சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, April 12, 2011

எல்லா படமும் திருட்டு விசிடி ல தான்

வர வர தமிழ்நாட்டில் தமிழனுக்கு மரியாதை இருக்க மாட்டேங்குது. தியேட்டரில் அராஜகம். யார் தான் இதை கேட்பது.
தியேட்டர்காரனுங்க பண்ணுற அட்டகாசம் இருக்கே, அப்பப்பா 1997 முதல் சென்னையில் தான் இருந்தேன். இடையில் இரண்டு வருடம் சொந்த வேலையின் காரணமாக திருவாரூர் சென்று இருந்து விட்டு இப்பொழுது தான் சென்னை வந்துள்ளேன். சமீபத்தில் ஐநாக்ஸ் தியேட்டரில் படம் பார்க்க சென்றேன். டிக்கெட் நு}ற்றியிருபது ரூபாய் என்றனர். சரி என்று வாங்கி விட்டு உள்நுழைந்தால் சோதனை செய்கிறேன் என்று பேண்டை துழவுகிறான் . உள்ளே போனால் பெப்சி குறைந்தபட்ச விலை ஐம்பது ரூபாய் என்கிறhன். இதில் பாப்கார்ன் மற்றும் பெப்சி காம்போ பேக் நுற்றியிருபது ரூபாய். நானெல்லாம் திருமணத்திற்கு முன் ஒவ்வொரு இரவுக்காட்சிக்கும் தியேட்டரில் தான் புல் மப்போடு இருப்பேன். ஆனாலும் அப்போது உதயம் தியேட்டரில் டிக்கெட் நாற்பது ரூபாய் தான். திருமணத்திற்கு பின் ஒவ்வொன்றிற்கும் கணக்கு பார்க்க வேண்டியிருக்கிறது. தற்பொழுது ஒரு முறை சினிமா பார்க்க குறைந்தபட்சம் நபருக்கு இருநுறு ரூபாய் ஆகிறது. இப்போதெல்லாம் சரக்கு அடிக்கும் நாள் மிகக்குறைவு. நானெல்லாம் தினம் இருநுறு செலவு செய்தால் என்னஆவது.
ஏண்டா எச்சபொறுக்கி நாய்களா தமிழ்நாட்டுக்கு வறீங்க. தியேட்டர் தொடங்குறீங்க. நீ மட்டும் லாபம் சம்பாதிச்சா படம் பார்க்குற நாங்களலெல்லாம் என்னடா ஆவுறது. சரியா கணக்கு பண்ணி பாருங்க. இந்த திரையங்க உரிமையாளர் எவனும் தமிழனா இருக்க மாட்டான். இருந்தாலும் அது நல்லவழி சம்பாதிப்பா இருக்காது.
முன்னயெல்லாம் இந்த திரைப்படம் எடுக்குறவனுங்க திருட்டு விசிடி ஓழிக-ன்னு கோஷம் போடுறப்ப நமக்கும் ஒரு உறுத்தல் ஆதங்கம் இருக்கும். நானும் இதுநாள் வரை திருட்டு விசிடியில் படம் பார்ப்பதை தவிர்த்தவன்.
ஆனால் இவனுங்க அடிக்கிற கூத்தைப் பார்த்து இனிமே எல்லாப் படமும் திருட்டு விசிடில தான்னு முடிவு பண்ணிட்டேன். ஏண்டா படம் வெளியாகி மறுநாளே பர்மா பஜார்-ல இருபது ரூபாய்க்கு தியேட்டர் பிரிண்ட் கிடைக்குது. ஒரு வாரத்தில் அசல் போன்ற விசிடி கிடைக்கிறது. அதை விட்டுவிட்டு எனக்கு ஒருவனுக்கு மட்டும் இருநுறு கொடுத்து படம் பார்க்க நான் என்ன முட்டாப்பு . . . . . . . . . யா.
