சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, January 5, 2012

அடிமையாக்கும் வலைப்பூ
கடந்த சில நாட்களாக கம்ப்யூட்டரில் வைரஸ் பிராப்ளம் இருந்ததால் என்னால் பதிவெழுத முடியவில்லை. கடந்த 6 மாதங்களாக மட்டும் தான் நான் தீவிரமாக பதிவெழுதி வந்தேன். ஆனால் அதன் பாதிப்பு அதனை விட்டு சில நாட்கள் விலகியிருந்தால் தான் தெரிகிறது. ஒருநாள் எழுதாவிட்டால் ஏதோ நம்மை விட்டு ஒன்றை இழந்த அளவுக்கு மனது பாதிப்படைகிறது. தூங்கும் போதும் கனவுகள் பதிவு, ஒட்டு, பின்னூட்டம், சர்ச்சை, ஈரோடு பதிவர் சந்திப்பு, மெட்ராஸ் பவன் சிவக்குமார், கேஆர்பி அண்ணன், அபி அப்பா ஆகியவைகளை தொடர்பு படுத்தியே அமைகின்றன. இனிமேல் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். தற்பொழுது பரவாயில்லை, வேலையில் சேர்ந்த பிறகு இந்த அளவுக்கு நேரத்தை செலவிட முடியுமா என்பது சந்தேகம் தான்.

முன்பெல்லாம் காலை 7 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இணையத்தில் இருப்பேன். சாப்பிடுவதும் கம்ப்யூட்டர் முன்பு தான். இந்த ஐந்து நாட்களாக அது இல்லாமல் தரையில் அமர்ந்து சாப்பிடுகிறேன். மாற்றம் தெரிகிறது. வாங்கி பல நாட்களாக படிக்காமல் இருந்த பல புத்தகங்களை இந்த ஐந்து நாட்களுக்குள் படித்து முடித்து விட்டேன்.

ஆனால் பாருங்கள். இன்று கம்ப்யூட்டர் சரி செய்யப்பட்டு விட்டது. மறுபடியும் இணையத்தில் இருந்தால் மற்ற வேலைகள் கடினம் என்பது புரிய ஆரம்பித்து விட்டது. ஆனால் மனது பதிவெழுது, பின்னூட்டமிடு என்றே தூண்டுகிறது. இது போதாது என்று வலைச்சரத்தில் எழுதுமாறு சீனா அய்யா அவர்கள் கேட்டிருக்கிறார். அதில் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமாம். அதற்காக புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். அந்த வேலை முடித்தவுடன் இணையத்தில் இருக்கும் நேரத்தை குறைக்க முயற்சிப்பேன் என்று நினைக்கிறேன்.


ஆரூர் முனா செந்திலு

டிஸ்கி : சில நாட்களாக என்னால் எனது பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. யாராவது உதவி செய்யுங்கள்.

14 comments:

 1. நண்பரே நானும் இந்தப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முயன்றேன். முடியவில்லை.

  ReplyDelete
 2. /// ரஹீம் கஸாலி said...

  நண்பரே நானும் இந்தப்பதிவை தமிழ்மணத்தில் இணைக்க முயன்றேன். முடியவில்லை ///

  முயற்சித்தமைக்கு நன்றி கஸாலி.

  ReplyDelete
 3. Antha virus
  ozhiga.....
  Ozhiga.......
  Ozhiga.........

  Ivvalavu seekkiram
  sariyaaiduche.......

  Very bad virus....

  ReplyDelete
 4. எங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கு கலங்கரை விளக்கமாகப் போகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. /// NAAI-NAKKS said...

  Antha virus
  ozhiga.....
  Ozhiga.......
  Ozhiga.........

  Ivvalavu seekkiram
  sariyaaiduche.......

  Very bad virus... ///

  யோவ் நக்கீரரே, உம்முடைய கொள்கைப் பரப்பு செயலாளர் நான் தான், ஞாபகம் இருக்கட்டும், இளைய பதிவர்களுக்கெல்லாம் உம்முடைய பெருமையை சொல்லி நாய் நக்ஸ் னா பெரிய ஆள்னு நினைக்க வச்சிருக்கேன்.

  ReplyDelete
 6. /// வெண் புரவி said...

