsible for housekeeping of own area.
  • Ensure compliance with all applicable quality, health, safety, and environment rules and regulations; use PPE as required.
  • Perform all other duties as may be assigned.
Requirements:
  • Possess a Trade Certificate in Welding or a Diploma/Degree for application of Spass
  • Able to understand and correctly interpret engineering drawings, welding symbols, welding procedure  specifications (WPS) and job routing
  • Ability to perform set-up, fit-up, layout, and welding for complex assembly
  • Good understanding of the QMS, HSE policies, use of PPE and housekeeping practices



விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ள

தொலைபேசி : 8883072993, மின்னஞ்சல் : senthilkkum@gmail.com

Friday, April 26, 2013

யாருடா மகேஷ் - சினிமா விமர்சனம்

இன்றும் தொழிற்சங்க தேர்தல் இருந்தும் தொழிற்சாலையின் உள்ளேயே சரக்கும் பிரியாணியும் கிடைத்தும் கூட அனைத்தையும் தவிர்த்து விட்டு காரணமே இல்லாமல் இன்று சினிமாவுக்கு போக வைத்தது இந்த படத்தின் டீசர் தான்.


ஆனால் போன பிறகு தான் தெரிந்தது இதற்கு பதில் தொழிற்சாலை உள்ளேயே குவார்ட்டர் விட்டுகினு பிரியாணி துன்ட்டு யாராவது ரெண்டு யூனியன் தலைவனுங்களை நேற்று மாதிரி இன்றும் சாத்தியிருக்கலாம் என்று. ஆனாலும் விதி வலியது.

படத்தின் டிரெய்லரில் இருந்து துணுக்கு நகைச்சுவை படம் முழுவதும் விரவி கிடக்கும் என எண்ண வைத்து மக்களை திரையரங்கிற்கு வர வைத்ததில் இந்த பட இயக்குனரின் திறமை முக்கிய பங்கு வகிக்கிறது.

படத்தின் கதை என்ன? கல்லூரியில் கடைசி மதிப்பெண் பெறும் நாயகனும் யுனிவர்சிட்டி பர்ஸ்ட் நாயகியும் ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் போது சந்திக்கிறார்கள். நாயகனுக்கு நாயகி மேல் காதல் வருகிறது. அரைமணிநேரத்தில் நாயகிக்கும் காதல் வந்து விடுகிறது.


மேலும் ஒரு கால் மணிநேரத்தில் நாயகியின் வீட்டில் யாரும் இல்லாத நாளில் காண்டம் வாங்கி வந்து பாதுகாப்பாக பஜனை நடக்கிறது.  நாயகனை சென்னையில் தவிக்க விட்டு அம்பேரிக்காவுக்கு படிக்கச் செல்கிறாள். ஆனால் பாருங்கள். மேனிபேக்சரிங் டிபெக்ட் காரணமாக குழந்தை உண்டாகி விடுகிறது.

சென்னைக்கு திரும்பி வந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். குழந்தை பிறந்து பல ஆண்டுகள் ஆகிய பிறகும் நாயகனுக்கு பொறுப்பு வராமல் வீட்டிலேயே குழந்தையுடன் விளையாண்டு காலத்தை கழிக்கிறார்.


ஒரு உச்ச ராகுகால நேரத்தில் இந்த குழந்தை நாயகிக்கும் மகேஷ் என்ற ஒருவனுக்கும் பிறந்தது என்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. மகேஷை தேடிப் புறப்படுகிறான். மகேஷ் கிடைத்தானா, குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தான் படத்தின் கதை.

சொல்லும் போது சுவாரஸ்யமான கதையாக தெரிந்தாலும் எடுத்த விதத்தில் மெச்சூரிட்டி இல்லாத காரணத்தால் படம் பப்படமாகி விட்டது. பாவம் தயாரிப்பாளர் அன்பழகன். ஏற்கனவே ஆதிபகவனில் பெரிய சைஸ் அல்வா வாங்கி வீட்டில் வைத்தவர், இந்த படத்தினால் சிறிய சைஸ் அல்வா உபரியாக கிடைத்திருக்கிறது.

நாயகன் சந்தீப் பார்க்க நன்றாக இருக்கிறார். நல்ல களையான முகம். சிறிது முயற்சித்தால் நடிப்பு கூடி வரும். இந்த படத்தை வைத்து இன்னும் சில படங்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சில இடங்களில் ரியாக்சன் கம்மியாக இருக்கிறது.



நாயகி டிம்பிள் டிரைலரிலும் முதல் காட்சியிலும் பார்க்க ஏதோ ஒன்று இருக்கிறது என்று நினைக்கச் செய்தவர், போகப் போக அட்டுப் பீஸூ போல் தோற்றமளிக்கிறார். இந்தப் படம் கிடைத்ததே பெரிய விஷயம். மேக்கப் மட்டும் இல்லையென்றால் ப்ப்பா பேய் மாதிரி தான் இருப்பார்.

கொஞ்சமாவது படத்தில் உட்கார வைப்பது நண்டு ஜெகனின் காமெடி தான். அதுவும் அளவுக்கு அதிகமாக போய் ஆபாசத்தில் நெளிய வைக்கிறது. சரளமாக வகைதொகையில்லாமல் ஏ ஜோக் படம் முழுவதும் விரவி கிடக்கிறது. படத்திற்கு ஏ சர்ட்டிபிகேட் கொடுத்ததற்கு காரணம் இந்த ஜோக்குகள் தான்.

படத்தில் ஜெகனுக்கு இரண்டு முறை லுல்லாவில் அடிபடுகிறது. முதல் முறை பவுடர் தெறித்து நரம்பு கட்டாகிறது. இரண்டாவது முறை வாய் வழியாக ..ட்டை வெளி வந்து பறவையாய் பறக்கிறது. இவ்வளவு தடைகளையும் தாண்டி குழந்தை பிறப்பது வாவ் மெடிக்கல் மிராக்கிள்.

படம் முழுவதுமே ஒரு நாடகத்தனத்துடன் எடுக்கப்பட்டு இருக்கிறது. ரோபோ சங்கர் வடிவேல் பாலாஜி காட்சிகள் அப்பட்டமான ஆபாசம். அப்பாவும் மகனும் இப்படியா பிட்டு படம் பார்க்க சண்டை போட்டுக் கொள்வார்கள்.

படத்தில் உள்ள ஒரு குத்தாட்டத்தில் ஆடும் நடிகை பயங்கர ப்ரச்சோதகமாக இருக்கிறார்.  சரின்னா இதைப் பண்ணனும் இல்லைனா பண்ணினவன் .... தொட்டுக் கும்பிடனும்.  நானே டென்சனாகிட்டேன்.

படத்தின் ஒரே மிகப்பெரிய ப்ளஸ் படத்தின் டிரெய்லர் தான். அதனை பார்த்து விட்டு படம் பார்க்க வருபவர்கள் தான் இவர்களின் டார்கெட். மற்றப்படி போகனும்னு நினைச்சீங்கன்னா அது உங்க தலையெழுத்து.

ஆரூர் மூனா செந்தில்


Wednesday, April 24, 2013

கதறக் கதற பாதி வரை பார்த்த தமிழ்

கடந்த சனியன்று திருமதி தமிழ் படத்திற்கு போவதற்காக முன்பே சிவா என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் கேட்ட சமயத்தில் வேலை இல்லாததால் ஒத்துக் கொண்டேன். மறுநாள் என் தம்பி ஒரு வேலை காரணமாக சனியன்று திருவாரூரிலிருந்து வருவதாக தகவல் வந்தது.


இருந்தாலும் சிவாவுக்காக காலையில் அந்த வேலையை வைத்துக் கொண்டு மதியம் சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு செய்தேன். வெள்ளியன்று மேலும் ஒருவர் திருவாரூரிலிருந்து வருவதாக தெரிய வரவே சிவாவுக்கு போன் போட்டு இன்னும் ஒரு டிக்கெட் கூடுதலாக எடுக்க வேண்டும் என்றேன்.

சிவாவோ சீனு முன்பே டிக்கெட் எடுத்து விட்டான். வேணுமென்றால் நாம் கவுண்ட்டரில் நேரடியாக டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதன் படி முடிவு செய்து சனியன்று நானும் இன்னும் இரு தம்பிகளும் திருநின்றவூர் சென்று அந்த வேலையை முடிக்கவே 12.30 ஆகி விட்டது.


ஊரிலிருந்து வந்தவர்களோ திருவாரூரில் குடிக்க குடும்பத்தினர் தடா போட்டிருப்பதால் கண்டிப்பாக இங்கு குடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். வேறு வழியில்லாமல் நானும் இணைந்து திருநின்றவூரிலேயே ஒரு அளவுக்கு சுருதி ஏற்றிக் கொண்டோம். அங்கிருந்து ரயிலில் ஏறி சென்ட்ரலில் இறங்கும் போது 2.30 ஆகியிருந்தது.

எங்களுடன் நண்பன் அசோக் இணைந்து கொண்டான். சுருதி இறங்கிப் போனதால் மீண்டும் ஏற்ற வேண்டும் என்று அடம் பிடிக்கத் தொடங்கினர். சென்ட்ரலில் இருந்து கால் டாக்ஸி பிடித்து ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் இறங்கிக் கொண்டு மறுபடியும் கச்சேரி ஆரம்பித்தது. செல்வின் போன் செய்து இருப்பிடம் அறிந்து எங்களுடன் இணைந்து கொண்டார்.


