சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Friday, May 27, 2011

கடவுள் கொடுத்த மனித வாழ்க்கை - கொடுமைடா சாமீ

ஒரு நாள் கடவுள் தீவிரமான சிந்தனையில் இருந்தார் ,

பிறகு நாய்யை படைத்து , அதற்கு பூலோகத்தில் வாழ வழிமுறைகள் சொன்னார்.

நாயிடம் பார்த்து உனக்கு இருபது வருஷம் வாழ்க்கை தருகிறேன்,

வீதியில் போக வர இருக்கும் எல்லாவற்றையும் ப் பார்த்துக் குரைத்துக் கொண்டு இருக்க வேண்டும் , அது தான் உன் வேலை என சொன்னார்.

நாய் பார்த்தது இந்த வேலை நம்மால் முடியாது,

ஒரு பத்து வருஷம் குறைத்துக் கொள்ளுங்கள் , என வேண்டியது ,

சரி பத்து வருஷம் நீ இரு கூறி பூலோகத்திற்கு அனுப்பினார்.

மற்றொரு நாள் ஒரு குரங்கை படைத்து

உனக்கு இருபது வருஷம் தருகிறேன் , நீ பூலோகத்தில்

இருந்து சேஷ்டைகள் எல்லாம் பண்ணிக்கொண்டு இருக்கவும் என்றார்.

அதற்கு குரங்கு என்னால் இருபது வருஷங்கள் எல்லாம் இருக்க முடியாது என்று கூறி வேண்டுமானால் நான் பத்து வருஷம் இருக்கிறேன் மீதி

பத்து வருஷங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றது.

சரி அப்படியே ஆகட்டும் , நீ பூலோகத்திற்கு போய் வா என அனுப்பினார்.

வேறு ஒரு நாள் பசுவை படைத்து , உனக்கு ஆறுவது வருஷங்கள் தருகிறேன் , நீ போய் வெயில் இருந்து , வயலில் வேலை செய்து , புல்வெளியில் மேய்ந்து ,பால் குடுத்து குடியானவனுக்கு துணையாக இருக்கவும் என பணிந்தார்

ஐயோ நம்மால் ஆறுவது வருஷங்கள் இருக்கமுடியாது

வேணுமானால் இருவது வருஷங்கள் இருக்கிறேன் ,

மீதி நாற்பது வருஷங்களை நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என பசு சொன்னது.

சரி நீ பூலோகத்திற்கு போய் வா என கடவுள் அனுப்பினார்.

பிறகு மனிதனை படைத்து நீ நன்றாக சாப்பிட்டு , தூங்கி, விளையாடி , கல்யாணம் பண்ணி க் கொண்டு ,சுகமாக இரு ,

உனக்கு இருபது வருஷம் வாழ தருகிறேன் என கடவுள் சொன்னார்.

அதற்கு மனிதன் எனக்கு மேலும் வாழ்க்கை அதிகமாக கொடுக்க வேண்டும் , நாய் , குரங்கு மற்றும் பசுவின் வாழ்க்கையில் மீதி உள்ளதே அதை எனக்கு தரவும் என வேண்டினான் .

கடவுளும் சரி அப்படியே ஆகட்டும் என சொல்லி மனிதனை பூலோகத்திற்கு அனுப்பினார்.

அதனால் தான் என்னவோ ,

மனிதன் தன் வாழ்நாளில் முதல் இருவது வருஷம் நன்றாக சாப்பிட்டு விட்டு, ஊர் சுற்றி கொண்டு , கல்யாணம் பண்ணிக் கொண்டு சுகமாக இருக்கிறான்.

பிறகு பசுவிடமிருந்து பெற்ற நாற்பது வருஷங்களில் ஒயாமல் வெயிலில் ஒடியாடி உழைத்து, குடும்பத்தை காப்பாற்று கிறான்.

பின் குரங்கிடம் பெற்ற பத்து வருஷங்களில் தன் பேரன், பேத்திகளிடம் குரங்கு சேஷ்டைகள் பண்ணிக்கொண்டு இருக்கிறான்.

பின் தன் அந்திம காலத்தில் நாயிடம் பெற்ற பத்து வருஷங்களில் வீட்டு வாசலில் உட்கார்ந்துக் கொண்டு போக வர இருக்கும் மக்களிடம் வம்பு பேசிக் கொண்டு இருக்கிறான்.

இது தான் மனித வாழ்க்கை போல இருக்கு !.

இணையத்தில் எங்கோ படித்தது.

ஆரூர் முனா செந்திலு



Tuesday, May 17, 2011

கொழுக்கட்டைச் சாமியார் கதை

கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி இன்று சிற்றூர்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ஒன்றில்தான் கொழுக்கட்டைச் சாமியார் மடம் இருக்கிறது. அவருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

பொதுவாக, மக்கள் ஒரு பழமொழி சொல்லுவார்கள். நதியின் வரலாற்றையும் சாமியாரின் வரலாற்றையும் விசாரிக்கக் கூடாது என்று. அப்படியே விசாரித்தாலும் கிடைப்பது உண்மையா என்று யாருக்குத் தெரியும்! ஆனால் கொழுக்கட்டைச் சாமியாருக்கு ஏன் அப்படியொரு பெயர் வந்தது என்று ஓர் உள்ளூர் அம்மாள் மூலம் எனக்குத் தெரிய வந்தது. ஆஜானுபாகுவான அவர் வடநாட்டிலிருந்து வந்தவராம். வந்தபொழுது, அவருக்குத் தமிழ் தெரிந்திருக்கவில்லை. வந்தபிறகும் தமிழை முழுமையாகத் தெரிந்துகொள்ளும் விருப்பமும் இல்லை. இந்தச் சனங்களுக்கு 'கொஞ்சம் கொஞ்சம்' தமிழ் தெரிந்தால் போதும் என்று கொழுக்கட்டைச் சாமியார் கணக்குப் போட்டார். நம்ம சனங்களைப் பற்றி அவர் கணக்கு இதில் மட்டுமல்ல, பலவற்றிலும் தவறானது பற்றி இந்தக் கதை, தான் முடிவதற்கு முன் வாக்குமூலம்போல் சொல்லிவிடப் போகிறது... அப்பொழுதுதான் தெரியும், நம்ம தமிழ்ச் சனத்தை ஏமாத்த நினைக்கிறவங்க கதி என்ன ஆகும் என்பது. சும்மாவா பாடினாரு நம்ம எம்ஜியாரு? "தவறு என்பது தவறிச் செய்வது / தப்பு என்பது தெரிந்து செய்வது / தவறு செய்தவன் திருந்தப் பார்க்கணும் / தப்பு செய்தவன் வருந்தி யாகணும்"ன்னு.. கொ.சா. திருந்தலை..வருந்தவுமில்லை.. கடைசி' என்ன ஆச்சு?

***

அந்த ஊருக்குக் கையில் காலணாகூட இல்லாமல் அவர் வந்தார்.

