சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, April 28, 2011

வலைப்பதிவர்களை பற்றிய ஆதங்கம்

பதிவர்களில் மிகச்சிலரைத்தவிர பாக்கி அனைவரும் பரபரப்புக்காக எழுதுபவர்களே. உங்களுக்கு விசிட்டர்கள் தேவை, தரவரிசையில் முதலிடம் தேவை. ஏதேதோ பரபரப்புக்காக செய்கிறீர்கள். செய்யுங்கள். ஆனால் தான் சீனியரான பிறகு, தான் வந்த வழியே மற்றவர்கள் வர முயற்சிக்கும் போது அவர்களை சாடுவது என்பது மல்லார்ந்து பார்த்து எச்சில் துப்புவது போல.
உதாரணத்திற்கு நான் இருக்கிறேன். எனக்கு வலைப்பதிவு பற்றி ஒரு வருடத்திற்கு முன்பு தான் தெரியும். முதலில் நான் செய்த காரியம் மற்ற வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்தது தான். ஆறு மாதங்களுக்கு மேலாக மற்ற பதிவுகளை படித்து தான் எழுதும் முறையையே நான் கற்றுக் கொண்டேன். இதற்கு முன்பு மிக அதிகமாக வாசிக்கும் பழக்கம் மட்டுமே இருந்தது. எழுதும் பழக்கம் இல்லை. வாசிப்பதில் உள்ள சுகமே வேறு. நான் கடந்த ஆறு வருடமாக ஜனவரி மாதத்தின் எனது வருமானம் அதாவது வேலை பார்க்கும் போது ஜனவரி மாத சம்பளம், தற்பொழுது சொந்தத்தொழில் செய்யும் காலத்தில் ஒரு மாத லாபம் அனைத்தையும் சென்னை புத்தக கண்காட்சியில் புத்தகமாக வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். வலைப்பதிவுகளை படிக்க ஆரம்பித்த பிறகு தான் எழுதும் முயற்சியை துவங்கி சிறிது சிறிதாக வளர ஆரம்பித்துள்ளேன். இப்பொழுது மற்றவர்களை போல் சிலவற்றை சொந்தமாக எழுதியும் சிலவற்றை காப்பி பேஸ்ட் செய்வது வலைப்பதிவுகளில் சீனியரான நீங்கள் செய்தது தானே. அனைத்து பதிவுகளையும் சொந்தமாக எழுதுவதற்கு உங்களுக்கு பிறகு வலைப்பதிவு எழுத வந்தவர்கள் அனைவரும் எழுத்தாளர் சுஜாதாவா என்ன.
அடுத்தது அடுத்தவர்களை விமர்சிப்பது, உண்மையாக அடுத்தவர்களை விமர்சிப்பது என்பது இங்கு நடப்பதேயில்லை. ஒருவர் வலைப்பதிவுகளில் மிகப்பிரபலமாக இருக்கிறார் என்றால் தலைப்பே அவர் பதிவை திட்டி தான் ஆரம்பிக்கும். உள்ளே படித்துப்பார்த்தால் சரக்கு ஒன்றும் இருக்காது.
நம்நாட்டினருக்கு சந்தைப்படுத்தல் என்பது தான் சரிவர கையாள இயலாத கலை. அது தமிழனின் வழக்கம். நம்மவர்களின் உருவாக்கம் மிகத்திறமையானது. ஆனால் ஜப்பானியர்களைப் போல சந்தைப்படுத்துதல் சரிவர இயலாத ஒன்று. அதனால் தான் நாம் தொழிற்துறையில் சற்று பின்தங்கி இருக்கிறேhம். இதைப் பற்றி எழுத ஆரம்பித்தால் ஒரு புத்தகம் எழுதலாம். அந்த அளவுக்கு எனக்கு ஆதங்கம் உள்ளது. ஏனெனில் நான் ஒரு ஏற்றுமதியாளர். சொந்தமாக ஏற்றுமதி நிறுவனம் வைத்து இங்கிருந்து தேங்காய் மற்றும் இரும்பு நிப்பிள் (உற்பத்தி மற்றும் ஏற்றுமதி) ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறேன். ஆனால் சில நிறுவனங்களில் நம்முடைய சரக்கை விட அவர்களது பொருள் தான் நல்ல விலைக்கு செல்கிறது. நான் இன்னும் வளரும் நிலையிலேயே இருக்கிறேன். நான் இன்னும் சந்தைப்படுத்தும் நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அது வேறு கதை அதை விடுங்கள்.
வலைப்பதிவும் அப்படியே. ஆனால் நம்முடைய கதை மட்டும் கட்டுரைகளை சந்தைப்படுத்த திரட்டிகள் கிடைத்த பின்பு உங்கள் சரக்கை முக்கியத்துவப்படுத்தி உங்கள் நிலையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள். அதை விட்டு அவன் சரக்கு தரமில்லாதது என்றhல், அது தவறு. ஒரு பதிவின் உட்பொருள் உங்கள் சரக்கின் தரம். சந்தைப்படுத்தல் என்பது தலைப்பிடுதல். உங்கள் சரக்கும் தரமானதாகவும், சந்தைப்படுத்தலும் நியாயமானதாகவும் இருக்க வேண்டும். போட்டி என்பது ஆரோக்கியமாக இருந்தால் தான் போட்டியிடுதலில் ஒரு நிறைவு கிடைக்கும்.
யாரையும் காயப்படுத்துவது அதனால் லாபம் பெறுவது என்னைப் பொறுத்த வரை ஒவ்வாத ஒன்று. என்னைப் பொறுத்தவரை இந்தப்பதிவின் முலம் எந்த தனிநபரையும் காயப்படுத்தவில்லை என்ற மனநிறைவுடன்