எல்லாத்தையும் முடித்து விட்டு திரையரங்கு செல்வதற்குள் படத்தை போட்டிருந்ததால் பதிவர் குழுவினர் படம் பார்க்க உள்ளே சென்றிருந்தனர். ஏகப்பட்ட போதையுடன் ஐவர் குழு (நான், செல்வின், என் தம்பி பிரபு, ஒன்று விட்ட தம்பி மணி, நண்பன் அசோக்) உள்ளே நுழைந்தோம்.

இரண்டு டிக்கெட் கூடுதலாக எடுத்தோம். படம் போட்டு 15 நிமிடம் கழித்து நுழைந்த எங்களுக்கு B வரிசை. இரண்டு நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்த குழுவுக்கு D வரிசை. என்ன வாழ்க்கைடா இது.

நுழைந்ததும் நான் பார்த்த காட்சி பாதி போதையை சர்ரென இறக்கி விட்டது. பின்னே உடல் முழுவதும் சேற்றை பூசிக் கொண்டு ராஜகுமாரன் பஞ்ச் டயலாக் பேசியதை பார்த்ததும் இறங்கவில்லையென்றால் போதைக்கு என்ன மரியாதை.


முன் வரிசையில் பதிவர் குழு அமர்ந்திருக்க பின் வரிசையில் ஐவர் குழு அமர்ந்திருந்தது. போதை இறங்கியதும் அனைவருக்கும் பசிக்க ஆரம்பித்தது. கூட இருந்தவர்கள் தாறுமாறாக கத்தத் தொடங்கினார்கள்.

படம் போட்டு 15 நிமிடம் கழித்து தான் உற்று நோக்கினேன். தியேட்டரில் அமர்ந்திருந்தவர்களில் பாதிப் பேர் மட்டையாகி இருந்தார்கள். மீதி பேர் தனிமை தேடி வந்த காதல் ஜோடிகள்.

அரைமணி நேரத்தில் என்னுடன் வந்திருந்தவர்கள் படம் பார்த்த கடுப்புடன் பசியும் சேர்ந்து கொள்ள சத்தம் போட ஆரம்பித்தார்கள். என்னை நாலு நாள் பட்டினி கூட போடு ஆனால் படத்தை விட்டு வெளியேறலாம் என்று கெஞ்ச ஆரம்பித்தார்கள்.

ஐவர் குழுவில் மூவரை மட்டும் வெளியேச் சொல்லி விட்டு நானும் செல்வினும் மட்டும் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தோம். அவர்கள் விட்டால் போதுமென்று காலில் விழுந்து வெளியேறி வெறியை தீர்க்க ஸ்பென்சர் பிளாசாவில் உள்ள பாருக்குள் தஞ்சமடைந்தார்கள்.

அதன் பிறகு தான் எனக்கு சோதனையே ஆரம்பித்தது. பின்னே படத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் என்ன ஆகும். ராஜகுமாரன் பீடி அடித்து கறுத்துப் போன அந்த உதட்டில் என் தலைவன் ராமராஜனை விட இரண்டு மடங்கு உதட்டுச்சாயம் பூசிக் கொண்டு வந்தால் என்ன நடக்கும், எனக்கு ஏழரை தான் தொடங்கும்.

கத்தினேன், கதறினேன் அரங்கில் கேட்பாரில்லை. பின்னே நான் மட்டும் வெளியே சென்று விட்டால் அவர்களின் கொடுமையை பங்கு போடுவது யார். என்னுடன் வந்தவர்கள் சந்தோஷமாக ஸ்பென்சரில் அனுபவித்துக் கொண்டிருக்க நான் மட்டும் விழி பிதுங்கி இருந்த கொடுமையை யாரிடம் சொல்லி கதற.

இன்டர்வெல் விட்டதும் ஒரே தாவில் வெளியில் வந்தோம். எங்களைத் தவிர வேறு யாரும் அரங்கை விட்டு வெளியே வரவில்லை. படம் பார்த்த பாதிப்பு தான். நாங்கள் மட்டும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு இருந்தோம். நானும் செல்வினும் தான் சற்று டரியலாக இருந்தோம்.

போட்டோ செஷன் முடிந்ததும் நானும் செல்வினும் வெளியேறுவதாக சொல்ல எங்களுடன் வெளியில் வருவதாக கணேஷூம், அரசனும் சொன்னார்கள். ஆனால் எங்களை கட்டுப்படுத்த முடியாத சிவா அவர்கள் இருவரையும் கதறக் கதற உள்ளே இழுத்துச் சென்றார்.

அந்தகூபம், கும்பிபாகம் போன்ற தண்டனைகளை அனாயசமாக தாண்டிய  நான் இந்த கொடுமையை தாங்க முடியாமல் நெருப்பில் விழுந்த புழுவைப் போல் துடித்ததை ரசித்த சிவா எங்கிருந்தாலும் வாழ்க.

ஆரூர் மூனா செந்தில்
 

Tuesday, April 23, 2013

என்டிஆரின் பாட்ஷா

சேட்டை ரிலீசன்று தான் என்டிஆரின் பாட்ஷாவும் ரிலீசானது. நானும் என் வீட்டம்மாவும் சேர்ந்து செல்ல திட்டமிட்டிருந்தோம். கடைசியில் வீட்டம்மா வராததால் நான் சேட்டை சென்றேன். இது போல் தவற விடும் படங்கள் ஹிட்டாவது வழக்கம். அது போலவே இந்த படமும் ஹிட்டோ ஹிட்.


இன்று மதியம் செல்லலாம் என்று முடிவெடுத்து சென்றோம். நாங்கள் மட்டுமே டிக்கெட் வாங்கியிருந்தோம். படம் போடுவார்களா என்று சந்தேகமாக இருந்தது. நேற்று கூட படம் பார்க்க யாருமில்லாததால் கெளரவம் படத்தையும் பாட்ஷா படத்தையும் கேன்சல் செய்திருந்தார்களாம்.

உள்ளே சென்று அமர்ந்தால் எங்களுடன் சேர்ந்து திரையரங்கில் அமர்ந்திருந்தவர்கள் 6 பேர் மட்டுமே. ஏஜிஎஸ் வில்லிவாக்கம் போன்ற திரையரங்குகளிலேயே இந்த நிலைமை என்றால் சென்னையில் உள்ள சாதாரண திரையரங்குகள் மூடப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.


என் மனைவி என்டிஆரின் தீவிர ரசிகை என்பதால் வேறு வழியில்லாமல் நானும் என்டிஆரின் ரசிகன். சென்னைக்கு மீண்டும் வந்த பிறகு வந்த என்டிஆரின் படங்கள் ஊசரவெல்லி, தம்மு படங்களை முதல் நாள் முதல் காட்சியே பார்த்தவன். இந்த படத்தை தான் முதல் நாள் தவற விட்டு விட்டேன்.

படத்தின் கதைக்கு அவர்கள் ரொம்ப மெனக்கெடவில்லை. இயக்குனரின் முந்தைய படமான தூக்குடுவின் காட்சிகளை புரட்டிப் போட்டு என்டிஆருக்காக கூடுதலாக சற்று மசாலாவை கூட்டி பாட்ஷாவை படைத்திருக்கிறார்கள்.


படத்தில் பாட்ஷாவாக வரும் என்டிஆர் ஒரு வளர்ந்து வரும் சர்வதேச டான். அவர் ஏற்கனவே பெரிய டானாக இருக்கும் கெல்லி டோர்ஜியுடன் மோதுகிறார். இத்தாலிக்கு வந்து காஜலை ஏகப்பட்ட நாடகங்கள் நடத்தி காதலிக்கிறார். அங்கிருந்து ஐதராபாத் வந்து சில பல கொலைகள் செய்து கெல்லி டோர்ஜியை வரவழைத்து கொன்று போடுகிறார். படம் சுபம்.

முதலில் இந்த படத்தின் முதல் பிளஸ்ஸாக நான் நினைப்பது மகேஷ் பாபு தான். அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்கிறீர்களா. படத்தின் துவக்கத்திலும் இடையிலும் பின்னணி குரலில் கதை சொல்வது அவர் தான்.


தமிழ்நாட்டில் இது போல் நடக்கவே நடக்காது. ஓரு முன்னணி ஹீரோவின் படத்தில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் நடிகர் புகழ்ந்து பேச மாட்டார். இது மிகப்பெரிய மாற்றம்.

முற்றிலும் புதிய ஹேர்ஸ்டைல் மற்றும் தோற்றத்தில் என்டிஆர். படத்தில் ப்ரேமுக்கு ப்ரேம் அவர் தான் படத்தை ஆக்ரமித்து அசத்தியிருக்கிறார். நடனத்தில் வழக்கம் போலவே கலக்கியிருக்கிறார். சண்டைக் காட்சியிலும் சூப்பர். முதல் பைட்டில் அடி விழும் போதே என் அருகில் அமர்ந்திருந்த தெலுகு பெண் விசிலடித்து தான் ஒரு என்டிஆர் ரசிகை என்பதை நிரூபித்தார்.

காஜல் அகர்வால் அழகு பொம்மையாக வந்து பாடல்களுக்கு நடனமாடி செல்கிறார். எங்கு லூசுப் பொண்ணாக வந்து இம்சிப்பாரோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படியில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் பிரம்மானந்தம் மற்றும் எம்எஸ் நாராயணனின் காமெடி தான். சீனு வைட்லாவுக்கு எப்படி இவர்களை வைத்து படத்தை போரடிக்காமல் நகர்த்த வேண்டும் என்பது சரியாக தெரிந்திருக்கிறது.

பிரம்மானந்தம் தோன்றும் காட்சியில் தப்புத் தப்பாக பதில் சொல்லி நாசரிடம் திட்டு வாங்கும் காட்சியில் தெலுகு பெண் சத்தம் போட்டு சிரித்து சிலாகித்து மகிழ்ந்தார். பிரம்மானந்தம் வந்து போகும் அனைத்து காட்சியிலும் கைதட்டி சிரித்து மகிழ்ந்தார் தெலுகு பெண்.

