சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Thursday, August 30, 2012

பஞ்சேந்திரியா - என்னை இருட்டடிப்பு செய்த கேபிள் சங்கர்

அது ஒண்ணுமில்லீங்க. பதிவர் சந்திப்பு முடியும் சமயம் விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்தனர். முதலில் ஏறிய நான் ஒரு போட்டோவில் மட்டுமே தெரிந்தேன். மற்றவர்களையும் அழைத்த போது வந்தவர்கள் மேடை முழுவதும் நிறைந்து நின்றனர்.

அப்போது கேபிள் அவர்கள் அவரது அருகில் நின்ற என்னை விட்டு விட்டு சற்று உயரத்தில் குறைந்த திடம்கொண்டு போராடு சீனுவை அவர் தோளில் கைபோட வாகாக எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.

கேபிளின் பின்னாடி இருளோன்னு ஒரு முகம் தெரியுதில்லயா, அதுதான் நான்

நாம வேற ஏற்கனவே ரோஸ் கலராச்சா. விளக்கு வெளிச்சமும் படாமல் கேபிளின் பின்னால் ஒரு இருட்டு உருவம் நிற்பது போல் ஆகிவிட்டது. குரூப் போட்டோவை எல்லோரும் வெளியிடுகின்றனர். அதில் நான் இருக்கும் இடம் இருளோன்னு இருப்பதால் நானும் இருப்பது யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

எனவே நான் அழகாக புகைப்படத்தில் தெரியக்கூடாது என்று கேபிள் அவர்கள் திட்டமிட்டு செய்திருக்கிறார். நான் வேறு அடுத்த விஜயகாந்த் மாதிரி இருக்கிறேன் என்று அனைவரும் பதிவர் மாநாட்டிற்கு வந்த அனைவரும் சொல்கின்றனர். யாராவது என் படத்தை பார்த்து விட்டு சினிமாவுக்கு அழைப்பு விடுக்க கூடாது என்றே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது என்று குற்றம் சாட்டுகின்றேன்.

இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது வருகையை உறுதிப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

(கேபிளே தன்னை கலாய்க்குமாறு கேட்டுக் கொண்டதால் இந்த சதிவேலையை பகிரங்கப்படுத்துகிறேன், அப்பாடா பத்த வச்சாச்சு)

--------------------------------

இந்த வார தத்துவம்


-------------------------------------------

நேற்று முன்தினம் மக்கள் தொலைக்காட்சியிலிருந்து போன் வந்தது. நான் படித்த புத்தகம் என்ற தலைப்பில் பேச வேண்டும் என்றும், நான் இருக்கும் இடத்திற்கே வந்து படப்பிடிப்பு நடத்திக் கொள்வதாகவும் தெரிவித்தனர்.

நாம பார்க்க தான் ஆஜாகுபானுவாக தெரிகிறோமே தவிர பயங்கர டக்கு பார்ட்டி. ஒரே சமயத்தில இருபது இட்லியை சாதாரணமாக முழுங்குகிறதும், பத்து நெல்மூட்டையை சட்டென வண்டியில் ஏற்றுவதும், கபடியில் சர்வசாதாரணமாக எதிராளியை தூக்கி வீசுவதும், களத்தில் முன்னாடி நின்று சண்டை செய்வதும் சாதாரணமான எனக்கு மேடையிலோ அல்லது காமிராவின் முன்நின்றோ பேசச் சொன்னால் பேஸ்மெண்ட், பில்டிங் ரெண்டுமே வீக்காகி ஆடும். கை கால் உதறும். நாக்கு வறண்டு போய் விடும். இதற்கு காரணம் நிறைய உண்டு. முதலாவது நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மை, அடுத்தது முன்பின் மேடையில் பேசி பழக்கமில்லாதது. எந்த கல்யாணத்திற்கு போட்டோவுக்கு போஸ் கொடுக்க மேடையேற சொன்னாலும் நாசூக்காக அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுவேன்.

நானும் மூன்று புத்தகங்களை எடுத்துக் கொண்டு பேசச் சென்றேன். படப்பிடிப்பும் துவங்கியது. முதல் புத்தகத்திற்கான விளக்கவுரைக்கே நான்கைந்து கட் விழ இயக்குனர் என்னை சமாளிக்க முடியாமல் விழி பிதுங்கி நின்றார்.