  எங்களைப் போன்ற புதிய பதிவர்களுக்கு கலங்கரை விளக்கமாகப் போகிறீர்கள். வாழ்த்துக்கள். ///

  நன்றி வெண் புரவி

  ReplyDelete
 7. எனக்கும் அந்தக் காய்ச்சல் மெதுவாக பரவுவது போல தெரிகிறது. முடிந்தவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் முடியவில்லை. :(

  // இது போதாது என்று வலைச்சரத்தில் எழுதுமாறு சீனா அய்யா அவர்கள் கேட்டிருக்கிறார். அதில் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்த வேண்டுமாம். அதற்காக புதிதாக வந்துள்ள பதிவர்களின் பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். //

  நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. எனக்கும் தமிழ்மணம் மில் இணைப்பதில் பிரச்னை உள்ளது..தங்களுக்கு தெரிந்தால் சொல்லலாம்...
  http://www.eththanam.blogspot.com/

  ReplyDelete
 9. // தூங்கும் போதும் கனவுகள் பதிவு, ஒட்டு, பின்னூட்டம், சர்ச்சை, ஈரோடு பதிவர் சந்திப்பு, மெட்ராஸ் பவன் சிவக்குமார், கேஆர்பி அண்ணன், அபி அப்பா ஆகியவைகளை தொடர்பு படுத்தியே அமைகின்றன. //

  யோவ்... என்னவோ இலியானா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி வர்றா மாதிரி பெருமையா சொல்லிக்கிற... வெளங்கிடும்...

  ReplyDelete
 10. /// Philosophy Prabhakaran said...


  யோவ்... என்னவோ இலியானா, காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி வர்றா மாதிரி பெருமையா சொல்லிக்கிற... வெளங்கிடும்.. ///

  தம்பி அவங்கெல்லாம் கனவுல வந்தா நான் ஏன் சலிச்சிக்க போறேன், என்னவோ போ நீயும் தான் யூத்துன்னு சொல்லிக்கிற, ஆனா பழமா இருக்கியே.

  ReplyDelete
 11. எதற்கு இந்த ஓரவஞ்சனை நாய்நக்ஸ் உங்க கனாவுல வரலையோ?

  ReplyDelete
 12. /// veedu said...

  எதற்கு இந்த ஓரவஞ்சனை நாய்நக்ஸ் உங்க கனாவுல வரலையோ? ///

  என்ன சுரேஸ் உங்களுக்கு கூடவா தெரியல, அந்த முகத்த பார்த்தாலோ அல்லது நினைத்தாலோ மனுசனுக்கு தூக்கம் வருமா

  ReplyDelete
 13. உண்மை தான் பாஸ்....புதுசா பதிவு எழுத வரவங்களை இந்த blog-ஒ போபியா போட்டு தாக்கும்...நானே பீல் பண்ணிருக்கேன்..ஆனா அது கூட கொஞ்ச நாளுக்கு தான்....

  ரெண்டு நாளைக்கு முண்ணாடி உங்க சைட் ஓபன் பண்ண முயற்சி பண்ணினேன்..அப்போ சைட் டௌன் ஆகி இருந்தது... வைரஸ் பிரச்சனையா கூட இருக்கலாம்..

  இந்த இடுகையை நான் தமிழ்மணத்தில் இணைக்க முயற்சி பண்ணினேன்.. இந்த மாதிரி வருது....ஆனா இன்னும் "submit to Tamilmanam" அப்படின்னு காட்டுது..  Your Blog is Aggregated under FREE Aggregation Category

  புது இடுகைகள் எதுவும் காணப்படவில்லை.

  இந்தப் பதிவில் இருந்து தமிழ்மணத்தால் திரட்டப்பட்ட கடந்த ஐந்து இடுகைகள்

  - கிருபானந்த வாரியாரின் கடைசி நாள்...
  - மக்கள் நாயகன் ராமராஜன்
  - பாகிஸ்தானின் தந்தை முகமது அலி ஜின்னா வாழ்க்கை வரலாறு
  - N S கிருஷ்ணனின் கடைசி நாள்...
  - வ.சோ.ஆண்கள்.மேல்நிலைப்பள்ளி, திருவாரூர்.

  சன்னலை மூடு

  ReplyDelete
 14. நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் ! நன்றி சார் !

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...