அந்தக் காலத்திய மரக்காணம் சாலையான இந்தக் காலத்திய கிழக்குக் கடற்கரைச் சாலையில், இப்பொழுது புகழ்பெற்றிருக்கும் 'புரோட்டா'க் கடைபற்றி ஒருவரும் கனவுகூடக் கண்டிருக்க மாட்டார்கள். தற்காலம் பிரான்சிலிருந்து வருபவர்கள் ''மெனக்கெட்டுக் கார் போட்டுக் கொண்டு போய்," குறைந்த அளவு பத்துப் புரோட்டாவாவது குருமா மற்றும் பட்டாணிக் கலவையோடு காலிபண்ணி வருகிறார்கள். அதே இடத்தில் - அன்று, கொழுக்கட்டைகளைக் கூடையிலேந்திக்கொண்டுபோய் மரத்தடியில் வைத்து விற்றுப் பிழைத்திருந்தாள் ஒரு பாட்டி.

வியாபாரத்துக்குப் போவதற்காக கொழுக்கட்டை சுட்டுவிட்டு குடிசைக்கு வெளியில் வந்தாள் அவள். அங்கே பசியோடு நின்றிருந்தவர், மொழி தெரியாததால், அவர் அந்தப் பாட்டிமுன் கையை ஏந்தினார். பாட்டி உடனே வீட்டினுள் ஓடி("ஓடி" என்பது, எம்.கே.டி. பாகவதர் காலப் படங்களை நினைவூட்டவேண்டும்; இல்லையென்றால், அவ்வாறு நினைவூட்டப் பெறாதவர்கள், சென்ற நூற்றாண்டின் இறுதியில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்!) சூடான கொழுக்கட்டைகளை ஒரு வாழைநறுக்கில் இட்டுக் கொண்டுவந்து அந்த வடநாட்டுக்காரரின் சிவப்புக் கைகளில் தர, அவர் கண்களில் கண்ணீர் துளிர்த்தது.(ரொம்பவும் சூடோ?) நன்றியுணர்வு என்று அந்தப் பாட்டி எடுத்துக் கொண்டாள். சாப்பிட்டதும், அவருக்குக் கொழுக்கட்டை மிகவும் பிடித்துப்போனது. பாட்டியிடம் அந்தப் பலகாரம் என்ன என்று இந்தியில் கேட்டார். கொடுத்த பலகாரம் பற்றிக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள மொழி தேவையா என்ன?(பிரகாஷ்ராஜ் கவனிக்க) 'கொழுக்கட்டை' என்று அழுத்தந் திருத்தமாகச் சொன்னாள் பாட்டி. அவரே அப்படித்தான் இருந்தார் என்பது, வேறு செய்தி. 'கொல்லுக்கட்டாய்' என்று உரக்கச் சொல்லிப் பார்த்தவர், பாட்டியால் திருத்தப்பட்டு 'கொல்லுக்கட்டை' 'கொள்ளுக்கட்டை' என்றெல்லாம் சொல்லி, மீண்டும் மீண்டும் திருத்தப்பட்டு கொழுக்கட்டை என்று சரியாகச் சொல்ல அரைமணி நேரமாவது ஆகியிருக்கும். இதன் விளைவாக, அந்த ஊரிலேயே தங்கிக் கொண்டு, அவர் திறமையாக 'மேஜிக்' செய்ய ஆரம்பித்து, சனங்களை அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்து மட்டுமல்லாமல் அருகிலுள்ள பட்டணத்திலிருந்தும் ஈர்க்கத் தொடங்கிய காலகட்டத்தில், முதல் 'சிஷ்யை'(தலைமைச் சிஷ்யை)யாக அந்தப் பாட்டிதான் ஆனார்.('ஆனாள்' என்பது, 'ஆனார்' ஆவது.. இப்படித்தான்)

தலைமைச் சிஷ்யையே அனுபவசாலி ஆனதால், ஒரு கொழுக்கட்டை விற்று வந்த காசுபோல் பலமடங்கு ஒரு சீடரைச் சேர்த்துக் கொள்வதில் தேறியது. அப்புறமென்ன? மடம் வந்தது. மண்டபம் வந்தது. சீடகோடிகள் தங்குவதற்குப் பெரிய தங்குமிடம் வந்தது. யாருக்கும் தெரியாமல் இன்னும் என்னென்னவோ வந்தன.

முன்பே சொன்னதுபோல், 'மொழி'யைச் சிக்கனமாகப் பயன்படுத்தி அருள்வாக்கும் சொல்லத் தொடங்கினார் அவர். அவர் சொல்லும் அருள்வாக்குகளில் கட்டாயம் கொழுக்கட்டை இடம்பெறும். அதை வைத்தே மக்களை - அவரவர்கள் மனதில் இருக்கும் சேதிகளைத் தான் சொன்னதாக அர்த்தப் படுத்திக் கொள்ளச் செய்வார் சாமியார். அப்படியே அவர்கள் குழம்பினாலும், பக்கத்தில் இருக்கும் 'சிஷ்ய'கோடிகள் ஒவ்வொன்றுக்கும் ஒரு 'வியாக்கியானம்' எடுத்துவிட்டு அசத்துவார்கள். வந்த ஒருவர்கூட அதிருப்தியாகத் திரும்பிச் சென்றதில்லை என்றால் பாருங்களேன்! கொழுக்கட்டைச் சாமியார் என்று அவர் அன்புடன் அழைக்கப்படுவதற்குக் காரணங்களான 'அருள் வாக்கு'கள் சில.........

"சாமீய்......எம் புள்ளை கெட்ட சகவாசத்தால சீர்கெட்டு திரியிறான் சாமீய்.. எப்பத்தான் அவன் திருந்துவான்?........"

"திருந்துவாம்'மா.. திருந்துவான்..கொழுக்கட்டை நல்லா வேந்ததும் திருந்திடுவான்...போ..போ.. காசுபோட்டுடு.."

"சாமி என்ன சொல்றாருங்க?......என்னமோ கொழுக்கட்ட... அத்த இத்த'ன்னுட்டு.."

"அதுவா..ஒனக்குப் பக்குவம் இல்ல.. அதான் சாமி வெளக்கமாச் சொல்றது புரியல்ல..கொழுக்கட்டை நல்லா வேந்தாக்காத்தான் நீ அத்தத் தின்னுவே! அத்தப்போலவே ஒம் பையனுக்கு கிரகங்கள்'ல்லாம் கூடி நன்மை செய்யற காலம் வரப்போகுது.. அப்ப அவன் திருந்தீடுவான்'கிறாரு சாமி.. சரி..சரி அந்த உண்டி' தாரளமாப் போட்டுட்டுப் போ.. எல்லாம் நல்லா நடக்கும் போ.." (இது பக்கத்தில் உள்ள சீடர் கூற்று)

விளக்கவே முடியாத மாதிரி 'சாமி' சொல்லிடுச்சுனா?... கொழுக்கட்டைப் பாட்டிக்கு ஆள் போகும். கொழுக்கட்டை சம்பந்தமான அத்தனை தொழில் நுணுக்கங்களையும் அறிந்தவரல்லவா தலைமைச் சிஷ்யையான அவர்? அப்படித்தான் ஒருநாள் ஆனது...