கல்யாண காட்சியில் பெண்கள் எல்லாம் தவறுதலாக தண்ணியடித்து விட்டு சீனியர் என்டிஆரின் பாடல்களுக்கு ஜூனியருடன் சேர்ந்து போடும் குத்தாட்டம் பார்த்ததும் தெலுகு பெண் உற்சாகமாக ஆடவே ஆரம்பித்து விட்டார். சமாளித்து உட்கார வைக்க வேண்டியிருந்தது.

என்னைப் பொறுத்தவரை தூக்குடுவுடன் ஒப்பிடும் போது இது சற்று குறைச்சல் தான். ஆனால் என்டிஆருக்கு சந்தேகமில்லாமல் கேரியர் ஹிட்டாக இந்த படம் அமையும். என்டிஆருக்கு இந்த ஆண்டின் பம்பர் ஹிட் படம் அமைந்திருப்பது சந்தோஷமே.

நான் குண்டாக இருப்பதால் முன்பெல்லாம் என்டிஆருடன் தான் என்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வேன். சாம்பா, நா அல்லுடு, ராக்கி போன்ற படங்களில் அவர் அந்த ஆட்டம் போடும் போது சற்று முயற்சித்தால் நான் கூட ஆட முடியும் என்று நினைத்து மனதை தேற்றிக் கொள்வேன்.

ஆனால் எமதொங்கா படத்தில் உடம்பை குறைத்து வந்ததும் நான் சற்று வருத்தப்பட்டேன். அப்படியே படிப்படியாக முன்னேறி இந்தப் படத்தில் பர்பெக்ட் பிட்னெஸ்சுக்கு வந்து என்னை ஏக்கப் பெருமூச்சு விட வைத்து விட்டார்.

லாஜிக் மட்டும் பார்க்காமல் இருந்தால் ஆக்சன், காமெடி என பர்பெக்ட் எண்டர்டெயினரை கண்டு ரசிக்கலாம். தமிழில் கூட ரீமேக் படமாக வரும் வாய்ப்பு உள்ளது.

ஒரு தெலுகு பெண் படத்தை விசிலடித்து கை தட்டி ரசித்து மகிழ்ந்தார் என்று சொன்னேன் அல்லவா. அது என் வீட்டம்மா தான் என்ற உண்மையை சொல்ல நினைக்கிறேன். ஆனால் உண்மையை சொன்னால் படித்து விட்டு வந்து எங்கே டோஸ் விடுவாரோ என்று பயமாகவும் இருக்கிறது.

ஆரூர் மூனா செந்தில்

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு விவரங்கள்

Friday, April 19, 2013

உதயம் NH4 - சினிமா விமர்சனம்

இன்று இரண்டு படங்கள் ரீலீசாகும் போது பிரபலமானவர்கள் நடிக்கும் படத்துக்கே முதலில் கவனம் செல்லும். அதுபோல் ராதாமோகன் இயக்கத்தில் இன்று வெளியாகும் கெளரவம் படத்திற்கு தான் முதல் கவனம் சென்றது. ஆனால் அதை மீறி இந்தப் படத்திற்கு தான் முதலில் செல்லனும் என்று தோன்ற வைத்தது வெற்றி மாறனின் பங்களிப்பு தான்.


வெற்றி மாறனின் பெயருக்காகவே அரங்கு முக்கால்வாசி நிறைந்திருந்தது. அந்த எதிர்பார்ப்பை கொஞ்சம் கூட ஏமாற்றாமல் வந்திருக்கிறது உதயம் NH4.

கல்லூரியில் படிக்கும் நாயகனும் நாயகியும் காதலிக்கிறார்கள். பெரிய அரசியல்வாதியான நாயகியின் அப்பா காதலை பிரிக்க நினைக்கிறார். நாயகியும் நாயகனும் ஒரு நாள் பெங்களூரை விட்டு கிளம்பி நண்பர்களின் உதவியுடன் சென்னைக்கு ஒடி வருகிறார்கள்.


அவர்களை நாயகியின் அப்பாவின் சார்பாக ஒரு உதவி கமிஷனர் துரத்துகிறார். அந்த நாளில் காலையிலிருந்து இரவு 12 மணி வரை நடக்கும் சம்பவமே கதை.

படம் துவங்கியதும் தெரியவில்லை. இடைவேளை வந்ததும் தெரியவில்லை. மறுபடியும் துவங்கியதும் தெரியவில்லை, படம் முடிந்ததும் தெரியவில்லை. பரபரவென திரைக்கதையமைத்து நம்மை அதற்குள் கட்டிப் போட்டு படத்தை முடித்து நம்மை அனுப்பி விடுகிறார்கள்.


சித்தார்த் இந்த வயதிலும் சரியாக கல்லூரி மாணவன் கதாபாத்திரத்திற்கு பாந்தமாக இருக்கிறார். நன்றாக நடிக்கிறார். சூப்பர் ஹீரோயிசம் காட்டி எதிரியை வீழ்த்தாமல் இயல்பாக மனிதனுக்கே உரிய பலவீனங்களுடன் சண்டையிடுகிறார். பல கல்லூரிப் பெண்கள் இவர் திரையில் தோன்றும் காட்சியில் விசிலடித்து தங்களின் ஆதர்ச நாயகனை கொண்டாடியது வியப்பாக இருந்தது.

ஹீரோயின் அஷ்ரிதா ஷெட்டி அழகாக மட்டும் இல்லாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். இன்னும் இரண்டு படங்கள் சரியாக அமைந்தால் இவர்தான் அடுத்த ஆண்டு கோலிவுட்டின் கனவுக்கன்னி. நானே திரையில் ஹீரோயினைப் பார்த்து கொஞ்சம் ஜொள்ளு விட்டேன்.

கே கே மேனன் தமிழுக்கு புதுசு. ஆனால் நான் இவரை இதற்கு முன்பு RGVயின் சர்க்கார் படத்தில் பார்த்திருக்கிறேன். இயல்பான வில்லத்தனத்தில் அசத்தியிருப்பார். அமிதாப்பின் மூத்தமகனாக வந்து அவரை கொல்லப்பார்க்கும் கதாபாத்திரம் அது.

இந்த படத்தின் பெரும்பலம் அவர் தான். பரபரப்புக்கிடையில் மனைவியிடமும் மகனிடமும் இயல்பாக பேசி சமாதானம் செய்யுமிடம் சூப்பர். அதுபோல் நூல் இடைவெளியில் கிடைத்த துப்புகளை வைத்து நாயகனை நெருங்குமிடத்திலும் அசத்தியிருப்பார்.

நண்பர்களாக வருபவர்களில் கார்த்திக் சபேஷ் சூப்பராக செய்திருக்கிறார்.

படம் துவங்கும் போது பல இடங்களில் டயலாக் நான் ஸிங்க்காக இருந்ததும் பயந்து விட்டேன். அடடா டப்பிங் படத்துக்கு வந்து விட்டோமோ என்று. பிறகு நேரம் செல்லச் செல்ல டயலாக்குள் சிங்க்கிற்குள் வந்து விட்டது.

ஏன் வெற்றி மாறன் ஸ்பெஷல் என்பதற்கு பல இடங்களில் சான்று இருக்கிறது. ஒரு இடத்தில் கூட தேவையில்லாத டயலாக் கிடையாது. தேமே என்று நின்று கொண்டிருக்கும் கேரக்டர் கிடையாது.

ஐஎம்இஐ நம்பரையும் சிம்கார்டையும் வைத்துக் கொண்டு போலீஸ் ஒருவனது இடத்தை தெரிந்து கொள்ள வைக்கும் இடத்தில் அட போட வைக்கிறார்கள். இன்னும் பல இடங்களில் இன்ட்ரஸ்ட் இன்வெஸ்டிகேசன் இருக்கிறது. அவற்றையெல்லாம் படத்தில் பாருங்கள்.

படத்தின் முக்கிய பலமே இயல்பான வசனம் தான். பெங்களூர்க்காரன் எப்படி கடித்து கடித்து தமிழ் பேசுவான் என எனக்கு தெரியும். அதை அப்படியே பிடித்து படத்தில் வசனங்களை அமைத்திருக்கிறார் வெற்றி மாறன். என் வீட்டம்மா கூட ஒரு காலத்தில் அப்படிதான் பேசிக் கொண்டு இருந்தார். இப்பொழுது தமிழில் செய்யுள் இயற்றும் அளவுக்கு மாறிவிட்டார் என்பது வேறு விஷயம்.

பாடல்களில் ஏற்கனவே இரண்டு டிரெய்லர்களில் கேட்டு பழக்கப்பட்டவையாதலால் பார்க்கவும் இயல்பாக பிடிக்கிறது. இயல்பாக ஒன்றிரண்டு வசனங்களில் தட்டிப் போகும் நகைச்சுவையும் நன்றாக இருக்கிறது.

கிராமத்திலிருந்து வந்த பையன்கள் சென்னையில் வாழ சிரமப்படலாம் என்றால் கூட பரவாயில்லை. சென்னையிலிருந்து வந்த பையன்கள் பெங்களூரின் லைப் ஸ்டைலுக்கு மாற சிரமப்படுகிறார்கள், சுமாராய் உடை அணிகிறார்கள் என்பது தான் நம்ப சிரமமாய் இருக்கிறது.

