சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Wednesday, March 13, 2013

ஹைய்யா நான் ஒல்லியாகப் போகிறேன்

பதிவு எழுத வந்த காலங்களில் இருந்து நான் பயன்படுத்தி வந்த யுனிகோட் ரைட்டர் திடீரென இயங்காமல் போகவே சில நாட்கள் பதிவு எழுத முடியாமல் தவித்தேன். பிறகு நிலைத்தகவலை பதிவிலும் முகநூலிலும் பகிர்ந்த பின்பு நண்பர்கள் பலரும் வந்து புதிய யுனிகோட் ரைட்டர் பற்றிய தகவலை பகிர்ந்து எனக்கு உதவினார்கள். அதன் மூலம் நான் சிற்சில தடுமாற்றங்களுடன் எழுதத் தொடங்கி இப்பொழுது பழகி விட்டது. உதவிய நண்பர்களுக்கு நன்றி.

-----------------------------------------

பிறந்ததிலிருந்தே குண்டாகவே இருந்து விட்டேன். அவ்வப்போது குண்டாக இருப்பது பற்றிய தாழ்வு மனப்பான்மை வந்து போகும். அப்படி வரும் சமயங்களில் விடியற்காலை எழுந்து திருவாரூர் கமலாலய குளத்தை நான்கு ரவுண்டு ஓடி வருவேன். பதினைந்து நாட்களில் ஆர்வம் குறைந்து விட்டு விடுவேன்.


திருமணத்திற்கு சில மாதம் முன்பு உடலை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விடாப்பிடியாக முடிவு செய்து அண்ணாநகரில் இருக்கும் தல்வாக்கர் ஜிம்மில் சேர்ந்தேன். அவர்கள் எந்த பகுதியில் எந்த அளவுக்கு குறைய வேண்டும் எவ்வளவு கிலோ குறைய வேண்டும் என்று கேட்டு உடற்பயிற்சி அட்டவணை போட்டுக் கொடுத்தார்கள். ஒரு வருட கட்டணம் 50,000 ரூபாய்.

அங்கு இருந்த டயடீசியன் என்ன சாப்பிட வேண்டும் என்று ஒரு சார்ட் போட்டுக் கொடுத்தார். அவற்றினை பார்த்தால் ஒரு மனிதன் செய்யவே முடியாத அளவுக்கு ஒரு அட்டவணை. அதுவும் அந்த உணவுபொருட்களை செய்து கொடுப்பதற்கே ஒரு சமையற்காரர் வேண்டும். இத்தனைக்கும் நான் பாச்சிலர் ரூமில் தங்கியிருந்தேன்.

சார்ட்டை பார்த்தால் மயக்கமே வந்து விடும். காலையில் ஜிம்முக்கு செல்வதற்கு முன்பு வெதுவெதுப்பான குடிநீர் இரண்டு டம்ளர், ஜிம்முக்கு சென்று வந்த பிறகு ஒரு கப் ஓட்ஸ், அல்லது இரண்டு இட்லி அல்லது ஒரு தோசை. தேங்காய் சட்னி கூடாது. பருப்பு கூடாது.


பதினொரு மணிக்கு மோர், மதிய சாப்பாடு ஒரு கப் சாதம், ஒரு கப் காய்கறிகள், நான்கு மணிக்கு நான்கு மேரி பிஸ்கட்டுடன் ஓரு பிளாக் டீ. ஏழு மணிக்குள் சப்பாத்தி இரண்டு எந்த உணவும் வறுக்கப்படக் கூடாது, பொறிக்கப்படக் கூடாது. தேங்காய் எந்த உணவிலும் சேர்க்கப்படக் கூடாது. அவ்வளவு தான் டயட்.

நானோ சாயந்திரம் டீக்கு சைடாக முழு தந்தூரி கோழியை முழுங்கும் ஆள். மதிய சாப்பாட்டை 3 மணிக்கு சாப்பிடும் பழக்கமுள்ளவன், இரவு சாப்பாட்டை 11 மணிக்கு முன்பாக சாப்பிட்டதாக வரலாறே கி்டையாது அதுவும் குவார்ட்டர் உடன் தான்.

