சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, July 25, 2012

பஞ்சேந்திரியா - வெறும் காலு வைக்கக் காலு

சில நாட்களுக்கு முன்பாக என் நண்பனின் தாத்தாவை சந்திக்க நேர்ந்தது. அவர் வெள்ளைக்காரன் காலத்தில் ராணுவத்தில் பணிபுரிந்தவர். நமது அறிவு குறித்த பேச்சு வந்த போது அவர் சொன்ன விஷயம் என்னை ரொம்பவே கவர்ந்தது. அது என்னவென்றால் சுதந்திரத்திற்கு முன்பு படிக்காதவர்களையும் ராணுவத்தில் சேர்த்தார்களாம். அவர்களை மார்ச்ஃபாஸ்ட் செய்வதற்கு லெப்ட் ரைட்டு என்று சொன்னால் நம்மவர்களுக்கு தெரியாதாம்.

அவர்களுக்கு புரிவ வைப்பதற்காக ரொம்ப நாள் தலையைப்பிச்சிக் கொண்டிருந்த வெள்ளைக்காரன் ஒரு நாள் திடீரென்று ஒரு யோசனையை கண்டுபிடித்தானாம். அது வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளது. அது என்னவெனில் அனைவரின் இடது காலிலும் சிறிது வைக்கோலை கட்டிவிட்டானாம். பிறகு லெப்ட்டு ரைட்டு என்பதற்கு பதிலாக அவன் என்ன கூறினானாம் தெரியுமா?

வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.

எப்பூடி.

-------------------------------

இந்த ஆண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு


-------------------------------------

நேற்று ஸ்டெர்லிங் ரோடு வழியாக செல்லும் போது யதேச்சையாக என் அப்ரெண்டிஸ் காலத்து தோழியை சந்திக் நேர்ந்தது. அதிர்ந்து விட்டேன். படிக்கும் போது சிக்கென்று இருந்த காலேஜ் குயின் இப்போது என்னை விட குண்டாக பீப்பாய் போன்று இருக்கிறாள். எனக்கும் அது தான் புரியமாட்டேன் என்கிறது.

படிக்கும் போது அவள் முகத்தில் இருந்த ஒரு பருவைப் போற்றி செய்யுள் இயற்றிய கவிஞர்களெல்லாம் இப்போது பார்த்தால் என்ன நினைப்பார்கள். அவளை காதலிக்க நடந்த போட்டியில் ஏழெட்டு பேர் இருந்தார்கள். வெட்டு குத்து வரை போயும் அவள் யாரையும் காதலிக்கவில்லை.

வீட்டில் இருந்தவர்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளையையே திருமணம் செய்திருக்கிறாள். அதன் பிறகு ரெண்டு பிள்ளைகளை பெற்றுக் கொண்டு உடல் நலம் பற்றிய சிரத்தையை விட்டு இப்படியாகி விட்டிருக்கிறாள். பெண்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை இரண்டு விதமாக அமைகிறது.

பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள். அது போலவே இளம்வயதில் மிகச்சுமாராக ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெருகேறி ஏரியா போற்றும் ஆண்ட்டியாகி விடுகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். என்ன உலகமடா இது.

--------------------------------------

நிகரில்லா தமிழினத் தலைவன்


--------------------------------------

முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்றம் செய்து விட்டதாகவே மனதை உறுத்தும். இப்பொழுது வாரம் ஒருமுறை பதிவெழுதவே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது. தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு சிலர் மிக முன்யோசனையாக பத்து இருபது பதிவுகளை முன்பே தட்டச்சு செய்து வைத்து விட்டு தினம் வெளியிட்டு அசத்துகிறார்கள். நமக்கு எல்லாம் ஒரு பதிவை தட்டி வெளியிடுவதற்குள் தாவு தீர்ந்து விடுகிறது.

பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். பதிவெழுதும் புதிதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தினமும் பதிவெழுதுவது பிடிக்கிறது. பிறகு மோகம் குறைந்து வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் எழுத முடிகிறது. சத்தியமா டபுள் மீனிங்ல பேசலண்ணா.

ஆரூர் மூனா செந்தில்

40 comments:

 1. லெப்ட் ரைட்டு - விட "இந்த ஆண்டின் இணையற்ற கண்டுபிடிப்பு" நல்ல ஜோக்ஸ்.

  பெண்களை இப்படி சொல்லி விட்டு கீழே படத்தில் யார்..? ராஜ்கிரண் அவர்களா...?

  பகிர்வுக்கு நன்றி...

  (த.ம. 1)

  ReplyDelete
  Replies
  1. அண்ணே எனக்கு ரொம்ப வருத்தம்ண்ணே. உலகின் தமிழினத் தலைவன் ஒருவர் மட்டும் தானே.

