சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Saturday, May 14, 2011

புறக்கணிக்கும் தமிழ்மணம்


நானெல்லாம் சிறு வலைப்பதிவனுக்கும் சிறு வலைபதிவன். சில நாட்களாக பார்க்கிறேன். தமிழ்மணத்தில் எனது பதிவை இணைத்தால் சில நிமிடங்களில் அது தமிழ்மணத்தில் இருந்து வெளியேறி விடுகிறது. இத்தனைக்கும் அது ஆபாசமான தலைப்போ பதிவோ அல்ல. பின் ஏன் இந்த பாரபட்சம் என்று புரியவில்லை. இதனால் வலைப்பதிவை பார்வையிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. எனது வலைப்பதிவை கட்டண சேவைக்காக இது போல் நெருக்குகிறதா என்றும் புரியவில்லை. இவ்வாறு இருக்க பின் எப்படி வலைப்பதிவுகளில் டிராபிக் ரேங்க் உண்மையாக இருக்கும். சில பதிவர்களைப் போல் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு உன் பதிவுக்கு நான் ஒட்டளிக்கிறேன். நீ என் பதிவுக்கு ஒட்டளி என்று சொல்ல தன்மானம் தடுக்கிறது. எழுதுவதில் விஷயமோ கருத்தோ ஒன்றுமே இல்லாத பதிவுகளுக்கு கூட 20 முதல் 25 ஒட்டுகள் சாதாரணமாக விழுகின்றன. நானெல்லாம் ஒரு பதிவுக்கு கூட 3 ஒட்டுகளை தாண்டியது கிடையாது. இப்பொழுது பிரச்சனை ஒட்டு கிடையாது. அது நானும் வலையுலகில் அரசியல் செய்ய ஆரம்பித்தால் கிடைத்து விட்டு போகிறது. ஆனால் என் ஆதங்கம் எல்லாம் என்னுடைய பதிவு பதிவிட்டு 5 நிமிடங்களுக்கு கூட தமிழ்மணத்தில் நிலைக்க மாட்டேங்குது. அதற்கு காரணம் வேண்டும்.

இந்த பதிவிற்காக என் வலைப்பதிவை தமிழ்மணம் புறக்கணித்தாலும் கவலையில்லை.

ஆரூர் முனா செந்திலு6 comments:

 1. தொடர்ந்து எழுதுங்க இராசா... வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. தொடர்ந்து எழுதுங்க

  ReplyDelete
 3. தமிழ் மனம் புறக்கணித்தால் இன்ட்லி இருகிறதே. கவலயை விடுங்கள்.

  ReplyDelete
 4. நண்பரே தொடர்ந்து எழுதுங்கள்..அதுவே உயரத்திற்க்கு கொண்டு செல்லும்.

  ReplyDelete
 5. சேம் ப்ளெட்! தமிழ்மணத்தில் இணைக்க நானும் முயன்றேன்! இதுவரை தோல்வியே! இண்ட்லி சூப்பர்!

  ReplyDelete
 6. இதெல்லாம் ஒரு பிரச்சனையே கிடையாது தல, ஏதாவது தினமும் எழுதுங்க.., உங்க எழுத்து பிடிச்சதுன்னா மக்கள் படிக்க ஆரம்பிச்சிடுவாங்க..,

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...