சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Wednesday, December 26, 2012

எனக்கு மெடுல்லா ஆப்ளிக்கேட்டா

என்னாச்சு

கிறிஸ்துமஸ் விடுமுறை விட்டாங்க.

இம்மி அண்ணன் பார்ட்டிக்கு நைட்டு கூப்பிட்டாரு.

புல்லா சரக்கடிச்சேன், நைட்டு 11.30 ஆகிடுச்சி

வீட்டுலேருந்து போன் பண்ணி சத்தம் போட்டதும் கிளம்பினேன்

வீட்டுக்குள் நுழைய படியேறினேன். முக்கால் தூரம் ஏறியதும் தடுமாறி டமால்...

படிகளில் ரெண்டு சம்மர் சால்ட் போட்டு கீழே விழுந்தேன்

எழுந்தால் பின் மண்டையில் பயங்கர ரத்தம், பெரிய காயம்

அங்கதான் மெடுல்லா ஆப்ளிக்கேட்டா இருக்கு

ஒரு வேளை நான் எல்லாத்தையும் தற்காலிகமா மறந்துடுவேனோ

என்னாச்சு

விளையாட்டுக்கு சொல்லலை. சத்தியமா இது நேற்று முன்தினம் இரவு எனக்கு நடந்தது . கிறிஸ்துமஸ் பார்ட்டி துவங்கி நேரம் கடந்து போய்க் கொண்டே இருந்தது. மறுநாள் விடுமுறை என்பதனால் சற்று அதிமாக சாப்பிட்டு இருந்தேன். வீட்டம்மா போன் செய்து சத்தம் போடவே கிளம்பினேன்.

முதல்மாடியில் வீடு இருப்பதால் படியேற வேண்டும். வீரமாக படியேறி சத்தம் போட்டுக் கொண்டே வர கோபமடைந்த வீட்டம்மா எதிர் வீட்டில் பாக்கிறாங்க, சத்தம் போடாம வா என்று சொல்ல எவன்டா அவன் என்ன பாக்குறது என்று வீர வசனம் பேசி திரும்பிய நான் நிலை தடுமாறி விழ ரெண்டு டைவ், சில குட்டிக்கரணம் போட்டு விழ தலையில் சுவற்றில் மோதி தெரித்தது.

கடுமையான காயம், ரத்தம் கொட்டிக் கொண்டு இருக்கிறது. வீட்டம்மாவுக்கு எங்கிருந்து தான தைரியம் வந்ததோ. 62 எடையுடைய வீட்டம்மா 100+ எடையுள்ள என்னை எவ்வாறு மாடிப்படியில் தூக்கி வந்து வீட்டில் போட்டாரோ தெரியவில்லை. இப்படி ஒரு பலசாலியிடம் இப்பல்லாம் குரலை உயர்த்தி பேசவே பயமாயிருக்கிறது.

உடனே நெருங்கிய டாக்டர் நண்பனுக்கு போனைப் போட்டார் வீட்டம்மா. அவன் வீட்டிலிருந்து கிளம்பி வந்து அவன் பங்குக்கு ரெண்டு சாத்து சாத்தி விட்டு முதலுதவியை ஆரம்பித்தான். அதற்குள் நண்பர்கள் குழாமுக்குள் போன் போக ஆரம்பித்து அனைவரும் போன் பண்ணி விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதெல்லாம் தெரியாமல் நான் மட்டும் முழுப் போதையில் மயக்கத்தில் இருந்தேன். நள்ளிரவுக்கு பிறகு போதை தெளிய ஆரம்பித்தது. எழுந்து எனக்கு என்ன ஆச்சி என்று என் வீட்டம்மாவிடம் கேட்க பளாரென்று ஒரு அறை விட்டாள். சகலமும் கலங்கி விட்டது.

அதன் பிறகு நான் எங்க தூங்குறது. நினைவுகள் பயங்கரமாக சுழல ஆரம்பித்தது. எனக்கும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துல வர்ற மாதிரி அதே இடத்துல அடிப்பட்டது. ஆனால் எனக்கு காயத்தின் வீரியம் அதிகம். ரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தது. அதனால் காலையில் விடிந்தால் சில வருடங்களுடைய நினைவுகள் மறந்து விடுமா அல்லது ஏற்கனவே மறந்து போய் விட்டதா எனவும் சந்தேகம்.

