சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்



Followers

Saturday, January 21, 2012

மர்லின் மன்றோவின் கடைசி நாள்...



உலகப் புகழ் பெற்ற கவர்ச்சி நடிகை மர்லின் மன்றோ, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். "மர்லின் மன்றோ" உலகப்புகழ் பெற்ற ஆலிவுட் நடிகை. மரணத்தின்போது கோடீசுவரியாக இருந்த மர்லின் மன்றோவின் இளம் பருவ வாழ்க்கை, மிகவும் வறுமையும், சோதனைகளும், துன்பங்களும் நிறைந்ததாக இருந்தது. ஏராளமான ஆங்கிலப் படங்களில் நடித்தவர். மர்லின் மன்றோவின் நடை அழகு மிகவும் புகழ் பெற்றது. உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் "கனவுக்கன்னி"யாக விளங்கி வந்தார். ஆங்கிலப் பட உலக புகழின் உச்சிக்கு சென்று கொண்டிருந்த மர்லின் மன்றோவுக்கு திடீரென்று மனநிலை பாதிக்கப்பட்டது. பேய் பிடித்தவர் போல இருந்து வந்தார்.

பெரிய டாக்டர்கள் சிகிச்சை அளித்து, அவரை பழைய நிலைமைக்கு கொண்டு வந்தார்கள். அதன் பிறகு தொடர்ந்து சினிமாவில் நடித்தார். மர்லின் மன்றோ கடைசியாக நடித்துக்கொண்டு இருந்த படத்தின் பெயர் "நான் கொடுப்பதற்கு இன்னும் சில உண்டு" என்பதாகும். அந்த படத்தில்தான் குளிக்கும் காட்சியில் அவர் நிர்வாணமாக நடித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு மர்லின் மன்றோ ஒழுங்காக வருவது இல்லை என்று கூறி அவரை படத்தில் இருந்து நீக்கிவிட்டார்கள்.

சரிவர நடிக்கத் தவறியதற்காக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தரவேண்டும் என்று மர்லின் மன்றோ மீது வழக்குத் தொடரப்பட்டது. அதுமுதல் மர்லின் மன்றோ உற்சாகம் குன்றி இருந்தார். ஆனால் அதன் பிறகு அவரையே தொடர்ந்து நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. மர்லின் மன்றோவுக்கும், படத்தயாரிப்பாளருக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டது. மீண்டும் படப்பிடிப்பை தொடங்க இருந்தார்கள்.

இந்த நிலையில் 05.08.1962ல் மர்லின் மன்றோ தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தி, உலகம் முழுவதும் இருந்த சினிமா ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தது. மர்லின் மன்றோ திராவகம் (ஆசிட்) குடித்து தற்கொலை செய்து கொண்டதாக முதலில் செய்தி பரவியது. அவரது உடலை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் ஏற்பட்டதாக அறிவித்தனர்.

அமெரிக்காவில் சினிமா நகரமான ஆலிவுட்டில் ஒரு மாளிகையில் மர்லின் மன்றோ வசித்து வந்தார். அதிகாலை 3 மணிக்கு மர்லின் மன்றோ கட்டிலில் மயங்கிக் கிடந்ததை வீட்டு வேலைக்காரர் பார்த்து விட்டு டாக்டர்களுக்கு தகவல் கொடுத்தார். டாக்டர்கள் விரைந்து சென்றார்கள். மன்றோவின் படுக்கை அறைக் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டு இருந்தது. டாக்டர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தார்கள்.