அவரை சிரமப்படுத்த விரும்பாமல் இது ஒன்றே போதும். நான் தெளிவாக பேச வேண்டியதை மனப்பாடம் செய்த பிறகு உங்களுக்கு போன் செய்கிறேன், பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றேன். அவரும் மிகுந்த சந்தோஷத்துடன் அப்பாடா தொல்லை விட்டது என்று மனசுக்குள் மகிழ்ந்து கொண்டு சம்மதித்தார்.

நான் கண்டிப்பாக இது அரங்கேறாது. இப்படியே விட்டு விடுவார்கள் என்றே நினைத்தேன். ஆனால் நேற்று இரவு அந்த நிகழ்ச்சியின் இயக்குனர் எடிட் செய்த பிறகு பார்க்கும்படியாக இருக்கிறது என்று கூறினார். அவ்வளவு சிரமப்பட்டு நான் கொடுத்த விளக்கவுரை நாளை காலை 08.45 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

எந்த நேரமும் மீடியாவில் இருக்கும் நண்பர்களுக்கு தொலைக்காட்சியில் தோன்றுவது சாதாரணமாக இருக்கலாம். ஆனால் மீடியாவுடன் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நான் திரையில் தோன்றுவது அத்தைக்கு மீசை முளைத்தால் மட்டுமே சாத்தியம்.

பார்த்து விட்டு குறையையும் நிறையையும் என்னுடன் பகிர்நது கொள்ளுங்கள்.

--------------------------------------

என்னுடைய மினியேச்சர்


-----------------------------------------

நண்பர்களே தெற்கு ரயில்வேயில் கலாசி வேலைக்கு ஆள் எடுக்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு மட்டுமே. மத்திய அரசு வேலைக்கு மிகசிறந்த வாய்ப்பு. கடைசி நாள் 25.09.2012. ஆர்வமுள்ளவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சித்து கொண்டிருப்பவர்கள் விண்ணப்பியுங்கள். சந்தேகமுள்ளவர்கள் எந்த வித தயக்கமுமின்றி என்னை தொடர்பு கொள்ளலாம். என்னால் முடிந்த விளக்கத்தை தங்களுக்கு அளிக்கிறேன்.

ஆரூர் மூனா செந்தில்

63 comments:

 1. தாங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ.
  வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. நன்றி தலைவரே. மீண்டும் இனியதொரு சந்தர்ப்பத்தில் சுவையாக சந்திப்போம்.

   Delete
 2. பகிர்வுக்கு நன்றி..! நானும் போட்டோவில் உங்களைத் தேடினேன்.. நீங்கள் கிடைக்கவில்லை..

  ReplyDelete
  Replies
  1. சத்தியமா இருக்கேங்க, கொஞ்சம் உத்துப் பாருங்க நண்பா, கேபிள் பின்னாடி நிக்கிறது நான் தானுங்க.

   Delete
  2. இவ்வளவு பெரிய உருவமே கிடைக்கலன்னா நாங்ககெல்லபம் எந்த மூளைக்கு...

   Delete
  3. என்னையவே மறைச்சிருக்காருன்னா கேபிள் என்ன அவ்வளவு பெரிய உருவமா? நான் சொல்லலப்பா நீங்க தான் சொல்லியிருக்கீங்க.

   Delete
 3. அப்ப என்னை இருட்டடிப்பு செய்தவர் ஆதிஷா அவருக்கு பின்னாலதான் நான் நின்னுக்கிட்டு இருக்கேன்...

  அடுத்த முறை முன்னாடி நிக்கனும்...

  ReplyDelete
  Replies
  1. ஏங்க தெளிவா இருக்கீங்களா, அதிஷா பதிவர் சந்தி்ப்புக்கே வரலையே? உங்கள இந்த மாதிரி பின்னூட்டமிட சொல்லி யாராவது சொன்னாங்களா?

   Delete
  2. மன்னிக்கனும் சுரேகா என சொல்வதுக்கு பதில் அதிஷா என்று போட்டு விட்டேன் பெயர் குழப்பம்....


   சுரேகா பின்புறத்தின்தான் நான் இருக்கிறேன்...

   Delete
  3. விளக்கத்திற்கு நன்றி செளந்தர்.

   Delete
 4. நாளைக்கு கலையில 8:45 மணிக்கு மக்கள் டிவி பார்கிறேன் பாஸ்..

