சே குவேரா

உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே ! - சே குவேரா - வழியில் நானும் - முடிந்தால் என்னுடன் நீங்களும்Followers

Tuesday, January 1, 2013

சரக்கில்லாமல் பிறந்த 2013 புத்தாண்டு

வணக்கம் நண்பர்களே, இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் சென்னை. ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு வாரத்திற்கும் மேல் இணையம் பக்கம் வராமல் இருந்தேன். இதுவே பெரிய சாதனை.

இதற்கு முன்பு எந்த ஊருக்கு சென்றாலும் எப்படியும் தினம் ஒரு முறையாவது இணையத்தில் உலாவுவது வழக்கம். இந்த முறை தான் இணையம் பக்கமே வராமல் இருந்தேன். ஒரு வாரமாக நடந்த சம்பவங்கள் பஞ்சாயத்துகள் எல்லாம் இனிமே தான் விசாரித்து தெரிந்துக் கொள்ள வேண்டும்.

மெடுல்லா ஆப்ளிக்கேட்டா சம்பவத்திற்கு பிறகு கசாயத்தை தொடவேயில்லை. தொடவும் முடியாது என்பது வேறு விசயம். ஊருக்கு சென்றதும் வீட்டம்மா எல்லா மேட்டரையும் அப்பா, அம்மாவிடம் போட்டுக் கொடுத்து விட சென்னையில் வாங்கிய வசவுகள் தாண்டி திருவாரூரில் அதிகம் கிடைத்தது.

சென்னை வந்ததுக்கு பிறகு எதையாவது எழுதலாம் என்று காலையிலிருந்து மேட்டர் தேடிக் கொண்டு இருக்கிறேன், ஒண்ணும் சிக்க மாட்டேங்குது. அதுக்காக பதிவப் போடலன்னா நாமெல்லாம் அப்புறம் எப்படி சீனியர்னு சொல்லிக்கிறது. அதனால கவலைப்படாதீங்க, எப்படியும் சுவையான பதிவா இத தேத்திடுவேன்.

எப்பொழுதும் புத்தாண்டை கொண்டாட்டங்களுடனே கழிப்பது வழக்கம். ஒவ்வொரு வருடமும் வித்தியாசமான கொண்டாட்டங்கள். ஒரு வருடம் அண்ணா சாலையில் ஒவர் களேபரம் செய்து காவல் நிலையத்தில் அமர்ந்திருந்தது வரை உண்டு. எல்லாவற்றிற்கும் மாற்றாக இந்த வருடம் எந்த வாழ்த்தும் சொல்லாமல், பெற்றுக் கொள்ளாமல் சென்னை வரும் ரயிலில் தூக்கத்திலேயே நமக்கு தெரியாமல் புத்தாண்டு பிறந்து விட்டது.

இந்த ஆண்டுக்கான சபதம் எடுக்க வேண்டுமென்று யாரைப்பார்த்தாலும் வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். இல்லாவிட்டால் சாமி கண்ண குத்திவிடும் என்ற மிரட்டலோடு. ஒரு விபத்து காரணமாக கெட்ட பழக்கம் எல்லாத்தையும் விட்டாச்சி. இல்லன்னா அதை காரணம் காட்டி தப்பிச்சிருப்பேன்.

யோசிக்கிறேன். ஒன்னும் புடிபடல. சரி உபயோகமா யோசிச்சதுல, இருக்கும் ரூபாய் 5 லட்சம் கடனை இந்த ஆண்டுக்குள் அடைத்து விட வேண்டுமென்று சபதம் செய்திருக்கிறேன். இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றி விடுவேனா என்பதை அடுத்த ஆண்டு துவக்கத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

அது போல காலண்டர் துரதிஷ்டம் என்று ஒன்று என்னை துரத்தும். ஒவ்வொரு ஆண்டும் ஏதோவொரு தொழிலில் மும்முரமாக இருப்பேன், ஆண்டு முழுவதும் நன்றாக போகும் அது கடைசியில் ஏதேனும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும். அதனால் என்னால் எனது நிறுவனத்திற்கான காலண்டரை அடிக்க முடியாமல் போய் விடும். இந்த ஆண்டு அரசு வேலையில் சேர்ந்து விட்டதால் நிரந்தரமாக அந்த ஆசை நிராசையாகி விட்டது.

பதிவு எழுதுவதில் என்ன சபதம் எடுப்பது என்று யோசித்ததில் நிறையவே இருக்கிறது என்று தெரிகிறது. இந்த ஆண்டு வெற்றியாக நான் நினைப்பது யார் சாயலும் இல்லாமல், எந்த கட்டுரையிலிருந்தும் மூலம் எடுக்காமல் நானே எழுத வேண்டுமென்று நினைத்தது முக்கால் வாசி நடந்தது தான்.