ஒரு கையில் டெலிபோனுடன் மன்றோ படுக்கையில் கிடந்தார். உடலில் ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாகக் கிடந்தார். டாக்டர்கள் சோதித்துப் பார்த்ததில் அவர் இறந்து வெகு நேரம் ஆகி இருப்பது தெரிந்தது. அளவுக்கு மீறி தூக்க மாத்திரை சாப்பிட்டதால் மரணம் அடைந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோ, கடிதம் எதுவும் எழுதி வைக்கவில்லை. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது புரியாத புதிராக இருந்தது. இதுபற்றி விசாரணை நடத்தி மர்மத்தை கண்டுபிடிக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி மர்லின் மன்றோவின் கடைசி கால வாழ்க்கை பற்றி துருவி ஆராய்ந்தது. இருப்பினும் கிணற்றில் போடப்பட்ட கல் போல அது அமிழ்ந்து போனது.

தற்கொலை செய்து கொண்ட மர்லின் மன்றோவுக்கு வயது 36. சினிமா உலகத்திலேயே அதிக பணம் சம்பாதித்த நடிகையாக திகழ்ந்தார். மர்லின் மன்றோவின் மறைவு ரசிகர்களுக்கு மட்டும் அல்ல, பிரபல நடிகைகளுக்கும் கூட பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. அமெரிக்காவில் எங்கு திரும்பினாலும் மர்லின் மன்றோ பற்றிய பேச்சாகவே இருந்தது.

ஆரூர் மூனா செந்தில்


20 comments:

 1. ஒரு நடிகையின் மரணத்தை ரொம்ப விவரமாக தந்துள்ள தங்களுக்கு என் நன்றி மற்றும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
 2. மர்லின் மன்றோ-வின் கடைசி நாள்-னுட்டு..நல்லா எல்லா போட்டோ-வும்
  பார்த்தாச்சா...???

  கம்ப்யூட்டர் ஜொள்ளு-ல நனைஞசிருக்கும்.....
  காயவைங்க....

  ReplyDelete
 3. /// Kumaran said...

  ஒரு நடிகையின் மரணத்தை ரொம்ப விவரமாக தந்துள்ள தங்களுக்கு என் நன்றி மற்றும் பாராட்டுக்கள். ///

  நன்றி குமரன்.

  ReplyDelete
 4. /// NAAI-NAKKS said...

  மர்லின் மன்றோ-வின் கடைசி நாள்-னுட்டு..நல்லா எல்லா போட்டோ-வும்
  பார்த்தாச்சா...???

  கம்ப்யூட்டர் ஜொள்ளு-ல நனைஞசிருக்கும்.....
  காயவைங்க.... ///

  கொஞ்சம் யோசிச்சு பேசுங்க, அவ நம்ம கொள்ளுப் பாட்டியை விட சீனியர், தற்காலத்திய ஆட்கள் உங்களுக்கு கிடைக்கலையா?

  ReplyDelete
 5. மர்லின் மொன்றோ ... நிறைய நாளைக்கு பெயரைக் கேட்ட பிறகு சில ஞாபகங்கள் வருகின்றன. மிகவும் நன்றி.

  ReplyDelete
 6. /// ஹாலிவுட்ரசிகன் said...

  மர்லின் மொன்றோ ... நிறைய நாளைக்கு பெயரைக் கேட்ட பிறகு சில ஞாபகங்கள் வருகின்றன. மிகவும் நன்றி ///

  மறக்கக்கூடிய பெயரா அது.

  ReplyDelete
 7. ஆரூர் மூனா செந்தில் said...
  /// NAAI-NAKKS said...

  மர்லின் மன்றோ-வின் கடைசி நாள்-னுட்டு..நல்லா எல்லா போட்டோ-வும்
  பார்த்தாச்சா...???

  கம்ப்யூட்டர் ஜொள்ளு-ல நனைஞசிருக்கும்.....
  காயவைங்க.... ///

  கொஞ்சம் யோசிச்சு பேசுங்க, அவ நம்ம கொள்ளுப் பாட்டியை விட சீனியர், தற்காலத்திய ஆட்கள் உங்களுக்கு கிடைக்கலையா?/////


  நான் உங்க ரேஞ்சு-க்கு சொன்னேன்....ஹி..ஹி...

