சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Tuesday, May 27, 2014

அலற வைத்த கத்திரி தினங்கள்

கத்திரி ஆரம்பித்ததிலிருந்து நமக்கு ஏழரை ஆரம்பித்து விட்டது. கத்திரியின் துவக்கத்தில் மழை பெய்து மகிழ்வித்த பிறகு கொடூர வெயில் ஆரம்பித்த அன்று ஏசி புகைந்து விட்டது. 


எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமான புதிதில் வாங்கிய 1.5 டன் ஒனிடா ஸ்ப்ளிட் ஏசி, இது வரை செலவே வைத்தது இல்லை. ஆனால் இந்த சம்மருக்கு எனக்கு ஏழரைக்கு பிள்ளையார் சுழி போட்டது விட்டது. 

முதல் தளத்தில் வீடு இருப்பதால் வெயில் நேரடியாக உள்ளிறங்கி இரவில் வீடு அனலாக தகிக்கும். மற்றவர்கள் மொட்டை மாடியில் தண்ணி தெளித்து வைத்து  ஹாயாக போய் படுத்து விட வீட்டம்மணி அறையை விட்டு வெளியில் வரமுடியாத சூழல். அவருக்கு துணையாக நானும் இருந்தாக வேண்டும்.


முதல் நாள் இரவு வெயிலின் உக்கிரம் புரியாமல் லைட்டாக மகாதியானத்துடன் சென்று படுத்து விட விடியற்காலையில் கிட்னியில் யுரினல் டியுபில் வலி பின்னியெடுக்க ஆரம்பித்தது. அன்று முழுக்க மருத்துவரிடம் செல்லாமல் கைவைத்தியத்தை வைத்தே தள்ளினேன். ஆனால் மாலை வரை வலி நிற்கவேயில்லை.

அப்பா, உடனடியாக கொளத்தூரில் இருக்கும் கிட்னி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். மருத்துவர் என் வலியின் தன்மையை கேட்டறிந்து "இது கிட்னியில் கல் பிரச்சனையாகத்தான் இருக்கும். உடனடியாக ஸ்கேன் எடுக்கவும்" என்று பரிந்துரைத்தார். 


ஸ்கேன் எடுத்து முடித்ததும் கிட்னி வீங்கியிருக்கிறது. கல்லின் அளவு தெரியவில்லை, டியிபி எக்ஸ்ரே எடுக்க வேண்டும்" என்றார்கள். அதையும் பணத்தை கட்டி எடுத்தேன். எக்ஸ்ரேவை பார்த்த மருத்துவர், எந்த ரிப்போர்ட்டையும் என்னிடம் கொடுக்காமல் "கல்லின் அளவு 15மிமி அளவுக்கு இருக்கிறது. கிட்னியும் வீங்கியிருக்கிறது, உடனடியாக கல்லை நீக்கியாக வேண்டும். லேப்ரஸ்கோப்புக்கு 35000 செலவாகும். காலைக்குள் பணத்தை கட்டி சிகிச்சையை தொடங்க வேண்டும்" என்றார்.

நான் "பணத்தை கட்டி விடவா" என்று கேட்க, அப்பா கடுப்பாகி "வா வீட்டுக்கு போகலாம். நாளை ரயில்வே மருத்துவமனையில் பார்த்துக் கொள்ளலாம்" என்றார். எனக்கு ரயில்வே ஆஸ்பிட்டல் கூட்டத்தை நினைத்ததும் சற்று தயக்கமாக இருந்தது. 


அப்பாவுக்கு பயந்து கிளம்பி வலியுடனே அன்றைய இரவை அந்த வெக்கை ரூமுக்குள் கடத்த வேண்டியதாக போயிற்று. மறுநாள் காலையிலேயே கிளம்பி மருத்துவமனைக்கு சென்று சர்ஜிக்கல் ஓபி மருத்துவரை பார்த்தேன். 

