வடிவேலு ஏகப்பட்ட அடிவாங்கியிருக்காரே, மூன்று ஆண்டுகள் கழித்து திரும்ப வரும் போது அசத்தலான படத்துடன் தான் வருவார். எப்படியும் புலிக்கேசியை தாண்டி விடுவார் என்று தான் நினைத்தேன். ஆனால் நடந்தது என்ன, வேறென்ன எனக்கு விபத்து தான். இதுல கூடுதலா ரெண்டு பேரை அழைச்சிக்கிட்டு போய் அந்த காசும் எனக்கு தண்டம்.
மூன்று வருடம் கழித்து பார்ப்பதாலோ என்னவோ நமக்கு வடிவேலுவின் காமெடிகள் அவுட் ஆப் பேசனாக தெரிகிறது. வெறும் உடல்மொழியால் செய்யும் அலப்பறைகள் போரடிக்கின்றன.
வடிவேலு சார், மீண்டும் வந்து இருக்கீங்க, சந்தோஷம், ஆனா இந்த மாதிரி சோதனை முயற்சிகளை கைவிட்டு மீண்டும் ஜனரஞ்சகமான நகைச்சுவைக்கு வாங்க, உங்க இடம் இன்னும் நிரப்பபடாமலே இருக்கிறது. இதுபோன்ற உங்கள் பரிசோதனைக்கு நாங்கள் என்ன சோதனை எலியா.
என்பதுகளில் பிறந்தவர்கள் அனைவரும் அம்புலிமாமா புத்தகத்திலும், மற்ற கதைபுத்தகத்திலும், தாத்தா பாட்டிகள் கதையாக சொல்லியும் கேட்ட கதை தான் தெனாலிராமன். அதே கதையை அதே போல் அமெச்சூர்த்தனமாக படமாக்கி நம்மிடம் கொடுத்து இருக்கிறார்கள்.
கிராமத்திலிருந்து நகரத்திற்கு குடிபெயரும் தெனாலிராமன் அரசவையில் ஒரு அமைச்சர் பதவி காலியாக இருப்பதை அறிந்து தன் மதியூகத்தால் அந்த பதவியை அடைகிறான். ஆனால் அவன் வந்தது ஊழல் பேர்வழிகளான மற்ற மந்திரிகளுக்கு பிடிக்கவில்லை.
தந்திரம் செய்து தெனாலிராமனை அரசவையை விட்டு வெளியேற்றுகிறார்கள். பிறகு எப்படி தெனாலிராமன் அரசரை திருத்தி கெட்டவர்களிடம் இருந்து நாட்டை காப்பாற்றுகிறான் என்பது தான் படம்.
உங்களுக்கு 23ம் புலிகேசி கதையைப் போலவே இருக்குமே. அதே தான் படம் புலிக்கேசியை தழுவி எடுக்கப்பட்ட ரீமேக் தான் இந்த படம்.
வடிவேலுவுக்கு இந்த படம் தானே எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகிறது. அதனால் கொடுத்த காசை விட ரெண்டு மடங்கு அதிகமாகவே கூவுகிறார். நமக்கு தான் காது ஜவ்வு கிழிந்து தொங்குகிறது.
திரையில் உடல்மொழியாலும் வசனஉச்சரிப்பாலும் விழுந்து விழுந்து காமெடி செய்து கொண்டு இருப்பார் வடிவேலு. ஆனால் அரங்கில் மட்டும் மயான அமைதி. நான் படம் முழுவதுமே அப்படித்தான் இருந்தேன். யோசித்துப் பார்த்தால் ஒரு இடத்தில் கூட நான் சிரிக்கவேயில்லை.
பாடல்கள் எல்லாம் வேகத்தடை தான். பார்க்கும் போது சலிப்பு தட்டுகிறது.
இந்தப்படத்தின் இயக்குனர் யுவராஜ் இயக்குனர் சிம்புதேவனின் ரசிகராக இருப்பார் போல இருக்கிறது. அதனால் தான் சில சமூக கருத்துக்களை அதாவது உலகமயமாக்கல் போன்ற விஷயங்களை எடுத்து அங்கங்கே அவரைப் போலவே விரவியிருக்கிறார். ஆனால் அது பொருந்தவேயில்லை.
நாயகி அழகாக மட்டும் இருந்தால் போதுமா. ஒரு படம் எடுக்கும் போது நாயகிக்கு வசனம் சொல்லிக் கொடுத்து உச்சரிக்க சொல்லும் அளவுக்கு கூட உழைப்பில்லையென்றால் எப்படி. ப்ராம்ட் கூட ஓழுங்கில்லாமல் அவர் ஏதோ ஒன்றுக்காக வாயசைக்கிறார். வசனம் ஏதோ ஒன்று வருகிறது. அடப் போங்கப்பா.