பேச்சிலர் ரூமில் இருக்கும் நான் இந்த டயட் சார்ட் உணவுகளை எங்கே போய் செய்ய, ஒரு வெறியில் முயற்சித்தேன். எடையும் வலுவான உடற்பயிற்சியினாலும், டயட்டினாலும் குறைந்தது. ஆனால் எனக்கு எந்த நேரமும் பசியாகவே இருக்கும்.


ஓட்ஸை பார்த்தால் கொலை கடுப்பாகும். காய்கறிகள் மட்டும் தின்று தின்று கொம்பு முளைக்காதது தான் குறை. இரண்டு மாதம் 15 கிலோ குறைந்தேன். ஆனால் கண்ணெல்லாம் கறுப்பு விழுந்து, டொக்கு மாதிரி ஆகிவிட்டேன்.

இரண்டு மாதங்களுக்கு பிறகு ஊருக்கு சென்றால் என் அப்பா ரெய்டு விட்டார் "இந்தளவுக்கு மோசமான நிலையில் நீ உடலை குறைக்க வேண்டிய அவசியமே இல்லை. ஒழுங்காக ஜிம்முக்கு போவதை கைவிடு, குண்டாக இருப்பது பரம்பரை உடல்வாகு" என்று. அதோடு விட்டவன் தான்.


அதன்பிறகு முடிந்த அளவுக்கு சாப்பாட்டு அளவை மட்டும் தான் குறைத்திருந்தேன். உடல் பருமனை குறைக்க முயற்சிக்கவே இல்லை. என் சக ஊழியர் ஒருவர் 120 கிலோ எடை இருந்து இப்பொழுது 80 கிலோவாக குறைந்து விட்டார். அவரிடம் எடை குறைந்த காரணத்தை கேட்ட போது அக்குபஞ்சர் மூலமாக குறைத்ததாக கூறினார்.

அது மட்டுமில்லாமல் என்னையும் கூட்டிப் போவதாகவும் நானும் எடை குறைந்து விடுவேன் என்று நப்பாசை காட்டினார். நானும் ரொம்ப நாட்களாகவே மறுத்து வந்தேன். ஒரு நாள் வீட்டம்மாவிடம் இந்த விஷயத்தை சொல்லப் போக அவரும் என்னை அங்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்தினார்.

வேறு வழியில்லாமல் இன்று அவருடன் அந்த அக்குபஞ்சர் மருத்துவமனைக்கு சென்றேன். உள்ளே ஏற்கனவே கூட்டம் நிரம்பி வழிந்தது. குறைந்தது 100 பேர் இருக்கும். என் நண்பர் முன்பதிவு செய்திருந்ததால் நாங்கள் உடனடியாக அக்குஹீலரை சந்தித்தோம்.

நான் இதுவரை முன்பின் அக்குபஞ்சர் ட்ரீட்மெண்ட் பார்த்தது இல்லை. என்ன மாதிரி மருத்துவம் செய்வார்கள் என்பதே தெரியாது. அக்குஹீலர் முன் அமர்ந்து என்ன செய்யப் போகிறாரோ என்று யோசித்தேன்.

என் கையில் ஒரு நிமிடம் இரண்டு இடங்களில் நாடி பார்த்தார். அவ்வளவு தான். தினமும் இரண்டு வேளை மட்டும் சாப்பிடுங்கள், பால் தயிர் வேண்டாம், பதினைந்து நாட்கள் கழித்து வந்து பார்க்கவும் என்று சொல்லி அனுப்பி விட்டார். நூறு ரூபாய் கட்டணம்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நண்பரிடம் விசாரித்த போது அவர் உன் கையைப் பிடித்து அதில் இரண்டு நரம்புகளை ஓரு நிமிடம் நிறுத்தி பிறகு விடும் போது ரத்த ஓட்டம் சீராகி உடல் எடை குறையத் தொடங்கும் என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவனவன் உடல் எடையை குறைக்க காலங்கார்த்தால உயிர விட்டு ஓடிக்கிட்டு இருக்கான். இது என்னடானா கையை பிடிக்கிறார். அவ்வளவு தான். பதினைந்து நாள் கழித்து மீண்டும் கையை பிடிப்பாராம்.