முதல் நாள் எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டையும் எக்ஸ்ரேவையும் பார்த்தவர் என் உடம்பை சோதித்து "நீங்கள் சொல்லும் அறிகுறிகளுக்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை. கேசுவாலிட்டியில் ஊசி போட்டு இரண்டு மணிநேரம் வைத்துப்பார்த்து முடிவு செய்யலாம்" என்று சொன்னார். ஊசி போட்டு ஒரு மணிநேரத்தில் வலியே இல்லை, எல்லாம் நார்மலாகி விட்டது. பிறகு ஸ்கேன் எழுதி கொடுத்தார்கள்.

ரயில்வே ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுப்பதற்குள் சென்னையிலிருந்து கிளம்பி மதுரை வந்து மாடு பிடித்து திரும்பவும் சென்னைக்கே வந்து விடலாம். முதல் நாள் யுனியனில் ஆளைப் பிடித்து அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி  மறுநாள் காலை எதுவும் சாப்பிடாமல் எட்டு மணிக்கு ஸ்கேனுக்கு சென்றால் எனக்கு ஸ்கேன் எடுக்கும் போது மணி 12, ஆனால் காலை 8 மணிக்கே இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து வயிறு நிரம்ப காத்திருக்க வேண்டும்.

அரை மணி நேரத்தில் ஒன்னுக்கு வந்து அடக்க முடியாமல் போய் விட்டு வந்தால் மறுபடியும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்து காத்திருக்க வேண்டும். மறுபடியும் அரைமணிநேரத்தில் ஒன்னுக்கு, மறுபடியும் தண்ணீர் என்று நொந்து நூலாகிப் போனேன். எனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது மாதவா.

அது ரிசல்ட் வந்து மோடி கோலேச்சிய தினம். ஊரே பரபரப்பாக இருக்க நான் மட்டும் 2 லிட்டர் தண்ணியும் பாத்ரூமுமாக இருந்தேன். 12 மணிக்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தால் அது 7 மிமி தான் அளவு இருக்கிறது. லேப்ரஸ்கோப் தேவையில்லை, மருந்திலேயே கரைத்து விடலாம் என்றனர். 

நல்லப்பிள்ளையாக அடக்கி வாசித்து மருந்து சாப்பிட்டு அளவுச் சாப்பாட்டு சாப்பிட்டு வந்தேன். நேற்று கல் உடைந்து வெளியேறி விட்டது. பிரச்சனை முடிந்து என்று நினைத்தேன். அப்போது என்னை பார்க்க வந்த டாக்டர் நண்பன் "கல் ஒரு முறை வந்து விட்டால் மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்கும். அடக்கி வாசி மாமே"ன்னு சொல்லிட்டு போயிட்டான். 

அப்ப நான் அடக்கி தான் வாசிக்கனுமா

ஆரூர் மூனா

28 comments:

  1. Replies
    1. என்னங்க செய்ய நம்ம நிலைமை அப்படியாகிடுச்சி

      Delete
  2. 15மிமி...7 மிமி ஆனதன் மர்மம்??35 ஆயிரம் தப்பிச்சுது...நானும் 90களில் தாம்பரத்திலிருந்து பெரம்பூர் ரயில்வே ஆஸ்பத்திரிக்கு சில நாட்கள் பயணம் செய்ததுண்டு. அப்புறம் வேலைக்காவதுன்னு அங்கே எட்டி பார்ப்பதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தனியார் மருத்துவமனைக்கும் அரசு மருத்துவமனைக்கும் உள்ள வித்தியாசம் அது தான்.

      Delete
  3. மஹா தியானம் செய்யக்கூடாதுன்னு டாக்டர் சொல்லவில்லையா ?

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் அடக்கி வாசிக்கனும் அடக்கி வாசிக்கனும்னு சொல்லியிருக்கேனே

      Delete
    2. நான் இன்னொண்னை நினைச்சிட்டேன்!

      Delete
  4. என் 15 வயது வரை ஐ.சி.எப் மருத்துவமனையில்தான் மருத்துவம் பார்த்து வந்தேன். அப்பா, சித்தப்பா, மாமா என அனைவரும் ரயில்வே தொழிலாளர்கள் என்பதாலே நீங்கள் சொன்ன ரயில்வே ஹாஸ்பிட்டல் அனுபவங்களை உணர்வுபூர்வமாக அறிய முடிந்தது.