தனக்குப் பிள்ளையே பிறக்கவில்லை என்று முறையிட்ட, பட்டணத்திலிருந்து வந்த பணக்காரப்பெண் ஒருவரிடம் - ''ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா இப்'டியா இருப்ப....?" என்று கொழுக்கட்டை சாமியார் சொல்ல, பட்டணத்துப் பணக்காரப்பெண் அவர் 'வாக்கை' 'அசிங்கமாக'ப் புரிந்துகொண்டு அழ ஆரம்பிக்க, ஆள் போனது. ஓடி வந்தார் மேனாள் கொ. பாட்டி மற்றும் .சிஷ்யை. ''அட, என்னாத்துக்கும்மா அழற..சாமியார் அப்படியென்ன வாக்குச் சொல்லிப் போட்டாரு?" என்று கேட்க, ..பெண் அந்த வாக்கைத் தயங்கித் தயங்கிச் சொல்ல, விபரீதம் புரிந்துகொண்டு, சூழ்நிலையை உடனடியாக மாற்றும் விதத்தில் "!'வென்று உரக்கச் சிரித்து, அதே சமயம், சாமியாருக்குப் பக்கத்திலிருந்த சிஷ்யர்களை "சமாளிக்கத் தெரியாத மடையன்'களா" என்று லேசர் பார்வையில் முறைத்துப் பாட்டி சொன்னதாவது: "அட என்னம்மா..சாதாரணமான விசயம் புரிஞ்சிக்காம..பட்டணத்துல பெறந்து நாலு எழுத்துப் படிச்சுட்டா சாமி வாக்கு விளங்கிடுமா...(..பெண் முகத்தில் நம்பிக்கை - இலேசான புன்முறுவல்...இந்த 'சிக்னல்' போதாதா பாட்டிக்கு?).. நம்பணும்'மா, நம்பணும்..நம்பனவங்களுக்குத்தான்நடராசன்...நம்பாதவங்களுக்கு?..(மறந்தே போனது!) சரி..சரி அத்த விடு.. சாமி சொல்லுது.. "ஒழுங்கா மொறையா கொழுக்கட்டை தின்னா" - அப்படின்னா இன்னா தெரியுமா..(பாட்டி மூளையில் பளீர் வெளிச்சம், டிடர்ஜெண்ட் விளம்பரத்தில் வரும் அடுத்த வீட்டு ஆண் சட்டையைப் போல)ஆங்.. ஒவ்வொரு செவ்வா வெள்ளியும் எண்ணத் தேச்சு முழுவோணும்.. கோயிலுக்குப்போய் அரச மரத்த அம்பத்தியோரு தடவை 'கொழந்த பொறக்கணும்'னு தெடமா வேண்டிக்கிட்டு சுத்திச்சுத்தி வரணும்.. குலதெய்வத்துக்கு நேந்துக்கோணும்.. ஏழ'பாழகளுக்கு அன்னதானம் பண்ணோணும்.. இத்தத்தான் சாமியார் 'சூசகமா'ச் சொன்னா புரிஞ்சுக்காம..அவர் பேரே கொழுக்கட்டைச் சாமி..பின்ன எப்படிச் சொல்வாருனு நெனைக்கிறே, நீ போயி........"

நன்றியுடன் சிரித்த அந்தப் பட்டணத்துப் பணக்காரப் பெண், ஒரு நோட்டுக்கற்றையை உண்டியில் திணித்துப்போட்டுவிட்டு, கொ.சாமியார் முன் விழுந்து வணங்கி, தன்மேல் அன்புபூண்டு "உரிய" விளக்கம் தந்த தலமைச் சிஷ்யையின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டு காருக்குச் செல்ல, அங்குள்ளோர் அனைவரும் ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்கள். அப்புறம் கொழுக்கட்டைப் பாட்டி கைகளால் அவர்கள் மொத்துப் பட்டது கிளைக்கதை.

இப்படியாக நாள்கள் இனிதே போக, சாமியாருக்கு திடீரென்று கிறுக்குப் பிடித்தது. மண்டபத்தின் சுவர்மேல் ஒருவர் கைவைத்தால் போதும். ஓடிவந்து, 'என்னோட கொழுக்கட்டை!" என்று கூவி அந்த ஆள் சுவர்மேலிருக்கும் தன் கையை எடுக்கும் வரை கலாட்டா பண்ணிவிடுவார். இன்னும் இதுபோல எத்தனையோ தலைவலிகளைக் கொடுக்கத் தொடங்கிய அவர், படிப்படியாக வளர்ந்து மண்டையிடி கொடுக்கவும் தொடங்கினார். தன் சிஷ்யகோடிகளையும் ஏன் தலைமைச் சிஷ்யையும்கூட, "இதெலாம் என் கொழுக்கட்டை.. எல்லாம் வெளிய போங்க!" என்று மூர்க்கமாகத் தாக்கத் தொடங்கவே, அவர்களெல்லாம் கூடி ஒரு தீர்மானத்துக்கு வந்தார்கள்.

அடுத்த நாள் விடியலுக்கு முன்னால்.. மத்திய அரசுப் பணியிலுள்ள கொ.சா. சீடர் ஒருவர் வந்து என்னை அவசர அவசரமாக அழைத்துச் சென்றார். விவரம் கேட்ட என்னிடம் மூச்சிறைக்க "கொழுக்கட்டை சாமி வேந்துடுச்சு!"(அதாவது முக்தி...கட்டாய ஓய்வோ?!) என்றார். போனேன். மடத்துக்குள்ளோ, மண்டபத்திலோ வைக்காமல். வெளியில் இருந்த வயலருகே அவரைக் கட்டிலின் மேல் வெள்ளைத் துணியொன்றில் போர்த்து(கட்டி!) வைத்திருந்தார்கள். 'அதன்' முன் நின்று கைக்குப்பி வணங்கினேன். கூப்பிடுவதுபோல் இருந்தது. பக்கத்தில் சென்றேன். அந்த மூட்டைக்குள்ளிருந்து "நா'ந்தான்..கொழுக்கட்டை......" என்று ஒரு தீனக்குரல். "பாவிகளா! என்ன செய்தீர்கள்?" என்பதற்குள் அங்கு திரண்டிருந்த சிஷ்யகோ(கே)டிகள் என்னை முரட்டுத் தனமாகத் தள்ளிவிட்டு, கொழுக்கட்டைப் பாட்டி/தலைமை சிஷ்யையின் ஆணையேற்று, அந்தக் கட்டிலோடு அவரைக் கட்டாய சமாதியாக்க(உயிரோடு புதைக்க) எடுத்துச் சென்றார்கள். நொந்துபோய் அங்கிருந்து நான் அகல, அம்மாள் ஒருவர் ஓடிவந்து தடுத்து, சாமியார் சமாதியானதை முன்னிட்டு, கொழுக்கட்டை வினியோகம் நடக்கிறது என்று சொல்லி வாங்கிச் சொல்லுமாறு பணித்தார். போய் வரிசையில் நின்று வாங்கினேன், வாழைநறுக்கில் ஒரு பெரிய கொழுக்கட்டையை வைத்துக் கொடுத்தார்கள். வரிசையை விட்டு வெளியே வந்தேன். அங்கு ஓர் உருவம் விரைவாக என்னை நோக்கி வரவே அருகில் பார்க்க, அதிர்ந்தேன். தலைமைச் சிஷ்யை, தன் 'கோலத்தை' மாற்றிக் கொண்டு, பழைய கொழுக்கட்டைப் பாட்டி ஆகியிருந்தார்கள். என்னருகில் வந்து, காதோடு சொன்னார்கள். "அப்பேன்! ('அப்பன்' என்னும் சொல்லின் திரிபு).. அத்தத் துன்னுடாதே..அது வேகாத கொழுக்கட்டையாக்கும்.." என்று சொல்லிச் சிரித்தார்கள்..சிரித்துக் கொண்டே இருந்தார்கள்..