அதாவது படம் எடுப்பவன், படம் பார்ப்பவன் இருவரும் கணவன் மனைவி மாதிரி. ஒருவருக்கொருவர் அட்ஜஸ்ட் பண்ணினால் தான் திரையுலகம் வாழும். நீ படம் எடுத்து இந்த மாதிரி விலையேத்தி கூத்தடிச்சா நான் இருபது ரூபாய்க்கு திருட்டு விசிடி தான் பார்ப்பேன். கோச்சுகிட்டு படம் எடுக்காம போறியா - குளத்தில் கோச்சுக்கிட்டு கழுவாம போனா நஷ்டம் உனக்கு தான் எனக்கு இல்லை. எனக்கு வேறு மொழிப்படங்கள் இருக்கு. நான் பார்த்துட்டு போறேன். ஒழுங்கா டிக்கெட் விலையை ரூ. ஐம்பதுக்கு குறைச்சா என்னைப்போல் அடிக்கடி படம் பார்க்கும் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள். உனக்கு லாபம் கிடைக்கும். அதை விட்டு விட்டு டிக்கெட் விலையை ஏத்தி கூத்தடிச்சா திருட்டு விசிடி தான்டி.
ஏண்டா தியேட்டருக்குள் சிகரெட், பாக்கு கொண்டு வந்தால் தப்பு. நீ நுறு ரூவாக்கு திண்பன்டம் விற்ப. என்னால வாங்க முடியாது. வீட்டில் இருந்து கொண்டு வரேன். அதை ஏன் நீ தடுக்குற. அப்ப நீ செய்றதெல்லாம் ஒரு நாள் உனக்கு ஆப்பா திரும்ப போகுது.
நான் படிக்கிற காலத்தில் அதாவது 1997-98 ஆண்டு வாக்கில் ஈகா தியேட்டரில் ரூ.4.25 க்கு குறைந்த விலை டிக்கெட் கிடைக்கும். அப்பொழுது தினமும் பகல் காட்சி ஈகா அல்லது அபிராமி தான். கடந்த வாரம் கிறிஸ்டியன் பிரதர்ஸ் படம் ஈகாவில் என்று செய்தித்தாளில் விளம்பரம் பார்த்து நீண்ட நாட்களுக்கு பிறகு ஈகா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றேன். டிக்கெட் எடுத்து விட்டு பழைய ஞாபகங்களில் பின்புறம் டிக்கெட் கவுண்டர் இருக்கும் இருக்கும் இடம் நோக்கி சென்றேன். அப்படி ஒன்று இருந்ததற்கான தடமே தெரியவில்லை. கேட்டால் நீ என்ன சார் ஊருக்கு புதுசா அதையெல்லாம் எடுத்து பல வருடங்கள் ஆகிறது என்று செக்யுரிட்டி கூறுகிறார். எவ்வளவு நாட்கள், எவ்வளவு திரைப்படங்கள் ஈகாவில் நான் பார்த்திருப்பேன். மனது சரியல்லாமல் ஒரு பால்யகாலத்து நண்பன் மறைந்த அளவுக்கு வருத்தத்துடன் தான் படம் பார்த்தேன்.
தற்காலம் ஒருவேளை ஆட்சி மாறினால் இதற்கு ஒரு வழி கிடைக்கும் என்று மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். வேறு வழி.
நாம் எவன் நல்லவன் என்று பார்த்து ஓட்டுப்போடாமல் எவன் நன்றாக பேசுகிறான் என்பதை பார்த்து ஆட்சியில் அமர வைத்தவர்கள் தானே. நமக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.

ஆதங்கத்துடன்
ஆரூர் முனா செந்திலு


3 comments:

  1. காங்கிரஸ் மற்றும் தி . மு . க. கூட்டணியின் கையால் ஆகாத தனத்தினால் ஈழ மக்கள் பட்ட துன்பத்தை பாருங்கள்
    இதை பார்த்து விட்டு ஒட்டு போடுங்கள்

    http://thamizhaathamizhaa.weebly.com

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...