டயட்டும் கிடையாது. உடற்பயிற்சியும் கிடையாது. ஆனால் எடை குறையுமாம். எனக்கு ஒன்னும் புரியலை. பதினைந்து நாள் கழித்து பார்த்து தான் முடிவு செய்ய முடியும்.

ஆரூர் மூனா செந்தில்


36 comments:

  1. அக்கு பஞ்சர்ல எடை குறையுமா ? புதுசால இருக்கு ..

    ReplyDelete
    Replies
    1. அதாங்க, இப்பவரைக்கும் என்னால நம்ப முடியல.

      Delete
  2. பார்த்து தலைவா.. பஞ்சர் ஆக்கிடப்போறாங்ய்க..

    ReplyDelete
    Replies
    1. அதெல்லாம் நாங்க உஷாருங்க

      Delete
  3. என் அனுபவமும் இப்படித்தான்; தங்க்ஸிற்கு கால்வலி. அக்கு பங்சர் போகச்சொன்னாங்க. வரிசையாக நாற்காலிகள். நாம் என்னவென்று சொல்லாமலேயே அவர் வரிசையாக ஒவ்வொரு ’வியாதிக்காரரிடமும்’ சென்று 8-10 வினாடிகள் நாடி பார்த்தார். அடுத்து 6-8 வினாடிகள் நடுவிரலை மெ..ல் .. ல தொட்டார். பசிக்கும் போது சாப்பிடுங்கள். மற்ற மருந்து மாத்திரைகளை நிறுத்தி விடுங்கள். நிறுத்தி ரத்த அழுத்தம் அதிகமாகி வழக்கமாகப் போகும் மருத்துவரிடம் நன்கு திட்டு வாங்கினோம்.

    ஒன்றரை மணிவரை பார்க்கும் அவரிடம் நான் பதினோரு மணிக்கு 76வது ‘வியாதியஸ்தர்’. ஒரு கணக்குப் போட்டேன். தினமும் 20 +20 = 40 ஆயிரம்.
    ஒரு ஐடியா வந்தது. நேரே அந்த மருத்துவரிடம் போய் கால்வலியை நிறுத்துங்க ... இல்லாட்டி இன்கம் டாக்ஸில் போய் புகார் சொல்லிவிடுவேன் என்று சொல்லி விடலாமா என்று ஒரு யோசனை ...!

    ReplyDelete
    Replies
    1. சரியாக சொன்னீர்கள். நன்றி தருமி ஐயா

      Delete
  4. கொய்யாலே ஒரு நாளைக்கு நான் 2 மணித்தியாலம் மூச்சிரைக்க எக்ஸர்ஸைஸ் செய்றன் இதென்னான்னா கையப்பிடிக்கிறதா பாஸ் இது வேர்க்கவுட் ஆயிட்டுதுன்னா சொல்லுங்க நான் இலங்கையில் இருந்து இதுக்குன்னே இந்தியா வந்துடுறன்

    ReplyDelete
    Replies
    1. ரெண்டு மாசம் வெயிட் பண்ணவும். எனக்கு ஏதாவது முன்னேற்றம் தெரிந்தால் அதற்கப்புறம் சென்னை வரலாம். நான் அழைத்துப் போகிறேன்.

      Delete
  5. இதெல்லாம் சும்மா...

    சிறிது உடம்பை (ஆசையை) குறைக்கலாம்...

    நீங்கள் குண்டாக இருந்தால் தான் அழகு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  6. தலைவா முறையான உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மட்டும்தான் உடம்பைக்குறைக்க முடியும்.. டெய்லி என் கூட ஐ.சி.எஃப் கிரவுண்டுக்கு வந்துடுங்களேன்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி மணிகண்டவேல். இந்த யோசனை எனக்கும் வந்தது. ஆனால் நீங்கள் சாயந்திரம் வருகிறீர்கள். அந்த நேரம் எனக்கு வேலையிருக்குமே என்று தான் யோசித்தேன்.