**

காலை வெயில் உக்கிரமாக முகத்தில் அடிக்க, திடுக்கிட்டு எழுந்தேன்.

சந்தேகம்.

"நேற்று ராத்திரி ரொம்ப 'லேட்'டா பொங்கல்தானே சாப்பிட்டேன்.. ஏன் இந்தக் கனவு வந்தது?"

"கனவுகள், இரவு உண்ணும் உணவுகளைப் பொருத்துத்தான்('ரு' சரிதானா, சர்சேலில் வாழும் 'புதுவை எழில்'?..) வேறுபடுகின்றன" என்று தீர்க்கமாகத் தீர்மானித்திருக்கும் துணைவியாரிடம் இனிமேல்தான் இந்தக் கனவு பற்றிச் சொல்ல வேண்டும்...............

*

பின்குறிப்பு:

இந்தக் கதையில் அடைப்புக் குறிகளுக்குள் பல சேதிகளைப் போட முதலில் நான் விரும்பவில்லை. நீரோட்டமான வாசிப்புக்கு அது தடை ஆகும் என்றுதான் நம்பினேன். ஆனால், "இவன் ப்ளாக் படிப்பதற்கே மொக்கையா இருக்கும் இதில் அடிக்குறிப்பா என்று யாரும் எரிச்சல் அடையக் கூடாது என்றே இந்தக் 'குறைந்தபட்ச இம்சை'யைக் கொடுத்துள்ளேன். வாசித்தவர்கள் பொறுத்தருள்க.



ஆரூர் முனா செந்திலு



Monday, May 16, 2011

பரிட்சையிலிருந்து தப்பிக்கும் வழி

படு புத்திசாலிகலான 4 எம்பிஏ படிக்கும் நண்பர்கள் இறுதித்தேர்வுக்கு சற்று முன்னர் நன்றாக குடித்துவிட்டதானால் படிக்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் துயரம் மிக அவர்கள் யோசித்து எப்படி தேர்வை 4 பேருக்காக மட்டும் தள்ளிப்போட முடியும் என யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

கை கால்கள், உடை எல்லாவற்றிலும் கிரீஸ், எண்ணெய் தடவிக்கொண்டு, தலை முடியை கலைத்துக்கொண்டு பரிட்சை ஹாலுக்குள் நுழைந்தார்கள். 'அய்யோ HOD', என்று கதறி HOD முன்னர், தங்கள் சோகக்கதையைச் சொன்னார்கள். நேற்று இரவு நகரத்திலிருந்து காரில் வரும்போது, வனாந்தரத்தில், கார் டயர் பஞ்சராகி எந்தவித உதவியுமின்றி பல முயற்சிகளுக்குபின்னர் வெறும் காலில் நடந்து இப்போதுதான் வந்து சேர்வதாக புலம்பினார்கள். சில நாட்களுக்குப்பின்னர் தாங்கள் பரிட்சை எழுதுவதாக கேட்டுக்கொண்டார்கள். HOD, சரி என்று ஒப்புக்கொண்டு 3 நாட்களுக்குப்பின்னர் பரிட்சை என்று சொன்னார்.

நண்பர்கள் விழுந்து விழுந்து படித்து மூன்று நாட்களுக்குப்பின்னர் HOD அறைக்கு சென்றார்கள். இது அசாதாரணமான கோரிக்கை ஆதலால், பரிட்சையும் அசாதரணமாகத்தான் இருக்கும் எனக் கூறி, நான்கு மாணவர்களுக்கும் 4 வெவ்வேறு பரிட்சை அறைகளில், ஒரே கேள்வித்தாளை கொடுத்து பரிட்சை வைக்கப்போவதாகச் சொன்னார்.

கேள்வித்தாளில் முதல் கேள்வியாக 5 மதிப்பெண்களுக்கு ஒரு எளிய கேள்வி இருந்தது. மாணவர்கள் வெகு எளிதில் அதனை முடித்துவிட்டார்கள். அடுத்து 95 மதிப்பெண்ணுக்கு ஒரு கேள்வி இருந்தது

'எந்த டயர் ? '


ஆரூர் முனா செந்திலு






Saturday, May 14, 2011

காங். வீழ்ச்சி.. தமிழின விடியலுக்கான அறிகுறி:சீமான்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசின் வீழ்ச்சி, தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி' என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த 2011 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் விரோத திமுக - காங்கிரசுக் கூட்டணி படுதோல்வியடைந்துள்ளது. பணபலம், அதிகார பலம், இவற்றுக்கு பணியமாட்டோம் - வாக்கு என்ற ஆயுதத்தால் அவற்றை வீழ்த்துவோம் என்று மெய்ப்பித்த எம் தமிழ்ச் சொந்தங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வரலாறு காணாத வகையில் ஊழல், வன்முறை, குடும்ப ஆதிக்கம், அராஜகம், மணற்கொள்ளை, திரைத்துறையில் ஏகபோகம், நிர்வாகச் சீர்கேடு, இனத் துரோகம் ஆகியவற்றில் மலைக்கத்தகும் மலையாய் எழுந்து நின்றது காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சி. அந்த மலையை சுக்குசுக்காய் உடைத்து தரை மட்டமாக்கியிருக்கிறார்கள் தமிழர்கள்.

மக்களின் எதிர்ப்புக்கு சிறிதளவும் மதிப்பளிக்காமல் தான் பெற்ற மக்களின் அதிகாரத்துக்காகவே ஆட்சி நடத்தினார் கருணாநிதி.

மக்கள் எதிர்ப்பையும், அரசியல் கட்சித் தலைவர்களின் எதிர்ப்பையும் அடக்குமுறைச் சட்டங்கள் மூலமும் காவல் துறையின் ஒடுக்குமுறைகள் மூலமும் பொது அரங்குக்குக் கொண்டு வராமல் செய்தார்.

இதன் பின்னும், ஓயாத திமுக - காங்கிரஸ் அரசுகள் ஈழத்தில் எம் மக்களை பல்லாயிரக்கணக்கில் சிங்களப் பேரினவாதம் கொன்றொழிக்க பல வகையில் பேருதவி புரிந்தன. இனப் படுகொலைக்கு எதிரான எம் மக்களின் ஒப்பாரியைக்கூட
யாருக்கும் கேட்காமல் அச்சுறுத்தி தடை செய்தன.

இந்த மக்கள் விரோத, இனவிரோத ஆட்சி தொடர்ந்து நீடித்தால் என்றும் மீட்க முடியாத அபாயச் சூழலில் தமிழ்நாடு சிக்கிக் கொள்ளும் நிலைமை இருந்தது. ஆனாலும் தேர்தலில் பணபலத்துடன் மக்களை விலைக்கு வாங்கி மீண்டும் ஆட்சியில் அமர்ந்து விடலாம் என்ற பாசிச ஆட்சியாளர்களின் ஆசையில் மண் அள்ளிப் போட்டிருக்கின்றார்கள் எம் மக்கள். தி.மு.. - காங்கிரஸ் கூட்டணியைப் படு தோல்வி அடையச் செய்திருக்கின்றனர்.