அது போல் தேவையில்லாத ஒரு பிரச்சனையில் நம்ம பேர இழுத்து விட்டனர். பிறகு நான் அளவுக்கு அதிகமாக பொங்கி எழுந்தது எல்லாம் அனைவரும் அறிந்தது. பிறகு யோசித்துப் பார்த்தால் ரொம்ப சின்னப்புள்ளத்தனமாக இருந்தது. இனி எங்கேயும் பொங்கல் வைக்க மாட்டேன். இதற்காக ஸ்பெசல் அட்வைஸ் பண்ணிய உண்மைத்தமிழன் அண்ணனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயத்தில் அந்த சண்டை சரியா தவறா என்று தெரியாமல் என் பெயர் சம்பந்தப்பட்ட காரணத்தால் நிபந்தனையில்லா ஆதரவு தந்த நண்பர்களுக்கு ஸ்பெசல் நன்றிகள். அவற்றில் முக்கியமானது பல உள்ளது. ஒரு உதாரணம் ஜெர்மனியிலிருந்து ஒரு ஈழத்தமிழ் நண்பர் முதல் முறையாக போன் செய்து வழக்கமாக தோத்தவண்டா வலைத்தளத்தை படித்து வருவதை கூறி ஆதரவாக பேசிய போது ரொம்பவே நெகிழ்ந்து போனேன்.

ஆரம்பகாலங்களில் எது பதிவின் தரம், எப்படி எழுதுவது என்றெல்லாம் தெரியாமல் நானும் பதிவில் பங்கெடுக்க வேண்டும் என்று நினைத்து முடிந்த அளவுக்கு எழுதினேன். அதற்கு இரண்டு பாரா கூட வரவில்லை என்பதற்கு நான் முதன் முதலில் எழுதிய டீஸ்மார்கான் என்ற இந்திப்படத்தின் விமர்சனம் உதாரணம்.

பிறகு காப்பி பேஸ்ட் தவறென்று தெரியாமல் ரெண்டு மூணு செய்தேன். பிறகு சில பல காயங்களுக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எழுத ஆரம்பித்து இன்று கண்டெண்ட்டே இல்லாமல் கூட பதிவெழுதுகிறேன். நண்பர்களின் சம்பிரதாய பாராட்டுகளை மீறி அறிமுகமில்லாத நண்பர்களின் பாராட்டுகள் தான் நான் நன்றாக எழுதுவதை உறுதி செய்கின்றன.

ஆனால் என்னைப் பற்றிய என் சுயமதிப்பீடு என்னவென்றால் நான் எழுதும் பதிவு ராவாக இருக்கிறது. அதனை மெருகூட்டினால் அதாவது எடிட் செய்தால் சிறப்பான பதிவாக அழகு பெறும் என்று தெரிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக செய்வேன் என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷயமாக டெல்லி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததனால் புத்தாண்டு கொண்டாட்டங்களை புறக்கணித்த நண்பர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக எந்தவித கொண்டாட்டங்களிலும் நான் இல்லாமல் அமைதியாக பிறந்த புத்தாண்டை வரவேற்கும்

ஆரூர் மூனா செந்தில்
28 comments:

 1. இன்று போல் நீங்கள் என்றும் வாழ்க.

  -காக்க காக்க 4 பேர் டீம்!!

  ReplyDelete
  Replies
  1. ஹி ஹி ஹி நன்றி சிவா.

   Delete
 2. பதிவு தலைப்பு பார்த்திட்டு சரக்கடிக்கிரதை விட்டுட்டியோனு சந்தோசப்பட்டேன் செந்தில்.

  இந்த வருசம் மட்டும் தானா...

  நானும் சரக்கில்லாம, புள்ளைகளோடு கேக் வெட்டி வீட்லயே கொண்டாடின முதல் ஆங்கிலப்புத்தாண்டுப்பா.... :-)))

  இனி எல்லா வருசமும் இப்படித்தான் :-))

  ReplyDelete
  Replies
  1. பெரிய மரத்திற்கான துவக்கம் விதையில தான தம்பி. நாம இந்த வருடம்னு ஆரம்பிப்போம். அது முழுவதும் தொடரட்டும். எப்படியோ குடும்பத்துடன் கொண்டாடிய தம்பி பட்டிக்ஸ்க்கு புத்தாண்டு வாழ்த்துக்கள். இன்று போல என்றும் வாழ்க. இன்னொரு முறை என்கிட்ட ஒயின் கேட்டுடாத தம்பி.