      Delete
  7. பாஸ் கேட்டு சொல்லுங்க நானும் தொப்பைய குறைக்கணும்

    ReplyDelete
    Replies
    1. வரிசையில நில்லுங்க எனக்கு நிவாரணம் தெரிந்தால் அடுத்ததாக உங்களுக்கு தான் அப்பாயிண்ட்மெண்ட்

      Delete
  8. நண்பா, உடல் எடை ஒரு பக்கம் இருக்கட்டும், நீங்க மதியம் சாபிடற நேரமும் இரவு சாப்பிட நேரமும் மாற்றி கொஞ்சம் சீக்கிரம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுந்தர். நான் சொன்ன சாப்பாட்டு நேரம் திருமணத்திற்கு முன்பு, இப்பொழுது அடியோடு மாறி விட்டது.

      Delete
  9. // ஒரு வருட கட்டணம் 50,000 ரூபாய்.//
    உங்களுக்கு கொழுப்பு உண்மையில் அதிகமாத்தான் இருக்கு......

    அசைவத்த விடுங்கள்....தண்ணீர் நிறைய அருந்துங்கள்......பாதி பசியில் சாப்பாட்டை நிறுத்தி கொள்ளுங்கள்......இரவில் பால் குடித்து உறங்கும் பழக்கம் இருந்தால் தவிர்க்கவும்.

    இவ்வாறு ஒரு மண்டலம் இருக்கவும் ....நல்ல முன்னேற்றம் ஏற்ப்பட்டால் ....பணத்தை மணியாடர் செய்யவும்........

    ReplyDelete
    Replies
    1. மறந்துட்டேன்....சாப்பிட்ட உடனே படுத்து விடாதீர்கள்...நடந்தால் சற்று நல்லது

      Delete
    2. நான் ஏற்கனவே முயற்சித்துப் பார்த்த விஷயங்களை மறுபடியும் சொல்லி வருமானம் பார்க்க முயற்சிக்கிறீர்கள். என் உடல்வாகே குண்டு தான். இந்த வகையில் சில மில்லிகிராம்கள் குறையுமே தவிர கிலோக்கணக்கில் குறையாது

      Delete
  10. மூனா,

    நீங்க பார்த்தது அக்கு பிரஷ்ஷர்.

    அக்கு பஞ்சர் என்றால் ஊசிகளை நரம்பு புள்ளிகளில் குத்துவார்கள்,அதன் வழியே குறைவான மின்சாரம் வேறு பாயும்.

    நானும் கொஞ்ச நாள் அக்கு பஞ்சர் செய்துக்கொண்டேன், பக்க விளைவே வராதுனு சொன்னாங்க,ஆனால் எனக்கு கடுமையான தலைவலி வந்துவிட்டது, கேட்டால் சிலருக்கு நரம்பு மண்டலம் வீக்கா இருக்கும் ,ஆரம்பத்தில் தலைவலிக்கும் போக போக சரியாகிடும்னு சொல்லிட்டாங்க, ஆனால் தலைவலி மட்டும் நிக்கவேயில்லை, ஆங்கில மருத்துவரிடம் போனால் ,அக்கு பஞ்சரால் தான் தலைவலி அதை நிறுத்து இல்லைனா மூனு வேளையும் தலைவலி மாத்திரை சாப்பிடுனு சொல்லிட்டார்.

    அக்கு பஞ்சரில் நிறைய போலிகள் தான் , ஏதோ குத்து மதிப்பா சிலச்ருக்கு பலன் கிடைக்குது போல.

    நல்ல அக்கு பஞ்சர் மருத்துவர் பார்க்கனும்னா சீனாவுக்கு போனால் தான் உண்டு :-))

    ReplyDelete
    Replies
    1. // ஆனால் தலைவலி மட்டும் நிக்கவேயில்லை, //
      இதுக்குத்தான் அடிக்கடி சரக்கு அடிக்கிறீர்களா? :)

      மூச்சுப்பயிற்சி முடிந்தால் யோகா செய்யுங்கள் வவ்வால் தலைவலி காணாமல் போய்விடும்...அனுபவ உண்மை
      ஆரூர் நீங்கள் கூட யோகா முயற்சித்து பாருங்களேன்...

      Delete
    2. அட நிறைய பேருக்கு அனுபவம் இருக்கும் போல இருக்கே. நன்றி வவ்வாலு. அவர்கள் கொடுத்த புத்தகத்திலும் அக்கு பங்சர் என்று தான் போட்டிருக்கு.