   Delete
  2. தங்களின் கருத்துக்கும் ஆதங்கத்திற்கும் மிக்க நன்றி மனோகர்

   Delete
  3. தவறுக்கு வருந்துகிறேன்... பெண்கள் குண்டாவதைப் பற்றி நீங்கள் எழுதியதை படித்து விட்டு அடுத்துள்ள தலைப்பைப் பார்க்காமல் அவசரத்தில் எழுதிய கருத்து... வேறு ஒன்றுமில்லை... (நல்லவேளை... நான் சென்ற தளத்தை எல்லாம், மதியம் என் சகோதரி பார்ப்பார்கள்... தகவல் சொன்ன என் தங்கைக்கு நன்றி) தமிழினத் தலைவரின் அரிய புகைப்படத்தை அறிய வைத்தமைக்கு நன்றி சார்... மறுபடியும் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி...

   Delete
  4. பரவாயில்லை தனபாலன், மன்னிப்பு கேட்பவனே மனிதன். எனக்கு எப்பொழுதும் வருத்தம் இருக்காது. ஆனால் நம்மூர் போலி தமிழினத் தலைவனை கிண்டல் செய்வது போல் உண்மையான தமிழினத் தலைவனை கேலி செய்து விட்டீர்களோ என்று எண்ணி விட்டேன். அதனால் தான் என் வருத்தத்தை பதிவு செய்தேன். பரவாயில்லை. விட்டு விடுங்கள்.

   Delete
 2. நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்
  ஒரு காலில் ஓலையையும் மறுகாலில் சேலையையும்
  கட்டிவைத்து ஓலைக்கால் சேலைக்கால் என
  மாறி மாறிச் சொல்லி பின் பழகியதும் லெப்ட் ரைட் எனச்
  சொல்லிப் பழக்குவார்களாம்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. புதிய விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள் நன்றி ரமணி ஐயா

   Delete
 3. //பொற்சிலை - வீங்கின மலை//

  //ஏரியா போற்றும் ஆண்ட்டி//

  சூப்பர் பாஸ்! என்னா தமிழ், என்ன உவமானம்!!!
  கலக்கல்ஸ்!! :-)

  ReplyDelete
 4. //வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.//

  சூப்பர்... என்னம்மா யோசிச்சிருக்கானுக... அப்புறம் அவருக்கு இன்னும் மிலிட்டிரி புல் வருதா தலை... கேட்டு வைச்சிக்குங்க...


  //பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள்.//

  என்ன செய்வது 100ல 80 பேருக்கு இப்படித்தான் புஷ்ன்னு ஆகிடுறாங்க.. ஆனால் அந்த மீதி இருபது இன்னும் சிக்குன்னுதாங்க இருக்கு...


  //பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். //

  உண்மைதான் நண்பா... ஆனால் தினமும் பதிவெழுதும் போது உள்ள சந்தோசம் அப்ப அப்ப எழுதும் போது இல்லை...

  ReplyDelete
  Replies
  1. நீங்க சொல்றது சரிதான் சதீஷ்.

   Delete
 5. இந்த ஆண்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு ஜூப்பரு....

  #ரூம் போட்டு யோசிப்பாங்களோ?

  ReplyDelete
  Replies
  1. ரூமுக்கு வாடகை கேப்பானுங்களோ

   Delete
 6. //தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.//

  அது ஒரு வரம். :)

  ReplyDelete
  Replies
  1. எழுதுபவர்களுக்கு வரம்னா படிப்பவர்களுக்கு சாபமா சிவா?

   Delete
 7. thanks for your comment ttpian

  ReplyDelete
 8. <<<
  இந்த ஆண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்பு
  >>>

  எப்பிடி பாஸ் ரூம் போட்டு யோசிப்பாங்களோ! (TM 13)

  ReplyDelete
  Replies
  1. சரக்கு போட்டும் யோசிச்சிருப்பானுங்க போல.

   Delete
 9. பதிவெழுதுவது பற்றி உங்கள் கருத்துதான் நமக்கும்

  ReplyDelete
  Replies
  1. சேம் பிளட் இல்லையா கஸாலி.

   Delete
 10. //வெறும் காலு, வைக்கக் காலு, வெறும் காலு, வைக்கக் காலு.//  இதை நான் வேறு மாதிரி கேள்விப்பட்டிருக்கிறேன்.  ஒரு காலில் சீலைக் கிழிசலையும் மற்றொரு காலில் ஓலைத் துண்டையும் கட்டி விட்டு சீலைக்கால், ஓலைக்கால் என்று சொல்வார்களாம்.  