நானெல்லாம் சென்னையின் காஸ்ட்லியான பாருக்கு சென்றிருந்தாலும் சில சமயம் பப்புக்கு சென்றிருந்தாலும் இது போன்ற பப்பை எங்குமே பார்த்ததில்லை. ஹீரோ முதல் ஹீரோயின் வரை சமரசமே இல்லாமல் தண்ணியடிக்கிறார்கள்.

மங்களூரில் முத்தலிக் பப்பில் அடாவடி செய்ததை புத்திசாலித்தனமாக படத்தில் பொருத்தமான இடத்தில் நுழைத்திருக்கிறார்கள். பெண்கள் ஸ்மோக்கிங் ஏரியாவில் சகஜமாக தம்மடிக்கிறார்கள். பெங்களூரு மேற்கத்திய நாடுகளில் இருக்கிறதோ என்ற சந்தேகம் கூட எழுகிறது.

படத்தில் சொல்லிக் கொள்வது போல் இருக்கும் ஒரே ஒரு மைனஸ் என்னவென்றால் இடைவேளைக்கு பிறகு வரும் காதல் காட்சி ப்ளாஷ்பேக்கில் சற்று தொய்வு விழுகிறது. இருந்தாலும் சட்டென்று முடிந்து விடுவதால் பெரிய குறையாக தெரியவில்லை.

மொத்தத்தில் எப்பொழுது துவங்கியது முடிந்தது என்றே தெரியாத சூப்பர் ஜர்னி இந்த உதயம்.

ஆரூர் மூனா செந்தில்

Thursday, April 18, 2013

தொழிற்சங்க அங்கீகார தேர்தலின் களேபரங்கள்

இன்றைய பதிவில் போட்டோக்கள் தான் அதிகமாக இருக்கும். நண்பர்கள் பொறுத்துக் கொள்ளவும்.


ரயில்வேயில் தொழிற்சங்க அங்கீகார தேர்தல் அடுத்த வாரம் நடைபெறுகிறது. பிரச்சார களம் அனல் பறக்கிறது. எங்களது தொழிற்சாலையை பொறுத்த வரை இரண்டு தொழிற்சங்கங்களுக்கு தான் அங்கீகாரம் கிடைக்கும். அதற்கான தேர்தலில் SRMU, SRES, DREU, AIOBC, RLLF, SRAU போன்ற தொழிற்சங்கங்கள் மோதுகின்றன.


கடும்போட்டி இருப்பது SRMU, SRES, DREU வுக்கு இடையே தான். சென்ற முறை நடந்த தேர்தலில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க காங்கிரஸின் SRES-ஐ வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்ட்களின் DREU வெற்றி பெற்றது. SRMU தனிப்பெரும் தொழிற்சங்கமாக வெற்றி பெற்றது.


இடையில் ஏற்பட்ட அதிருப்திகளின் காரணமாக தொழிலாளிகளிடையே DREUவுக்கு ஆதரவு குறைந்திருப்பது தெரிகிறது. எனவே இம்முறை போட்டி கடுமையாக இருக்கிறது. மற்ற யூனியன்கள் அதைத் தர்றேன், இதைத் தர்றேன் என்று போட்டி போட்டுக் கொண்டு இருக்க இன்று கூட DREU வாசலில் உண்டியல் குலுக்கி அதில் வசூலான தொகையை வைத்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.


கடந்த 10 நாட்களாக தினமும் பிரியாணியாக தின்று பிரியாணியைக் கண்டாலே வெறுப்பாக இருக்கிறது. இன்னும் எட்டு நாட்களை பிரியாணியுடன் தான் ஓட்ட வேண்டும். நமக்கு ஒரு காரியம் ஆக வேண்டுமென்றால் நாம் யூனியனைத் தேடிப் போன காலம் போய் இன்று எனக்கு ஒரு தேவையென்றால் யூனியனின் முக்கிய பிரதிநிதிகளே தேடி வந்து தீர்த்து செல்கின்றனர்.


இந்த கூத்து எல்லாம் இன்னும் எட்டு நாட்களுக்கு மட்டும் தான். அதன் பிறகு நம்மை சீண்டுவதற்கு கூட ஆள் கிடையாது என்று நன்றாகவே தெரியும். இன்று கூட ஒரு தொழிற்சங்கம் மதியம் வேலை நேரம் முடிந்ததும் ஒரு பிரச்சாரக் கூட்டமும் கூட்டம் முடிந்ததும் பிரியாணியும் உண்டு என்று அறிவித்தது.


கூட வேலை பார்ப்பவர்கள் கூட தேர்தலுக்காக லீவு போட்டு விட்டு வேலை செய்கிறார்கள். என் கூட வேலை பார்க்கும் சோமுவுக்கு வேலையே போஸ்டர் ஒட்டுவது தான். காலை முதல் அவரை பசையும் கையுமாக தான் பார்க்க முடியும்.

இதை விட கொடுமை சொந்த செலவில் குட்டித் தலைவர்கள் வைத்துக் கொள்ளும் பேனர்களை கண்ணால் பார்ப்பது தான். ஒருவர் இருக்கிறார். அவரது பேனரைப் பார்த்தால் தலை கிர்ரென்று சுத்தும். இருக்கும் பத்து விரல்களுக்குள் அவர் போட்டிருக்கும் மோதிரம் மட்டும் முப்பதை தாண்டும்.


என் சக நண்பர் இம்மானுவேல் இன்னும் அதிகமாக டீ ஸ்டாண்டுகளில் மொத்தமாக டீயை விலைக்கு வாங்கி அனைவருக்கும் இலவசமாக டீ கொடுக்கும்படி செய்வார். ஆனால் டீ வாங்குபவர்கள் எங்கள் ஓட்டு ....... யூனியனுக்கே என்று சொல்லிச் செல்ல வேண்டும். அவனவன் ஐந்து முறை கூவி விட்டு கணக்கு வழக்கில்லாமல் டீயடிப்பார்கள்.

இன்று எங்கள் செக்சன் முழுவதும் கடும் கூட்டம். பேச வந்த தலைவர்களை யாரும் சட்டைப் பண்ணவில்லை. வந்தவர்கள் எல்லோர் கண்ணும் பிரியாணியில் தான் இருந்தது. நட்சத்திர பேச்சாளர் கடைசியில் பேசும் போது பிரியாணியை வழங்க ஆரம்பித்து விட்டனர்.


அதுவரை கட்டுக் கோப்பாக இருந்த கூட்டம் அப்படியே பிரியாணியுடன் தெறித்து கிளம்பியது. பிரியாணி வினியோகம் நிமிடத்தில் முடிந்து போனது. பேச்சாளர் முன்பே பசியில் இருந்த ஊழியர்கள் பிரியாணியை பிரித்து சாப்பிட ஆரம்பித்தார்கள். பேச்சாளருக்கு கடுப்பு. 

ஆனால் இந்த சமயத்தில் காண்பித்தால் ஓட்டு விழாது என்பதால் சிவாஜி ரேஞ்சுக்கு நடித்துக் கொண்டே பேச்சைத் தொடர்ந்தார். கூட்டமும் பிரியாணியை தின்று கொண்டே பேச்சைக் கேட்டது தான் சுவாரஸ்யம்.

ஆரூர் மூனா செந்தில்

Wednesday, April 17, 2013

கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்த போது

2000த்தில் அப்ரெண்டிஸ் முடித்ததும் திருவாரூர் திரும்பி வந்தேன். அப்பொழுது ரயில்வே மிகுந்த நட்டத்தில் இருந்ததால் அப்ரெண்டிஸ் முடித்தவர்களை பணிக்கு எடுப்பது தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்.


அடுத்தப்படியாக வேலைக்கு சேர்வதற்கு டிகிரி படிக்க முடியாது வயது அப்பொழுதே 21 ஆகி விட்டிருந்தது. ஏதாவது கம்ப்யூட்டர் கோர்ஸ் சேர்ந்தால் முடியும் என்று ஆனது. அதுவரை கிட்டத்தில் மட்டுமல்ல தொலை தூரத்தில் இருந்தும் கம்ப்யூட்டரை பார்த்தறியாதவன் நான்.

நான் திருவாரூர் திரும்பிய போது டிகிரி முடித்த நண்பர்களும் திருவாரூர் திரும்பினார்கள். ஒரு வெட்டி ஆபீசர்கள் குழு உருவானது. சென்னையில் சுற்றியிருந்ததால் இன்னும் கொஞ்சம் கிரிமினல் அறிவு கூடுதலாக இருந்தது.

ஒரு நாள் அப்பா ரசாபாசமாக திட்டிவிட ரோசம் அதிகமாகி ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஒரு பெரிய கம்ப்யூட்டர் நிறுவனத்தில் ஜாவா கோர்ஸ் சேர்ந்தேன். கொஞ்சம் கூட கம்ப்யூட்டர் அறிவு இல்லாத என்னிடம் சென்னை நண்பன் ஒருவன் ஜாவா படித்தால் 7000 சம்பளத்தில் சென்னையில் வேலை கிடைக்கும் என்று சொல்லியிருந்ததால் நான் அந்த கோர்ஸில் சேர்ந்தேன்.


அது மிகவும் தரம் குறைவான இன்ஸ்டிடியூட். வாத்தியார்களே கம்ப்யூட்டர் அறிவில் மிகவும் குறைந்தவர்களாக இருந்தார்கள். நான் மட்டுமே வயதில் பெரியவனாக இருந்தேன். என்னுடன் ஜாவா கோர்ஸில் சேர்ந்தவர்கள் எல்லாம் கல்லூரியில் B.scயும், BEயும் படித்துக் கொண்டிருந்த பெண்களும் பையன்களும்.