ஈழத்தில் நமது ரத்த உறவுகளை சிங்களன் கொன்று குவிக்க பேருதவி புரிந்த சோனியாவின் காங்கிரசை இந்தத் தேர்தலில் முழுவதுமாக வீழ்த்த வேண்டும் என்னும் நிலைப்பாட்டை நாம் தமிழர் கட்சி எடுத்தது.

காங்கிரஸ் கட்சி தான் எங்களுக்கு முதல் எதிரி. இனத்தை அழித்த காங்கிரஸ் கட்சி வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழிக்கப்பட வேண்டும் என முடிவெடுத்து களத்தில் இறங்கினோம். அதற்காக அனைத்து தொகுதியிலும் பொதுக்கூட்டங்கள் நடத்தியும் வீடு வீடாகச் சென்றும் காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று தீவிரப் பரப்புரை செய்தோம்.

இனத்துக்காக நாம் செய்த கடமையை மக்கள் அங்கீகரித்து இன எதிரிக்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

தி.மு..விடம் மிரட்டிப் பெற்ற 63 தொகுதிகளில் 6 தொகுதியில் கூட வெல்ல முடியாதபடி காங்கிரசை வீழ்த்தியிருக்கிறார்கள்.

தமிழர்கள் வீரமும் விவேகமும் மட்டுமல்ல தன்மானமும் இனமானமும் உள்ளவர்கள் என்பதை தற்பொழுது மற்றுமொரு முறை நிரூபித்துள்ளனர்.

ஈழத்தில் ரத்தம் சிந்திய யுத்தத்தில் எம் இனத்தை நயவஞ்சகத்தோடு வீழ்த்திய காங்கிரசை, இங்குள்ள தமிழர்கள் ரத்தம் சிந்தாத தேர்தல் யுத்தத்தில் நேர்மையுடன் வீழ்த்தியிருக்கிறார்கள். இது நம் இனத்திற்குக் கிட்டிய வெற்றி.

காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி. இனத்தின் வெற்றிக்காக அல்லும் பகலும் அயராது உழைத்த நாம் தமிழர் உறவுகளுக்கும் இணைந்து பாடுபட்ட அனைத்து உணர்வாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி வரும் காலங்களில் தமிழினத்துக்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அரசு மக்கள் நலன் சார்ந்த பிரசசனைகளில் திறம்பட செயல்பட வாழ்த்துகிறேன்," என்று சீமான் கூறியுள்ளார்.


பத்திரிக்கை செய்தி


ஆரூர் முனா செந்திலு



தேர்தலுக்கு பிறகு நக்கீரன் கோபாலின் நிலைமை அய்யகோ

தேர்தல் முடிவுகள் வரும் வரை நக்கீரன் கோபால் இப்படி இருந்தார்.



முடிவுகள் வந்த பின்னே இப்படி ஆகிட்டார். அய்யகோ.



இனிமேல் சவுக்கு சொன்ன மாதிரி சென்னைல எங்கேயாவது டீக்கடை வச்சி போழச்சாதான் உங்க வண்டி ஓடும்.


ஆரூர் முனா செந்திலு

புறக்கணிக்கும் தமிழ்மணம்


நானெல்லாம் சிறு வலைப்பதிவனுக்கும் சிறு வலைபதிவன். சில நாட்களாக பார்க்கிறேன். தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தால் சில நிமிடங்களில் அது தமிழ்மணத்தில் இருந்து வெளியேறி விடுகிறது. இத்தனைக்கும் அது ஆபாசமான தலைப்போ பதிவோ அல்ல. பின் ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை. இதனால் வலைப்பதிவை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. எனது வலைப்பதிவை கட்டண சேவைக்காக இது போல் நெருக்குகிறதா என்றும் புரியவில்லை. இவ்வாறு இருக்க பின் எப்படி வலைப்பதிவுகளில் டிராபிக் ரேங்க் உண்மையாக இருக்கும். சில பதிவர்களைப் போல் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு உன் பதிவுக்கு நான் ஒட்டளிக்கிறேன். நீ என் பதிவுக்கு ஒட்டளி என்று சொல்ல தன்மானம் தடுக்கிறது. எழுதுவதில் விஷயமோ கருத்தோ ஒன்றுமே இல்லாத பதிவுகளுக்கு கூட 20 முதல் 25 ஒட்டுகள் சாதாரணமாக விழுகின்றன. நானெல்லாம் ஒரு பதிவுக்கு கூட 3 ஒட்டுகளை தாண்டியது கிடையாது. இப்பொழுது பிரச்சனை ஒட்டு கிடையாது. அது நானும் வலையுலகில் அரசியல் செய்ய ஆரம்பித்தால் கிடைத்து விட்டு போகிறது. ஆனால் என் ஆதங்கம் எல்லாம் என்னுடைய பதிவு பதிவிட்டு 5 நிமிடங்களுக்கு கூட தமிழ்மணத்தில் நிலைக்க மாட்டேங்குது. அதற்கு காரணம் வேண்டும்.

இந்த பதிவிற்காக என் வலைப்பதிவை தமிழ்மணம் புறக்கணித்தாலும் கவலையில்லை.

ஆரூர் முனா செந்திலு



Wednesday, May 11, 2011

இந்தி சினிமாவின் பத்துவிதிகள்

1. இரண்டு சகோதரர்கள் பால்யகாலத்தில் பிரிந்தார்கள் என்றால், அவர்களில் ஒருவன் போலீஸால் துரத்தப்படுபவனாகவும், இன்னொருவன் போலீஸ்காரனாகவும் இருக்கவேண்டும். போலீஸால் துரத்தப்படுபவன் கடைசிக்காட்சியில் திடாரென்று திருந்தி உண்மையான வில்லனை அடித்து நொறுக்கவேண்டும். இந்த சகோதரனுக்கு ஹீரோயின் இருந்தால் மட்டும், இறுதியில் குடும்பம் இணைந்து போஸ் கொடுப்பதற்கு அவனது குற்றங்கள் மன்னிக்கப்படவேண்டும். (விதி இரண்டைப் பார்க்கவும்)
2. ஹீரோக்களின் எண்ணிக்கை ஹீரோயின் எண்ணிக்கைக்கு சமமாக இல்லையெனில் உபரியான ஹீரோக்கள் அல்லது ஹீரோயின்கள் ) இறக்கவேண்டும் ) செஞ்சிலுவைச் சங்கம், ராமகிருஷ்ணா மிஷன், ஸ்விட்சர்லாந்து போன்ற சமாச்சாரங்களில் பட இறுதியில் காணாமல் போகலாம்.

3. ஒரு படத்தில் இரண்டு ஹீரோக்கள் இருந்தால், அவர்கள் இருவரும் காட்டுமிராண்டித்தனமாக குறைந்தது 5 நிமிடம் சண்டை போடவேண்டும் (சகோதரர்களாக இருந்தால் 10 நிமிஷம்)

4. எந்த கோர்ட் சீனிலும், 'அப்ஜக்ஸன் மைலார்ட் ' என்ற வசனம் இருந்தே ஆகவேண்டும். அந்த வசனத்தை ஹீரோவோ அல்லது அவரது வழக்குறைஞரோ சொன்னால், அது ஓவர் ரூல்டாகவும், இல்லையெனில் அது ஸஸ்டெய்ண்ட் ஆகவும் ஆகவேண்டும்.

