சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, May 14, 2013

பாப்பா போட்ட தாப்பா

பதின்வயதில் தாத்தா வீட்டுக்கு விடுமுறையில் ஒரு முறை சென்றிருந்தேன். மதிய வேளைகளில் மற்ற பேரப் பசங்க விளையாடிக் கொண்டு இருக்கும் போது நான் மட்டும் தாத்தாவுடன் விவசாயம் நடக்கும் வயலுக்கு சென்று விடுவேன்.


அது போல் சென்ற போது பம்புசெட்டு கூரையின் எரவானத்தில் ஒரு புத்தகம் வெளியில் தெரியாத அளவுக்கு சொருகப்பட்டு இருந்தது. எடுத்துப் பார்த்தால் பிரபல நடிகை மார்பு பகுதியை திமிறிக் கொண்டு நின்றிருந்தார். எனக்கு வியர்த்தது.

யாருக்கும் தெரியாமல் புத்தகத்தை எடுத்து டவுசருக்குள் சொருகிக் கொண்டு கரும்பு கொல்லையை நோக்கி நடையை கட்டினேன். வயலில் தாத்தா வேலையாட்களை விரட்டி வேலை வாங்கிக் கொண்டு இருந்தார். யாரும் கவனிக்காத சமயத்தில் கொல்லையில் நுழைந்தேன்.


யாரும் அருகில் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு புத்தகத்தை பிரித்தேன். தலைப்பில் மதனமோகினி என்று போட்டிருந்தது. அதுவரை கில்மா புத்தகங்களை படித்ததே கிடையாது. முதல் முதலில் பக்கத்தை புரட்டும் போது உடலில் ஏகப்பட்ட ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது.

முதல் கதையில் ஒரு வயதான நர்சு கிணற்றில் துவைத்துக் கொண்டு இருந்தார். நான் கதையில் கிணற்றை தாண்டுவதற்குள் வியர்த்து வழிய ஆரம்பித்தது. இது என்ன உணர்வு என்று புரியவேயில்லை. கையெல்லாம் நடுங்கியது.

கேள்வி பதில் பகுதியில் சந்தேகங்கள் வில்லங்கமாக இருந்தது. ஏகப்பட்ட வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியவில்லை. நானா ஒரு அர்த்தம் பண்ணிக் கொண்டு ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். ஆனால் அதற்கு பிறகு என்ன செய்ய வேண்டும் என்று தெரியவே இல்லை.

சத்தம் போடாமல் படித்த புத்தகத்தை எரவானத்தில் சொருகி விட்டு வந்து விட்டேன். ஆனால் மாலையில் கிரிக்கெட் விளையாடும் போது கவனம் அதில் செல்லவேயில்லை. எந்த சினிமா போஸ்டரை பார்த்தாலும் எனக்கு மட்டும் அதில் உள்ளவர் எனக்கு சிக்னல் கொடுப்பது போலவே இருந்தது.

தினமும் காலை மதியம் என இரு வேளையும் பம்புசெட்டுக்கு போய் புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மற்ற பேரப்பயலுகளுக்கு சந்தேகம் வந்து ஒரு நாள் பின் தொடர்ந்து கண்டுபிடித்து விட்டார்கள்.

அவர்களை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு எல்லோரும் குழுவாக படிக்க ஆரம்பித்தோம். பயலுக சம்பந்தமில்லாம அடிக்கடி கரும்பு கொல்லைக்குள் பூந்துக்கிறானுங்களே என்று யோசித்த தாத்தா ஒரு நாள் கையும் களவுமாக பிடித்து விட்டார்.

பிறகென்ன ஆலைக்கரும்பை பேர்த்து அடித்த அடியில் இரண்டு நாட்கள் எல்லோருக்கும் கால்களில் தோல் பிய்ந்து தொங்கியது தான் மிச்சம்.

அதற்காக அசந்து விடுகிற ஆளா நாம். அடுத்த கட்டமாக உண்டியலை உடைத்து காசை எடுத்து நீடாமங்கலத்திற்கு சைக்கிளில் சென்று ஒரு புத்தகத்தை வாங்கி அதனை வைக்கப்போருக்குள் ஓளித்து வைத்து படித்து வந்தோம். ஒரு நாள் தாத்தா மாட்டுக்கு வைக்கோல் புடுங்கிப் போடும் போது திரும்பவும் மாட்டிக் கொண்டு தார்க்குச்சியால் அடி வாங்கியதை தனியாக விளக்க வேண்டுமா என்ன.

ஆரூர் மூனா செந்தில்

17 comments:

 1. சரோஜா சாமான் நிக்காலோ....!
  :-)

  ReplyDelete
  Replies
  1. அய்ய பச்ச பச்ச.

   Delete
 2. Replies
  1. நன்றி தனபாலன்

   Delete
 3. Replies
  1. இதில் மறைக்க என்ன இருக்கு நண்பா

   Delete
 4. இளம்கன்று பயமறியாது மூன்றாவது தடவையும் வாங்கி படிச்சு இருபிங்களே

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா நீயும் என் தோழனே.

   Delete
 5. அரசியல்ல சாரி அந்த வயசில இதெல்லாம் சாதாரணம்தானே! :)

  ReplyDelete
  Replies
  1. சரியாக சொன்னீங்க அண்ணே.

   Delete
 6. மலரும் நினைவுகள் ! ஆஹா ! அந்த ரசாயன மாற்றத்தின்போது உடலில் ஏற்படும் மாற்றம் ! காதின் வழியே புகை வரும் உணர்வு தோன்றும் ! ஆனால் நான் மாட்டிக் கொள்ளவில்லை ! இருந்தும் அதனை தனிமையில் படிக்க படும் பாடு இருக்கிறதே ! எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை என்பதுபோல் இருக்கும் நமது செயல்பாடுகள் ! நன்றி சகோதரரே !

  ReplyDelete
  Replies
  1. நன்றி நாதன்

   Delete
 7. அதே ரசாயன மாற்றம்

  ReplyDelete
 8. நீங்க செய்த வேலைக்கு ஏன் அய்யா "பாப்பா போட்ட தப்பா"னு பேரு வச்சிங்க...

  ReplyDelete
  Replies
  1. ரஜினி படத்துல பாப்பா போட்ட தாப்பான்னு ஒரு புத்தகம் படிப்பாரே நினைவில்லையா.

   Delete
 9. ஆ...அண்ணேன்...பிஞ்சியிலே பழுத்திட்டீங்களா

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி கொஞ்சமா...

   Delete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...