அது மின்னலே படம் வெளியாகி இருந்த சமயம், அதுவரை போஸ்டரில் திரைப்படங்களின் ஸ்டில்களை பார்த்துக் கொண்டிருந்த நான், மின்னலே படத்தின் ஸ்டில்களை பிரமித்து போய் இருந்தேன். பேஸிக் கம்ப்யூட்டர் நாலெட்ஜ் கூட இல்லாமல் நேரடியாக 'C' கோர்ஸ் படித்துக் கொண்டு இருந்த அறிவாளி நான்.

வகுப்பறையில் நான் கடைசியாக உட்கார்ந்து பேந்த பேந்த விழித்துக் கொண்டு இருப்பேன். மற்ற மாணவர்கள் எல்லாம் ஓவராக சந்தேகம் கேட்டும் பில்ட்அப் கொடுத்தும் அசத்திக் கொண்டு இருப்பார்கள்.


'C' கோர்ஸ் முடிந்ததும் ஒரு மாதிரி தேர்வு நடந்தது. வகுப்பிலேயே நான் தான் கடைசி மதிப்பெண். எதாவது புரிந்தால் தானே நல்ல மதிப்பெண் பெறுவதற்கு, எல்லா பெண்களும் முட்டாளான என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தார்கள்.

அடுத்தது 'C++' கோர்ஸிலும் இதே நிலைமை தான். என்னடா செய்வது நம்ம மரமண்டைக்கு ஒன்னும் புரியமாட்டேங்குதேன்னு புலம்பி புலம்பி தினமும் சரக்கடிச்சது தான் மிச்சம். என்னுடன் கூட சரக்கடிப்பவனுக்கு கம்ப்யூட்டரில் ஆனா ஆவன்னா கூட தெரியாது. நான் புலம்புவதை பார்த்து ஙே வென விழிப்பார்கள்.

என்னுடன் படித்த பெண்களில் சிலர் பயங்கர பீட்டராக இருந்தனர். உள்ளே வரும்போதே ஹாய்டா என்று மற்றவர்களை அழைத்துக் கொண்டு தான் உள்ளே வருவார்கள். வகுப்பறையில் வந்ததும் முடித்தவரை கற்றுக் கொடுப்பவரிடம் சந்தேகமாக கேட்டுத் தள்ளுவார்கள். ப்ராக்டிலில் கூட நல்ல கம்ப்யூட்டரில் உட்கார்ந்து கொண்டு நமக்கு டொக்கு கம்ப்யூட்டரை தள்ளி விடுவார்கள்.


எனக்கோ பயங்கர கடுப்பு. எப்படியாவது இவளுங்களை மூக்குடைத்து விட வேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டினேன். அதற்கேற்றாற் போல் அந்த நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது.

ஜாவா கோர்ஸ் தொடங்கியது. ஆனால் தொடங்கிய நாள் முதல் எனக்கு மட்டுமே நல்ல கம்ப்யூட்டர் கிடைத்தது. தேர்வும் தொடங்கியது. தேர்வு முடிந்து எப்படியும் சென்னையில் வேலை கிடைத்து விடும் என்று நம்பினேன்.

ஆனால் நான் ஜாவா முடிப்பதற்குள் அது அவுட்டாகி அடுத்ததாக C Sharp என்று ஒன்று வரப் போவதாகவும் அதனை ஈடுகட்ட Advance Java படிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். என்னடா இது வம்பாகிப் போச்சே என்று அதற்கும் பீஸ் கட்டினேன்.

ஜாவா முடிந்து ரிசல்ட் வந்தது. என்னுடன் படித்த எல்லாப் பெண்களும் பையன்களும் முதல்இடத்தையும் டிஸ்டிங்சனையும் எதிர்பார்த்து பரபரப்புடன் காத்திருக்க நான் மட்டும் சந்தோசமாக கலாட்டா செய்து கொண்டிருந்தேன்.

ரிசல்ட் வந்தது. எல்லாரும் சுவற்றில் முட்டிக் கொண்டு இருந்தார்கள். ஒரு பெண் தேம்பித் தேம்பி எல்லாம் அழுது கொண்டிருந்தார். இருவர் கோவத்துடன் வகுப்பை விட்டே வெளியேறினார்கள்.

ஜாவா முடித்தவர்களில் ஒருவர் கூட Advance Java படிக்க சேரவில்லை. ஏனென்றால் நான் தான் வகுப்பில் முதல் மாணவனாக தேறியிருந்தேன். எல்லோரும் மெடிக்கல் மிராக்கிள் என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.

ஆனால் எனக்கு மட்டும் தான் நடந்தது தெரியும். கட்டுரையில் முன்பாக நிறுவனத்தில் ஒரு செயல்பாடு அமைந்தது என்று எழுதியிருந்தேன் அல்லவா. அது என்னவென்றால் இதற்கு முன் இருந்த Faculty வேலையை விட்டு வெளியேறினார். அதற்கு பதிலாக சேர்ந்தவர் அது என்ன ர்ர்ருரு, சேர்ந்தவன் என் நெருங்கிய நண்பன் தினேஷ்.

அவன் B.Sc கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்தான். அவன் வேலைக்கு சேர்வது எனக்கு முன்பே தெரிந்ததால் இந்த பெண்களை கலாட்டா செய்ய வேண்டி நாம் இருவரும் நண்பர்கள் என இன்ஸ்டிடியுட்டுக்கு தெரிய வேண்டாம் என்று அவனிடம் சொல்லி விட்டேன்.

அது போலவே முதல் மதிப்பெண் வேண்டுமென்று பரிட்சைக்கு முதல் நாள் ஒரு புல் பாட்டிலை வாங்கிக் கொண்டு அவனுக்கு தியானபுரம் கேட்டைத் தாண்டி ஒரு பம்புசெட்டில் பார்ட்டி வைத்தேன் என்பதை இங்கு குறிப்பிட வேண்டுமோ.

ஆனால் கடைசிவரை நான் படித்த அந்த படிப்பை வைத்து பத்து பைசா கூட சம்பாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். 

ஆரூர் மூனா செந்தில்


Tuesday, April 16, 2013

ஜிஐ ஜோ (GI JOE) 2

சென்ற வாரம் யுகாதி அன்று விடுமுறை என்பதால் புல் ரெஸ்ட் என்று முடிவு செய்து காலை 9 மணிக்கும் தூங்கிக் கொண்டு இருந்தேன். தூக்கத்தை கலைத்து அலைபேசி ஒலித்தது. திட்டிக் கொண்டே போனை எடுத்தேன். நண்பன் ஆனந்த் போனில் அழைத்தான்.


ஆனந்த் ஐசிஎப்பில் வேலை பார்க்கிறான். என்னுடன் அப்ரெண்டிஸ் படித்தவன். என்னடா என்று கேட்டேன். விடுமுறை என்பதால் பயங்கரமாக போரடிப்பதாகவும் எங்காவது வெளியில் போகலாம் கிளம்பு என்றான். ஆஹா ஒரு நாளை காலி பண்ண முடிவெடுத்து விட்டான் என்று திட்டிக் கொண்டே கிளம்பினேன்.

கிளம்பும் வரை எந்த படம் என்று முடிவெடுக்கவில்லை. மவுண்ட் ரோடு போவோம், எந்த படத்திற்கு டிக்கெட் கிடைக்கிறதோ அந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவானது. தேவிக்கு சென்றோம். இந்த நேரத்திற்கு ஜிஐ ஜோ மட்டுமே அந்த நேரத்திற்கு பொருத்தமாக இருந்தது.


தேவி தியேட்டரை பற்றி சில விஷயம் சொல்ல வேண்டும். ஒரு காலத்தில் சென்னையில் முதல் தர திரையரங்கம் என்றால் அது தேவி தான். குப்பை படத்தை போட்டால் கூட அது வாரநாட்களாக இருந்தாலும் கூட ஹவுஸ்புல் ஆகிவிடும்.

நான் சென்னைக்கு வந்து முதன் முதலில் பார்த்த படம் தேவிபாரடைஸில் இந்தி பர்தேசி, ஷாருக்கான் நடித்தது. அதுவரை டப்பா தியேட்டரில் மட்டுமே படம் பார்த்து வந்த நான் முதன் முதலாக டிடீஎஸ் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை பார்த்து பிரமித்துப் போனேன். அப்படிப்பட்ட தேவி திரையரங்கம் தற்போது காத்து வாங்கிக் கொண்டு இருக்கிறது. இருப்பதிலேயே மிகச்சிறிய திரையரங்கான தேவிகலாவில் பாதி அளவு கூட அரங்கு நிரம்பவில்லை.


ஜிஐ ஜோ ரைஸ் ஆப் தி கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம். முதல் பாகம் நான் பார்க்கவில்லை. இரண்டாம் பாகம் வியக்கவைத்தலுடன் கூடிய சுமார் ரகம். ஜிஐ ஜோ ஒரு அமெரிக்காவின் ரகசிய அதிரடிப் படை. இவை பயன்படுத்தும் கருவிகள் எல்லாம் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டவை. சில கருவிகள் உண்மையிலேயே பயன்பாட்டில் இருந்தாலும் மற்றவை சிறப்பான அறிவியல் கற்பனைகள்.

படம் பாகிஸ்தான் பிரதமர் கொலையில் ஆரம்பிகிறது. பாகிஸ்தானில் அரசியல் சூழல் அபாயகரமாக இருப்பதால் அந்த நாட்டின் இரண்டு அணு ஏவுகணைகளை மீட்டுவர ஜிஐ ஜோக்கள்  உத்தரவிடப் படுகிறார்கள். அணுகுண்டுகளை ஒரு அதிரடிக்கு பிறகு கைப்பற்றும் ஜோக்கள் பாலைவனத்தில் அணுகுண்டுகளை ஒப்படைக்க காத்திருக்கிறார்கள்.