உடனடியாக எனக்கு கடைசியாக என்னென்ன சம்பவங்கள் நடந்தது என்று எனக்குள் ஒட்டிப் பார்த்துக் கொண்டேன். ஆனால் அது நேற்று நடந்தது என்பதை நான் எப்படி நம்புவது. பிறகு போனை எடுத்து கடைசியாக டயல் செய்திருந்த நம்பர்களை பார்த்தால் நான் பேசியது நினைவில் இருந்தது. அப்பாடா எனக்கு நினைவு தப்பவில்லை என்று சந்தோசம் வந்தாலும் போதை இறங்கியதால் தலை கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

மல்லாக்கவும் படுக்க முடியாமல் உட்காரவும் முடியாமல் தவிக்க ஆரம்பித்தேன். வலியால் விடிய விடிய தூங்கவில்லை. விடிய ஆரம்பித்ததும் கிறிஸ்துமஸ் கொண்டாட சர்ச்சுக்கு சென்றிருந்த நண்பர்கள் குடும்பத்துடன் காலையிலேயே வீட்டு வர ஆரம்பித்தார்கள். கன்னாபின்னா அட்வைஸ்கள் வர ஆரம்பித்தன.

எனக்கே தெரியுது நான் செய்தது தப்பென்று, ஆனாலும் அவனவன் அட்வைஸ் பண்ணது தான் எனக்கு வாங்கிய அடியை விட வலித்தது. ஒரு வழியாக நண்பர்கள் வீட்டுக்கு சென்றவுடன் தான் தப்பிச்சோம்டா என்று எண்ணினேன். இன்னும் அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரியாது. நாளை ஊருக்கு போய் தான சொல்லனும், அங்கிருந்து எந்த மாதிரியான ரெஸ்பான்சிபிள் வருமோ தெரியாது.

இன்றைக்கு ரயில்வே மருத்துவமனையில் ஒரு ஒரு டிப்பார்ட்மெண்ட்டாக பார்த்து பார்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து சரிபார்த்து ஒன்றும் பிரச்சனையில்லை என்று டாக்டர் சொன்னதும் தான் அப்பாடா தப்பிச்சேன் என்று தோன்றியது.

ஒரு நாள் சபலப்பட்டு அதிகம் குடிச்சது, இன்னைக்கு எனக்கே வில்லங்கமாகி இனி எதுவும் செய்ய முடியாத அளவுக்கு மாட்டி விட்டு விட்டது. வேறு வழியே இல்லாமல் என் மனைவிக்கு பயந்து இன்று முதல் நான் டீடோட்லர்.


ஆரூர் மூனா செந்தில்

டிஸ்கி : இன்று நான் விடுமுறைக்காக திருவாரூக்கு கிளம்புகிறேன். 1ம் தேதி தான் சென்னை திரும்புகிறேன். திருவாரூரில் இருந்த படியே திருப்பூர் பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். எனவே இது தான் இந்த ஆண்டின் கடைசி பதிவாக இருக்கக்கூடும். நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த வருடம் சந்திப்போம்.


34 comments:

 1. விடுங்க தல, திருஷ்டி கழிந்துவிட்டதுனு நினைத்துகொள்ளுங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவ்வளவு தான், உங்களுக்கு புரியுது மத்தவங்களுக்கு புரிய மாட்டேங்குதே.

   Delete
 2. வாங்க ஜாலியா திருப்பூர் போகலாம். . .

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா ராஜா.

   Delete
 3. உங்களுக்கு ஏற்பட்ட வலியிலும் வீட்டம்மா அடிச்சது மட்டும் எப்படி ஞாபகபடுத்தி ஒரு பதிவா போடுறீங்க நீங்க ரொம்ப தைரியசாலி,இருந்தாலும் இதையுள் வீடம்மாகிட்ட சொல்லாதீங்க

  ReplyDelete
  Replies
  1. ஹா ஹா ஹா. நன்றி அண்ணே.

   Delete
 4. உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள் நண்பா... (வீட்டம்மாவிடம் இருந்து)...

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகா. நல்ல ஐடியாவா இருக்கே, ஆனா செயல்படுத்துறது தானே சிரமம்.

   Delete
 5. முகுளத்தில்(Medulla oblongata) அடிபட்டிருக்குமோ என சந்தேகப்பட்டதை உங்கள் பாணியில் எழுதியிருப்பதை இரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நடனசபாபதி ஐயா

   Delete
 6. கண்ணாத்தாள் படத்தில் சுனா பனா வடிவேலுவை அவர் மனைவி தூக்கி சுற்றும் காட்சி நினைவிற்கு வந்தது. :))))))

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த கொலவெறி ராசாவே. இப்ப வரைக்கும் வாங்குனதே கண்ணக்கட்டுதே. இதுல அந்த லெவல்ல வாங்குனா மீ பாவம்.