  ReplyDelete
 5. ரையை தவற விடாம பாத்துடுறேன்.. உங்க முகம் தெரியலைன்னு இப்படி வருத்தப்பட்டா எப்படி..நான் என்னைய முழுசா தேடிட்டு இருக்கிறேன்.
  ஹாஹாஹா..இப்ப என் வலைக்கு வாங்க 4 குரூப் போட்டோ போட்டிருக்கேன் எது வேணுமோ அதை எடுத்துக்குங்க.விஜயகாந்த மைக்க புடிச்சமாதிரி உங்க சுய அறிமுகப் போட்டோவையும் போட்டிருக்கேன்..

  ReplyDelete
  Replies
  1. நன்றி மதுமதி, வந்து எடுத்துகிறேன்.

   Delete
 6. அசத்துறீங்க நண்பரே...

  நாளை காலை தொலைக்காட்சியில் பார்க்கிறேன்... நன்றி...

  ReplyDelete
 7. அடப்பாவி, அது நீதானா?... இருட்டா சரியாத் தெரியலை.. தப்பான பேர் போட்றக்கூடாதுன்னு என் பதிவுலகூட போட்டோவுக்கு கீழா உம்பேர் போடாம விடுட்டேன். ஆனாலும் உமக்கும், மதுமதிக்கும் குசும்புதாம்பா ஏதோ 7 அடி உசரம் மாதிரி பின்வரிசைல நின்னுருக்கீங்க.

  இருந்தாலும் திரு கேபிள்சங்கர், திட்டமிட்டு சதி செய்து உங்கள் முகம் புகைப்படத்தில் விழுந்து விடக்கூடாதென்று ரொம்பவும் ப்ராயத்தனப்பட்டு, உங்களை இருட்டடிப்பு செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

  உண்ணாவிரதத்தை காலை டிபன் முடிந்தவுடன் ஆரம்பித்து மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் கேபிள் மன்னிப்பு கேட்டுவிட்டாராம் என்று அறிவித்துவிட்டு, உண்ணாவிரதம் விரத மாபெரும் வெற்றி என்று ஊருக்கு அறிவித்துவிட்டு சரித்திரத்தில் இடம்பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அய்யா, ஒரு சிறுதிருத்தம். அது உண்ணாவிரதம் இல்லை, உண்ணும்விரதம். சலிக்காம சாப்பிடுறதுன்னு முடிவு பண்ணிட்டோம். நீங்களும் வந்து கலந்துக்கங்க.

   Delete
  2. உண்ணும் விரதமா.... அப்படினா எம்பேர சேத்துக்குங்க.

   Delete
  3. முதல் வரிசையில் இடம் போட்டு வைக்கிறேன்.

   Delete
 8. மச்சி...

  நாளைக்கு பார்த்துவிட்டு சொல்கிறேன் என் கருத்தை...

  ReplyDelete
  Replies
  1. ரைட்டு மச்சி.

   Delete
 9. //எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.//

  மூனாவை ஒரு கையால் தள்ளிய கேபிள்ஜியின் ஆர்ம்ஸ்ட்ராங் தான் அப்போ :-))

  வேட்டிக்கட்டி வந்தது நீங்க, அப்புறம் கோவை ஜீவா ரெண்டுப்பேருதான்னு நினைக்கிறேன், அதுக்கே உங்க பேருலாம் உலகம் முழுக்க பரவி இருக்கும் ,இந்த போட்டுலாம் என்ன சும்மா.

  மூனா ஏற்கனவே நான் தான் மதுவுக்கு சப்போர்ட் செய்றேன்னு ஒரு கும்பல் கும்மி அடிக்குது ,என்னமோ நான் தான் விஜய் மல்லையா போலவே பேசுறாங்க, நீர் இன்னும் அந்த பாட்டில் படத்தை போட்டுக்கிட்டு, இதைப்பார்த்து நானும் பேசப்போக,மத்தவங்க எல்லாம் நல்லவங்களா ஆகிடுறாங்க.

  ReplyDelete
  Replies
  1. நாம என்ன டாஸ்மார்க் மார்க்கெட்டிங் ஏஜெண்ட்டா? புடிச்சவன் குடிச்சிட்டு போறான்.

   Delete


 10. நாளை நானும் கேட்கிறேன் செந்தில்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி அய்யா.

   Delete
 11. சிறப்பான பகிர்வு! ரயில்வே வேலைக்கான விண்ணப்பங்கள் எங்கு கிடைக்கும்? நன்றி!

  இன்று என் தளத்தில்
  குஷ்பாபிஷேகம்- ஓல்ட் ஜோக்ஸ்
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_30.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ்.