இரவில் நடக்கும் எதிர்பாரா தாக்குதலில் ஜோக்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர். எப்படியோ தப்பும் ராக், லேடி ஜோ , பிளின்ட்  ஆகிய மூன்று ஜோக்களும் பழிவாங்கி உலகத்தை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதே கதை.

மனித உடல் சக்தியை பலமடங்கு கூட்டும் ஒரு கவச உடை, விமானத்தை கூட வீழ்த்தும் அல்ட்ரா சோனிக் துப்பாக்கிகள், காமிரா மூலம் படமெடுத்து பிரீஸ் செய்து படத்தில் குறிவைத்து சுட்டால் குறியை தப்பாமல் தாகும் துப்பாக்கி என பட்டையை கிளப்பும் ஆயுதங்கள் ரசிகர்களை ஈர்க்கின்றன.

பாகிஸ்தானில் எதிரிகள் இவர்களது இடத்தை அழிக்க முற்படும் போது மூவரும் ஒரு கிணற்றில் பாயும் காட்சியை நன்றாக படமாக்கி இருக்கிறார்கள். பயர்பிளையாக வரும் ரே ஸ்டீவென்சன் பயன்படுத்தும் நானோ  ஈக்கள் எதிரிகளின் இடத்தில் ஊடுருவி வெடித்து பெரும் நாசத்தை உண்டு பண்ணுவது நன்றாக இருக்கிறது.

அப்புறம் இவர் தனது பைக்கை உயர எழுப்பி பல பாகங்களாக பிரித்து சிறையை வெடிக்க செய்வது எல்லாம் அதி பயங்கர கற்பனை. ஸ்ட்ராம் ஷாடொ நின்ஜா பாணி சண்டை படத்திற்கு வலுவை சேர்க்கிறது. இவரின் உடலை ஒரு பாடி பாக்கில் வைத்து மலை உச்சியில் இருந்து கயிற்றில் அனுப்பி ஸ்நேக் ஐசும் ஜின்க்சும் செய்யும் மலைச்சிகர சண்டை காட்சி அருமை.

கிளைமாக்ஸில் புதிய ஆயுதம் ஒன்றை விண்வெளியில் இருந்து அனுப்பி லண்டனை அழிக்கிறார்கள். கோப்ரா தப்பிசெல்ல உலகை காக்கிறார்கள் ஜோக்கள். அப்படின்னா அடுத்த பார்ட் தயாராகிறது என்று அர்த்தம்.

படத்தின் பலமே ராக் தான். தேவிகலாவில் மட்டுமே சாதாரணமாக இருக்கையில் உட்கார்ந்தால் கூட பின்னால் இருப்பவருக்கு திரையை மறைக்கும் அளவுக்கு சீட்டிங் இருக்கிறது. மற்ற திரையரங்குகளில் 3டி கண்ணாடியை இலவசமாக கொடுக்கும் போது இவர்கள் மட்டும் 30 ரூபாய் வசூலிக்கிறார்கள். என்ன கணக்கோ தெரியவில்லை.

வெளியில் வந்ததும் நல்ல பசி வேறு. அப்படியே கோபாலபுரம் சார்மினார் பிரியாணி கடைக்கு வண்டியை விட்டு திருப்தியான பிரியாணியை ஒரு கட்டு கட்டி விட்டு தான் கிளம்பினோம். படத்தை விட நன்றாக இருந்தது. சார்மினார் பிரியாணி தான்.

ஆரூர் மூனா செந்தில்
 

Monday, April 15, 2013

திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீதம்

 கர்நாடக சங்கீதத்திற்கு மூத்தவர்கள் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் தியாகராஜ சுவாமிகள், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்ஷிதர் ஆகியோர் திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்களே.


பிற்காலத்தில் அவர்கள் திருவையாற்றில் தங்கியிருந்து பாடல்களை இயற்றினர். அங்கேயே ஜீவசமாதியும் அடைந்தனர். இவர்களின் நினைவாக திருவையாற்றில் இப்பொழுது கூட மும்மூர்த்திகள் திருவிழா நடப்பதுண்டு.

திருவையாறு அளவுக்கு திருவாரூரில் அவ்வளவு சிறப்பாக மும்மூர்த்திகள் விழா நடந்தது கிடையாது. இதற்கு காரணம் திரு. கருப்பையா மூப்பனார் அவர்கள் தான். அவரது கர்நாடக சங்கீத ஆர்வத்தினாலும் அவரது செல்வாக்கினாலும் திருவையாற்றில் மிகச்சிறப்பாக நடத்திக் காட்டினார்.


ஆனால் திருவாரூரில் அந்த அளவுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள பெரியவர்கள் யாருமில்லாததால் அந்த அளவுக்கு சிறப்பாக நடப்பதில்லை. திருவாரூரில் பிறந்து வளர்ந்தவர்கள் எல்லோரும் திராவிட கழகத்தின் கீழ் செயல்பட ஆரம்பித்ததனால் தான் என்று நினைக்கிறேன்.

ஆனாலும் திருவாரூரில் சிறிய அளவுக்கு மும்மூர்த்திகள் விழா நடப்பதுண்டு. இரண்டாம் மற்றும் அறிமுக நிலை கர்நாடக சங்கீத கலைஞர்கள் மட்டுமே பங்கேற்கும் விழாவாக அது அமையும். பேப்பரிலும் தொலைக்காட்சியிலும் திருவையாறு விழாவைப் பற்றி மட்டுமே செய்திகள் வரும் போது திருவாரூரின் நிலையை நினைத்து வருத்தமாக இருக்கும்.


எனக்கோ எனது நண்பர்களுக்கோ கர்நாடக சங்கீதத்தின் ராகம், தாளம் பற்றியெல்லாம் ஆனா, ஆவன்னா கூட தெரியாது. ஆனால் எனது ஊரின் பெருமை என்ற அளவிலேயே விருப்பம் கொண்டிருந்தோம். திருவாரூர் பெரிய கோவிலிலும், மேல வடம்போக்கித் தெருவில் இருக்கும் அரங்கிலும் நடைபெறும் கச்சேரிகளுக்கு செல்வதுண்டு.

ஒரு வார்த்தைக்கும் அர்த்தம் புரியவில்லையென்றாலும் அங்கே பாடகர் சரிகம, மமகரிச, காஆஆஆஆல ஆஆஆஆஆ மமமமமா என்று ரொம்ப சிரத்தையாக பாடிக் கொண்டு இருப்பார். எனக்கு ஒன்றுமே புரியாது. என் அருகிலோ எதாவது ஒரு பிராமணர் சம்மணமிட்டுக் கொண்டு தொடையில் தாளம் போட்டவாறு ரசித்துக் கொண்டு இருப்பார்.


கொஞ்ச நேரத்திற்கு மேல் அங்கு அமர முடியாது. ஏதாவது புரிந்தால் தானே. ரசிக்க வந்தவர்கள் கூட பெரும்பான்மையோர் பிராமணர்களாகவும், கர்நாடக சங்கீதம் தெரிந்தவர்களாகவும் தான் இருப்பர. சொற்ப அளவிலே இருக்கும் அந்த கூட்டத்தை விட்டு வெளியேறினால் நானே எங்கள் ஊரை புறக்கணிப்பது போல் இருக்கும் என நினைத்துக் கொண்டு கச்சேரி முடியும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருப்பேன்.

திருவாரூரில் என் வீட்டிலிருந்து மூவர் வாழ்ந்த வீடும் அருகிலேயே தான் இருக்கிறது. எங்கள் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் புதுத்தெருவில் தியாகராஜ சுவாமிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டர் தொலைவுக்குள் மேட்டுத் தெருவில் சியாமா சாஸ்திரிகள் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது. 200 மீட்டருக்குள் முத்துசாமி தீட்ஷிதர் பிறந்து வாழ்ந்த வீடு இருக்கிறது.


இவற்றில் தியாகராஜ சுவாமிகள் வாழ்ந்த வீட்டை அரசு பராமரிக்கிறது அந்த இடத்தில் வீணை மற்றும் வாய்ப்பாட்டும் சொல்லிக் கொடுக்கப்படுகின்றன, சியாமா சாஸ்திரிகள் வாழ்ந்த வீட்டை காஞ்சி சங்கராச்சாரிகள் மடம் பராமரிக்கிறது. இன்றும் ஜெயந்திரர் என்னும் டுபாக்கூர் சாமியார் திருவாரூர் வந்தால் அங்கு தங்கி தான் செல்வார்.

முத்துசாமி தீட்ஷிதர் வீடு இருந்த இடத்தில் தற்போது கச்சேரிகள் நடைபெற்று வருகிறது. தியாகராஜ சுவாமிகள் வீட்டிற்கு மட்டும் அங்கு வாய்ப்பாட்டு கற்கும் அய்யராத்து பெண்களை சைட் அடிப்பதற்காக சென்றதுண்டு.


திருவையாறில் மிகப் பிரம்மாண்டமாக அனைத்து முன்னணி கர்நாடக கலைஞர்களும் பங்கேற்று பெருமை செய்வார்கள். அதனை பார்க்கும் போது எனக்குத்தான் பொறாமையாக இருக்கும். மும்மூர்த்திகள் மறைந்த ஊருக்கு வந்து இவ்வளவு பெருமை சேர்க்கும் இவர்கள் மும்மூர்த்திகள் பிறந்த ஊருக்கு ஏன் வருவதில்லை என்று.