   Delete
 7. ///கோபமடைந்த வீட்டம்மா எதிர் வீட்டில் பாக்கிறாங்க, சத்தம் போடாம வா என்று சொல்ல எவன்டா அவன் என்ன பாக்குறது என்று வீர வசனம் பேசி திரும்பிய நான் நிலை தடுமாறி///

  சார் அதிகம் குடிச்சது தப்பல்ல... கோபமடைந்த வீட்டம்மாவை பார்த்து பயந்ததுதான் காரணம் அதுமட்டுமல்ல பக்கதுவீட்டுகாரன் பார்க்கிறான் என்று தெரிஞ்சதுனால எங்க பொண்டாட்டிக்கு பயந்தவன் என்று நினைத்துவிடுவார்களோ என்று வீர வசனம் பேச திரும்பியதுதான் காரணம்... குடிச்சது காரணம் அல்ல ....

  ReplyDelete
  Replies
  1. இப்படி நான் இலைமறை காய்மறையாக சொன்னதை படக்குனு உடைச்சு வெளிச்சம் போட்டுகாட்டிப்புட்டீங்களே

   Delete
 8. // அவனவன் அட்வைஸ் பண்ணது தான் எனக்கு வாங்கிய அடியை விட வலித்தது.// ஹா ஹா ஹ என்ன ஒரு தத்துவம்

  ReplyDelete
  Replies
  1. என்னா சீனு அந்த சமயத்துல ச்ரித்திரம், பூகோளம் எல்லாம் நினைவில்வந்தது தெரியாதா

   Delete
 9. மச்சி உடைஞ்ச மாடிப் படிய கட்டி கொடுத்தாச்சா....?

  ReplyDelete
  Replies
  1. அதான் மச்சிஎனக்கும் புரியல. தக்காளி சங்கர் சிமெண்ட்ல கட்டியிருப்பானுங்க போல

   Delete
 10. Replies
  1. நன்றி மனோகரன்

   Delete
 11. அப்பாடி அந்த சனியனை விட்டாச்சா.மண்டை உடைந்ததும் நல்லதுக்குதான்.

  ReplyDelete
  Replies
  1. அக்கறைக்கு நன்றி அமுதாகிருஸ்ணா

   Delete
 12. "இன்றைக்கு ரயில்வே மருத்துவமனையில் ஒரு ஒரு டிப்பார்ட்மெண்ட்டாக பார்த்து பார்த்து எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து சரிபார்த்து ஒன்றும் பிரச்சனையில்லை என்று டாக்டர் சொன்னதும் தான் அப்பாடா தப்பிச்சேன் என்று தோன்றியது. "
  எங்களுக்கும் சந்தோசம் தலைக்கு வந்தது தலைபாகையோடு (பாண்டேஜ்) போனது.
  புது வருடம் சந்தோஷமாக ஆரம்பியுங்கள் , உங்கள் அப்பா எப்படி இருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. அப்பா நன்றாக இருக்கிறார், ந்ன்றி அஜீம் பாஸா

   Delete
 13. எழுந்து எனக்கு என்ன ஆச்சி என்று என் வீட்டம்மாவிடம் கேட்க பளாரென்று ஒரு அறை விட்டாள். சகலமும் கலங்கி விட்டது.// உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு....

  ReplyDelete
  Replies
  1. உங்க நக்கலும் எனக்கு புடிச்சிருக்கு ராபர்ட்

   Delete
 14. இன்று முதல் நான் டீடோட்லர். // ஏன்ணே ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட போறீங்களா???

  ReplyDelete
  Replies
  1. உட்டா எனக்கே மாலை போட்டுஇருப்பானுங்கோ

   Delete
 15. இன்று முதல் நான் டீடோட்லர். // நாங்க நம்பிட்டோம்.... அது சரி எத்தனை நாளுக்கு அண்ணே????? பார்த்துக்குங்க நியு இயர் வருது, பொங்கல், மாட்டுப் பொங்கல் எல்லாம் வருது.. நீங்க பாட்டுக்கு அவசரப்பட்டு வார்த்தைய விட்டுராதீங்க அம்புட்டுதான் நான் சொல்லுவேன்...:-) :-)

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் ஆசையா தான் இருக்கு.வீட்ல இருக்கிற பூரிகட்டைய நினைச்சாதான் பயமா இருக்கு

   Delete
 16. அண்ணே சொல்ல மறந்துட்டேன் "இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்".

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் இனியபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ராபர்ட்

   Delete
 17. ஏண்ணே...டீடோட்லர்னு ப்ளாக்ல ஸ்டேட்மெண்ட் விடணும்னு சொல்லியே வீட்டம்மா அடிச்சாங்களா?

  நீங்க சொல்றத பார்த்தா வீட்டுல எனக்காக பொண்ணு தேடிகிட்டு இருக்குறத மறு பரிசீலனை செய்யணும் போலிருக்கே!

  திருவாரூர் சரவணன்

  ReplyDelete
 18. அதெல்லாம் வேணாம், பூரிக்கட்டைல அடிவாங்குறதுலயும் ஒரு சுகம் இருக்கு. அனுபவியுங்க சரவணன்

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...