   Delete
 12. வணக்கம் அண்ணே ..
  உங்களை திட்டமிட்டு சதி செய்து மறைத்த கேபிள் ஜி அவர்களை உண்ணும் விரதத்துக்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நானும் அதை வழிமொழிகிறேன்.

   Delete
 13. உங்க உருவம் மட்டுமா போட்டோல தெரியலை... என்னைக் கூடத்தான் இரண்டு குமார்களும் (மோகன்குமார். சிவகுமார்) சேர்ந்து மறைச்சுட்டாங்க... இதுககெல்லாம் அழக்கூடாது செந்தில்... கண்ணைத் துடைச்சுக்கப்பா...

  ReplyDelete
  Replies
  1. குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தாங்கண்ணே. சப்பிகிட்டே கண்ண தொடச்சிக்கிறேன்.

   Delete
 14. ஹா...ஹா...
  அப்பாலிக்கா வரேன்.

  ReplyDelete
  Replies
  1. எப்பாலிக்கா நைனா.

   Delete
 15. உங்களை நேரில் சந்தித்து அளவளாவியது மிகவும் மகிழ்ச்சியளித்தது!

  ReplyDelete
  Replies
  1. நானும் தான் வேணு சார். உங்கள் எழுத்துக்களின் தீவிர ரசிகன் நான்.

   Delete
 16. ரொம்ப பிளான் பண்ணி கேபிள் உங்களை மறச்சுட்டார்...

  அடுத்த சந்திப்பு நடந்தா கேமராவுக்கு முன்னாடி பக்கத்துல நின்னு எல்லோரையும் மறைச்சுடுங்க...


  பிரபல பதிவர் கேபிள் சங்கரின் பேட்டி நமது தமிழ்வாசியில் விரைவில் வெளியாக உள்ளது. அவரிடம் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான். மேலும் விவரங்களுக்கு:

  கேபிள் சங்கரின் எக்ஸ்குளுசிவ் பேட்டி விரைவில் - Cable Sankar Exclusive Interview

  ReplyDelete
  Replies
  1. கேள்விக்கணைகள் தயாராகிக் கொண்டிருக்கிறது. காத்திருங்கள் பிரகாஷ்.

   Delete
 17. நீங்க எங்க இருந்தாலும் கண்டுபுடிச்சிடுவேன் தலைவரே நான் உங்களின் திவிர ரசிகன் மற்றத்தோட பெயர் "ராமராஜனின் ஆருர்முணா நற்பனி கழகம்" எப்புடி..... நாளை தொழிற்சாலை மெயின் கேட்ல உங்க நிகழ்ச்சி ஒளிபரப்பலாம்னு இருக்கேன். உண்ணா விரதத்துல நானும் கலந்துகுறேன் பட் நாளைக்கு முடியாது காரணம் செக்சன்ல ரிட்டெயர்மென்ட் பார்ட்டீ இருக்கு

  ReplyDelete
  Replies
  1. மன்றத்துல எனக்கு ஏதாவது பொறுப்பு கிடைக்குமா?

   உண்ணும்விரதத்தி்ற்கு ஆதரவு கூடுதேப்பா? கேபிள் அண்ணே உங்க மீட்டர் ஏறிக்கிட்டே போகுதே?

   உன் செக்சன்லயும் ரிட்டையர்மெண்ட் பார்ட்டி இருக்கா.

   Delete
 18. Replies
  1. அதெப்படி மாப்ள விட முடியும், பொங்குற பாலை தண்ணி ஊத்தி அணைச்சாத்தானே அணையும்.

   Delete
 19. குருப் போட்டோ படம் நிறைய இருக்கு எல்லாரும் இருக்க மாதிரி படமா பாத்து எடுத்து போடோணும். அவசரத்தில் நான் இந்த படம் எடுத்து போட, அதுவே நிறைய ஓடிடுச்சு

  மதுமதி சைட்டில் வேற படம் எடுத்துக்குங்க

  ReplyDelete
  Replies
  1. இந்த போட்டோ எல்லாப் பதிவுலேயும் வந்து இதுதான் குரூப் போட்டோன்னு ஆயிடுச்சி, வேற போட்டோ இருக்கான்னு பாக்குறேன் அண்ணே.

   Delete
 20. புதிய தலைமுறை எங்கள் ஏரியாவில் வராது. யூ டியூப்பில் ஏற்றி பகிரவும்

  ReplyDelete
  Replies
  1. புதிய தலைமுறை இல்லைங்க முரளிகண்ணன். அது மக்கள் தொலைக்காட்சி.