5. ஹீரோவின் சகோதரி ஹீரோவின் உயிருக்குயிரான தோழனை (அதாவது இரண்டாவது ஹீரோ) கல்யாணம் செய்துகொள்ளவேண்டும். இல்லையெனில் அவள் படம் ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் வில்லனால் கற்பழிக்கப்படவேண்டும். அவள் பின்னால் தற்கொலை செய்துகொள்ளவேண்டும்.

6. சேஸ் நடந்தால், ஹீரோ எப்படியும் வில்லனை பிடித்துவிடவேண்டும், அது மாட்டுவண்டி காரை துரத்தினாலும் சரி.

7. ஹீரோ வில்லனை நோக்கி சுட்டால்,

) குறி தவறவே தவறாது

) துப்பாக்கிக் குண்டு தீர்ந்து போகும். (அப்படியாயின் கைச்சண்டைதான்).

வில்லன் ஹீரோவை நோக்கிச் சுட்டால், நிச்சயம் குறி தவறும். இல்லையெனில் அது இரண்டாவது (சாகவேண்டிய) ஹீரோ.

8) எல்லா சண்டைக் காட்சிகளும் நடக்கவேண்டிய இடம்

) சட்டிப்பானைகள் இருக்கும் இடம்

) சந்தை.. காய்கறி இன்ன இதர சாமான்கள் தள்ளுவண்டியில் இருக்கும் இடம்

) கண்ணாடி பாட்டில்கள் .. இவை அனைத்து நிச்சயம் உடைக்கப்படவேண்டும்

9) காணாமல் போய் சேரும் சகோதரர்கள் பற்றிய கதை இருந்தால், நிச்சயம் அனைவருக்கும் தெரிந்த குடும்பப் பாடல் ஒன்று நிச்சயம் வேண்டும். இது

) சகோதரர்கள் பாடவேண்டும்

) கண்குருடியான அம்மா பாடவேண்டும் (இறுதிக்காட்சியில் அவளுக்கு கண்பார்வை கிட்டும்)

) குடும்ப நாய் அல்லது பூனை

10) போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் படத்தில் வந்தால் இரண்டு வகையில் வருவார்கள் (போலீஸாக ஹீரோ இல்லாத பட்சத்தில்)

) படு நேர்மையான போலீஸ் அதிகாரி பெரும்பாலும் ஹீரோவின் அப்பா. டைட்டில் போடுவதற்கு முன்னால் இவர் சாகவேண்டும். அப்பாவாக இல்லாத பட்சத்தில், கெட்ட ஹீரோ (அண்டி ஹீரோ)வை 'சட்டத்திலிருந்து நீ தப்பமுடியாது ' என்று பேசிகொண்டே 23ஆவது ரீல் வரை துரத்திவிட்டு, இறுதியில் தன் மகளை அவனுக்கு மணம் முடித்துவைத்து தோளில் தட்டிக்கொடுக்கவேண்டும்.

) படு மோசமான கெட்ட போலீஸ் அதிகாரி. உண்மையான வில்லனின் கையாள். கிளைமாக்ஸில் ஹீரோவால் சாகவேண்டும்.


ஆரூர் முனா செந்திலு

Tuesday, May 3, 2011

உலகின் மிக வினோதமான சட்டங்கள் - தற்பொழுதும் நடைமுறையில் இருப்பவை

கலிபூர்னியா, பசிபிக் குரோவ்

பட்டாம் பூச்சியைக் கொல்வதோ, கொல்வதாக பயமுறுத்துவதோ சட்டப்படி குற்றம்

கலிபோர்னியா, வென்சுரா மாவட்டம்

நாய்களோ பூனைகளோ அனுமதி இன்றி பாலுறவு கொள்ளக்கூடாது.

ஃப்ளோரிடா, சரசோடா

பொது இடத்தில் நீச்சல் உடை உடுத்திக்கொண்டு பாடுவது குற்றம்

இல்லினாய், சிக்காகோ

தொப்பியில் இருக்கும் ஊசி, மறைத்து வைக்கப்பட்டிருக்கும் ஆயுதம்

மிச்சிகன் மாநிலம், அமெரிக்கா

தன் கணவனின் அனுமதி இன்றி ஒரு பெண் தன் முடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

ப்ரெய்னெர்ட் மாவட்டம், மின்னசோடா மாநிலம், அமெரிக்கா

எல்லா ஆண்களும் தாடி வளர்க்கவேண்டும்

ஓஹையோ மாநிலம், அமெரிக்கா

நீங்கள் நாயாக இருந்தாலும், சாண்டா கிளாஸ் உடை உடுத்திக்கொண்டு பீர் விற்பது குற்றம்

கனடா டோரண்டோ மாநிலம்

ஞாயிற்றுக்கிழமையில் பூண்டு சாப்பிட்டதும் கார் ஓட்டுவது சட்டப்படி குற்றம்

க்ளீவ்லேண்ட், ஓஹையோ மாநிலம்

வேட்டையாடும் லைசன்ஸ் இன்றி எலிகளைப் பிடிப்பது சட்டப்படி குற்றம்

அரிசோனா மாநிலம், அமெரிக்கா

ஒட்டகங்களை வேட்டையாடுவது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

ஐஸ்கிரீம் கோனை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு செல்வது சட்டப்படி குற்றம்

கெண்டகி மாநிலம், அமெரிக்கா

வருடத்துக்கு குறைந்தது ஒரு தடவையாவது குளிக்காமல் இருப்பது சட்டப்படி குற்றம்

அர்கன்ஸாஸ் மாநிலம், அமெரிக்கா

ஒரு ஆண் தன் மனைவியை அடிக்கலாம். ஆனால், மாதத்துக்கு ஒருதடவைக்கு மேல் அடிப்பது சட்டப்படி குற்றம்

மெஸ்க்வேட், டெக்ஸாஸ், அமெரிக்கா

குழந்தைகள் வினோதமாக தலைமுடியை வெட்டிக்கொள்வது சட்டப்படி குற்றம்

கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

கையாலேயே நடந்து தெருவைக் கடப்பது சட்டப்படி குற்றம்

அவினான், ஃப்ரான்ஸ்

சட்டப்படி, ஒரு பறக்கும் தட்டை நகரத்தில் இறக்குவது குற்றம்

ஹார்ட்போர்ட் கனக்டிகட் மாநிலம், அமெரிக்கா

தெருவில் மரத்தை நடுவது சட்டப்படி குற்றம்

விர்ஜினியா, கிரிஸ்டியன்பர்க், அமெரிக்கா

துப்புவது சட்டப்படிகுற்றம்


ஆரூர் முனா செந்திலு

Monday, May 2, 2011

தமிழ் மொழிப்போர் - ஒரு நினைவலை

ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின் மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால், அது தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக அணியப்படுத்திக் கொண்ட கழக இலக்கியங்களும், காப்பியங்களுமே முதன்மைக் காரணமாகும். எத்தனையோ வடிவங்களில் நடைபெற்ற, எவ்வளவோ அழிவுச் செயல்பாடுகளுக்கு இடையிலும் தமிழ் மொழியின் தலைநிமிர்ந்த நன்னடை, பெருமைக்குரியதாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இன்று கணினியில் மாபெரும் வளர்ச்சியைக் கண்டிருக்கும் தமிழ்மொழியின் வரலாற்று வழித்தடம், அண்மைக் காலம் வரை கரடுமுரடாய்த்தான் இருந்திருக்கிறது. இப்போதும் அது போன்ற தடத்திலேதான் பயணம் செய்து கொண்டிருக்கிறது என்பதும் உண்மை.