    இந்த கத்தரியில், வாழைத்தண்டு ஜூஸ், லெமன் ஜூஸ், பூசணிக்காய் ஜூஸ் அதிகமாக குடித்து வாருங்கள் செந்தில்ஜி. கற்கள் எல்லாம் ஆட்டோமேட்டிக்காக கரைந்து வந்து விழும். இதற்கெல்லாம் வைத்தியம் பார்த்து உடம்பை இன்னும் மோசமாக்கிக்கொள்ளாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நாளை முதல் ஜூஸ் டயட்டுக்கு மாறிட வேண்டியது தான்.

      Delete
  5. பொ ரியல் செய்யும் பீன்ஸ் கால் கிலோ வாங்கி சுத்தம் செய்து ஒரு லிட்டர் குடி தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறியவுடன் தினமும் இரண்டு தம்ளர் குடித்து வாருங்கள். கிட்னி கல் கரைந்துவிடும் என இதே தமிழ்மணம் பதிவில் படித்தேன்.

    ReplyDelete
  6. I had kidney stones problem 15 years before. The suggestion given to me was
    a) Drink lots of water (i.e. make sure you drink atleast 2 cups of water after evey time you pass urine)
    b) Reduce the amount of SALT in food

    I am following this and I did NOT get the kidney stone issue for past 15 years.

    ReplyDelete
  7. nanba ithellam kochadaiyaan vimarsnam eluthaathaal vantha vinaythaan. anyhow get well soon.

    ReplyDelete
  8. as usual thalaivar creates magic and shut all the gossips in his own style.

    ReplyDelete
  9. மகா தியானத்தை பீர் தியா[ன]கமாக மாற்றினால் நல்லது, எப்பவும் தண்ணீர் குடிக்க வேண்டும், தண்ணீர் போரடித்தால் மோர், மோர் போரடித்தால் எலுமிச்சை சர்பத் டேக் கேர்.

    ReplyDelete
  10. என் மனைவிக்கு பயங்கர வயிட்ரு வலி, பெங்களூர் மனிப்பால் மருத்துவமனைக்கு போனோம். பல ஸ்கேன் எடுத்து உடனே அட்மிட் பன்னனும் சர்ஜரி பன்னனும்னு சொல்லிட்டாங்க... நானும் ஊரில் இல்லை பெஙலளுரில் வெரு யாரும் உதவிக்கு இல்லை. என்னவானாலும் சென்னை போய் கான்பிக்கலாம்னு அங்கு வந்து காமிச்சா... தண்ணிகொஞம் நெரையா குடிம்ம எல்லாம் சரியாயிடும்னு சொல்லி அனுபிட்டங்க!

    ReplyDelete
  11. homeopathy la kidney stone simple ah sari agithu. plz try one time .

    ReplyDelete
  12. என்ன ஆச்சு பாஸ். காணாமல் போகிட்டீங்க.

    ReplyDelete
  13. சிறந்த பகிர்வு

    புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
    இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
  14. Thanks for sharing this post. I saw this blog. I shared blog with my brother. My brother working in Vehicle towing company.It is best service provide. Thanks for posting.

    ReplyDelete
  15. Stone problem in kidney is the very bad thing in these days. My friend Ankit who is working cadeau voor moeder Jewelry webshop. He has also facing this problem. So i share your post with him. It will help him.

    ReplyDelete
  16. Thank you for sharing this information. It was useful and interesting. I am looking for a dell showroom in Chennai to buy a brand new dell Inspiron laptop.

    ReplyDelete
  17. Happy New Year

    அருமை

    www.nattumarunthu.com
    nattu marunthu kadai online
    nattu marunthu online

    ReplyDelete
  18. Supper article keep writing 👍

    See also ours website
    https://www.biofact.in

    ReplyDelete
  19. Such a great article. Really it was nice content. Keep it up. Thanks for sharing us. Agra Same Day Tour Package

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...