  ReplyDelete
 8. இப்ப லட்ச கணக்குல இணைய தளத்துல
  எல்லாம் கிடைக்கிரப்ப...

  சரோஜாதேவி புக் நீங்க படிக்கிறதில்லையா...அது போலத்தான்..

  இந்த கமெண்ட் போட சொன்னது யாருன்-னு நான் சொல்ல மாட்டேன் ...

  ReplyDelete
 9. /// NAAI-NAKKS said...
  நான் உங்க ரேஞ்சு-க்கு சொன்னேன்....ஹி..ஹி... ///

  அய்யாவுக்கு என்ன இளமை துள்ளி விளையாடுறதா நினைப்பா, உம்மை விட கண்டிப்பா நான் 5 வயசு சின்னவனாத்தான் இருப்பேன், ஆக்ஹாங்.

  ReplyDelete
 10. /// NAAI-NAKKS said...

  இப்ப லட்ச கணக்குல இணைய தளத்துல எல்லாம் கிடைக்கிரப்ப...

  சரோஜாதேவி புக் நீங்க படிக்கிறதில்லையா...அது போலத்தான்..
  இந்த கமெண்ட் போட சொன்னது யாருன்-னு நான் சொல்ல மாட்டேன் .. ///

  இது உங்க யோசனை தான்னு தெரியும் மக்கா.

  ReplyDelete
 11. நல்லாருக்குங்கோ...... (அப்படியே நம்மூரு சில்க் மேட்டரையும் கவனிங்கங்கோ.....)

  ReplyDelete
 12. நல்லாருக்குங்கோ... அப்படியே நம்மூரு சில்க் மேட்டரையும் கொஞ்சம் கவனிங்கங்கோ.....

  ReplyDelete
 13. /// பன்னிக்குட்டி ராம்சாமி said...

  நல்லாருக்குங்கோ... அப்படியே நம்மூரு சில்க் மேட்டரையும் கொஞ்சம் கவனிங்கங்கோ..... ///

  ண்ணா, கண்டிப்பாங்ணா.

  ReplyDelete
 14. 36 வயசிலே இறந்துட்டாங்களா? வருத்தம் தான்.

  ReplyDelete
 15. நல்ல பதிவு சகோ... இவற்றில் இருந்து ஒரு பாடம் அறியலாம்... பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா
  வீட்டுப் பாவனைக்கான இலகு கிரைண்டரும் என் 150 வது பதிவும்

  ReplyDelete
 16. /// கோகுல் said...

  36 வயசிலே இறந்துட்டாங்களா? வருத்தம் தான். ///

  இல்லைன்னா மட்டும் நம்மளால என்ன செஞ்சிருக்க முடியும். நமக்கு சிலுக்கு போதும் சகா.

  ReplyDelete
 17. /// ♔ம.தி.சுதா♔ said...

  நல்ல பதிவு சகோ... இவற்றில் இருந்து ஒரு பாடம் அறியலாம்... பணம் இருந்தாலும் பிரச்சனை இல்லாவிட்டாலும் பிரச்சனை...

  அன்புச் சகோதரன்...
  ம.தி.சுதா ///

  ஆமாம் சுதா.

  ReplyDelete
 18. மர்லின் மன்றோவின் திரைக்கதை ஒன்றை சொல்லலாமென்றிருந்தேன்.நீங்க முந்திட்டீங்க!

  அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உற்சாக பானமாக மர்லின் மன்றோ ராணுவ தளத்திற்கு சென்றார்.அந்தக் கலாச்சாரம் இப்ப இந்தி நடிகை காத்ரீனா வரைக்கும் தொடர்கிறது.

  JFK வுடன் ஏதோ கிசுகிசு கூட என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 19. இப்ப மர்லின் மன்றோ.......கொஞ்சம் யோசிச்சு...... நல்ல பதிவு சகோ!...

  ReplyDelete
 20. அந்தக் கலாச்சாரம் கூட இப்ப வரைக்கும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...