சங்க இலக்கியங்கள் இயற்றப்பட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ்ச்சமூகம், பரந்து பட்ட அளவில் கல்வியறிவு பெற்றிருந்ததை, மதுரைக்கு அருகிலுள்ள ஆண்டிப்பட்டி புள்ளிமான் கோம்பையில் கிடைத்த நடுகற்கள் சான்றாய் நின்று பகர்கின்றன. கோவையில் கிடைத்த சூலூர் மண் தட்டில் காணப்படும் குறியீடுகளும், சிந்து சமவெளியில் கிடைத்த குறியீடுகளும் ஒத்ததாய் அமைந்திருப்பது, தமிழ்ப்பண்பாட்டின் நாகரிகம் எவ்வளவு பழமை வாய்ந்தது என்பதை உரக்கத் தெரிவித்துள்ளது. ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு மேலும் பல வரலாற்றுத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது. "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று அறிவுச் செருக்கோடு உலகத்திற்கே வாழ்வியல் எதார்த்தத்தை வழங்கிய தமிழ் மொழி, இன்னும் கடக்க வேண்டிய தூரம் நிறையவே உள்ளது. இதற்கிடையே, நேற்றுப் பிறந்த மொழிகளோடும், அதற்கு முந்தைய நாள் பிறந்த மொழிகளோடும் ஒப்பிட்டு, தமிழின் செம்மொழிப் பெருமையைக் கீழிறக்கும் செயல்களும் நம் கண் முன்னே அரங்கேற்றப்படுகிறது என்பதையும் நாம் கணக்கிலே கொண்டாக வேண்டும்.
சில பத்தாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடைபெற்ற மொழிப்போர் குறித்து இப்போதுள்ள இளந்தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. கல்லூரி மாணாக்கர்கள், போர்க்குணத்துடன் தாங்கள் எண்ணிய இலக்கு ஈடேறுவதற்காக, மண்டை உடைந்து, கை கால் ஒடிந்து, குருதி சொட்ட, உயிர் ஈகம் செய்த வரலாறு, தமிழகத்தின் கருஞ்சிவப்புப் பக்கங்களாகும். 1965ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராய் இருந்த காங்கிரஸ் கட்சியின் பக்தவச்சலம், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தன்னெழுச்சியாய் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது, அதில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை கதறக் கதற லத்தியால் அடித்த அடியை எவராலும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. அன்று அடி வாங்கிய பெரும்பாலான மாணவர்கள் இன்று திராவிடக் கட்சிகளின் பல்வேறு பொறுப்புகளிலும், பல தமிழ்த் தேசிய அமைப்புகளிலும் வாழும் சான்றாக தற்போதும் உயிருடன் இருக்கிறார்கள். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய திராவிட முன்னேற்றக் கழகம், அப்போது மொழியுணர்வோடும், இனவுணர்வோடும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய நாடு விடுதலையடைவதற்கு முன்பாக அப்போதைய சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த இராஜகோபாலாச்சாரியார், 1938ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் நாள் முதன் முதலாக இந்தியைக் கட்டாயப் பாடமாக்கினார். இதனை எதிர்த்து பெரியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி..பெ மற்றுமுள்ள தமிழறிஞர்களும் இணைந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொண்டர்களும், தலைவர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் இப்போராட்டத்தில் திரண்டனர். இதற்கிடையே முதலமைச்சரின் வீட்டிற்கு முன்பாக உண்ணாநோன்பிருந்த பல்லடம் பொன்னுசாமி என்பார் இந்தித் திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முதல் நபராகக் கைதானார். அதே ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் இந்தி மொழி எதிர்ப்பிற்காக நடராசன் கைது செய்யப்பட்டார். சிறையில் கடும் தாக்குதலுக்கு ஆளான நடராசன், 1939ஆம் ஆண்டு சனவரி 15ஆம் நாள் இறந்துபோனார். இந்தி மொழி எதிர்ப்புப் போராட்டத்தில் உயிர் ஈகம் செய்த முதல் போராளி இவர். தர்மாம்பாள், நாராயணி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உள்ளிட்ட பெருமளவிலான பெண்களும் இப்போராட்டத்தின் விளைவாக கைது நடவடிக்கைக்கு ஆளாயினர்.

இந்தித் திணிப்பிற்கு ஆதரவான அரசின் முயற்சிகளுக்கு 1938ஆம் ஆண்டு இராஜாஜி வித்திட்டாரென்றால், அதற்கு எதிரான போராட்டங்களுக்கு அடித்தளம் அமைத்தவர் பெரியார் .வெ.ரா. இந்தி மொழிக்கு எதிரான போராட்டத்தில் இறந்துபோன நடராசனின் இறப்பை இராஜாஜி, பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்தார். இரண்டாவது மொழிப் போராட்டமாய்க் கருதப்படும் 1948ஆம் ஆண்டிலும் அதே காங்கிரஸ் அரசு, முதல்வராய் அமர்ந்த ஓமந்தூர் இராமசாமி மூலம் இந்தித் திணிப்பை மேற்கொண்டது. அப்போதும் பெரியார் தலைமையில் அறிஞர் அண்ணா, திரு.வி.., பாரதிதாசன், தருமாம்பாள் என பல்வேறு தலைவர்களும், அறிஞர்களும் போராட்டங்கள் பல நடத்தி சிறை புகுந்தனர்.

வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து நாடு விடுதலை பெற்ற பின்னர், இந்தியா தனக்கென்று அரசியல் அமைப்பை உருவாக்க முடிவு செய்தது. இதற்கென்று உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புக் குழு இந்தியாவின் ஆட்சி மொழி குறித்த கலந்துரையாடலை 1949ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தியது. அரசியலமைப்பு அவையில் இருந்த காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்கள், தனியே நடத்திய கூட்டத்தில் ஆட்சி மொழி வாக்கெடுப்பை நடத்தினர். இதில் இந்திக்கு ஆதரவாக 77 வாக்குகளும், ஆங்கிலத்திற்கு ஆதரவாக 77 வாக்குகளும் கிடைத்தன. அப்போது அந்தக் கூட்டத்தின் தலைவராக இருந்த பட்டாபி சீதாராமய்யர் தனது ஓட்டை இந்திக்கு ஆதரவாகப் பதிவு செய்ததால் ஒரு வாக்கு வேறுபாட்டில் இந்தி மொழி வெற்றி பெற்றது. இதற்குப் பிறகு இந்தி மொழியை, அதனைப் பேசாத பிற மாநிலங்களில் திணிப்பதற்கு காங்கிரஸ் பெரும் முயற்சி எடுத்தது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் விரும்பாத நிலையில் இந்தித் திணிப்பு விரைவுபடுத்தப்பட்டது. 1950 சனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு சட்டம் 17ஆவது பிரிவின் கீழ் இந்தி, நடுவணரசின் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது.