   Delete
  2. அடிங்கொய்யால.... அந்தக் கணக்கு அப்படியே தொக்கி நிக்கிது.... அதுக்கு மட்டும் டாக்குட்டர் பெர்மிசன் கூட வாங்கி வச்சிருக்கேன். வ்ராத்துக்கு 150 மில்லினு தீரும்வரை.... :-)))

   தப்பிக்க முடியாது மக்கா.... :-)))

   Delete
  3. எங்க போனாலும் விட மாட்ராய்ங்களே. சரிய்யா, உனக்கு ஒரு புல்ல தட்டிவுட்டு எஸ்ஸாவுறேன். ஆனா கூட குடிக்க நக்கீரன அனுப்பி வைக்கிறேன்.

   Delete
 3. // ஆனா கூட குடிக்க நக்கீரன அனுப்பி வைக்கிறேன். //

  நாசமாப் போச்சி :-)))

  ReplyDelete
  Replies
  1. உமக்கு ஆப்பு ரெடிடி.

   Delete
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. நன்றி, உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் முத்தரசு.

   Delete
 5. என்னாது தண்ணி அடிக்காமலே தூங்கிட்டீங்களா

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்த அதிரச்சி?

   Delete
 6. செந்தில்....நம்ம பட்டிகாட்டனை சீண்ட வேண்டாம். போதை ஆகிவிட்டால் மதயானை போல ஆகிவிடும் பலம் கொண்டவர். ப்ளாஷ்பேக் ஞாபகம் இருக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சிவா அந்தாளு போதைய போட்டுக்கிட்டு அன்னைக்கு தெலுகை சாவடிச்சதை பாத்து அப்படியே மெரண்டு போயிட்டேன்

   Delete
 7. அப்படியே இந்தக் கருமத்தை விட்டுருங்க....

  ReplyDelete
  Replies
  1. இனிமேல் கருமம் என்ற் வார்த்தையை பயன்படுத்த மாட்டேன். எழவு ஓகே வா

   Delete
 8. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி, தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   Delete

 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  ReplyDelete
  Replies
  1. உங்களின் ஆசிக்கும் வாழ்த்துக்கும் நன்றி மதுரை தமிழன், உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

   Delete
 10. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சட்டுபுட்டுனு முடிவெல்லாம் எடுக்க கூடாது. அப்புறம் அரசு எந்திரத்தை யாரு ஓட்டுவா :-)

  Jokes apart..Good decision..Njoy the whole year,All d best thala.

  ReplyDelete
  Replies
  1. அதுக்கெல்லாம் என்னை விட சீனியர்கள் பதிவுலகத்திலேயே இருக்காங்க, அவங்க பாத்துப்பாங்க. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் மரா.

   Delete
 11. ஏதோதோ எழுதுகிறாங்க ஏதோதோ கருத்து சொல்ராங்க் ஏதோதோ நானும் என் பங்குக்கு எழுதுரேன்.

  ReplyDelete
 12. டும் டும்..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக http://vitrustu.blogspot.in/2013/01/blog-post.html#more.

  ReplyDelete
 13. டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
  , வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .
  நன்மக்களே!
  வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
  தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
  இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

  காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்
  பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
  மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
  அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் கவர்ச்சியான தோற்றத்துடன் இரட்டை அர்த்த வசனங்கள் ஆபாச பாடல் காட்சிகளையும் வன்முறைக் காட்ச்சிகளையும் ஒளிபரப்பிட தடை செய்.
  நாடகம் என்ற பெயரால் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத உலகிற்கே கற்பு நெறி என்றால் என்ன என்று போதிக்கும் எம்குலமாம் தமிழ் குலப் பெண்களை அவமதிக்கும் நோக்கில் கள்ளக்காதல் ஒருவருடன் காதல் பல ஆண்களுடன் கள்ளக்காதல் அதிலும் கணவருக்குத் தெரியாமல் கள்ளக்காதல் செய்வது எப்படி என்று சொல்லித்தரும் போக்கினை உடனே தடை செய்.
  அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
  காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
  மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.
  -இந்தியன் குரல்
  9444305581

  ReplyDelete
 14. டும் டும்..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக http://vitrustu.blogspot.in/2013/01/blog-post.html#more.

  ReplyDelete
 15. Good start of this year ....very interesting to read your articles...Ofcourse Konjam Kaaramaga sila pathivugal....Niyayamana Kobam....Mobile number kodungal.....uraiyaduvom

  ReplyDelete
 16. I read in one of your recent post that you joined in some government posting. If so can you update your profile as it still says ....the past

  ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...