நான்
இரண்டு முறை கேரளாவில் ரஜினி படம் வெளியீட்டின் போது இருந்துள்ளேன். ஒரு
முறை படையப்பா வெளியீட்டின் போது திருச்சூரில் இருந்தேன். சந்திரமுகி
வெளியீட்டின் போது திருவனந்தபுரத்தில் இருந்தேன். எங்கு இருந்தாலும் தலைவர்
தலைவர் தான் என்பதை முதல் நாள் காட்சியின் போது கண்டவன் என்ற முறையில்
உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
(வட்டத்துலநான்தான்பா)
படையப்பா வெளியீட்டின் போது நான் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்பரன்டிஸ் பயிற்சியில் இருந்தேன். அப்பொழுது திருச்சூரில் நடக்கும் பூரம் திருவிழாவுக்காக ரயில்வே ஸ்டால் போட்டிருந்தார்கள். அந்த பணிக்காக ரயில்வே அப்ரெண்டிஸ் குழுவினர் இங்கிருந்து திருச்சூர் சென்றோம்.
சென்று இறங்கிய மூன்றாவது நாள் படையப்பா ரிலீஸ். எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று என்னுடன் இருந்த நண்பர்களுடன் இணைந்து திரையரங்கிற்கு சென்றேன். அப்பப்பா அந்த தெருவின் உள்ளேயே நுழைய முடியவில்லை. கேரளாவில் ரஜினிக்கு இருக்கும் Grace கண்டு ஆச்சரியப்பட்டு போனேன். ஒரு வழியாக மாட்னி ஷோ வுக்கு டிக்கெட் கிடைத்தது.
மிகப்பெரிய திரையரங்கம். அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் மலையாளிகள். அவர்களே வசனம் புரியாவிட்டாலும் தலைவர் வரும் காட்சியில் எல்லாம் கை தட்டி விசிலடித்து ஆரவாரம் செய்தார்கள். படம் சூப்பர் ஹிட். அன்று தான் தலைவர் தமிழ்நாட்டில் மட்டும் சூப்பர் ஸ்டார் இல்லை. தென்னகத்துக்கே அவர்தான் என்று புரிந்தது.
அடுத்தது சந்திரமுகி ரிலீஸ் போது நான் தனியார் கட்டுமான நிறுவனத்தில் நிர்வாக அதிகாரியாக இருந்தேன். முன்பே தலைவருக்கு கேரளாவில் இருக்கும் மாஸ் தெரிந்ததால் சென்னையில் திட்டமிடுவது போல் ஒரு வாரத்திற்கு முன்பே எப்படி சினிமாவுக்கு செல்வது என்று பிளான் செய்து விட்டோம்.
படம் ரிலீஸ் அன்று மம்மூட்டி, மோகன்லால், திலீப் ஆகியோரின் படமும், கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் மற்றும் டாகுடர் விஜய்யின் சச்சின் ரிலீஸ். ஆனால் மற்ற படங்கள் எல்லாம் ஒரு தியேட்டரில் தான் ரிலீஸ். சந்திரமுகி மட்டும் 6 தியேட்டரில் ரிலீஸ். எங்களுக்கோ ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்களின் பெரிய நடிகர்களின் படம் ஒரு தியேட்டரில் வருகிறது. சூப்பர் ஸ்டாரின் படத்தை 6 தியேட்டரில் ரிலீஸ் செய்கிறார்களே என்று.
இரவு காட்சிக்கு தியேட்டருக்கு சென்றால் செமகூட்டம். நிறைய தமிழர்களும் இருந்தார்கள். அவகளிடம் நீங்கள் எந்த ஊர் என்று கேட்டால் அவர்கள் எல்லாம் நாகர்கோயிலில் இருந்து வந்திருப்பதாகவும் அங்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றும் சொன்னார்கள். ஆச்சரியப்பட்டு போனேன்.
உள்ளுர் மலையாளி ஒருவன் வரிசையில் நிற்கும் எங்கள் தோளின் மீது ஏறி டிக்கெட் எடுப்பதற்காக முன் சென்றான். அவ்வளவு தான். ஏற்கனவே மலையாளிகளின் மீதான கடுப்பும் சேர்ந்து அவனை கீழே இழுத்துப் போட்டு செம மொத்து மொத்தினோம். பாரபட்சமில்லாமல் எல்லாத் தமிழர்களிடம் இருந்தும் அவனுக்கு அடி விழுந்தது.
படம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்.
ஆரூர் மூனா செந்தில்
டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு. என் தலைவனின் பிறந்தநாளுக்காக மறுபதிப்பு செய்யப்படுகிறது
மீள் பதிவில் சொல்லியுள்ளது உண்மையே ,மும்பையில் கூட ரஜினி படம் வந்தால் இதுபோலவே கூட்டம் இருக்குமாம்
ReplyDeleteநன்றி கவியாழி அண்ணே.
Deleteபடம் முழுக்க ஆரவாரம் தான். மொழி கடந்து, மாநிலம் கடந்து எங்கும் தலைவர் தலைவர் தான்./////
ReplyDeleteரிப்பீட்டு......
என்ன பிரகாஷூ கொஞ்ச நாளா ஆளையே காணும். பிஸியோ.
Delete(வட்டத்துலநான்தான்பா).ஜி நம்பிட்டோம்.
ReplyDeleteமத்தபடி தலைவரை பற்றி சொன்னதெல்லாம் ok .
சத்தியமா நான்தானுங்ணா.
Delete