   Delete
 21. நானும் உங்கள் நிகழ்ச்சியை பார்கிறேன்...தோழரே! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஆயிஷா

   Delete
 22. ஹா ஹா..அருமை.. ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லைன்னு சொல்வாங்க.. நீங்க சூரியன் மாத்ரிங்க, கவலைப் படாதீங்க! :)

  ReplyDelete
  Replies
  1. எரிஞ்ச சூரியனா கார்த்தி.

   Delete
 23. //முதலாவது நான் குண்டு என்ற தாழ்வு மனப்பான்மை, //

  குண்டா இருப்பதற்காக தாழ்வு மனப்பான்மை ஏற்படுமா?

  நான் ஒல்லி என்கிற தாழ்வு மனப்பான்மை எனக்குண்டு. ஒல்லியர்களுக்குதான் இந்த மனப்பான்மை இருக்கும் என்று இதுவரை நினைத்திருந்தேன் :-(

  ReplyDelete
  Replies
  1. ஒல்லியா இருந்தா என்ன பிரச்சனை யுவா. குண்டா இருந்தா தானே பார்வைக்கு பிரச்சனை.

   Delete
 24. இருட்டடிப்பு செய்த கேபிளுக்கு கண்டனங்கள்..
  இது திட்டமிட்ட சதினு உளவுத்துறை தகவல் வந்துச்சு.
  :-)

  ReplyDelete
  Replies
  1. உளவுத்துறை தலைவர் யாருக்கா,

   Delete
 25. இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
  /////////////////////////
  கேபிள்க்கு முன்னாடி உண்ணும் விரதம் வெச்சா....நமக்கு என்ன மிஞ்சும்..? அதனால எனக்கு தனியா பார்சல் கட்டி தரமாதிரின்னா ஆட்டைக்கு வரேன்!

  ReplyDelete
  Replies
  1. கேபிளின் வாயில் பிளாஸ்தர் போடப்படும்.

   Delete
 26. பாஸ் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நல்ல பதிவு


  //வீடு சுரேஸ்குமார்
  August 31, 2012 1:27 PM
  இதனை கண்டித்து கேபிளின் முன்பாக நானும் என் நண்பர்களும் உண்ணும்விரதம் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
  /////////////////////////
  கேபிள்க்கு முன்னாடி உண்ணும் விரதம் வெச்சா....நமக்கு என்ன மிஞ்சும்..? அதனால எனக்கு தனியா பார்சல் கட்டி தரமாதிரின்னா ஆட்டைக்கு வரேன்!//  ஹி ஹி இதை நானும் வழி மொழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அதன் பின்னூட்டத்தை விளக்கமாக பாருங்கள் மணி.

   Delete
  2. பார்த்துட்டேன்..இப்ப கொஞ்சம் நிம்மதிதான் :) (கேபிள் அண்ணே கோச்சுக்காதிங்க சும்மாதான் :) )
   மக்கள் தொலைக்காட்சியில வரப்போரிங்க ...இனி டிவி பிரபலம் ஆகிடுவிங்க...வாழ்த்துக்கள்:)...சரி..ட்ரீட் எப்போ :)

   Delete
 27. வாழ்த்துக்கள்...டிவில தெரிய போறீங்க...யாரும் பயப்படமாட்டாங்க ..ஹி..ஹி..

  ReplyDelete
  Replies
  1. அப்படித்தான் நானும் நினைக்கிறேன் ஜீவா.

   Delete
 28. //அப்போது கேபிள் அவர்கள் அவரது அருகில் நின்ற என்னை விட்டு விட்டு சற்று உயரத்தில் குறைந்த திடம்கொண்டு போராடு சீனுவை அவர் தோளில் கைபோட வாகாக எனக்கு முன் நிறுத்தி என்னை பின்னால் தள்ளினார்.//

  இருட்டடிப்பிற்கு நானும் காரணமா இருக்கேன்னு நினைகிரப்போ ரொம்ப வருத்தமா இருக்குன்னே ... அதுனால என்னையும் உங்க உண்ணும் விரதத்துல சேர்த்துகோங்க

  //என்னுடைய மினியேச்சர்// ஹா ஹா ஹா

  ReplyDelete
 29. Anne kalakkiteenga poonga. . . :-)

  ReplyDelete
 30. தங்களுக்கு விருந்தினர் பதிவெழுதுவதில்(Guest Post) ஆர்வமிருந்தால் rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புகொள்ளவும்!

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...