  //சத்தியமா டபுள் மீனிங்ல பேசலண்ணா// சரீ சரீ

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு நன்றி அமர பாரதி

   Delete
 11. சிறப்பான ஜோக்! அரிய புகைப்படம்! பெண்கள் குண்டாவது பற்றிய ஆற்றாமை! தினம் பதிவெழுத முடியா ஆதங்கம் என பஞ்சேந்திரியா பதிவு கலக்கல்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்

   Delete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. பதிவு ரசிக்கும் படியாக உள்ளது செந்தில்

   Delete
 13. //பதிவெழுதுவது கூட புதிதாக திருமணமானதைப் போல தான் என்று நினைக்கிறேன். பதிவெழுதும் புதிதில் மிகவும் ஆர்வமாக இருக்கிறது. தினமும் பதிவெழுதுவது பிடிக்கிறது. பிறகு மோகம் குறைந்து வாரம் ஒரு முறையோ அல்லது இருமுறையோ தான் எழுத முடிகிறது//

  அதுக்காச்சு மருந்து மாத்திரை இருக்கு. இதுக்கு??? நமக்கெல்லாம் மாதம் இரண்டு மூன்று முறை முயற்சி பண்ணுவதே .. சே ... பதிவெழுதவே மூச்சு வாங்குது. ( ஹையய்யோ :P )

  ReplyDelete
  Replies
  1. சிட்டுக்குருவி லேகியம் முயற்சித்துப் பாருங்கள் தலைவரே

   Delete
 14. சுவாரஷ்யமான பதிவு செந்தில்,,

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரியாஸ்

   Delete
 15. வாரம் ஒரு பதிவு போட்டாலும் தரமான பதிவு போட்டா போதும் செந்தில்!தினம் போட்டு சாதிக்கப் போவது ஒன்றும் இல்லை ஆத்ம திருப்தி மட்டுமே!
  தமிழினத் தலைவன் பிரபாகரன் மட்டுமே!

  ReplyDelete
  Replies
  1. தரம் என்பதை முடிவு செய்ய வேண்டியவர் எழுதுபவரா, படிப்பவரா அதை சொல்லலையே நீங்க?

   Delete
 16. ஒலக்காலு...சீலக்காலு ..இது பிரம்மாதமான பொருத்தமான வார்த்தியாகும்.எல்லை பாதுகாப்பு படையில் பயிற்சி பள்ளியில் இருக்கும் நான் அப்பப்ப இப்படி சொல்லி செய்து காட்டியதுண்டு.சுவராஸ்யமான பதிவு...அப்படியே நம்ம வலைபூக்கு வருக என்று இங்கு விளம்பரம் செய்கிறேன்...இன்றைய பதிவு வீடுகள் விற்பனைக்கு...பிராமணர்களுக்கு மட்டும்.. http://tamilmottu.blogspot.com/2012/07/blog-post_25.html

  ReplyDelete
  Replies
  1. தங்களின் தகவலுக்கு நன்றி சுரேஷ்

   Delete
 17. //பருவத்தில் பொற்சிலையாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு வீங்கின மலையாகி விடுகிறார்கள். அது போலவே இளம்வயதில் மிகச்சுமாராக ஒல்லியாக இருக்கும் பெண்கள் திருமணத்திற்கு பிறகு மெருகேறி ஏரியா போற்றும் ஆண்ட்டியாகி விடுகிறார்கள். சிலர் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். என்ன உலகமடா இது.//

  இதைத்தான் முன் முப்பது (வயது) வாழ்ந்தா... பின் முப்பது (வயது)தாழும். முன் முப்பது (வயது) தாழ்ந்தா... பின் முப்பது (வயது)வாழும்...ன்னு முன்னாடியே சொல்லி வச்சுருக்காங்க... :))

  ReplyDelete
  Replies
  1. அட அட அடடா என்னா தத்துவம், என்னா தத்துவம். வாழ்க துபாய்ராஜா

   Delete
 18. //முன்பெல்லாம் தினமும் பதிவெழுதா விட்டால் ஏதோ குற்றம் செய்து விட்டதாகவே மனதை உறுத்தும். இப்பொழுது வாரம் ஒருமுறை பதிவெழுதவே மிகவும் யோசிக்க வேண்டியிருக்கிறது. தினம் எழுதுபவர்களை கண்டால் இப்போதெல்லாம் ஆச்சரியமாக இருக்கிறது.//

  என்ன கொடும்மைய்யா, இதையே அப்போ நான் சொல்லி இருந்தா உனக்கு பொறாமைனுசொல்லுவீங்க:-))

  இப்பவும் படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே படம் பார்த்துட்டு விமர்சனம் எழுதுறவங்களைப்பார்த்தால் எப்படித்தான் இப்படிலாம் முடியுதோனு நினைப்பேன், அந்த நினைப்பு உங்களுக்கு வர இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்னு நினைக்கிறேன் :-))

  எனக்கு படம் ரிலீஸ் ஆன அன்னிக்கே டிக்கெட் கொடுக்க ,ஏன் பிரிவியூக்கு கூப்பிட்டு போகவும் பிரண்ட்ஸ் இருக்காங்க எனக்கு தான் டைம்மே செட் ஆக மாட்டேங்குது.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...