இந்தி மொழி திணிப்பிற்கு எதிரான போரில் முளைத்த திராவிட முன்னேற்றக் கழகம், தொடர்ந்து பல்வேறு பேராட்டங்களை நடத்தியது. அக்கட்சியின் இதழ்களிலும், வேறு பல ஏடுகளிலும் இந்தி ஆதிக்கத்திற்கு எதிரான கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பு அன்றைய பிரதமர் ஜவகர்லால் நேருவின் மனநிலையில் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இதன் விளைவாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ஆம் நாள் மக்களவையில் பிரதமர் நேரு, "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே தொடர்பு மொழியாக இருக்கும்" என்று உறுதியளித்தார். இதனையடுத்து தற்காலிகமாக மூன்றாவது மொழிப்போர் முடிவுக்கு வந்தது. ஆனால் 1963ஆம் ஆண்டிலிருந்து 1965ஆம் ஆண்டு வரை நடைபெற்ற நான்காவது மொழிப்போர், இரத்தம் சிந்திய போராட்டமாக அமைந்துவிட்டது. அப்போதும் காங்கிரஸ் கட்சியே இந்தித் திணிப்பை முன்னெடுத்தது. நடுவண் உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி 1963ஆம் ஆண்டு, ஏப்ரல் 13ஆம் நாள் கொண்டு வந்த ஆட்சி மொழி குறித்த சட்ட முன்வரைவு, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பின. இதன் விளைவாக ஒட்டு மொத்த தமிழகமே கொந்தளித்தது. அண்ணா தலைமையில் நடைபெற்ற போராட்டங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் பரவின.

கல்லூரி மாணவர்கள் அனைவரும் இந்தித் திணிப்பிற்கு எதிரான பெரும் போரில் சிறிதும் தயக்கமின்றி குதித்தனர். காங்கிரஸ் தலைமையிலான பக்தவச்சலம் அரசு மிக மோசமான ஒடுக்குமுறைகளைக் கையாண்டது. தமிழகக் காவல்துறை, மாணவர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் புகுந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்தத் காங்கிரஸ் தொண்டர்களைத் தயார் செய்து, ஆங்காங்கே மாணவர்கள் மீது உருட்டுக் கட்டைகளால் தாக்கியது என வரலாறு காணாத அளவில் பெரும் வன்முறைக் காடாக தமிழகத்தை மாற்றிக் காட்டியது பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இந்த நெடும் போராட்டத்தில் தான் வெறும் 21 வயதே ஆன கீழப்பழுவூர் சின்னச்சாமி, திருச்சி தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக "இந்தி ஒழிக, தமிழ் வாழ்க!" என்று முழக்கமிட்டு, தன் உடலுக்குத் தீ வைத்துக் கொண்டு இறந்து போனார்.

மதுரையில் நடைபெற்ற கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில், திட்டமிட்டு வன்முறையைத் தூண்டிய காங்கிரஸ் அரசு, மாணவர்களை ஓட, ஓட அடித்து விரட்டியது. அதில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். 1965 சனவரி 26ஆம் நாள் சிவலிங்கம் என்ற திமுக தொண்டர், சென்னை கோடம்பாக்கத்தில் தீக்குளித்து இறந்து போனார். மொழிக்காக உயிரை ஈந்த இத்தியாகப் போராட்டத்தை பக்தவச்சலம், சட்டமன்றத்தில் மிக இழிவாகப் பேசினார். பிறகு பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் தீக்குளித்து இறத்தல் தொடர்கதையாகின. 1965ஆம் ஆண்டு ஐம்பது நாட்கள் நடைபெற்ற நான்காவது மொழிப் போராட்டத்தில், காங்கிரஸ் அரசால் நடத்தப்பட்ட வன்முறையின் காரணமாய் சற்றேறக்குறைய 500 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தையும் அப்போதிருந்த இளைஞர்களும், மாணவர்களுமே பெரும் எழுச்சியோடு நடத்தினர். நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்து தமிழ் மொழியைக் காப்பாற்றினாலும் கூட, நடுவணரசின் மறைமுக வேலைத்திட்டமும், மாநிலக் கட்சிகளின் கையாலாகாத்தனமும் இந்தியை கொஞ்சம், கொஞ்சமாய் தமிழகத்திற்குள் தற்போது கொண்டு வந்து கொண்டிருக்கிறது. "அனைவருக்கும் கல்வி" என்பதைக் காட்டிலும் "சர்வ சிக்ச அபியான்" வெகு இயல்பாக புழங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள நடுவண் அரசின் அனைத்துத் துறைகளும் இந்தியை மெல்ல மெல்ல புகுத்தி வருகின்றன. நடுவண் அரசின் காப்பீட்டுத் திட்டங்களும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் இந்தித் திணிப்பை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன. அறிஞர் அண்ணா, "மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக எப்போது அறிவிக்கப்படுகிறதோ, அப்போதுதான் இந்த மொழிப்போர் முடிவிற்கு வரும்" என்றார். அந்த நிலை அய்யாவால் சாத்தியமாகுமா..? அல்லது அம்மாவால் சாத்தியமாகுமா..? என்பது இன்னமும் விளங்காத புதிர்.


ஆரூர் முனா செந்திலு



இந்திய நரகம் - இப்படி தான் இருக்கும்

ஒரு இந்தியன் செத்து நரகத்துக்குப் போனான்

ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான்.

முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது. அங்கு வாசலில் இருப்பவனிடம் 'இங்கே என்ன பண்ணுவார்கள் ? ' என்று கேட்டான்.

அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு ஜெர்மானியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

கேட்கவே நன்றாக இல்லை. ஆகவே அவன் அடுத்த நரகத்துக்குப் போனான். அடுத்தது அமெரிக்க நரகம். அடுத்தது ருஷ்ய நரகம்.. ஆக இப்படி. ஆனால் அவை எல்லாமே ஜெர்மானிய நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இந்திய நரகம் இருந்தது. அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. சரி நம் ஆட்கள் தான் ஏராளமாயிற்றே அவர்கள் தான் நிற்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தால், இந்தியர்களோடு ஜெர்மானியர்கள் அமெரிக்கர்கள் இன்னும் எல்லோரும் அங்கேயே நின்று கொண்டிருக்கிறார்கள்.

வரிசையில் நின்று கொண்டிருந்த ஒருவனிடம் கேட்டான். 'இங்கே என்ன பண்ணுவார்கள் '

அதற்கு அவன் 'இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணி நேரத்துக்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்புறம் முள்படுக்கையில் போட்டு படுக்கச்சொல்வார்கள் ஒரு மணி நேரம். பிறகு இந்தியப் பேய் வந்து உன்னை சவுக்கால் மீத நாள் முழுவதும் அடிக்கும். ' என்றான்.

'இதுவும் மற்ற நரகங்களைப் போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கிறது ? ' என்று கேட்டான்

'ஏனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது. முள்படுக்கையிலிருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இந்தியப்பேய் அரசாங்க குமாஸ்தா. ஆகவே, அது வரும், பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கேண்டீனுக்கு காப்பி குடிக்கப் போய்விடும் ' என்றான்


எப்பூடி
ஆரூர் முனா செந்திலு





LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...