      Delete
    3. /அக்கு பஞ்சர் என்றால் ஊசிகளை நரம்பு புள்ளிகளில் குத்துவார்கள்,அதன் வழியே குறைவான மின்சாரம் வேறு பாயும்.//

      அட போங்க வவ்ஸ்
      நான் ப்ரஷ்ஷரும் பாத்தாச்சி .. பஞ்சரும் பாத்தாச்சி .. நீங்க சொல்ற மாதிரி மின்சாரம் ஒண்ணும் பாயலை. சும்மா குத்தி வச்சி ரெண்டு நிமிஷம் கழிச்சி எடுத்துட்டாங்க ...

      அதோட இதை போன் வழியே தூர தேசத்தில இருக்கிறவங்களுக்கும் சிகிச்சை செய்யலாம்னு சொன்னாங்க .. இது எப்பூடி?

      Delete
  11. உடல் எடை குறைக்க உத்தமமான ஆலொசனைகள் என் கைவசம் இருக்கு, ஆனால் உடல் எடை குறையுமானு எல்லாம் கேட்கப்படாது :-))

    படத்தில் காட்டியிருக்கும் ஜிம் எக்கியுப்மெண்ட்ஸ் விலையே 50 ஆயிரத்துக்குள் தான் வரும்.

    பெஞ்ச் பிரஸ் வித் லெக் கர்லிங் செட் -10,000

    ஹோம் ஜிம் -20,000-22,000

    இது ரெண்டுமே போதும் உடலை பராமரிக்க.

    தேவைப்பட்டால் ஒரு மோட்டரைசுடு டிரெட் மில் வாங்கிக்கொள்ளலாம் விலை- 20,000/-

    பிரான்டட் எக்கியிமெண்ட் தான் விலைக்கூட, நிறைய மாடல் ஸ்போர்ட்ஸ் கடையில விலைக்குறைவா இருக்கு, புதுவையில் எல்லாம் சல்லீசா கிடைக்குது,நான் அங்கு தான் வாங்கி பிரிச்சு காரில் போட்டு எடுத்து வந்துவிட்டேன்.

    ஜிம்முக்கு 50,000 கொடுப்பதற்கு வீட்டிலேயே ஒரு ஜிம் உருவாக்கிவிடலாம்.

    செலவே இல்லாமல் உடலை குறைக்கும் உபகரணம் ஸ்கிப்பிங் கயிறு.

    அரைமணிநேரம் ஸ்கிப்பிங் செய்து பாருங்கள்.(நீங்கள் முதல் தளம் போல வசித்தால்,தரைத்தளத்தில் மட்டுமே ஸ்கிப்பிங் செய்யவுவும்,)

    ReplyDelete
    Replies
    1. எனக்கு கூட இந்த யோசனை இருக்கிறது. நான் விரைவில் தங்களை தொடர்பு கொள்கிறேன். நாம் ஒரு முறை பாண்டி போய் உபகரணங்களை வாங்கி வருவோம்.

      Delete
  12. Simple Math....

    Weight loss = Calorie Out - Calorie In

    To begin with for six months...

    ஆரம்ப எடை குறைக்க...

    http://www.atkins.com/Program/Phase-1.aspx

    அவங்க ப்ராடக்ட் வாங்காமலேயே பண்ணுங்க...Indian food items Fullஆ Substitute பண்ணிக்கலாம்...

    Cholestrol மட்டும் கவனிச்சு சாப்பிடுங்க...நிறைய தண்ணீர் குடிங்க...இடையிடையே உடல்பயிற்சி பண்ணுங்க...கஷ்டம்தான்...-:)

    After six months...Lifelong...

    Weight loss = Calorie Out - Calorie In

    நான் 25 கிலோ குறைத்தேன்...ரெண்டு வருஷத்தில்...பத்து வருடமாய்...நல்ல ஆரோக்கியமா இருக்கேன்...

    உங்களாலும் முடியும்...