சென்னையில் நடக்கும் டிசம்பர் விழாக்களுக்கு என் நண்பரின் சகவாசத்தால் செல்வதுண்டு. கர்நாடக சங்கீதத்தில் ஆர்வமுள்ள அவன் முடித்த வரை பெரும்பாலான கச்சேரிகளில் கலந்து கொள்வான். கம்பெனிக்கு என்னையும் கூட்டிச் செல்வான். நானோ கேண்டீனில் கிடைக்கும் பிரமாதமான சுவையுள்ள டிபனுக்காக மட்டுமே செல்வதுண்டு.

எனக்கு பத்து வயது இருக்கும் போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு அய்யராத்து வீட்டுக்கு பரதம் கற்றுக் கொள்ள என் அம்மாவினால் கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டேன். அதே தெருவில் சட்டை கூட போடாமல் கிட்டிப்புல்லும், கபடியும் ஆடிக் கொண்டு இருக்கும் நான் சுத்தபத்தமாக குளித்து விட்டு பைஜாமா அணிந்து செல்வது பயங்கர கடுப்பாக இருக்கும்.

மற்ற நண்பர்கள் பயங்கரமாக கிண்டல் செய்வார்கள். நான் மட்டுமே பையன் மற்றவர்கள் எல்லோரும் சிறுமிகள். அதுவும் அய்யராத்து சிறுமிகள். போனவுடன் நடனம் கற்றுக் கொடுக்காமல் அபிநயங்கள் மட்டுமே கற்றுக் கொடுத்தார்கள். பதாக்கம், திருப்பதாக்கம், அர்த்தப்பதாக்கம், கர்த்தரிமுகம் என ஒரு மாதத்திற்கு பாடாய் படுத்தினார்கள்.

ஒரு வருடம் முழுவதும் கற்றுக் கொண்டேன். மாலை வேளைகளில் 6லிருந்து 7 வரை பரதம் கற்றுக் கொள்ளும் நான் 7 மணியிலிருந்து தெருவில் புழுதியில் பொரண்டு விளையாடிக் கொண்டு இருப்பேன். தெரு விளையாட்டு, பரதம் இரண்டில் எதில் கவனம் செலுத்துவது என புரியாமல் தவித்துக் கொண்டு இருந்தேன்.

ஒரு டைபாய்டு ஜூரத்தால் பரதத்திற்கு ஒரு மாதம் விடுப்பு எடுத்த நான் அத்துடன் செல்வதை நிறுத்திக் கொண்டு விட்டேன். என் அம்மா தான் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தார். எனக்குத்தான் தெரியும் நான் விட்டதனால் பிழைத்துக் கொண்டது பரதம் தான் என்று.

ஆரூர் மூனா செந்தில்




Sunday, April 14, 2013

சென்னையில் வழி கண்டுபிடிப்பது சிரமமே.


எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊர் டிராபிக் ரூட்டை தெரிந்து கொள்வது எனக்கு ஒரு ஹாபி போல. திருவாரூரில் இருந்த வரை திருவாரூர், மன்னார்குடி, மாயவரம், தஞ்சாவூர், நாகப்பட்டிணம், பட்டுக்கோட்டை ஊர்களின் வழிப்பாதையை சந்துபொந்து வரை தெளிவாக தெரிந்து வைத்திருந்தேன்.


கும்பகோணம் மட்டும் விதிவிலக்காக அதிகம் போகாத ஊராக இருந்தது. சென்னைக்கு வந்த பிறகு சிலகாலம் வழிதெரிந்து கொள்வது சற்று சிரமமாக இருந்தது. சில மாதங்களில் அதையும் தெரிந்து கொண்டேன். இதற்கு கூட ஒரு ஐடியா வைத்திருந்தேன். சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் சென்று வந்தால் சென்னையில் வழிப்பாதையை தெரிந்து கொள்ளலாம் என்பதே அது.

அதையும் அப்ரெண்டிஸ் சேர்ந்த பிறகு மாலை வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்து மாதக்கணக்கில் சுற்றித் தான் தெரிந்து கொண்டேன். நான் முன்பு வேலை பார்த்த கம்பெனியில் பலஊர்களுக்கு மாற்றலானதால் அந்தந்த ஊர்களில் திரிந்து வழிப்பாதையை தெரிந்து கொள்வது என்னுடைய பெரிய பொழுதுபோக்கு.


பெங்களூர், மதுரை, விருதுநகர், ஐதராபாத், வாரணாசி, டெல்லியில் ஒரு பகுதி, நாகர்கோயில், கொச்சி, நெல்லூர் என பல ஊர்களில் வேலை பார்த்ததால் அந்தந்த ஊர்களில் எங்கிருந்து எங்கு செல்வது என்றாலும் எனக்கு அத்துப்படி.

ஆனால் பலஊர்களில் இதற்காக நான் பட்ட சிரமங்கள் எனக்குத்தான் தெரியும். திருவனந்தபுரத்தில் நான் வேலை பார்க்க செல்லும் போது தங்கியிருந்த இடம் கழக்கூட்டம். அங்கிருந்து சாஸ்தாமங்கலம் என்ற ஏரியாவுக்கு செல்வதற்காக கம்பெனியின் பழைய ஸ்கூட்டரில் சக ஊழியருடன் புறப்பட்டேன்.

அது எனக்கான சுக்ரதிசை நாள் என்று தெரியாமல் போய் விட்டது. அந்த ஸ்கூட்டருக்கு ஒரு தன்மை உண்டு. வண்டி புறப்பட்டதும் மூன்று கிலோ மீட்டர் ஒழுங்காக செல்லும் பிறகு கார்ப்பரேட்டர் அடைத்துக் கொள்ளும். மெக்கானிக்கிடம் காட்டி அடைப்பை எடுத்து விட்டால் தான் மறுபடியும் ஸ்டார்ட் ஆகும்.


மறுபடியும் மூன்று கிலோமீட்டர் செல்லும். மறுபடியும் கார்ப்பரேட்டர் அடைப்பு, மெக்கானிக் சரிசெய்ய வேண்டும். இந்த கதை எனக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன். அந்த சமயம் எனக்கு மலையாளத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாது.

திருவனந்தபுரத்திற்கும் புதுசு. தட்டுத் தடுமாறி ஒவ்வொரிடமும் வழிகேட்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. கழக்கூட்டத்திற்கும் சாஸ்தாமங்கலத்திற்கும் 17 கிலோமீட்டர். மதியம் சாப்பிட்டு விட்டு புறப்பட்ட நாங்கள் வண்டியை சரிசெய்து சாஸ்தாமங்கலத்திற்கு செல்வதற்கு மாலை ஆறுமணியாகி விட்டது.

வண்டியை அன்று தள்ளி தள்ளி ஏகக்கடுப்பாகி விட்டது. இரவு நெடுநேரம் கழித்து திரும்ப வேண்டியதாகியதாலும் கேரளாவில் ஒன்பது மணிக்கெல்லாம் ஒயின்ஷாப்பை அடைத்து விடுவார்கள் என்பதாலும் ஆபீசில் இருந்த நண்பர்களிடம் ரெண்டு புல் வாங்கி வைக்கச் சொல்லியிருந்து அன்று இரவு முழுவதும் குடித்து தீர்த்து தான் அசதியை போக்க முடிந்தது.


அன்றிலிருந்து நான் கேரளாவை விட்டு திரும்பும் வரை எல்லோரும் எனக்கு சாஸ்தாமங்கலம் என்று பெயரிட்டு கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். அதுபோலவே அந்த ஸ்கூட்டரை நான் கேரளாவை விட்டு செல்லும் வரை தொடவே இல்லை.

1997ல் நான் சென்னைக்கு வந்த புதிதில் என் பெரியப்பா பையன் சதீஷ் "மை இந்தியா" என்ற படத்திற்கு பிரிவியூ இரண்டு டிக்கெட்டுகள் வாங்கிக் கொடுத்தான். என்னுடன் என் நண்பன் இந்திரனை அழைத்துக் கொண்டு சென்றோம்.

வழி தெரியாது என்பதால் பெரியார் நகரிலிருந்து எப்படி செல்ல வேண்டும் என்று க்ளாஸ் எடுத்தான். பெரியார் நகர் பேருந்து நிலையத்தில் 42 பஸ் பிடித்து பாரிமுனை சென்று அங்கிருந்து சைதாப்பேட்டை செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி எதிர்பக்கம் சென்றால் ராணிசீதை ஹாலின் பக்கத்து ரோட்டில சென்றால் இந்த பிரிவியூ தியேட்டரை அடையலாம் என்று.

நாங்களும் ஒருவருக்கொருவர் உறுதுணையாக பாரிமுனையில் இறங்கி மற்றவர்களிடம் விசாரித்து சைதாப்பேட்டைக்கு செல்லும் பேருந்தில் ஏறி ஜெமினியில் இறங்கி அந்த இடத்தை விசாரித்து சென்று அடைந்த போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மிகப்பெரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் போல் இருவரும் உணர்ந்தோம்.

இத்தனைக்கும் என்னுடன் வந்த நண்பன் இந்திரன் அக்மார்க் சென்னைக்காரன்.

ஆரூர் மூனா செந்தில்

Friday, April 12, 2013

இன்பச்சுற்றுலாவும் பேருந்து பயணமும்

பேருந்து பயணம் என் வாழ்வின் அங்கமாகிப் போனது எப்படியென்றே தெரியவில்லை. என்னுடன் பழகிய நிறைய நண்பர்களை பார்த்து அதிசயித்து இருக்கிறேன். அவர்கள் செங்கல்பட்டினையே இது வரை தாண்டியதில்லை. சென்னைக்கு தெற்கே தமிழ்நாடு எப்படியிருக்கிறது என்பதை அறியாதவர்கள்.