படத்தில் மெச்சக்கூடிய விஷயங்கள், ஆர்ட் டைரக்ஷனும், ஒளிப்பதிவும் தான், கச்சிதமாக இருக்கிறது. மற்றபடி உங்களை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளரை மட்டுமல்ல, ஒரு டிக்கெட்டை 120ஓவா கொடுத்து வாங்கிப் பார்க்கும் என்னைப் போன்ற ரசிகர்களையும் இப்படி அம்போன்னு விட்டுடீங்களே அப்பு.
தெனாலிராமன் - பழைய மொந்தை ரொம்ப புளிச்ச பழைய கள்ளு
ஆரூர் மூனா
இயக்குனர் சிம்புதேவன் ???
ReplyDeleteஅதுக்கு அர்த்தம் அப்படியில்லைங்க. இந்த படத்தின் இயக்குனர் சிமபுதேவனின் ரசிகரா இருப்பார் என்று தான் சொன்னேன்
Deleteசிவாஜி,என்டிஆர் நடித்த தெனாலிராமன் பார்த்திருக்கிறீர்களா?
ReplyDeleteபார்த்திருக்கிறேன் பித்தன் ஐயா, இதுவும் அதுவும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம்.
Deleteஓ...ஓகே. விளக்கத்துக்கும், பலத்த சேதத்தில் இருந்து காப்பாதியதுக்கும் நன்றி. :)
Deleteஅடங்கொப்புரானே..அப்போ படம் புட்டுக்குமா..?
ReplyDeleteputtu kichi
Deleteதிரை உலகில் செகண்ட் இன்னிங்க்ஸ் பெரும்பாலானோருக்கு வெற்றிகரமாக அமைந்ததில்லை . நாகேஷ் மனோரமா போல குண சித்திர வேடங்களில் பரிமளிக்க வாய்ப்பு இருக்கிறது . பார்க்கலாம்
ReplyDeleteஅட அப்ப ஊத்திகிச்சா....சரி அடுத்து பிரபுதேவா...வடிவேலு...ஏ.ஆர்.ரஹ்மான் என்று மூன்று புயல் தாக்க போகுதாம் கண்டிப்பாக அந்த புயலில் கரை ஏறிடுவார்...
ReplyDeleteநல்ல வேளை நாங்கள் தப்பித்து விட்டோம்
ReplyDelete//எண்பதுகளில் பிறந்தவர்கள் அனைவரும் அம்புலிமாமா புத்தகத்திலும், மற்ற கதைபுத்தகத்திலும், தாத்தா பாட்டிகள் கதையாக சொல்லியும் கேட்ட கதை தான் தெனாலிராமன்.//
ReplyDeleteஅப்போ என்னை மாதிரி கொழந்தைகளுக்கு புடிக்குமாண்ணே?? :)
செந்தில்ஜி நீங்க ஒரு எல்லைச்சாமி மாதிரி. எங்களைக் காப்பாத்தி விட்டிடுறீங்க.
ReplyDeleteஐயோ!!!!
ReplyDeleteநன்றி... பார்ப்பதற்கு எண்ணமே இல்லை...
ReplyDeleteதேறாதுன்னு தெரிஞ்சிதான், தெலுங்கு அமைப்பை வைத்து களமாடி, விஸ்வரூப வெற்றிக்கு முயற்சி செய்துள்ளார் தெனாலி.
ReplyDeleteசார் விமர்சனம் அருமை படிப்பு வெலை அதிகமாக இருந்ததால் இந்த பக்கம் வரமுடியவில்லை இந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லையென்றாலும் தொடர்ந்து தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவையாலனாக இருக்க வென்டும் என்பதே நம் ஆசை.
ReplyDeleteமேலும் ஒரு தகவல் வேன்டும் சார் எங்கல் ஊரில் ஒரு இளைஞர் நற்பனி மன்றம் ஆரம்பித்திருக்கிறோம் அதை எங்கு எப்படி பதிவு செய்ய வேன்டும் என்று தெரியவில்லை எங்களுக்கு உங்களால் முடிந்த தகவலை தெரிவிக்குமாறு அன்போடு கேட்கிரேன் ஏதாவது இனையதளம்,தொலைபேசி இருந்தாலும் சொல்லவும் நன்றி my email: apsprabu1@gmail.com