    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கொடுத்த முகவரியில் விவரங்கள் அறிந்தேன். நானும் முயற்சிக்கிறேன். நன்றி ரெவெரி

      Delete
  13. உடம்பு எடை குறைக்க காசு செலவழிப்பது என்பது போகாத ஊருக்கு வழி கேட்பது போலத்தான். மிக எளிமையான வழி சாப்பிடும் முன் தண்ணிர் குடித்து விட்டு சாப்பிட தொடங்குங்கள்.. சாப்பாட்டை முடிந்த வரையில் ரசிச்சு மெதுவாக மென்று தின்னுங்கள் .வாய்ப்பு கிடைக்கும் போது நடங்கள் முக்கியமாக நீங்கள் போன் பேசும் போது நடந்து கொண்டே பேசுங்கள். நான் சொன்ன இந்த முறை மிகவும் பயனளிக்கும் இந்த முறையில் என் கூட வேலை செய்த ஸ்பானிஷ் பெண்மணி தனது எடையில் பாதிக்கு மேலும் குறைத்துள்ளார்

    உங்கள் பதிவுகளின் மூலம் நீங்களும் என்னை மாதிரி சரக்கு அடிப்பவர் என்பதால் பீரை முடிந்த வரையில் தவிர்த்து விடுங்கள். பாருக்கு சென்றால் அவர்கள் விதவிதமாக கலக்கி தரும் கலர் சரக்குகளை அடிப்பதை தவிருங்கள். பெஸ்ட் ட்ரிங்க் ஒயிட்கலர் பகார்டி (ரம்) வித் கோக் அல்லது சோடா டார்க் கலர் ரம்மை கூட தவிருங்கள் கலரான சரக்குகளில் கலோரிகள் மிக அதிகம்.
    தினமும் அடிப்பவர்களாக இருந்தால் 2 ட்ரிங்குக்கு மேல் அடிக்காதீர்கள்

    முடிந்தால் டாக்டரிடம் சென்று மெடிக்கல் செக்கப் செய்து தைராய்டு இருக்கா என்று செக்கப் பண்ணுங்கள்.

    இதை கடைபிடித்து பாருங்கள் நிச்சயம் உங்கள் எடையில் மாற்றம் நன்றாக தெரியும். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. எனக்கு தைராய்டு, சுகர், பிபி, கொலஸ்ட்ரால் கிடையாது. நன்றி நண்பரே.

      Delete
  14. முடிந்தால் ரெவெரி சொன்னதையும் கவனத்தில் எடுத்து முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பாக முயற்சிக்கிறேன்

      Delete
  15. எடை குறைப்பது மிக மிக எளிது; எடை போடுவது தான் கடினம் என் அனுபவத்தில்...!

    நானும் சதா ஆள் இல்லை! இட்லி சாப்பிடும் போட்டியில் பல பரிசுகள் வாங்கியுள்ளேன்.

    என்றும் 34! வயுது இல்லை! வயிறு சுற்றளவு கடந்த 25 வருடங்களாக!

    பெருந்தீனிக்காரன்; ஆனால் மூன்று வேளை தான் உணவு. தண்ணீர் நிறைய குடிப்பேன்...! ஹலோ H2o.

    நான் ஆறு அடி; 25 வருடமா 70 கிலோ தன எடை.
    இப்போ எடை 75 கிலோ; 165 பவுண்டு...நான் 5 கிலோ எடை இப்ப போட்டதுக்கு காரணம் என் மனைவி. அனால், வயிறு அதே அதே 34 இன்ச் தான்.!

    முக்கிய காரணம்: பதினைந்து நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் அமர முடியாது; எழுந்தாகனும். சினிமாவிற்கு கூட போக மாட்டேன். நான் என் சுபாவத்தால் முழ சினிமா பார்த்தது இல்லை.


    ReplyDelete
    Replies
    1. நன்றி நம்பள்கி.

      Delete
  16. வவ்வால் பழக்க தோசத்துல இது அத்தனை விலை அது இத்தனை விலைன்னு புள்ளி விபரம் சொல்றார்.இதுதான் சாக்குன்னு பாண்டிக்கு கூப்பிடறீங்களே:)

    ReplyDelete
  17. நம்பள்கி!அதென்ன 15 நிமிடத்துக்கு மேல் ஒரு இடத்துல உட்கார முடியாது! பைல்ஸா:)

    அப்புறம் பதிவு ஒட்ட வைக்க எவ்வளவு நேரம் பிடிக்குது உங்களுக்கு?

    ReplyDelete
  18. பஞ்சர் ஆகிறது நிச்சயம். ஹா..ஹா....

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...