 (பச்சை சட்டையும் சிகப்பு டவுசரும் அணிந்திருப்பது தான் நான்)

நானோ தமிழ்நாட்டில் செல்லாத மாவட்டமே கிடையாது. குறைந்தபட்சம் ஒரு மாதம் வசிக்காத மாவட்டம் தமிழ்நாட்டில் கிடையாது. அந்தளவுக்கு ஊர்சுற்றியே வாழ்ந்து விட்டேன். அப்படி ஊர் ஊராக சுற்றிய பொழுது கிடைத்த பேருந்து பயணத்தின் அனுபவமே இந்த கட்டுரை.

எனக்கு விவரம் தெரிந்த வயதில் அதிகம் சென்ற பேருந்து பயணம் திருவாரூரிலிருந்து என் அம்மா வழி தாத்தா வீடு இருக்கும் ஆதனூர் என்ற கிராமத்திற்குத் தான். தஞ்சாவூர் செல்லும் சாலையில் நீடாமங்கலத்திற்கு அருகில் இருக்கும் அந்த ஊருக்கு வார இறுதியில் செல்வது வழக்கமான ஒன்றாக இருந்தது.

(மகாபலிபுரத்தில் இடுப்பில் துண்டுடன் நான்)

நீடாமங்கலத்தில் ரயில்வே கேட்டு போட்டு விட்டால் அரைமணிநேரத்திற்கு திறக்க மாட்டார்கள். அப்படி நிறுத்தும் போது மாலை நேரமாக இருந்தால் அப்படியே ஓடிச் சென்று பால் திரட்டு வாங்கி தின்று கொண்டே பயணத்தை தொடர்வோம்.

தஞ்சாவூர் தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று சொன்னாலும் அதற்கு ஏற்ற நெல் பயிரிடும் நிலங்கள் இந்த சாலையில் தான் அதிகமாக இருக்கும். ஒரு பக்கம் ஆற்றின் கரையும் மறுபக்கம் நெல் விளையும் நிலமாகவும் இருக்கும் அந்த பகுதியில் செல்லும் போது நீர் பாய்ச்சுவது, நாத்து விடுவது, மேட்டில் கதிரடிக்கும் கூட்டம் என இனிய அனுபமாகவே இருக்கும்.

தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்லும் பேருந்தில் ஏறினால் ஆதனூரில் நிறுத்த மாட்டார்கள். வேறுவழியில்லாமல் நீடாமங்கலத்தில் இறங்கி அங்கிருந்து 3 கிலோமீட்டர் நடந்தே செல்வோம். எனக்கு இது தான் ஊர், இவர்கள் தான் சொந்தக்காரர்கள் என்று நம்பவைக்கப்பட்ட அந்த இடம் இன்று காலத்தின் கோலத்தால் செல்ல முடியாமலே போனது தான் சோகம்.

 (வளர்ந்து கடாவான பிறகு ஒரு குற்றால பயணத்தில்)

அடுத்த பயணம் திருவாரூரிலிருந்து பட்டுக்கோட்டைக்கு மன்னார்குடி வழியாக செல்வது. திருவாரூரிலிருந்து மன்னார்குடி வரை கடுப்பாக செல்லும் பயணம் மன்னார்குடியில் பேருந்து மாறியதும் குதூகூலமாக மாறிவிடும். காரணம் இளையராஜாவின் பாடல்கள் தான்.

அந்த ரூட்டில் தனியார் பேருந்துகள் தான் அதிகமாதலால் எப்பொழுதும் போட்டி போட்டு தான் பேருந்துகள் செல்லும். அப்படி போகும் போது சன்னலோர இருக்கையில் அமர்ந்து இளையராஜாவின் பாடல்களை ரசித்துக் கொண்டு வேகமாக போகும் போது மிகுந்த மகிழ்ச்சியளிக்கும்.

இன்று இந்த ரூட்களில் சொந்தகாரர்களின் வீட்டுக்கு காரில் செல்வதே வழக்கமாக இருப்பதால் அந்த பேருந்து பயணத்தின் சுகத்தினை அனுபவிக்க முடியவில்லை.

(அம்மா, தம்பியுடன்)

திருவாரூரில் வடக்கு வீதியில் குடியிருந்த போது தெருவில் உள்ள அனைத்து மக்களும் பரிட்சயமானவர்களாகவே இருந்தார்கள். இன்று பாதி குடும்பங்களுக்கு மேல் அங்கு கிடையாது. வேலைக்காக வெளியூருக்கு சென்று விட்டார்கள்.

1980 இறுதி காலக்கட்டங்களில் தெருவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து திருப்பதி ஆன்மீக சுற்றுலா, கேரளா இன்பச் சுற்றுலா, கர்நாடகா இன்பச் சுற்றுலா செல்வது வழக்கமாக இருந்து. இதற்கு சுற்றுலா ஏற்பாட்டாளர் ஒருவர் இருந்தார் அவர் பெயர் டூர் தியாகு.

அவர் தான் பேருந்து ஏற்பாடு செய்து ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பணம் ஆகும் என்றெல்லாம் கணக்குப் போட்டு வசூல் செய்து பயணத்தை திட்டமிடுவார். வடக்குவீதி சித்தி வினாயகர் கோயிலில் கற்பூரம் காட்டி, தேங்காய் உடைத்து பேருந்து புறப்படும். இரவு தூங்கி விழித்ததும் சாத்தனூர் அணையில் இருப்போம். எனக்கு அந்த சமயங்களில் பத்து பதினோரு வயது என்பதால் புது இடங்களை காண்பதில் உற்சாகமாகவே இருக்கும்.

சாத்தனூர் அணையில் குளித்து முதலைப் பண்ணையை சுற்றிப் பார்த்து விட்டு திருவண்ணாமலை கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு புறப்பட்டால் பேருந்து வேலூர் வழியாக திருப்பதிக்குள் நுழையும். வழியெங்கும் வீட்டிலிருந்து கட்டி எடுத்து வரப்பட்ட புளிசோறும், சப்பாத்தியும் தான் உணவு.

கீழேயே பேருந்தை நிறுத்தி விட்டு ஆந்திர மாநிலத்து பேருந்தில் திருமலைக்கு பயணத்தை தொடரும் போது வித்தியாசமான அனுபவமாகவே இருக்கும். பேருந்து மலையில் ஏறத் தொடங்கியதும் பாதிப் பேர் வாந்தி எடுப்பார்கள். எங்கப்பா எனக்கும் என் தம்பிக்கும் ஒரு எலுமிச்சை பழம் கொடுத்து முகர்ந்து கொண்டே வரும்படி சொல்லுவார்.

எனக்கு வாந்தி வராது. ஆனாலும் அப்பாவுக்காக முகர்வது போல் நடித்துக் கொண்டே வருவேன். அம்மாவெல்லாம் கண்ணைச் சுற்றி துண்டை கட்டிக் கொண்டு மயக்கத்திலேயே வருவார். பக்கத்து வீட்டு மாமா குடும்பங்கள், அப்பாவின் நண்பர்கள் குடும்பங்கள் என் எல்லாமே மயக்கத்தில் தான் வரும்.

அப்பா மட்டும் தான் தெம்பாக வருவார். எனக்கு பார்க்கும் போது பெருமையாக இருக்கும். மற்றவர்களிடம் அப்பாவைப் பற்றி பீற்றிக் கொள்வேன். மலையில் காத்திருந்து சாமி பார்த்து விட்டு உண்டியலில் அப்பா தூக்கிக் காட்ட நான் காசு போடுவேன்.

வரிசையில் நின்று லட்டு வாங்கி மீண்டும் பேருந்தில் இறங்கும்போதும் இதே வாந்தி படலம் தான். பேருந்தும் மங்கலான வெளிச்சத்தில் இருப்பதால் ஆந்திரா பேருந்தே பிடிக்காது. தமிழ்நாடு பேருந்து தான் இந்தியாவிலேயே சிறந்த பேருந்து என்று எண்ணத் தோன்றும்.

அப்படியே மீண்டும் பேருந்தில் ஏறினால் சென்னைக்கு சுற்றுலா வருவோம். மெரினா பீச், வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்றிப் பார்த்து விட்டு மாமல்லபுரம் பார்த்து விட்டு இரவோடு இரவாக திருவாரூர் திரும்புவோம். ஏழெட்டு வருடங்களுக்கு இது வழக்கமான பயணமாக இருந்தது.

அப்பொழுது எல்லாம் சாதாரணமாகவும் கடுப்பாகவும் தெரிந்த சுற்றுலா பயணங்கள் இன்று பசுமையான நினைவுகளாக இருக்கிறது. 12 வயதில் 10 பெண்ணைப் பார்த்து சைட் அடித்தது, பேருந்தில் திரும்பும் போது அப்பாவுக்கு தெரியாமல் லட்டை சுரண்டி தின்றது, மயக்கமோ வாந்தியோ வராமல் மற்றவர் கவனம் என் மீது வரவேண்டும் என்பதற்காக மயக்கம் வருவது போல் நடித்தது எல்லாம் இன்று நினைத்து பார்த்தால் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது.

கேரளா இன்பச்சுற்றுலா சென்று எல்லா ஊர்களும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பும் வழியில் மழம்புழா அணைக்கடுத்து ராஜபாளையம் அருகில் கேரள எல்லையில் நாங்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஏகப்பட்ட பேர் காயமடைந்ததால் சுற்றுலா திட்டங்கள் அத்துடன் கைவிடப்பட்டன.

புளிசோறு பயணத்தில் சாப்பிட்டால் தான் அருமையான சுவையை தருகிறது. எப்படி அந்த சுவை என்பது தான் புரியாத புதிர்.

ஆரூர் மூனா செந்தில்
 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...