ஆரூர் முனா செந்திலு


12 comments:

 1. //நம்முடைய கதை மட்டும் கட்டுரைகளை சந்தைப்படுத்த திரட்டிகள் கிடைத்த பின்பு உங்கள் சரக்கை முக்கியத்துவப்படுத்தி உங்கள் நிலையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.//

  வழிமொழிகிறேன்...

  ReplyDelete
 2. உங்கள் ஆதங்கம் உண்மை.

  ReplyDelete
 3. சங்கவி said...

  //நம்முடைய கதை மட்டும் கட்டுரைகளை சந்தைப்படுத்த திரட்டிகள் கிடைத்த பின்பு உங்கள் சரக்கை முக்கியத்துவப்படுத்தி உங்கள் நிலையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.//

  வழிமொழிகிறேன்...

  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 4. //பாலா said...

  உங்கள் ஆதங்கம் உண்மை.//

  நன்றி தோழரே

  ReplyDelete
 5. இங்குள்ள மிதமிஞ்சிய சுதந்திர உணர்வே பெரிய இடையூறு. அதை தப்பாக புரிந்துகொண்டு பயன் படுத்துபவர்களே அதிகம். இவர்களால் யாருக்கும் எவ்வித பயனும் இல்லை என்பதை நாளடைவில் புரியும். வீண் ஆர்பாட்டங்களும் வெற்று சவடால்களும், புதிதாக மோட்டார் பைக் வாங்கின பையன்கள் போல இதெல்லாம் இருக்கத்தான் செய்யும்.ஆனாலும் நம் வாசகர்களுக்கு நன்கு தெரியும் எவைகளை படிக்கவேண்டுமென்று.

  ReplyDelete
 6. பத்தி பத்தியாக பிரித்து எழுதுங்கள் ..நன்றாக இருக்கும்

  ReplyDelete
 7. உங்களின் நோக்கம் நன்று. நிறைய எழுதுங்கள்.

  ReplyDelete
 8. உங்கள் ஆதங்கம் நியாயமானது தான் சார்

  ReplyDelete
 9. //வாசிப்பதில் உள்ள சுகமே வேறு//

  வாங்க பங்காளி!

  ReplyDelete
 10. சிலவற்றை படிக்கும் போது நம் மனதில் ஒரு வேகம் உந்துதல் ஏற்படும் அது இந்த பதிவை படிக்கும் போது எனக்கு ஏற்ப்பட்டது.இன்னும் ஏதொ சொல்லுனும் போல இருக்கு,ஆன என்ன சொல்லறதுனு தெரியலை.உள் மனதில் இருந்து என் வாழ்த்து.

  ReplyDelete
 11. /நம்முடைய கதை மட்டும் கட்டுரைகளை சந்தைப்படுத்த திரட்டிகள் கிடைத்த பின்பு உங்கள் சரக்கை முக்கியத்துவப்படுத்தி உங்கள் நிலையை வளர்த்துக் கொள்ள பழகிக் கொள்ளுங்கள்.//

  வழிமொழிகிறேன்...

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...